கருட புராணம் பகுதி - 01 - GARUDA PURANAM PART - 01

கருட புராணம் பகுதி - 01


கருட புராணம் பகுதி - 01 - GARUDA PURANAM PART 01

கருட புராணம் என்றால் என்ன ?

கருட புராணம் என்பது பறவைகளின் அரசனான கருடனுக்கு ஏற்பட்ட ஐயங்களை தீர்க்கும் பொருட்டு திருமால் எடுத்துரைக்கும் ஒரு அதி அற்புதமான புராணம் ஆகும். மனிதர்களாக பிறந்த அனைவரும் குறிப்பாக எதையும் பகுத்தறிந்து புரிந்துகொள்ளக்கூடிய உயிரினமாக இருப்பதாலும், பிறப்புகளில் உன்னதமான பிறப்பான மானுட பிறவியில் இருக்கக்கூடிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய புராணம் கருட புராணம் ஆகும்.

அனைத்து வளங்களும் நிரம்பி இருக்கக்கூடிய மனிதர்கள் மட்டும் அல்லாத, கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு உயிரினங்கள் வாழ்வதற்கான வாழிடத்தை அளித்திருக்கக்கூடிய இடம்தான் பூமி. பூமி உருவான பொழுதில் ஓரறிவு உயிரினங்கள் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து அடுத்தடுத்த காலங்களில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியினால் இன்று ஆறறிவு படைத்து, எதையும் பகுத்தறிந்து, நன்மை எது? தீமை எது? என அறிந்து செயல்படும் தன்மை கொண்டு சிறந்த உயிரினமாக இன்றளவும் மனித உயிரினம் இருந்து வருகின்றது.

அணுவாக இருந்தாலும், அண்டமாக இருந்தாலும் அனைத்திலும் நிரம்பி இருக்கக்கூடிய பரம்பொருளால் உருவாக்கப்பட்ட உயிரினங்களில் தேவர்களுக்கு முன் இருக்கக்கூடிய பிறப்பு என்பது மனித பிறப்பு. இந்த ஒரு காரணத்தினாலேயே மற்ற பிறப்புகளை காட்டிலும் மனித பிறப்பு என்பது அதி உன்னதமான பிறவியாக கருதப்படுகின்றது.

இதன் முக்கியத்துவத்தை அறிந்து கொண்ட நமது முன்னோர்கள் மற்றும் தவசீலர்கள் நமது தோற்றத்திற்கு அடிப்படையாக இருக்கக்கூடிய பரம்பொருளிடம் இருந்து பலவிதமான ஆற்றல்களை பெற்றிருந்தனர். அதனால் எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளை அறிந்து கொள்ள உதவும் வகையில் எந்தவொரு தொழில்நுட்ப உதவியுமின்றி அன்றே ஒவ்வொரு கிரகத்திற்கும் உள்ள தொலைவு, நிறம் மற்றும் அதனுடைய தன்மைகள் குறித்தும், அந்த ஒளியினால் உயிரினத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்தும் ஓலைச்சுவடிகளில் நமக்காக எழுதி அளித்து சென்றுள்ளனர்.
நமது முன்னோர்கள் எதையும் முன்னோக்கியே சிந்தித்து கொண்டு இருப்பதினாலோ என்னவோ அவர்களை நாம் 'முன்னோர்கள்" என்று அழைக்கின்றோம். ஏனெனில் இன்றைய நவீன யுகத்தில் நாம் வாழ்வதற்கு என்ன தேவை? என்பதை மட்டுமே இன்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் அன்றோ பாரத பூமியில் பிறந்த நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒரு பிறவி பிறப்பதற்கான காரணம் என்ன? அதன் பிறப்பு என்பது எதன் அடிப்படையில் அமைகின்றது? எதனால் ஒரு பிறவி பலவித இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்து இந்த பூமியில் வாழ்கின்றது? என்பதை பற்றிய தகவல்களை அளித்துச் சென்றுள்ளனர்.

பிறக்கின்ற அனைத்து பிறவிகளிலும் துன்பங்களை அனுபவிக்காமல் சில பிறவிகள் இன்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்கின்ற காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு, பலவிதமான தகவல்களையும் நமது முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்ட அந்த பயணத்தின் விளைவாக பரம்பொருளின் அருளோடும், நமக்கு இந்த பூமியில் வாழ்வது எப்படி? என்றும், தவறான செயல்களில் ஈடுபடுவதால் நமக்கு என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன? என்றும் விரிவாக எடுத்துரைக்கும் பொருட்டு கருடரின் உதவியோடு கருட புராணம் பலவிதமான ரகசியங்களையும் எடுத்துரைக்கின்றது.

கருட புராணம் என்பது பூமியில் பிறந்து, ஆன்மாவுடன் உடலும் இணைந்து இருக்கும் பொழுது நாம் எவ்விதம் வாழ வேண்டும்? என்றும், அவ்விதமாக வாழும்போது நாம் செய்த கர்மாக்களின் அடிப்படையில் உடலை இழந்த ஆன்மா அனுபவிக்கக்கூடிய இன்ப, துன்பங்களை பற்றி எடுத்துரைக்கும் ஒரு வாழ்க்கை சாஸ்திரமாகும்.

கருட புராணத்தை படிப்பதன் மூலமாகவோ அல்லது ஒருவர் வாசிக்க இன்னொருவர் கேட்பதன் மூலமாகவோ இந்த பூமியில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்பதை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இயலும். நாம் செய்யும் சிறு செயல்கள் எவ்விதமான பாதிப்பை ஏற்படுத்தும்? என்பதையும் இந்த புராணம் நமக்கு எடுத்துரைக்கும்.

நமது பெற்றோர்களுக்கு நாம் எவ்விதம் சில கடமைகளை செய்ய வேண்டும்? என்றும், அந்த கடமைகளை செய்ய தவறினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பற்றியும், நாம் முழுமையாக அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கக்கூடிய புராணம் கருட புராணம் ஆகும்.

இந்த பூமியில் வாழும் வரை நம்மால் முடிந்த அளவு எப்படி இருக்க வேண்டும்? என்பதை பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருட புராணத்தை பற்றி அறிந்து கொள்ள நமது முதல் அடியை எடுத்து வைப்போம்.


சூதமாமுனிவர் யார்?

பதினெட்டு புராணங்களை தொகுத்துக் கொடுத்த வியாசரின் சீடராக இருக்கக்கூடியவர் சூதமாமுனிவர். அவர் தம்முடைய குருவிடமிருந்து பல விசேஷமான பாடங்களையும், புராணங்களையும் கேட்டு அறிந்து கொண்டுள்ளார். சூதமாமுனிவர் அடிக்கடி நைமிசாரண்ய வனத்திற்கு செல்லும்பொழுது அங்கிருந்த சீடர்களுக்கு தமது குருவின் உதவியால் அறிந்த பல விஷயங்களை அவர்களுக்கு எடுத்துரைப்பார்.

அவ்விதம் அவர் எடுத்துரைக்கையில் சிலர் உயிரினங்களின் பிறப்பு, இறப்பு பற்றி நாங்கள் எதுவும் அறிந்ததில்லை. ஆகவே தாங்கள் எங்களுக்கு மரணத்திற்கு பின்பு நிகழும் நிகழ்வுகளை பற்றியும், ஒரு மனிதன் இறைவனால் படைக்கப்பட்ட இந்த பூவுலகில் வாழும்போது எவ்விதத்தில் வாழ வேண்டும்? என்பதை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்று வினவினார்கள்.

சீடர்களின் ஐயங்களை போக்குவது குருவின் கடமை மட்டுமல்லாது, ஒரு மகத்தான பணி அல்லவா?. அதன் பொருட்டு அவர் ஒரு உயிரினத்தின் பிறப்பு, இறப்பு மட்டுமல்லாது இறப்பிற்கு பின் அந்த உயிரினத்தின் ஆன்மா மேற்கொள்ளக்கூடிய பயணம் தொடர்பான நிகழ்வுகளை எடுத்துரைத்தார்.

சூதமாமுனிவர், பூவுலகில் பிறந்து அனைத்து ஜீவராசிகளையும் காத்து கொண்டிருக்கக்கூடிய திருமாலாகிய நாராயணன் ஒரு சமயத்தில் கருடனுக்கு எடுத்துரைத்த கருட புராண விளக்கத்தை உங்களுக்கு நான் கூறுகிறேன் அதை கவனத்துடனும், கருத்துடனும் அனைவரும் கேட்பீர்களாக...!! என்று கூறினார். மனிதன் வாழும்போது செய்யும் செயல்களின் அடிப்படையிலேயே எமலோகத்தில் உள்ள ஆன்மாவிற்கு சில விதிமுறைகளின் அடிப்படையில் அதற்குண்டான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன.

அதாவது, ஒவ்வொரு நாட்டிலும் அவ்வூரில் வாழும் மக்களுக்கு ஏற்ப ஒவ்வொரு விதிமுறைகள் இருப்பதுபோல், ஆன்மாக்கள் இருக்கும் எமலோகத்திலும் சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் யாவும் கருட புராணத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. எமலோகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்தும், மனிதர்கள் செய்யும் கர்மாக்களை குறித்தும் அதன் அடிப்படையில் உருவாகும் விளைவுகளை பொறுத்து அவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகள் யாது? என்று திருமால் கருடாழ்வாருக்கு உரைத்தார்.

திருமால் தமக்கு உரைத்த இறப்பிற்கு பின் நிகழும் நிகழ்வுகள் மற்றும் எமலோகத்தில் இருக்கும் ஆன்மாவிற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் குறித்து, கருடாழ்வார் தவசீலர்களுக்கு எடுத்துரைத்த காரணத்தினால் இந்த புராணம் அவரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. அதாவது கருட புராணம் என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது. இந்த புராணத்தை பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்னால் கருடனை பற்றியும், ஏன் கருடன் திருமாலின் வாகனமாக இருக்கின்றார்? என்பதை பற்றியும் தெளிவாக புரிந்து கொள்வோம்.


கருடனின் பிறப்பும், தோற்றமும்

காசியப்ப முனிவர் தட்ச பிரஜாபதிக்கு பிறந்த மகள்களான கத்ரு, வினதை என இரண்டு பெண்மணிகளை திருமணம் செய்து கொண்டார். அவ்விருவரும் தனது கணவரின் மனம் நோகாத வண்ணம் அவருக்கு தேவையான சேவைகள் மற்றும் பணிவிடைகளை செய்து கொண்டு வந்தனர். அவர்களுடைய சேவை மற்றும் பணி ஆகியவற்றால் மனம் மகிழ்ந்த காசியப்ப முனிவர், உங்களுக்கு வேண்டிய வரத்தினை கேட்பீர்களாக... என்று கூறினார்.

காசியப்ப முனிவர் இவ்வாறு கூறியதும் கத்ரு ஆற்றலும், வேகமும் நிறைந்த ஆயிரம் பிள்ளைகளை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாள். வினதை எனக்கு ஆயிரம் பிள்ளைகளை காட்டிலும் அதிக பலம் கொண்ட இரண்டு பிள்ளைகள் மட்டுமே வேண்டும் என்று வேண்டினாள்.

காசியப்ப முனிவரும் அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு ஆசியும், வரங்களையும் அளித்தார். அவர் அளித்த வரத்தினால் அவர்களின் எண்ணமும் நிறைவேற தொடங்கியது. அதாவது கத்ரு உரிய காலத்தில் கருவுற்று ஆயிரம் முட்டைகளை இட்டாள். வினதை இரண்டு முட்டைகளை இட்டாள். அதாவது, 500 ஆண்டுகளுக்கு பிறகே அவற்றில் அவர்கள் கேட்ட குழந்தைகள் பிறக்கும் என்பது வரமாக இருந்தது.

அதன்படி கத்ருவின் முட்டைகளில் இருந்து ஆயிரம் நாகங்கள் பிறக்க.. அவள் தனக்கு பிறந்த குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருந்தாள். தன்னுடைய சகோதரியாக இருந்தாலும் அவள் அவர்களுடைய புதல்வர்களுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கும் காட்சிகளை கண்டதும் வினதையின் மனதில் ஒருவிதமான கோபமும், புரிதலின்மையும் உருவாகத் துவங்கியது.

வினதையின் மனதில் அதாவது, தனது சகோதரிக்கு பிறந்த பாம்புகளைப் போல தனக்கும் பாம்புகள் பிறந்து விடுமோ... என்ற அச்சம் அதிகரிக்கத் துவங்கியது. அந்த அச்சமே அவளிட்ட முட்டைகளில் ஒன்றை உடைக்கவும் வைத்தது. உடைந்த முட்டையில் இருந்து பாதி உடம்போடு மைந்தன் ஒருவன் வெளிப்பட்டான்.

வெளிப்பட்ட மைந்தனுக்கு மேல்பாதி உடம்பு இருந்தும் கீழ்பாதி உடம்புகள் இல்லாமலும் இருந்தன. அதாவது, அவனுக்கு கால்களும் இல்லை... சிறகுகளும் இல்லாமல் இருந்தன. அவனே அருணன் ஆவான். அவசரத்தினால் தன்னை பாதி உருவத்துடன் படைத்ததால் சினம் கொண்ட அருணன் தன்னுடைய தாயை, சித்தியான கத்ருவிற்கு அடிமையாக வேண்டும் என்று தாயாருக்கே சாபம் தந்தான்.

பின் வினதை, மற்றொரு முட்டையை உடைக்காமல் பொறுமையுடன் காத்துக்கொண்டு இருந்தாள். இந்த நேரத்தில் அருணன் இட்ட சாபமானது செயல்படத் துவங்கியது. அதாவது, இவர்கள் முட்டையிட்ட காலத்தில் அசுரர்களும், தேவர்களும் இணைந்து அமிர்தத்தை எடுப்பதற்காக கடலை கடைந்து கொண்டிருந்தனர்.

திருப்பாற்கடலில் அமிர்தத்தைக் கடைந்தபொழுது முதல் முதலில் வெளிவந்த எழில்மிகு தோற்றம் உடைய... காண்போரை கவரும் தன்மை கொண்ட 'உச்சைச்சிரவம்" என்ற குதிரையை இந்திரன் தனக்காக எடுத்துக் கொண்டான். சகோதரிகளாக வாழ்ந்து வந்தாலும் கத்ருவும், வினதையும் குணத்தளவில் மாறுபட்டே காணப்பட்டு இருந்தனர். அதாவது, கத்ரு தீய குணம் நிரம்பியவளாகவே இருந்தாள். அவள் எப்பொழுதும் தனது சகோதரியான வினதையின் மீது ஒருவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் இருந்து வந்தாள்.

மனிதர்கள் முட்டை இட முடியுமா ?

காசியப்ப முனிவர் பிரம்மதேவரின் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஆவார். அவரிடமிருந்த பல விநோதமான மற்றும் விசித்திரமான சக்தியினால் அவருக்கு தேவையான பணிவிடைகளை செய்ய மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகளும் தொண்டு புரிந்து வந்தன... சில பறவைகள் அவரிடத்தில் மனைவிகளாகவும் இருந்து வந்தன. அப்படி இருந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தவர்களில் பறவை இனத்தை சேர்ந்த வினதையும், பாம்புகளின் இனத்தை சேர்ந்த கத்ருவும் அடங்குவர். இவர்கள் பறவை மற்றும் பாம்பு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் முட்டையிட்டே பிள்ளைகளை ஈன்று எடுத்தார்கள்.

ஒரு சமயத்தில் வினதை மற்றும் கத்ரு ஆகிய இருவரும் கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இந்திரனிடம் இருந்து வந்த 'உச்சைச்சிரவம்" என்ற அழகான குதிரையை கண்டனர். அவர்கள் இருவரும் அந்த குதிரையின் அழகில் மெய்மறந்து நின்று கொண்டிருந்த சமயத்தில் அருணன் இட்ட சாபம் செயல்படத் துவங்கியது. அதாவது, சகோதரிகள் இருவருக்கும் இடையில் அந்த குதிரையின் வால் என்ன நிறமாக இருக்கும்? என்ற ஒரு கேள்வி எழத்துவங்கியது.

கத்ரு அந்த குதிரையின் வால் கருப்பு நிறத்தில் இருக்கின்றது என்று கூறினாள். ஆனால் வினதையோ, அதன் வால் வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறினாள். இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் அதிகரிக்கவே அந்த வாக்குவாதம் முடிவில் ஒரு போட்டியாக உருவானது. கத்ரு வினதையை நோக்கி, நான் கூறுவது போல வால் கருப்பாக இல்லை என்றால் நீ அளிக்கும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை நான் கூறியது போலவே வால் கருப்பு நிறத்தில் இருக்குமேயானால் நான் அளிக்கும் தண்டனையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினாள்.

அதாவது, இந்த போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோல்வி அடைந்தவர் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே பந்தயம் ஆகும் என்று கத்ரு கூறினாள். அதற்கு வினதையும் உடன்பட்டு நீ கூறுவதுபோல யார் போட்டியில் தோல்வி அடைகின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு அடிமையாக இருப்பார்கள் என்று கூறினாள். வஞ்சனையும், சூதின் உருவமாக இருந்த கத்ரு தனது சகோதரியை அடிமையாக வைத்து கொள்வதற்கு இதுவே தகுந்த சமயமாகும் என்று எண்ணி தான் ஈன்ற பாம்பு புத்திரர்களை அழைத்தாள்.

அவர்களிடம் தன்னுடைய சகோதரிக்கும், தனக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த நிகழ்வுகள் மற்றும் பந்தயத்தின் விளைவுகளை பற்றி எடுத்துரைத்தாள். பின்பு தமது குமாரர்களை நோக்கி உம்முடைய தாய் இன்னொருவருக்கு அடிமையாக இருக்க விருப்பம் கொள்வீர்களா? என்று கேட்டாள். அதற்கு பாம்பு குமாரர்களும் தங்களுடைய தாய் எவருக்கும் அடிமையாக இருத்தல் எங்களுக்கு பிடிக்காது என்று கூறினார்கள். நீங்கள் இந்த போட்டியில் வெற்றிபெற குமாரர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்கள்.

ஒரு சமயத்தில் வினதை மற்றும் கத்ரு ஆகிய இருவரும் கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இந்திரனிடம் இருந்து வந்த 'உச்சைச்சிரவம்" என்ற அழகான குதிரையை கண்டனர். அவர்கள் இருவரும் அந்த குதிரையின் அழகில் மெய்மறந்து நின்று கொண்டிருந்த சமயத்தில் அருணன் இட்ட சாபம் செயல்படத் துவங்கியது. அதாவது, சகோதரிகள் இருவருக்கும் இடையில் அந்த குதிரையின் வால் என்ன நிறமாக இருக்கும்? என்ற ஒரு கேள்வி எழத்துவங்கியது.

கத்ரு அந்த குதிரையின் வால் கருப்பு நிறத்தில் இருக்கின்றது என்று கூறினாள். ஆனால் வினதையோ, அதன் வால் வெள்ளை நிறத்தில் இருப்பதாக கூறினாள். இருவருக்கும் இடையில் வாக்குவாதங்கள் அதிகரிக்கவே அந்த வாக்குவாதம் முடிவில் ஒரு போட்டியாக உருவானது. கத்ரு வினதையை நோக்கி, நான் கூறுவது போல வால் கருப்பாக இல்லை என்றால் நீ அளிக்கும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை நான் கூறியது போலவே வால் கருப்பு நிறத்தில் இருக்குமேயானால் நான் அளிக்கும் தண்டனையை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினாள்.

அதாவது, இந்த போட்டியில் வெற்றி பெற்றவருக்கு தோல்வி அடைந்தவர் அடிமையாக இருக்க வேண்டும் என்பதே பந்தயம் ஆகும் என்று கத்ரு கூறினாள். அதற்கு வினதையும் உடன்பட்டு நீ கூறுவதுபோல யார் போட்டியில் தோல்வி அடைகின்றார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு அடிமையாக இருப்பார்கள் என்று கூறினாள். வஞ்சனையும், சூதின் உருவமாக இருந்த கத்ரு தனது சகோதரியை அடிமையாக வைத்து கொள்வதற்கு இதுவே தகுந்த சமயமாகும் என்று எண்ணி தான் ஈன்ற பாம்பு புத்திரர்களை அழைத்தாள்.

அவர்களிடம் தன்னுடைய சகோதரிக்கும், தனக்கும் நிகழ்ந்து கொண்டிருந்த நிகழ்வுகள் மற்றும் பந்தயத்தின் விளைவுகளை பற்றி எடுத்துரைத்தாள். பின்பு தமது குமாரர்களை நோக்கி உம்முடைய தாய் இன்னொருவருக்கு அடிமையாக இருக்க விருப்பம் கொள்வீர்களா? என்று கேட்டாள். அதற்கு பாம்பு குமாரர்களும் தங்களுடைய தாய் எவருக்கும் அடிமையாக இருத்தல் எங்களுக்கு பிடிக்காது என்று கூறினார்கள். நீங்கள் இந்த போட்டியில் வெற்றிபெற குமாரர்களாகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று வினவினார்கள்.

கத்ரு, நான் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமெனில் இந்திரனின் குதிரையாகிய உச்சைச்சிரவத்தின் வால் பகுதியில் நீங்கள் அனைவரும் தங்கியிருங்கள் என்று கூறினாள். அவ்விதம் நீங்கள் தங்கியிருக்கும் பொழுது நான் என் சகோதரியை அழைத்து வந்து அவளிடம் குதிரையின் வால் பகுதி கருப்பு நிறம் என காட்டி நான் வெற்றி அடைவேன் என்று தன்னுடைய சூழ்ச்சியை தன்னுடைய குமாரர்களிடம் எடுத்துரைத்தாள். 

குமாரர்களும் தனது தாய் உரைத்தது போலவே குதிரையின் வால் பகுதியில் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த வேளையில் கத்ரு, வினதையை அழைத்து வந்து இப்பொழுது பார்... குதிரையின் வால் கருமை நிறத்தில் இருக்கிறதல்லவா? என்று கூறினாள். ஆம்... குதிரையின் வால் கருமை நிறத்தில் இருக்கின்றது. ஆகவே பந்தயத்தில் நீதான் வெற்றியடைந்தாய் என்று கூறினாள் வினதை. பின்னர், பந்தயத்தில் கூறியதுபோல் இன்று முதல் நான் உம்முடைய அடிமையாக இருக்கின்றேன் என்று கூறினாள் வினதை.

