துஷ்யந்தன் சகுந்தலை கதை
மகாபாரதத்தில் ஆதிபர்வதத்தில் வரும் ஒரு மூலக்கதைதான் இந்த துஷ்யந்தன் சகுந்தலை கதை. இந்த கதையை மகாகவி காளிதாசன் ஒரு நாடகமாக வடிவமைத்தார். அந்த நாடகத்தின் பெயர் அபிஞான சகுந்தலா. நாம் ஒரு காரியத்தை கவனமாகவும் பொறுமையாகவும் செய்ய வேண்டும் என்பதையே இந்த கதை எமக்கு கத்துத்தருகிறது. இப்போது கதைக்குள் செல்லலாம்.
ரொம்ப காலத்துக்கு முன்னால் விசுவாமித்திரர் எனும் முனிவர் காட்டில் இருந்து கடுமையான தவம் செய்த செய்து கொண்டிருந்தார். அந்த தவம் இன்னொரு சொர்க்கத்தையே உருவாக்கும் அளவுக்கு மிகவும் வலிமையான ஒரு தவமாக இருந்தது.இதை பார்த்த இந்திரனுக்கு பயம் வந்தது. அதனால் இந்திரன் இந்த விஸ்வாமித்திரரின் தவத்தைக் கலைப்பதற்காக ஒரு ஏற்பாடு செய்தார். அதன்படி தன்னிடமிருக்கும் தேவ கன்னிகளில் ஒருத்தியை கொண்டு விஸ்வாமித்திர முனிவரின் தவத்தை கலைக்க முடிவு செய்து மேனகை எனும் கன்னியை சொர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பி வைத்தார். மேனகையும் விஸ்வாமித்திர முனிவரின் தவத்தை கலைக்க நிறைய முயற்சிகள் செய்தாள். இந்த மேனகை செய்த முயற்சியின் பலனாக விசுவாமித்திர முனிவரின் கடுமையான தவம் கலைந்தது.
முனிவர் மேனகை மீது காதல் கொண்டார். இவர்களது காதல் வாழ்க்கையின் பலனாக ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை எடுத்துக்கொண்டு மேனகை விசுவாமித்திர முனிவருக்கு முன்னால் போன பிறகுதான் முனிவரின் தவம் கலைந்தது. ஆனால் முனிவரோ எனக்கு இந்தக் குழந்தையும் வேண்டாம், நீயும் வேண்டாம். என்று கூறி அந்த இடத்திலிருந்து சென்றார். மேனகைக்கும் பூமிக்கு வந்த வேலை முடிந்துவிட்டதால் அந்த அழகான பெண் குழந்தையை காட்டிலேயே தனியாக விட்டுவிட்டு சொர்க்கலோகத்துக்கு போய்விட்டாள்.
மேனகையின் குழந்தை காட்டில் தனியாக இருந்த போது அந்த குழந்தைக்கு பாதுகாவலாக பறவைகள் கூட்டம் சுற்றி இருந்தது. அப்போது அந்த காட்டுக்கு வந்த கண்வ முனிவருடைய காதுக்கு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. அந்தக் குரல் வந்த திசை நோக்கி போய் பார்க்கும் போது ஒரு அழகான பெண் குழந்தை பறவைகளால் சூழப்பட்டு கிடக்குது. அந்த குழந்தையை பார்த்த கண்வ முனிவரும் அந்த குழந்தையை அங்கேயே விட்டு போக மனசு வராத காரணத்தால் இந்த குழந்தையை தாமே வளர்ப்பதாக முடிவு செய்து அவருடைய ஆசிரமத்திற்கு அந்த குழந்தையை எடுத்துச்சென்றார். தான் பார்க்கும் பொழுது அந்த குழந்தையை சுற்றி பறவைகள் நின்று இருந்ததால் அந்த குழந்தைக்கு சகுந்தலை என்று கண்வ முனிவர் பெயர் சூட்டினார். எனவே விசுவாமித்திர முனிவருக்கும் மேனகைக்கும் பிறந்து கண்வ முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்து வந்த பெண்தான் இந்த சகுந்தலை.
இப்போது இந்த சகுந்தலை எப்படி துஷ்யந்தனை பார்த்தாள் , அவர்கள் இருவருக்கும் எப்படி காதல் வந்தது , அந்த காதலால் சகுந்தலை என்னன்ன துன்பங்கள் அடைந்தாள் என்பனவற்றை கூறுவதுதான் இந்த துஷ்யந்தன் சகுந்தலை கதை. இப்போது கதைக்குள் செல்லலாம்.
