உயர்தர பரீட்சை வழிகாட்டி வினாக்கள் தமிழ் - குகப்படலம் - A LEVEL TAMIL EXAM GUIDE QUESTIONS


உயர்தர பரீட்சை 

வழிகாட்டி வினாக்கள் 

தமிழ் - குகப்படலம் 


உயர்தர பரீட்சை வழிகாட்டி வினாக்கள் தமிழ் - குகப்படலம் - A LEVEL TAMIL EXAM GUIDE QUESTIONS

சோழர் காலத்து செங்கோல் ஆட்சியின் உன்னதத்தை வெறும் வார்த்தைகளாக கேள்வியுற்ற நமக்கு. செய்யுள் வாயிலாக ஆட்சிச் சிறப்பை செந்தமிழ் நடையிலே புதுமைக்கவிஞர் கவிச்சக்கரவர்த்தி கம்பர். இராமாயணம் என்னும் இதிகாசத்தை தமிழில் ஆக்கித் தந்தபோது அதன் உண்மைநிலையை எம்மால் அறியக்கிடைத்தது. சோழர் காலத்தில் குலோத்துங்க சோழ மன்னனின் விருப்பப்படி சடையப்ப வள்ளலின் உதவியுடன் கம்பர் பாடிய இராமாயணம் கம்பராமாயணம் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் செய்நன்றி மறவாத கம்பர் ஒவ்வொரு ஆயிரம் பாடல்களுக்கும் ஒருமுறை சடையப்ப வள்ளலை போற்றிப் பாடியுள்ளார். 2019ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உயர்தர மாணவர்களுக்கான பாடப்பரப்பில் குகப்படலம் எனும் கங்கைகாண் படலம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

01. பெருஞ்சேனையுடன் வந்த பரதனைக் கண்டு சினங்கொண்ட குகன் தன் ப வரையிலான பகுதியில் யைக் கூட்டியது

01. கங்கைக் கரையை அடைந்த பரதனது படையின் சிறப்பு

இராமனை அழைத்து வர கானகம் செல்லும் பரதன் மற்றும் அவரது சேனைகள் கங்கைக் கரையை வகையில் அண்மித்த போது, பரதனின் சேனையின் சிறப்பை முத்தமிழையும் ஒருமித்த கையாண்டு. தித்திக்கும் தேனாக கவிச்சக்கரவர்த்தி கம்பர் எமக்கு படைத்தளித்துள்ளார். ஒன்று தொடக்கம் ஐந்து வரையான பாடல்களில் அச்சிறப்பை அவதானிக்க முடிகின்றது.

பூ வேலைப்பாடுகளைக் கொண்ட பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்தவனும். தமக்குச் சமமான ஆற்றல் இல்லாதவர்களான படையினரைக் கொண்டவனுமான பரதன். காவிரி ஆற்றால் வளம் பெறும் சோழநாடு போன்ற வயல்வளம் மிக்க கோசல நாட்டை நீக்கி, நிலையாக நிற்பனவும், நகர்வனவுமாகிய அனைத்து உயிர்களும் வருந்தும்படி கங்கைக் கரையை அடைந்த போது யானைப்படை. குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய படைகள் மிகப் பிரமாண்டமான முறையில் கம்பரால் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

"எண்ணருஞ் சுரும்புதம்...." என்னும் பாடலின் ஊடாக யானைப்படையின் சிறப்பு பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. இடம் அகன்றதும் பெரும் நீர்வளத்தை உடையதுமான கங்கை ஆற்றின் எல்லா இடங்களிலும் பெருமையுடைய யானையின் மதநீராகிய அருவி பாய்வதால் ஏனைய உயிரினங்களுக்கு அந்த ஆற்றுநீர் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் பொருத்தமற்றதாய் போனது. இதனால் மதநீரைப் பருகிய வண்டுக் கூட்டங்கள் மட்டுமே பயனடைந்தன என கம்பர் உரைப்பதிலிருந்து யானைப்படை மிகுதியாகக் காணப்பட்டது என்பதை உயர்வு நவிற்சி அணி வாயிலாக அறிய முடிகின்றது.

"அடிமிசைத் தூளிபுக்கு...." என்னும் செய்யுளின் ஊடாக குதிரைச் சேனைகளின் சிறப்பு வெளிப்படுவதை நோக்கும் போது குதிரைகளின் காலிலிருந்து எழுந்த தூசி தேவருலகத்தை அடைந்து தேவர்களின் முடியின் மீது பரவிய முறையினை ஆராய்ந்து அறிய மனிதர்களாகிய எம்மால் முடியவில்லை. நீண்ட மூச்சு விட்டபடியே நீரைக் குடித்தவையும், நீரினுள்ளே நீந்திக் கொண்டு நின்றவையும், மண்ணில் விழுந்து புரண்டவையும் எல்லாம் குதிரைக் கூட்டங்களே. என கம்பர் விளக்குவதில் இருந்து கங்கையில் அதிகளவு குதிரைப்படைகள் வியாபித்து இருந்தமையை காண முடிகின்றது. குதிரைகளால் எழுப்பப்பட்ட தூசி தேவர்களின் சிரசினை அடைந்தது என உயர்வு நவிற்சி அணியை கையாண்டு குதிரைச் சேனை சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

"பாலையேய் நிறத்தொடு....." என்னும் கவிவரிகள் ஊடாக பரதனின் படை கங்கையில் வியாபித்த காட்சி வலியுறுத்தப்பட்டுள்ளது. கங்கையாற்றின் வெள்ளம் பால் போன்ற நிறத்துடன், ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலிற்கள் சென்றடைய முடியவில்லை. ஏனெனில், மாலை சூட்டப்பட்ட நீண்ட மகுடத்தையுடைய பரதனது படைகள் ஆகிய சமுத்திரமே அக்கங்கையை குடித்து விட்டது, என அழகாக பரதனது படையின் மிகுதியை விபரித்துள்ளார். கங்கை நதி மிகவும் பரந்து விரிந்த நதியாகும். அதனை பரதனது படைகளாகிய சமுத்திரம் குடித்து விட்டது உயர்வு நவிற்சி அணி மூலம் கம்பர் விளக்குவது அவரது கற்பனை சிறப்பை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது. வேதாக

"கான்றலை நண்ணிய...." என்னும் செய்யுளில் அளவு கடந்த பரதனது படையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. காட்டிற்கு இராமனைத் தேடிச் சென்ற பரதனை, அவன் சென்ற வழியிலே பின்பற்றிச் சென்ற படைகள் பெரியோர்களால் கணக்கிட்டுக் கூறப்பட்ட அறுபதினாயிரம் அக்குரோணிகளாகும். இதன்மூலம் கம்பர் எண்ணிக்கையில் அதிகமான யானை.குதிரை.தேர். காலாட் படைகள் பரதனின் படையில் உள்ளடங்கி இருந்தமையை சுட்டிக்காட்டுகின்றார்.

மேற்கூறிய விதத்தில் பரதனது படையின் சிறப்பு உயர்வுநவிற்சி அணி, உவமையணி, உருவக அணி முதலிய பொருளணிகளின் துணையுடன் கம்பரால் கற்பனை வளத்துடன் மிக அற்புதமாக உரைக்கப்பட்ட தன்மையை அறிந்து கொள்ள முடிகின்றது.

02. பரதனது படைகண்டு குகன் கொண்ட சீற்றம்

கங்கைக் கரையை அடைந்த பரதனது பாரிய படையை நோக்கிய குகன் அளவில்லா சினமுற்ற காட்சியை கவிச்சக்கரவர்த்தி கம்பர் கற்பனை ததும்ப ஆறு தொடக்கம் பதினொன்று வரையிலான பாடல்களில் எடுத்தியம்பும் விதத்தை பின்வருமாறு விளக்கலாம்.

"அப்படை கங்கையை...." என்னும் செய்யுளின் ஊடாக பரதனது படை. கங்கையை அடைந்த அவ்வேளையில் படையைக் கண்ட குகன் பவளத்தைக் கொண்ட கடலில் இருந்து நீரை அள்ளிக் கொண்ட கரிய மேகம் போன்ற உடலைக் கொண்ட இராமனோடு போர் செய்வதற்காகவா இப்படை புறப்பட்டது என்று கோபங் கொண்டான். என குகனது சீற்றம் புனையப்பட்டுள்ளது.

"குகனெனும் பெயரிய...." என்னும் பாடலடி மூலம் குகன் என்னும் பெயரையுடைய யமனைப் போன்ற ஆற்றலை உடைய வேடர்கோன், கூட்டமாக இருந்த வலிமைமிக்க படையை தூசியைப் போல பார்த்தான். அவ்வேளையில் அவனுக்கு ஏளனச் சிரிப்பு ஏற்பட்டது. கண்களிலிருந்து நெருப்பக் கிளம்ப உள்ளே எரியும் கோப நெருப்பனல் மூக்கிலிருந்து புகையாக வெளியே வர, கோபத்தால் வளைந்த புருவம் ஆகிய போர்வில்லை உடையவன் ஆனான். என குகனின் அபரிதமான கோபம் வெளிப்படுவதைக் காணலாம்.

"மை உற உயிர் எலாம்...." என்னும் கவிவரிகள் ஊடாக வில்வித்தையிலே தேர்ச்சி பெற்றவனான குகன். தீமை ஏற்படும்படியாக இறுதி நாளிலே வந்து உயிர்கள் எல்லாவற்றையும் வாங்குகின்றவனும், கையிற் பொருந்திய மூன்று கிளையாகப் பிரிந்த வேலை ஏந்தியவனுமாகிய யமனே, ஐந்து லட்சம் வடிவம் எடுத்தது போன்ற வலிமை பொருந்திய படையினை உடையவனாகக் காணப்பட்டான் எனவும் குகனது கோபநிலை எடுத்தாளப் பட்டுள்ளது.

"கட்டிய கரிகையன்...." என்னும் செய்யுளின் ஊடாக குகனது சீற்றத்தின் கடுமையை அவதானிக்க முடிகின்றது. இடையிற் கட்டப்பட்ட உடைவாளை உடையவனாகவும், கோபத்தால் உதட்டைக் கடித்தவனாகவும். கடுமையான வார்த்தைகளை உடையவனாகவும். போருக்குத் தயாரானதற்கு அடையாளமாக அடிக்கப்படும் உடுக்கை உடையவனாகவும், போர் குறித்து ஒலிக்கும் ஊதுகொம்பு வாத்தியத்தை உடையவனாகவும். போர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியால் கிளர்ச்சி அடையும் தோள்களை உடையவனாகவும், குகன் காணப்பட்டான். என குகனின் எல்லையற்ற சீற்றத்தை கம்பர் விளக்கிக் கூறியுள்ளார்.

"எலியெலாம் இப்படை..." என்னும் செய்யுளில் குகனது கொதிக்கும் கோபநிலை கூறப்படுவதை நோக்கும்போது 'பரதனது இப்படை யாவும் வெறும் எலிகளே. நான் இந்த எலிகளைத் தின்று அழிக்கும் பாம்பு' என்று வீரவார்த்தை பேசிக்கொண்டு, ஆரவாரம் செய்து நிற்கும் சேனையைப் போருக்கு உவந்து அழைத்தான். வலிமைமிக்க உலகில் கூர்மையான நகங்களை உடையனவாக வாழும் புலிகள் யாவும் ஓரிடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும் படியாக படைகள் வந்து சேர்ந்தன. என குகனது உக்கிரத்தன்மையை கம்பர் தெளிவுபடுத்தியுள்ளார்.

"மருங்கு அடை தென்கரை...." என்னும் பாடலின் ஊடாக குகனின் சீற்றநிலை வலியுறுத்தப்படும் நிலையை நோக்கும் போது ஒன்றுசேர்ந்து வந்த வேடர்களின் பெரும்படையானது மிகுந்த ஆரவாரத்தோடு உலகம் அழியும் ஊழிக்காலத்தில் இடியோடு கூடிய மேகமும் கரிய கடலும் பேரொலியோடு எழுந்ததைப் போல ஒன்றாகத் தன்னைச் சூழ்ந்து வரப் பக்கத்திலுள்ள கங்கையாற்றின் தெற்குக் கரைக்குக் குகன் வந்து சேர்ந்தான். என குகனும். அவனது படையும் ஒருமித்து மிகுந்த கோபத்துடன் தென்கரையை வந்தடைந்ததாக கம்பர் குகனது சீற்றநிலையை விபரித்துள்ளார்.

