புராணம் என்றால் என்ன?
புராணம் என்பது நம் முன்னோர்களால் எக்காலத்தில் வாழும் மானிட பிறவிகளுக்காக அளிக்கப்பட்ட ஒரு வரப்பிரசாதம் ஆகும். புராணம் என்றால் தொன்மை என்று பொருள். பல பெருமைகளை கொண்ட தொன்மையான நம் நாட்டில் வாழ்ந்த முன்னோர்களால் எதிர்காலத்தில் நிலவும் சங்கடங்களை
களையவும், அறவழியில் சென்று தீர்வு காணும் விதமாக இயற்றப்பட்ட கதைகளின் சங்கமம் ஆகும். விந்தைகளுடன் கூடிய பல நன்மை பயக்கும் கதைகளையும், ஞான மார்க்கத்தின் அவசியத்தையும் பல காலம் தவறாமல் யுகங்களாக அனைவரிடத்திலும் இனிமையாகவும் எளிதில் புரியும் வண்ணம் இறைவனை கொண்டு படைக்கப்பட்ட அரும் பெரும் ஞான பொக்கிஷம் தான் இந்த புராணம்.
சிருஷ்டி கர்த்தா என்ற ஒன்று மட்டும் நினைவில் இருந்தது. மீண்டும்
தன் பணியான சிருஷ்டித்தல் தொழிலை செய்ய தொடங்கினார். தாம் எண்ணிய பணிக்கு உதவும் வகையில் யாரேனும் உள்ளாரா எனப்பார்த்தார்.
அப்போது ஆனந்த நித்திரையில் இருந்த நாராயணனை கண்டார். தான் எண்ணிய பணியை நிறைவேற்ற தனக்கு உதவியாக இருக்கும் வகையில் இன்னொருவரை கண்ட பிரம்மா அவர் அருகில் சென்றார். நித்திரையில் இருந்த நாராயணனை எழுப்பி சர்வ உலகங்களும் அழிந்துள்ள இந்த தருவாயில் நித்திரையில் ஆழ்ந்து இருக்கும் நீர் யார்?
இதுவே சரியென முடிவெடுத்த இருவரும் அன்னப்பறவை அவதாரம் எடுத்து லிங்கத்தின் முடியை காண பிரம்மதேவர் தனது பயணத்தை தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணன் வெண்பன்றியின் அவதாரம் எடுத்து லிங்கத்தின் அடியை காண தனது பயணத்தை தொடங்கினார். ஸ்ரீமந் நாராயணன் மற்றும் பிரம்ம தேவர் இருவரும் பல யுகங்களாக தனது பயணத்தை மேற்கொண்ட போதும் இருவராலும் அடியையோ, முடியையோ காண இயலவில்லை. ஸ்ரீமந் நாராயணன் இந்த லிங்க வடிவம் முடிவற்றது என்பதை உணர்ந்து தனது பழைய இடத்தை நோக்கி பயணத்தை தொடங்கினார்.
இதை கேட்ட பிரம்ம தேவர் மலைப்புற்று இனியும் பல கோடி ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டுமா என யோசித்தார். சிறிது நேர சிந்தனைக்கு பின் தாழம் பூவிடம் ஒரு உபயம் வேண்டும் என பிரம்ம தேவர் வேண்டினார். பிரம்ம
தேவரின் வேண்டுகோளை ஏற்று, வேண்டிய உதவியை அளிப்பதாக தாழம் பூ வாக்குறுதி கொடுத்தது. பிரம்ம தேவரும், தாழம் பூவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்கு செல்ல பயணம் மேற்கொண்டனர். ஆனால் இவர்கள்
இருவரும், சர்வமும் உணர்ந்த பரம்பொருள் இவை அனைத்தையும் கண்டுக்கொண்டு உள்ளார் என்பதை மறந்தனர்.