அந்தக் காலத்தில் அஸ்தினாபுரத்தை துஷ்யந்தன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.அவன் வேட்டையாட காட்டுக்கு சென்ற போது கண்வ முனிவருடைய ஆசிரமத்திற்கும் சென்றான். அப்போது ஒரு பெண்ணுடைய சிரிப்பு சத்தம் அவருக்கு கேட்டது. உடனேயே ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து இருந்து அந்த பெண்ணை பார்த்தபடி நின்றான். அப்போது இரண்டு பெண்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அந்த மரக்கிளை ஆட அந்த இரண்டு பெண்களுடைய கவனமும் மன்னனின் பக்கம் வந்தது. உடனே அவர் மரத்துக்குப் பின்னால் இருந்து அவர்களுக்கு முன்னால் வந்து நின்று நீங்கள் இரண்டு பேரும் யாரு என்று கேட்டார்.
அந்த பெண்கள் உடனேயே அவரிடம் நீங்க வந்திருக்கிறது எங்களுடைய ஆசிரமத்திற்குத்தான் என்று கூறியதோடு மன்னனிடம் நீங்க யாரு என்று கேக்க அதற்கு நான் துஷ்யந்தன் இந்த நாட்டை ஆட்சி செய்யும் மன்னன் என்று சொன்னார். பயந்து போன இருவரும் அமைதியாக இருந்தார்கள். மன்னன் உங்களில் யார் கண்வ முனிவரின் மகள் என்று கேட்க சகுந்தலையின் தோழி இதோ எனக்கு பக்கத்தில் நிற்கிறாள் இவனதான் கண்வ முனிவரின் மகள் சகுந்தலை என்று அவளுடைய முழு கதையையும் சொன்னாள். இதை கேட்ட மன்னனுக்கு சகுந்தலை மேல் ஒரு அன்பு உருவானது.
அப்போது அந்த ஆசிரமத்தை சேர்ந்த ஒருவன் சகுந்தலையின் மானை தூக்கிக்கொண்டு வேகமாக ஓடி வந்து துஷ்யந்தன் இருப்பதை கவனிக்காமல் இந்த மானை துஷ்யந்தன் மன்னன் வேட்டையாடுவதற்கு முயற்சி செய்திருக்கிறார் அதனால் இந்த மானுடைய காலில் இருந்து ரத்தம் வருகிறது என்று கூறினார். அப்போது சகுந்தலை மானை தூக்கி அதனுடைய கால தடவை பார்த்த அதே நேரத்தில் துஷ்யந்தன் அதன் காயத்திற்கு மருந்து தடவினான். இந்த இடத்தில் தான் முதல் முறையாக சகுந்தலை துஷ்யந்தனிடம் கதைக்க ஆரம்பிக்கிறாள். நீங்கதான் இந்த மான் வேட்டையாட முற்பட்டீர்கள் ஆனால் இப்போது அதற்கு மருந்தும் போடுகின்கீர்களே இதற்கு என்ன அர்த்தம் என்று சகுந்தலை கேற்க அதற்கு துஷ்யந்தன் என்ன செய்வது எனக்கு அப்போது தெரியாதே இது சகுந்தலை மான் என்று தெரிந்திருந்தால் நிச்சயமாக அந்த மானை வேட்டையாடி இருக்க மாட்டேன். என்று கூறினார். அதற்கு சகுந்தலை சிரித்துக் கொண்டே அப்படியா இது மட்டும் முன்னாடியே தெரிந்திருந்தால் இந்த காட்டில் இருக்கும் அனைத்து மான்களையும் நானே வளர்த்திருப்பேனே என்றாள். அந்த நொடிப்பொழுதில் இருவரும் கண்கள் மூலமாக காதலை பரிமாறிக் கொள்ள அந்த நாள் அப்படியே முடிவடைந்தது.
