இலங்கையில்
போர்த்துக்கேயரின் ஆட்சி
நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே வர்த்தகத் தொடர்பிற் கான மூன்று முக்கிய பாதைகள் இருந்தன.
கொன்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்து பாரசீகம், மத்திய ஆசியா வழியாக சீனா வரையிலான பட்டுப்பாதை.
கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து மத்திய தரைக் கடல் வழியாக எகிப்து, செங்கடல் ஊடாக இந்து சமுத்திரத்திற்கு வந்த பாதை.
கொன்ஸ்தாந்திநோபிளிலிருந்து பக்தாத், பாரசீகக்குடா வழியாக இந்தியாவின் மேற்குக் கரைக்கு வந்த பாதை.
இந்த பாதைகளினூடாக வர்த்தகத்தொடர்பு இடம் பெற்றபோது, தரைமார்க்கமாகப் பொருள்களை எடுத்துச்செல்லும் பொருட்டு மிருகங்கள் பயன் படுத்தப்பட்டன; கடல் வழியாகப் பொருள் களை எடுத்துச் செல்லும்போது சுப்பல்கள் பயன் படுத்தப்பட்டன. முஸ்லிம்கள் ஆசியாவில் வாச னைப் பொருள்களைச் சேகரித்து ஐரோப்பாவுக் குக் கொண்டுசென்று விற்றதன் மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர். மேற்கூறப்பட்ட பாதைகள் மூன்றும் கொன்ஸ்தாந்திநோபிளுடன் தொடர்புடையதாக இருந்தன. ஐரோப்பிய கிறிஸ் தவர்களின் கையிலிருந்த இந்நகர் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த துருக்கியரால் 1453 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டமையானது ஆசிய, ஐரோப்பிய மரபு ரீதியான வர்த்தகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கொன்ஸ்தாந்திநோபிள் நகர் (தற்கால இஸ்தான்புல்) இஸ்லாமியரின் கையில் வந்தமை கிறிஸ்தவர்களுக்குப் பெரும் இழப்பாகியது. இந்நகரைக் கைப்பற்றிய முஸ்லிம்கள் ஆசியாவின் வாசனைப் பொருள்களின் விலையை உயர்த்தியதோடு, பொருள்கள் தட்டுப் பாட்டை ஏற்படுத்தியமை, உரிய வேளையில் பொருள்களை வழங்காமை என்பனவற்றால் ஐரோப்பியருக்கு இன்னல்கள் விளைவித்தனர். ஐரோப்பியர் நீண்ட காலமாக ஆசிய வாசனைப் பொருள்களுக்குப் பழக்கப்பட்டிருந்ததால் கறுவா, மிளகு உட்பட வாசனைப் பொருள்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல கேள்வி இருந்தது. வழமையான வர்த்தகப் பாதை இஸ்லாமியரின் வசம் வந்ததால் ஆசியாவுக்கு வருவதற்குப் புதிய வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. புதிய வழியைக் கண்டுபிடிப்பதில் போர்த்துகேயர் முதலிடம் வகித்தனர்.
போர்த்துக்கேயர், தமது தாய் நாடான போர்த்துக்கலிலிருந்து இலங்கைக்கு வந்தனர். போர்த்துக்கல் தென்மேற்கு ஐரோப்பாவில் ஐபீரியன் தீபகற்பத்தில் அமைந்துள்ள நாடாகும். அது அத்திலாந்திக் சமுத்திரத்தை நோக்கி அமைந்துள்ளது. இதனால் கடல் வழியாகவே அவர்கள் வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டனர். எனவே அவர்கள் கடல் செயற்பாடுகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தனர். 15 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கலின் அரசனாக இருந்த நான்காம் ஹென்றி அல்லது கடலோடி ஹென்றி என்பவன் நாடுகாண் பயணத்தில் அதிக ஆர்வம் செலுத்தினான். போர்த்துக்கலில் கப்பல் கட்டும் தொழில் தொடர்பாகப் பாடசாலை ஒன்றை நடாத்தியதுடன் அங்கு தேசப்படம், நட்சத் திரம் தொடர்பான பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதனால் ஆசியாவுக்குச் செல்வதற்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிடப் போர்த்துக்கல் முன்னணியில் இருந்தது. போர்த்துக்கேயனான வஸ்கொடகாமா ஆபிரிக்காவைச் சுற்றி 1498 ஆம் ஆண்டு இந்தியாவின் கள்ளிக்கோட்டையை அடைந்ததும் ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் செயற்படத் தொடங்கியது. போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வருகைதந்த பின்னர் ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்சியர் போன்ற ஏனைய ஐரோப்பியர்களும் ஆசியாவுக்கு வந்து பல்வேறு இடங்களில் தமது ஆதிக்கத்தைப் பரப்பினர்.
இவ்வாறு 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதற்கொண்டு 450 ஆண்டுகள் வரை ஆசியாவில் ஐரோப்பியரின் ஆதிக்கம் நிலைபெற்றது.
ஐரோப்பியர் பல நோக்கங்களுடனேயே ஆசியாவுக்கு வந்தனர். பொருளாதார ரீதியாக இலாபம் பெறல், கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புதல், உலக ரீதியாகப் புகழ் பெறல் என்பன அவற்றில் முக்கியமானவையாகும். 16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பாவில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கு அமைய ஐரோப்பியரின் ஆசிய வருகையின் நோக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாயின.
போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்ததன் அடிப்படை நோக்கம் பொருளாதார ரீதியாக இலாபம் பெறுதல், கத்தோலிக்க சமயத்தைப் பரப்புதல் என்பனவாகும். போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வரும்போது ஆசியாவில் வர்த்தக ஏகபோக உரிமை முஸ்லிம்களின் கையில் இருந்ததால் அவர்களைத் தோற்கடித்து வர்த்தக ஏகபோக உரிமையைத் தமதாக்கிக் கொள்வது போர்த்துக்கேயரின் குறிக்கோளாக இருந்தது. இதன் மூலம் நல்வ இலாபத்தைப் பெற என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். கிறிஸ்தவர்களையும் வாசனைப் பொருள்களையும் தேடி இங்கு வந்துள்ளோம் எனக் கள்ளிக்கோட்டையை வந்தடைந்ததும் வாஸ்கொடகாமா கூறியதிலிருந்து இது வாகிறது. வர்த்தகக் அமைக்கவும் ஐந்து களஞ்சியம் குருமார் தெளி ஒன்றை சமயம் போதிக்கவும் கள்ளிக்கோட்டை மன்னனிடமிருந்து அனுமதி பெறும்படி வாஸ்கொடகாமாவிற்குப் இந்தியாவுக்கு வந்த இரண்டாவது கடற்படைக் குழுவினருக்குப் போர்த்துக்கலிலிருந்து அறிவுரை வழங்கப்பட்டது. தமது அதிகாரம் பரவும் பிரதே சங்களில் தமது சமயத்தைப் பரப்புதல் ஆரம்பத்தில் இருந்தே போர்த்துக்கேயரின் நோக்கமாக இருந் தமை இதிலிருந்து தெளிவாகிறது.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும் போது இலங்கையின் நிலைமை அரசியல்
இலங்கை இந்து சமுத்திரத்தின் கடல் வழியில் முக்கிய மத்திய நிலையமாக அமைந்துள்ளதால் ஐரோப்பியரின் ஆசிய செயற்பாடுகளின் வர்த்தக, யுத்த நடவடிக்கைகளில் இலங்கை முக்கிய இடம் பெற்றிருந்தது. ஆரம்பத்தில் போர்த்துக்கேயராவ் செய்லோன் என அறிமுகமான இலங்கையில் உயர் ரசுக் கறுவா உற்பத்திசெய்யப்படுவதாக அவர்கள் அறிந்திருந்தனர். இதனால் இந்தியாவுக்கு வந்து சிறிது காலத்தில் போர்த்துக்கேயர் இலங்கை மீது கவனம் செலுத்தினர். 1505 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போர்த்துக்கேய மன்னனால் கிழக்கு நாடுகளின் இராசப்பிரதிநிதியாகப் பிரான்சிஸ்கோ டி அல்மேடா என்பவன் நியமிக்கப்பட்டான். போர்த்துக்கேய மன்னனால் இராசப் பிரதிநிதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளில் இலங்கையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும். பிரான்ஸிஸ் அல்மேடாவின் மகனான லோரேன்சோ டி அல்மேடா பயணித்த கப்பல் புயல் காற்றினால் தாக்குண்டு எதிர்பாராதவிதமாக இலங்கையை அடைந்தது. இதன் மூலம் போர்த்துக் கேய மன்னனின் குறிக்கோள் நிறைவேறியது.
1505 ஆம் ஆண்டு லோரேன்சோ டி அல்மேடா உள்ளிட்ட போர்த்துக்கேயக் குழுவினர் இலங்கைக்கு வரும்போது இலங்கையில் அரசியல் நிலைநாட்டிட ஒற்றுமை காணப்படாமையானது வெளிநாட்டினர் இந்நாட்டில் தம் ஆதிக்கத்தை வாய்ப்பாக அமைந்தது. 6 ஆம் பராக்கிரமபாகு மன்னன் கோட்டை இராச்சியத்தைத் தோற்று வித்து, நாட்டை ஒன்றிணைத்து அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தி இருந்தபோதிலும், அவனது மரணத்தின் பின்னர் அந்த நிலை மாற்றமடைந்திருந்தது. இதனால் போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது கோட்டை இராச்சியம் தவிர்ந்தச்சியங்கள் இருந்தன. இலங்கைக்கு இரண்டு கண்டி, யாழ்ப்பாணம் என்ற வந்த போர்த்துக்கேயர் முதலில் இராச்சியத்துடன் தொடர்பை மேலும் கோட்டை ஏற்படுத்தினர். கோட்டை அரசனைச் சந்திக்கப் போர்த்துக்கேயக் குழுவினர் சுற்றி வளைத்துக் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொழும்புக்கும் கோட்டைப் பிரதேசத்திற்கும் இடையே நீண்ட தூரம் இருப்பதாகக் காட்டுவதற்காகவே இந்த உபாயம் மேற்கொள்ளப்பட்டதால் "பறங்கியர் கோட் டைக்குப் போனது போல்" என்ற பிரயோகம் ஏற்பட லாயிற்று.
போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது பரந்த இராச்சியமாக இருந்த கோட்டை, 1521 ஆம் ஆண்டு நிகழ்ந்த விஜயபாகு கொலையினால் மூன்று பிரிவுகளாகப் பிளவுண்டமை, போர்த்துக்கேயர் தமது ஆதிக்கத்தை இந்நாட்டில் நிலைநாட்ட மேலும் இலகுவாக அமைந்தது. கோட்டை ஆட்சியாளனாக இருந்த 8ஆம் வீரபராக்கிரமபாகு மன்னனின் பின்னர் அவனது மகனான 6 ஆம் விஜயபாகு அரசனானான். விஜயபாகுவின் முதலாவது திருமணத்தின் மூலம் பிறந்த புவனேகபாகு. மாயாதுன்னை, றைகம்பண்டார என்ற மூன்று புதல்வர்களுக்கும் எதிர்காலத்தில் அரசுரிமையை வழங்காது, தேவராஜ என்ற வேறொரு இளவரசனுக்கு அந்த உரிமையை காரணமாக மோதல் வழங்கும் முயற்சியின் ஏற்பட்டது. தமக்கு அரசுரிமை கிடைக்காது போவதை அறிந்த புவனேகபாகு, மாயாதுன்னை, றைகம் பண்டார ஆகிய மூவரும், அக்காலத்தில் கண்டி இராச்சிய மன்னனாக இருந்த ஜயவீர பண்டாரவின் உதவி பெற்றுக் கோட்டைக்கு வந்து அரசைப் பெற பாகு முயன்றபோது, சலமான் என்பவனால் விஜயபாகு கொலை செய்யப்பட்டான். 6 ஆம் விஜயபாகு மன்னனிடமிருந்து 1521 ஆம் ஆண்டு அதிகாரத்தைப் பெறும் பொருட்டு நிகழ்ந்த இந்தச் சம்பவம் (விஜயபாகு கொள்ளை) விஜயபாகு கொலை எனப்படும். இச்சம்பவத்தின் பின்னர் கோட்டை இராச்சியம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இளவரசர்கள் மூவருக்கிடையே பகிரப்பட்டன. இதற்கமைய கோட்டையின் ஆட்சியாளனாக 7 ஆம் புவனேகபாகுவும் சீதாவாக்கையின் ஆட்சி யாளனாக மாயாதுன்னையும் றைகம பகுதியின் ஆட்சியாளனாக றைகம் பண்டாரவும் விளங்கினர். இவ்வாறு கோட்டை இராச்சியம் மூன்று பிரிவு களாகப் பிளவுற்றமையானது அதிகாரத்தைக் கைப்பற்ற ஆவலுடன் இருந்த போர்த்துக்கேயருக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
இலங்கையின் கரையோரப் பகுதியில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம்.