பரதனது படையெழுந்தமை கண்டு குகன் அடைந்த மிகுந்த சீற்றத்தை வெளிப்படுத்த கம்பர் உவமையணி, உருவக அணி என்பவற்றை பொருத்தமான விதத்தில் கையாண்டுள்ளமையை காண முடிகின்றது.

03. குகனின் உணர்ச்சி வெளிப்பாடு

கங்கையின் வடகரையை பரதனும், அவனது சேனைகளும் வந்தடைந்த விதத்தைக் கண்ட குகன், இராமபிரானுடன் யுத்தம் செய்யவே பரதன் சேனைகளுடன் வந்துள்ளான் எனச் சந்தேகங்கொண்டு மிகுந்த கோபத்துடன் தென்கரையில் தோன்றும் போது குகனின் கோப உணர்ச்சி வெகுவாக வெளிப்படுவதை உணர முடிகின்றது.

குகனின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை நுட்பமாக வருணிப்பதன் மூலம் குகனின் உணர்ச்சி வெளிப்பாட்டை கம்பர் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். “குகனெனும் பெயரிய...." என்னும் பாடலில் குகன் என்னும் பெயரையுடைய யமனைப் போன்ற ஆற்றலை உடைய வேடர்கோன், கூட்டமாக இருந்த வலிமைமிக்க படையை தூசியைப் போல பார்த்தான். அவ்வேளையில் அவனுக்கு ஏளனச் சிரிப்பு ஏற்பட்டது. கண்களிலிருந்து நெருப்பக் கிளம்ப உள்ளே எரியும் கோப நெருப்பனல் மூக்கிலிருந்து புகையாக வெளியே வர. கோபத்தால் வளைந்த புருவம் ஆகிய போர்வில்லை உடையவன் ஆனான். இங்கு குகனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றுள் முக்கியமாக ஏளனச் சிரிப்பும். கண்களில் இருந்து தீயும், மூக்கிலிருந்து வெளியாகும் புகையும் கோப உணர்ச்சிக்கான அறிகுறிகளாகும்.

"கட்டிய கரிகையன்...." என்னும் செய்யுளின் மூலம் குகனின் ஆவேசமான வார்த்தைகள் ஊடாக குகனது கோப உணர்ச்சி கடுமையாக புலப்படுவதை அவதானிக்க முடிகின்றது. இடையிற் கட்டப்பட்ட உடைவாளை உடையவனாகவும். கோபத்தால் உதட்டைக் கடித்தவனாகவும், கடுமையான வார்த்தைகளை உடையவனாகவும். போருக்குத் தயாரானதற்கு அடையாளமாக அடிக்கப்படும் உடுக்கை உடையவனாகவும். போர் குறித்து ஒலிக்கும் ஊதுகொம்பு வாத்தியத்தை உடையவனாகவும், போர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியால் கிளர்ச்சி அடையும் தோள்களை உடையவனாகவும். குகன் காணப்பட்டான். இங்கு உதட்டைக் கடித்தல், கடுமையான வார்த்தைப் பயன்பாடு. போரை எண்ணி மகிழும் மனநிலை என்பன கோப உணர்ச்சியை பறைசாற்றி நிற்பதை காணலாம்.

"எலியெலாம் இப்படை..." என்னும் செய்யுளில் பரதனது படைகளை அழித்தொழிக்கும் சீற்றத்தின் மூலம் குகனது கோப உணர்ச்சி வெளிக்காட்டப்படுவதை விளங்கிக் கொள்ள இந்த எலி முடிகின்றது. 'பரதனது இப்படை யாவும் வெறும் எலிகளே. நான் இந்த எலிகளைத் தின்று அழிக்கும் பாம்பு' என்று வீரவார்த்தை பேசிக்கொண்டு, ஆரவாரம் செய்து நிற்கும் சேனையைப் போருக்கு உவந்து அழைத்தான். இங்கு எலிகளை இலகுவாக பாம்பு அழித்துவிடக் கூடியது. அதனால் பரதனது படை எலி எனவும் குகன் தன்னை பாம்பு எனவும் கூறியமை உக்கிரத் தன்மையான கோப உணர்ச்சி என்றே கூற வேண்டும். கம்பரால் பரதனது சேனை எலிகளுக்கும், குகன் பாம்புக்கும் உருவகிக்கப்பட்டுள்ள தன்மையை நாம் இங்கு விளங்கிக் கொள்ள முடிகின்றது.

வலிமைமிக்க உலகில் கூர்மையான நகங்களை உடையனவாக வாழும் புலிகள் யாவும் ஓரிடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும் படியாக படைகள் வந்து சேர்ந்தன. என்று கம்பர் உரைப்பதிலிருந்து வீரத்தில் கூர்மையான புலிகள் போன்ற தனது படைகளை ஓரிடத்தில் குகன் அழைத்தமை குகனது கோப உணர்ச்சியின் மற்றொரு செயற்பாடாகும் என்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஒன்றுசேர்ந்து வந்த வேடர்களின் பெரும்படையானது மிகுந்த ஆரவாரத்தோடு உலகம் அழியும் ஊழிக்காலத்தில் இடியோடு கூடிய மேகமும் கரிய கடலும் பேரொலியோடு எழுந்ததைப் போல ஒன்றாகத் தன்னைச் சூழ்ந்து வரப் பக்கத்திலுள்ள கங்கையாற்றின் தெற்குக் கரைக்குக் குகன் வந்து சேர்ந்தான். என்பதில் மிகுந்த அழிவை ஏற்படுத்தக் கூடிய படையை குகன் வரவழைத்தமை குகனது கோப உணர்ச்சியின் உச்சத்தையே சுட்டி இந்த விதச் நிற்கின்றது.இந்த விதத்தீல் குகனது கோப உணர்ச்சியின் செயற்பாடுகளை பலவிதமாக நோக்க முடிகின்றது.

04. குகனின் பெருமைகள்

பவளத்தைக் கொண்ட கடலில் இருந்து நீரை அள்ளிக் கொண்ட கரிய மேகம் போன்ற உடலைக் கொண்ட இராமனின் உற்ற நண்பனாகவும், வேடர்களின் வீரமிக்க தலைவனாகவும் விளங்குகின்ற குகனின் பெருமைகள் பல கம்பரால் சிறப்பிக்கப்பட்டுள்ள விதத்தை அறிய முற்படும் போது "குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான்" எனும் வரிகள் குகன் என்னும் பெயரையுடைய யமனைப் போன்ற ஆற்றலை உடைய வேடர்கோன் எனவும் "தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்" என்னும் வரிகள் ஊடாக கூட்டமாக இருந்த வலிமைமிக்க படையை தூசியைப் போல பார்த்தான் எனவும். குகனது பெருமைகள் சுட்டி நிற்பதை அறிந்து கொள்ளலாம்.

"மை யுற உயிர் எலாம் இறுதி வாங்குவான் 
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான் 
ஐ ஐந்நூறாயிரம் உருவம் அயின 
மெய் உறு தானையான், வில்லின் கல்வியான்."

என்னும் வரிகள் மூலமாக பின்வருமாறு குகனது பெருமைகள் குறிப்பிடப்படுகின்றது.

வில்வித்தையிலே தேர்ச்சி பெற்றவன், தீமை ஏற்படும்படியாக இறுதி நாளிலே வந்து உயிர்கள் எல்லாவற்றையும் வாங்குகின்றவனும், கையிற் பொருந்திய மூன்று கிளையாகப் பிரிந்த வேலை ஏந்தியவனுமாகிய யமனே. ஐந்து லட்சம் வடிவம் எடுத்தது போன்ற வலிமை பொருந்திய படையினை உடையவன் எனவும் குகனது பெருமைகள் சிறப்பிக்கப்பட்டுள்ளன.

"கட்டிய கரிகையன் என்பதன் மூலம் இடையிற் கட்டப்பட்ட உடைவாளை உடையவனாகவும். கொட்டிய துடியினன். குறிக்கும் கொம்பினன் கிட்டியது அமர் எனக் கிளிறும் தோளினான்." எனும் கவிவரிகள் ஊடாக போருக்குத் தயாரானதற்கு அடையாளமாக அடிக்கப்படும் உடுக்கை உடையவனாகவும், போர் குறித்து ஒலிக்கும் ஊதுகொம்பு வாத்தியத்தை உடையவனாகவும், போர் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியால் கிளர்ச்சி அடையும் தோள்களை உடையவனாகவும் குகனின் பெருமைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

"எலியெலாம் இப்படை அரவம் யான்" ஆகிய வரிகள் மூலம் ‘பரதனது இப்படை யாவும் வெறும் எலிகளே. நான் இந்த எலிகளைத் தின்று அழிக்கும் பாம்பு' என்று வீரவார்த்தை பேசிக்கொண்டு அப்படையை அழித்தொழிப்பதில் ஆர்வங் கொண்டவனாக குகன் இருந்தான் என்பது உணர்த்தப்படுவதுடன், தனது வீரம் பற்றிய தன்னம்பிக்கை கொண்டவனாக குகன் விளங்கினான் என்பதும் புலனாகின்றது.

இவ்வாறாக புளிஞர்களின் தலைவனான குகனது பெருமைகள் கம்பரால் எடுத்தாளப்பட்டுள்ளன.

05. குகன் வேடுவர்களுக்கு இட்ட கட்டளை

பரதனும், பரதனது சேனைகளும் இராமன் மீது போர் தொடுக்க வருவதாக சந்தேகங்கொண்ட குகன் தன்னுடைய படைகளை தென் கரையில் வந்து ஒன்று சேருமாறு கட்டளை இட்டு அவர்களுக்கு உரைத்த வார்த்தைகளை பின்வருமாறு அறிய முடிகின்றது.

"தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்ச்சியி..." என்னும் பாடலின் ஊடாக தன் கட்டளைக்கு ஏற்ப வந்து சேர்ந்த வேடர்களைப் பார்த்து நிரம்பிய பெரிய அயோத்தியின் அரசாட்சியை என் உயிர் நண்பனாகிய இராமனுக்கு தருவதற்காக, அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்து. இங்கே காலூன்றிய பரதனின் படையினை வீரசுவர்க்கத்திற்கு அனுப்புவதற்கு நான் முடிவெடுத்துள்ளேன். நீங்களும் தயாராகுங்கள்" என்று கூறினான். என குகன் உரைத்த கட்டளை விளக்கப்பட்டுள்ளது.

"துடியெறி நெறிகளுந் துறையுஞ் சுற்றுற..." என்னும் செய்யுளில் குகன் உரைத்த கட்டளை "போர்ப் பறைகளை அடியுங்கள். அவர்கள் தென்கரைக்கு வருவதற்குரிய வழிகளையும், நீர்த்துறைகளையும் அழித்து விடுங்கள். படகுகள் எவற்றையும் செலுத்தாதீர்கள். வேகமாக அலை வீசி வரும் கங்கை ஆற்றின் தெற்குக் கரைக்கு வந்தவர்களைப் பிடித்து அழியுங்கள்” என்று அமைந்துள்ளதாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டளை வார்த்தைகள் ஊடாக பரதன் தொடர்பாக தவறாக விளங்கிக் கொண்டு அவனது படைகளை அழித்தொழிக்கும் விதத்தில் கடுமையான கட்டளை வழங்கப்பட்டதை காண முடிகின்றது. படைகளை ஓரிடத்தில் எல்லைப்படுத்தி அவர்களை வேறிடத்தில் செல்லவிடாது தடுத்து அழித்து விடுவது சிறந்த போர் உத்தியாகும். இதனையே குகன் செய்ய எண்ணியதாக இதன்மூலம் எம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

06. அணிகளைக் கையாள்வதில் கம்பனின் ஆற்றல் வெளிப்படும் விதம்

பெருஞ்சேனையுடன் வந்த பரதனைக் கண்டு சினங்கொண்ட குகன் தன் படையைக் கூட்டியது வரையிலான பகுதியில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பல வகையான பொருளணிகளை கையாண்டு இலக்கியச் செழிப்புமிக்க செய்யுட்களை ஆக்கியுள்ளதை கண்கூடாக காண முடிகின்றது. பொருளணிகளில் உயர்வுநவிற்சி அணி, உவமையணி, உருவக அணி என்பன அதிகமாக கம்பரால் கையாளப்பட்டுள்ளதை நோக்க முடிகின்றது.

