தொடர் மொழிச்சொல்
உதாரணம்
இராப்பகல்
பொன்முடி
நிலத்தை கடந்தான்
இராப்பகல்
பொன்முடி
நிலத்தை கடந்தான்
அரங்கேற்றம் - அறிஞர் பலர் கூடிய சபை நடுவே புதிதாய் ஆக்கப்பட்ட ஒன்றை மேடையேற்றுதல்.
அங்கதம் - வெளிப்படையான பொருளில் புகழ்ந்தும் மறைபொருளில் இகழ்ந்தும் கூறுதல்.
அணிந்துரை - ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிரந்த பிறர் வழங்கும் புகழுரை
அசகாயசூரன் - யார் துணையுமின்றித் தானே தனித்து நின்று பகைவரை வெல்லும் திறன் படைத்தோன்.
அவிசு - உப்பின்றிச் சமைத்த பச்சையரிசிச்சாதம். வேள்வியில் தேவர்க்குச் சமர்ப்பிக்கும் உணவு.
அறம்பாடுதல் - பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியனவான சொற்களையும் சொற்றொடர்களையும் சேர்த்துக் கவிபாடுதல்.
அறுமுறை வாழ்த்து - முனிவர், பார்ப்பார், ஆனிரை, மழை, முடியுடை வேந்தர், உலகு ஆகிய ஆறினையும் பற்றிக் கூறும் வாழ்த்து.
அந்தப்புரம் - அரண்மனைகளிலே பெண்கள் தங்குவற்கு அமைந்த தனியிடம்.
அகதி - அனைத்து உடைமைகளையும் இழந்தவன்.
அகழி - கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு.
அகராதி - சொற்களை அகர வரிசைப்படி குறிப்பிட்டு அவற்றின் பொருளை கூறும் நூல்.
அபிநயம் - மனக் கருத்தை குறிப்பாக விளங்கச் செய்யும் அங்கச் செயகை.
அஞ்சாதவாசம் - பிறர் தம்மைக் காணாதவாறு மாறுவேடம் பூண்டு மறைந்து வாழ்தல்.
அமுதசுரபி - மணிமேகலை கையில் இருந்த ஒரு பிச்ச்சைப் பாத்திரம்.
அல்லங்காடி - மாலை அல்லது இரவில் கூடும் சந்தை.
அன்பளிப்பு - ஒருவருக்கு அன்பு சார்ந்து வழங்கப்படுவது.
அலி - ஆணோ, பெண்ணோ அல்லாதவர்.
அடிமை - சுதந்திரமற்று வாழ்பவன்.
அணிந்துரை - ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்து இன்னொருவரால் வழங்கப்படும் உரை.
அநாதை - தாய் தந்தையை இழந்தவன்.
அகாலமரணம் - வயோதிபம் அடையாமல் எதிர்பாராமல் இறத்தல்.
அட்டாவதானி - ஒரே நேரத்தில் எட்டு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.
அனுபானம் - மருந்துக்குத் துணையாக சேர்க்கப்படுவது.
ஆச்சிரமம் - துறவிகள், முனிவர்கள் வசிக்குமிடம்.
ஆற்றுப்படை - பரிசில் பெற்றால் ஒருவன் அது பெறக்கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் பிரபந்தம்.
ஆவணம் - நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்குச் சான்றாக எழுத்துருவில் அமைந்த உறுதி.
ஆத்திகன் - கடவுள் இருக்கிறார் என நம்புபவன்.
ஆதனம் - ஒருவருடைய சொத்துக்கள்.
ஆதீனம் - சமயப் பணி செய்யும் இடம்.
ஆதுலர்சாலை - வறியவர், அங்கவீனர், முதியோர் முதலியோருக்கு உண்டியும் உறையிலும் அளித்து ஆதரிக்கும் இடம்.
ஆயுட்காலம் - ஒருவர் பிறந்து இறக்கும் வரையுள்ள காலம்.
இறக்குமதி வரி - இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் மீது விதிக்கப்படும் வரி.
