மறுமலர்ச்சி
ஐரோப்பாவில் மறுமலர்ச்சி தோன்றுவதற்கான காரணங்கள்
கொன்ஸ்தாந்திநோபிள் துருக்கியர் வசமாதல்.
கொன்ஸ்தாந்திநோபிள் துருக்கியர் வசமாதல்.
மத்திய
காலத்தின் இறுதிப் பகுதியில் நன்கு
முன்னேற்றமடைந்த வர்த்தக நகரான
கொன்ஸ்
தாந்திநோபிள், ஐரோப்பிய கல்விமான்களைக் கவர்ந்த ஓரிடமாக விளங்கியது. கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்த நூலகங்களில் கிரேக்க, உரோம
இலக்கிய நூல்கள் வைக்கப் பட்டிருந்ததுடன் அறிஞர்கள் அவற்றைக் கற்பதில் ஈடுபட்டிருந்தனர். எனினும் கி.பி. 1453 ஆம் ஆண்டு இந்நகர் இஸ்லாமியர் ஆன
துருக்கியரின் கைகளுக்கு வந்ததால் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றிய அறிஞர்களால் தொடர்ந்து அந்நகரில் வாழ
முடியாது போனது.
இதனால்
அவர்கள் கிரேக்க, உரோம
நூல்களுடன் ஐரோப்பாவின் ஏனைய
நாடுகளுக்குச் சென்று
அங்கு
கிரேக்க, இலத்தீன் மொழிகளைப் பரப்பினர். இதனால்
கிரேக்க, உரோமப்
பண்பாடுகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டது.
வர்த்தக முன்னேற்றமும்
புதிய செல்வந்த வர்க்கத்தினரின் தோற்றமும்.
கி.பி. 12ஆம் நூற்றாண்டு தொடக்கம் மேற்கு.
கிழக்கு நாடுகளுக்கிடையே வர்த்தகத் தொடர்பு ஏற்பட்டது. இதனால்
வெனிஸ்,
ஜெனோவா
போன்ற
வர்த்தக நகரங்களையுடைய இத்தாலியில் வர்த்தகத்தின் மூலமும் வங்கிகளின் மூலமும் பணம்
சேகரித்த புதிய
செல்வந்தர்கள் உ
கினர்.
இந்தச்
செல்வந்தர்கள் பழைய
மானிய
முறைப்
பிரபுக்களில் உருவா
தங்கியிருப்போராக இல்லாதிருந்தமையால், இவர்கள் கலைகளில் அவதானம் செலுத்தக்கூடிய சுதந்திர மனநிலையை உடையோராக இருந்ததுடன் கலைகளை
ஆதரிக்கக்கூடிய பணபலமும் அவர்களிடம் இருந்தது. இத்தாலியில் அக்காலத்தில் பல
சிறிய
இராச்சியங்கள் இருந்ததால் அவற்றில் தோன்றிய செல்வந்தர்கள் கலைகளுக்கு அனுச
ரணை
வழங்க
முன்வந்தனர். முதலில் இத்தாலியில் தோன்றுவதற்கு இது
மறுமலர்ச்சி முக்கிய காரணமாக அமைந்தது. இத்தாலியில் புளோரன்ஸ் நகரில்
வாழ்ந்த மெடிகி(medici)
என்ற
செல்வந்தக் குடும்பத்தினர் கலைகளுக்கு அனுசரணை வழங்கிய செல்வந்தர்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
அறிவு வளர்ச்சி
உரோமப்
பண்பாடு வீழ்ச்சியடைந்த பின்னர் சமய
நிறுவனங்களை மையமாகக் கொண்ட
கல்வி
முறையில் முக்கிய பாடங்களாக இறையியல், மெய்யியல், சட்டம்
என்பன
விளங்கின. எனினும் 12ஆம்
நூற்றாண்டின் பின்னர் தோன்றிய புதிய
கல்வி
நிறுவனங்களில் பழைய
இலக்கியம். நாடகம்.
இலக்கணம், வரலாறு
பாடங்கள் கற்பிக்கப்பட்டதால் போன்ற
மறுமலர்ச்சி காலத்தில் புதிய
சுல்விமான்கள் தோன்றினர். அச்சியந்திரமும் ஐரோப்பியரின் அறிவு
வளர்ச்
சிக்குக் காரணமாக அமைந்தது. 1454 ஆம் ஆண்டு
கூடன்பேர்க் அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்ததும் இத்தாலியில் பல்வேறு பிரதேசங்களில் அச்சுக் கூடங்கள் ஆரம்பமாகின. இதன்
மூலம்
பல
நூல்கள் வெளியிடப்பட்டமை கிரேக்க, உரோம
நூல்கள் அச்சிடப்பட்டமை போன்ற
காரணங்களால் இலக்கியம், நாடகம்
என்பனவற்றில் அதிக
அக்கறை
காட்டப்பட்டது.