கண்வ முனிவரை பார்ப்பதற்காக வந்த துஷ்யந்தனுக்கு சகுந்தலையை பார்த்ததும் ஆசிரமத்தை விட்டு போக மனம் வரவில்லை இதனால் கண்வ முனிவர் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட துஷ்யந்தன் நான் கண்வ முனிவர் வரும் வரைக்கும் இங்கேயே தங்கியிருந்து அவரை பார்த்து விட்டு செல்கிறேன் என்று சகுந்தலையிடமும் அங்குள்ளவர்களிடமும் கூற அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.இதனால் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் துஷ்யந்தன் சகுந்தலையிடம் நான் உன்னை காந்தர்வ திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்றான்.அதற்கு சகுந்தலை நான் தாயும் தந்தையும் விட்டுட்டு போன நிலையில் இந்த கண்வ முனிவருடைய கருணையினால் வளரந்திருக்கிறேன். அப்படி இருக்கும் போது தான் தவறை செய்ய விரும்பவில்லை. அதாவது எனக்கு ஏற்பட்ட நிலைமை என்னுடைய குழந்தைக்கும் ஏற்பட விடமாட்டேன். அதற்கு துஷ்யந்தன் என்னை நீ முழுமையாக நம்பலாம் என்று கூறி அவளைத் திருமணம் செய்து கொள்கிறான். காந்தர்வ திருமணம் என்பது மனிதர்கள் யாரையும் சாட்சியாக வைக்காமல் இறைவனையோ அல்லது இயற்கையோ சாட்சியாக வைத்து ரகசியமாக செய்து கொள்ளும் திருமணம் ஆகும். அந்த திருமணத்தின் மூலமாக இவர்கள் இருவரும் ஒரு சில நாட்கள் சந்தோஷமாக வாழ்கிறார்கள்.
பிறகு துஷ்யந்தன் சில அரசியல் காரணங்களுக்காக தன்னுடைய நாட்டுக்கு திரும்பி போனான்.அவ்வாறு போகும் பொழுது துஷ்யந்தன் சகுந்தலையிடம் நான் உன்னையும் என்னோடு அழைத்து சென்று விடுவேன் ஆனால் கண்வ முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வராத நிலையில் நான் இவ்வாறு செய்வது நல்லா இருக்காது. அதனால் அவர் வந்த உடனே நான் உன்னை அழைத்து செல்கிறேன். அவ்வாறு நான் வரவில்லை என்றால் நீ என்னை தேடி என்னுடைய அரண்மனைக்கு வரலாம் அதற்காக நான் உனக்கு ஒரு முத்திரை மோதிரத்தை தருசகிறேன் என்று கூறி தன்னுடைய கையிலிருந்த அரச முத்திரை மோதிரத்தை எடுத்து அவளது கையில் கொடுத்தான். சகுந்தலைக்கு துஷ்யந்தன் அனுப்ப மனம் விரும்பவில்லை என்றாலும் காதல் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக அவனை வழியனுப்பி வைத்தாள். துஷ்யந்தனும் சகுந்தலையின் நின்றவுடன் தனது நாட்டுக்கு சென்றான்.
சகுந்தலை துஷ்யந்தன் போனதற்கு பின் அவனுடைய நினைப்பிலே மூழ்கி இருந்தாள்.அந்த சமயத்தில் கண்வ முனிவருடைய ஆசிரமத்திற்கு துர்வாச முனிவர் வருகை தந்தார் துர்வாச முனிவருக்கு தனக்கு யாராவது சரியா மரியாதை கொடுக்கவில்லை என்றால் கோபம் வந்துவிடும். இது பலருக்கு தெரிந்த விஷயம் அப்படிப்பட்ட துர்வாச முனிவரை சகுந்தலை சரியா கவனிக்கவில்லை இதனால் துர்வாச முனிவருக்கு சகுந்தலையின் மீது மிகுந்த கோபம் வந்தது. நீ யாருடைய நினைவில் என்னை சரியாக உபசரிக்க தவறிவிட்டாயோ அவனுக்கு உனது நினைவே மொத்தமாக மறந்து போகட்டும் என்று சாபம் கொடுத்தார். நொடிப்பொழுதில் தோழி அவர் முன்னாடி போய் நின்னு தாங்கள் செய்தது நியாயமா ஒரு சிறு பெண்ணை தவிக்க வைப்பதையா உங்களுடைய கல்வி உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது என்றாள்.அதனால் கோபம் தெரிந்த அவர் சாபத்துக்கு ஒரு பரிகாரமும் சொன்னார். அதாவது சகுந்தலை துஷ்யந்தன் ஆகிய இருவரும் காதலித்த சமயத்தில் அவர்கள் பரிமாறிக் கொண்ட அடையாளத்தை துஷ்யந்தன் பார்த்ததும் அவனுக்கு சகுந்தலையை நினைவுபடுத்தும் என்றார்.