இடக்கரடக்கல் - சபையில் சொல்லத்தகாத சொல்லை மறைத்து வேறுவகையில் சொல்லுதல்.
இராக்கதம் - பெண்ணும் சுற்றமும் உடன்படாமல் வலிந்து கொள்ளும் மணம்.
ஈமக்கிரியை - ஒருவர் இறந்த பின்னர் செய்யப்படும் சமய சம்பந்தமான இறுதிக்கிரியைகள்.
உலோபி - தனது பொருள் எதையும் பிறருக்கு கொடுக்காதவன்.
உரைகல் - பொன்னை உரைத்து அதன் தரம் அறிய உபயோகிக்கப்படும் ஒரு வகை கல்.
உவமானம் - ஒரு பொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்றொரு பொருள்
உலோகாயதன் - உலகமும் உலகவின்பங்களும் மாத்திரமே மெய்யென்றும் கடவுளோ மறுமையோ இல்லையென்றும் வாதிப்பவன்.
ஊதாரி - வீண் செலவு செய்பவன்.
எதுகை - அடிதோறும் செய்யுட் சீர்களின் அல்லது வாக்கியத்தில் சொற்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொகுப்பது.
எய்ப்பில் வைப்பு - முதுமைகாலத் தேவைகளுக்காக சேமித்து வைக்கப்படும் பொருள்.
ஏகபோகம் - ஒருவர் முழு பொருளையும் தானே தனித்து அனுபவித்தல்.
ஐம்புலன்கள் - சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து உணர்வுகள்.
ஐம்பொறிகள் - மெய், வாய், கண், செவி, மூக்கு என்னும் ஐந்து உறுப்புகள்.
ஐம்பூதங்கள் - நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பொருள்களும்.
ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், பலவின்பால், ஒன்றன்பால்.
ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கள்.
ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.
ஐங்குரவர் - அரசர், ஆசிரியர், அன்னை, தந்தை, தமையன்.
ஒப்பாரி - ஒருவர் இறந்த பின்னர் அவரின் உறவினர்கள் அவரை நினைத்து புலம்புதல்.
ஒப்புரவு - உலக நடை அறிந்து உண்ணுதல்.
ஒத்திகை - மேடை ஏற்றுமுன் எந்த நிகழ்ச்சியையும் சரிபார்த்தல்.
ஒட்டுண்ணி - தனக்கான உணவை வேறோர் பிராணியிடமோ தாவரத்திலோ இருந்து உறிஞ்சி வாழ்வது.
ஒற்றி - சொத்தை அனுபவிக்கும் உரிமையுடன் கூடிய அடமானம்.
ஓலக்கம் - அரசன் சபா மண்டபத்தில் அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர் சூழ வீற்றிருக்கும் இடம்.
ஓம்படை - பேணிப் பாதுகாத்துத் தருமாரு ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைத்தல்.
கப்பம் - பகைவருக்கு அல்லது தீயவருக்கு வழங்கப்படும் பணம்.
கட்டுக்கதை - ஆதாரம் இல்லாமல் உண்மை இல்லாமல் சொல்லப்படும் செய்தி அல்லது கதை.
கட்டியம் - கடவுளர், அரசன் என்போர் எழுந்தருளும் போது அவரது விருதுப் பெயர், வெற்றி முதலியவற்றை எடுத்துக்கூறல்.
கவசம் - போர் வீரர் அணியும் பாதுகாப்பு கருவி அல்லது உடை.
கலைக்களஞ்சியம் - பல விடயங்களை திரட்டித் தரும் நூல்.
கன்னிக்கவிதை - ஒருவர் முதன் முதலில் இயற்றிய பாட்டு.
கன்னி வேட்டை - அரச குமாரன் முதன் முதலாக காட்டில் சென்று நிகழ்த்தும் வேட்டை.
காவற்காடு - கோட்டையோடு சேர்ந்துள்ள அகழிக்கு வெளியே அரணாய் அமைந்த காடு.
கால்கோள் விழா - செயல் ஒன்றை தொடங்குவதற்காக எடுக்கப்படும் விழா.
