திருமூலர்
சைவசமய உண்மைகளை தமிழிலே எடுத்துரைத்த பெரியவர்கள் பலர். அவர்களுள் ஒருவர் திருமூலர். அவர் சைவநெறிசார்ந்த யோகியருள் ஒருவராகப்mபோற்றப்பெறுகிறார். அட்டமாசித்திகள் கைவரப் பெற்றோரே யோகியர் எனப்படுவர். திருமூலர் பெரியபுராணம் போற்றும் அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவராக விளங்குகிறார். சேக்கிழார் சுவாமிகளே திருமூலர் வரலாற்றைத் தமது பெரிய புராணத்தில் விரிவாகத் தந்தார். அதனைச் சுருக்கமான இங்கு நோக்குவோம்.
யோகியார் ஒருவர், தமிழ்நாட்டிலே பொதிகை மலையில், சிலகாலம் தங்கியி ருப்பதற்கு விரும்பிக் கயிலையினின்றும் புறப்பட்டார். வழியிலே காவிரிக் கரையிலே பசுக்கள் கூட்டமாக, கண்ணீர் வார நின்றமையைக் கண்டார். வழக்கமாக பசுக்களை மேய்த்துவரும் மூலன் என்னும் இடையன் ஏதோ காரணத்தால் இறந்துகிடந்தான், தம்மை அன்போடு பராமரித்துவந்த மூலனது இறப்பைத் தாங்கமாட்டாத பசுக்கள், உணவும் உறக்கமும் இன்றி அவ்விடத்திலேயே சுற்றிச் சுழன்று திரிவதைக் கண்ணுற்ற யோகியார். அவற்றின் துயரத்தைப் போக்க விரும்பினார். மூலன் உயிரோடு எழுந்தால் அன்றி அவற்றின் துயரம் நீங்காது என உணர்ந்த யோகியார், மூலனின் உடலுக்கு உயிர் கொடுக்க முடிவுசெய்தார். தனது உடலை மறைவான இடத்தில் விட்டு, கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தின் மூலம், மூலனின் உடலுட் புகுந்தார்.
மூலனது உடல் உயிர் பெற்று எழுந்தது. அதாவது மூலனது உடலில் யோகியார் எழுத்தார். மூலன் உயிர்பெற்றதாகக் கருதிய பசுங்கள் மகிழ்ச் யாடு புல் மேய்ந்தன; மாலையானதும் தமது கன்றுகளை நினைந்து சாத்தனூரை தோக்கி நடக்கத் தொடங்கின. மூலனின் உடலுள் இருந்த யோகியாரும் அவற்றைத் தொடர்ந்து சென்றார்.
பசுக்கள் தங்கள் மேய்ப்பனின் வளவினுட் புகுந்தன. மூலனது உடலினுள் நின்ற யோகியார் அதனைப் பார்த்தபடி நின்றார். தாம் உள்ளே புகவில்லை. இதனை அவதானித்த மூலனது மனைவி அவர் உள்ளே வராதது குறித்து வினவினாள். யோகியார் ஒன்றும் பேசாது அவ்விடத்தினின்றும் அகன்று, பொதுமடம் ஒன்றை அடைந்து, அங்கு யோக நிலையில் விற்றிருந்தார்.
