சிறுவர் கதை - எறும்பும் வெட்டுக்கிளியும் - ANT ANG GRASSHOPPER


எறும்பும் வெட்டுக்கிளியும்


சிறுவர் கதை - எறும்பும் வெட்டுக்கிளியும் - ANT ANG GRASSHOPPER

ஒரு காலத்தில், காட்டில் ஒரு வெட்டுக்கிளியும் எறும்பும் வாழ்ந்து வந்தது. இருவரும் நெருங்கிய நண்பர்கள். அது ஒரு வசந்த காலம், வெட்டுக்கிளி சூரிய ஒளியில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது, ஆனால் எறும்பு கடின உழைப்பாளி. குளிர் காலத்துக்கு தேவையான தானியங்களை எறும்பு சேகரித்து வைத்தது.

எறும்பு ஏன் இவ்வளவு கடினமாக உழைத்து தானியங்களை சேகரிக்கிறது என்று வெட்டுக்கிளிக்கு புரியவில்லை. வெட்டுக்கிளி எறும்பிடம், "ஏன் நீ என்னுடன் வெளியே வந்து விளையாடுவதில்லை" என்று கேட்டது. எறும்பு, "என்னால் முடியாது. குளிர் காலத்தில் சாப்பிடுவதற்கு எதுவுமே கிடைக்காது, அதனால் தான் நான் உணவு சேகரிக்கிறேன்" என்றது. இதைக் கேட்ட வெட்டுக்கிளி சிரித்தபடியே," குளிர் காலத்தை நினைத்து ஏன் இப்போது நீ கவலைப்படுகிறாய்? அப்போது நமக்கு நிறைய உணவு கிடைக்கும்" என்று தொடர்ந்து விளையாட ஆரம்பித்தது, ஆனால் எறும்பு கடுமையாக உழைத்தது.

குளிர்காலம் வந்தது, வெட்டுக்கிளிக்கு சாப்பிட தானிய உணவு கிடைக்கவில்லை. பட்டினி கிடந்ததால் வெட்டுக்கிளி பலவீனமானது. எறும்பு கடினமாக உழைத்ததால் அதற்கு சாப்பிட உணவு இருந்ததை நினைத்து தனது முட்டாள்தனத்தை வெட்டுக்கிளி உணர்ந்தது.

நீதி : காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.

நன்றி 

Post a Comment

0 Comments