காணிக்கை - கடவுளுக்கோ பெரியோருக்கோ சமர்ப்பிக்கப்படும் பொருள்.
குரவர் - அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன் என்போர்.
குழூஉக்குறி - ஒரு கூட்டத்தினர் ஒரு பொருளை அதற்குரிய சொல்லால் கூறாது
வேறு சொல்லாற் குறிப்பது.
கைதி - சிறைத் தண்டனை பெற்றவன்.
கையூட்டு - ஒருவருக்கு லஞ்சமாக வழங்கப்படும் பணம்.
கையுறை - ஒருவரை பார்க்கச் செல்லும்போது கொண்டு செல்லப்படும் உபகாரப்பொருள்.
கைம்மருந்து - வைத்தியரின்றி தாமே தமது நோய்க்கு செய்யும் மருந்து.
சகபாடி - ஒன்றாகப் படித்தவன்.
சகோதரர் - ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர்.
சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.
சரணாகதி - ஒருவரிடம் தன்னை ஒப்படைத்தல்.
சரணாலயம் - விலங்குகளைப் பாதுகாக்கும் இடம்
சதாப்தம் - நூறு ஆண்டுகள் கொண்ட காலம்.
சந்தி - பல தெருக்கள் ஒன்றாக சேரும் இடம் அல்லது சந்திக்கும் இடம்.
சங்கநிதி - இலட்சம் கோடி அளவுடைய நிதி.
சஞ்சிகை - புத்தக வடிவில் வரும் பத்திரிகை.
சால்பு - அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் குணங்களைச் சேர்ந்த பண்பு.
சிறுபட்டி - கட்டுக்கடங்காத இளைஞன்.
சிரஞ்சீவி - நெடுங்காலம் வாழ்பவன்.
சிலேடை - ஒரு சொற்றொடரை இரு பொருள்பட அமைப்பது.
சுரங்கம் - நிலத்தின் கீழ் அமைக்கப்படும் வழி.
சுருங்கை - நிலத்தின் கீழ் அமைக்கப்படும் இரகசிய வழி.
சுயம்பு - ஒருவராலும் படைக்கப்படாமல் தாமே தோன்றுவது.
சுயசரிதை - ஒருவர் அல்லது ஒரு பொருள் தன் கதையைக் கூறுவது.
சுயநலவாதி - மற்றவர்களைப் பற்றி அக்கறை இல்லாதவன்.
சுங்கவரி - ஏற்றுமதி, இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்படும் வரி.
செவிலி - வளர்ப்புத்தாய்
செய்குன்று - அரசர்களுக்குரிய சோலையில் செயற்கையாக அமைக்கப்பட்ட சிறுகுன்று.
தற்சமம் - ஆரியத்துக்கும் தமிழுக்கும் பொது எழுத்துக்களாலாகி விகாரமின்றித் தமிழில் வழங்கும் வடசொல்.
தற்பவம் - ஆரியச் சிறப்பெழுத்துக்கள் தமிலெழுத்துகளாக விகாரப்பட்டு
தமிழில் வழங்கும் வடசொல்.
தலைமுறை - ஒருவர் தோன்றி மறையும் வரையுள்ள காலம்.
தபுதாரன் - மனைவியை இழந்தவன்.
தபோவனம் - முனிவர்கள் தவம் செய்யும் காடு.
தசாப்தம் - பத்து ஆண்டுகள் கொண்ட காலப்பிரிவு.
தசாவதானி - ஒரே நேரத்தில் பத்து விடயங்களை அவதானிக்கும் ஆற்றல் படைத்தவன்.
தாசமார்க்கம் - இறைவனை ஆண்டவனாகவும் தன்னை அடியானாகவும் கருதி வழிபடும் முறை.
தாலாட்டு - குழந்தை உறங்கப் பாடும் பாட்டு.
தாய்நாடு - ஒருவர் பிறந்த நாடு.
தினசரி - ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் பத்திரிகை.
தீர்க்கதரிசி - நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவன்.
தீர்ப்பு - விசாரணையின் பின் நீதிபதியால் வழங்கப்படுவது.