கோட்டை இராச்சியம் மூன்றாகப் பிளவுபட்டு சிறிது காலத்தில் ஏழாம் புவனேகபாகுவிற்கும் மாயாதுன்னைக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கோட்டை இராச்சியத்தின் எதிர்கால ஆட்சியுரிமை பற்றிய சிக்கலும், மாயாதுன்னை கோட்டை இராச்சியத்திற்குரிய சில பிரதேசங் களைக் கைப்பற்ற முயன்றமையும் இக்கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்களாகும். மன்னன் புவனேகபாகுவுக்கு சமுத்ராதேவி என்ற மகள் இருந்தபோதிலும் கோட்டை இராச்சியத்தின் எதிர்கால அரச உரிமையை வழங்க மகன் ஒருவன் இருக்கவில்லை. அக்காலத்தில் சிறந்த வீரனெனப் பிரபலம் அடைந்திருந்த விதியபண்டாரன் சமுத்ராதேவியைத் திருமணம் செய்திருந்ததோடு, அவர்களுக்குத் தர்மபாலன், விஜயபாலன் என்ற புதல்வர்கள் இருவர் இருந்தனர். இவர்களில் தர்மபாலனுக்குக் கோட்டை இராச்சியத்தை ஒப்படைக்கப் புவனேகபாகு விரும்பினான். கோட்டை இராச்சியம் தொடர்பான எதிர்பார்ப்புடன் இருந்த மாயாதுன்னை இதனை விரும்பவில்லை. விஜயபாகு கொலையில் முக்கிய பங்கினை வகித்த மாயாதுன்னை சிறந்த வீரனாக இருந்ததுடன், கண்டி இராச்சிய மன்னனான ஜயவீர பண்டாரவின் உதவியையும் பெறக்கூடியவனாக இருந்தான். மாயாதுன்னையால் கோட்டை இராச்சியத்திற்கு இன்னல்கள் ஏற்படலாம் எனப் பயந்த புவனேக தனது பாதுகாப்பின் பொருட்டுப் போர்த்துக்கேயரை அழைத்தான். கோட்டை இராச்சியத்துக்கும் சீதாவாக்கை இராச்சியத்துக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக கோட்டை இராச்சியத்தின் பாதுகாவலராகத் தலைநகரினுள் நுழைந்த போர்த்துக்கேயர், அதன் சகல செயற்பாடுகளிலும் தலையிட்டுத் தமது அதிகாரத்தைப் பரப்ப முயன்றனர்.
போர்த்துக்கேயருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வர்த்தகப் போட்டி நிலவியதால் இலங்கையின் கரை யோரப் பிரதேசங்களில் போர்த்துக்கேயர் கோட்டை களை அமைப்பதை முஸ்லிம்கள் விரும்பவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய போர்த்துக் கேயர், கோட்டை இராச்சியத்தில் இருந்த முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி புவனேகபாகு மன்னனைத் தூண்டினர். இதனால் கரையோரப் பகுதியில் இருந்த முஸ்லிம்களின் உதவி சீதாவாக்கை மன்னனுக்குக் கிடைத் தது. இலங்கையில் இருந்த முஸ்லிம்களின் வேண்டுகோளின் பேரில் இந்தியாவில் கள்ளிக் கோட்டையின் அரசனாக இருந்த சமோரின் போர்த்துக்கேயரைத் தாக்குவதற்கு சீதாவாக்கை மன்னனான மாயாதுன்னைக்குக் கடற்படை உதவி வழங்க முன்வந்தான். சமோரினினது உதவியுடன் மாயாதுன்னை போர்த்துக்கேயரைப் பலமுறை தாக்கியபோதிலும் போர்த்துக்கேயரிடமிருந்த கடற்படைப் பலத்தினதும் ஆயுதப் பலத்தினதும் முன்னால் இது வெற்றி பெறவில்லை.