சமயச் சீர்த்திருத்தம்
மத்திய
காலத்தில் திருச்சபையிடம் அதிகாரங்கள் குவிந்து காணப்பட்டன. இதனால்
சமயம்
மனித
வாழ்வின் பல
துறைகளிலும் தாக்கம் செலுத்தியது. சில
குருமார் சமய
விடயங்களைவிட லௌகீகவிடயங்களில் அதிக
ஈடுபாடு கொண்டிருந்தனர். மறுமலர்ச்சிக் காலத்தில் ஏற்பட்ட அறிவு
வளர்ச்சியின் விளைவாகத் திருச்சபையில் இருந்த
குறைபாடுகள் விமர்சனத்துக்கு உள்ளாகின. இங்கிலாந்தின் ஜோன்
வைக்கிளிப், பொஹேமியாவில் ஜோன்
ஹஸ்,
பிரான்சில் இராஸ்மஸ், ஜேர்மனியில் மார்ட்டின் லூதர்
என்போர் திருச்ச பையை
விமர்சித்தவர்களில் முக்கியமானவர்கள்.
ஐரோப்பாவில் மறுமலர்ச்சியால் ஏற்பட்ட மாற்றம்
கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றம்
மொழி, இலக்கியம்
மத்திய காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் கோத்திர மொழிகளே நடைமுறையில் இருந்தன. சமய செயற்பாடுகளிலும் சட்டக் கல்வி பயிலும்போதும் ஓரளவு இலத்தின் மொழி பயன்படுத்தப்பட்டது.
கிரேக்க மொழி வழக்கில் இல்லாத மொழி என்ற நிலையை அடைந்திருந்தது எனினும் மறு மலர்ச்சிக் காலத்தில் கிரேக்க, இலத்தின் மொழிகளில் எழுதப் பட்ட நூல்களின் பாவனை அதிகரித்ததால் அந்த மொழிகளில் மலர்ச்சி ஏற்பட்டது. இது கல்வி மறுமலர்ச்சியில் ஏற்பட்ட முக்கிய விளைவாகும். அவ்வாறே இலத் தின், கிரேக்கம் ஆகிய மொழி களைக் கற்றல் நாகரிகம் என்ற நிலையும் ஏற்பட்டது. இதனால் அதுவரை பேசப்பட்ட பிரதேச மொழிகள் வீழ்ச்சியடையத் தொடங்கின.
கிரேக்க, இலத்தின் மொழிகளைக் கற்ற பின்னர் அந்த மொழிகளில் எழுதப்பட்ட நூல்களை வாசித் ததன் மூலம் இலக்கியத்திலும் புத்துணர்வு ஏற்பட்டது. குறிப்பாக கிரேக்க நாடகம் தொடர்பாக அதிக ஆர்வம் ஏற்பட்டது. இலக்கியத் துறைக்குப் பணி யாற்றிய பல்வேறு எழுத்தாளர்கள் இக்காலத்தில் உருவாகினர். இத்தாலியில் தாந்தே, பெற்ராக், பொக்காஷியோ, இங்கிலாந்தில் சேர் தோமஸ்மூர், பிரான்சிஸ் பேக்கன், வில்லியம் ஷேக்ஸ்பியர், பிரான்சில் இராஸ்மஸ் ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்கள்.இவர்கள் பல நூல்களை எழுதினர். தாந்தே எழுதிய டிவினா கொமிடியா என்ற காவியத்தையும் பெற்ராக் லோராட்டாவுக்கு எழுதிய கவிதையையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.