அருணன் இட்ட சாபமும் செயல்படத் துவங்கியது. இந்த நேரத்தில் வினதையிட்ட மற்றொரு முட்டையிலிருந்து கருடன் பிறந்தான். தன்னுடைய சகோதரி என்றும் பாராமல் வினதையை பல துயரங்களையும், கொடுமைகளையும் அனுபவிக்க வைத்தாள் கத்ரு. இங்கு நிகழ்ந்து கொண்டிருந்த அனைத்து நிகழ்வுகளையும் கண்டு கொண்டிருந்த சிறுவயது பாலகனான கருடன் தன் தாயிடம் ஏன் நீங்கள் அவர்களிடம் அடிமையாக இருக்கின்றீர்கள்? என்று கேட்டான். 

மேலும் அவர்கள் உங்களை சூழ்ச்சி செய்து ஏமாற்றி விட்டார்களே... ஏன் நீங்கள் அவரிடம் மீண்டும் அடிமையாக இருக்கின்றீர்கள்? என்று வினவினார். நாம் ஒருமுறை ஒருவருக்கு வாக்கு கொடுத்தோமானால் அதை எவ்விதத்திலாவது நிறைவேற்ற வேண்டும். நாம் கொடுத்த வாக்கினை மீறி செயல்படக்கூடாது. ஆகவேதான் நான் என் சகோதரியிடம் அடிமையாக வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேன் என்று கூறினாள். (இவர்கள் யாவரும் தேவ பிறவிகள் அல்லவா...!! ஆகவே சத்தியத்திற்கும், கட்டுப்பட்டவர்கள்).


தாய்க்கு உதவும் கருடன்

நாட்கள் செல்ல செல்ல கத்ருவின் கொடுமைகளும், அவள் செய்து வந்த செயல்களின் தன்மைகளும் எல்லை மீறி செல்லத் துவங்கின. ஒவ்வொரு நாளும் தன்னுடன் பிறந்த சகோதரி என்று கூட பாராமல் வினதைக்கு பலவிதமான இன்னல்களை செய்து கொண்டே இருந்தாள். இவ்விதமாக சென்று கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் தன்னையும், தன்னுடைய ஆயிரம் குழந்தைகளையும் சுமந்து கொண்டு கடலுக்குள் சென்று அங்கு விட வேண்டும் என்று ஆணையிட்டாள்.

கத்ருவுடைய ஆணையை மீற முடியாமல் அவளையும், அவளுடைய ஆயிரம் புத்திரர்களையும் சுமக்க முடியாமல் சுமந்து கடலுக்குள் சென்று அவள் சொன்ன இடத்தில் விட்டாள் வினதை. தன்னுடைய தாயார் அனுபவித்து வரும் இந்த கொடுமைகளில் இருந்தும், அடிமைத்தனத்தில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்று வாலிபனாக வளர்ந்திருந்த கருடன் எண்ணினான்.

பின்பு தன்னுடைய சித்தியான கத்ருவிடம் சென்று தன்னுடைய தாயை விடுவிக்க நான் உங்களுக்கு என்ன செய்து தர வேண்டும்? என்று வினவினான். பின்பு சிறிது யோசித்த கத்ரு, கருடனிடம் தேவர்கள் அருந்தி நீண்ட நாட்கள் உயிர்வாழ உதவியாக இருக்கின்ற அமிர்தத்தை நீ எனக்காக இங்கு கொண்டு வா... நான் உனது தாயை விடுதலை செய்கின்றேன். இனிமேல் உனது தாய் எனக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை என்று கூறினாள் கத்ரு.

என்னுடைய தாயை விடுதலை செய்வதற்காக நான் எதையும் செய்வேன் என்று மனதளவில் எண்ணிக்கொண்டு தேவலோகம் செல்ல ஆயத்தமானான் கருடன். பின்னர் அமிர்தத்தை எடுத்துவர செல்வதற்கு முன்னால் தனது தாயான வினதையிடம் சென்று நிகழ்ந்ததை உரைத்து, தாயே...!! நான் மேற்கொள்ளும் இந்த பயணமும், செய்ய இருக்கின்ற இந்த காரியமும் நன்முறையில் அமைந்து வெற்றியுடன் திரும்பி வர எனக்கு ஆசி புரியுங்கள் என்று கூறினான் கருடன்.

கருடனின் தாயார் சூரியன், சந்திரன் இருவரிடமும் தனது புதல்வனுக்கு உதவுமாறு வேண்டி கொண்டார். அதனால் அவர்களும் கருடனின் இறகுகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக அசரீரி மூலமாக கூறினார்கள். அவர்களை போலவே கழுத்து மற்றும் முகத்திற்கு வாயு பகவானும், கீழ் உடம்பிற்கு அக்னி மற்றும் பிற தெய்வங்களும் பாதுகாப்பு தருவார்கள் என்றும், நீ தேவலோகத்திற்கு செல்வதற்கு முன்னால் நிஷா தலையா என்னும் பகுதியில் அரக்கர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அரக்கர்களை கொன்று அவர்களின் உடலை தின்றுவிட்டு சென்றால் மட்டுமே நீ நினைத்த காரியம் நிறைவேறும். அவ்வாறு சாப்பிடவில்லை எனில் நீ தேவலோகம் செல்ல இயலாது. ஒருவேளை அரக்கர்களை கொல்வதற்கு பதிலாக அவ்விடத்தில் இருக்கக்கூடிய அந்தணர்களை கொன்று சாப்பிட நேரிட்டால் அவர்கள் உன்னுடைய தொண்டை பகுதியில் நின்று, சொல்ல இயலாத வலியை ஏற்படுத்தி விடுவார்கள் என கூறினார்கள்.

மகனே...! நீ தேவலோகம் செல்வதற்கு முன்னால் உமது தந்தையான காசியப்ப முனிவரை வணங்கி அவரிடம் ஆசி பெற்று, ஆலோசனை கேட்டு அதன் பின்பு தேவலோகம் செல்வாயாக...!! என்று கூறினாள். தாயிடமிருந்து ஆசியும், ஆலோசனையும் பெற்ற பின்பு அவர்களிடமிருந்து விடைபெற்ற கருடன் தனது சிறகுகளை விரித்து ஆகாயத்தை நோக்கி பறக்கத் தொடங்கினார்.
இரண்டு சிறகுகளையும் சூரியன் ஒருவர், சந்திரன் ஒருவர் என பலம் கொடுக்க சிறகுகள் அசைக்க அசைக்க எழும்பிய சத்தம் மண்ணுலகம் மட்டுமல்லாது, விண்ணுலகத்தில் உள்ளோருக்கும் கேட்கும் வண்ணமாக இருந்தது. தாயார் கூறிய ஆலோசனைப்படியே தனது தந்தையான காசியப்ப முனிவரை சந்தித்து அவரிடம் ஆலோசனை பெறுவதற்காக அவர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றார்.

தவக்கோலத்தில் இருந்துவந்த காசியப்ப முனிவர் கருடனின் வருகையை அறிந்து, விழி திறந்து, கருடனுக்கு வேண்டிய ஆசிகளை வழங்கிய பின் கருடனிடம் இங்கிருந்து சில தூரம் பயணம் செய்தால் அங்கே ஒரு குளத்தை காண்பாய். அந்த குளத்தில் ஒரு பெரிய ஆமையும், யானையும் இருக்கும். அந்த இரண்டையுமே நீ கொன்று உண்ட பின்னர்தான் நீ தேவலோகம் செல்வதற்கான பயணத்தை மேற்கொள்ள முடியும்.

இதைக்கேட்டதும் கருடன் நான் எதற்காக அந்த யானையையும், ஆமையையும் கொல்ல வேண்டும்? என்று வினவினார். அதற்கு காசியப்ப முனிவர் இறைவன் படைத்த இந்த உலகத்தில் எந்தவொரு உயிரினமும் பிறப்பெடுக்குமாயின் அதற்கு காரணம் இல்லாமல் காரியம் எதுவும் இல்லை என்று கூறினார். இப்பிறவியில் யானையாகவும், ஆமையாகவும் பிறப்பெடுத்திருக்கும் இவர்கள் முற்பிறவியில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து சகோதரர்களாகவும், செல்வ சீமான்களாகவும் வளர்ந்து வந்தார்கள்.

அவர்கள் இருவரும் வளர்ந்து வரும் தருவாயில் அவர்களுடைய பெற்றோர்கள் இறந்து போயினர். உடனிருப்பவர்களின் பேச்சுக்களை கேட்டு, சரி எது? தவறு எது? என்று புரியாமல் சகோதரர்கள் இருவரும் சொத்துக்காக ஒருவரை ஒருவர் அடித்து கொண்டும், சண்டையிட்டு கொண்டும் இருந்தனர். அவர்களின் சண்டையானது ஒருவரை ஒருவர் கொல்லுமளவிற்கு செல்லத் துவங்கியது.

இவர்களுடைய சண்டை இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருப்பதினால் அந்த குளத்தில் எந்த முனிவர்களாலும் குளிக்கவும் முடியவில்லை. மேலும் இவர்களின் சண்டையால் ஏற்படும் அமைதியற்ற சூழ்நிலையால் வனத்தில் தவமும் செய்ய முடியவில்லை. மேலும் அவர்கள் இருவரும் என்னுடைய சந்ததிகளால் மட்டுமே வெல்ல முடியும் என்பதினால் நீ அவர்களை வென்று கொல்வதால் அந்த வனத்தில் தவம் புரிபவர்களுக்கு ஏற்பட்டு இருந்த இன்னல்களும் அகலும் என்று கூறினார்.

காசியப்ப முனிவர் கருடனிடம் யானை மற்றும் ஆமையை உண்பதனால் உனக்கு சக்திகள் அதிகரிக்கும் என்று கூறினார். மேலும் அந்த சக்தியினால் நீ தேவலோகம் செல்வதற்கு பல தடைகள் ஏற்பட்டாலும், அந்த தடைகளை தகர்த்தெறியும் வலிமையும், ஆற்றலும் அதிகரிக்கும் என்று கூறி கருடனுக்கு ஆசிகள் வழங்கினார். கருடனும், காசியப்ப முனிவர் உரைத்தது போலவே பயணம் மேற்கொண்டு வனத்தின் நடுவில் இருந்த குளத்திற்கு சென்றார்.

அப்பொழுது யானையும், ஆமையும் ஒன்றுக்கொன்று சண்டை போட்டுக் கொண்டே இருந்தது. பின்பு கருடனும் இவர்கள் இருவரையும் கொல்ல வேண்டுமே என்று யோசித்து, இருவருக்கும் இடையில் சண்டைகள் அதிகரிக்கும் வகையில் சில செயல்களை செய்தார். அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பலமாக தாக்கிக் கொண்டு இருந்த வேளையில் கருடன் அவ்விருவரையும் பலமாக அவ்விடத்திலேயே கொன்றார்.

இறந்த அவர்களின் உடலை தூக்கிக்கொண்டு செல்லும்பொழுது அவர்களை எங்கு வைத்து உண்பது என்று யோசித்து கொண்டிருந்தார். அப்பொழுது நீண்ட, நெடிய வானளவு உயர்ந்த ஒரு மரத்தினை கண்டார். அந்த மரத்தின் கிளைகள் யாவும் பலமானதாகவும், உறுதியானதாகவும் இருப்பதை அறிந்த கருடன் அந்த மரத்தின் மீது அமர்ந்து உண்ணலாம் என்று எண்ணி அந்த மரத்தினை நோக்கி பறக்கத் தொடங்கினார்.

தனது தந்தையான காசியப்ப முனிவரின் ஆசியும், அன்னையினுடைய ஆசீர்வாதமும் கருடனுக்கு பலமாக அமைந்தது. அது மட்டுமல்லாமல், அவருடைய பலத்தையும் பன்மடங்கு அதிகப்படுத்தி இருந்தது. சூரியன், சந்திரன் மற்றும் வாயு பகவான் ஆகியோர் கருடனுக்கு பாதுகாப்பாக இருந்ததால் அவருடைய வலிமை மென்மேலும் அதிகமாக இருந்தது.

இவர்கள் அளித்த ஆசீர்வாதம், சூரியன் மற்றும் சந்திரனின் துணையினாலும் கிடைத்த பலத்தின் அடிப்படையிலேயே யானையையும், ஆமையையும் கொன்று அவர்கள் இருவரையும் தூக்கி செல்லக்கூடிய அளவில் அவருடைய பலமும் இருந்தது.

நாம் செய்யும் இலக்கு புனிதமானதாக இருந்தால், பெற்றோர்களின் ஆசீர்வாதமும், முன்னோர்களின் அருளும் நமக்கு இருக்கும் வரையில் நம்மால் எந்தவிதமான பிரச்சனைகளையும் எதிர்கொண்டு, அதில் வெற்றியும் அடைய முடியும்.

கருடன் அந்த மரத்திற்கு சென்று யானையையும், ஆமையையும் வைத்து அமரும்பொழுது அந்த மரத்தின் கிளையானது பாரம் தாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக உடையத் துவங்கியது. அதை சற்றும் கவனிக்காத கருடன் தமக்கு சக்தி அளிக்கக்கூடிய அந்த யானையையும், ஆமையையும் உண்ணத் தொடங்கினார்.

கருடன் அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்த பொழுது அந்தக் கிளையானது முறிந்து உடைய துவங்கியது. அப்பொழுதுதான் அவர் கிளையினில் முனிவர்கள் தலைகீழாக தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருப்பதை கண்டார். கிளைகள் உடையும் தருவாயில் முனிவர்கள் தலைகீழாக நின்று தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டதும் இந்நிலையில் அவர்கள் கீழே விழுந்தால் செய்து வந்த தவமும், அவர்களுடைய உயிருக்கு பாதகமும் ஏற்படும்.

இதனால் தமக்கு பலவிதமான இன்னல்களும், தோஷங்களும் உண்டாகுமே...!! என்று எண்ணியவாறு கிளைகள் உடையாத வண்ணமாக மரத்தை லாவகமாக பிடுங்கி அவ்விடத்திலிருந்து ஆகாயத்தை நோக்கி பறக்கத் தொடங்கினார். கருடன் தம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொண்டிருந்த பொழுது தவ நிலையில் இருந்த முனிவர்களோ தவத்திலிருந்து கலைந்து எழுந்தார்கள்.

நிகழ்ந்து கொண்டிருப்பது என்னவென்று புரியாமல் முனிவர்கள் நின்றிருக்க, அவர்கள் தவ நிலையில் இருந்து எழுந்ததைக் கண்ட கருடனும் இனியும் 
நிகழ்வது யாது? என்று புரியாமல் தன்னுடைய தந்தையான காசியப்ப முனிவர் இருக்கும் ஆசிரமத்திற்கு அம்மரத்துடன் பறந்து சென்றார். ஆகாயத்தில் இருந்த வண்ணமாகவே கருடன் தனது தந்தையிடம் நிகழ்ந்து கொண்டிருப்பதை எடுத்துரைத்தார். அவருடைய தந்தையான காசியப்ப முனிவர் மரத்திலிருக்கும் முனிவர்களை நோக்கி கருடன் செய்த செயல்களை பற்றியும், தவ நிலையிலிருந்து உங்களை கலைத்தமைக்கும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் பல யுகங்களாக தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் தவம் கலைந்து விட்டது என்று அவர்களுடைய சினம் அதிகரிக்க துவங்கியது. இந்த நிலையில் காசியப்ப முனிவர் கருடன் எதற்காக சென்று கொண்டிருக்கின்றார்? என்ற காரணத்தையும் கூறினார். அந்த காரணத்தின் மூலமாகவும், கருடனின் துணையோடும் உங்களின் பகைமையை தீர்த்துக் கொள்ள இருக்கின்றது. அதாவது, இந்திரனுடன் பகைமையை முடித்து வாய்ப்பு ஏற்பட்ட கொள்வதற்கான சூழ்நிலைகளும் அமையும் என்று கூறினார்.

மரத்தில் தலைகீழாக நின்று முனிவர்கள் இந்திரனின் கொண்டிருந்த மீது பழி கொண்டிருப்பதற்கான காரணம் ஒன்றுள்ளது. அதாவது, தட்ச பிரஜாபதி ஒரு முறை பெரிய அளவில் யாகம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். பிரஜாபதி மேற்கொண்டிருந்த அந்த யாகத்திற்கு காசியப்ப முனிவர் தன்னுடைய சார்பில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலகியா முனிவர்களை அனுப்பி வைத்தார்.

பாலகியா முனிவர்கள் உருவத்தோற்றத்தில் குள்ளமானவர்களாக இருப்பார்கள். பிரஜாபதி நடத்திவந்த அந்த யாகத்திற்கு தேவர்களின் அதிபதியான இந்திரன் தன்னுடைய சார்பில் பல முனிவர்களை அனுப்பி வைத்தார். அவ்விதத்தில் அனுப்பி வைத்து, இந்திரன் ஒரு சஞ்சல எண்ணத்துடனே ஒரு சில காரியங்களை மேற்கொண்டார்.

அதாவது, உலகில் உள்ள அனைவரும் தன்னை பெருமையாக பேச வேண்டும் என்று எண்ணினார். இந்த எண்ணத்தோடு வையகத்தில் உள்ள அனைத்து வனங்களிலும் இருந்து யாகத்திற்கு தேவையான அனைத்து விறகுகளையும் முனிவர்கள் எடுத்து சென்றுவிட்டனர். சிறு விறகுகள் கூட யாகங்கள் நடத்துவதற்கு இல்லாமல் இருந்தது. இதை அறியாத பாலகியா முனிவர்கள் பல வனங்களில் தேடியும் சிறு விறகுகள் கூட கிடைக்காததால் வெறும் கரத்தோடு யாகம் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர்.

பின்பு அவர்கள் ஒருவாறாக மனதை நிலைப்படுத்திக் கொண்டு யாகம் நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர். யாகம் நடைபெற்றுக் இடத்திற்கு தங்களால் கொண்டிருக்கும் இந்த முடிந்த அளவு, ஏன் இயற்கையாக கிடைக்கக்கூடிய சிறு விறகுகளை கூட கொண்டு வர முடியவில்லை? என்று கேட்டதுடன், தோற்றப்பொலிவையும் முனிவர்களின் கொண்டு அவர்களை மதிக்கா வண்ணத்துடன் ஏளனமாக இந்திரன் நடந்து கொண்டார்.

இந்திரன் நடந்து கொண்ட விதத்தில் மிகவும் கோபம் கொண்ட முனிவர்கள் அந்த யாகத்தில் கலந்து கொள்ள முடியாமல் திரும்பி வந்தனர். அப்பொழுது பாலகியா முனிவர்கள் இந்திரனுக்கு ஒரு சாபத்தையும் அளித்தனர். அதாவது எங்களின் உருவத்தோற்றத்தை கொண்டு எவ்விதம் எங்களை ஏளனம் செய்தாயோ... எங்கள் மூலமாக அனுப்பப்படும் சாதாரண உருவம் கொண்ட ஒருவனின் மூலமாக இந்த உலகில் உள்ளோர் அனைவரும் அறியும் வண்ணமாக நீயும் அவமானப்படுவாயாக...!! என்று சாபம் கொடுத்தார்கள்.

பின்பு தங்களுக்கு நிகழ்ந்தவற்றை காசியப்ப முனிவரிடம் அவமானப்படுத்தும் எடுத்துரைத்தனர். விதத்தில் இந்திரனை ஒருவரை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் அறிவுரைகளை கூறியும், வலுத்திருந்தது. பின்பு அவர்களை கடுமையான தவம் இருக்குமாறும், அவர்கள் மேற்கொள்ளும் தவத்திற்கு உண்டான இடத்தையும், எவ்விதத்தில் தவம் புரிய வேண்டும்? என்றும் அவர் கூறினார்.

அதாவது, நீண்ட நெடிய வலுவான மரத்தில் தலைகீழாக நின்ற நிலையில் ஒரே எண்ணத்துடன் நீங்கள் அனைவரும் தவம் புரிவீர்களாக...!! என்றும், காலம் வரும்போது நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய ஒருவர் உங்களை தேடி வருவார் என்றும் கூறினார். காசியப்ப முனிவரிடம் கருடன் வந்து நிகழ்ந்தவற்றை கூறியதும் நீண்ட காலமாக தவம் இயற்றி கொண்டு இருக்கும் பாலகியா முனிவர்கள் எதிர்பார்த்து இருக்கக்கூடிய ஒருவர் வந்துவிட்டார் என்று எண்ணினார்.

பின்பு முனிவர்களிடம் கருடனை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனே இவ்விதமான ஒரு நாடகத்தையும் நடத்தினார் என்பது யாவரும் அறியாதது. கருடனை பற்றி காசியப்ப முனிவர் கூறியதும் பாலகியா முனிவர்களின் மனதில் ஒரு எண்ணம் உருவாக தோன்றியது. அதாவது, சாதாரண உருவம் கொண்ட இந்த கருடன் மூலமாக இந்திரனை பழி தீர்த்துக் வேண்டுமென்பதே எண்ணம் ஆகும்.


தேவலோகத்திற்கு செல்லும் கருடன்

முனிவர்கள் தங்களது தவ வலிமையால் இந்நாள் வரை பெற்ற சக்திகளை, தேவலோகம் சென்று இந்திரனை தோற்கடித்து, அவமானப்படுத்துவதற்காக கருடனுக்கு அளித்தார்கள். இவ்விடத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து நிகழ்வுகளையும், கருடனின் எண்ணங்கள் யாது? என்பதை பற்றியும் தேவ ஒற்றர்கள் மூலமாக தேவேந்திரன் அறிந்து கொண்டார்.

தேவேந்திரன் இதை அறிந்ததும் இச்செயலை எவ்விதத்திலாவது தடுத்தாக வேண்டும். இல்லையெனில் பாம்புகள் அமிர்தத்தை உண்டு சாகா வரம் பெற்றால் பிற்காலத்தில் பலவிதமான இன்னல்கள் ஏற்படும். அமிர்தம் என்பது தேவர்களுக்கு மட்டும் உரியதாகும் என்பதை உணர்ந்தார். கருடன் அமிர்த குடத்தை எடுக்காமல் இருக்க அதற்கு தேவையான அனைத்து பாதுகாப்புகளையும் இரு மடங்காக அதிகப்படுத்தினார்.

அமிர்த குடத்தை இரவு பகல் என்றும் பாராமல்... இமைகள் மூடாமல் கண் விழித்து இருந்து பார்க்கும் வண்ணம்... இரண்டு பெரிய ராட்சச நாகங்களை அங்கே சுழன்று கொண்டு இருக்கும் வகையில் ஆணை பிறப்பித்தார் இந்திரன். அந்த இரண்டு நாகங்களும் குடம் இருக்கும் இடத்திலேயே சுழன்று கொண்டு விஷக்காற்றை வெளியிட்ட வண்ணமாக இருந்தன.