புவனேகபாகு உயிரோடு இருந்த காலத்தில் சீதாவாக்கை இராசதானிக்கும் கோட்டை இராச தானிக்கும் இடையே சில மோதல்கள் ஏற் பட்டன. இந்த மோதல்களின்போது போர்த்துக் கேயர் கோட்டை இராச்சியத்தின் சார்பாகப் போரிட்டதுடன் போர்ச்செலவை மன்னன் கொடுக்கவேண்டியிருந்தது. புவனேசுபாகு போர்த்துக்கேயரின் உதவியைப் பெற்றானேயன்றி அவர்களின் கீழ் இருக்கவில்லை. மன்னனைக் கத்தோலிக்க மதத்திற்கு மாற்ற போர்த்துக்கேயர் முயன்றபோதிலும் அவன் மதம் மாறவில்லை. இதனால் காலஞ் செல்வ போர்த்துக்கேயருக்கும் புவனேகபாகுவுக்கும் இடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படலாயின. சமயக் காரணங்கள் தவிர போர்த்துக்கேயர் தமது பொருள்களைக் கோட்டை இராச்சிய மக்க ளுக்கு அதிக விலைக்கு விற்றமையும் மக்களின் பொருள்களைக் குறைந்த விலைக்கு வாங்கியமையும் கருத்து வேறுபாடுகளுக்குக் காரணங்களாக அமைந்தன. இந்த முரண்பாடுகள் புவனேகபாகு மன்னன் சுடப்பட்டு மரணமடைந்ததில் முடிவடைந்தது. குதோ என்ற போர்த்துக்கேய எழுத்தாளனின் கருத்துப்படி 1550 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆந் திகதி அரசன் கொல்லப்பட்டான்.
புவனேகபாகு மன்னன் உயிரோடு இருக்கும் போது தனது பேரனான தர்மபாலனின் உருவச் சிலையொன்றைப் போர்த்துக்கலுக்கு அனுப்பி, அதற்கு முடிசூட்டுவித்ததன் மூலம் தர்ம பாலனுக்குப் போர்த்துக்கேயரின் பாதுகாப்புக் கிடைக்கும்படி செய்திருந்தான். இதனால் புவனேகபாகுவின் மரணத்தின் பின்னர் போர்த்துக் கேயரின் பாதுகாப்பின் மத்தியில் தர்மபாலன் கோட்டை இராச்சியத்தின் அரசனானான். தர்மபாலன் போர்த்துக்கேயரின் கைப்பொம்மை யாக விளங்கியமை, கத்தோலிக்க சமயத்தைத் தழுவியமை, தமது அரசில் கத்தோலிக்க சமயம் பரவிட அனுமதித்தமை கோட்டை இராச்சிய மக்களுக்குப் போர்த்துக்கேயரால் விளைந்த அநீதிகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை போன்ற காரணங்களால் தர்மபாலனுக்கு மக் களின் ஆதரவை இழக்கவேண்டிய நிலை ஏற்பட் டது. இதனால் புத்த பெருமானின் பற்சின்னத்தை பாதுகாப்பிற்காக சீதாவாக்கைக்குக் கொண்டு செல்லவேண்டிய நிலை உருவானது. 1551 - 1597 வரை தர்மபால மன்னன் பெயரளவில் அரசனாக இருந்தபோதிலும் கோட்டை இராச்சியத்தின் உண்மையான ஆட்சியாளர்களாகப் போர்த்துக் கேயரே இருந்தனர். தர்மபால மன்னன் தனக்குப் பின் கோட்டை இராச்சியம் போர்த்துக்கேயருக்கு சொந்தம் என மரணசாசனம் எழுதி வைத்ததால் அம்மன்னனின் மரணத்தின் பின்னர் கோட்டை இராச்சியம் சட்டரீதியான அதிகாரத்தின் மூலம் போர்த்துக்கேயருக்குச் சொந்தமானது.
புவனேகபாகுவின் மகளான சமுத்ராதேவியைத் திருமணம் செய்திருந்த விதியபண்டாரன் சிறந்த போர் வீரனாவான். தனது மகன் தர்மபாலனின் ஆட்சியின் ஆரம்பத்திலேயே போர்த்துக்கேயர் கோட்டையின் அரசமாளிகையைச் யாடியமை, சூறை பொதுமக்களுக்குப் பல்வேறு இன்னல்கள் விளைவித்தமை போன்ற காரணங்களால் விதியபண்டாரன் போர்த்துக் கேயருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தான், இதனால் போர்த்துக்கேயர் அவனைக் கைது செய்து கொழும்புக் கோட்டையினுள் சிறை வைத்தனர். எனினும் விதிய பண்டாரனின் மனைவி அவன் சிறை வைக்கப்பட்டிருந்த இடத் திற்கு இரகசியமாக சுரங்கப்பாதை அமைத்து அவனை விடுவித்தாள். பஸ்துன் கோறளையில் பெலந்த பிரதேசத்திற்குத் தப்பியோடிய விதியபண்டாரன். அங்கு கோட்டையொன்றை அமைத்துப் போர்த்துக்கேயருக்கு எதிராகப் போர் தொடுத்தான். போர்த்துக்கேயர் மீது வெறுப்புக் கொண்டிருந்த கோட்டை ளின் மக்க உதவியும் விதிய பண்டாரனுக்குக் கிடைத்தது. விதியபண்டாரனின் செயலால் போர்த்துக்கேயருக்குப் பலவித தட்டங்கள் ஏற்பட்டன. அவ்வாறே விதியபண்டாரனின் செயல் சீதாவாக்கை மன்னனுக்கும் பெரும் சிக் கலாக அமைந்தது. இதனால் மாயாதுன்னையும் போர்த்துக்கேயரும் இணைந்து பெலந்த கோட் டையை ஆக்கிரமித்து விதியபண்டாரனைத் தோற்கடித்தனர். கண்டி இராச்சியத்திற்குத் தப்பிச் சென்ற விதியபண்டாரன் பின்னர் யாழ்ப்பாணத் தில் இருக்கும்போது ஏற்பட்ட மோதலொன்றில் உயிரிழந்தான்.