சித்திரம்
சித்திரம்
கலைகளில் சித்திரக் கலையே மறுமலர்ச்சிக் காலத்தில் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியது. இத்தாலியில் புளோரன்ஸ் நகரில் புதிய சித்திரக் கலைகளை உருவாக்கிய மத்திய நிலையம் ஒன்று இருந்தது. உலகியல் இரசனையின் பொருட்டு இயற்கைக்கு முதலிடமளித்து சித்திரம், சிற்பம், என்பன நிர்மாணிக்கப்பட்டன. அதுவரை சமய சார்பாக முக்கிய இடம் வகித்த இயேசுநாதர், கன்னிமரியாள் என்போரின் உருவங்கள் வரையப் பட்டன. எனினும் மறுமலர்ச்சிக் காலத்தில் செல்வந்தர்களின்
உருவங்கள் சித்திரமாக வரையப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது. இக்காலத்தில் இருந்த சித்திரக் கலைஞர்களுள் லியானாடோ டாவின்சி, மைக்கல் ஆஞ்சலோ, ரபாயல், மெசெக்க்ஷியோ, பொட்டி ஷெல்லி என்போர் முக்கியமானவர்களாவர்.
லியானாடோ டாவின்சி சித்திரக் கலைஞராக மட்டுமன்றி, வேறுபல துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவர் கவிஞராகவும்
பாடகராகவும் விஞ்ஞானியாகவும்
பொறியியலாளராகவும் இருந் தார். அவரது கலைப்படைப்புகளான
மோனலீசா, இயேசுநாதரின்
இறுதி இராப்போசனம்
போன்ற சித்திரங்கள்
இன்றும் உலகப்புகழ் பெற்றவையாக திகழ்கின்றன.
மைக்கல் ஆஞ்சலோவும் அக்காலத்திலிருந்த சிறந்த சித்திரக் கலைஞராவார். அவர் சிற்பக் கலை யிலும் கட்டடக்கலையிலும் சிறந்து விளங்கினார்.
சிஸ்டைன் ஆலயத்தின் பாவுகையில் அவரால் வரையப்பட்ட சித்திரங்கள் சிறப்பிடம் பெறு கின்றன. இறுதித் தீர்ப்பு, சிஸ்டைன் ஆலயத்தில் ஆதாமின் சித்திரம் என்பன அவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
சிற்பம்
சிற்பம்
சிற்பக்கலையும் மறுமலர்ச்சிக்
காலத்தில் சிறப்பிடம் பெற்றது. பளிங்குக் கற்களில் சிற்பங்கள் செய்தல் இக்காலத்தில்
காணப்பட்ட சிறப்பம்சமாகும்.
மைக்கல் ஆஞ்சலோ மறுமலர்ச்சிக் காலத்தில் இருந்த சிறந்த சிற்பக் கலைஞராவார். மெடிசி குடும்பத்தில் வோரேன்சோ மெடிசியின் உருவத்தை இவர் பளிங்குக் கல்லில் வடிவமைத்தார்.
பியெட்டா, மோயிசன், தாவீது போன்ற உருவச் சிலைகள் இவரது படைப்பில் சிறப்பிடம் பெறுகின்றன.
கட்டடம்
கட்டடம்
மறுமலர்ச்சிக் காலத்தில் கட்டடக் கலையிலும் முக்கிய மாறுதல்கள் ஏற்பட்டன. காலத்தில் நுனிக் கோபுரங்கள், வில்வளையக் மத்திய கூரை, பிரமிட் வடிவிலான தூண்கள் என்பன கட்டடக்கலையின் சிறப்பம்சங்களாக விளங்கின. அதற்குப்பதிலாக மறுமலர்ச்சிக் ளங்கன. ரலத்தில் காவத்தில் உரோமக் கட்டடக் கலைக்கு அமைய வரைவட் வில்வளையம், உயர்ந்த வட்ட சிகரம் என்பன கட்டடக் கலையில் முக்கியத்துவம்
பெற்றன. தூண், உரோமர்களைப் பின்பற்றி இக்காலத்தில்
சொகுசான மாளிகை களும் அமைக்கப்பட்டன. மறுமலர்ச்சிக்
காலக் கட்டடக் காட்டும் கலையின் சிறப்பினை எடுத்துக் கட்டடங்களாகப் புனித பேதுருவின் பெசிலிக்காவும் புளோரன்சிலுள்ள
பேராலயமும் விளங்கின. பிரமத்தே. மைக்கல் ஆஞ்சலோ, லியானடோ டாவின்சி, ரபாயல் ஆகியோர் மறுமலர்ச்சிக் காலத்தில் இருந்த சிறந்த கட்டடக் கலைஞர்களாவர்.
