அரசியலும்
அரசியல் விஞ்ஞானமும்
அரசியல் என்பது அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மனித சமூகத்தில் அரசியல் போராட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரயோக செய்முறையாகும். இங்கு அரசியல் போராட்டத்தோடு நேரடியாக தொடர்புபடும் அரசியல்வாதிகளினதும் அரசியல் கட்சிகளினதும் செயற்பாடுகள் முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு அரசியல் முறைமை எதிர்கொள்ளும் அரசியல், பொருளாதார, சமூக பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் தீர்வுகளுக்கும் செயற்பாடுகளுக்கும் இடையில் நிலவும் வேறுபாடுகளின் அடிப்படையிலேயே அரசியல் இடம் பெறுகிறது.
அரசியல் விஞ்ஞானம் என்பது அரசியல் ரீதியாக ஒழுங்கமைந்த மனித சமூகத்தில் பொது நன்மைகளை விருத்தி செய்யும் நோக்கில் யார், எதனை, எப்போது, எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞான ரீதியாக கற்கும் பாடமாகும். வேறு வகையில் கூறினால் அரசியல் விஞ்ஞானம் என்பது அரசு, அரசாங்கம், மக்கள் ஆகிய அடிப்படை அலகுகளின் தொடர்புகளுக்கு இடையில் மக்களின் பொது நன்மையை பற்றியும் மேலும் அரசியல் பொருளாதார கருத்துக்கள் பற்றியும் விஞ்ஞான ரீதியாக கற்கும் படமே அரசியல் விஞ்ஞானம் ஆகும்.
இதன்படி அரசியல் விஞ்ஞானம் பற்றி பேசும்போது அரசியல் வாதிகளையோ அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளையும் கட்சிகளின் கொள்கைகளையோ மற்றும் அவற்றின் செயற்பாடுகளையும் அன்றி அரசியல் தத்துவ மேதைகளும், அரசியல் விஞ்ஞானிகளும் அவர்களின் கோட்பாடு மற்றும் சிந்தனை தொடர்பான செயல்பாடுகளும் இந்த அரசியல் விஞ்ஞானத்தில் உள்ளடக்கப்படுகிறது.
அரசியலுக்கும் அரசியல் விஞ்ஞானத்திற்கும் இடையிலான தொடர்புகளை பின்பறும் இரு வழி முறைகளின் ஊடாக அறியலாம். அதன்படி,
அரசியல் செய்தல்
அரசியல் கற்றல்
அரசியல் செய்தல்
இதன் பொருள் யாதெனின் அரசாங்க அதிகாரத்தை பெற்றுக்கொள்ள செயற்படுதல், அரசாங்க அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல், தேர்தலில் பங்கு பெற்றதில் அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை கற்றுக் கொள்ளுதல், போராட்டம் மற்றும் எதிர்ப்பு இயக்கங்கள் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாகும். இதில் ஈடுபடுவதற்கு பிரஜைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் தொடர்பான கல்வி சார் அறிவும் சிறப்பு தேர்ச்சியும் அவசியம் இல்லை அரசியல் என்ற சமூகப் பயன்பாட்டில் ஈடுபடுவதற்கான ஆர்வமும் உறுதியும் தியாகமுமே தேவைப்படுகிறது.
அரசியல் கற்றல்
இது அரசியல் செய்வதிலும் பார்க்க வேறுபட்ட செயற்பாடாகும். இது பிரயோக அரசியல் உள்ளவற்றை கற்றுக் கொள்வதையே அரசியல் கற்றல் என அறியப்படுகிறது. இந்த கற்கையில் அரசியல் கற்கும் மாணவரை அரசியல்வாதியாகவோ அரசியலில் பங்கு பெற்றும் பிரதிநிதியாகவோ அடையாளப்படுத்த முடியாது. எனவே கல்வித்துறையாக அரசியலை கற்றல், பிரயோக அரசியலில் ஈடுபடுதல் என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை ஆகும். ஆதலால் அரசியலை கல்வியாக கற்றல் என்பதையே அரசறிவியல் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு கற்கப்படும் விடயங்களை பொருத்தமட்டில்,
தேர்தல் செயற்பாடுகள்
வாக்காளர் நடத்தைகள்
அரசியல் கட்சிகளினதும், அமைப்புக்களினதும் செயற்பாடுகள்
அரசியல் மோதல் மற்றும் எதிர்ப்புகள்
அரசியல் கொள்கைகள்
என்பவற்றை குறிப்பிடலாம்.
நன்றி
0 Comments