முதலில் உயர்வுநவிற்சி அணியை நோக்கும் போது "எண்ணருஞ் சுரும்புதம்...." என்னும் பாடலின் ஊடாக யானைப்படையின் சிறப்பை விளக்க முற்பட்ட கம்பர் இடம் அகன்றதும் பெரும் நீர்வளத்தை உடையதுமான கங்கை ஆற்றின் எல்லா இடங்களிலும் பெருமையுடைய யானையின் மதநீராகிய அருவி பாய்வதால் ஏனைய உயிரினங்களுக்கு அந்த ஆற்றுநீர் குடிப்பதற்கும். குளிப்பதற்கும் பொருத்தமற்றதாய் போனது. இதனால் மதநீரைப் பருகிய வண்டுக் கூட்டங்கள் மட்டுமே பயனடைந்தன என கம்பர் உரைப்பதிலிருந்து யானைப்படை மிகுதியாகக் காணப்பட்டது என்பதை உயர்வு நவிற்சி அணி வாயிலாக அறிய முடிகின்றது.

"அடிமிசைத் தூளிபுக்கு...." என்னும் செய்யுளின் ஊடாக குதிரைச் சேனைகளின் சிறப்பு உயர்வு நவிற்சி அணி மூலம் விளக்கப்படுகையில் குதிரைகளின் காலிலிருந்து எழுந்த தூசி தேவருலகத்தை அடைந்து தேவர்களின் முடியின் மீது பரவிய முறையினை ஆராய்ந்து அறிய மனிதர்களாகிய எம்மால் முடியவில்லை. நீண்ட மூச்சு விட்டபடியே நீரைக் குடித்தவையும், நீரினுள்ளே நீந்திக் கொண்டு நின்றவையும், மண்ணில் விழுந்து புரண்டவையும் எல்லாம் குதிரைக் கூட்டங்களே. என கம்பர் விளக்குவதில் இருந்து கங்கையில் அதிகளவு குதிரைப்படைகள் வியாபித்து இருந்தமையை காண முடிகின்றது. குதிரைகளால் எழுப்பப்பட்ட தூசி தேவர்களின் சிரசினை அடைந்தது எனக் கூறுகின்ற செய்தியை மிகவும் மிகைப்படக் கம்பர் உரைப்பது உயர்வு நவிற்சி அணி மூலம் குதிரைச் சேனை சிறப்பிக்கப்பட்டுள்ள விதத்தை சுட்டி நிற்கின்றது.

"பாலையேய் நிறத்தொடு...." என்னும் கவிவரிகள் ஊடாக பரதனின் படை கங்கையில் வியாபித்த காட்சியை வலியுறுத்த உயர்வுநவிற்சி அணி கையாளப்பட்டுள்ளது. கங்கையாற்றின் வெள்ளம் பால் போன்ற நிறத்துடன், ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலிற்கள் சென்றடைய முடியவில்லை. ஏனெனில், மாலை சூட்டப்பட்ட நீண்ட மகுடத்தையுடைய பரதனது படைகள் ஆகிய சமுத்திரமே அக்கங்கையை குடித்து விட்டது. என அழகாக பரதனது படையின் மிகுதியை விபரித்துள்ளார். கங்கை நதி மிகவும் பரந்து விரிந்த நதியாகும். அதனை பரதனது படைகளாகிய சமுத்திரம் குடித்து விட்டது உயர்வு நவிற்சி அணி மூலம் கம்பர் விளக்குவது அவரது கற்பனை சிறப்பை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.

உவமையணி கையாளப்பட்ட விதத்தை நோக்கும் போது "காவிரி நாடன்ன கழனி நாடு" என்னும் வரிகளில் கோசல நாட்டின் சிறப்பு உவமையணி மூலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு பரதனின் கோசலநாடு காவிரி ஆற்றால் வளம் பெறுகின்ற சோழ நாட்டிற்கு உவமித்துக் கூறப்பட்டுள்ளது. இங்கு உவமானமாக காவிரி பாயும் சோழ நாடும். உவமேயமாக பரதனின் கோசலநாடும் பொதுத்தன்மையாக நாட்டின் செழிப்பான நிலையும் விளக்கப்பட்டுள்ளது. உவமேயத்தை விட உவமானம் சிறந்ததாக அமைய வேண்டும் என்பதற்கிணங்க கோசல நாட்டை விட சோழநாடு வளம் மிக்கது என்பதை கம்பர் எடுத்துரைத்துள்ளார்.

"பாலையேய் நிறத்தொடு கங்கை வெள்ளமே" என்னும் வரிகளில் கங்கை நதியின் சிறப்பு வமை அணி மூலம் சிறப்பிக்கப்பட்டுள்ளதை நோக்கலாம். இங்கு கங்கையாற்றின் வெள்ளம் வெள்ளிய பாலிற்கு உவமிக்கப்பட்டுள்ளது. இங்கு உவமானமாக வெண்மையான பாலின் தன்மையும். உவமேயமாக கங்கை நதியின் வெள்ளமும், பொதுத்தன்மையாக தூய்மையும் விளக்கப்பட்டுள்ளது.

"துப்புடைக் கடலின் நீர் சுமந்த மேகத்தை ஒப்புடை அண்ணலோடு...” என்னும் வரிகள் ஊடாக கரிய திருமேனியுடைய இராமபிரான் பவளமுடைய சூலுற்ற கருமேகத்திற்கு உவமித்துக் கூறப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. உவமானமாக பவளமுடைய சூலுற்ற கருமேகமும், உவமேயமாக கரிய திருமேனியுடைய இராமபிரானும். பொதுத்தன்மையாக கருமைநிறமும் காட்டப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

"குகன் எனப் பெயரிய கூற்றின்...." என்பதில் வேடுவர் தலைவன் பராக்கிராமம் மிக்க இயமனுக்கு உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு உவமானமாக கொடிய பராக்கிரமம் உடைய இயமனும், உவமேயமாக வேடுவர் தலைவனான குகனும் பொதுத்தன்மையாக அழித்தல் பண்பும் விளக்கப்பட்டுள்ளது. "கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்" என்பதில் வலிமையுடைய குகனின் தன்மை கையில் சூலத்தை ஏந்திய இயமன் பல வடிவங்கள் எடுத்த தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளதை நோக்க முடிகின்றது. இங்கு உவமானமாக குகனின் தன்மையும், உவமேயமாக கையில் சூலத்தை ஏந்திய இயமன் பல வடிவங்கள் எடுத்த தன்மையும், பொதுத்தன்மையாக அழித்தல் பண்பும் விளக்கப்பட்டுள்ளது.

"புலியெலா ஒருவழிப் புகுந்த போலவே..." என்பதில் குகனின் ஆரவாரமிக்க வேடுவர் சேனை ஓரிடத்தில் கூடும் தன்மை புலிகள் எல்லாம் ஓரிடத்தில் சேர்ந்த தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இங்கு உவமானமாக புலிகள் எல்லாம் ஓரிடத்தில் சேர்ந்த தன்மையும் உவமேயமாக குகனின் ஆரவாரமிக்க வேடுவர் சேனை த்தில் கூடும் தன்மையும், பொதுத்தன்மையாக வலிமையும் விளக்கப்பட்டுள்ளது,

"அசனி மாமழை கருங்கடல் கிளர்ந்தெனக் கலந்து சூழவே..." என்பதில் பேராரவாரத்தோடு குகனுடன் படை தென் கரையில் வந்து சேர்ந்த தன்மை அரிய கடை ஊழிக் காலத்தில் இடியோடு கூடிய மேகமும், கரிய கடலும் சேர்ந்து எழுந்த தன்மைக்கு உவமித்துக் கூறப்பட்டுள்ளது. இங்கு உவமானமாக அரிய கடை ஊழிக் காலத்தில் இடியோடு கூடிய மேகமும், கரிய கடலும் சேர்ந்து எழுந்த தன்மையும் உவமேயமாக பேராரவாரத்தோடு குகனுடன் படை தென் கரையில் வந்து சேர்ந்த தன்மையும் பொதுத்தன்மையாக வலிமைமிக்க தன்மையும் கூறப்பட்டுள்ளது.

உருவக அணிப் பயன்பாட்டை அவதானிக்கும் போது "வெங்கரி மதத்தருவி" என்பதில் கொடிய யானைகளின் மதநீர்ப் பெருக்கு அருவிக்கு உருவகித்துக் கூறப்பட்டுள்ளது, இது யானைகளின் மதநீரின் மிகுதியை விளக்கி நிற்கின்றது. “சேனையாம் வேலை” என்பதில் பரதனுடைய படை சமுத்திரமாக உருவகித்துக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பரதனின் படையின் சிறப்பு உரைக்கப்பட்டுள்ளது.

02. குகன் தன்னினத்தவரான வேடர்களுக்கு கூறிய வீரவார்த்தைகளிலிருந்து

01. குகனது வீரவார்த்தைகள்

பரதனும், சேனைகளும் வட கரையிலிருந்து தென் கரைக்கு வரும் போது இராமனை அழிப்பதற்காக அப்படைகள் வருகின்றன என சந்தேகங் கொண்ட குகன் வேடர்களுக்கு உரைத்த கட்டளை 14 முதல் 23 வரையான பாடல்கள் வரை எடுத்துக் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் குகனுடைய வீரவார்த்தைகள் பரதன் மீதான கோபத்தால் உணர்ச்சிப் பெருக்கோடு போர்ச்சன்னத்தான நிலையுடன் எடுத்தாளப்பட்ட விதத்தை பின்வருமாறு எடுத்து நோக்குவோம்.

“அஞ்சன் வண்ணன்...” என்னும் பாடலில் நெருப்பைக் கக்கின்ற எனது சிவந்த அம்புகள் இராமனின் அரசை அபகரித்த வஞ்சக மன்னர்களின் மேல் சென்று படாமல் விட்டுவிடுமோ? இவர்கள் என் அம்புகளிற்குத் தப்பிப் பிழைத்து இராமன் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டால் என்னை 'நாய்போல இழிந்த குகன்' என்று மற்றவர்கள் பழி சொல்ல மாட்டார்களா? என ஆவேசத்துடன் குகன் முழங்கியதை கம்பர் எடுத்துரைத்துள்ளார். 

''ஆழ நெடுந்திரை என்னும் பாடலில் ஆழமும், நீண்ட அலைகளும் கொண்ட கங்கை ஆற்றை எதிரிகள் கடந்து சென்று விடுவார்களா? நாங்கள் பெரிய யானைப் படையைக் கண்டு பயந்து புறமுதுகிடும் வில்வீரனோ? இராமனுக்கு வந்த துயரத்தை தீர்ப்பதற்காக இந்த அற்பமான வேடன் இறக்கவில்லை என்று என்னைப் பேச மாட்டார்களா? இராமன் தனது நண்பன் என சொல்லிய வார்த்தை ஒப்பற்ற வார்த்தையாகும் எனவும் குகன் பேசியதாக கம்பர் குறிப்பிட்டுள்ளார்.

"முன்னவன் என்று...." எனும் பாடலின் ஊடாக கம்பர் உரைப்பதை நோக்கும் போது பரதன் இராமனைத் தனது அண்ணன் என நினைக்கவில்லை. வலிமை மிக்க புலி போன்ற வீரனான இலக்குவன் என்னும் தம்பி அவனோடு எப்போதும் துணையாக நிற்கின்றனர் என்பதையும் நினைத்தான் இல்லை. அந்த இரண்டையும் நினைக்காது விட்டாலும், இராமனுக்குக் காவலிருக்கும் என்னைப் பொருட்ப்படுத்தாது விட்டது எதற்காக? எனது எல்லையைக் கடந்து அல்லவா இராமனிடம் செல்ல வேண்டும்? மன்னர்கள் என்பதற்காக வேடர்கள் விடும் அம்பு தைக்க மாட்டாதா? எனக் குகன் உரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"பாவமும் நின்ற பெரும் பழியும்..." எனும் பாடலில் இப்பூமியை ஆளும் அரசர்கள் தாம் செய்யும் தவறான செயல்களால் ஏற்படும் பாவத்தையும் தமக்கு ஏற்படப் போகும் பழியையும். தாம் போருக்குச் செல்பவரின் பகைவர் யார்? நண்பர் யார்? என்பதை அறியாததால் ஏற்படும் குற்றங்களையும் நினைத்துப் பார்க்க மாட்டார்களா? அவைகள் போகட்டும். எனக்கு உயிர் போன்ற நட்பைத் தந்த இராமன் மேல் போருக்குச் செல்வது தமது படைகளையும் அரிய உயிரையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு போனதன் பின்னல்லவா முடியும்? என குகன் அளவுகடந்த கோபத்துடன் பேசுவதாக கூறப்பட்டுள்ளது.