இறுதியாக ஸ்ரீமந் நாராயணன் இருக்கும் இடத்தை அடைந்த பிரம்ம தேவர் நாராயணனிடம் தான் லிங்கத்தின் முடியை கண்டதாகவும் அதற்கு, இந்த தாழம் பூவே சாட்சி என கூறினார். தாழம் பூவும் பிரம்மாவிடம் கொடுத்த வாக்குறுதிக்கு இணங்கி ஆமாம் பிரம்ம தேவர் லிங்கத்தின் முடியை கண்டதாக பொய் சாட்சி கூறியது. தாழம் பூ உரைப்பது பொய் என அசரீரி சினத்துடன் உரைத்தது. லிங்கத்தில் இருந்து வந்த அசரீரியை கேட்ட பிரம்ம தேவர் அதிர்ந்து போனார். அப்போது
ஸ்ரீமந் நாராயணன் என்ன நிகழ்ந்தது என அறியாமல் நின்றார்.பின்பு பிரபஞ்சத்தின் ஜோதி லிங்கமானது சிவபெருமானாக காட்சியளித்தார். ஆனால், சிவபெருமானை காண இயலாத வகையில் ஒளியானது பிரகாசித்தது. மீண்டும் இருவரும் சிவபெருமானை வணங்க ஒளியின் பிரகாசம் குறைந்து அவர்களுக்கு பரிபூரணமாக சிவபெருமான் காட்சியளித்தார். காட்சியளித்த சிவபெருமான் பிரம்மாவை நோக்கி நீர் செய்தது தவறு என உரைத்தார். செய்த தவறுக்காக நீர் படைக்கும் சிருஷ்டியில் உனக்கு கோவில் இல்லாமல் போகவும், பொய் சாட்சி சொன்ன தாழம் பூ பூஜைக்கு பயன்படாமல் போகட்டும் என சபித்து விட்டார்.
தான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவர் சிவனிடம் மன்னிக்கும்படி வேண்டி அருளினார். சினம் கொண்ட சிவபெருமான் செய்த தவறை உணர்ந்த பிரம்ம தேவரை மன்னித்தருளினார். பின் இருவரும் சிவனை வணங்கி நின்றனர். அப்போது சிவபெருமான் திருமாலை காக்கும் தெய்வமாகவும், பிரம்மாவை படைக்கும் தெய்வமாகவும் இருக்க அருள் புரிந்தார். மேலும் திருமால் சிவபெருமானிடம் பிரபஞ்ச உபதேசம் செய்தருள வேண்டும் என வணங்கி நின்றார். சிவபெருமானும் அவரின் வேண்டுதலை ஏற்று உபதேசம் செய்தார். சிவபெருமான் அருளிய உபதேசங்களில் இருந்து திருமால் மந்திரத்தையும், அதை கடைபிடிக்கும் முறைகள் யாவையும் உணர்ந்தார். பின் திருமால் தான் கற்ற உபதேசத்தை பிரம்ம தேவருக்கு சிவன் அருளிய முறையில் உபதேசம் செய்தார். திருமால் உபதேசிக்கும் பொழுது சிவபெருமான் அங்கு காட்சியளித்தார். பிரம்ம தேவர் சிவபெருமானிடம் சிருஷ்டியில் வாழும் உயிர்கள் அறவழியில் நடந்து மோட்சம் அடையும் வழியையும் போதிக்கும்மாறு வேண்டியருளினார்.
சிவபெருமானும் அவரின் வேண்டுகோளை ஏற்று அருள் பாவித்தார். அடியும், முடியும் இன்றி முடிவற்றதாக உள்ள லிங்க வடிவத்தை வழிப்பட்டால் வாழும் வாழ்க்கையில் எது உண்மையான அன்பு மற்றும் எதில் எல்லா வகையான நிம்மதிகள் உள்ளன என்பதை அறிந்து பிறவிகளின் உன்னத நிலையான பிறவா நிலையை அடைவார்கள் என்று ஞான வழியை போதித்தார். படைப்புக் கடவுளான பிரம்மா உயிர்களை படைக்க தொடங்கினார். அந்த உயிர்கள் உயிர் வாழ தேவையான உயிர் வாயுவை அளிக்குமாறு திருமாலிடம் பிரம்மா வேண்டினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் உயிர வாயுவை அளித்தார். உயிர்கள் வாழ்வதற்கானஇடத்தையும், பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி அண்டம் மற்றும் நிலப்பரப்புகளையும் படைத்தார்.
0 Comments