மன்னன் உபதிஸ்ஸன் - KING UPATHISSAN


மன்னன் உபதிஸ்ஸன்



மன்னன் உபதிஸ்ஸன் - KING UPATHISSAN

வம்சம்  ---  பிராமண வம்சம்

முன்பிருந்த ஆட்சியாளர்  ---  விஜயன்

பின்பு வந்த ஆட்சியாளர்  ---  பண்டுவாசுதேவன்

ஆட்சி செய்த பிரதேசம்  ---   உபதிஸ்ஸகம

ஆட்சி செய்த காலப்பகுதி  ---  கிமு 505 - 504

ஆட்சி செய்த வருடங்களின்  எண்ணிக்கை ---  1 வருடம்


உபதிஸ்ஸன் ஆரிய இளவரசனான விஜயன் என்னும் இலங்கை மன்னனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சனும் ஆவான். உபதிஸ்ஸகம எனும் பெயரில் ஒரு நகரத்தைக கட்டி அதற்குத் தன் பெயரையே சூட்டிக்கொண்டான்,

விஜயன் தான்  இறக்கும் சந்தர்ப்பத்தில் தனக்கு வாரிசுகள் இன்மையினால் தனது தம்பியான சுமித்தனை அழைக்க அவன் தனது மகனான பாண்டுவாசுதேவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான் . அவ்வாறு அவன் இலங்கைக்கு வரும் வரையில் தம்பபண்ணியை உபதிஸ்ஸ 1 வருடம் ஆட்சி செய்தான் . உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் என்று Humphry William Codrington எழுதிய இலங்கையின் சுருக்கமான வரலாறு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவனது ஆட்சிக்காலத்தில் வரலாற்றில் குறிப்பிடப்படும் அளவில்  பெரிதாக ஒரு நிகழ்வும் இடம்பெறவில்லை. இதனால் இவனது வரலாறு  புராதன நூல்களில் அவ்வளவு பெரிதாக குறிப்பிடப்படவில்லை.

இவனுக்குப் பின்  பண்டுவாசுதேவன் ஆட்சிபீடம் ஏறினான்.


நன்றி


Post a Comment

0 Comments