மேலும் அமிர்தம் நிறைந்திருக்கும் குடம் மற்றும் நாகங்களை சுற்றி ஒரு குடை, ராட்டினம் போல மிகவும் வேகமாகவும், பயங்கரமாகவும் சுற்றிக் கொண்டே இருந்தது. அந்த ராட்டினம் முழுவதுமே நன்கு கூர்மையாக்கப்பட்ட கத்திகள் அதனுடன் இணைந்து ராட்டின வேகத்துடன் சுழன்று கொண்டு இருந்தன. எவரேனும் அறியாமல் அதன் அருகில் சென்றால் அவர்களை துண்டு துண்டாக வெட்டிவிடும் அளவிற்கு கூர்மையானதாக இருந்தது.

அமிர்தம் நிறைந்திருக்கும் குடம் வைத்திருக்கும் கூண்டின் மத்திய பகுதியில் நாகங்கள் மேலே பார்த்த வண்ணமாகவும், குடத்தை பாதுகாத்த வண்ணமாகவும் இருந்தன. அந்த நாகங்களை கொன்றால் மட்டுமே அந்த துவாரத்தின் வழியே உள்ள செல்ல முடியும். அவற்றைத் தாண்டி சுற்றிலும் லட்ச கணக்கான இந்திர கணங்கள் கருடன் வருகிறாரா? என ஆகாயத்தை பார்த்த வண்ணமாக இரவும், பகலும் காவலில் இருந்து வந்தன.

கருடனும் பாலகியா முனிவர்களின் தவ வலிமையினால் பெற்ற சக்தியாலும், பெற்றோர்களின் ஆசீர்வாதத்தாலும் தமது இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள துவங்கினார். இறுதியாக தேவலோகத்தையும் வந்தடைந்து, அமிர்தம் இருக்கும் இடத்தையும் கண்டறிந்தார். அமிர்தம் இருக்கும் இடத்தை வந்து பார்த்ததும் கருடனுக்கு ஒரே வியப்பாக இருந்தது.

அதாவது, அமிர்த குடத்தை எடுத்து செல்ல முடியாத வண்ணம் பலவிதமான ஏற்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் இந்திரன் செய்திருக்கின்றார் என்பதை அறிந்து கொண்டார். இவ்வகை பாதுகாப்பு அம்சங்களை நாம் உடைத்தெறிந்தால் மட்டுமே நம்மால் உள்ளே செல்ல முடியும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். பின்பு அதற்கு தகுந்த மாதிரி சில செயல்களையும் சிந்தித்து செயல்படுத்த துவங்கினார் கருடன்.

முதலில் வேகமாக சுற்றிக் கொண்டு இருக்கும் இந்த ராட்டினத்தை ஏதாவது ஒரு வகையில் நிறுத்த வேண்டும். இல்லையெனில் நமது இறக்கையானது இந்த ராட்டினத்தில் சிக்கி துண்டு துண்டாக சீவப்பட்டு விடும் என்பதை உணர்ந்து கொண்டார். ஆகாயத்திலிருந்த வண்ணமாக ராட்டினத்தை சுற்றி இருக்கக்கூடிய பல விஷயங்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தார் கருடன். அப்பொழுது ராட்டினத்தின் அடியில் ராட்டினத்தின் வேகத்திற்கு தகுந்த மாதிரி வரிசைப்படுத்துவதற்கு என்று பல்சக்கரம் பல இருப்பதையும் அறிந்து கொண்டார்.

முதலில் பல் சக்கரத்தை ஏதாவது ஒரு வகையில் நிறுத்தினால் ராட்டினம் சுழல்வது குறையும் அல்லது ராட்டினம் நின்றுவிடும் என்பதை அறிந்து கொண்டார் கருடன். ஆகாயத்தில் பறந்து கொண்டே கீழே நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்த பொழுது ராட்டினத்தின் உள்ளே இருந்த நாகங்கள் இரண்டும் நடு துவாரத்தின் வழியாக தலையை வெளியே நீட்டிய வண்ணமாக விஷத்தையும், தீ ஜூவாலைகளையும் வெளியிட்டுக் கொண்டே இருந்தன.

அதன் தாக்குதலில் இருந்து கருடன் தப்பித்து கொண்டே இருந்தார். இந்நிலையில் கருடனுக்கு, நாகங்களுக்கு சமமான பலம் இருந்தமையால் நாகங்களின் ஒவ்வொரு தாக்குதலையும் கருடன் முறியடித்து கொண்டே இருந்தார். ஆயினும் நாகத்தை கொல்லக்கூடிய சக்தி என்பது கருடனிடம் இல்லாமல் இருந்தது. பின்பு நாகங்களின் தாக்குதலில் இருந்து விடுபட அடுத்து என்ன செய்வது? என்று யோசித்த வண்ணமாக அவ்விடத்தை விட்டு தேவலோகத்தின் மற்ற பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது தேவலோகத்தின் ஒருபுறத்தில் மணல்கள் நிறைந்து இருப்பதை கண்டார். அதைக் கண்டதும் அவரது மனதில் ஒரு யோசனை எழும்ப துவங்கியது. அந்த மணல் நிறைந்த பகுதியில் கருடன் புரண்டு எழுந்தார். அதாவது, அவரது உடல் முழுவதும் தூசியையும், மணலையும் எடுத்துக் கொண்ட கருடன் யாவரும் அறியாத வண்ணமாக ராட்டினம் சுழன்று கொண்டிருக்கும் இடத்தை அடைந்தார்.

பின்னர், தன் இறக்கையினால் எவ்வளவு வேகமாக அடிக்க முடியுமோ, அவ்வளவு வேகத்தில் அடிக்க... அவர் கொண்டு வந்திருந்த மணலும், தூசியும் சேர்ந்து அந்த பகுதியானது கண்களுக்கு தெரியாத அளவிற்கு புழுதி மேகத்தினால் நிரம்பியது. யார் அருகில் உள்ளார்கள்? என்பதைக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அவ்விடமே புழுதி மண்டலமாக காணப்பட்டது. திடீரென்று எதனால் இந்த சூழ்நிலை ஏற்பட்டது? என்று அங்கிருந்த அனைவரும் அறியாத வண்ணமாக புலம்பி கொண்டு இருந்தனர்.

தேவலோகத்தில் இருந்தவர்கள் அனைவரும் குழம்பி நின்ற தருணமே நமக்கு அமிர்தத்தை எடுக்கக்கூடிய நல்ல நேரம் என்பதை உணர்ந்த கருடன் விரைந்து செயல்பட தொடங்கினார். 

அவ்விடம் முழுவதும் புழுதி மண்டலமாக இருப்பதை உணர்ந்த நாகங்கள் கண்களில் தூசி அண்டாமல் இருக்க தன் இமைகளை மூடிய தருணத்தில்...

நாகங்கள் இமைகளை மூட வேண்டும் என்று காத்திருந்த கருடன் அந்த பொழுதினை பயன்படுத்தி... 

விரைந்து வேகமாக சென்று கூண்டினுள் இருந்த இரண்டு நாகங்களையும்... தன்னுடைய அலகினாலும்... 

கால் நகங்களினாலும் எடுத்து வெளியே விட்டு... 

அவைகளை கடித்து அவ்விடத்திலேயே கருடன் கொன்றார்.

நாகங்கள் இரண்டும் கருடனின் எதிர்பாராத இந்த தாக்குதலால் மடிந்து போயின. நாகங்களை கொன்றதும் அதன் உடல்களை கொண்டு ராட்டினத்தின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார் கருடன். பின்னர், நாகங்களின் உடலை எடுத்து சென்றார்.

பின்னர் பாலகியா முனிவர்கள் கொடுத்த சக்தியின் வலிமையினால் தன்னுடைய உருவத்தையும், தான் எடுத்து வந்த நாகங்களின் உடலையும் சிறிதாக்கி கொண்டார். பின்னர் புழுதி மண்டலம் நிறைந்த இடத்தின் உள்ளே சென்று ராட்டினத்தின் அடிப்பகுதியில் பல் சக்கரங்கள் இருக்கும் இடத்தை அடைந்தார். பின்னர் இறந்த நாகங்களின் உடலை வைத்து பல் சக்கரம் சுழன்று கொண்டிருப்பதை நிறுத்தினார்.

ஒரு விநாடியும் தாமதிக்காமல் ராட்டினத்தின் மையப்பகுதிக்கு சென்று அமிர்த கலசத்தை வெளியில் எடுத்து அவ்விடத்தைவிட்டு பறந்து சென்று கொண்டிருந்தார். புழுதி நிறைந்த இடம் அமைதியானதும் அங்கிருந்த வீரர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏனெனில் கருடன் அமிர்தத்தை எடுத்து சென்றுவிட்டார் என்பதை வீரர்கள் உணர்ந்தனர்.

கருடன் அமிர்தத்தை எடுத்த சென்றுவிட்டார் என்பதை உணர்ந்த வீரர்கள் அனைவரும் கருடனை எதிர்க்க தங்களது ஆயுதத்துடன் கருடனை பின்தொடர்ந்து சென்றனர். ஆயினும் கருடனின் வேகத்தினாலும், அவரின் இறகுகளில் இருந்துவந்த பலமான காற்றினாலும் இந்திரன் அனுப்பிய வீரர்கள் அனைவரும் மடிந்தனர். மேலும் அவர் தனது அலகினாலும், கூரிய நகங்களாலும் பல வீரர்களை அவ்விடத்திலேயே கொன்று குவித்தார். இவரின் வேகத்தையும், விவேகத்தையும் அறிந்த வீரர்கள் இவரை வெல்வது என்பது இயலாது என உணர்ந்து கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றனர். பின்பு இந்திரன் இருக்கும் இடத்திற்கு ஓடிச்சென்று நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும் கூறினார்கள்.

வீரர்கள் கூறியதை கேட்டதும் சற்றும் தாமதிக்காமல் இந்திரனும் அவ்விடத்திற்கு வர கருடன் அமிர்தம் நிறைந்த குடத்தை எடுத்துக்கொண்டு வானில் பறந்து கொண்டிருந்தார். கருடன் பறந்து கொண்டு இருக்கும் திசையை நோக்கி... கருடனின் இறகுகளை வெட்ட நினைத்து தன்னுடைய வஜ்ராயுதத்தை வீசினார். ஆனால், அங்கு நிகழ்ந்தது அவருடைய எண்ணத்திற்கு மாறுபட்டதாக அமைந்தது. ஏனெனில் கருடனை சுற்றி பாலகியா முனிவர்களின் சக்தியானது அரண் போல் பாதுகாத்து இருந்தது. முனிவர்களின் தவ வலிமையினால் வஜ்ராயுதம் அங்கு செயலிழந்தது. அவ்விடத்தில் இந்திரனும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அனைவரின் முன்னிலையிலும் அவமானம் அடைவதற்கான சூழ்நிலையும் ஏற்பட்டது.

நாம் மேற்கொள்ளும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும்போது நாம் எதிர்பார்த்த முடிவுகளை காட்டிலும், நல்லதொரு முடிவும், ஆதரவும், மகிழ்ச்சியும் ஏற்படும். இங்கு நிகழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் ஆகாயத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, கருடன் தாயின் மீது கொண்ட பாசம், சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாக செயல்படும் தன்மை, சாமர்த்தியம், வீரம், கடமை உணர்ச்சி மற்றும் இந்திரனையே எதிர்த்து நின்று வெற்றி கொண்ட தன்மை போன்றவற்றை பார்த்து கொண்டிருந்த ஒரு பேரொளியான ஜோதியாகவும், அன்புள்ளம் கொண்ட அன்னையாகவும் அவ்விடத்தில் தோன்றினார்.

திருமாலின் தோன்றுதலை எதிர்பாராத கருடன் அவரைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவ்விடத்திலேயே கருடன் திருமாலை வணங்கினார். திருமால் கருடனை நோக்கி கருடனே...!! நீ... சிரமேற்ற காரியத்தை பல இடர்பாடுகளுக்கும் இடையில் நன்முறையில் செய்து முடித்தாய். ஏற்ற செயலில் முழுமையான ஈடுபாட்டுடனும், கடமை உணர்வோடும் உன் தாயின் மீது கொண்ட அன்பும், அவர்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் என்னை மகிழ்வித்தது என்று உரைத்தார்.
திருமால், அழுகின்ற குழந்தையை தேடி தாயானவர் தேடி வருவது போல உம்மை தேடி யான் இங்கு எழுதருளியிருக்கின்றேன் என்றும், என்னை மகிழ்ச்சிப்படுத்திய உமக்கு என்ன வரம் வேண்டுமானலும் கேட்பாயாக... என்றும் உரைத்தார்.

கருடனும் பெருமாளை வணங்கிய வண்ணமாக தேவர்களை காக்கக்கூடிய மற்றும் உலக உயிர்களையும் காத்து ரட்சிக்கக்கூடிய திருமாலே...

எனக்கு என் தாயின் விடுதலை என்பது மிகவும் அவசியமாகும்... அதைத்தவிர, வேறு எந்த ஆசையும் என்னிடம் இல்லை. 

ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டும் இருக்கின்றது என்று கூறினார். அதாவது, என்னை வாகனமாக ஏற்றுக்கொண்டு என் மீது அமர்ந்து பயணிக்க வேண்டுகின்றேன் என்ற தன்னுடைய விண்ணப்பத்தையும் கூறினார் கருடன்.

கருடனின் ஆசையை அறிந்து கொண்ட மகாவிஷ்ணு அந்த ஆசையை அவருக்கு வரமாக கொடுத்தார். அதாவது கருடனை தன்னுடைய கொடியில் வாகனமாக ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், அவருடைய இருக்குமாறும் அருள்புரிந்தார். திருமால் அருள் செய்ததை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியடைந்தார் கருடன். அப்பொழுது இந்திரன் அவ்விடத்தில் தோன்றினார். அவ்விடத்தில் திருமால் இருப்பதை அறிந்ததும் அவரை வணங்கிய பின்பு கருடனையும் வணங்கி, தான் செய்த தவறுக்கு தம்மை மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் எடுத்துச்சென்ற அமிர்த குடத்தினை தந்து விடுமாறு வேண்டினார். ஆனால் கருடன் அதை திருப்பி கொடுக்காமல் இருந்தார். ஏனெனில் இந்த அமிர்த குடத்தை எடுத்துச்சென்று சித்தியிடம் கொடுத்தால் மட்டுமே எனது தாயானவர் விடுதலை அடைவார் என்றும், அதுவரை இதை யாரிடமும் நான் கொடுக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் இந்திரனும் கருடனிடம் அமிர்தத்தின் தன்மையை எடுத்துரைத்து இது அசுப எண்ணங்கள் கொண்டவர்களிடம் சென்றால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் எடுத்துரைத்தார். இந்திரன் எடுத்துரைத்ததை கேட்டதும் கருடன் நாம் மட்டும் சுயநலமாக இருப்பது என்பது நன்மை அன்று என்று கருதி இதற்கு ஒரு மார்க்கத்தையும் கூறினார்.

அதாவது, அசுப எண்ணங்கள் கொண்ட எவரும் அந்த அமிர்தத்தை உண்ணாமல் இருப்பதற்கான உபாயத்தையும் இந்திரனிடம் கூறினார். இந்திரனும் கருடன் கூறிய மாத்திரத்திலேயே உருமாற்றம் அடைந்து திருமாலிடம் ஆசிபெற்று இருவரும் பூவுலகத்திற்கு வருகை தந்தனர். கருடன், அந்தணர் வேடத்தில் இருந்த இந்திரனுடன் தனது சித்தி இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு அந்தணர் வடிவத்தில் இருந்தவரிடம் அமிர்தம் நிறைந்த கலசம் இருப்பதை சித்தியிடம் உரைத்து நீங்கள் உரைத்ததின் படி நான் அமிர்த கலசத்தை கொண்டு வந்துவிட்டேன். இனி என் தாயார் உங்களுக்கு அடிமையாக இருக்கக்கூடாது என்று கூறி அந்தணரிடம் இருந்து அமிர்த கலசத்தை வாங்கி தனது சித்தியிடம் கொடுத்தார்.

அமிர்தம் நிறைந்த கலசம் தன்னுடைய கரங்களில் இருப்பதைக் கண்டதும் கருடனின் சித்தி... இனி உன் தாயார் எனக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை... எனக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியில் இருந்து நான் அவர்களை விடுவிக்கின்றேன் என்று மகிழ்ச்சியுடன் கூறினார். அமிர்தம் நிறைந்த கலசத்தை நினைத்து பார்த்து அமிர்தம் நிறைந்த கலசத்தை நினைத்து பார்த்து இந்த அமிர்தத்தை நானும், என்னுடைய புத்திரர்களும் உண்பதன் மூலம் என்றும் இறவா வாழ்க்கையை வாழ முடியும் என்று எண்ணினாள். தன்னுடைய தாயாரை சித்தியின் அடிமைத்தனம் மற்றும் கொடுமைகளிலிருந்து விடுவித்ததை எண்ணி கருடனும், அவருடைய தாயாரும் மகிழ்ச்சி அடைந்து ஒருவருக்கொருவர் அரவணைத்து அன்பை பரிமாறிக் கொண்டிருந்தனர்.

பல காலங்களாக அடிமைப்பட்டு இருந்து விடுதலை அடைவது என்றால் எவ்வளவு மகிழ்வான செய்தியாகும். தனது மகன் தன்னுடைய இருக்கின்றான் என்று விடுதலைக்கு காரணமாக இருந்த எண்ணிய விதத்திலேயே அந்த தாயும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். பின்பு அந்த அமிர்த கலசத்தில் இருந்த அமிர்த்தத்தை உண்பதற்காக ஆனந்தத்துடன் கருடனின் சித்தி அருகில் சென்றபோது அந்தணர் உருவத்தில் இந்திரன் இந்த அமிர்தத்தை உண்ண வேண்டும் என்றால் நதி நீரில் குளித்துவிட்டு வந்தால் மட்டுமே அமிர்தத்தின் முழு பலனும் கிடைக்க பெறுவீர்கள் என்று கூறினார். இறவா வாழ்க்கை நமக்கு கிடைப்பதற்கு மிக அருகாமையில் இருக்கின்றது என்று எண்ணி கருடனின் சித்தியும், அவருடைய புதல்வர்களும் எண்ணினர்.

பின்னர் தாங்கள் அனைவரும் நதிக்கரைக்கு சென்று குளித்துக்கொண்டு வருவதற்குள் நான் இந்த இடத்தினை தூய்மைப்படுத்தி... அமிர்த கலசத்தை பூஜை செய்து தயார் நிலையில் வைத்திருப்பதாகவும்... அதன் பின்பு நீங்கள் அனைவரும் உண்ணலாம் என்றும் கூறினார் அந்தணர் வடிவத்தில் இருந்த இந்திரன். அவர்கள் அனைவரும் நதிக்கரையை நோக்கி குளிக்க சென்று கொண்டிருக்கும் தருவாயில் அவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்றுக் கொண்ட அந்தணர் வடிவத்திலிருந்த தேவலோகத்திற்கு செல்ல இந்திரன் தயாரானார். 

இதையறிந்த கருடனின் சித்தியும், அவர்களின் புதல்வர்களும் இந்திரன் தேவலோகத்திற்கு செல்வதற்கு பல தடைகளை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஏற்படுத்திய அத்தனை தடைகளையும் தகர்த்து எப்பொழுதும் போலவே இந்திரன் தனது தேவலோகத்திற்கு அமிர்த கலசத்துடன் சென்றுவிட்டார். கருடனே... நீ என்னை ஏமாற்றி விட்டாய் என்று மிகுந்த கோபத்துடன் கருடன் மற்றும் அவரது தாயாரிடம் உரைத்துக் கொண்டிருந்தார் கருடனின் சித்தி. அதற்கு கருடனும், உம்முடைய வஞ்சகமான எண்ணத்தினாலேயே உங்களை யான் வென்றேன் என்று கூறினார் கருடன்.

கருடன் தன் சித்தியிடம், தாங்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அமிர்தத்தை உண்பதற்கு எந்த விதத்திலும் தகுதி உடையவர்கள் அல்ல, நீங்கள் என்னிடம் உரைத்தது என்னவென்றால் அமிர்த கலசத்தை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தால் எம்முடைய தாயை விடுவிப்பதாக கூறினீர்கள். நானும் நீங்கள் உரைத்த விதிப்படியே அமிர்த கலசத்தை எடுத்து வந்து உங்கள் கரங்களிலேயே கொடுத்துவிட்டேன். எனது தாயையும் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு எடுத்தேன். நீங்கள் கூறும் பொழுது அமிர்த கலசத்தை நீ மீண்டும் எடுத்து செல்லக்கூடாது என்று கூறவே இல்லையே. அமிர்தம் என்பது தேவர்களுக்கு உரியதாகும். 

ஆகவேதான் அது அவர்களிடமே மீண்டும் சென்றது என்று கூறினார். இந்திரன் கருடன் செய்த உதவியை எண்ணி நீயும் அமிர்தம் உண்டு எங்களுடன் சாகா நிலையுடன் இருப்பாயாக...!! என்று கூறினார். அதற்கு கருடன் எனக்கு அமிர்தம் வேண்டாம். என்னிடம் இருக்கக்கூடிய வீரம் எந்தவொரு பொருளை பருகியதாலும் எனக்கு கிடைத்துவிட்டது என்று உலகத்தில் உள்ளோர் அனைவரும் எந்த நிலையிலும் சொல்லிவிடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கின்றேன். ஆகவே எனக்கு அமிர்தம் வேண்டாம் என்று கூறினார். கருடன் அவ்விதம் உரைத்ததும் ஸ்ரீமந்நாராயணன் அவ்விடத்தில் தோன்றி,

கருடனே...

நீ முதுமையும், மரணமும் இன்றி எப்பொழுதும் என்னுடைய வரமளித்தார். வாகனமாய் வாழ்வாய் என்று திருமால் வரம் அளித்ததும் அவரை வணங்கி அன்று முதல் கருடன் பெருமாளின் பணிந்து அவருடைய சபையிலேயே திருவடி இருந்து வருகின்றார்.

ஒரு பக்தர் உண்மையுடன் கடவுளை வணங்கும் பொழுது அவர்களுக்கு எந்தளவு உயர்வும், முன்னேற்றமும் கிடைக்கும் என்பதை நாம் கருடனின் மூலமாக அறிந்துகொள்ள இயலுகின்றது. நாம் செய்யும் கர்மாவே நமது வாழ்வையும், நம்முடன் இருக்கக்கூடியவர்களையும் உருவாக்குகின்றது. இதுவே கருடனின் தோற்றம் ஆகுமென்று சூதமாமுனிவர் கூறினார். சூதமாமுனிவர் அங்கிருந்த அனைவரையும் நோக்கி இதுவரை நாம் கருடனின் தோற்றத்தை பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம்.