துறைமுகம் - கப்பல்கள் நங்கூரம் இடும் இடம்.
தூசிப்படை - போர்க்களத்தில் படையணிகள் அனைத்திற்கும் முன் வரிசையிற் செல்லும் படையணி.
தேசாபிமானி - தனது நாட்டை நேசிப்பவன்.
தேவராளன் - வேண்டும்போது தெய்வம் ஏறப்பெற்று ஆடுவோன்.
தொழிற்சாலை - பொருட்கள் உற்பத்தி செய்யும் இடம்.
பதிப்புரை - ஒரு நூலை அச்சிட்டு வெளியிடுவோர் அந்நூல் குறித்து எழுதும் உரை.
பதுமநிதி - சங்க நிதியின் ஆயிரம் மடங்கு.
பட்டிமன்றம் - அறிஞர் கூடி வாதிடும் களம்.
படியெடுத்தல் - ஒன்றைப் பிரதி செய்தல்.
பன்னசாலை - முனிவர்கள் தங்கி வாழும் இடம். இழை தழை கொண்டு வேயப்பட்ட குடிசை.
பரிவேடம் - சூரியன் அல்லது சந்திரனைச் சுற்றி உள்ள வட்டம்.
பரிவட்டம் - சூரியனையும் சந்திரனையும் சூழ்ந்து தோன்றும் ஒளி வட்டம்.
பஞ்சமா பாதகம் - கொலை, களவு, கள், காமம், குருநிந்தை என்னும் ஐந்தும்.
பஞ்சாங்கம் - திதி, வாரம், கரணம், யோகம், நட்சத்திரம் என்னும் ஐந்து விடயங்களையும் விளக்கும் விபரங்களைக் கொண்ட நூல்.
பவள விழா - எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா.
பாசறை - பகை மேற் சென்ற அரசன் தன் படையுடன் தங்கியிருக்கும் இடம்.
பாஞ்சன்யம் - சஞ்சலம் என்னும் பெயருடைய ஆயிரம் சங்குகளின் நடுவே இருக்கும் உயர்சாதி சங்கு.
பால் வீதி மண்டலம் - வானத்தின் ஒரு புறத்தில் வெண்ணிற நீட்சியாகத் தோன்றும் நட்சத்திரத் திரளின் ஒளி.
பிதிர்க்கடன் - இறந்தவர்களுக்கு செய்யப்படும் கடமைகள்.
பிரம்மச்சாரி - கற்று மணம் முடிக்காது இருப்பவன்.
பிரதிவாதி - வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்.
புருடார்த்தம் - அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்குப் பொருள்கள்.
புறஞ்சேரி - நகருக்கு வெளியே மக்கள் வாழும் இடம்.
புனைந்துரை - இல்லது இனியது நல்லதைப் புனைந்துக் கூறுதல்.
பொதுவியல் - பொது மக்களுக்காக அரங்கிலே ஆடப்படும் கூத்து வகை.
பொன்விழா - ஐம்பதாவது ஆண்டு முடிவிலே எடுக்கும் விழா.
போலி - ஒன்றுபோல இருக்கும் மற்றொன்று.
பௌராணிகன் - புராணக்கதைகளை சுவைபட பிரசங்கம் செய்வோன்.
நட்ட ஈடு - ஒருவருக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வழங்கப்படும் பணம்.
நடுகல் - போரினால் வீர மரணம் அடைந்த வீரரின் பெயரையும் புகழையும் எழுதி நடப்படும் நினைவுக் கல்.
நாற்படை - யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பன.
நாளங்காடி - காலையிலாயினும் பகலிலாயினும் கூடும் சந்தை.
நாத்திகன் - கடவுள் இல்லை என்னும் கொள்கை உடையவன்.
நிகண்டு - சொற்களின் பொருளை செய்யுள் வடிவில் கூறும் நூல்.
நிறைமொழி - அருளிக் கூறினும் வெருண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் அருண்மொழி.
நிந்தகம் - அரசரும் செல்வரும் தமக்குக் கீழே சேவை புரிவோருக்கு வழங்கும் நிலம்.