"அருந்தவம் என்துணை ஆள...." என்னும் பாடலில் எனக்கு நண்பனான இராமன் செய்வதற்கரிய தவத்தைச் செய்து கொண்டிருக்க, இந்தப்பரதன் உலகத்தை ஆட்சி செய்வானோ? என்னுடைய உயிர் பெறுவதற்குரிய மருந்து போன்ற தேவாமிர்தமோ? அப்படியில்லை. இராமனுக்காகப் பரதனை எதிர்த்து நின்று பெரிய புகழைப் பெற்ற பின்னர் நான் இறக்க மாட்டானோ? என்னோடு பொருந்திய நட்பை என்னிடம் விரும்பி ஏற்று மகிழ்ந்த இராம, இலக்குவணர்களோடு செல்லாமல் இங்கு நான் இங்கே இருந்தது நல்லதாகப் போய்விட்டது. இராமனுக்காகச் செய்ய வேண்டிய கடமையை இன்றே செய்து முடிப்பேன் என குகன் சூளுரைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"தும்பியும் மாவும்...." என்னும் பாடலில் யானைகளும், குதிரைகளும் நெருக்கமாக இருக்கும் பெரியபடை தம்மைச் சூழ இருக்க, வாசம் வீசும் மாலையணிந்த இவர்களின் வாட்படையின் வலிமையை இவர்கள் கங்கையை கடந்து சென்ற பின் அல்லவா இராமனிடம் காட்ட முடியும்? இவர்களினால் மனப் புழுக்கம் அடைந்த வேடர்களே. நீர்த்துறையிலிருந்து படகுகளை விலக்கி விடுங்கள். இவனைத் தடுக்க முடியாவிட்டால் இராமனுக்கு முன்னரே நாம் உயிரை இழந்து விடுவது நல்லது அல்லவா? என குகன் கூறுவதாக விளக்கப்பட்டுள்ளது.

"போன படைத் தலைவீரர்..." என்னும் செய்யுளில் நம்முடன் வந்துள்ள படையிலுள்ள சிறந்த வீரர்களுக்கு, ஒருவேளை போருக்காயினும் காணாததாக இப்படை இருக்கட்டும், தேவர்களே படையெடுத்து வந்தாலும் என் வில்லாகிய கரியமேகம் இடைவிடாது அம்பு மழையைச் சொரியவும் எதிரிகளது குடல்கள் சிதைந்து அழியவும், எதிரிப் படைகள் தம் கையிற் பிடித்த ஒளிவீசும் வாள்களோடு இறந்து போகவும், ஒப்பற்ற யானைப்படைகள் அழியவும் அந்தப் படையை மண்ணிற் சாய்க்காமல் விடுவேனா?

"நின்ற கொடைக் கை என்..." என்னும் பாடல் மூலம் என்றும் கொடை முழக்குகின்ற கைகளையுடைய என் அன்பிற்குரிய இராமனுக்குப் பெரிய மரவுரியை உடுக்குமாறு கொடுத்தவள் கைகேயி. அவளது மகனான பரதனது படையை என் அம்பினால் கொன்று குவித்து, கொழுப்பை மிகுதியாகக் கொண்ட படைக் இழுத்துக் கொண்டு ஒடிப்போய் நெருங்கிய அலைகளை கூட்டத்தை இந்தக் கங்கைநதி உடைய கடலில் அவற்றைச் சேர்த்து, அந்தக் கடலையே நிரப்பி விடாதா? என ஆவேசத்துடன் குகன் கூறியதாக கம்பர் உரைக்கின்றார்.

"ஆடுகொடிப் படை...." என்னும் பாடலில் அசையும் கொடிகளைப் கொண்ட படைகளைக் கொன்று, அறத்தின் துணைவர்களான இராம, இலக்குவணர்கள் அயோத்தியை ஆளும்படி, வேடர்கள் இந்தப் பூமியை மீட்டுக் கொடுத்தனர் என்கின்ற இந்தப் புகழை அடையுங்கள். பரதனுக்கு தன் நாட்டையே ஆளும்படி கொடுத்த என் தலைவனான இராமனுக்கு, இந்தப் பரதன் முதலியோர் நாம் ஆட்சி செய்யும் இந்தக் காட்டைக் கூடக் கொடுக்க மனமில்லாதவராய்ப் படையெடுத்து வந்த தனமையைப் பாருங்கள். வேடர்களிடம் என கோபக்கனலுடன் குகன் உரைத்ததை காண முடிகின்றது.

"மா முனிவர்க்கு உறவாகி...." என்னும் பாடலில் பெரிய முனிவர்களுக்கும் உறவினனாகி. காட்டினுள்ளே வாழும் இராமன், என்மேல் கோபிக்கக் கூடும் என்று மனதினுள்ளே சிறிதளவு சந்தேகம் கொள்ளாது, போர்க்களத்தில் பரதனுடன் போரிட்டால், இப்பொழுது ஏழு கடலளவு படை என்றாலும் பசு தின்ன முயன்ற சிறியளவு புல்லைப் போல அவன் படைகள் அனைத்தும் அழிந்து போகாதா? என வேடர்களைப் பார்த்து குகன் கோபத்துடன் கேட்பதாக கம்பர் கூறியுள்ளார்.

இவ்வரிய கருத்துக்கள் மூலம் கோபமடைந்த குகனின் வீரவார்த்தைகள் வெளிப்படுவதைக் காண முடியும்.

02. தயரத மைந்தர்களின் சிறப்புகள்

குகன் பரதனது படையைக் கண்டு சீற்றமடைந்து வீரவார்த்தைகளை இயம்பிய பகுதியில் கம்பர் இராமனின் சிறப்புக்களை குகனின் வாயிலாக எடுத்துக் கூறத் தயங்கவில்லை. தனது ப இந்நிலையை நாம் அறிய முற்படுகையில் இராமனின் பலவிதமான சிறப்புக்கள் பின்வருமாறு அமைகின்றன. "அஞ்சன் வண்ணன்" என்பதன் மூலம் போன்ற கரிய நிறத்தை மை உடையவன் என இராமன் சிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், "என்னாருயிர் நாயகன்”எனும் அடிகள் ஊடாக குகன் தன் அருமையான உயிருக்குத் தலைவன் எனவும் இராமனைச் சிறப்பிப்பதை காண முடிகின்றது

"நின்ற கொடைக் கைஎன் அன்பன்" என்னும் வரிகளில் என்றும் கொடை முழக்குகின்ற கைகளையுடைய இராமன் என இராமனின் கொடைச்சிறப்பு விபரிக்கப்பட்டுள்ளது.

'அறத்தவரே' என்பதில் அறத்தின் துணைவனென இராமனின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

"மாமுனிவர்க்குற வாகி வனத்திடையே வாழுங்" என்னும் அடிகள் மூலம் பெரிய முனிவர்களுக்கும் உறவினனாகி காட்டினுள்ளே வாழும் இராமன் என சிறப்பிக்கப்பட்டுள்ளதை நோக்க முடிகின்றது.

பரதனது சிறப்பும் இப்பகுதியில் கம்பரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேழ நெடும்படையுடையவன் என்பதில் யானைப்படையைக் கொண்டவன் எனவும், "தும்பியு மாவு மிடைந்த பெரும்படை சூழ்வாரும்" எனும் அடிகள் மூலம் யானைகளும், குதிரைகளும் நெருக்கமாக இருக்கும் பெரியபடை தம்மைச் சூழ இருக்க, வாசம் வீசும் மாலையணிந்த வாட்படையின் வலிமையைக் கொண்டவன் பரதன் எனவும் பரதனின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இலக்குவணனின் சிறப்பும் கம்பரால் விளக்கப்பட்டுள்ளது. "மொயி புலி யன்னானோர்” என்னும் அடிகள் மூலம் வலிமை மிக்க புலி போன்ற வீரனான இலக்குவன் என இலக்குவணனின் சிறப்பு உவமையணியின் துணையுடன் விளக்கப்பட்டுள்ளது. இலக்குவணன் சிறந்த வீரன் என்பதால் புலிக்கு உவமிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது.

03. இராமன் மீது குகன் கொண்ட பரிவும், மரியாதையும்

திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் இராமன் மீது வேடர்களின் தலைவனான குகன் கொண்டிருந்த அன்பும், மரியாதையும் அளப்பெரியது என்பதை பரதனும், அவனது சேனையும் கங்கைக் கரையைக் கடந்து பயணித்த தருணத்தில் கோபக்கனல் கொப்பளிக்க வீரவார்த்தை பேசிய குகன் இராமன் மீது தான் கொண்ட மரியாதையையும், அன்பையும் வெளிப்படுத்திய விதத்தை நாம் பின்வருமாறு அவதானிக்க முடிகின்றது.

“அஞ்சன் வண்ணன்.." என்னும் பாடலில் மை போன்ற கரிய நிறத்தை உடையவனும். எனது அரிய உயிர் நண்பனுமாகிய இராமன் அரசை ஆள முடியாதபடி வஞ்சகச் செயல்கள் மூலம் பரதன் ஆட்சியை பெற்றுக்கொள்வதாகக் கூறுவதில் இருந்து குகன் இராமன் மீது கொண்ட மரியாதையும், பரிவும் வெளிப்படுகின்றது.

"ஆழ நெடுந்திரை என்னும் பாடலில் இராமனுக்கு வந்த துயரத்தை தீர்ப்பதற்காக இந்த அற்பமான வேடன் இறக்கவில்லை என்று என்னைப் பேச மாட்டார்களா? எனவும், இராமன் தனது நண்பன் என சொல்லிய வார்த்தை ஒப்பற்ற வார்த்தையாகும் எனவும் குகன் குறிப்பிட்டதில் இருந்து இராமன் மீதான பரிவும், நட்பும் வெளிப்படுகின்றது. 

"முன்னவன் என்று..." எனும் பாடலில் பரதன் இராமனைத் தனது அண்ணன் என நினைக்கவில்லை. வலிமை மிக்க புலி போன்ற வீரனான இலக்குவன் என்னும் தம்பி அவனோடு எப்போதும் துணையாக நிற்கின்றனர் என்பதையும் நினைத்தான் இல்லை. அந்த இரண்டையும் நினைக்காது விட்டாலும், இராமனுக்குக் காவலிருக்கும் என்னைப் பொருட்ப்படுத்தாது விட்டது எதற்காக? எனது எல்லையைக் கடந்து அல்லவா இராமனிடம் செல்ல வேண்டும்? ஆவேசத்துடன் பேசுவதன் மூலம் இராமன் மீதான அன்பு என புலப்படுகின்றது.

"பாவமும் நின்ற பெரும் பழியும்..." எனும் செய்யுளில் பரதன் எனக்கு உயிர் போன்ற நட்பைத் தந்த இராமன் மேல் போருக்குச் செல்வது தமது படைகளையும் அரிய உயிரையும் என்னிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு போனதன் பின்னல்லவா முடியும்? என குகன் அளவுகடந்த கோபத்துடன் பேசுவதன் மூலம் தன்னுயிரை இராமனுக்காக தாரைவார்க்க குகன் தயாராக இருந்த தன்மையை அறிய முடிகின்றது.