இனி பகவான் ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு எடுத்துரைத்த விளக்கத்தை பற்றி உங்களுக்கு உரைக்க இருக்கின்றேன். இதை அனைவரும் கவனத்துடனும், தெளிவாகவும் கேட்டுக் கொள்ளுங்கள். பூவுலகில் வாழ்வதற்கு பொருள் மட்டுமே அவசியமாகும். ஆனால் நாம் இறந்த பின்பு நமது ஆன்மா வாழக்கூடிய உலகத்தில் பொருளை காட்டிலும், அந்த ஆன்மாவினால் செய்யப்பட்ட நற்செயல்களின் வலிமையினால் மட்டுமே அந்த ஆன்மா மகிழ்ச்சியுடன் வாழ இருக்கின்றது. அதை பற்றி இனி நாம் விரிவாக காண்போம் என்று கூறினார்.


கருடன் திருமாலிடன் உரைத்த கேள்விகள்

நாராயணனின் அருளால் கருடன் நாராயணனுக்கு வாகனமாக இருந்து வந்தார். ஒரு நாள் கருடனின் மனதில் பிறப்புகள் பற்றிய எண்ணம் உருவாகத் துவங்கியது. தமது மனதில் தோன்றிய எண்ணத்தை மூன்று லோகங்களையும் காத்துக்கொண்டு இருக்கக்கூடிய நாராயணனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணினார்.

அனைவருடைய எண்ண ஓட்டத்தையும், மனதையும் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட நாராயணன் கருடனை நோக்கி...

என்ன கருடா? உன் மனதில் ஏதோ ஐயம் கொண்டுள்ளதே?

உன் ஐயத்தை என்னிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றாயா? என்று வினவினார்.

நாராயணன் கருடனிடம் கேட்டதும் கருடனுக்கு என்ன கேட்பது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார். இருப்பினும் தனது மனதில் ஓடிய எண்ணத்தை எவ்விதத்திலாவது நாராயணனிடம் கேட்க வேண்டுமே என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்தது. அந்த ஆவலே அவருக்கு நாராயணனிடம் தனது ஐயத்தை கேட்கும் பொருட்டு தனது கேள்விகளையும் கேட்க வைத்தது.

மூன்று உலகங்களையும் காத்து ரட்சித்து கொண்டிருக்கக்கூடிய பரம்பொருளான நாராயணனே... என் மனதில் சில ஐயங்கள் நீண்ட நாட்களாகவே இருந்து கொண்டு இருக்கின்றன. தாங்கள்தான் பதிலளித்து அந்த ஐயத்தை நீக்கி அருள வேண்டும் என்று வேண்டினார். அதற்கு நாராயணனும் கேள்விகளை கேட்காமல் பதில் மட்டும் வேண்டுமென்றால் எவ்விதம் என்னால் கூற இயலும் கருடா?... கேள்வியை கேட்பாயாக... என்று கூறினார்.

நாராயணன் கூறியதும் கருடன் தன் மனதிலிருந்த கேள்விகளை கேட்க தொடங்கினார். அதாவது,

இந்த உலகத்தில் உயிரினங்கள் பிறப்பதன் நோக்கம் என்ன?

ஏன் உயிரினங்கள் தோன்றுகின்றன?

அவ்விதம் தோன்றிய உயிரினங்களில் மரணம் ஏற்பட்ட பின்பு சில உயிரினங்கள் நரகத்திற்கு செல்கின்றன.

சில உயிரினங்கள் சொர்க்கத்திற்கு செல்கின்றன.

நரகத்திற்கும், சொர்க்கத்திற்கும் செல்வதற்கான காரணம் என்ன?

சில உயிரினங்கள் மோட்சம் என்னும் பிறவா நிலையை அடைவதற்காக தாங்கள் உரைக்கும் பதில்கள் என்ன?

ஒரு உயிரினம் இந்த உலகில் தோன்றியதும், அந்த உயிரினத்தால் செய்ய இருக்கக்கூடிய பாவங்கள் யாவும் நீக்கி கொள்ள எத்தகைய செயல்களை செய்ய வேண்டும்?

மனிதர்கள் நற்கதி அடைவதற்கான சூழ்நிலைகள் யாது? 

என்றும் தெளிவாக அடியேன் புரிந்து கொள்ளும் விதத்தில் உரைக்க வேண்டும் என்று வேண்டினார் கருடன்.


கருடனுக்கு திருமால் தரும் பதில்

திருமால், பறவைகளின் அரசனே...!! நல்லதொரு கேள்வியை இங்கனம் எழுப்பி இருக்கின்றாய். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் புரியாத ரகசியத்தை நான் உனக்கு இங்கு உரைக்கின்றேன்... அதை தெளிவாக கேட்டு அறிந்து கொள் என்றார். இந்த பூமியில் பிறந்த உயிரினங்கள் அனைத்தும் என்றாவது ஒருநாள் மரணம் அடைந்தே தீர வேண்டும் என்பது நிச்சயமான ஒன்றாகும். எவ்விதம் உலகில் பிறப்பது உண்மையானதோ... அதை போன்றே இறப்பது என்பதும் உண்மையானதாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு உயிரினம் இந்த உலகில் எப்பொழுது பிறக்கின்றதோ அப்பொழுதே அந்த உயிரினத்தின் இறப்பும் முடிவு செய்யப்படுகின்றது.

இந்த உலகில் எதுவும் நிலையாக இருப்பதும் இல்லை, இருக்கப் போவதுமில்லை. நிலையாமையை மட்டுமே பெருமையாக கொண்டு இருக்கக்கூடியது இந்த உலகம். உயிரினங்களில் அதிக மேம்பாடு கொண்ட உயிரினமாக இருப்பது மனித உயிரினம் ஆகும். இந்த மனித உயிரினம் நிலையாமையாக உள்ள இந்த உலகில் நிலையாக இருக்க போகின்றோம் என்ற இறுமாப்புடன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். படைப்பின் ரகசியம் என்னவென்றால் ஒரு உயிரினம் தோன்றினால் அந்த உயிரினம் இறந்தாக வேண்டும் என்பது நிதர்சனமான உண்மையாகும். 

ஆனால், 

இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரின கூட்டங்களில் எத்தனை உயிரினங்களுக்கு இந்த உண்மை புரிகிறது?

அது எத்தனை பேர் அறிந்து அதற்கு ஏற்றார்போல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்?

எந்த உயிரினம் தங்களது வாழ்க்கையில் நல்லதொரு முறையில் அமைத்துக் கொள்ள முயல்கின்றனர்?.

ஆனால் அதன் வாழ்க்கையை அமைத்து கொள்வதற்கு முன்பே அதன் வாழ்க்கையை முடிவு செய்ய காலன் வந்து விடுகின்றான். கூற்றுவனின் கைகளில் அகப்படாமல் எந்தவொரு உயிரினமும் தப்பித்து செல்வதற்கு வாய்ப்புகள் என்பதே கிடையாது. மாற்றங்களை கொண்டிருக்கக்கூடிய இந்த உலகில் நமது வாழ்க்கை என்பது நிலையாக இருப்பதில்லை.

என்றாவது ஒருநாள் நமது உயிரானது கூற்றுவனின் கரங்களில் அகப்படும் என்பதை யார் புரிந்து கொண்டு, அதற்கு தகுந்தாற்போல 

அறநெறி தவறாது வாழ்ந்து தான தர்மங்கள் செய்து எவனொருவன் வாழ்கிறானோ... அவனே தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக் கொள்கிறான்.

எவனொருவன் தனக்கென்று இருக்கக்கூடிய கருமங்களை சரியாக செய்கின்றனோ... அந்த கருமங்களே அவனுக்கு வேலியாக இருந்து காப்பாற்றுகின்றது.

ஒவ்வொரு குலத்திற்கும் ஒவ்வொரு மாதிரியான கருமங்கள் உள்ளன. அந்த கருமங்களை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதை வேத நூல்களும், அறநூல்களும் தெளிவாக நமக்கு கூறி இருக்கின்றன என்று கூறினார் திருமால்.

நாம் செய்து கொண்டிருக்கும் கருமங்களே நம்மை காப்பாற்றும் வல்லமை கொண்டதாகும். ஆகவே நாம் செய்யும் கருமங்கள் எந்த தன்மையில் இருக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யும் உரிமையும் நம்மிடமே இருக்கின்றது என்றார் திருமால். எவன் ஒருவன் குல ஒழுக்கங்களை கடைபிடித்து, அவனுக்கென்று இருக்கக்கூடிய கருமங்களை சரிவர செய்து வருகின்றானோ... அவனே மனிதர்களில் மேம்பட்டவனாகவும், எல்லா இடங்களிலும் போற்றப்படக்கூடியவனாகவும் இருக்கின்றான். பிரம்மன் படைத்த இந்த உலகத்தில் மனிதர்கள் வௌ;வேறு குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அதாவது, உயிரினங்களில் சாந்த குணம் உடையவர்களாகவும், ராட்சச (கோபம்) குணம் உடையவர்களாகவும், தாமச (மந்தம்) குணம் உடையவர்களாகவும், சிலரோ ராட்சச மற்றும் தாமச குணம் ஒரு சேர பெற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். ஒவ்வொரு குணம் கொண்டவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற கடமைகள் பிரிக்கப்பட்டுள்ளன. சாந்த குணம் உடையவர்கள் கற்றல், கற்பித்தல், வேள்விகள் செய்தல் மற்றும் செய்வித்தல் போன்ற தொழில்களை செய்கின்றனர். ராட்சச குணம் கொண்டவர்கள் கற்றல், விரும்புதல், விரும்பியவற்றை கொடுத்தல், இன்னல்களிலிருந்து உலக உயிர்களை காத்தல், மற்ற நாடுகளுடன் போர் புரிதல் மற்றும் போர் பயிற்சி செய்தல் போன்ற கடமைகளை செய்கின்றனர்.

தாமச குணம் கொண்டவர்கள் மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தல், பொருள் தேடுதல், உழவு பணிகளை மேற்கொள்ளுதல், கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் வேட்டையாடுதல் போன்ற கடமைகளையும், தாமச குணமும், ராட்சச குணமும் இணைந்து இருக்கக்கூடியவர்கள் கற்றல், பொருளீட்டுதல், ஏர் உழுதல், வணிகம் மேற்கொள்ளுதல் போன்ற கடமைகளையும் செய்தல் வேண்டும். அவரவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய கடமைகளை தவறாமல் செய்து வாழ்ந்து கொண்டு எவர் இருக்கின்றாரோ அவர்களே போகமும், உயர்வும் அடைவார்கள்.

இறைவன் படைத்த இந்த உலகத்தில் குணங்களின் அடிப்படையிலேயே ஒவ்வொருவரும் அடையாளம் காணப்பட்டனர். நாளடைவில் இந்த குணங்களின் அடிப்படையிலேயே மனித உயிரினங்களால் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

நாட்கள் செல்ல செல்ல அந்த பிரிவுகளுக்கு மனிதனால் பெயர்களும் வைக்கப்பட்டன. அந்த பெயர்களே நாளடைவில் சாதிகளாக வகுக்கப்பட்டுள்ளன. சாதிகள் என்பது இறைவன் படைத்த இந்த உலகத்தில் இல்லை. இறைவன் படைத்த உலகில் குணங்கள் மட்டுமே இருக்கின்றன.
அவ்விதம் உருவாக்கப்பட்ட நான்கு பெரும் குணங்கள் பின்வருமாறு...

அந்தணர்கள் - சத்துவ (சாந்த) குணம்
சத்திரியர்கள் - ராட்சச (கோபம்) குணம்
சூத்திரர்கள் - தாமச (மந்த) குணம்
வைசியர்கள் - ராட்சச (கோபம்) , தாமச (மந்த) குணம்

மனிதன் ஆசை, பேராசை இரண்டிலும் உண்மை எதுவென்று புரியாமலும், மாயை கண்டு மகிழ்வது போல எதற்காக குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டோம் என்பதை உணராமலும், அதை வைத்து மனித உயிர்களிடையே பிரிவினையையும், அதனால் ஒரு லாபமும் அடைந்து கொண்டே இருக்கின்றார்கள்.

திருமால் கருடனிடம் அவரவர்களின் குணங்களுக்கு ஏற்ற பணிகள் சிறந்த முறையிலும், விலக்கப்பட்டவைகளில் இருந்து விலகி வாழ்வதிலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சிறப்படைகிறது. பொருட்களின் மீது நாம் வைக்கும் பற்றினால் நம்முடைய புண்ணிய தோற்றமும், ஆன்மாவின் தன்மையும், அழியத் துவங்குகின்றது. பற்றற்று வாழ்வதே வாழ்க்கையின் மேன்மையாகும். ஆசையை துறந்து எவன் ஒருவன் வாழத் துவங்குகின்றனோ... அவனுக்கு இச்சைகளின் விளைவுகளால் உருவாக இருக்கக்கூடிய அஞ்ஞான எண்ணங்கள் யாவும் நீங்கி... ஞானம் பெற்றவனாக, மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ துவங்குவான்.

இவ்விதமாக இறைவன் படைத்த உலகில் மனிதன் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளான்? என்பதையும் எடுத்துரைத்தார் நாராயணன். பின்பு கருடன் நாராயணனிடம் மனித வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலைப்பெற்று வாழ்வதற்கான உபாயங்களை எடுத்துரைக்குமாறு வேண்டினார். நாராயணன் கருடனின் வேண்டுதலை ஏற்று மனிதனின் வாழ்க்கையில் இன்பமும், மகிழ்ச்சியும் நிலைப்பெற்று இருக்க என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்? என்பதனை எடுத்துரைக்க துவங்கினார்.


மேன்மை பொருந்திய பிறவி எது?

கருடா... இந்த உலகத்தில் 84 லட்சம் வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன. அந்த உயிரினங்கள் யாவும் பிறப்பெடுக்கும் வழிமுறை என்பது 4 வகைகளாகும். அவைகள்...

1. அண்டஜம் (முட்டையில் இருந்து பிறப்பவை)
பறவைகள், பாம்புகள், உடும்பு, ஆமை முதலியன முட்டையில் இருந்து பிறப்பெடுப்பவைகள் என மொத்தம் 21 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன.

2. உத்பிஜ்ஜம் (விதையில் இருந்து தோன்றுபவை)
மரம், செடி, கொடி வகைகள் முதலியன விதையிலிருந்து பிறப்பெடுப்பவைகள் என மொத்தம் 21 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன.

3. சராயுசம் (கருப்பையில் இருந்து தோன்றுபவை)
மனிதர்கள், விலங்குகளின் கருப்பையிலிருந்து பிறப்பெடுப்பவைகள் என மொத்தம் 21 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன.

4. சுவேதஜம் (வியர்வையில் இருந்து பிறப்பவை)
வண்டு, கொசுக்கள் முதலியன வியர்வையில் இருந்து பிறப்பெடுப்பவைகள் என மொத்தம் 21 லட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன.

ஆக மொத்தம் இந்த உலகத்தில் மொத்தம் 84 லட்ச பிறவி பேதங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

கருடா... மேற்கூறிய உயிரின பிறப்புகளில் மிகவும் அரிதான மற்றும் உயர்ந்த பிறப்பு என்பது மனித பிறவி மட்டுமே ஆகும். மற்ற மூன்று பிறவிகளில் உள்ள உயிரினங்கள் மனித பிறவியாக பிறப்பு எடுப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

உயிர்கள் செய்யும் நல்ல வினைகளின் அடிப்படையில் மட்டுமே அந்த உயிரினம் மனித பிறவியாக பிறப்பெடுக்கின்றது. மற்ற உயிரினங்களை காட்டிலும் மனித உயிரினம் மேம்பட்டு இருப்பதற்கான காரணங்கள் யாது? என்று புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

ஏனெனில் மற்ற உயிரினங்களை விட மனித உயிரினம் என்பது நிகழ்ந்து கொண்டு இருக்கும் அனைத்து நிகழ்வுகளையும் கண்டு உணர்வதற்கு என்று கண்களும்...

மனதில் எழும் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு என்று வாயையும்...

கேட்டு உணர்வதற்கு செவிகளையும்...

உண்கின்ற உணவில் இருக்கக்கூடிய சுவைகளை அறிந்து கொள்வதற்காக நாவையும்...

எங்கோ இருக்கக்கூடிய வாசனையை முகர்ந்து கொள்வதற்கு என்று நாசியையும்...

தீண்டி மற்றும் தழுவி உணர்வதற்கான சரீரத்தையும்...

நன்மை, தீமை என வேறுபடுத்தி அறிந்து கொள்வதற்கு என்று பகுத்தறிவையும்...

மனிதன் பெற்று இருக்கின்றான். மனிதனிடம் இருக்கக்கூடிய இந்த பகுத்தறியும் தன்மையானது வேறு எந்த உயிரினத்திற்கும் வழங்கப்படவில்லை. இதனாலேயே மனிதப்பிறவி என்பது மிகவும் மேன்மையுடைய பிறவியாகும். கருடனே...!! மனித உயிரினங்களில் நான் முன்பே உரைத்திருந்த நான்கு குணங்களை தவிர்த்து இன்னும் பல குணங்களை கொண்ட மனித குலங்கள் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய குணத்திற்கு ஏற்ப அவர்களின் தொழில்களையும், கர்மாக்களையும் செய்து கொண்டே இருக்கின்றார்கள். மனித இனத்தில் மாறுபட்ட குணங்களும், குலங்களும் இருந்து கொண்டே இருக்கின்றன. உலகில் தோன்றிய அனைத்து உயிரினங்களில் சில பண்புகள் மட்டும் எவ்விடத்திலும் மாறாமல் அனைத்து உயிரினங்களிலும் பொருந்துபவையாக அமைந்துள்ளன. அவை என்னவென்றால் உண்ணுதல், உறங்குதல், அச்சம் கொள்ளுதல், புணர்ச்சி கொள்ளுதல் என்பனவாகும். இந்த நான்கு வகையான பண்புகள் என்பது அனைத்து உயிரினங்களிலும் பொதுவானவையாக இருக்கக்கூடியவை ஆகும். ஆனால் இதிலிருந்து மேம்பட்டு இருக்க பகுத்தறிந்து உணரும் தன்மையும், ஞானம் அடையும் தன்மையும் மனித குலத்திற்கு மட்டுமே உடையதாகும்.

இதுவே மனித குலத்தின் சிறப்பியல்புகளாகும். ஒரு மனிதன் ஞானம் பெறுவது என்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. அது குலத்திற்கும், குணத்திற்கும் அப்பாற்பட்டவை ஆகும். இந்த பூமியில் இருக்கக்கூடிய மண்ணின் தன்மைக்கு ஏற்ப மனிதனின் நிறமும் மாறுபடுகின்றது. கண்டங்களுக்கு ஏற்ப மனிதர்களும் மாறுபட்டு காணப்படுகின்றார்கள். உயிர்களின் உடல்களை பொறுத்தவரை ஒரு கால் உயிரினங்கள், இருக்கால் கொண்ட உயிரினங்கள் முதலிய பத்து வகையான உயிரினங்கள் காணப்படுகின்றன. இந்த மண்ணுலகில் ஒரு புண்ணிய தேசம் என்ற ஒன்று உள்ளது. எங்கே கிருஷ்ணசாரம் என்னும் புள்ளி மான்கள் வசிக்கின்றதோ அந்த நிலமே 'தர்ம தேசம்" என்னும் புண்ணிய பூமியாகும்.

'தர்ம தேசம்" என்னும் புண்ணிய பூமியில்தான் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், முன்னோர்களும், நல்ல குணம் கொண்டவர்களும் வாழ்கின்றார்கள். அந்த பூமியிலேயே உண்மையும், கல்வியும், அறமும் நிலைத்திருக்கின்றது. அந்த பூமியானது என்றும் நிலைப்பு தன்மை உடைய புண்ணிய பூமியாகும். இத்தனை உயிரினங்களோடு அடங்கி இருக்கக்கூடியது இந்த உலகமாகும். இதில் இந்த உயிரினங்கள் மட்டுமல்லாமல் பூத, பிரேத பைசாசங்களும் உள்ளன. அவைகள் பேய், பிசாசுகளாக உள்ளன. அவைகளுக்கு ஸ்தூல உடல் என்பது இல்லாமல் ஆவி உருவம் மட்டுமே உள்ளதாகும்.

ஸ்தூல உடல் இல்லாத ஆவிகளுடன் ஒப்பிடும்போது ஸ்தூல தேகம் பெற்ற உயிரினங்கள் சிறந்தவர்கள் ஆவார்கள். ஓரறிவு, ஈரறிவு உயிரினங்களைக் காட்டிலும் ஆறறிவு உயிரினமாக இருக்கக்கூடிய மனித பிறவி என்பது மற்ற பிறவிகளை விட சிறந்ததாகும். எவர் ஒருவர் லௌகீக வாழ்க்கையில் ஈடுபடாமல் வேத உபநிடதங்களை கற்றுணர்ந்து வேதங்கள் கூறும் வழியில் வாழ்கிறாரோ அவரே சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்களை விட சிறந்தவர்கள் என்று இருக்கக்கூடியவர்கள் யார்? என்று நாம் பார்த்தோமானால் பிரம்ம ஞானத்தை உணர்ந்து, அதை மற்றவர்களுக்கு அறிவுறுத்துவதாக இருக்கக்கூடிய 'பிரம்மாவாதிகள்" தான் இந்த உலகத்தில் மிக சிறந்தவர்கள் ஆவார்கள்.

கருடனே... ஒரு உயிரினம் பிறந்த பொழுது அது செய்த நல்வினையின் பயனே அது அடுத்த பிறவியில் மனித பிறவி எடுப்பதாகும். மனித பிறவி என்பது சொர்க்க, மோட்ச பதவிகளுக்காக தகுதி பெறக்கூடிய ஒரு கருவியாகும். உயிரினங்களில் பலவிதமான நற்செயல்களை புரிந்தமையால் நற்பிறப்பெடுத்த மானுட பிறவிகள் சொர்க்க லோகத்திற்கும், மோட்சத்திற்கும் தேவையான நற்செயல்களை செய்யாமல்... தீய செயல்களைப் புரிந்து, அடைவதற்கு அரிதான பிறவியாக இருக்கக்கூடிய மானிடப் பிறப்பையே வீணாக்கி கொண்டிருக்கின்றார்கள். பிறவி எடுத்த அனைத்து மனித உயிரினங்களும் சொர்க்க லோகத்தை அடைவது இல்லை.