நிலுவை - மேலும் செலுத்தப்பட வேண்டிய தொகை.
நூலகம் - நூல்களைத் தொகுத்து வைத்திருக்கும் இடம்.
நூன்முகம் - நூலாசிரியர் தமது நூலைப் பற்றி நூல் முகப்பில் எழுதும் உரை. இது முன்னுரை எனவும் அழைக்கப்படும்.
நூதனசாலை - புராதன பொருட்களை சேகரித்து வைக்கும் இடம்.
நூற்றாண்டு விழா - நூறு ஆண்டில் எடுக்கப்படும் விழா.
நைட்டிகன் - ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக விரதம் காத்து வாழ்பவன்.
நொதுமலர் - பகையுமின்றி நட்புமின்றி நடுநிலையில் நிற்போர்.
மரபு - தொன்று தொட்டு வழங்கி வரும் முறைமை.
மந்திரம் - நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி
மணிவிழா - அறுபதாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.
மலடி - பிள்ளை இல்லாது இருப்பவள்.
மஞ்சரி - ஒரு தண்டிலே பல மலர்கள் சேர்ந்துள்ள பூங்கொத்து.
மாராயம் - மன்னரால் செய்யப்படும் சிறப்பு.
மானியம் - அரசுகள் தமக்கு கீழ் வாழ்வோருக்கு சன்மானமாக விடும் நிலம்.
மீமிசைச் சொல் - சிறப்புப் பொருளைத் தருவதற்கு ஒரு பொருளுடைய இரு சொற்கள் தொடர்ந்து நிற்கும் வகையில் அமைந்த சொல்.
முக்கனி - மா, பலா, வாழை போன்ற கனிகள்.
முச்சங்கம் - முதல், இடை, கடைச் சங்கம் என்பன.
முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்பன.
முற்றுகை - ஒரு நாட்டுக்கு வெளியே இருந்து உணவு முதலிய எவ்விதப் பொருளும் கிடையாதவாறு தடுத்து அந்நாட்டைப் படைகொண்டு நாற்புறமும் சூழ்ந்து நிற்றல்.
மெய்க்கீர்த்தி - கல்லிலேனும் செப்பேட்டிலேனும்ம் பொறிக்கப்படும் ஒருவருடைய வெற்றி, புகழ் முதலியன.
மெய்ப்பாடு - மனத்தில் நிகழும் நகை முதலிய எட்டுச் சுவைகளையும் புறத்துளார்க்கும் புலப்படுமாறு தோற்றுவித்தல்.
மோனை - செய்யுட் சீர்களின் முதலெழுத்து ஒன்றி வர அமைப்பது.
வடக்கிருத்தல் - உயிர் துறக்கும் துணிவுடன் வடதிசை நோக்கி உண்ணாதிருத்தல்.
வாடி - கடற்கரையில் மீன்பிடி தொழிலாளர் தங்கியிருக்கும் இடம்.
வஞ்சிப்போர் - மண்ணாசை கொண்டு ஒரு மன்னன் மற்றொரு மன்னன் மீது தொடுக்கும் போர்.
வாதி - வழக்கைத் தாக்கல் செய்பவன்.
வள்ளல் - இருப்பவருக்கு இல்லையென்னாது கொடுப்பவர்.
விதவை - கணவனை இழந்தவள்.
விகடகவி - நகையும் பரிகாசமும் சேர்ந்து வரக்கவி புனையும் ஆற்றல் படைத்தவன்.
வெள்ளோட்டம் - புதிதாக செய்யப்பட்ட கப்பல், தேர் முதலியவற்றை செலுத்திப் பார்த்தல்.
வெள்ளிவிழா - இருபத்தைந்தாவது ஆண்டின் இறுதியில் எடுக்கப்படும் விழா.
வேட்பாளர் - தேர்தலில் ஒன்றில் போட்டியிடுபவர்.
ஜயந்தி விழா - வருடம்தோறும் பிறந்தநாள் அன்று எடுக்கப்படும் விழா.
நன்றி
0 Comments