சீதாவாக்கை இராசதானியில் போர்த்துக்கேயர்
சீதாவாக்கை மன்னனான மாயாதுன்னை, அந்த இராச்சியம் ஆரம்பமான காலந்தொடங்கி போர்த்துக்கேயருக்கு எதிரான கொள்கையையே பின்பற்றினான். கோட்டை இராச்சியத்தில் போர்த்துக்கேயரின் ஆதிக்கம் வலுவடைந்து வரும்போதே மாயாதுன்னை கோட்டை இராச்சிய மன்னர்களுக்கும் போர்த்துக்கேயருக்கும் எதி ராகப் போரிடத் தொடங்கினான். தர்மபாலன் கோட்டையின் அரசனானதும் மாயாதுன்னையின் தாக்குதல் அதிகமானது. 1555 ஆம் ஆண்டளவில் மாயாதுன்னையின் மகனும் சிறந்த வீரனுமான டிக்கிரி பண்டார சீதாவாக்கைப் படையின் தலைமைத்துவப் பதவியை வகித்ததால் அப்படை மேலும் வலிமை பெற்றது. 1557 ஆம் ஆண்டு மாயாதுன்னை தனது பலத்தைப் பயன்படுத்திக் கோட்டை நகரைத் தாக்கினான். எனினும் போர்த்துக்கேயரின் பீரங்கித் தாக்குதலால் சீதாவாக்கைப் படையினரால் நகரின் உள்ளே செல்ல முடியவில்லை. எனினும் மாயாதுன்னை கோட்டை நகருக்கு வெளியேயுள்ள பிரதேசங் களை இடையிடையே தாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டான்.
கோட்டை நகரைத் தாக்கும் முயற்சி தோல்வி யடைந்த பின்னர் சிறிதுகாலம் பாரிய தாக் குதல்களை மேற்கொள்வதைத் தவிர்த்துக் கொண்ட சீதாவாக்கை ஆட்சியாளர்கள், கோட்டை யையும் கொழும்பையும் ஒரே வேளையில் தாக்க முயன்றனர். இதில் சீதாவக்கை இராஜசிங்கனால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட சீதாவாக்கைப் படைக்கும் போர்த்துக்கேயப் படைக்கும் இடையே முல்லேரியா என்ற இடத்தில் கடுஞ்சமர் நடைபெற்றது. ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற இப்போரில் போர்த்துக்கேயர் படுதோல்வி அடைந்தனர். இதில் இறந்த போர்த்துக்கேயரது எண்ணிக்கை 1600 எனக் கூறப்படுகிறது. இது ஆசிய நாடொன்றில் போர்த்துக்கேயர் அடைந்த மிக மோசமான தோல்வியாகும்.
கோட்டை நகர் இடையிடையே சீதாவாக்கையின் தாக்குதலுக்கு உள்ளானதால் 1565ஆம் ஆண்டு தர்மபாலன் கோட்டை நகரை விட்டுக் கொழும்புக் கோட்டையில் குடியேறினான். மாயாதுன்னை 1581 ஆம் ஆண்டு இறந்ததும், டிகிரி பண்டார இராஜசிங்கன் என்ற பெயரில் சீதாவாக்கையின் அரசனானான். அரசனாகி சிறிது காலத்தில் அவன், அக்காலத்தில் கண்டி இராச்சிய அரசனாக இருந்த கரலியத்த பண்டாரவைத் துரத்திவிட்டு அந்த இராச்சியத்தையும் சீதாவாக்கையுடன் இணைத்துக் கொண்டான். இதன்படி 1582 ஆம் ஆண்டாகும். போது இந்நாட்டில் போர்த்துக்கேயரின் அதி காரத்தைக் கொழும்பு கோட்டையைச் சுற்றி யுள்ள பிதேசங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்த சீதாவாக்கை மன்னன் இராஜசிங்கனால் முடியுமாக இருந்தது. இதனால் கோட்டை இராச்சியத்தின் பெரும்பகுதியும் றைகமையும் கண்டி இராச்சி யமும் சீதாவாக்கையின் கீழ் வந்தன.
இராஜசிங்கன் இரண்டு சந்தர்ப்பங்களில் கொழும்புக் கோட்டையைத் தாக்கிப் போர்த்து கேயரை இந்நாட்டிலிருந்து துரத்த முயன்றான். எனினும் போர்த்துக்கேயரின் ஆயுத பலமும் போர்த்துகேயரின் கீழைத்தேய தலைமை நிலையமாக விளங்கிய கோவாவிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த உதவியும் இரண்டு சந்தர்ப்பங்களிலும் இராஜசிங்கனின் முயற்சி வெற்றியளிக்காமைக்கான காரணங்களாயின. இராஜசிங்கன் 1587 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாகக் கோட்டையைத் தாக்கும்போது வாவியின் நீரை வாய்க்கால் மூலம் கடலுக்கு அனுப்பி, கோட்டையுள் நுழைய முயன்ற போதிலும் அந்த முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது. சீதாவாக்கை இராசதானியிடம் தேவையான கடற்படை வலிமை இன்மை இந்தத் தோல்விக்கு மற்றுமொரு காரணமாகும். போர்த்துக்கேயருக்கு எதிராக அடிக்கடி போரில் ஈடுப்பட்ட இராஜசிங்கன் சுண்டி இராசதானியின் மன்னனான விமலதர்மசூரியனுடன் செய்த போரில் தோல்வியுற்றுத் திரும்புகையில் பெத்தங்கொடயில் மூங்கில் சிராய் குத்தியதால் ஏற்பட்ட காயம் காரணமாக மரணமானான். அத்துடன் சீதாவாக்கை இராசதானி வீழ்ச்சியடைந்தது. இவ்வாறு போர்த்துக்கேயருக்கு எதிராக அடிக் கடி போரில் ஈடுபட்டமை, இராஜசிங்க மன்னன் தனது இறுதிக்காலத்தில் மேற்கொண்ட பௌத்த எதிர்ப்புக் கொள்கை, கண்டி இராச்சியத்தை கைப்பற்ற இராஜசிங்கனுக்கு உதவிய வீர சுந்தர பண்டாரவைக் கொன்றமையால் கண்டி இராச்சிய மக்களின் ஆதரவு குறைந்தமை, வீர சுந்தர பண்டாரவின் மகன் கோணப்பு பண்டாரன் கண்டி இராச்சியத்தின் அரசனாதல், இராஜசிங்கனுக்குப் பின்னர் ஆட்சிக்கு உரிமை கோர சரியான உரிமையாளன் இன்மை என்பன சீதாவாக்கை இராச்சியத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களாகும். சீதாவாக்கை மன்னர்கள் முன்னெடுத்துச் சென்ற போர்த்துக்கேயருக்கு எதிரான நாட்டுப் பற்றான போர்களினால் இந்நாட்டில் போர்த்துக்கேயரின் ஆட்சி பரவுதல் பெரும்பாலும் மட்டுப்படுத்தப்பட்டது.