அப்பிறவியில் செய்த தீய செயல்களின் காரணமாக கீழான உலகத்தை அடைந்து, தனக்குத்தானே வஞ்சகம் புரிந்துகொண்டு ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள் என்று சொல்வது அன்றி வேறு என்ன சொல்வது?. மனிதப் பிறவியில் அருமையும், பெருமையும் மற்ற பிறவிகளைக் காட்டிலும் மேம்பட்டு இருக்கின்றோம் என்பதை பற்றி சிறிதும் புரிந்து கொள்ளாமல், தாங்கள் எடுத்த இந்த அற்புதமான மனித பிறவியை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல் வீணடித்துக் கொண்டிருக்கின்றார்கள். வாழ்க்கையின் நோக்கங்களை புரிந்து கொள்ளாமல் செய்ய தகுதி இல்லாத பல தவறுகளையும், பாவங்களையும் செய்து கொண்டே இருக்கின்றார்கள்.

பல பிறவிகள் எடுத்திருந்தாலும் சொர்க்கத்திற்கு செல்வதற்கு உதவியாக இருக்கக்கூடியது மனித பிறவி மட்டுமே ஆகும். இந்த அற்புதமான மனித பிறவியை இழிவுபடுத்தும் நிலைக்கு அவர்களை கொண்டு செல்ல காரணம், அவர்கள் கொண்டுள்ள ஆசையே ஆகும். ஒவ்வொருவருக்கும் உருவாகும் ஆசையே அவர்கள் செய்யும் செயலிற்கும், துன்பத்திற்கும் முதல் காரணமாகும். மனிதன் கொண்டுள்ள ஆசைகள் மூன்று வகைகளாக உள்ளன.

1. மண்ணாசை
2. பெண்ணாசை
3. பொருளாசை

மேல் குறிப்பிட்ட இந்த மூன்று ஆசைகளில் எவன் ஒருவன் அதிகமாக ஆட்படுகின்றனோ அந்த ஆசையின் விளைவாகவே அவன் தன் தகுதியை இழக்க துவங்க போகிறான் என்பதை குறிப்பதாகும். ஏனெனில் ஆசை என்பது இச்சைக்காக எந்த செயலையும் செய்ய வைத்து அவர்களை குற்றம் செய்ய தூண்டக்கூடிய கருவியாகும். ஆசை என்பது மனிதனின் அழிவிற்கு வழி வகுக்கக்கூடியதாகும். அந்த ஆசையின் விளைவாகவே ஒருவன் தன் தகுதியில் இருந்து தாழ்த்தப்பட்ட அதாவது, மனசாட்சியின்றி செயல்படும் அளவிற்கான தீய செயல்களையும் செய்கின்றான்.

மனசாட்சியும், மனித நேயமும் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொருவரும் தீய செயல்களை செய்வதையோ அல்லது மற்றவர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய செயல்களை புறக்கணிப்பதையோ விரும்புவதில்லை. ஆனால், ஆசை என்ற மாயையில் வீழ்ந்தவர்கள் மதியிழந்து மிருகங்களை விட மிகவும் கொடுமையாக நடந்து கொள்கின்றார்கள். ஆசைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்ல அவன் பேராசைக்கு உரியவனாக மாறுகின்றான். எவன் ஒருவனிடத்தில்

ஆசையானது பேராசையாக மாற துவங்குகின்றதோ...

அவ்விடத்திலிருந்து அந்த மனிதன் தனது அறிவிலிருந்தும்...

அன்பிற்குரியவர்களிடமிருந்தும்...

அறநெறி தொடர்பான செயல்களிடமிருந்தும் மிகவும் அதிக தொலைவிற்கு தள்ளி கொண்டும்...

மனசாட்சி இல்லாமல் செயல்படவும் துவங்குகின்றான் என்பதை குறிப்பதாகும்.

பேராசையின் பிடியில் சிக்கிய மனிதன் எதிலும், போதும் என்று திருப்தி அடைவது இல்லை. அவனிடம் எவ்வளவு சொத்துக்கள், சுகங்கள் இருந்தாலும் அதை எண்ணி மகிழ்ச்சி அடைவது அல்லது போதும் என்று நினைப்பதில்லை. மாறாக இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், இதைவிட அதிகம் வேண்டும் என்று அலைந்து கொண்டே இருப்பானே தவிர, தனக்கு என்று கிடைத்துள்ளதை எண்ணி எள்ளளவும் திருப்தி என்பது அவர்களிடம் இருக்காது.

பேராசை கொண்ட ஒருவனுக்கு நூறு செல்வங்கள் கிடைத்தாலும், அந்த நூறு செல்வங்களையும் கொண்டு அவன் திருப்தி அடைய மாட்டான். ஆயிரம் செல்வங்கள் கிடைக்கவில்லையே என்று இச்சித்து, அந்த ஆயிரம் செல்வங்களை அடைவதற்கான காரியங்களை மேற்கொள்ள துவங்குவான். நாம் செய்யும் செயல்கள் நன்மையா? தீமையா? என்பதை அவன் புரிந்து கொள்ளமாட்டான். அறநெறிகளை மீறி செயல்பட துவங்குவான். மனசாட்சியின்றி எந்தவிதமான செயல்களையும் செய்து தனக்கு வேண்டிய ஆயிரம் செல்வங்களை அடைந்ததும் அதிலும் அவன் திருப்தி அடைவதில்லை. ஆயிரம் செல்வங்கள் கிடைத்துவிட்டது... இன்னும் முயற்சித்தால் கோடி செல்வங்களை அடையலாமே... என்று எண்ணுவான்.

கோடி செல்வங்களையும் அடைந்து முடித்ததும் அவனது பேராசை என்பது முடியாமல் அந்த செல்வங்களை கொண்டு தேசத்தின் ஒரு பகுதியை தனதாக உருவாக்கி கொண்டு அதில் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று ஆசைப்படுவான். ஒரு சிறு பகுதியில் அதிகாரம் செலுத்தி கொண்டிருப்பவன் நாடாளும் அதிகாரம் கிடைக்க வேண்டுமே என்று யோசிப்பான். நாடாளும் அதிகாரம் கிடைத்துவிட்டால் உலகாளும் அதிகாரம் வேண்டுமே என்று எண்ணுவான். அவன் எண்ணிய விதத்தில் ஆசைப்பட்ட அந்த ஆசையும் நிறைவேறி உலகத்தை ஆளும் மன்னனாக இருந்தாலும், அந்த நிலையிலும் அவனுடைய ஆசையானது நிற்பதில்லை. அவன் தேவன் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவான்.

தேவன் ஆனவுடன் தேவ லோகத்திற்கும் அதிபதியாக இருக்கக்கூடிய தேவேந்திரனாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுவான். இவ்விதமாக ஆசையானது பெருகிக்கொண்டே போகும். ஒரு துளி ஆசையானது மிகப்பெரும் கடல் அளவிற்கு பேராசையாக உருவெடுக்கக்கூடியதாகும். அவன் கொண்ட ஆசை என்பது முதலில் பொருளாசையாக இருந்து, பின்பு மண்ணாசையாக பெண்ணாசையாக வளரும். உருவெடுத்து மண்ணாசை, பெண்ணாசை, பொருளாசை ஆகிய இம்மூன்றும் மனதில் பெருக பெருக அவன் அரிதிலும் கிடைத்த இந்த மானிடப் பிறவியில் மனித தன்மையையும், மனசாட்சியையும் இழக்கத் துவங்குகிறான்.


சொர்க்கத்தை அடையக்கூடியவர்கள் யார்?

மனிதர்களாகப் பிறந்தவர்கள் கொண்ட ஆசைகளின் மூலம் அவர்களின் அறிவு எதற்காக பிறந்தோம்? என்பதை அறிந்து கொள்ளாமல், ஒருவிதமான குழப்பத்தில் அவர்களை உட்படுத்தி, அவர்கள் கொண்ட ஆசைக்கான காரியங்களை செய்ய வைக்கின்றது. மண்ணின் மீதும், பொருட்களின் மீதும், பெண்ணின் மீதும் இச்சைகள் கொண்டவர்கள், அந்த இச்சைகளுக்காக எந்தவிதமான காரியங்களையும் செய்ய துணிகிறார்கள்.

மண்ணின் மீதும், பொருட்களின் மீதும், பெண்ணின் மீதும் இச்சைகள் கொண்டவர்கள் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் தன்னுடைய இச்சையை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டுமே ஈடுபாடு கொண்டு இருக்கின்றார்கள். அந்த ஈடுபாடு அவர்களுக்கு பலவிதமான பாதகங்களையும் உருவாக்க தயக்கம் கொள்வதில்லை. அந்த ஆசை அவர்களுக்கு பலவிதமான துரோகங்களை செய்ய தூண்டுகோளாக இருக்கின்றது. அவர்களுக்கு அந்த துரோகமும் இயல்பான ஒன்றாக மாறிவிடுகின்றது. அவர்களிடம் அதிகாரம் நிறைந்த போலியான பதவிகள் இருக்கின்ற மாதிரி இருப்பார்கள். இழிவான செயல்களை தைரியத்துடன் செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

அவர்களின் வாழ்க்கையில் மதிப்புமிக்க எந்தவொரு செயலும் இருக்காது. இவர்கள் யாவரும் மரணத்திற்கு பின்பு செல்லக்கூடிய இடம் என்பது சொர்க்கம் அல்லாத நரகமாக இருக்கும். ஆசையே அழிவிற்கு வழிவகுக்கும் என்னும் உண்மையை எவர் உலகத்திற்கு எடுத்துரைத்து, வணங்க தக்கவர்களாக வாழ்கின்றார்களோ... அவர்களே இறுதியில் சொர்க்கத்தையும் அடைகின்றார்கள். ஐம்புலன்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு மனம் போன போக்கில் வாழாமல், நன்மை மற்றும் தீமை எது? என பகுத்தறிந்து வாழ்கின்றவர் எவரோ, அவரே சகல சௌபாக்கியங்களையும் பெற்று, தன்னுடைய பிறவி பலன்கள் முழுவதையும் அனுபவித்து முழுமை அடைந்து சொர்க்கத்தை அடைகின்றார்.


சுதந்திரம் இல்லாதவர்கள் யார்?

கல்வியும், வித்தையும் கற்றவர்கள் மட்டுமே ஞானிகள் அல்ல. தனது பெற்றோர்களை இகழ்ந்து உரைத்து, வாழ்க்கை துணைவரின் பேச்சுக்களை சிரமேற்றுக் கொண்டு நடந்து, தனது கடமைகளை செவ்வனே செய்யாமல், சுயநலத்துடனும், வயோதிக பருவம் உடைய பெற்றோர்களை கிழப் பிணமே என வாய் திறந்து அதட்டியும், மிரட்டியும் ஏச்சு பேச்சுக்களை கொண்டவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் கற்று உணர்ந்தவர்களே அல்ல. அவர்கள் சுதந்திர உணர்வுகள் இல்லாதவர்களாகவே இருக்கக்கூடியவர்கள் ஆவர்.

கருட புராணம் என்பது எதற்காக?

கருட புராணம் என்பது பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனிதர்களுடைய பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம் மற்றும் மறுபிறவி பற்றிய அனைத்து விபரங்களையும் அனைத்து மனிதர்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாக எடுத்துரைக்கப்பட்ட ஒரு புராணமாகும்.

மற்ற உயிரினங்களிலிருந்து மேம்பட்டு விளங்கும் மனித உயிரினங்களில் ஐம்பொறிகளின் அடக்கம் என்பது மிகவும் முக்கியமானதாகும். பொறிகளை அடக்கத் தவறினால் பிறப்பின் நோக்கை அவன் தவறவிடுகின்றான் என்பதே அர்த்தமாகும். பொறிகளின் அடக்கமின்மையினால் ஏற்படும் விளைவுகள் என்பது எண்ணிலடங்கா வண்ணமாக இருக்கக்கூடியதாகும். எரிந்து கொண்டிருக்கும் தீப ஒளியினை வெளிச்சம் என எண்ணி மீனவர்களின் வலையில் சிக்கும் மீன்கள் தனது பார்வையினால் அழிவை உருவாக்கிக் கொள்கின்றன. இது பார்வையினால் ஏற்படக்கூடிய விளைவிற்கு எடுத்துக்காட்டாகும்.

வளம் நிரம்பிய கானகத்தில் குழல் ஓசையில் மயங்கி நிற்கக்கூடிய மான் எளிதாக வேடனிடம் அகப்பட்டுக் கொள்கின்றது. இது கேட்கின்ற காதுகளின் மூலம் நேரிடக்கூடிய விளைவிற்கு எடுத்துக்காட்டு ஆகும். தேன் சுவையை விரும்பி தன் கூட்டிலேயே பல மலர்களிலிருந்து எடுத்து வந்த தேனை சேர்த்து வைத்து தங்கியிருக்கும் காலக்கட்டங்களில், தேனை சேகரிக்கும் வேடர்கள் தீயை கொளுத்தி தேனீயை விரட்டி, சாகடித்து தேனீ சேகரித்து வைத்திருந்த தேனை கவர்ந்து செல்கின்றார்கள். இது தேனின் இனிப்பு சுவையால் ஏற்பட்ட விளைவாகும்.

பொறிகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருளை விரும்பி வரும் எலியானது, பொறியில் சிக்கி அகப்பட்டு, துடித்து மடிகின்றது. பொறியில் வைக்கப்பட்டுள்ள உணவின் நாற்றத்தினை விரும்பியதால் ஏற்பட்ட விளைவாகும். இது நாசியினால் ஏற்படும் விளைவிற்கு எடுத்துக்காட்டாகும். புணர்ச்சியை விரும்பிய ஆண் தவளையானது ஒலியை எழுப்பி பெண் தவளையை கவர நினைக்கும் பொழுது பாம்பின் வாயில் அகப்பட்டு மடிகின்றது. இது ஸ்பரிச இன்பம் வேண்டில் அழிவைத் தேடிக் கொள்ளக்கூடிய நிகழ்விற்கு எடுத்துக்காட்டாகும். கருடா... ஐம்பொறிகளின் மூலம் ஒரு புதிய உயிரினத்திற்கு அழிவு உண்டாகும் என்கின்ற பொழுது தன்னுடைய ஐம்பொறிகளின் மூலம் மனிதன் அனுபவிக்கக்கூடிய கேடுகள் என்பது அளவற்றதாகும்.

கருட புராணம் என்பது வாழ்விற்கு அப்பால் ஜீவன் செல்லும் வழி வகைகளை விளக்கும் நூல்.

ஆகவே மனிதனாக பிறக்கின்ற ஒவ்வொருவரும் தன்னுடைய ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்தி வாழ வேண்டும் என்பது மிகவும் அவசியமாகும். அவ்விதம் கட்டுப்பாடில்லாமல் எவன் வாழ்கிறானோ... அவன் தன்னுடைய கர்மாக்களை களைவதற்காக மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து இந்த பூமியில் வாழ்ந்து மடிவான். ஐம்பொறிகளின் அடக்கம் என்பது மிகவும் அவசியமாகும்.



மகிழ்ச்சி எங்கு உள்ளது?

மனிதன், எதற்காக பிறக்கின்றோம்? பிறப்பின் நோக்கம் என்ன? என்பதை பற்றி அவன் அறிந்திருப்பது இல்லை. அவன் தன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சி காலக்கட்டத்திலும் அந்த வளர்ச்சிக்கு ஏற்ப வாழ்கின்றானே தவிர, நமது வாழ்க்கையின் முடிவில் அல்லது எல்லையில் நமக்காக காலன் ஒருவன் காத்து கொண்டிருக்கின்றான் என்பதை எவரும் உணர்வதும் இல்லை.

இல்லறத்தில் அகப்பட்ட ஒருவன் தனக்காகவும், தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும் பொருட்களை தேடுகின்றான். உற்றார், உறவினர்களின் பிடியில் அகப்பட்டவன் பந்த பாசங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையாவது மட்டுமல்லாமல், அலைக்களிக்கவும் படுகின்றான். அவன் மகிழ்ச்சி என்பது வசதிகளில் கிடைப்பதாக எண்ணுகின்றான். ஆனால்,

மகிழ்ச்சி என்பது பொருட்களில் அல்ல...

நாம் செய்யும் அற செயல்களில் மட்டுமே நம்முடைய மனமகிழ்ச்சி என்பது முழுமையாக நிறைந்திருக்கக்கூடியதாகும்.

உலகில் மனிதன் தேடிய உறவுகள், பொருட்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு செல்லக்கூடிய நாள் என்பது ஒன்று இருக்கும்.

அன்றைய தினத்தில் நாம் வாழ்நாள் முழுவதும் சேகரித்த யாவற்றையும் இந்த பூமியில் விட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும். அதுவே ஒவ்வொருவரும் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று எண்ணுபவர்கள் வசதிகளில் அந்த மகிழ்ச்சியை தேடுவதை விட, யாவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாத அல்லது அழிக்க இயலாத காரியங்களை செய்யும் செயல்களில் மகிழ்ச்சியை தேடுவதும்... தன்னலம் கருதாத சேவை பணிகளில் மனதினை ஈடுபடுத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியை அடைவது மட்டுமல்லாமல்... மோட்சத்தையும் அடையலாம்.

வீடுகளில் கருட புராணம் வாசிக்கலாமா?

வீடுகளில் கருட புராணம் வாசிக்கலாம். இதை வாசிப்பவர்கள், கேட்பவர்கள் என அனைவரும் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புராணம் என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகும்.

இந்த புராணத்தை படிப்பதால் இந்த பிரபஞ்சத்தில் ஏற்பட இருக்கக்கூடிய தவறுகள் மற்றும் குற்றங்கள் யாவும் குறைய இந்த கருடபுராணம் வழிவகுக்கும்.

மனிதனாக பிறந்தவர்கள் எந்த காரியங்களில் அவா (ஆவல்) கொள்ள வேண்டும்? எதை விலக்க வேண்டும்? என்பதைக் தெளிவாக எடுத்துரைக்கும் ஒரு அறிய நூல் கருட புராணம்.


பாவத்தில் பங்கு கொள்ளக்கூடியவர்கள் யார்?

இந்த உலகில் மனிதன் யாரிடமும் கேட்காமலும், சொல்லாமலும் வந்து பிறக்கின்றான். எவ்விதத்தில் சொல்லாமல் பிறக்கின்றானோ அவ்விதத்தில் அனைவரிடமும் சொல்லாமல் இறக்கின்றான். அவன் வாழ்வு என்பது பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையில் மட்டுமே இருப்பதாகும். அந்த வாழ்க்கையில் அவன் தேடிய குழந்தைகள், உறவினர்கள், அவன் கொண்ட இச்சைகளின் மூலம் தேடிய பொருட்கள், மண்ணாசையின் விளைவாக தேடிய அழகிய மனைகள், மாளிகைகள் என அனைத்தையும் விட்டுவிட்டு, நெருங்கிய உறவினர்கள் என எவரிடமும் சொல்லாமல் இறந்தும் விடுகின்றான்.

தன்னை ஈன்றவர்கள், தன்னிடமிருந்து உருவாகியவர்கள் என எவருடைய துணையும் இல்லாமல், எவ்விதத்தில் அவன் ஒருவனாக இந்த பூமியில் பிறந்து வாழ்ந்தானோ, அப்படியே அவன் அந்த பூமியில் தனியாகவே எவரிடமும் சொல்லாமல் மடிந்து போகிறான். தனியாக பிறந்தவன் தனியாகவே இறக்கின்றான். உடலிலிருந்து உயிரானது பிரிந்தவுடன் அந்த உடலை பூமியில் கிடத்தி உற்றார், உறவினர்கள் சூழ அழுது புலம்புவார்கள். ஆனால் இறந்து போனவர்களுக்காக அழுவதினால் இறந்து போனவருக்கு சிறிதேனும் பயன் உண்டா? என்று பார்த்தோமானால் எவ்விதமான பயனும் ஏற்படுவதில்லை.

ஒருவன் ஈட்டிய பொருட்களை அனுபவிப்பதில் அவனுடன் இருப்பவர்கள் பங்கு பெறுகின்றார்கள். ஆனால் அவன் செய்த பாவத்தில் யாவரும் பங்கு பெறுவதில்லை. எவனொருவன் அற செயல்களை விடுத்து பாவச் செயல்களை செய்கின்றானோ அந்த பாவச் செயல்களே அவனுக்கு சுமையாக இருக்கும்.


கடைசி வரை நம்முடன் பயணம் செய்வது எது?

பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் ஈட்டிய பொருட்கள் யாவும் உடலிலிருந்து உயிர் பிரிந்தது முதல் அவன் அனுபவித்த சுகங்கள், செல்வங்கள் யாவும் இந்த பூமிக்கே சொந்தமாகும். அவன் தேடிய செல்வங்கள் யாவும் வீட்டுடன் தங்கிவிடும். அவன் வாழ்நாளில் தேடிய உறவினர்கள் காடு வரை வருவார்கள், உயிர் பிரிந்த உடலுக்கு ஈமச்சடங்குகள் செய்து முடித்த பின்பு அவர்களும் அவ்விடத்தை விட்டு சென்று விடுவார்கள். பின்பு அந்த மனிதனின் ஆன்மாவோடு கடைசிவரை துணையாக நிற்பது அவன் வாழ்கின்ற வாழ்நாளில் செய்து வந்த பாவ, புண்ணியங்கள் மட்டுமே.

ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் முடிந்த அளவு பாவங்களை செய்யாமல், புண்ணியங்களை செய்தவராக இருப்பின் அவர் சொர்க்கலோகத்தை அடையும் மார்க்கமும்... அடுத்த பிறவிகளில் அவர் எடுக்கும் ஜென்மாக்களும்... நன்மை அளிக்கக்கூடிய சூழ்நிலைகளில் இருக்கும் இடத்தில் அமையும்.


தான, தர்மத்தின் பலன்கள் யாவை?

மனிதன் செய்கின்ற தான, தர்மங்களின் அடிப்படையில் எவ்விதம் ஒருவன் பிறப்பெடுக்கின்றான்?

அந்த தான, தர்மங்கள் அவருக்கு எந்த வகையில் உதவியாக இருக்கின்றன? என்பதையும் எடுத்துரைக்க வேண்டும் என்று கருடாழ்வார் வைகுண்டநாதரிடம் வேண்டினார்.

புன்னகை பூத்த வைகுண்டநாதரோ மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும், அவர்களின் கர்மாக்களும் தொடர்பு கொண்டிருக்கின்றன. கர்மாக்களின் அடிப்படையிலேயே ஒவ்வொருவரின் பிறவிகளும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தாழ்ந்தும், மற்றொருவர் உயர்ந்தும் பிறப்பது என்பது அவர் செய்கின்ற கர்ம வினைகளின் அடிப்படையிலேயே. உலகில் வாழ்கின்ற மனிதர்கள் தங்களின் சுதந்திரத்திற்காக மற்றொருவரின் சுகத்தை கெடுக்காமல் இருக்க வேண்டும்.