அரசியல் துறையில் ஏற்பட்ட மாற்றம்
நிலமானிய காலத்தில் ஒவ்வொரு பிரதேசங் களையும் ஆட்சிசெய்யும் அதிகாரம் பிரதேச ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. பிரதேச ஆட்சியாளராக பரம்பரையான நிலப் பிரபுக்கள் செயற்பட்டனர். அவர்கள் சுதந்திரமாக இயங்கியதால் அரசனைவிட அதிகாரம் உடைய வர்களாக இருந்தனர். அக்காவ மக்கள் பிரதேச ஆட்சியாளர்களின் கீழ் இருந்ததால் தமது பிரதேசம் என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்தார்களேயன்றி ஒரு நாட்டின் மக்கள் என்ற ரீதியில் அவர்கள் செயற்படவில்லை.

மறுமலர்ச்சிக்காலத்தில் தேசிய அரசுகள் தோன்றிய மையானது அரசியல் துறையில் ஏற்பட்ட முக்கிய மாற்றமாகும். பல பிரதேசங்களை ஒன்றிணைத்து ஒரு அரசனின் கீழ் ஆட்சிசெய்யும்
முறை இதன் மூலம் உருவாகியது. இதனால் அரசியலில் அரசன் முக்கியத்துவம்
பெற்றதுடன் அனைத்து அதிகாரங்களும் அரசனை மையமாகக் கொண்டு விளங்கின.
12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வர்த்தக முன்னேற்றத்துடன் மத்திய வகுப்பு ஒன்றும் தோன்றியது. மத்திய வகுப்பினர் என்போர் வர்த்தகத்தின் மூலம் பணத்தைச் சேகரித்த செல்வந்தர்களாவர். இந்த வகுப்பினரில் வர்த்தகர்கள், வங்கியாளர்கள்,
கப்பல் உரிமை யாளர்கள், போக்குவரத்து வண்டிகளின் உரிமை யாளர்கள் போன்றோர் அடங்குவர். மத்திய வகுப்பினர் சமூகத்தில் வலிமை பெற்றதுடன் அதுவரை நில உரிமையாளர்களாக
இருந்த பிரபுக்களின்
அதிகாரங்களும் உரிமைகளும் நலிவுறத் தொடங்கின. தேசிய அரசர்கள் அரசுகளின் தமது நிர்வாக செயற்பாடுகளில் புதிதாகத் தோன்றிய மத்திய வகுப்பினரின்
உதவியைப் பெற்றுக் கொண்டனர். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு அரச அனுசரணை கிடைத்தது.
பொருளாதார துறையில் ஏற்பட்ட மாற்றம்
மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பாவில் பொருளாதாரத் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படலாயின. மத்திய காலத்தில் நிலமானிய முறையை மையமாகக் கொண்ட சுயதேவைப் பூர்த்தியான பொருளாதார முறை நலிவடைந்து வர்த்தக முன்னேற்றம் ஏற்பட்டது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் தோன்றிய பின்னர் வர்த்தகத்தை விரிவடையச்செய்யும் பொருட்டு அரச அனுச ரணை நேரடியாகக் கிடைத்தது. அதன் பொருட்டு ஐரோப்பிய நாடுகளில் தேசிய வர்த்தகக் கொள்கை, தேசிய வரிக் கொள்கை என்பன செயற்படத் தொடங்கின. அவ்வாறே நாடுகாண் பயணங்களின் விளைவாகப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டமையானது ஐரோப்பிய இனத்தவர் கீழைத்தேசங்களுக்கும், அமெரிக்காவுக்கும் செல்லக்கூடியதாக இருந்தது. அதனால் அப்பிரதேசங்களில் இருந்து வர்த்தகப் பொருள்களான வாசனைப் பொருள்கள், தங்கம், வெள்ளி, முத்து, இரத்தினக்கற்கள், யானைத்தந்தம் போன்றவற்றை ஐரோப்பாவிற்குக் கொண்டு வரக்கூடியதாக இருந்தது. இதன் மூலம் வர்த்தக வளர்ச்சி ஏற்பட்டது.

வர்த்தக வளர்ச்சியின்
காரணமாகப் பணப்புழக்கம்
அதிகரித்தது. நாணயத்தாள்கள்,
நாணயக்குற்றிகள், என்பன பணப்புழக்கத்திற்கு வந்தன. பணத்தைத் தூர இடங்களுக்குக்
கொண்டு செல்லுதல் சிரமமாகவும் பாதுகாப்பு அற்றதாகவும் இருந்ததால். காசோலை முறையும் வங்கி முறையும் ஆரம்ப மாகின. வர்த்தகர்கள்
தமது வர்த்தகத்திற்குத் தேவையான பணத்தை வங்கி மூலம் கடனாகப் பெறக்கூடியதாக இருந்தது.