"அருந்தவம் என்துணை ஆள...." என்னும் பாடலில் எனக்கு நண்பனான இராமன் செய்வதற்கரிய தவத்தைச் செய்து கொண்டிருக்க, இந்தப்பரதன் உலகத்தை ஆட்சி செய்வானோ? என்னுடைய உயிர் பெறுவதற்குரிய மருந்து போன்ற தேவாமிர்தமோ? அப்படியில்லை. இராமனுக்காகப் பரதனை எதிர்த்து நின்று பெரிய புகழைப் பெற்ற பின்னர் நான் இறக்க மாட்டானோ? என்னோடு பொருந்திய நட்பை என்னிடம் விரும்பி ஏற்று மகிழ்ந்த இராம இலக்குவணர்களோடு செல்லாமல் இங்கு நான் இங்கே இருந்தது நல்லதாகப் போய்விட்டது. இராமனுக்காகச் செய்ய வேண்டிய கடமையை இன்றே செய்து முடிப்பேன் என குகன் உறுதியாக உரைப்பதன் மூலம் இராமனுக்காக குகன் எடுத்துக்கொண்ட அக்கறையையும் ஆழ்ந்த அன்பையும் காண முடிகின்றது. 

"தும்பியும் மாவும்....." என்னும் பாடலில் பரதனைத் தடுக்க முடியாவிட்டால் இராமனுக்கு முன்னரே நாம் உயிரை இழந்து விடுவது நல்லது அல்லவா? என குகன் வேடுவர்களுக்கு கூறுவதாக விளக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இராமனுக்காக தானும், தன் படையும் உயரைக் கூடக் கொடுக்க தயாராகவிருந்த நிலையை கண்கூடாகக் கண்டு கொள்ள முடிகின்றது.

"நின்ற கொடைக் கை என்..." என்னும் பாடல் மூலம் என்றும் கொடை முழக்குகின்ற கைகளையுடைய என் அன்பிற்குரிய இராமனுக்குப் பெரிய மரவுரியை உடுக்குமாறு கொடுத்தவள் கைகேயி அவளது மகனான பரதனது படையை என் அம்பினால் கொன்று குவித்து, கொழுப்பை மிகுதியாகக் கொண்ட இழுத்துக் கொண்டு ஓடிப்போய் நெருங்கிய அலைகளை படைக் கூட்டத்தை இந்தக் கங்கைநதி உடைய கடலில் அவற்றைச் சேர்த்து. அந்தக் கடலையே நிரப்பி விடாதா? என ஆவேசத்துடன் குகன் கூறியதாக கம்பர் உரைக்கின்றார். இங்கு இராமனுக்குத் துன்பத்தைக் கொடுத்த கைகேயியின் மதனான பரதனையும், அவனது படையையும் அழிப்பேன் என குகன் கூறுவதிலிருந்து இராமன் மீதான பரிவும், மரியாதையும் வெளிப்படுவதைக் காண முடிகின்றது.

"ஆடுகொடிப் படை...." என்னும் பாடலில் அசையும் கொடிகளைப் கொண்ட படைகளைக் கொன்று, அறத்தின் துணைவர்களான இராம, இலக்குவணர்கள் அயோத்தியை ஆளும்படி, வேடர்கள் இந்தப் பூமியை மீட்டுக் கொடுத்தனர் என்கின்ற இந்தப் புகழை அடையுங்கள். என இராமனுக்கு சேவை செய்வதே உன்னதமான செயல் என குகன் உரைப்பது இராமனுக்காக குகன் எடுத்துக்கொண்ட அக்கறையையும் ஆழ்ந்த அன்பையும் சுட்டிக் காட்டி நிற்கின்றது. 

"மா முனிவர்க்கு உறவாகி...." என்னும் பாடலில் பெரிய முனிவர்களுக்கும் உறவினனாகி, காட்டினுள்ளே வாழும் இராமன். என்மேல் கோபிக்கக் கூடும் என்று மனதினுள்ளே சிறிதளவு சந்தேகம் கொள்ளாது பரதனையும், அவனது படையையும் நாசச் செய்வேன் என குகன் அறுதியிட்டுக் கூறுவதன் மூலம் இராமன் மீதான அன்பும், அக்கறையும் வெளிப்படுகின்றது. 

இதன்மூலம் குகன் இராமன் மீது கொண்ட பரிவையும், மரியாதைப் பண்பையும் எடுத்து நோக்க முடிகின்றது.

04. பரதனது சிறப்பும், இழிவும்

இராமன் மேல் கொண்ட அளப்பெரிய அன்பின் காரணமாக கேகயன் நாட்டிலிருந்த போது இராமன் காடு சென்ற செய்தி கேட்டு வருத்தமுற்று அயோத்திக்கு வந்து தன் தாயான கைகேயியை வஞ்சித்து இராமனை அயோத்திக்கு அழைத்துச் சென்று கொடுப்பதற்காக பரதன் தனது படையை கூட்டிக் கொண்டு கங்கையாற்றை கடக்கவிருந்த ஆட்சியை சந்தரப்பத்தில் குகன் அக்காட்சியை பரதன் இராமன் மீது போர் தொடுத்து வந்துள்ளான் என தவறாகப் புரிந்து கொண்டு குகன் வீர வார்த்தைகளை பழியாக பரதன் மீது வீசியதிலிருந்து பரதன் மீதான பழியுடன், சிறப்பும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பரதனது சிறப்பும் இப்பகுதியில் கம்பரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேழ நெடும்படையுடையவன் என்பதில் யானைப்படையைக் கொண்டவன் எனவும், "தும்பியு மாவு மிடைந்த பெரும்படை சூழ்வாரும்" எனும் அடிகள் மூலம் யானைகளும், குதிரைகளும் நெருக்கமாக இருக்கும் பெரியபடை தம்மைச் சூழ இருக்க, வாசம் வீசும் மாலையணிந்த வாட்படையின் வலிமையைக் கொண்டவன் பரதன் எனவும் பரதனின் சிறப்பு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

பரதன் மீதான பழிச்சொற்களை நோக்கும் போது "அஞ்சன் வண்ணன்...” என்னும் பாடலில் மை போன்ற கரிய நிறத்தை உடையவனும், எனது அரிய உயிர் நண்பனுமாகிய இராமன் அரசை ஆள முடியாதபடி வஞ்சகச் செயல்கள் மூலம் பரதன் ஆட்சியை அபகரித்ததாக பழி சுமத்தப்படுகின்றது.

"முன்னவன் என்று...." எனும் பாடலின் ஊடாக பரதன் இராமனைத் தனது அண்ணன் என நினைக்கவில்லை எனவும், "பாவமும் நின்ற பெரும் பழியும்...' எனும் பாடலில் இப்பூமியை ஆளும் அரசர்கள் தாம் செய்யும் தவறான செயல்களால் ஏற்படும் பாவத்தையும் தமக்கு ஏற்படப் போகும் பழியையும், தாம் போருக்குச் செல்பவரின் பகைவர் யார்? நண்பர் யார்? என்பதை அறியாததால் ஏற்படும் குற்றங்களையும் நினைத்துப் பார்க்க மாட்டார்களா? எனக் குகன் பரதன் மீது அடாப்பழி சுமத்துவதையும் காண முடிகின்றது.

"போன படைத் தலைவீரர்..." என்னும் செய்யுளில் நம்முடன் வந்துள்ள படையிலுள்ள சிறந்த வீரர்களுக்கு, ஒருவேளை போருக்காயினும் காணாததாக படை இருக்கட்டும். என பரதனது படையை குகன் பழிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

"நின்ற கொடைக் கை என்..." என்னும் பாட வி மூலம் என்றும் கொடை முழக்குகின்ற கைகளையுடைய என் அன்பிற்குரிய இராமனுக்குப் பெரிய மரவுரியை உடுக்குமாறு கொடுத்தவள் கைகேயி. அவளது மகனான பரதனது படையை என் அம்பினால் கொன்று குவித்து. கொழுப்பை மிகுதியாகக் கொண்ட படைக் கூட்டத்தை இந்தக் கங்கைநதி இழுத்துக் கொண்டு ஓடிப்போய் நெருங்கிய அலைகளை உடைய கடலில் அவற்றைச் சேர்த்து, அந்தக் கடலையே நிரப்பி விடாதா? என ஆவேசத்துடன் குகன் கூறியமையில் இருந்து பரதன் மீதான பழிநிலையை அறிந்து கொள்ள முடிகின்றது.

பரதனுக்கு தன் நாட்டையே ஆளும்படி கொடுத்த என் தலைவனான இராமனுக்கு, இந்தப் பரதன் முதலியோர் நாம் ஆட்சி செய்யும் இந்தக் காட்டைக் மனமில்லாதவராய்ப் படையெடுத்து வந்த தன்மையைப் பாருங்கள். கோபக்கனலுடன் முடிகின்றது. குகன் கூடக் என கொடுக்க வேடர்களிடம் உரைத்ததில் இருந்து பரதன் மீதான பழிநிலையைக் காண முடிகின்றது.

"மா முனிவர்க்கு உறவாகி...." என்னும் செய்யுளில் போர்க்களத்தில் பரதனுடன் போரிட்டால், இப்பொழுது ஏழு கடலளவு படை என்றாலும் பசு தின்ன முயன்ற சிறியளவு புல்லைப் போல அவன் படைகள் அனைத்தும் அழிந்து போகாதா? என வேடர்களைப் பார்த்து குகன் கூறுவதில் இருந்து பரதனை அழிக்க வேண்டும் எனும் அளவுக்கு பரதனது குற்றமும், பழிநிலையும் குகனால் வேடர்களுக்கு உரைக்கப்பட்டதன் ஊடாக அறியக்கிடக்கின்றது.

இவ்வாறாக பரதனது சிறப்பையும், இழிவையும் அடையாளங் காண முடிகின்றது. அணிகள் கையாளப்பட்ட விதம் என்பவற்றை விளக்குக. 

05. அணிகள் கையாளப்பட்ட விதம் என்பவற்றை விளக்குக

பரதனும், சேனைகளும் கரையிலிருந்து தென் கரைக்கு வரும் போது இராமனை வட அழிப்பதற்காக அப்படைகள் வருகின்றன என சந்தேகங் கொண்ட குகன் வேடர்களுக்கு உரைத்த கட்டளை 14 முதல் 23 வரையான பாடல்கள் வரை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் உவமையணி, உருவகஅணி, உயர்வுநவிற்சியணி முதலிய பொருளணிகளை கையாண்டுள்ளமையை பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.

உவமையணியை நோக்கும் போது "அஞ்சன் வண்ணன்" என்பதன் மூலம் மை போன்ற கரிய நிறத்தை உடைய இராமன் என்பதன் மூலம் இராமனின் திருமேனி கரிய நிற மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இராமனின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.

"நாய்குகன்" என்னும் அடியில் நாய்போல இழிந்த குகன் எனக்கூறி பரதனை தோற்கடிக்காத அவமானம் கொண்ட குகனின் நிலையை நாய்க்கு உவமிப்பதன் மூலம் குகனின் இழிவுச் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

"மொய்புலி யன்னானோர்" என்னும் வரிகளில் வலிமைமிக்க புலி போன்ற வீரனான இலக்குவன் எனக்கூறுவதன் மூலம் இலக்குவணனின் வீரச்சிறப்பு புலிக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

"சிலை மாமேகஞ் சோனை பட” என்னும் வரிகளில் வில்லாகிய கரியமேகம் அம்புமழையைப் பொழிதல் எனக் கூறுவதன் மூலம் குகன் அம்பை விடும் காட்சி மழை பெய்கின்ற தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குகனது வீரச்சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.

"ஏழு கடற்படை என்றாலும் ஆ முனையின் சிறு கூழ் என” என்னும் செய்யுள் அடிகளின் மூலம் பரதனது படையை குகன் அழிக்க எண்ணும் தன்மை பசு தின்ன முயன்ற சிறியளவு புல்லின் நிலைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பரதனது படையின் இழிவும், குகனின் வீரச்சிறப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. மேலும் பரதனது படை ஏழுகடலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இது பரதனது படையின் வியாபகத் தன்மையை விளக்கி நிற்கின்றது.

''மருந்தெனி னன்றுயிர்" என் குகனது யிர் மருந்துக்கு உவமிக்கப்பட்டுள்ளது. இராமனுக்காக உயிரை இழப்பேன் எனக் கூறுவதில் தன்னுடைய உயிர் மருந்து போன்ற தேவாமிர்தம் அல்ல எனக் குகன் கூறுவதில் இவ்வுவமையைக் காணலாம். இதன்மூலம் குகனது உயிரின் சிறப்பு விளக்கப்பட்டுள்ளது.