ஒருவரை அழித்து வாழ்பவர் தாழ்ந்த பிறவியை அடைகின்றார். வாழ்நாளின் மனிதன் ஈட்டுகின்ற பொருளில் அவனின் சூழ்நிலைக்கு ஏற்ப நல்ல காரியங்களுக்கு நன்மை அளிக்கும் விதத்தில் செலவிடப்பட வேண்டும். அவ்விதமாக செலவிடப்படாத அந்த செல்வங்கள் யாவும் அவனுடைய மறைவிற்கு பிறகு பலவிதமான முறைகளில் அழிந்து போகும். ஒருவரிடம் இருக்கும் செல்வம் என்பது எப்பொழுதும் நிலையானதாக இருப்பதுமில்லை... இருக்க போவதுமில்லை...

பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த அறச்செயல்கள் மற்றும் தான, தர்மங்களின் அடிப்படையிலேயே நாம் அடுத்த பிறவிகளில் பாக்கியசாலிகளாக பிறக்கின்றோம். அதை உணர்ந்து அனைவரும் அவர்கள் எடுத்த இந்த பிறவியிலும் தான, தர்மங்களை செய்து தன்னை சார்ந்திருப்பவர்களை எப்பொழுதும் வஞ்சனை செய்யாமல் வாழ்பவர்கள் அடுத்தடுத்த பிறவிகளில் தனவான்களாக பிறப்பார்கள். தான, தர்மங்கள் என்பது ஒருவனை எப்பொழுதும் தாங்கி நிற்கக்கூடியதாக இருப்பதே ஆகும். செய்கின்ற தான, தர்மங்களை அன்புடனும், பக்தியுடனும் எவன் ஒருவன் செய்கின்றானோ... அவன் எண்ணியவற்றையெல்லாம் எண்ணிய வண்ணமாகவே அடைவான்.

திருமால், கருடனிடம் தான, தர்மங்களின் சிறப்புகளை பற்றி விளக்குகின்றேன் கவனமாக கேட்பாயாக... என்றார். அதாவது, ஒருவன் செய்கின்ற தானம் என்பது சிறிய அளவாக இருந்தாலும், அந்த தானத்தை மனதில் எண்ணி அன்புடன் மற்றவர்களுக்கு செய்வாராயின் அந்த தானம் மிகப்பெரியதாக நன்மை அளிக்கும் வகையில் இருக்கும். தான, தர்மங்கள் மட்டுமே புண்ணியமானவையாக இருப்பதில்லை.

ஒருவர் மனத்தூய்மையோடு எந்தவொரு பிரதிபலனையும் தான் செய்கின்ற காரியத்தில் எதிர்பார்க்காமல் செய்கின்றானோ.. அந்த கர்மங்கள் எல்லாம் நல்வினையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தவ ஒழுக்கத்தில் மன ஒருமைப்பாட்டுடன் பொருந்தி வாழ்பவர்கள் எந்தவிதமான தான, தர்மங்களையும் செய்ய வேண்டியதில்லை. அவர்களுடைய தவமே எம்முடைய உலகத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும்.

மனத்தூய்மை மற்றும் அன்பு இல்லாமல் செய்யப்படுகின்ற தான, தர்மங்களும்... ஒழுக்கமும்... நம்பிக்கையின்மையும் இல்லாத தவமும்... எவருக்கும் பயன்படாதவையே ஆகும்.

இவ்விதமாக நாராயணன் எடுத்துரைத்த நல்லுரைகளை பொறுமையுடனும், பணிவுடனும் கேட்டார் கருடாழ்வார். பகவானே...!! மனிதர்கள் இறந்த பின்பு உடல் இல்லாமல் ஆவியாய் அலைந்து, திரிந்து அவல நிலைக்கு ஆளாகும் நிலை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி தாங்கள் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார் கருடாழ்வார்.

அதற்கு நாராயணரும் கருடா...!! மனிதன் இறந்த பின்பு அதாவது, மனிதனின் உடலில் இருந்து அவன் உயிரானது பிரிந்த பிறகு அந்த உயிர் ஆவி வடிவத்தை பெறுகின்றது. அந்த ஆவி வடிவம் என்பதுதான் பிரேத ஜென்மம் ஆகும். அந்த பிரேத ஜென்மத்துடன் அவன் அலைந்து, திரிந்து கொண்டிருப்பான். அந்த கொடுமையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் சில புண்ணிய கர்மாக்களையும் செய்ய வேண்டும். அந்த பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய ஒவ்வொருவரும் 'விருஷோற்சர்க்கம்" என்ற கர்மாவை செய்ய வேண்டும்.

அதாவது, காளைக் கன்றை (நாட்டு காளைகள்) தானமாக கொடுப்பவர்களுக்கு பிரேத ஜென்மம் ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உண்டாகும். ஐந்து வயதிற்கு உட்பட்டவர்கள் இறப்பாரானால் அவர்களுக்கு பிரேத ஜென்மம் ஏற்படுவதில்லை. இதில் ஆண், பெண் என்ற பாகுபாடும் கிடையாது. ஐந்து வயதிற்கு மேற்பட்டவர் இறப்பவர்களில் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்களுக்காக அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்கள் காளைக் கன்றை தானமாக கொடுக்க வேண்டும்.

காளைக் கன்றை தானமாக கொடுப்பதன் மூலம் பிரேத ஜென்மம் என்ற கொடுமையான நிலைக்கு இறந்தவர்கள் ஆளாகாமல் தவிர்க்க முடியும். ஆவியாக சுற்றித்திரியும் நிலையிலிருந்து விடுபட வேண்டுமெனில் விருஷோற்சர்க்கத்தை அன்றி வேறு எந்த பரிகாரமும் சிறப்பை அளிக்காது. வாழ்கின்ற போது செய்யும் தான, தர்மங்களும்... இருக்கின்ற விரதமும்... வேள்வி நின்ற பலன்களும்... இறந்தவர்களை பிரேத ஜென்மம் என்ற கொடுமையில் இருந்து அவர்களை எந்த நிலையிலும் காப்பாற்றாது என்பதையும் கூறினார் திருமால்.

சர்வலோகங்களையும் காத்து ரட்சித்து கொண்டு இருக்கக்கூடிய நாராயணரே...

எப்பொழுது விருஷோற்சர்க்கம் என்ற கர்மவை செய்ய வேண்டும்?...

இறப்பதற்கு முன் அந்த கர்மாவை செய்ய வேண்டிய காலக்கட்டத்தையும்...

ஒருவேளை அதை செய்யாமல் இருந்தால் ஏற்படும் விளைவுகளையும்...

ஒருவேளை அவர்களது குடும்பத்தை சார்ந்த நபர்கள் இறந்த நபருக்கு எப்பொழுது செய்ய வேண்டும்?...

என்பதை பற்றியும்... அதன் பலன்கள் பற்றியும்... எடுத்துரைக்க வேண்டும் 
என்று பெருமாளைத் தொழுது வேண்டினார் கருடன்.

கருணைக்கடலான ஸ்ரீமந்நாராயணர் கருடனை நோக்கி விருஷோற்சர்க்க கிரியைப் பற்றி கூறுகிறேன் கேட்பாயாக... என்றார். நமது பித்ருக்களுக்கு செய்யப்படுகின்ற சிரார்த்தம் முதலிய செயல்கள் யாவும் விருஷோற்சர்க்கம் என்னும் கர்மாவை செய்தால் மட்டுமே இறந்த நமது பித்ருக்களுக்கு பலனளிக்கும் விதத்தில் இருக்கும். இந்த கர்மாவானது ஒருவர் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்யப்பட வேண்டும். ஒருவேளை இதை யாரும் செய்யவில்லை எனில் அவர்கள் அனைவரும் ஆவியாக திரிந்து, பலவிதமான இன்னல்களுக்கு அவதிப்பட நேரிடும்.

குழந்தை வயதை பற்றி அறிவோம்... 

ஒரு நாள் முதல் 4 மாதம் வரை உள்ள குழந்தை சிசு ஆகும்...

4 வயது வரை உள்ள குழந்தை பாலகன்...

ஆறு வயது வரை உள்ள குழந்தை குமரன்...

ஒன்பது வயது வரை உள்ள குழந்தை பௌண்டகன்...

16 வயது வரை உள்ள குழந்தை கைசோரன்...

யாருக்கெல்லாம் விருஷோற்சர்க்கம் செய்யப்படுகின்றதோ அவர்கள் அனைவரும் நற்கதியை அடைய முடியும் என்பது திண்ணம் ஆகும். விருஷோற்சர்க்கம் என்கின்ற கிரியை இறந்தவரின் மனைவியோ அல்லது மகனோ செய்யலாம். அவனுடைய பெண் அல்லது பெண் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளும்; அதை செய்கின்ற தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

திருமால் கருடனிடம், ஒருவேளை இறந்தவருக்கு ஆண்மகன் இருக்கும் பட்சத்தில் விருஷோற்சர்க்கம் செய்கின்ற முழுத்தகுதியும் அவனுக்கு மட்டுமே உரியதாகும்... மற்றவர்கள் செய்யக்கூடாது... மகன் இல்லாத பட்சத்தில் மட்டுமே மற்றவர்கள் அதை செய்யலாம் என்று கூறினார். நாராயணர் கூறியதை பணிவுடன் கேட்டுக் கொண்டிருந்த கருடனுக்கு ஒரு சந்தேகம் எழத் துவங்கியது. அதாவது, புத்திரர்கள் இல்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு இந்த கிரியை யார் செய்வார்கள்? அவர்களுக்கு எந்த நிலை ஏற்படும்? என்பதே அந்த ஐயம் ஆகும். அதையும் நாராயணனிடம் கேட்டார் கருடன்.

கருடா...!! செல்வங்களில் மிகவும் உயர்ந்த செல்வம் என்பது புத்திர செல்வம் ஆகும்.

புத்திரப்பேறு இல்லாமல் ஒருவன் இறப்பான் என்றால் அவன் பெரியோர்கள் தங்கியிருக்கும் மோட்ச உலகத்தை அடைய மாட்டான். அவர்களுக்கு விதிக்கப்பட்டது என்பது நரகமே ஆகும்.

மனிதர்களாய் பிறந்தவர்கள் எந்தவொரு நல்ல காரியத்தையும் செய்யாமல் இறப்பார்கள் என்றால், அவர்களுக்கு வாரிசுகள் இல்லாமலும்...

அவர்களுக்கு செய்யப்பட வேண்டிய இறுதி கிரியை செய்யாமல் இருந்தாலும்...

அவன் வெகு காலத்திற்கு பசியால் வருந்தி...

அருந்த தண்ணீர் இன்றி அலைந்து திரிவான்.

சிறிது காலத்திற்கு பின்பு புழுக்கள் போன்ற அற்ப பிறவிகளின் வயிற்றில் பிறப்பான். இறுதியாக மனித பிறவியில் கடைப்பட்ட ஒருவரின் குடும்பத்தில் பிறந்து பல தரப்பட்ட இன்னல்களையும் அனுபவிப்பான். அவன் முதுமை என்பதை அடைந்து வாழ்க்கையில் பலவிதமான பிணிகளையும், இன்னல்களையும் அனுபவித்து கொண்டிருப்பார்கள்.

இவ்விதம் அவர்கள் வாழும் பொழுது அவர்களுக்கு நற்செயல்கள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் அதை தள்ளிப்போடாமல் அந்தக் காரியங்களை உடனே செய்வது அவசியமாகும். அவ்விதம் அவர்கள் செய்யும் காரியங்களின் மூலம் தேவ பதவியையும் அடைய இயலும் என்று திருமால் எடுத்துரைத்தார். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கக்கூடிய திருமால் எடுத்துரைத்து கொண்டிருக்க... கருடனுக்கு மற்றொரு சந்தேகம் உருவாகத் துவங்கியது.

ஒருவர் வாழும் பொழுது செய்யப்படும் தான, தர்மங்களை எவ்விடத்தில் செய்ய வேண்டும்? என்றும்,

செய்யப்படும் அந்த தான, தர்மத்தின் பலன்கள் என்ன? 

என்பதை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார் கருடன்.

கருடனே...!! தான, தர்மத்தை ஒருவர் மனத்தூய்மையுடன் செய்ய வேண்டும். அறநூல்களில் கூறப்பட்டுள்ள விதிகளிலிருந்து தவறாமல் அந்த விதிகளின் அடிப்படையிலேயே அவர்கள் தான, தர்மங்களை செய்ய வேண்டும். எவ்விதமான ஒழுக்கமும், பக்தியும், மனத்தூய்மையும் இல்லாமல் செய்யப்படுகின்ற தானம் என்பது, செய்தவருக்கு எந்தவிதமான பலனையும் அளிக்காது. ஒருவன் வாழ்கின்ற காலத்தில் செய்கின்ற தானம் முழு பலனை அளிக்கும்.

நல்லதை கொடுக்க வேண்டும். நல்லவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதுவும் புண்ணிய தலத்தில் வைத்து தானம் செய்வது மகா புண்ணியம் ஆகும். இப்படியான தகுதிகளை கொண்ட தானம் எண்ணற்ற பலன்களை தரும். உயர்ந்தவர்களுக்கு செய்யப்படுகின்ற தானம் அதிக பலனை தரும். வேத நூல்களை கற்றுத்தேர்ந்த நல்ல பண்புடைய அந்தணர் ஒருவருக்கு கோ தானம் முதலிய தானங்களை செய்வது சிறப்பு.

வேதங்களில் தேர்ச்சியற்ற, ஒழுக்கமற்ற ஒருவனுக்கு பிராமண குலத்தில் பிறந்தவன் என்பதற்காக கொடுக்கின்ற தானம் கொடுப்பவனுக்கு புண்ணியத்தை சேர்க்காது. தகுதியற்றவனுக்கு தானம் செய்கின்றவனும், தகுதி இல்லாமல் தானம் பெறுகின்றவனும் சென்றடைய வேண்டிய இடம் நரகமேயாகும். சொல்லப்போனால் அது ஒரு பாவ காரியமாகிவிடும். அந்த பாவத்தின் பலனை அவனுக்கு பின் வரும் பல தலைமுறையினரும் அனுபவிக்கும் படியாக ஆகிவிடும். ஒரு பசுவை ஒருவனுக்கு மட்டுமே கொடுப்பதுதான் கோ தானம். அதே பசுவை வேறு சிலருக்கு பாவனையாய் தானம் செய்வது கூடாது.

பசுவை தானமாய் பெற்றவர்கள் அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டால் தானம் செய்தவன் கருதிய பலனை அடையாமல் இருவரும் நரகத்தில் கஷ்டப்பட வேண்டிய சூழல் நேரிடும். கொடுத்தவனும், பெற்றவனும் தங்களுடைய தான முறையில் ஏற்பட்ட தவறினால் பாவியாகிவிடுவர். அவர்களுடைய ஏழு தலைமுறைகளும் அந்த பாவ காரியத்தால் பாதிக்கப்படும். எனவே தானத்தை முறையுடனும், மனதில் நிறுத்தியும் செய்ய வேண்டும். ஒருவன் மரணத்தருவாயில் செய்கின்ற தானத்தை விட அவன் வாழும் காலத்தில் சுய நினைவோடு செய்யும் தானமே சிறந்தது.

கருடனே! ஒருவன் எவ்வித தான, தர்மங்களும் செய்யாமல் இறந்துவிட்டால், அவன் புண்ணிய லோகத்தை அடைய வேண்டும் என்பதற்காக அவனுடைய உறவினர்கள் செய்கிற தானம் விரும்பிய பலனைத் தராது. அது அவ்வளவு சிறப்புமிக்கதாக இருக்காது. அதேசமயம் ஏழ்மையில் வாடும் ஒருவன் சிறிதளவு தானம் செய்திருந்தாலும் அவனுக்கு புண்ணிய லோகம் கிடைத்துவிடும். ஆதலால் தான் வாழும் காலத்திலேயே ஒருவன் தான, தர்மங்களை மனத்தூய்மையுடனும், முறையுடனும் செய்துவிட வேண்டும்.


விருஷோற்சர்க்கம் என்கின்ற தானத்தை எப்போது செய்ய வேண்டும்?

விருஷோற்சர்க்கம் பற்றி கூறியிருந்தேன் அல்லவா? அது முதன்மையானதும், அதிக அளவில் நன்மை செய்கிறதும் ஆகும். விருஷோற்சர்க்கம் என்கின்ற தானத்தை புனிதமான ஒரு இடத்தில் வைத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை, புண்ணிய காலத்தில் தான் செய்தாக வேண்டும் என்பதில்லை. எந்த இடத்தில், எந்த பொழுதில் செய்தாலும் அது புனித தலத்தில், புண்ணிய காலத்தில் செய்த பலனையே கொடுக்கும். வேள்வி, விரதம், கோ தானம் இவற்றை விட மேலான தானம் விருஷோற்சர்க்கம். 

கருடா! விருஷோற்சர்க்கத்தை எப்படி செய்வது? என்று கூறுகின்றேன், கேட்டுக்கொள்.

கார்த்திகை மாத பௌர்ணமியில் அல்லது வேறு புண்ணிய தினத்தில் இதை செய்வது உத்தமம்.

உத்தராயண கால வளர்பிறை, தேய்பிறை அல்லது துவாதசி திதி வரும் நாளில் இதைச் செய்யலாம். வேத நூல்களில் தேர்ந்த, ஒழுக்கமுடைய அந்தணர்களைக் கொண்டு ஹோமம் வளர்த்து வேள்வி செய்விக்க வேண்டும். வேள்வித்தீயில் எல்லாத் தீமைகளும் பொசுங்கிவிடுகின்றன. வேள்வியால் தூய்மை பெற்றவன் நவகிரகங்களை பூசிப்பதோடு, மாமதுர் தேவதைகளை அர்ச்சிக்க வேண்டும். மகாவிஷ்ணுவை பிரார்த்தித்து கொள்ள வேண்டும். பிறகு, மந்திரப் பிரயோகம் செய்யப்பட்ட நீரால் காளைக்கன்று ஒன்றை நீராட்டி வஸ்திரம், ஆபரணம், மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும்.

அந்தக் கன்றினை வேள்வித்தீயை வலம் வரும்படி செய்து, தானம் செய்பவர் வடதிசை நோக்கி நின்று, 'ஆதியில் நான்முகனால் படைக்கப்பட்ட திவ்யமான ரிஷபம் நீயே ஆவாய்" என்று கூறி தானம் செய்ய வேண்டும். இந்த விருஷோற்சர்க்கம் என்கிற தானத்தை ஒருவன் தான் வாழும் காலத்திலேயே தனக்காக செய்து கொள்ளலாம் அல்லது இறந்துவிட்ட ஒருவருக்காக அவனுடைய வாரிசுகள் செய்யலாம். தனக்குத் தானே விருஷோற்சர்க்க தானம் செய்கிறவன் கன்றின் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரை தன்னுடைய கையால் ஏந்தி சிரசில் தெளித்துக் கொள்ள வேண்டும். தனக்கு விருப்பமான பிற பொருட்களையும் அவன் தானமாக அந்தணருக்கு வழங்கலாம்.

விருஷோற்சர்க்கம் என்கிற புண்ணிய கருமத்தை ஒருவன் செய்ய தவறினால் அவன் ஆவி வடிவில் அலைந்து திரியும்படி ஆகும். தன்னை பெற்றவர்களுக்கும், தனது குருவானவர்களுக்கும் தன்னால் முடிந்த அளவு நன்மைகளை ஒருவன் செய்ய வேண்டும். தன்னைப் பெற்றவர்கள் இறந்த பின்பு ஆண்டுதோறும் அவர்களுக்கும் பிண்ட கருமமாகிய சிரார்த்தத்தை செய்து வர வேண்டும். பகவான் இவ்விதமாய் பிதிர் கன்மம் பற்றி கூறியருளினார்.



உயிர்நீத்தலும், உருப்பெறுதலும்...

பகவான் நாராயணன் மனிதப் பிறவின் உயர்வு பற்றியும், மனிதர்கள் செய்ய வேண்டிய தான, தர்மங்கள் பற்றியும் கூறியவற்றை கவனமுடன் கேட்டு கொண்டிருந்த கருடாழ்வாருக்கு ஒரு கேள்வி தோன்றியது. அதாவது, தாங்கள் எமலோகம் பற்றியும் அடியேனுக்கு கூறியருள வேண்டும் என்று திருமாலிடம் பணிவுடன் விண்ணப்பித்தார். அதன் பேரில் ஸ்ரீமந்நாராயணனும் எமலோகம் பற்றி விவரிக்க திருவுள்ளம் பற்றினார். கருடனே! இப்பூவுலகில் இருந்து எண்பதாயிரம் காதங்களுக்கு அப்பால் உள்ளது எமலோகம்.

எமதர்மராஜன் என்கிற கூற்றுவனே எமலோகத்தின் தலைவனாவான். மனிதர்களில் எவருடைய ஆயுட்காலம் முடிகிறதோ அவர்களுடைய உயிரைக் கவர்ந்து வருவதற்காக தனது தூதுவர்களை அவன் அனுப்பி வைப்பான். அவர்களை கண்டால்; அஞ்சி நடுங்கும் படியான தோற்றத்தில், கருநிற உடையணிந்திருப்பார்கள். அவர்கள் பாசம் (கயிறு) முதலான ஆயுதங்களை வைத்திருப்பார்கள். எமனின் உத்தரவுப்படி ஒருவருடைய உயிரைக் கொண்டு செல்ல மூன்று எமகிங்கரர்கள் வருவார்கள். அவர்கள் அன்றன்று... யார் யாருடைய... ஆயுள் முடிகிறதோ அவர்களைத் தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டிப் போடுவார்கள்.

அப்படி எமகிங்கரர்களால் கொண்டு செல்லப்படும் உயிர்கள், அவற்றின் வான் சரீரத்தோடு இருக்கும். அதை ஆவி வடிவம் எனலாம். ஆவி வடிவிலான உயிர்கள் கூற்றுவனது முன்னிலையில் நிறுத்தப்படும். அந்த ஆவி வடிவிலான உயிர்களை பூவுலகில் அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கே அனுப்பிவிடும் படியும், பன்னிரண்டு நாட்கள் சென்ற பிறகு தன் முன்பாக கொண்டு வரும் படியும் எமதர்மன் உத்தரவிடுவார். அவ்வாறே எமகிங்கரர்களும் செயல்படுவார்கள் என்றார் திருமால்.