சீதாவாக்கையின் வீழ்ச்சிக் காலத்தில் பலம் பெற்ற போர்த்துக்கேயர், அந்த இராச்சியம் வீழ்ச்சியுற்றதும் கோட்டை, றைகம ஆகிய பிரதே சங்களுக்குச் சொந்தமான பிரதேசங்களையும் சீதாவாக்கையின் கீழிருந்த பிரதேசங்களில் சிலவற் றையும் தமது ஆட்சிக்கு உட்படுத்திக் கரையோரப் பிரதேசத்தின் பெரும் பகுதியில் தமது ஆட்சியை நிலைநாட்டினர்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் போர்த்துக்கேயர்
இராசரட்டை நாகரிகத்தின் வீழ்ச்சியின் பின்னர் தோற்றம்பெற்ற யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்தோர் ஆரியச் சக்கரவர்த்திகள் ஆவர். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது அப்பரம் பரையைச் சேர்ந்த பரராசசேகரம் யாழ்ப்பாண அரச னாக இருந்தான். கறுவா, மிளகு போன்ற வர்த்தகப் பயிர்கள் யாழ்ப்பாணப் பகுதியில் கிடைக்காததால் இலங்கைக்கு வந்த ஆரம்ப காலத்தில் போர்த் துக்கேயர் யாழ்ப்பாணத்தின்மீது அதிக கவனம் செலுத்தவில்லை. 1519 ஆம் ஆண்டு சங்கிலி யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளனாகி 1561 ஆம் ஆண்டு வரை அப்பிரதேசத்தை ஆட்சி செய்தான். சங்கிலி மன்னனின் ஆட்சிக் காலத்தில் போர்த்துக் கேயரின் வர்த்தகக் கப்பல்களுக்குத் தடை ஏற்பட்ட மையாலும் யாழ்ப்பாண இராச்சியத்திற்கு உரிய பிரதேசங்களில் சுத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதற்கு எதிராகச் சங்கிலி அரசன் செயற்பட்டமையாலும் இரு தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. 1543 ஆம் ஆண்டு போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்தனர். எனினும் சங்கிலி அரசன் போர்த்துக்கேயருடன் போர் செய்யாது கப்பம் செலுத்துவதற்கு உடன்பட்டதால் மோதல் தவிர்க்கப்பட்டது.
1561 ஆம் ஆண்டு புவிராஜ பண்டாரம் என்பவன் சங்கிலி அரசனை ஆட்சியிலிருந்து நீக்கிவிட்டுத் தான் அதிகாரத்தைக் கைப்பற்றினான். இதன் பின்னர் யாழ்ப்பாண சிம்மாசனம் தொடர்பாக உரிமையுடையவர்களிடையே மோதல்கள் ஆரம்ப மாகின. இவ்வேளையில் சிலர் போர்த்துக்கேயரின் உதவியை நாடியதால் போர்த்துக்கேயர் தாம் விரும்பியவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வாறு ஆட்சியில் அமர்த்தப்பட்டவர்களும் சந்தர்ப்பம் வாய்க்கும்போது போர்த்துக்கேயருக்கு எதிராகச் செயற்பட்டமையால் 1591ஆம் ஆண்டு போர்த்துக் கேயர் மீண்டும் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்து எதிர்மன்னசிங்கம் என்பவனைத் தமக்குச் சார்பான ஆட்சியாளனாக சிங்காசனத்தில் அமர்த்தினர். அவன் போர்த்துக்கேயரின் சொற்படி செயற்பட்ட போதிலும், பல சந்தர்ப்பங்களில் கண்டி இராச்சிய அரசனான செனரத்திற்கு யாழ்ப்பாணக் கடல் எல்லையூடாக தென்னிந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புவைத்துக்கொள்ள இடமளித்தான். 1617ஆம் ஆண்டு அவன் இறந்ததும் மீண்டும் அங்கு ஆட்சி தொடர்பான மோதல்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக சங்கிலி அரசனின் பரம்பரையில் ஒருவன் யாழ்ப்பாண ஆட்சியைக் கைப்பற்றினான். யாழ்ப்பாண அரசர்கள் சிலர் சில சந்தர்ப்பங்களில் கண்டி அரசர்களுக்கு வர்த்தகம் தொடர்பாக துணை புரிந்தமையையும் தென்னிந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்தமையையும் போர்த்துக்கேயர் விரும்ப வில்லை. இதனால் 1619 ஆம் ஆண்டு பிலிப் த ஒலிவேரா தலைமையில் போர்த்துக்கேயரால் அனுப்பப்பட்ட படையினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். போர்த்துக்கேயருக்கு எதிராகச் சில கிளர்ச்சிகள் எழுந்தபோதிலும் அவற்றை அடக்கி 1621 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை அவர்கள் கைப்பற்றினர். அரச உரிமை தொடர்பான மோதல்களால் மக்கள் பிளவுபட்டிருந்தமையும் சிறந் ததும் நிரந்தரமானதுமான படைப்பலம், யாழ்ப்பாண ஆட்சியாளர்களிடம் இல்லாதிருந்தமையும் கண்டி இராச்சியத்தைப்போன்று இயற்கை அரண்கள் இல்லாதிருந்தமையும் யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சிக்குக் காரணங்களாயின.
கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் அதிகாரத்தை நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சி
சீதாவாக்கை இராசதானியின் வீழ்ச்சியுடன் கரையோரப் பிரதேசங்களின் பெரும்பகுதியில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலை நாட்டியதால் நாட்டின் சுயாதீனத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு கண்டி இராச்சியத்திற்கு ஏற்பட்டது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்து 1815 ஆம் ஆண்டு வரை தமது பொறுப்பை நிறைவேற்றக்கூடுமானதாக கண்டி இராச்சியத்தினால் இருந்தது. கண்டி இராச்சியத்தில் போர்த்துக்கேயர் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்றமையையும் அதற்கு எதிராகக் கண்டி இராச்சியத்தின் செயற்பாடுகளையும் இப்போது பார்ப்போம்.
போர்த்துக்கேயர் கோட்டை இராச்சியத்தின் அரசியலில் தலையிடும் காலகட்டத்திலேயே கண்டி இராச்சியத்தில் தமது அதிகாரத்தை நிலை நாட்டும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். 1 ஆம் விமலதர்மசூரியன் கண்டி இராச்சியத்தின் அரசனாவதற்கு முன்னர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றப் போர்த்துக்கேயர் மேற்கொண்ட முயற்சிகள்
தந்துறைப் போர்
போர்த்துக்கேயரின் கீழ் சிறிது காலம் இருந்து, அவர்களது யுத்த முறைகளையும் ஏணைய உபாயங்களையும் நன்கு அறிந்து கொண்ட கோணப்பு பண்டாரன் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டி இராச்சியத்தின் அரசனாகியதைப் போர்த்துக்கேயர் விரும்பவில்லை. இதனால் போர்த்துக்கேயரின் பாதுகாவலை நாடியிருந்த கரவியத்த பண்டாரவின் மகளான குசுமாசன தேவியைக் (தோனா கதரீனா) கண்டி இராச்சிய சிம்மாசனத்தில் அமர்த்தித் தாம் விரும்பியபடி ஆட்சிசெய்ய போர்த்துக்கேயர் விரும்பினர். 1594 ஆம் ஆண்டு போர்த்துக்கேயத் தளபதியான (கப்பித்தான் ஜெனரல்) பெரோ லோபேஸ்த சூசா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பில் அவர்களால் குசுமாசன தேவியைக் கண்டி இராச்சிய அரசியாக நியமிக்கக்கூடியதாக இருந்தது. எனினும் வெளிநாட்டவரால் நியமிக்கப் பட்ட அரசியை ஏற்றுக்கொள்ள மறுத்த கண்டி இராச்சிய மக்கள், 1 ஆம் விமலதர்மசூரியனுக்கு ஆதரவு வழங்கினர். இதனால் பெரோ லோபேஸ் த சூசா தனது படையுடன் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. 1594 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தந்துறையில் போர்த்துக்கேயப் படைக்கும், கண்டி இராச்சியப் படைக்கும் இடையில் பெரும் போர் ஏற்பட்டது. இந்தப் போரில் போர்த்துக் கேயப் படை பெரோ லோபேஸ் படுதோல்வியடைந்ததுடன் த சூசாவும் கொல்லப் பட்டான். குசுமாசனதேவி கண்டி மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டதுடன், விமலதர்ம சூரியன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். இந்த விவாகத்தினால் கண்டி இராச்சியத்தில் புதிய அரச வம்சம் தோன்றியது. கண்டி இராச்சி யத்தில் தமக்குச் சாதகமான ஆட்சியை நிறுவ வேண்டுமென்ற போர்த்துக்கேயரது முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. விமலதர்ம சூரியனின் போர்த்தந்திரங்களும் கண்டி இராச்சிய மக்களின் ஆதரவு மன்னனுக்குக் கிடைத்தமையும், போர்த்துக்கேயரின் உதவிக்குக் கரையோரப் பகுதியிலிருந்து சென்ற சுதேசப் படை கண்டி இராச்சியப் படையுடன் சேர்ந்து கொண்டமையும் விமலதர்ம சூரியனின் வெற்றிக் குக் காரணங்களாயின.
பலனைப் போர்
பெரோ லோபேஸ் த சூசா கொல்லப்பட்ட பின்னர் போர்த்துக்கேயரால் தொன் ஜெரோனி மோ த அசவேது என்பவன் கப்பித்தான் ஜெனரவாக நியமிக்கப்பட்டான். தந்துறையில் போர்த்துக் கேயர் தோல்வியடைந்ததும் எதிரில்லே ரால என்பவனின் தலைமையின்கீழ் அவர்களுக்கு எதிராக கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டது. கிளர்ச்சி இந்தக்கிளர்ச்சிக்கு விமலதர்ம சூரியனின் உதவி கிடைத்தது. போர்த்துகேயர் கிளர்ச்சித் தலைவனைக் கொன்று, கிராமங்களுக் குத் தீ மூட்டிக் கடுமையான அடக்குமுறை மூலம் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்தனர். மேலும் அசவேது கண்டி இராச்சியத்துடன் போர் செய்யத் தயாரானான், 1802 ஆம் ஆண்டு கோவாவிலிருந்து மேலதிகப் படையை வர வழைத்த அவன், ஆயிரக் கணக்கானோருடன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தான். எனினும் போர்த்துக்கேயரால் மாத்திரமே பலன கணவாய் வரை செல்லக்கூடியதாக இருந்தது. விமலதர்மசூரியனின் தந்திரத்தால் போர்த்துக் கேயப் படையைச் சூழ்ந்து கொண்ட கண்டி இராச்சியப்படை போர்த்துக்கேயப் படையைக் கடுமையாகத் தாக்கியது. போர்த்துக்கேயருடன் சென்ற கரையோர சுதேசப் படையினரும் விமல தர்ம சூரியனுடைய படையுடன் இணைந்தனர்.