புதிய வர்த்தகப் பாதைகள் கண்டுபிடிக்கப்படல்
கி.பி. 1453 ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்திநோபிள் நகர்
துருக்கியரால் கைப்பற்றப்பட்டதுடன் மேற்கு,
கிழக்கு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் தடைப்பட்டது. கடல்,
தரை
வழிகள்
அனைத்தும் பெரும்பாலும் துருக்கிய பேரரசின் கீழ்
வந்தன.
இதனால்
ஆசியாவிலுள்ள பொருள்களைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு கிழக்கு நாடுகளுக்குச் செல்லக்கூடிய கடவ்
வழியைக் கண்டுபிடிக்க ஐரோப்பியர் முனைந்தனர். புதிய
கடல்
வழியைக் கண்டுபிடிக்கக்கூடிய சாதகமான சூழலும் அக்காலத்தில் ஐரோப்பாவில் நிலவியது.
நாடுகாண் பயணங்களின் ஆரம்பத்தில் அதில்
ஆர்வம்
காட்டிய நாடுகளாகக் கடலை
அண்டிய
போர்த்துக்கலும் ஸ்பானியாவும் விளங்கின. போர்த்துக்கல் இளவரசனான கடலோடி
ஹென்றி
நாடுகாண் பயணத்திற்குப் பூரண
ஒத்துழைப்பை நல்கினான்.
போர்த்துக்கலிலிருந்து கீழைத்
தேசங்களை அடைய
கடல்
வழியைக் கண்டுபிடிக்க முற்பட்ட பர்த்தவோமேயு டயஸ்
ஆபிரிக்காவின் தென்
முனையை
அடைந்ததும், அங்கு
புயலால் சிக்குண்டு அப்பிரதேசத்திற்கு புயல்முனை என்று
பெயரிட்டு மீண்டும் தன்
தாய்
நாட்டுக்குத் திரும்
பினான்.
பின்னர் போர்த்துக்கல் மன்னனால் நன்னம்பிக்கை முனை
என
அதற்குப் பெயரிடப்பட்டது.
பர்த்தலோமேயு டயஸ்
சென்ற
வழியாகத் தன்
பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமா இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்தான். இது
ஐரோப்பியர்களால் ஆசியாவுக்கு வருவதற்கு முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கடற்ப்
பாதையாகும்.
ஸ்பானிய மன்னனான பேர்டினன்ட், அவனது
மனைவி
இசபெலா
ஆகியோரின் அனுசரணையுடன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் மேற்கிந்திய தீவுகளைக் கண்டுபிடித்தான். அமெரிக்கோ வெஸ்புஷி அமெரிக்காவை கண்டுப்பிடித்தான்.
பெர்டினன்ட் மகலன்
பிலிப்பைன்சையும் கபொட்
சகோதரர்கள் கனடாவையும் கண்டு
பிடித்தனர்.
விஞ்ஞானத்துறையில் ஏற்பட்ட மாற்றம்
விஞ்ஞானத்துறையில் ஏற்பட்ட மாற்றம்
வானியல்
போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ்
போலந்தரான நிக்கலஸ் கொபர்னிகஸ்
புவி
கோள
வடிவமானது எனவும்
கோள்கள் சூரியனைச் சுற்றி
வருவதாகவும் ஏனைய
அவர்
கண்டுபிடித்தார். விஞ்ஞானத்துறைக்குப் பாரிய
பங்களிப்பினைச் செய்த
இவர்,
நவீன
வானியல் விஞ்ஞானத்தின் தந்தை
எனப்
போற்றப் படுகின்றார்.
ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர்
ஜேர்மனியரான ஜொஹென்ஸ் கெப்லர்
கெப்லர். கொபர்னிகஸ் கூறிய
கருத்துக்களை உறுதிசெய்து அதனை
முன்னெடுத்துச் சென்
றதுடன்,
ஞாயிற்றுத் தொகுதிக் கோள்கள் அனைத்
தும்
சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி
வருவதாகவும் கூறினார்.