ஆவி வடிவிலான உயிர்கள் சுடுகாட்டில் தங்களுடைய தூல உடல் எரிக்கப்படுவதை, சிதைக்குப் பத்து முழ உயரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும். வாழும்போது நல்வினைகள் செய்த உயிராயின் தன்னுடய தூல உடல் எரிக்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடையும். அறநெறியில் நின்றிராத உயிர்களாயின் தங்களுடைய தூல உடல் அழிக்கப்படுவதைக் கண்டு வருந்தி புலம்பும். எமனுடைய உலகத்தைப் பதின்மூன்றாம் நாளில் மீண்டும் அடைகின்ற உயிர் தன்னுடைய ஆவி வடிவை உதறிவிட்டு, பிண்ட வடிவத்தை தரிக்கும் (கர்ப்பத்தில் பிரவேசிப்பதற்கு).

இறந்தவரின் தூல உடல் மயான பூமியில் எரிக்கப்பட்ட பிறகு, பன்னிரண்டு நாட்களுக்கு அவருடைய வீட்டு மனிதர்கள் அவருக்காக பிண்டம் (பிதிர் கடனாய் செலுத்தப்படும் பலி) இட வேண்டும். காரணம், தூல சரீரத்தை இழந்து, எமலோகம் சென்று கணப்பொழுதில் திரும்பி வந்த உயிரானது பசி, தாகத்துடன் தான் முன்பு வாழ்ந்த வீட்டின் வாயிலில் நின்று கதறியழும். அத்தகைய உயிருக்கு முதல் நாள் வைக்கிற பிண்டத்தால் சிரசு தோன்றும். இரண்டாம் நாள் பிண்டத்தால் கழுத்தும், தோளும் உண்டாகும்.

மூன்றாம் நாள் பிண்டத்தால் மார்பும், நான்காம் நாள் பிண்டத்தால் வயிறும், ஐந்தாம் நாள் பிண்டத்தால் கொப்பூழ் எனப்படும் தொப்புள் பகுதியும், ஆறாம் நாள் பிண்டத்தால் அதன் புட்டப் பகுதியும், ஏழாம் நாள் பிண்டத்தில் பிறப்புறுப்பும் (ஆண் குறி அல்லது பெண்குறி), எட்டாம் நாள் பிண்டத்தில் தொடைகளும், ஒன்பதாம் நாள் பிண்டத்தில் கால்களும் தோன்றும். பத்தாம் நாள் வைக்கப்படும் பிண்டத்தால் சரீரம் முழுமை பெற்றுவிடும். பிண்ட சரீரம் பெற்ற உயிரானது 11 மற்றும் 12வது நாட்களில் தான் வாழ்ந்த வீட்டிற்கு சென்று தன்னுடைய குடும்பத்தாருடன் தங்கி இருக்கும்.

பின்பு எமலோகத்தின் அதிபதியான எமதர்மனின் உத்தரவின் அடிப்படையில் பதின்மூன்றாம் நாளில் மீண்டும் எமலோகத்திற்கு தன்னுடைய பயணத்தை துவங்கும். உயிர் மேற்கொள்ளும் இந்த பயணமானது இன்பம் நிறைந்த பயணமாக இருப்பதில்லை. மாறாக சொல்ல முடியாத அளவிற்கு பலவித இன்னல்களும், துன்பங்களும் நிறைந்த ஒரு பயணமாக அமையும். நாம் செய்த பாவ, புண்ணியங்கள் மட்டுமே நம்முடன் இந்தப் பயணத்தில் பயணிக்கக்கூடியவை ஆகும்.

இவ்வுலகில் நாம் வாழும்போது சேர்ந்த அனைத்து பொருட்கள், உறவுகள் மற்றும் மனிதர்கள் என யாவும் இவ்வுலகில் மட்டுமே தங்கி இருக்கும். பதின்மூன்றாம் நாள் அன்று எமதூதர்கள் பிண்ட சரீரம் பெற்ற அந்த உயிரை தங்களுடைய பாசக் கயிற்றால் கட்டி இழுத்து செல்வார்கள். நாளொன்றுக்கு பிண்ட சரீரம் பெற்ற உயிரானது 247 காத தூரம் அளவிற்கு பயணம் செய்ய வேண்டும். அந்த பயணம் இரவு, பகல் என்று பாராமல் இன்னல்கள் நிறைந்ததாக இருக்கும். ஓய்வு என்பதே இல்லாமல் நீண்ட நேர தூரத்தையும் இந்த சரீரம் பெற்ற உயிரானது மேற்கொள்ள வேண்டும்.

அந்த பயணத்தின் போது பசியும், தாகமும் அந்த ஜீவனை துன்புறுத்திய வண்ணமாகவே இருக்கும். எமலோக பயணம் என்பது நாம் செய்த நன்மை, தீமைகளை எண்ணிப்பார்க்க வைக்கக்கூடிய பயணமாகும். அந்தப் பயணத்தை மேற்கொள்ளும் பொழுது 'வைவஸ்வத பட்டினம்" என்ற நகரம் ஒன்று உள்ளது. அந்த நகரத்தில் வாழும் மிருகங்கள் பார்க்கவே கொடூரமான உருவத்துடனும், எதிரில் இருப்பவர்களை அச்சுறுத்தும் வண்ணமாக உறுமல்களையும், தோற்றத்தையும் கொண்டதாக இருக்கும். 

எமலோக பயணத்தில் ஏற்பட்ட சோர்வின் காரணமாக பிண்ட சரீரம் பெற்ற ஜீவன் உண்பதற்கு உணவு இன்றியும், குடிப்பதற்கு நீர் இன்றியும் தவித்து கொண்டிருக்கும். அவ்விடத்தில் குடிப்பதற்கான தகுதியான தண்ணீர் என்று எதுவும் கிடையாது. மிகுந்த வெப்பத்துடன் கூடிய கொதிநீரே அந்த பட்டினம் முழுவதும் சூழ்ந்திருக்கும். கார்மேகங்கள் நிறைந்திருந்தாலும் அந்த மேகங்களில் இருந்து பொழிகின்ற நீரானது ரத்தத்தின் நிறமாகவே இருக்கும். பிண்ட சரீரம் பெற்ற ஜீவனானது இந்த நகரத்தை கடந்து செல்லும்பொழுது தாகம் அதிகமாக இருக்கின்றதே குடிப்பதற்கு தண்ணீர் இல்லையா? இது எந்த ஊர்? என்று புலம்பிய வண்ணமாகவே சென்று கொண்டிருப்பார்கள்.

பிண்ட சரீரம் பெற்ற ஜீவனானது எமகிங்கரர்கள் இழுத்து சென்று கொண்டு இருக்கும் வேளையில் பூமியில் பிறந்த தன்னுடைய புத்திரர்களை நினைத்தும், தான் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய துன்பங்களை எண்ணியும் வருந்தி புலம்பி கொண்டு இருப்பார்கள். 'கண் பார்வை கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன்?" என்பதை பிண்ட சரீரம் பெற்ற ஜீவனானது எமகிங்கரர்கள் இழுத்து சென்று கொண்டு இருக்கும் வேளையில் உணரத் துவங்குவார்கள். தூல உடலுடன் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தெய்வ சிந்தனைகள் எதுவும் இல்லாமலும், நற்சிந்தனைகள் இல்லாமலும், உயர்ந்தவர்களை மதித்து நடக்காமல் அவர்களை அவமதித்து நடந்ததையும், ஆன்மிக பெரியோர்கள் மற்றும் சான்றோர்களையும் அவமதித்து பேசியும், கோவில், குளங்கள் என்ற செல்லாமல் கூத்தாடிகள் கூத்தாடி கொண்டிருக்கும் கூட்டங்களுக்கு சென்று காலத்தைக் கழித்தேனே... என வருந்தி புலம்புவார்கள்.

மேலும், அன்னை மற்றும் சகோதரியாக பார்க்க வேண்டிய மங்கையரை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தோமே... குழந்தைகள் என்று பாராமல் அவர்களுக்கு பலவித துன்பங்களை ஏற்படுத்தினோமே, பணம் பணம் என்று அலைந்து மற்றவர்கள் செய்ய இருந்த உதவிகளையும் தடுத்து, அந்த உதவிகளை தனக்கென்று பயன்படுத்திக் கொண்டோமே? பொதுநல பணியில் இருந்து கொண்டு... இல்லை என்று வருபவர்களிடம் பணம் பிடுங்கி அவர்களுக்கு செய்ய வேண்டிய வேலையையும் செய்யாமல் இன்பமாக வாழ்ந்து கொண்டோமே?... திறமைகள் இருந்தும் திறமைசாலிகளை முன்னுக்கு வர அனுமதிக்காமல் அவர்களை இகழ்ந்துரைத்து அவர்களின் திறமைகளை யாவரும் அறியா வண்ணம் அவர்களை அழித்து பணம் பெற்றுக்கொண்டு திறமை இல்லாதவனை திறமைசாலியாக மாற்றினோமே...!! என வருந்தி புலம்புவார்கள்.

யாருக்கும், எப்பொழுதும் அன்னம் இடாமல் நல்ல காரியங்கள் எதையும் செய்யாமலும், நன்முறையில் வாழ வேண்டும் என்று எடுத்துரைத்து வேத நெறிகளை பின்பற்றி நடவாமல் இருந்ததையும் எண்ணி பெருமூச்சு விடுவார்கள். பல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய புனித நூல்களை எடுத்துரைத்த வாதங்களையும், கருத்துக்களையும் பின்பற்றாமலும், விஷ்ணுவையும் வழிபடாமலும் இருந்து விட்டோமே? புராணங்கள் யாவும் கட்டுக்கதைகள் என்று ஏளனம் செய்து புராணங்களில் கூறிய விரதங்களையும் பின்பற்றாமல் இருந்தேனே? அமாவாசை தர்ப்பணத்தையும் ஏளனம் செய்து மறந்தேனே? என வருந்தி புலம்புவார்கள்.

மற்றவர்கள் செய்யும் செயல்களில் இருந்துவந்த நன்மைகளை பாராமல் அவர்கள் செய்த பிழைகளை மட்டுமே கண்டு அதை பெரிதுப்படுத்தி பெருமைப்பட்டுக் கொண்டு இருந்தேன் என்றெல்லாம் எண்ணிய வண்ணமாக 'ஓ" என கத்திய வண்ணம் ஓலமிட்டு அழுது கொண்டிருப்பார்கள். தன்னுடைய ஒவ்வொரு தவறுகளையும், செய்த குற்றத்தையும் எண்ணி வருந்திக் கொண்டிருக்கும் போதெல்லாம் எமகிங்கரர்கள் அவர்கள் செய்த ஒவ்வொரு பிழைகளுக்கும், குற்றங்களுக்கும் உரிய தண்டனைகளை அளிப்பது போல எதையும் 'பேசாமல் வர மாட்டாயா" என்று தங்களுடைய கரங்களில் இருக்கும் ஆயுதங்களையும் கொண்டு பலவிதமான இன்னல்களையும், துன்பத்தையும் கொடுத்து அழைத்து செல்வார்கள்.

பிண்ட சரீரம் பெற்ற ஜீவன் எமலோகத்தை அடைய எத்தனை காலங்கள் ஆகும்? என கருடன் திருமாலிடம் வினாவினார். கருடா...!! எமலோகத்திற்கு செல்லக்கூடிய பயணம் என்பது நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அளவுகளைப் பொறுத்தே அமையக்கூடியதாகும். ஒருவர் நன்மைகளை அதிகமாக செய்திருப்பார் எனில் அவர் விரைவாகவே எமலோகத்தை அடைந்துவிடுவார். நற்பலன்களை விட தீய பலன்களை அதிகமாக செய்திருப்பார் எனில் அவர் எமலோகத்தை அடைய ஒரு வருடங்கள் ஆகும்.

அதாவது 12 மாதங்கள் பயணம் செய்து எமலோகத்தை அடைவார். சரீரம் பெற்று பிறப்பதற்கு அரிய பிறப்பான மானிடப் பிறப்பெடுத்து மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் உடலில் இருந்து உயிர் நீங்கிய பின்பு, அவர்களுக்கு உறவாக இருந்தவர்கள் மாதந்தோறும் வைக்கக்கூடிய பிண்டச்சோறுதான் எமலோக பயணம் மேற்கொள்ளும் பிண்ட சரீரம் பெற்ற ஜீவன்களுக்கு உணவாக இருக்கக்கூடியதாகும்.

அரிதினும் அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பதுபோல, பிறப்பதற்கு அரிதான பிறவி எடுத்து நல்வழிகள் பல இருந்தும், பொருள் தேட நல்வழி இல்லாத வழிமுறைகளின் மூலம் பொருளீட்டினாயே... உதவி என்று கேட்டு வந்தவர்களை அவமானம் செய்து புறக்கணித்தாயே... உன் உடன்பிறந்தவர்களுக்கு தர வேண்டிய சொத்துக்களையும், பொருட்களையும் தராமல் அவர்களை ஏமாற்றி பறித்துக் கொண்டாயே... போற்றி வணங்க வேண்டிய பெண்களை போதைப் பொருட்களாக எண்ணி அவர்களின் கர்ப்பை சூறையாடி அதர்மம் செய்தாயே... என எமதூதர்கள் அவர்களை அதட்டி கொண்டே அழைத்துச் செல்வார்கள்.

மேலும், சொல்வதற்கு முடியாத பல செயல்களை செய்து எமலோகத்திற்கு பயணங்களை மேற்கொள்ளும்போது, அழுது கொண்டு இருந்தால் மட்டும் நீ செய்த செயல்களில் இருந்து தப்பித்து விடுவாயோ? புலம்பாமல் வருவாயாக... என்று அவர்களின் பாவங்களை எடுத்துரைத்தும், கண்டித்தும் எமதூதர்கள் அவர்களை அதட்டியும், பல இன்னல்களை கொடுத்தும், தண்டித்தும் அழைத்துச் செல்வார்கள். எமலோகம் செல்லும் பயணங்கள் யாவும் புலம்பல்களும், துன்பங்களும் நிறைந்த இடங்களாக இருக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பிண்ட சரீரம் பெற்ற ஜீவன்கள் யாவும் எமதூதர்கள் கையில் துன்புறும் நிலையிலேயே இருப்பார்கள்.

பூமியில் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் தனக்கும், தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கும் சுகமளிக்கும் விதத்தில் அவர்களுக்கு வேண்டியவற்றை மட்டும் செய்வதில் கண்ணும், கருத்துமாக இருக்கும் மனிதன் மற்றவர்களுக்கு கெடுதலை செய்வதில் எந்தவிதமான தயக்கமும் கொள்வதில்லை. தர்ம வழிகளில் செல்லாமல், அதர்ம வழியில் தொடர்ந்து சென்று நீதி, நெறிகளுக்கு புறம்பாக செயல்படுவதால் மட்டுமே எமலோக பயணம் என்பது மிகவும் அச்சம் மிகுந்த, அல்லல்கள் நிறைந்திருக்கக்கூடிய ஒரு பயணமாகவே அமைகின்றது. உயிரானது எமதூதர்களுடன் செல்லும்பொழுது பல இன்னல்கள் நிறைந்திருக்கக்கூடிய வழிகளில் செல்லத் துவங்கும். அதாவது, காண்பதற்கே கொடூரமான தோற்றம் கொண்ட கொடிய புலிகள், சிங்கம் நிறைந்த வழியில் செல்வார்கள்.

கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த இடத்திலேயே எமகிங்கரர்கள் பிண்ட சரீரம் பெற்ற ஜீவனை தங்க வைப்பார்கள். மிருகங்களின் விழிகள் சிவப்பு நிறங்களிலும், அதை காணும்போதே நமக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். மிருகங்களின் உறுமல் யாவும் குலைநடுங்க வைக்கும் அளவில் இருந்து கொண்டே இருக்கும். நாம் செய்த செயல்கள் நன்மையாக இருக்கும் பட்சத்தில் அதன் கண்களில் உள்ள பார்வையில் சில மாற்றங்களை நாம் அறிந்து கொள்ள நேரிடும். பூலோகத்தில் ஜீவன் இறந்த இருபத்தெட்டாம் நாளில் அந்த ஜீவன் ஈன்ற புதல்வர்களால் இடப்பட்ட பிண்டத்தை அவ்விடத்தில் இருந்த வண்ணமாகவே உண்ணுவார்கள். பின்பு அங்கிருந்து பயணத்தை மேற்கொள்வார்கள்.

அங்கிருந்து பயணம் செய்து 'யாமியம்" என்ற நகரத்திற்கு ஜீவன் இறந்த முப்பதாவது தினத்தில் அடைவார்கள். அந்த யாமியம் என்ற நகரத்தில் கணக்கிலடங்கா வண்ணம் ஏராளமான பிரேத ஜீவன்கள் கூட்டம் கூட்டமாக தங்கியிருக்கும். இந்த நகரத்தை மூதாதையர் வசிக்கும் நகரம் என்றும் சொல்லலாம். இந்த நகரத்தில் சொற்ப காலங்கள் மட்டுமே அந்த பிண்ட சரீரம் பெற்ற ஜீவன் தங்கியிருக்கும். பிறகு இரண்டாவது மாதத்தில் அதாவது, இரண்டாவது மாத சிரார்த்தத்தின்போது தனக்காக பூமியில் வைக்கப்படுகின்ற இரண்டாவது மாசிக பிண்டத்தை உண்பார்கள். தனக்கான உணவை உண்ட பின்பு ஜீவனானது பயணத்தை எமதூதர்களுடன் மேற்கொள்ள துவங்கும்.

எமதூதர்கள் இரவு பகல் என்று பாராமல் அந்த ஜீவனை பருக்கைக் கற்கள் நிறைந்த, அடர்ந்த முட்கள் நிறைந்திருக்கக்கூடிய காட்டில் இழுத்துச் செல்வார்கள். அந்த காட்டு வழியில் எமகிங்கரர்களால் வழியெங்கும் பலவித கொடுமைகளையும், இன்னல்களையும் அனுபவித்த வண்ணமாக தொடர்ந்து சென்று கொண்டே இருப்பார்கள். பயணங்களை மேற்கொள்ளாமல் ஏதாவது தடைகளை செய்ய முற்பட்டால் எமகிங்கரர்கள் சாட்டையால் அடித்து தடையை ஏற்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய ஜீவனை இழுத்துச் செல்வார்கள்.

பலவிதமான கொடுமைகளையும், இன்னல்களையும் அனுபவித்த பிண்ட சரீரம் பெற்ற ஜீவன் சங்கமன் ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய 'சௌரி" என்னும் நகரத்தை அடையும். அந்த நகரத்தில் இருந்த வண்ணமாக மூன்றாவது மாதம் இடக்கூடிய பிண்டத்தை ஏற்று தனது பயணத்தை மீண்டும் தொடரும். இவ்விதமாக பயணங்களை மேற்கொண்டு நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது மாதத்தில் மாசிக பிண்டத்தை உண்ட வண்ணமாக வைதரணி எனப்படும் துர்நாற்றம் நிறைந்த நதியை அடைவார்கள். இந்த நதியை கடந்து செல்வது என்பது எளிதல்ல.

பூமியில் வாழ்கின்ற காலத்தில் கோ தானம் செய்தவர்களுக்கு மட்டுமே வைதரணி என்னும் நதியை எளிதில் கடக்க முடியும். கோ தானம் செய்தவர்களுக்கு அந்த பசுவின் வாலானது கயிறு போல் வைதரணி நதியில் தெரியும். அதை பற்றிக்கொள்வதன் மூலம் நொடிப்பொழுதில் இன்னல்கள் மிகுந்த துர்நாற்றம் கொண்ட வைதரணி நதியைக் கடந்து அக்கரையில் வீசி எறியப்படுவார்கள். கோ தானம் செய்யாதவர்கள் அந்த நதிக்கரையை கடக்க முடியாமல், வழிகள் ஏதும் தெரியாமல், அதே நதியில் விழ வேண்டியதுதான். வைதரணி நதியானது ரத்தம், உடலில் இருந்து வெளிப்படும் சீழ், காது குரும்பை, சிறுநீர், வியர்வை இவற்றால் உருவாகியதாகும்.

இதில் அட்டைகளும், விஷம் நிறைந்த புழு, பூச்சிகளும், பூரான்கள் என ஏராளமானவைகள் நிறைந்து காணப்படும். பகுத்தறியும் தன்மை கொண்ட இறந்த அனைத்து உயிர்களுமே வைதரணி நதியை கடந்தாக வேண்டியிருக்கும். ஒருவேளை இறந்தவர் கோ தானம் செய்யத் தவறினால் அவருடைய புதல்வர்களாவது இறந்தவர்களின் பொருட்டு கோ தானத்தை செய்ய வேண்டும். இறந்த உயிரானது வைதரணி நதியை கடந்து செல்லக்கூடிய ஒரு உபாயம் கோ தானம் ஆகும். இல்லாவிடில் நெடுங்காலம் அந்த நதிக்கரையில் மூழ்கி தவிப்பதை தவிர வேறு வழிகள் கிடையாது. நதிக்கரையை கடந்து செல்கின்ற ஜீவனானது எமதர்மனின் சகோதரனாகிய விசித்திரன் ஆண்டு கொண்டு இருக்கக்கூடிய நகரத்தை அடைந்து அங்கே தங்குவார்கள்.

சிறிது காலத்திற்கு பின்பு அங்கிருந்து புறப்படும் பிண்ட சரீரம் பெற்ற ஜீவனானது தன்னுடைய ஏழாவது மாசிக பிண்டத்தை எடுத்து உண்ண முடியாமல் துன்பப்படுவார்கள். காரணம் என்னவென்றால், அதன் வழியில் எதிர்ப்படும் சில பிசாசுகள், பைசாசங்கள் மாசிக பிண்டத்தை தட்டிப்பறித்து கொள்வார்கள். வாழ்கின்ற காலத்தில் தான, தர்மங்களை குறைவில்லாமல் மற்றவர்களுக்கு உணவளித்து அன்னதானம் செய்தவர் மட்டுமே இறந்த பின்பு தனக்கான நற்பலன்களை அனுபவிக்க முடியும். அவ்வாறில்லாமல் குற்றங்களும், பாவச்செயல்கள் செய்தவர்களுக்கு அவர்களின் புத்திரர்களால் அளிக்கப்படும் பிண்ட உணவை உண்ண முடியாமல் மிகவும் வருத்தம் அடையக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.

