பாபாப் மரங்கள்
பாபாப் மரங்கள் 32 ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படுகிறது. இவற்றால் 5000 ஆண்டுகள் வாழமுடியும். இம்மரங்கள் உலகிலேயே மிகப்பெரிய மரமாகும். உயரத்தில் அல்ல சுற்றுவட்டத்தில். 30 அடி உயரம் வரை வளர முடியும் மற்றும் இதன் சுற்றுவட்டம் 50 - 154 அடி வரை வளரும். பாபாப் மரங்கள் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு வீடாகவும் உணவாகவும் இருந்து உயிரினங்களை காக்கிறது. இதனால் ஆப்பிரிக்காவில் வசிக்கும் சவன்னாஹ் குடியிருப்பு மக்கள் தங்களது வீடுகளை பாபாப் மரத்தின் அருகில் அமைக்கின்றனர். இவர்கள் வறட்சி காலங்களில் இந்த மரத்தின் நீரையே பயன்படுத்துகின்றனர். இது சுமார் 120,000 லீற்றர் நீரை தேக்கி வைக்க கூடியவை. இது ஒரு வகை இலையுதிர் மரமாகும்.
பாபாப் மரங்கள் ஆப்பிரிக்காவில் இயற்கையாகவே அதிகம் காணப்படுகிறது. இவற்றின் கிளைகள் வேர்கள் போல் இருப்பதனால் தலைகீழான மரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றது. 1000 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளதாகவும் இதில் மரங்களின் பழமையை பரிசோதிக்கும் குரோதிரின்ஸ் எனும் திரவப்பதன் இல்லை என்பதனால் அதனை ஆதாரபூர்வமான நிருபிக்கவும் முடியவில்லை.
இலங்கையில் மன்னாரில் உள்ள பாபாப் மரம் உள்ளூர் மக்களால் "அலி கஹா" மற்றும் "யானை மரம்" என்றும் அழைக்க படுகிறது ஏனென்றால் அதன் வெளிப்பட்டை பார்ப்பதற்கு யானை போன்ற வடிவத்தில் இருக்கும். இந்த மரம் அரேபியா வர்த்தகர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது. 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் பாபாப் மரம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. நாட்டில் மீதம் சுமார் 40 மரங்களே இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது மற்றும் இவை அறிய மரங்கள் ஆனதால் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.
பாபாப் மரங்களால் பல நன்மைகள் உள்ளன. இதன் பழங்கள் மற்றும் இலைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன மற்றும் இதன் கூழில் விற்றமீன் C, பொட்டாசியம், மெக்னீசியம், பொன் போன்ற தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
இதன் இலைகளில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் எளிதில் செரிமானமும் ஆகிவிடும். பாபாப் தாவரத்தின் விதைகளில் நார்ச்சத்த்து, கொழுப்பு மற்றும் கல்சியம் நிறைந்துள்ளன.
இவற்றின் இலைகள், பட்டை, மலர் மற்றும் விதைகள் காசநோய், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இரத்தசோகை மற்றும் பல்வலிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் பாபாப் மரம் பொதுவாக காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. மற்றும் முடி பராமரிப்பிற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எண்ணெயில் லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகும். இதனால் இவற்றால் வீக்கத்தையும், தோல் முறிவுகளையும் சரிசெய்ய முடியும்.
நன்றி
0 Comments