ஏற்கனவே துன்பத்தில் துவண்டு போயிருந்த சகுந்தலைக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் மேலும் பெரிய மனக்கஷ்டத்தை கொடுத்தது. அதேசமயம் துஷ்யந்தன் துர்வாச முனிவரின் சாபத்தினால் சகுந்தலை பற்றி மொத்தமாக மறந்துவிட்டான். நாட்கள் பல நகர்ந்தது சகுந்தலை கருவுற்றால் நிறைமாத கர்ப்பிணியாக அவள் இருந்த நேரத்தில் பிரயாணத்துக்கு போயிருந்த கண்வ முனிவர் தன்னுடைய ஆசிரமத்திற்கு திரும்பி வந்தார்.சகுந்தலை நடந்தவற்றையெல்லாம் கூறினாள். கண்வ முனிவர் சகுந்தலையிடம் குழந்தை இங்கேயே பிறந்து வளரட்டும் அதற்குள் நான் துஷ்யந்தனை போய் பார்கிறேன் ஒருவேளை மன்னர் வரவில்லை என்றால் நானே உன்னை அவருடைய அரண்மனைக்கு கூட்டிட்டு போறேன் என்றார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது அவனுக்கு பரதன் என்று பெயர் வைத்தனர். நாட்கள் செல்ல செல்ல பரதனும் வளர்ந்து கொண்டே சென்றான். ஒருநாள் பரதன் சகுந்தலையிடம் தன்னுடைய அப்பா யார் என்று கேட்க அழுதபடி கண்வ முனிவரிடம் போனால் சகுந்தலை. கண்வ முனிவரும் சரி அப்படி என்றால் இதற்கு மேல நாம் காத்திருக்க வேண்டாம் நான் உன்னை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து செல்கிறேன் என்றார். மகிழ்ச்சியுடன் புறப்பட்ட குழந்தையிடம் கண்வ முனிவர் உன்னுடைய முத்திரை மோதிரத்தை மறக்காமல் எடுத்துக்கோ என்று சொன்னார். சகுந்தலையும் அந்த முத்திரை மோதிரத்தை கையில் எடுத்து கொண்டு அந்த பிரயாணத்துக்கு தயாரானாள். இந்த காட்டில் இருந்து ஹஸ்தினாபுரத்திற்கு போகும் வழியில் ஒரு பெரிய ஆறு இருக்கிறது அந்த ஆற்றைக் கடந்துதான் இவர்கள் ஹஸ்தினாபுரத்திற்கு செல்ல வேண்டும். இதலால் படகில் அந்த ஆற்றை கடந்து போகும் வழியில் முத்திரை மோதிரம் கழன்று ஆற்றுக்குள் மூழ்கிவிட்டது. இது தெரியாமல் அந்த படகிலிருந்து இறங்கி கண்வ முனிவர், சகுந்தலை மற்றும் பரதன் ஆகிய மூவரும் அந்த அஸ்தினாபுரத்து அரண்மனைக்குள் மன்னனின் அனுமதியுடன் சென்றனர். துஷ்யந்தனின் முகத்தை பார்த்த சகுந்தலை மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். ஆனால் யுத்தத்துக்கு சகுந்தலையை சுத்தமாக ஞாபகமே இல்லை. அப்போதுதான் அவர்களுக்கு அந்த முத்திரை மோதிரம் ஆற்றுக்குள் விழுந்த விஷயமும் தெரிய வருகிறது.இவர்கள் மூவரும் மன்னனுக்கு உன்மையை உணர்த்த பல விஷயங்களை கூறிய போதிலும் துஷ்யந்தன் சகுந்தலையிடம் நீ யார் என்றே எனக்கு தெரியாது இந்த குழந்தையும் என்னுடையது இல்லை என்றான்.