மூலனது மனைவி, செய்வது அறியாதவளாய், அடுத்த நாள் அதிகாலையில், அயலவர்களையும் அழைத்துக் கொண்டு மூலனைத் தேடியலைந்து அம்மடத்தை அடைந்தாள். யோகநிலையில் வீற்றிருந்த கோலத்தைக் கண்டு மூலன் யோகநிலை யுற்று விட்டான். இனி அவன் இவ்வாழ்க்கைக்கு உரியவன் அல்லன் என்று அயலவர்கள் தீர்மானித்தார்கள். மூலனது மனைவிக்கு ஆறுதல் கூறி, அவளை அழைத்துச் சென்றார்கள். நெடுநேரம் ஈழித்து யோகநிலையினின்றும் விடுபட்ட யோகியார், பசுக்கூட்டம் வந்த வழியில் நடந்து, தாம் தமது உடலை விட்டு அகன்ற இடத்தை அடைந்தார். அங்கே அவரது உடலைக் காணவில்லை. திகைத்த யோகியார் நடந்தவற்றையெல்லாம் இறைவன் திருவருளாகவே உணர்ந்தார், திருவாவடு துறையினை அடைந்தார், அங்கே கோயில் கொண்ட இறைவனை வணங்கினார், கோயிலுக்கு வெளியே மேற்குத் திசையில் இருந்த அரசமரத்தின் அடியில் இறை சிந்தனையோடு சிவயோக நிலையில் அமர்ந்தார்.
அவ்வாறு அமர்ந்துகொண்டு ஊனுடம்பில் இருந்தபடியே பிறவித்துன்பத்தைப் போக்கினார். அதாவது சீவன்முத்தரானார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மலர்களாலான திருமந்திர மாலை என்னும் நூலை ஆண்டுக்கு ஒரு பாடல் என்ற வகையிலே மூவாயிரம் பாடல்களில் அருளினார். அதன்பின் திருக்கயிலையை அடைந்து இறைவனது திருப்பாதத்தில் ஒன்றினார்.
திருமந்திரம்
திருமூய நாயனார் அருளிச்செய்த திருமந்திரம், சைவத்திருமுறையுள் பத்தாவதாக அமையப்பெறுகிறது. கேரத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் விளங்கு கின்றது; தமிழாகமம் என்று சிறப்பிக்கப்படுகிறது. திருமந்திரம் முன்னுரையாய் அமைந்த பாயிரத்தையும் தந்திரம் என்ற பெயரிலான ஒன்பது பிரிவுகளையும் கொண்டமைந்துள்ளது.
தந்திரம் என்பது ஆகமத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். ஒன்பது ஆகமங்களின் சாராம்சங்கள் ஒன்பது தந்திரங்களிலும் அமைந்துள்ளன என்பர். அத்தந்திரங்களில், உலக வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கங்கள், உள்பொருள் பற்றிய விளக்கங்கள், ஆன்மாக்கள் இறைவனை அடைவதற்கு உதவும் மார்க்கங்கள், சிவசின்னங்களின் முக்கியத்துவம், குருலிங்கசங்கம் வழிபாடு, முத்தி முதலான பல விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
திருமூலர் போலித்தனமான சமய வாழ்க்கையைக் கடித்துரைக்கிறார், தர்மத்தை வலியுறுத்துகிறார், நீதி தவறாது நடுநிலைமையோடு வாழும் வாழ்வையே சமய வாழ்வாக வலியுறுத்துகிறார்.
அன்பே சிவம் என்பது திருமூலர் வலியுறுத்தும் பேருண்மையாகும். பொய்யான விரதங்களாலும் ஆசாரங்களாலும் இறைவனை அடைய முடியாது. உண் மையான அன்பினாலே - பக்தியினாலேயே இறைவனை அடையலாம் என்கிறார் திருமூலர்.
இறைவனிடம் போலவே சகல சீவராசிகளிடமும் அன்பு வைக்க வேண்டும். இறைவனை வணங்குவது, உயிர்கள் மேல் இரக்கம் காட்டுவது, ஏழைகளுக்கு உதவுவது, பிறரை அன்போடு அரவணைப்பது என்று இத்தகைய காரியங்களைச் செய்வதற்கு பொருளாதார வசதியோ ஆளணியோ தேவையில்னல, மனம் இருந்தால் அவை எல்லோருக்கும் ஆகக்கூடிய இலகுவான கருமங்களே.
உயர்வான கருத்துக்களை மிக எளிய முறையில் எடுத்துரைக்கும் திருமந்திரம், நாம் எல்லோரும் படித்துப் பயன் பெறவேண்டிய நூலாகும்.
நன்றி
0 Comments