அடுத்து உருவக அணியை நோக்கும் போது "சிலை மாமேகஞ் சோனை பட" வில்லாகிய கரியமேகம் அம்புமழையைப் பொழிதல் எனக் கூறுவதன் மூலம் கரியமேகம் வில்லுக்கும். அம்பு மழைக்கும் உருவகிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. இது குகனின் வீரச்சிறப்பை உணர்த்தி நிற்கின்றது.

"அம்பாலே கொன்று குவித்த நிணங்கொள் பிணக்குகை கொண்டோடித் துன்று திரைக்கடல் கங்கை மடுத்திடை தூராதோ?” என்னும் செய்யுள் அடிகள் மூலம் உயர்வு நவிற்சி அணி கம்பரால் கையாளப்பட்டுள்ள தன்மையை அறிய முடிகின்றது. சான்றாக குகன் பரதனது படையை அம்பினால் கொன்று குவித்து, கொழுப்பை மிகுதியாகக் கொண்ட படைக் கூட்டத்தை கங்கைநதி இழுத்துக் கொண்டு ஓடிப்போய் நெருங்கிய அலைகளை உடைய கடலில் அவற்றைச் சேர்த்து, அந்தக் கடலையே நிரப்பி விடும் என்று கம்பர் உரைப்பதில் அழிக்கப்பட்ட பரதனது சேனை கடலை நிரப்பிவிடும் எனக் கூறுவது சேனையின் மிகுதியை கூறுவதால் அதனை உயர்வு நவிற்சி அணி எனக் கொள்ள முடியும். அத்துடன் சேனையை அழிக்கும் குகனது வீரச்சிறப்பும் அங்கு விளக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. இவ்வாறாக கம்பர் அணிகளைக் கையாண்டு தனது கற்பனை வளத்தை வெளிக்காட்டிய விதத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

03. சுமந்திரன் குகனைப்பற்றிப் பரதனுக்கு விளக்குதல் முதல் இராம, இலக்குவணன் பற்றி அறிந்து பரதன் நொந்துரைத்தல் வரையிலான பகுதியில்

01. சுமந்திரன் குகன் பற்றி பரதனுக்கு உரைத்த வார்த்தைகள்

குகன் வேடுவர்களுக்கு வீர வார்த்தைகளைக் கூறி முன் வந்து நிற்பதைப் பார்த்த, வலிய தேரைச் செலுத்துவதில் வல்லவனான சுமந்திரன் ஆண் சிங்கம் போன்ற பரதனிடம் குகன் பற்றி உரைத்த வார்த்தைகளை நாம் பின்வருமாறு மட்டிட முடிகின்றது.

"கங்கை இரு கரை உடையான்...." என்னும் செய்யுள் மூலம் கங்கையாற்றின் இரு கரைகளிலுமுள்ள பகுதிகளைத் தனக்குச் சொந்தமாக உடையவன். அளவிட முடியாத படகுகளை உடையவன். உங்களது சூரிய குலத்தில் தோன்றிய ஒப்பற்ற தலைவனான இராமனுக்கு உயிர் நண்பன். உயர்ந்த தோள்களையுடையவன். கொடிய ஆண் யானை போன்றவன். வில்லைக் கையிற் பிடித்த வேடர்படையாகிய கடலையுடையவன். தென் சொரியும் வாசைன பொருந்திய மாலையை அணிந்துள்ள குகன் என்னும் பெயரை உடையவன் இவன் என சுமந்திரன் உரைப்பது காட்டப்பட்டுள்ளது.

" கல் காணும் திண்மையான்...." என்னும் பாடலில் மற்போரில் எல்லை கண்ட அழகிய நீண்ட தோள்களையும் மேகம் போன்றதும் நீலமணி போன்றதுமான நிறத்தை உடைய பரதனே! மலை போன்ற வலிமையும், இராமனிடம் எல்லை இல்லாத பேரன்பும். இருளைக் கண்டால் போன்ற அழகு பொருந்திய உடலும் உடையவனான குகன், உன்னைப் பார்க்க வேண்டும் என்னும் மனக் கருத்துடையவனாக நீ செல்லும் வழியின் எதிரில் நின்று கொண்டிருக்கின்றான் என பரதனிடம் சுமந்திரன் கூறுவதாக விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக குகன் பற்றி பரதனிடம் சுமந்திரன் எடுத்துரைப்பதை கண்டு கொள்ள முடிகின்றது.

02. குகனது சிறப்புக்கள்

இராமனுக்கு உற்ற நண்பனும், வேடுவர் தலைவனும் இராமனுக்காக உயிரைக் கூட கொடுக்க ஏங்கியவனுமான குகன் பற்றி சுமந்திரன் பரதனிடத்தில் உரைத்த வார்த்தைகளில் பல குகனது புகழ் பாடுவதாக அமைந்திருந்தது. அத்தகைய சிறப்புக்களாக விளங்குவனவற்றை நோக்கும் போது,

மலை போன்ற உறுதியான உடலைக் கொண்டவன் என்பதை "கற்காணுந் திண்மையான்" எனும் வரிகளும், இராமன் மேல் எல்லையில்லாத அன்பு கொண்டவன் என்பதை "கரைகாணாத் காதலான்” எனும் வரிகளும், இருளைக் கண்டால் போலும் அழகு பொருந்திய உடலை உடையவன் என்பதை "அற்காணிற் கண்டனைய வழகமைந்த மேனியான்' எனும் வரிகளும், கங்கையின் இரு கரைகளையும் தன் ஆட்சிப் பரப்ப்புக்குள் கொண்டவன் என்பதை "கங்கை இரு கரை உடையான்" எனும் வரிகளும். அளவற்ற படகுகளை உடையவன் என்பதை “கணக்கு இறந்த நாவாயன்" எனும் வரிகளும் விளக்கி நிற்கின்றன.

இராமனுக்கு உயிர்த்துணையானவன் என்பதை “உங்கள் குலத் தனிநாதற்கு உயிர்த்துணைவன்" எனும் வரிகளும், உயர்ந்த தோள்களை உடையவன் என்பதை "உயர் தோளான்" எனும் செய்யுள் அடியும் கொடிய ஆண்யானை போன்றவன் என்பதை "வெங்கரியின் ஏறு அனையான்" எனும் வரிகளும், வில்லேந்திய வேடர் படையைக் கொண்டவன் என்பதை "வில் பிடித்த வேலையினான்" எனும் வரிகளும் "கொங்கு அலரும் நறுந் தண் கார்க் குகன்” எனும் அடிகள் மூலம் தேன் சொரியும் வாசனை பொருந்திய மாலையை அணிந்துள்ள குகன் அலங்கரிக்கப்பட்ட வீரக்கழலை அணிந்தவன், புலால் நாற்றம் வீசும் வேலைக் கையில் கொண்டவன் எனவும் சிறப்பாக கம்பர் குகனது புகழை விளக்கி இருப்பதை தெளிவாக அறிய முடிகின்றது.

03. பரதனின் நிலை கண்ட குகனின் மாற்றமும், அதற்கான காரணங்களும்

இராமன் மீது அளவற்ற அன்பு கொண்ட நண்பனான குகனை முதலில் தான் சென்று பார்ப்பேன் என உரைத்து சத்துருக்கனுடன் புறப்பட்டு குகன் மேல் எழுந்த அன்போடும் ஒரு மலையே புறப்பட்டு நடந்து சென்றது போன்று குளிர்ச்சி பொருந்திய கங்கைக் கரையை வந்தடைந்த பரதனை, வாசனை பொருந்திய தலைமுடியை உடைய வேடுவர் தலைவனான குகன் பார்த்துத் திடுக்கிட்டான். அவ்வாறு திடுக்கிட்ட பின் பரதனின் பின்வரும் செயல்களைப் பார்த்து "எம் பெருமான் பின் பிறந்தவர் இழைப்போரோ பிழைப்பு" என்று குகன் தீர்மானித்தமையையும்காண முடிகின்றது. அதற்கான காரணங்கள் பின்வருமாறு கூறப்படுகின்றன. 

பரதன் மரவுரி ஆடையை அணிந்திருந்தமையும், புழுதி படிந்த உடலைக் கொண்டிருந்தமையும், கலைகள் இல்லாத சந்திரன் போன்று பொலிவிழந்த முகத்தைக் கொண்டிருந்தமையும். கல்லே கனிந்துருகும்படி வருந்துகின்ற துயரத்தையும் உடையவனாக பரதன் காட்சியளித்தமைக் கண்ட குகனின் கைகளில் இருந்து வில் நழுவி கீழே விழ. கலங்கிச் செயலிழந்து குகன் நின்றதாக புலவர் "வற்கலையின் உடையானை...." எனும் பாடல் மூலமாக கூறுகின்றார்.

மேலும் "நம்பியும் நாயகனை..." எனும் செய்யுளில் பரதன் இராமனையும், சத்துருக்கன் இலக்குவணனையும் ஒத்திருத்தல், இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுதமை. இராம பிரானைப் போன்று தவ வேடம் பூண்டிருத்தல், முதலிய விடயங்களைக் கருத்திற் கொண்டு குகன் "எமது கடவுளாகிய இராமனுக்குப் பின்னர் பிறந்த தம்பியர் தவறு செய்வார்களா?" என்று எண்ணியதாகவும், "உண்டு இடுக்கண் என்று..." எனும் பாடல் மூலம் இராமனிடம் மாறா அன்பு கொண்டிருத்தல், துன்பம் கொண்டவனாக பரதன் இருத்தல் முதலியவற்றைக் கண்டு பரதனைக் காண ஆவலோடு குகன் தன்னந் தனியாக படகொன்றில் சென்றதாக கம்பர் கூறுகின்றார்.

இதன்மூலம் பரதனின் நிலை விபரிக்கப்படுவதை காணலாம். கண்ட குகனின் மாற்றமும், அதற்கான காரணங்களும்

04. இராம இலக்குவன் பற்றி பரதன் வினாவுதலும், அதற்கு குகன் பதிலுரையும்

கருணை பொழியும் கடல் போன்ற செம்மையான நெறியிற் செல்லும் மனதையுடைய பரதன், அப்போது குகனைப் பார்த்து. இராமன் சென்ற தெற்குத் திசை நோக்கித் தனது சிவந்த கைகளைக் கூப்பித் தொழுது எமது அண்ணன் எவ்விடத்தில் தங்கியிருந்தான்? என்று வினவியதுடன், வேடர் தலைவனான குகன். “இந்த இடத்தில் தான் தங்கியிருந்தார். நானே அதைக் காட்டுவேன். புறப்படுவாய்" என்று கூறினான்.

தூணைப் போல உயர்ந்த தோள்களையுடைய பரதன். மீண்டும். குகனைப் பார்த்து சொல்லத் தொடங்கினான். "அந்தப் பெரியவனான இராமன், நித்திரை செய்த இடம் இது என்றால் இராமன்மேல் மிகுந்த அன்பு கொண்டவனாய் அவனைத் தொடர்ந்து அவன் பின்னே வந்தவனாகிய இலக்குவணன். இரவுப் பொழுதை கழித்தது எந்த இடத்தில்?" என்று இனிமையாகக் கேட்டான். அதற்கு வேடர் தலைவனான குகன், "மலையை விட உயர்ந்த தோள்களை உடையவனே! இருளைப் போன்ற கரிய உடலை உடைய அழகிய இராமனும். சீதையும் நித்திரை செய்ய, வீரனான இலக்குமணன் வில்லை ஏந்திய கையோடும், வெப்பமான பெருமூச்சோடும் கண்களிலிருந்து நீர் சொரிய, இரவு முடியும் வரைக்கும் கண்கள் இமைக்காமல் நின்றுகொண்டே காவல் செய்தான்” என்று பரதனிடம் கூறினான். இவ்வாறு இராம இலக்குவன் பற்றி பரதன் வினாவுதலும், அதற்கு குகன் பதிலுரையும் அமைகின்றது.

05. பரதன் இராம, இலக்குவணன் பற்றி அறிந்ததும் அடைந்த துயரும், அவர்கள் மீதான அன்பும் வெளிப்படும் விதமும் 

குகனைக் கண்டு தன் சகோதரர்களான இராம, இலக்குவணர்கள் பற்றி ஆவலுடன் பரதன் வினவிய சந்தர்ப்பத்தில் குகன் அளித்த பதிலுரையால் பரதன் அடைந்த துயரானது அளவற்றது. மிகவும் ஆழமானது. வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. அத்தகைய துன்பநிலையை கம்பர் எடுத்தியம்பியதை பின்வருமாறு எடுத்து நோக்கலாம்.