சுக்குநூறாக உடைந்து போனால் சகுந்தலை ஒரு பெண் எந்த விஷயத்திலும் பொய் சொலன்னாலும் இந்த விஷயத்தில் பொய் சொல்லுவாளா என்று கேட்டார் கண்வ முனிவர். ஆனால் மன்னன் மூவரையும் அவமானப்படுத்தி அரண்மனையை விட்டு வெளியே அனுப்பினான். கண்ணீரோடு சகுந்தலையும் கோபத்தோடு கண்வ முனிவரும் கேள்விகளோடு பரதனும் அந்த அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். மறுபடியும் கண்வ முனிவர் தன்னுடைய ஆசிரமத்துக்கு சகுந்தலையை கூட்டி போனார். ஆனால் அங்கு சகுந்தலைக்கு மறுபடியும் மறுபடியும் துஷ்யந்தனுடைய நினைவுகள் வந்ததால் அவள் ஆசிரமத்தை விட்டு காட்டிலேயே வேறு ஒரு பகுதியில் தன் குழந்தையுடன் வாழ்ந்தாள். ஆண்டுகள் பல கடந்து போக சிறுவனாக இருந்த பரதனும் ஒரு சிங்கத்தின் வாயை ஒற்றை ஆளாய் பிளக்கக் கூடிய ஒரு வீரனாக வளர்ந்து விட்டான். இத்தனை வருடங்கள் கடந்தபின் ஒரு நாள் அந்த ஆற்றில் மீன் பிடிக்கப் போன ஒரு மீனவருக்கு ஒரு மீன் கிடைத்தது அந்த மீனுடைய வயிற்றில் ஒரு முத்திரை மோதிரம் இருந்தது இந்த முத்திரை நம்முடைய அரசனான துஷ்யந்தனுடையது. அந்த மோதிரத்தை கொண்டுபோய் துஷ்யந்தனிடம் கொடுக்க அந்த மோதிரத்தை பார்த்த மன்னனுக்கு உடனேயே சகுந்தலையின் ஞாபகம் வந்தது. நான் சகுந்தலையை எத்தனை வருடங்கள் தவிக்க விட்டுவிட்டதோடு அவளுக்கு கொடுத்த வாக்கையும் நிறைவேற்றவில்லை என்று கவலையுற்று சகுந்தலை பார்க்க கண்வ முனிவருடைய ஆசிரமத்திற்கு வந்தார் மன்னன்.ஆனால் அங்கு சகுந்தலை இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பிய மன்னன் காட்டு வழியாக வந்து கொண்டிருக்கும் போது ஒரு வாலிபன் சிங்கத்தோடு போராடி அந்த சிங்கத்தின் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் காட்சியை பார்த்து அவனிடம் போய் இவ்வளவு அழகா இருக்கிறாய் உன்னுடைய பெயர் என்ன என்று கேக்க அதற்கு அந்த வாலிபன் நான் அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்யும் துஷ்யந்தன் அவருடைய மகன் பரதன் என்றான். அப்போது அந்த இடத்தில் புல்லரித்துப் போய் நின்ற மன்னன் உன்னுடைய தாயிடம் என்னை கூட்டிச் செல் என்றார். பரதனும் தனது அன்னையிடம் கூட்டிச்சென்றான்.
பல ஆண்டுகள் கழித்து சகுந்தலையை பார்த்ததும் துஷ்யந்தனின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்கவில்லை. முதலில் துஷ்யந்தன் சகுந்தலையிடம் மன்னிப்பு கேட்டான்.நான் இவற்றை எல்லாம் தெரிந்து செய்யவில்லை. இதெல்லாம் எனக்கு எப்படி நடந்தது என்று தெரியாது என்று துஷ்யந்தன் குழந்தையிடம் கூறினார். உடனே சகுந்தலை இது எல்லாத்துக்கும் காரணம் நான்தான் ஒருநாள் கவனம் சிதறி நான் துர்வாச முனிவரை கவனிக்காமல் விட்டுவிட்டேன் இன்னொரு நாள் எத்தனை முக்கியமானது என்று தெரிந்தும் அந்த முத்திரை மோதிரத்தை விட்டுவிட்டேன்.என்று கூறினாள் சகுந்தலை. என்ன சாபமாய் இருந்தாலும் நான் உன்ன மறந்து இருக்க கூடாது, உனக்கு கொடுத்த சத்தியத்தையும் காப்பாற்றாமல் இருந்திருக்க கூடாது என்று துஷ்யந்தன் சகுந்தலையிடம் கூறி சகுந்தலையை எந்த அரண்மனையில் அவள் அவமதிக்கப் பட்டாலோ அதே அரண்மனையில் அவளை அரசியாக உயர்த்தினான் அதேபோல பரதனையும் தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டு ஊர் முழுவதும் அறிவித்து அதனை தனக்கு அடுத்து அந்த நாட்டுக்கு அரசனாகவும் ஆக்கினான். இந்த துஷ்யந்தன் மற்றும் பரதனுடைய வம்சம் தான் மகாபாரதத்தில் சொல்லப்படும் குருவம்சம். இந்த பரதன் ஆட்சி செய்த காரணத்தால் தான் பாரத துணைக் கண்டத்துக்கு பரதகண்டம் என்றும் பெயர் வந்ததாக மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. இவ்வாறே இந்த கதையும் முடிகிறது.
நன்றி
0 Comments