தமிழ் இலக்கணம் - திணை - TAMIL GRAMMAR - DEPT


திணை


திணை - DEPT

உயர்திணைச் சொல்

பொதுவாக மனிதரைச் சுட்டும் பெயர்கள் உயர்திணை எனப்படும்.
பகுத்தறிவுள்ள மக்கள், தேவர், நரகர் ஆகியோர் உயர்திணைக்குள் உள்ளடங்கப்படுவர்.

உதாரணம்
சிறுவன்
மருத்துவர்
வழக்கறிஞர்

அஃறிணைச் சொல் 

பகுத்தறிவுள்ள மக்கள்,  தேவர், நரகர்   அல்லாத உயிருள்ள, உயிரற்ற பொருட்கள் அனைத்தும் அஃறிணைக்குள் உள்ளடங்கப்படும். 

அல் + திணை = அஃறிணை 

அதாவது பறவைகள், விலங்குகள்  முதலிய உயிருள்ளனவும்,நீர்,  நிலம்  முதலிய  உயிரற்றவையும் அஃறிணைக்குள் உள்ளடங்கப்படும்.

உதாரணம்
மரம்
கல்
சங்கு
புறா

இருதிணை  பொதுச்சொல்

உயர்திணைக்கும் ,அஃறிணைக்கும் பொதுவாக இடம்பெறும் 
சொல்  இருதிணை பொதுச்சொல் எனப்படும்.

உதாரணம்
தாய்
தந்தை
குழந்தை
சூரியன்

சூரியன்
உயர்திணை - சூரியன்  உதித்தார்.
அஃறிணை - சூரியன்  உதித்தது.

நன்றி

Post a Comment

0 Comments