கருட புராணம்
வேதவியாசர் பதினெட்டுப் புராணங்களை இயற்றினார். அவற்றில் கருட புராணமும் ஒன்று. நாம் அன்றாட வாழ்வில் தெரிந்தோ தெரியாமலோ பல தவறுகளைச் செய்துகொண்டே இருக்கிறோம். சுயநலத்துக்காக மட்டும் வாழ்கிறோம்.
நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது. அதை நாம் உணர்ந்திருந்தாலும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் சுகபோகங்களில் மயங்கி மனம் போன போக்கில் வாழ்கிறோம். மனித வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் உள்ளன. அதன்படி மனிதர்களை வழி நடத்துவதற்காகவே அறநூல்கள் 'எதைச் செய்யக்கூடாது, எதைச் செய்யலாம்' என்று வரையறுத்துக் கூறியுள்ளன.
நாம் அரசாங்கத்தின் கடுமையான சட்டங்களுக்குப் பயந்து நடக்கிறோம். ஆனால், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயக்கும் ஆண்டவன் அருளிய அறிரைகளைக் கேட்டு நடப்ப தில்லை. 'இறந்த பிறகு நடப்பதைப் பற்றி இப்போது ஏன் கவலைப்படவேண்டும்? சொர்க்கமாவது, நரகமாவது' என்று அலட்சியப்படுத்திவிடுகிறோம்.
துன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும்போதுதான் கடவுளின் நினைப்பு வருகிறது. காலங்கடந்து உணர்வதில் பயனில்லை. கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம், நரகம், மறுபிறப்பு என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களும் சொல்லப்பட்டுள்ளன. படித்துப் பயப்படுவதற்காக அல்ல; மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காக தெரிந்துகொள்வோம்.. வாருங்கள்.
கருட புராணம் அனைத்து பகுதிகளும் ஒரே தளத்தில்,




0 Comments