இத்தாலியரான கலிலியோ கலிலி
இத்தாலியரான கலிலியோ கலிலி
தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். இதன்
மூலம்
வானியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வியாழனைச் சூழ
உபகோள்கள் உள்ளன
எனக்
கண்டுபிடித்தார். அவர்
எதையும் செய்துப் பார்க்கும் முறையைப் பின்பற்றியதால் செயற்பாட்டு விஞ்ஞானத்தின் தந்தை
எனப்படுகின்றார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன்
இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியுட்டன்
புவியீர்ப்புச் சக்தியைக் கண்டுபிடித்தார்.
வைத்தியம்
ஆங்கிலேயரான வில்லியம் ஹாவே
வைத்தியம்
ஆங்கிலேயரான வில்லியம் ஹாவே
மனித
உடலின்
குருதிச் சுற்றோட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை முன்வைத்தார்.
சுவிஸ் இனத்தவரான பெரசல்சஸ்
சுவிஸ் இனத்தவரான பெரசல்சஸ்
நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதற்கான சிகிச்சைகளையும் பரிசோதனை மூலம்
கண்டறிந்தார். நவீன
மருந்து தொடர்பாகவும் நோய்களைக் குணமாக்குதல் தொடர்பாகவும் பாரிய
தாக்கத்தை ஏற்படுத்தினார்.
சுவிஸ் இனத்தவரான மைக்கல் சர்வேட்ஸ்
சுவிஸ் இனத்தவரான மைக்கல் சர்வேட்ஸ்
மனித
உடலின்
குருதி,
இதயத்தின் வலது
பக்கத்திலிருந்து புறப்பட்டு சுவாசப்பையில் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் இதயத்தை அடைந்து உடல்
முழுவதும் பரவிச்
செல்கின்றது என்பதனைக் கண்டறிந்தார்.
ஜேர்மனியரான ஜொஹேன்ஸ் கூடன் பேர்க்
ஜேர்மனியரான ஜொஹேன்ஸ் கூடன் பேர்க்
அச்சியந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
மறுமலர்ச்சிக் காலத்தில் உலகமயமாதல்
மறுமலர்ச்சி முதன் முதலில் இத்தாலியில் புளோரன்ஸ் நகரில்ஆரம்பமானது. பின்னர் அது இத்தாலியின் ஏனைய பிரதேசங்களுக்குப் பரவிய பின்னர் ஐரோப்பா முழுவதும் பரவியது. மறுமலர்ச்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நாடுகாண் பயணங்களினால் ஐரோப்பியர் புதிய நாடுகளைக் கண்டுபிடித்ததுடன் அங்கு செல்லவும் தொடங்கினர். இதன் விளைவாக ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங் களில் பவ நாடுகள் பல்வேறு ஐரோப்பிய இனத்தவர்களின் ஆதிக்கம் பரவியது. 16 ஆம் நூற்றாண்டில் இருந்து நான்கரை நூற்றாண்டுகள் வரை இக்கண்டங்களிலுள்ள சிவ நாடுகள் ஐரோப்பிய இனத்தவரின் குடியேற்ற நாடுகளாக விளங்கின. இதனால் அரசியல் மட்டுமன்றி வர்த்தக, பொருளாதாரப், பண்பாட்டு ரீதியாக வும் ஐரோப்பாவுக்கும், உலகின் ஏனைய பகுதிகளுக்குமிடையே தொடர்புகள் ஏற்பட்டன. இந்தத் தொடர்புகள் காரணமாக அச்சுத் தொழில் உலகெங்கும் பரவியது. இதன் மூலம் ஐரோப்பிய சிந்தனைகள், இலக்கியம் என்பன ஏனைய நாடுகளையும் சென்றடைந்தன. குடியேற்ற நாடுக ளில் செல்வந்தர்களின் பிள்ளைகள் கல்வியின் பொருட்டு ஐரோப்பாவிற்கு சென்றனர். ஐரோப்பியர் தமது குடியேற்ற நாடுகளில் தாம் பின்பற்றிய சமயங்களைப் பரப்பினர். அவ்வாறே ஆலயங்கள், கட்டடங்கள் என்பன அமைத்ததன் மூலம் ஐரோப்பாவில் அக்காலத்தில் சிறப்பிடம் பெற்ற கட்டடமுறை, கலைகள் என்பன ஏனைய நாடுகளையும் சென்றடைந்தன. ஐரோப்பாவுக்கும் உலகில் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு காரணமாக ஐரோப்பிய விஞ்ஞானத் தொழினுட்ப அறிவு உலகம் முழுவதும் பரவியது. இதனால் மறுமலர்ச்சி உலகமயமாகியது.

நன்றி
0 Comments