இப்போரில் போர்த்துக்கேயரில் பலர் கொல்லப் பட்டதுடன், அவர்களின் ஆயுதங்களும் கண்டி இராச்சியப்படையால் இந்தத் தோல்வியின் கைப்பற்றப்பட்டன. காரணமாக அசவேது மல்வானை வழியாகக் கொழும்பை அடைந்தான். அசவேதுவின் ஆக்கிரமிப்புத் தோல்வியில் முடிவடைந்த பின்னர் பாரிய படையுடன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமிப்பதற்குப் பதிலாகப் போர்த்துக்கேயர் இடையிடையே கண்டி இராச் சியத்தின் கிராமங்களைத் தாக்கி நட்டம் ஏற்படுத்தி வந்தனர். இதனால் விமலதர்மசூரியனுக்குப் பின்னர் கண்டி இராச்சிய மன்னனாக வந்த செனரத் 1617 ஆம் ஆண்டு போர்த்துக்கேயருடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டான். எனினும் அது சரியாகச் செயற்படவில்லை.
ரந்தெனிவெலப் போர்
இலங்கையில் போர்த்துக்கேயரின் கப்பித்தான் ஜெனரலாகக் கடமையாற்றிய கொன்ஸ்தாந்தினு த சா என்பவன் ஊவாப் பிரதேசத்தின் ஊடாகக் கண்டியை ஆக்கிரமித்ததால் ரந்தெனிவெலப் போர் ஆரம்பமானது. 1630 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 600 போர்த்துக்கேய வீரர்களுடனும் 4500 சுதேசப்படை வீரர்களுடனும் கொன்ஸ்தாந்தினு த சாவின் தலைமையில் இந்தப் படையெடுப்பு நடைபெற்றது. போர்த்துக்கேயர் பதுளை நகரைக் கைப்பற்றி அதனை நாசமாக்கினர். கண்டி மன்னன் செனரத் தனது படையுடன் பதுளையை அடைந்து போர்த்துக்கேயருக்கு எதிராகத் தாக்குதலை மேற்கொண்டான். செனரத்தின் மகனான ஆஸ்தான இளவரசன் (பின்னர் 2ஆம் இராஜசிங்கன்) கண்டிப் படைக்குத் தலைமை வகித்தான். கண்டி இராச்சியப் படை போர்த்துக்கேயப்படையைச்சுற்றிவளைத்தபோது போர்த்துக்கேயரின் உதவிக்குச் சென்ற கரையோர முதலிமார் கண்டி மன்னனுடன் சேர்ந்து கொண்டனர். இதனால் பலம் வாய்ந்த கண்டி இராச்சியப் படையால் தாக்கப்பட்டு நிர்க்கதி அடைந்த போர்த்துக்கேயர் வெள்ளவாயாவிற்கு அருகில் ரந்தெனிவெலவுக்குப் பின்வாங்கினர். அங்கு கண்டி இராச்சியப்படையினரின் தாக் குதல்களுக்கு உள்ளாகிய போர்த்துக்கேயரில் 350 பேர்மட்டில் உயிரிழந்தனர். சிலர்கண்டி மக்களால் கைது செய்யப்பட்டனர். கப்பித்தான் ஜெனரல் கொன்ஸ்தாந்தினுவும் இங்கு கொல்லப்பட்டான்.
இந்தப்படையெடுப்பு திடீரெனப் போர்த்துக் கேயரால் மேற்கொள்ளப்பட்டதல்ல; இது இரண்டு வருடங்களாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பாரும். எனினும் கண்டிப் படையின் தந்திரமான செயற்பாடுகளால் இவை அனைத்தும் தோல்வியில் முடிவுற்றன.
கன்னொறுவப் போர்
1638 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய போர்த்துக்கேய சுப்பித்தான் ஜெனரலான தியோ கோ மெல்லோ என்பவனால் மீண்டும் கண்டிமீது படையெடுக்கப்பட்டது. போர்த்துக்கேயரைக் கொண்ட படையையும் ஆயிரம் மேலும் ஆயிரக்கணக்கானோரைக் கொண்ட சுதேசப் படையையும் கொண்டு முன்னோக்கிச் சென்ற போர்த்துக்கேயர் சிரமமின்றி கண்டி நகரில் நுழைந்தனர். மன்னன் செனரத்திற்குப் பின் ஆட்சிக்கு வந்த 2ஆம் இராஜசிங்கன் தந்திரமாக இவ்வேளையில் நகரிலிருந்து வெளியேறினான். தக்க தருணத்தில் மன்னனின் தலைமையிலான கண்டி இராச்சியப்படை போர்த்துக்கேயரைச் சுற்றி வளைத்தது. கன்னொருவையில் இரு தரப்பினருக்குமிடையே கடுஞ்சமர் நடைபெற்றது. கண்டியரின் வழமையான தாக்குதலால் இம்முறையும் போர்த்துக்கேயப்படை படு தோல்வி அடைந்தது. படையெடுப்புக்குத் தலைமை தாங்கிய தியோகோ த மெல்லோவும் இப்போரில் உயிரிழந்தான். இங்கு எஞ்சியிருந்த போர்த்துக்கேயர் பற்றி பலவிதமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் கூறப்பட்டுள்ளபடி எஞ்சியிருந்தோரின் தொகை நூறுக்கும் குறைவாகும். போர்த்துக்கேயர் கண்டி. இராச்சியத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட இறுதிப் படையெடுப்பு இதுவாகும்.
போர்த்துக்கேயரால் கண்டி இராச்சியத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்துப்படையெடுப் புகளும் தோல்வியடைந்தமைக்கும் கண்டி இராச் சியம் தொடர்ந்தும் பாதுகாப்புடன் இருந்த மைக்கும் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பின்வருவன முக்கிய இடம்பெறுகின்றன.
கண்டி மக்கள் எப்போதும் அரசனுக்கு ஆதரவு வழங்கியமை.
போர்த்துக்கேயருக்காகப் போராடச் சென்ற கரையோர சுதேசப்போர் வீரர்கள் கண்டி இராச் சியத்தை அண்மித்ததும் கண்டி அரசனுடன் இணைந்துகொண்டமை.
கண்டி மக்களின் போர்த்தந்திரமும் அரசர்க ளின் உபாயங்களும்
கண்டி இராச்சியத்தின் இயற்கையமைப்பு
நன்றி
0 Comments