எமலோகத்தை நோக்கி பயணம் செய்கின்ற உயிரானது தான் இறந்த ஏழாவது மாதத்தில் கோ தானம் செய்திருந்தால் பாதி தூரம் அடைந்திருக்கும். எட்டாவது மாதத்தில் பக்குவப்பதம் என்கின்ற நகரத்தை அடைந்ததும் மாசிக பிண்டத்தை அந்த ஜீவன் ஏற்று கொள்கின்றது. பிண்டத்தை ஏற்றுக் கொண்ட பின்பு தனது பயணத்தை மேற்கொள்ளத் துவங்குகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நகரத்தை அடைய துவங்குகின்றது. அதாவது ஒன்பதாவது மாதத்தில் 'துக்கதம்" என்ற நகரத்தை அடைந்து மாசிக பிண்டத்தை ஏற்று கொள்கின்றது.

இதேபோன்று பத்தாவது மாதத்தில் 'நாதாக்கிராந்தம்" என்னும் நகரத்தை அடைந்து பத்தாவது மாதத்திற்கான மாசிக பிண்டத்தை ஏற்கும். இந்த நகரத்தில் கோ தானம் செய்யாமல் இறந்த ஜீவன்களும் அல்லது அவர்களுக்காக கோ தானம் செய்யப்படாத ஜீவன்களும் இவ்விடத்தில் ஆவி வடிவங்களாக அலைந்து கொண்டே இருக்கும். அந்த பகுதியே ஆவிகளின் ஓலத்தால் நிரம்பி காணப்படும். அங்கு செல்கின்ற ஜீவனானது 'அதப்தம்" என்கின்ற நகரத்தில் தங்கியிருக்கும் பொழுது தனக்காக வைக்கப்படுகின்ற பதினொன்றாவது மாத மாசிக பிண்டத்தை ஏற்று கொள்கின்றது.

அங்கிருந்து மீண்டும் தனது பயணத்தை துவங்கும் பிண்ட சரீரம் பெற்ற ஜீவனானது தாங்க முடியாத அளவில் முழுவதுமாக குளிர் நிரம்பி இருக்கக்கூடிய 'சீதாப்ரம்" என்னும் நகரத்தை அடைய துவங்குகின்றது. அந்த நகரத்தில் தங்கியிருக்கும் பொழுது பன்னிரண்டாவது மாதத்திற்கான பிண்டத்தை ஏற்று உண்கின்றது. மனித உடலில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது கம்பளி படுக்கை தானம் செய்யாதவர்களை அந்த குளிரானது மிகவும் வாட்டி புரட்டிப்போடும் அளவில் இருக்கும். அதையும் கடந்து தங்களது பயணத்தை பிண்ட சரீரம் பெற்ற ஜீவன்கள் மேற்கொண்டு எமலோகத்தை சென்று அடைவார்கள்.

எமலோகத்தை அடைந்த உயிரினங்களின் பாவ, புண்ணிய விபரங்களை எடுத்துரைக்கும் விதத்தில் பன்னிரண்டு சிரவணர்கள் எமதர்மனின் அருகில் இருப்பார்கள். மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது சிரவணர்களை பூஜித்து வணங்கி வந்தால் அவர்களுடைய உயிரானது எமலோகத்திற்கு செல்லும் பொழுது அந்த உயிரால் செய்யப்பட்டிருந்த புண்ணியங்கள் மட்டுமே முதலில் எடுத்துரைத்து அவர்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.


சிரவணர்கள் யார்?

சிரவணர்கள் யார்?

அவர்களின் பணி யாது?

அவர்கள் எவ்விதம் ஒரு உயிரின் நன்மை மற்றும் தீமையை அறிந்து கொள்கிறார்கள்?

என்பதைக் குறித்த ஐயம் ஏற்படவே அதை நாராயணிடம் எடுத்துரைத்து விவரிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டார். பறவைகளுக்கெல்லாம் அரசராக இருக்கக்கூடிய கருடனே...!! பல விஷயங்களை அறிந்து கொள்வதில் நீ கொண்டுள்ள ஆர்வம் என்னை வியக்க வைப்பது மட்டுமல்லாமல், எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையாக அமைகின்றது என்று கூறிய வண்ணமாக நாராயணனும் சிரவணர்களை பற்றி எடுத்துரைக்க துவங்கினார்.

பிரளய காலத்தின் போது என்னுள் சகல ஜீவராசிகளும் ஒடுங்கி இருந்த பொழுது நான் யோக நித்திரையில் ஆழ்ந்து இருந்தேன். அப்பொழுது எனது நாபிக்கமலத்தில் இருந்து பிரம்மதேவர் தோன்றினார். அவ்விதமாக தோன்றிய பிரம்மதேவர் நீண்ட காலமாக என்னைக் குறித்து தவம் இருந்தார். பிரம்மதேவர் மேற்கொண்ட தவத்தின் பலனாக வேதங்களையும், உலக உயிரினங்களின் தோற்றம் மற்றும் அந்த உயிரினங்களை படைக்கும் தொழிலை பற்றியும் அவர் நன்கு அறிந்து கொண்டார். ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள் அவரவர்களுக்கு உரிய தொழிலை செய்ய தொடங்கினார்கள்.

எமன் பொறுப்பேற்றல் : 

இறந்த ஆன்மாக்கள் நிறைந்து இருக்கக்கூடிய எமலோகத்தை பல வகையான ஆற்றல் பொருந்திய எமதர்மன் தென்திசையை தனக்கான திசையாக அமைத்து கொண்டு... ஜைமினி நரகத்தை அடைந்து... உடலிலிருந்து உயிர் பிரிந்தவுடன் அந்த உயிரின் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனை அளிக்கும் பணியில் இருந்தார். தனக்கு அளிக்கப்பட்ட இத்தொழிலில் சிறிதும் நடுநிலைமை தவறாமல் இருந்தார். ஆயினும் ஆத்மாக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவைகளின் பாவ, புண்ணியங்களை சரிவர கவனிக்க இயலாமல் சிரமத்திற்கு ஆளாகினார். நாளடைவில் தன்னிச்சையாக எதையும் கண்டறிய முடிவதில்லை என்பதை உணர்ந்து கொண்டார். 

அஷ்டதிக் பாலகர்கள் யார்?

அஷ்டதிக் பாலகர்கள் என்பவர்கள் எட்டு தேவர்கள் ஆவார்கள். அவர்கள் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

இன்னல்கள் தோன்றுதல் : 

தனக்கு அளிக்கப்பட்டுள்ள இப்பணியில் இருக்கும் இன்னல்களை தனக்கு கர்த்தாவாக இருக்கக்கூடிய நான்முகனிடம் சென்று எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணி பிரம்மதேவரை அணுகினார். பிரம்மதேவரை அணுகி ஐயனே...!! ஜீவாத்மாக்கள் செய்த பாவ, புண்ணியங்களை சரிவர அறிந்து அவர்களின் பாவங்களுக்கு ஏற்ப தண்டனைகளை அளிப்பதில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படுகின்றது. அதனால் நல்லவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆகவே இந்த பிரச்சனைகளிலிருந்து நீங்கி ஆத்மாக்கள் செய்த நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ப தண்டனை அளிக்க அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார்.

தீர்வும், சிரவணர்களின் தோற்றமும் :

எமதர்மராஜன் கூறிய கூற்றுகளில் இருந்த உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மதேவரும் ஒரு தர்ப்பை புல்லை எடுத்து எமதர்மராஜனின் முன்னால் போட்டார். அந்த தர்ப்பை புல்லானது பன்னிரண்டு பிரிவுகளாக பிரிந்து அதிலிருந்து பன்னிரண்டு மைந்தர்கள் உருவாகினார்கள். பிரம்மதேவரின் அருளால் அந்த பன்னிரண்டு மைந்தர்களும் தங்களுடைய ஞான திருஷ்டியினால் அனைத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய திறனை பெற்றிருந்தார்கள். அவர்களே பன்னிரண்டு சிரவணர்கள் ஆவார்கள்.

பின்பு பிரம்மதேவர் எமதர்மனிடம் காலனே இந்த 12 சிரவணர்கள் பிறவி எடுத்த உயிர்களின் அனைத்து செயல்களையும் (நல்வினை, தீவினை) தங்களுடைய ஞான பார்வையினால் அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உடையவர்கள். ஆகவே இவர்களை கொண்டு பாவம் இழைத்தவர்களை தண்டித்தும், புண்ணிய ஆத்மாக்களை காத்திடவும் உன்னுடைய ஆளுகையில் துணை புரிவார்கள் என்று கூறினார். எமதர்மனும் பிரம்மதேவரை வணங்கி ஆசி பெற்று 12 சிரவணர்களுடன் தனது நரகத்திற்கு சென்று உயிர்கள் செய்த நல்வினை மற்றும் தீவினைக்கு ஏற்ப சிரவணர்களின் உதவியோடு அவர்களை இன்று வரைக்கும் தண்டித்துக் கொண்டே இருக்கின்றார்.

கருடனே... பூவுலகில் ஒரு உயிரினத்திற்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய ஆயுள் காலம் வரை வாழ்ந்து வருகின்ற ஜீவனானது ஆன்ம வடிவில் எமலோகம் நோக்கி தனது பயணத்தை மேற்கொள்ள தொடங்கியது. ஜீவன் சொல்லாத அளவிற்கு பாவங்களை செய்திருந்தால் ஜீவன் மேற்கொள்ளும் பாதையானது இருள் நிறைந்த சாளரத்தின் வழியாக எமகிங்கரர்களால் இழுத்து செல்லப்படுவார்கள். ஒருவேளை அவர்கள் புண்ணிய ஆன்மாவாக இருந்தால் எமலோகத்திற்கு செல்லும் பாதை அவர்களுக்கு வேறுபட்டு காணப்படும். அதாவது, புண்ணியவான்களுக்கு என்று தனியான விசேஷமான பாதையின் வழியாக எமலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

நற்கருமங்களை செய்தவர்களும், நன்னெறியில் நின்று வாழ்ந்த உத்தமர்களும், சான்றோர்களும், தங்களுக்கு கிடைத்த பொருட்களில் தனக்கு போக மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தவர்களும், பொருட்களை நல்வகையில் பயன்படுத்தியவர்களும், எதிர்கால சந்ததியினருக்காக ஏரி, குளம் வெட்டி பாதுகாத்தவர்களும், சத்திரங்கள், கோவில்களை கட்டி அறச்செயல்கள் புரிந்தவர்களும் புண்ணியவான்கள் ஆவார்கள். அந்த புண்ணியம் செய்த ஆன்மாக்களை மற்றவர்களைப் போல் எமகிங்கரர்கள் ஒருபோதும் இழுத்துச் செல்வது இல்லை.

மாறாக சகல மரியாதைகளுடன் குதிரை மீதும், விமானங்களின் மூலமும் ஏற்றி செல்லப்படுவார்கள். எப்போதும் இறை சிந்தனையுடன் இருந்து மோட்ச கதியை பெற்றவர்கள், தேவ விமானத்தின் மூலமாக தேவர்கள் வாழுகின்ற உலகத்தை அடையக்கூடியவர்கள் ஆவார்கள். மண்ணுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது சிரவணர்களை வணங்கி வழிபட்டு இருந்தால் அவரது உடலிலிருந்து உயிர் நீங்கியதும் எமலோகம் செல்லுகின்ற வரையிலும் சிரவணர்கள் அவர்களுடைய பாவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மாறாக அவர்களால் செய்யப்பட்ட நற்கருமங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். 

சிரவணர்களை வணங்குகின்றவர்களும், அவர்களின் கதைகளை படித்து அறிந்து கொள்பவர்களும் தீய எண்ணங்களில் இருந்து விலகி நல்ல எண்ணங்களுடன் நற்கருமங்களை புரிந்து வாழக்கூடியவர்களாக இருப்பார்கள். சிரவணர்களுக்கு கலச பூஜை செய்து, வேதம் உணர்ந்த பண்டிதர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் தானத்தின் மூலமாக எமலோகத்தில் இருக்கும் போதும், எமலோக பயணங்களின் போதும் ஏற்படும் இன்னல்கள் குறைவாக இருக்கும். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாரிடம் சிரவணர்கள் தோற்றத்தைப் பற்றியும், அவர்களின் பணிகளைப் பற்றியும், எமலோகத்தில் நடப்பது என்ன? என்பதையும் எடுத்துரைத்தார்.

ஸ்ரீமந்நாராயணன் எடுத்துரைத்து கொண்டிருக்க கருடனின் மனதில் ஓர் ஐயம் ஏற்படத் துவங்கியது. அதாவது,

மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது எந்த வகையான தானங்கள் செய்தால் அவர்களுக்கு எமலோக பயணம் துன்பமில்லாத ஒரு பயணமாக அமையும்? என்றும்,

மேலும் எந்தெந்த தானத்திற்கு என்னென்ன பயன்கள்? என்பதைக் குறித்து நாராயணனிடம் கேள்விகளை எழுப்பினார்.

கருடா...!! இதுவரை ஒருவர் செய்து கொண்டிருந்த நல்வினை மற்றும் தீவினைகளின் மூலம் ஏற்படும் பலன்களை பற்றி கூறிக் கொண்டிருந்தேன்.


இனி நாம் செய்த வினைகளின் பயனாக என்னென்ன தானங்களை செய்ய வேண்டும்? என்பதை பற்றி கூற இருக்கிறேன் அதையும் கவனமாக கேட்பாயாக...!! என்றார் திருமால்.


தானத்தின் பலன்கள்

பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட உயிரினங்கள் அனைத்தும் தான் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும், அதற்கு உண்டான பலன்களை மறுமையில் அனுபவிக்கும் யோகம் கொண்டவர்கள் ஆவார்கள். மனிதர்கள் வாழ்கின்ற பொழுது மற்ற உயிரினங்களுக்கு செய்கின்ற உதவியானது திரும்பவும் அவர்களிடத்திலேயே வந்தடையும் சிறப்பை கொண்டதாகும். ஆகவே வாழ்கின்ற பொழுது ஒவ்வொரு மனிதர்களும் தம்மால் இயன்றளவு தானங்களையும், தர்மங்களையும் செய்வது அவசியமானதாகும்.

தானத்தின் அவசியம் என்ன?

பூதவுடலுடன் மண்ணுலகில் வாழ்கின்ற காலங்களில் மனிதர்கள் செய்கின்ற தானத்தின் பலனானது அவர்கள் வாழ்கின்ற காலத்தில் கிடைக்கவில்லை என்றாலும், எமலோக பயணத்தின்போது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். எதையும் எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவியும், தானமும் அவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக எதிர்காலத்திலும், இறந்த பின்பு அவர்கள் ஆன்மா இன்னல்கள் நிரம்பிய எமலோக பயணங்களிலும் உதவியாக அமையும்.

தானத்தினால் ஏற்படும் நன்மையும், தீமையும்... :

தானம் செய்யும் பொழுது தானம் பெறுவோரின் தன்மையையும் அறிந்து செய்வது, தானம் செய்த பின்பு கிடைக்கும் முழு பயனையும் நமக்கு அளிக்கக்கூடியதாக இருக்கும். தகுதி இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் தானமானது நமக்கு பாவமாக அமையக்கூடியதாகும். ஏனெனில் நாம் செய்த தவத்தின் பலனாக அவர் தவறான வழிகளில் செல்ல நேரிட்டால் அந்த செயல்களை செய்ய வைத்த நமக்கும், அந்த தானத்தினால் விளையக்கூடிய நன்மைகள் குறைந்து, தீமைகளை அதிகரிக்கக்கூடியதாகும். ஆகவே எப்போதும் பாத்திரம் அறிந்து தானம் செய்வது சிறப்பு அளிக்கும் என்று கூறினார் திருமால். இவ்வளவு சிறப்புகள் நிறைந்த தானத்தை யார் செய்ய வேண்டும்? என்பதை பற்றியும் எடுத்துரைக்க வேண்டுகிறேன் என்று கருடாழ்வார் நாராயணரிடம் வேண்டினார்.

தானத்தை யார் செய்ய வேண்டும்? 

நாராயணன் கருடாழ்வாரை நோக்கி மண்ணுலகில் வாழ்கின்ற பொழுது ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த அளவு தான, தர்மங்களை செய்ய வேண்டும். அவர் இறந்த பின்பு அவரின் பெயரில் அவர்களின் மகன்கள் மற்றும் உறவினர்கள் தான, தர்மங்களை செய்யலாம். அவர்கள் செய்த இந்த தான, தர்மமானது இறந்தவர்கள் புண்ணிய லோகத்தை அடைவதற்கு உதவியாக அமையக்கூடியதாகும். ஆகவே ஒவ்வொருவரும் அவரவர்களின் புதல்வர்களுக்கு தானத்தின் பலன்களை எடுத்துரைத்து அவர்களையும் தான, தர்மங்கள் செய்ய வைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும் என்று கூறினார் திருமால்.

நாராயணன் உரைத்துக் கொண்டிருந்த பொழுது கருடாழ்வாருக்கு ஒவ்வொரு தானத்திற்கும், ஒவ்வொரு பலன்கள் இருக்குமா? அல்லது அனைத்து தானங்களுக்கும் ஒரே பலன்கள் ஏற்படுமா? என்ற ஐயம் தோன்றத் துவங்கியது. பின்பு நாராயணரை நோக்கி பூவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் சர்வ வல்லமை பொருந்திய கர்த்தாவே...!! ஒவ்வொரு தானத்திற்கும் என்னென்ன பலன்கள்? என்றும் எடுத்துரைக்க வேண்டும் என்று அடியேன் வேண்டி கேட்டுக் கொள்கின்றேன் என்று கூறினார்.

உயர்ந்த தானம் எது?

புன்னகை பூத்த நாராயணன் கருடனின் மனதிலிருந்த ஐயங்களை உணர்ந்த வண்ணமாக ஒவ்வொரு தானத்திற்கும், ஒவ்வொரு பலன்கள் ஏற்படுகின்றன. ஒரே தானம் அனைத்து பலன்களையும் அளிப்பது இல்லை என்று கூறினார். தானங்களில் உயர்ந்த தானம் என்பது அன்னதானம் ஆகும். ஏனெனில் மனிதன் தான் பெரும் பொருட்களில் மனநிறைவுடன் போதுமென்று சொல்லக்கூடியது அன்னம் மட்டுமே ஆகும். மற்ற தானங்களை பெற்றாலும் இன்னும் வேண்டும் என்று அவர்கள் எண்ணம் கொண்டிருப்பார்கள். இதனாலேயே அன்னதானம் என்பது உயர்ந்த தானம் ஆகும்.

தானமும், பலன்களும் :

ஒருவர் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது செய்கின்ற அன்னதானமானது இறந்த பின்பு ஜீவன் மேற்கொள்கின்ற எமலோக பயணத்தில் பசியோ, வருத்தமோ இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை உருவாக்கும். கோவில்களுக்கும், மக்கள் வசிக்கும் வீதிகளில் உள்ள இருளை நீக்கி ஒளிகளை அமைத்து கொடுப்பது தீப தானம் ஆகும். தீப தானம் செய்வதன் மூலம் இறந்த பின்பு ஜீவாத்மா பயணம் மேற்கொள்ளும் வழியானது வெளிச்சம் நிரம்பியதாக காணப்படும். வாழ்கின்ற காலத்தில் தீப தானம் செய்வதற்கு சிறந்த மாதம் என்பது கார்த்திகை மாதம், அதுவும் வளர்பிறை சதுர்த்தசி திதி உகந்த காலம் ஆகும்.

தண்ணீர் குடங்களை தானமாக கொடுப்பதன் மூலம் எமகிங்கரர்களால் ஏற்பட இருக்கின்ற துன்பங்கள் குறையும். மனித உடலிலிருந்து உயிரானது பிரிந்தவுடன் இவ்வுலகத்தை விட்டு உடனே அந்த ஜீவன் நீங்கிவிடாது. அது தான் வாழ்ந்த வீடு, தன்னுடன் வாழ்ந்து வந்த மனைவி, மக்கள் முன்பாக பசி, தாகத்துடன் நின்று கொண்டிருக்கும். எனவே அந்த ஜீவனை திருப்தி அடைய அந்த ஜீவனிற்கு பிண்டங்களை படைத்து உபசரிக்க வேண்டும். இவ்விதமாக 11 நாட்களுக்கு செய்து வர வேண்டும். உடலிலிருந்து ஜீவன் வெளியேறிய 11-வது அல்லது 12-வது நாட்களில் இறந்த ஜீவனிற்கு தான, தர்மங்களை செய்ய வேண்டும்.

தானங்கள் செய்வதன் நோக்கம் என்பது யாதெனில் எமகிங்கரர்களுடன் எமலோக பயணங்களை மேற்கொள்ளும் பொழுது வழியில் எவ்விதமான துன்பங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் என்பதை அனைவரும் உணர்ந்து செய்ய வேண்டும். தானம் பெறுகிறவர்கள் தானம் கொடுப்பவர்களை மனதார வாழ்த்த வேண்டும். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் எடுத்துரைத்துக் கொண்டிருக்க கருடனும், ஐயனே...!! இதற்கு மேற்கொண்டு வேறு ஏதேனும் தானங்கள் இருப்பின் அவற்றையும் விளக்கி கூறுவீர்களாக... என்று வேண்டினார். கருடன் விரும்பி கேட்டு கொண்டதற்கிணங்க ஸ்ரீமந்நாராயண மூர்த்தி 'பத்தானம்" என்பதை பற்றி எடுத்துரைக்க துவங்கினார்.

ஒருவர் பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் செய்யப்படுகின்ற தானம் அதாவது, வேதம் உணர்ந்த அந்தணர்களை அழைத்து அவர்களுக்கு கூடை, தண்டம், ஆடைகள், மோதிரம், கும்பம், ஆசனப் பலகை, அன்னம், பூணூல், அரிசி, தாமிர சொம்பு போன்றவற்றை தானமாக வழங்க வேண்டும். மேலும் 'பத்தானம்" செய்த ஜீவனிடம் எமகிங்கரர்கள் அன்புடன் நடந்து கொள்வார்கள். குடை தானம் செய்வதன் மூலம் எமலோக பயணம் மேற்கொள்ளும் பொழுது வெயிலின் தாக்கமும், கொடுமையும் இல்லாமல் நிழல் நிறைந்த குளுமையான பகுதியின் வழியாக எமகிங்கரர்கள் அழைத்து செல்வார்கள். மாத சிரார்த்தம், வருட சிரார்த்தம் போன்றவை ஜீவன்களுக்கு மட்டுமின்றி எமகிங்கரர்களையும் திருப்தி செய்கின்ற நோக்கத்தை கொண்டதாகும்.


The notes are referenced from 
the app "கருட புராணம்''. 
For more details, visit : 
[https://play.google.com
/store/apps/details?id=nithra.
tamil.garudapuranam]

தொடரும் .....

Post a Comment

0 Comments