கருணை பொழியும் கடல் போன்ற செம்மையான நெறியிற் செல்லும் மனதையுடைய பரதன், அப்போது குகனைப் பார்த்து, இராமன் சென்ற தெற்குத் திசை நோக்கித் தனது சிவந்த கைகளைக் கூப்பித் தொழுது எமது அண்ணன் எவ்விடத்தில் தங்கியிருந்தான்? என்று வினவியதுடன், வேடர் தலைவனான குகன், "இந்த இடத்தில் தான் தங்கியிருந்தார். நானே அதைக் காட்டுவேன். புறப்படுவாய்" என்று கூறினான்.

மேகம் போல விரைந்த பரதன் குகனால் சுட்டிக்காட்டப்பட்ட கட்டமைந்த வில்லை ஏந்திய நிண்ட கைகளையுடைய இராமன் தங்கியிருந்த கற்களிடையே புற்கள் பரப்பப்பட்டிருந்த படுக்கையைப் பார்த்துப் பூமி மேல் துடிதுடித்து வீழ்ந்து, துன்பம் எனும் கடலில் புகுந்து. பெருகிடும் முத்துமணி போன்ற கண்ணீரினால் பூமியை திருமஞ்சன நீரால் குளிப்பாட்டுகின்ற கண்ணையுடையவனாக பரதன் துயர் கொண்டதாக கம்பர் "காரெனக் கடிது சென்றான்...." எனும் செய்யுளில் விபரித்துள்ளார்.

இராமனே உனக்கு என் காரணமாக வனவாசமாகிய இந்தத் துன்பம் ஏற்பட்டது என்றும், கிழங்கினையும், காயினையும் அமுது போல உண்டனை என்றும் உறங்குவதற்கு அரிய புல்லால் ஆகிய படுக்கையில் நித்திரை செய்தாய் என்றும் அறிந்த போது நான் உயிரை நீக்கிக் கொள்ளவில்லை. அது மட்டுமா? ஒளி விடும் பொன்னால் செய்யப்பட்ட உயர்ந்த முடியைச் சூடி, அரச செல்வத்தையும். நானே ஏற்றுக் கொள்வேன் போலிருக்கிறதே! என பரதன் ஏங்கித் தவித்ததாகவும் "இயன்றதென் பொருட்டினால்...." எனும் பாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தூணைப் போல உயர்ந்த தோள்களையுடைய பரதன், மீண்டும். குகனைப் பார்த்து சொல்லத் தொடங்கினான். “அந்தப் பெரியவனான இராமன், நித்திரை செய்த இடம் இது என்றால் இராமன்மேல் மிகுந்த அன்பு கொண்டவனாய் அவனைத் தொடர்ந்து அவன் பின்னே வந்தவனாகிய இலக்குவணன், இரவுப் பொழுதை கழித்தது எந்த இடத்தில்? என்று இனிமையாகக் கேட்டான். அதற்கு வேடர் தலைவனான குகன், "மலையை விட உயர்ந்த தோள்களை உடையவனே! இருளைப் போன்ற கரிய உடலை உடைய அழகிய இராமனும். சீதையும் நித்திரை செய்ய, வீரனான இலக்குமணன் வில்லை ஏந்திய கையோடும். வெப்பமான பெருமூச்சோடும் கண்களிலிருந்து நீர் சொரிய, இரவு முடியும் வரைக்கும் கண்கள் இமைக்காமல் நின்றுகொண்டே காவல் செய்தான்" என்று பரதனிடம் கூறினான்.

இதைக் கேட்ட பரதன் அடைந்த அளவில்லாத துயரம் "என்பதைக் கேட்ட மைந்தன்....' என்னும் செய்யுளில் விளக்கப்பட்டுள்ளது. "இராமனுக்கு தம்பி என்று ஒரே தன்மையான பிறப்பைப் பெற்ற எங்கள் இருவரிலும் பரதனாகிய நான் என்றும் முடிவில்லாத துன்பத்துக்குக் காரணம் ஆனேன, இலக்குமணனோ இராமனின் துன்பத்தை நீங்கத் துணை நின்றான். அவனது அன்புக்கு எல்லை இருக்கின்றதா? நான் இராமனுக்குச் செய்யும் அடிமைத்தன்மை நன்றாகத்தான் இருக்கிறது?" என்று ஏக்கத்துடன் பரதன் கூறினான். இதன்மூலம் இராம இலக்குமணர்கள் நிலை கண்டு பரதன் அடைந்த துன்பம் வெளிப்படுவதுடன், அவர்கள் பற்றி வினாவியமையும், அவர்கள் நிலை கண்டு துன்பமுற்று புலம்புகின்றமையும், சகோதரர்கள் மீதான பரதனது ஆழ்ந்த அன்பையும் வெளிக்காட்டுகின்றது.

06. பரதனின் சிறப்புக்கள்

இராமபிரானின் சகோதரனாக அவதரித்தவனும், கைகேயியின் செயலால் துன்புற்று, கானகம் சென்ற இராமனை மீட்டுவர மிகுந்த இன்னலுற்று, தனது சேனையுடன் வனம் சென்றவனான பரதன். குகனைச் சந்தித்து இராம. இலக்குவணர்களை பற்றி ஆராய்ந்த பகுதியில் பரதனது பல பெருமைகள் இழையோடி உள்ளதை காண முடிகின்றது. 

ஆண் சிங்கம் போன்ற வலிமை கொண்டவன்.

மற்போரில் எல்லை கண்ட அழகிய நீண்ட தோள்களையும், மேகம் போன்றதும் நீலமணி போன்றதும் நிறத்தை உடையவன்.

குற்றமில்லாத நல்ல மனத்தை உடைய பரதன்

மலையே புறப்பட்டு வந்தாற் போன்ற சிறப்புடையவன்

சந்திரன் போல ஒளியிழந்த முகத்தை உடையவன். 

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் வணங்கும் தகுதி கொண்ட பரதன்.

தாமரை போன்ற சிவந்த கண்களை உடையவன்.

திரண்ட கற்றூணை விட வலிமையான உயர்ந்த தோள்களை உடையவன்.

சித்திரத்தில் வரைவதற்கும் அருமையான மிக அழகிய திருமேனியை உடையவன்.

பரதனின் சிவந்த பாதங்கள் தாமரையாக உருவகித்துக் கூறப்பட்டுள்ளது. 

ஆயிரம் இராமர்களும் ஒப்பாகாத நற்பண்பு கொண்டவன்.

உயர்ந்த குணங்களையும் வலிமையான தோள்களையும் கொண்டவன்.

சூரியனது ஒளித்தொகுதி மற்றையவற்றின் ஒளிகளை எல்லாம் இல்லாமல் செய்வது போல, நிலைத்த புகழைக் கொண்ட சூரிய குலத்து அரசர்களின் புகழை எல்லாம் தனக்குள் அடக்கிக் கொண்டவன்.

கருணை பொழியும் செம்மையான நெறியில் செல்லும் மனதையுடையவன்.

மேகம் போல விரைந்த பரதன்

துன்பம் எனும் கடலில் புகுந்து, பெருகிடும் முத்துமணி போன்ற கண்ணீரினால் பூமியை திருமஞ்சன நீரால் குளிப்பாட்டுகின்ற கண்ணையுடையவனாக பரதன்

தூணைப் போல உயர்ந்த தோள்களையுடைய பரதன்

மலையை விட உயர்ந்த தோள்களை உடையவன்

மேற்கூறியவாறு பரதனின் சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. 

07. அணிகள் கையாளப்பட்ட விதம் என்பவற்றை விளக்குக.

சுமந்திரன் குகனைப்பற்றிப் பரதனுக்கு விளக்குதல் முதல் இராம, இலக்குவணன் பற்றி அறிந்து பரதன் நொந்துரைத்தல் வரையிலான பகுதியில் உவமையணி, உருவக அணி போன்ற பொருளணிகள் கையாளப்பட்டுள்ளதை பின்வருமாறு நோக்கலாம். 

உவமையணி

"இரும்பு அன மேனியர்" என்பதில் வேடுவர்களின் இரும்பிற்கு உவமிக்கப்பட்டுள்ளது

"வெங்கரியின் ஏறுஅனையான்" என்பதில் குகன் கொடிய ஆண் யானைக்கு  உவமிக்கப்பட்டுள்ளான். 

"அரியேறு அன்ன" என்பதில் வலிமையான பரதன் ஆண் சிங்கத்திற்கு உவமித்து கூறப்பட்டுள்ளான். 

"மழை காணும் மணி நிறத்தாய்" என்பதில் பரதனது திருமேனி மேகத்திற்கும், நீலமணிக்கும் உவமிக்கப்பட்டுள்ளது.

"கற்காணும் திண்மையான்" என்பதில் குகனது வலிமை மலைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

"அற்கு ஆணி கண்டனைய அழகு அமைந்த மேனியான்" என்பதில் குகனது அழகு இருளுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

"குன்று எழுந்து சென்றதெனக்" என்பதில் பரதன் நடந்து செல்லும் காட்சி மலை எழுந்து செல்வதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

"நற்கலை இல் மதியெனக்" என்பதில் இராமனை எண்ணி பரதன் துயர் அடைந்து பொலிவிழந்து காணப்படும் தன்மை  கலைகள் இல்லாத சந்திரனின் தன்மைக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

“தாமரைச் செங்கணானை” என்பதில் பரதனின் கண்கள் சிவந்த தாமரை மலருக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

"இரவி என்பான் தன் புகழ்க்கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்" என்பதில் நிலைத்த புகழைக் கொண்ட சூரிய குலத்து அரசர்களின் புகழை எல்லாம் தனக்குள் பரதன் அடக்கிக் கொண்ட தன்மை சூரியனது ஒளித்தொகுதி மற்றையவற்றின் ஒளிகளை எல்லாம் இல்லாமல் செய்து தனக்குள் உள்ளடக்குகின்ற தன்மைக்கு உவிமிக்கப்பட்டுள்ளது.

"அருள்தரு வாரியன்ன" என்பதில் பரதனது இரக்கத்தன்மை கருணைபொழியும் கடலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

"காரெனக் கடிது சென்றான்" என்பதில் இராமன் தங்கியிருந்த இடத்தைக் காண ஆவலுடன் விரைந்த பரதன் மேகத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

“பெருகிடும் முத்துமணி போன்ற கண்ணீரினால் பூமியை திருமஞ்சன நீரால் குளிப்பாட்டுகின்ற கண்ணையுடையவனாக பரதன்" என்பதில் இராமன் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து பரதன் அழுத கண்ணீர் முத்திற்கும். பரதன் தொடர்ந்து அழுகின்ற காட்சியை பூமியை திருமஞ்சன நீரால் குளிப்பாட்டுகின்ற தன்மைக்கும் புலவர் உவமிப்பதைக் காண முடிகின்றது.

பரதனது உயர்ந்த தோள்கள் தூண்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளதை நோக்கலாம்.

உருவக அணி

"சேவடிக் கமலப்பூவில்" என்பதில் பரதனின் திருப்பாதங்கள் தாமரைப் பூக்களுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது.

"பருவரற் பரவை புக்கான்" என்பதில் இராமன் தங்கியிருந்த இடத்தைப் பார்த்து பரதன் அடைந்த துன்பம் கடலுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் கம்பரின் அருமையான பொருளணிப்பிரயோகத்தை மட்டிட முடிகின்றது.

04. கங்கையின் தென்கரை சேர்க்குமாறு குகனைப் பரதன் வேண்டல் முதல் பரதனும் உடன் வந்தோரும், சேனைகளும் கங்கையைக் கடத்தல் வரையிலான பகுதியில்

01. பரதனின் சேனைகள் கங்கையைக் கடத்தல்

அண்ணல் இராமனைத் தேடிய பயணத்தில் குகனின் உதவி பரதனுக்கு கிடைத்தமை இமயத்தை ஏற நினைத்தோருக்கு சமயத்தில் கிடைத்த உதவி என்றே கூற வேண்டும். பரதனுடன் விரைந்த அளவில்லாத சேனைகள் கங்கையைக் கடக்க, குகன் உதவியதுடன், அச்சேனைகள் கங்கையைக் கடந்த விதம் கற்பனை வளம் பொருந்திய கவிச்சக்கரவர்த்தி கம்பனின் கவிவரிகளில் சுவைமிக்க செய்திகளைத் தாங்கி வந்த விதம் கற்பனைக்கு எட்டாதது. சொற்களில் வடிக்க முடியாதது.

யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை, ஆகிய நாற்படைகளும் கங்கையைக் கடந்து சென்ற விதத்தை பின்வருமாறு கம்பர் விபரிக்கின்றார்.

யானைகள் நீண்ட துதிக்கைகளை உயரத் தூக்கி கங்கை நதியில் நீந்திச் சென்றன. அவை கூட்டமான மேகங்கள் மோதுவதால் உண்டாகிய முழக்கம் அதிகரிக்க, கடல் நீரை யுகப்பிரளய காலத்தில் அடியோடு வற்ற உண்பதற்கு நெருங்கிய போலவும், கொடியோடு கூடிய கப்பல் பாய் மரத்துடன் செல்வது போலவும் காணப்பட்டன.

கொடிய யானைகள் தள்ளுதலால் சங்கு. சுறாமீன், முத்து, மாணிக்கம், ஆகியவற்றைத் தள்ளியபடி மரக்கலங்களையுடைய கடலும், நீரினைக் கங்கை நதியில் பரவச் செய்தது. இது கங்கை நதியும் இராமனைக் காணும் அன்பு அதிகரிப்பதாய்க் கரை கடந்து செல்வது போல் இருந்தது.

பெண்களின் மேலாடை போல அலைகள். உலகின் மிகுந்த நீர்ப்பரப்பினையுடைய ஆற்றுப் பள்ளத்துள், மதநீர்ப் பெருக்காகிய கலங்கல் வெள்ளத்தினை உடைய மலை போன்ற யானைகள், நீரினால் மறைக்கப்பட்டுத் தலைகள் மட்டும் நீரின் மேலே தோன்றும் படி நீரினால் மறைக்கப்பட்டுத் தலைகள் மட்டும் நீரின் மேலே தோன்றும்படி காணப்பட்டன. கங்கைப்பரப்பில் காணப்படுகின்ற தலைமேடுகள் பெண்களின் மார்பகங்கள் போன்றிருந்தன. என்றெல்லாம் யானைப்படைகள் கங்கையைக் கடந்ததாக கவிச்சக்கரவர்த்தி விளம்புகிறார்.

வலிமையான தேர்கள் கொடிஞ்சியுடன், தேர்த்தட்டும் சக்கரமும் இணைத்த மொட்டையும். கொடியையும் பிறவற்றையும் முறைப்படி தனித்தனியாகப் பிரித்து, குதிரைகளைத் தனித்தனிப் படகுகளில் ஏற்றி அக்கரைக்குச் கொண்டு செல்லப்பட்டன. இறந்த உயிர்களுக்கு வேறு உடம்பினைக் கூட்டுகின்ற செயல்போல இது காணப்பட்டது.

பால் திரண்டது போன்ற வெண்ணிற உடம்பையும், பயம் திரண்டாற் போன்ற திடுக்கிடும் மனத்தையும் காற்று ஒன்றுகூடிய போன்ற வேகமாகச் செல்லும் கால்களையும், விரைந்து செல்லும் நடையையும் உடைய சேணம் அணிந்த பாயும் குதிரைகள் எட்டுக் கோடியானவை. கயல் மீன்கள் கூடிச் செல்வது போலக் குற்றமற்ற படகுகளின் மேல் நிமிர்ந்து சென்றன.

தளிர் போன்ற மென்மையான கைகளையுடைய மகளிர் இடையே புகுந்து நெருங்கித் தள்ளுதலால் அவர்களது திரண்ட கொங்கைகள். மதமகிழ்வுடைய பெருமைமிக்க யானைகள் வரிசையில் தம் அழகிய தந்தங்களால் குத்துவதற்கு நெருங்கியது போலக் காணப்பட்டன.

மரக்கலங்கள் செல்லும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோத, அது கண்டு குழை அணிந்த மகளிர் மனம் கலங்கி மயங்கி, அச்சமுற்று இருபுறமும் நோக்கும் போது அவர்களின் கண்கள் நீர்ப்பெருக்கால் கலங்குவது. ஆற்றுநீர் அங்குமிங்கும் கலங்குவதால் பயந்து துள்ளும் கயல்மீன் கூட்டத்தை ஒத்திருந்தது.

மரக்கலங்களைச் செலுத்தும் வேடர்கள் இருபக்கமும், துடுப்புக்களை அசைத்தலால் வீசுகின்ற நீர்த்துளிகள் மகளிரது மெல்லிய ஆடைகளை நனைத்து அவர்களது மறைவிடங்களைத் தெரியச் செய்தலால், இராமன் வனம் புகுந்த நாட்தொட்டுப் போகமின்றி மனச் சோர்வுடன் இருந்த வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மரக்கலங்களில் அகிற் புகை போன்ற மயிற்றோகைகள் கட்டப்பட்டிருந்தன. அரும்பு போன்ற உறுப்பை தலையிற் கொண்ட தேர்த்தண்டுகள் பாய்மரமாகத் தோன்றின. மேகநிறத் துணியாற் கட்டப்பட்டு, செம்பொன்னலான தகட்டினிடையே அழகுறத் தைக்கப்பட்ட முத்துக்களால் விளங்கும் கொடிகள் நீண்ட பாயாகத் தோன்றின. இவற்றைப் பார்க்கும் போது பெரிய பாய்மரக்கப்பல்கள் செல்வது போல் இருந்தது.

அகன்ற கங்கைநதி ஆகாயம் போலவும், கங்கை சிந்தும் முத்துக்கள் விண்மீன்களாகவும், தாமரை மலர் போன்ற முகம், அமுதூறும் சிவந்த வாய் ஆகியவற்றையும் தேன் சிந்தும் கூந்தலையும் உடைய மின்னலையொத்த மகளிர் ஏறிச் செல்லும் ஓடங்கள், நீர்விளையாட்டை முடித்த தேவ மகளிர்கள் விமானத்தில் ஏறிச் செல்வதைப் போன்றிருந்தது

நீரைத் துழாவும் துடுப்புக்கள் இரு கால்களைப் போன்ற நண்டு போலக் கங்கை நீரில் செல்லும் மரக்கலம் களிப்புடைய மயிலையொத்த, பொற்றொடு அணிந்த, மீன் போன்ற கண்களையுடைய மகளிரது ஒளி விளங்கும் காலடித் தாமரைகள் படுதலால் உயிர் பெற்றவை போலிருந்தன.

முனிவர்கள் வான்வழியாகக் கங்கையைக் கடந்தனர். ஏனையோர் மரக்கலங்களினூடகக் கங்கையைக் கடந்தனர். யானைகள் மட்டும் நீந்திக் கடந்தன. தேர்கள் பகுதியாக்கப்பட்டு நாவாய்களில் எடுத்துச் செல்லப்பட்டன. குதிரைகள், நாவாய்களின் மேல் நின்றபடி கங்கையைக் கடந்தன. 

இவ்வாறு அறுபதினாயிரம் அக்குரோணி சேனைகளும், மகளிர் வெள்ளமும், மாந்தர் வெள்ளமும் கங்கையைக் கடந்து சென்றன, பரதன், தாய்மார்கள். குகன் ஆகியோர் தனித்த நாவாய்களினூடாகத் கங்கையைக் கடந்தனர்.

02. மகளிர் ஓடத்தில் செல்லும் காட்சி

தளிர் போன்ற மென்மையான கைகளையுடைய மகளிர் இடையே புகுந்து நெருங்கித் தள்ளுதலால் அவர்களது திரண்ட கொங்கைகள், மதமகிழ்வுடைய பெருமைமிக்க யானைகள் வரிசையில் தம் அழகிய தந்தங்களால் குத்துவதற்கு நெருங்கியது போலக் காணப்பட்டன.

மரக்கலங்கள் செல்லும் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோத, அது கண்டு குழை அணிந்த மகளிர் மனம் கலங்கி, மயங்கி, அச்சமுற்று இருபுறமும் நோக்கும் போது அவர்களின் கண்கள் நீர்ப்பெருக்கால் கலங்குவது, ஆற்றுநீர் அங்குமிங்கும் கலங்குவதால் பயந்து துள்ளும் கயல்மீன் கூட்டத்தை ஒத்திருந்தது.

மரக்கலங்களைச் செலுத்தும் வேடர்கள் இருபக்கமும், துடுப்புக்களை அசைத்தலால் வீசுகின்ற நீர்த்துளிகள் மகளிரது மெல்லிய ஆடைகளை நனைத்து அவர்களது மறைவிடங்களைத் தெரியச் செய்தலால், இராமன் வனம் புகுந்த நாட்தொட்டுப் போகமின்றி மனச் சோர்வுடன் இருந்த வீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அகன்ற கங்கைநதி ஆகாயம் போலவும், கங்கை சிந்தும் முத்துக்கள் விண்மீன்களாகவும், தாமரை மலர் போன்ற முகம், அமுதூறும் சிவந்த வாய் ஆகியவற்றையும் தேன் சிந்தும் கூந்தலையும் உடைய மின்னலையொத்த மகளிர் ஏறிச் செல்லும் ஓடங்கள், நீர் விளையாட்டை முடித்த தேவ மகளிர்கள் விமானத்தில் ஏறிச் செல்வதைப் போன்றிருந்தது.

நீரைத் துழாவும் துடுப்புக்கள் இரு கால்களைப் போன்ற நண்டு போலக் கங்கை நீரில் செல்லும் மரக்கலம் களிப்புடைய மயிலையொத்த, பொற்றொடு அணிந்த. மீன் போன்ற கண்களையுடைய மகளிரது ஒளி விளங்கும் காலடித் தாமரைகள் படுதலால் உயிர் பெற்றவை போலிருந்தன.

03. நாவாய்கள் பற்றிய வர்ணனை

மரக்கலங்களில் அகிற் புகை போன்ற மயிற்றோகைகள் கட்டப்பட்டிருந்தன. அரும்பு போன்ற உறுப்பை தலையிற் கொண்ட தேர்த்தண்டுகள் பாய்மரமாகத் தோன்றின. மேகநிறத் துணியாற் கட்டப்பட்டு, செம்பொன்னலான தகட்டினிடையே அழகுறத் தைக்கப்பட்ட முத்துக்களால் விளங்கும் கொடிகள் நீண்ட பாயாகத் தோன்றின. இவற்றைப் பார்க்கும் போது பெரிய பாய்மரக்கப்பல்கள் செல்வது போல் இருந்தது.

அகன்ற கங்கைநதி ஆகாயம் போலவும், கங்கை சிந்தும் முத்துக்கள் விண்மீன்களாகவும், தாமரை மலர் போன்ற முகம், அமுதூறும் சிவந்த வாய் ஆகியவற்றையும் தேன் சிந்தும் கூந்தலையும் உடைய மின்னலையொத்த மகளிர் ஏறிச் செல்லும் ஓடங்கள், நீர் விளையாட்டை முடித்த தேவ மகளிர்கள் விமானத்தில் ஏறிச் செல்வதைப் போன்றிருந்தது.

நீரைத் துழாவும் துடுப்புக்கள் இரு கால்களைப் போன்ற நண்டு போலக் கங்கை நீரில் செல்லும் மரக்கலம் களிப்புடைய மயிலையொத்த, பொற்றொடு அணிந்த, மீன் போன்ற கண்களையுடைய மகளிரது ஒளி விளங்கும் காலடித் தாமரைகள் படுதலால் உயிர் பெற்றவை போலிருந்தன.

04. மரக்கலங்கள் சென்று மீளும் காட்சி

கங்கையின் வடகரையில் உள்ள ஆரவாரமிக்க சேனைக்கடலை விரும்பி ஏற்றிக் கொண்டு தென்கரை அடைந்து, அவற்றை முற்றாக இறக்கிவிட்டு, ஒன்றுமிலாததாய் மீண்டும் வடகரை வந்து சேரும் மரக்கலங்கள். அலைகடலுட் புகுந்து மிகுதியான நீரை முகந்து சமந்தனவாய் புறப்பட்டுச் சென்று மழையாகப் பொழிந்து கழித்துக் கழித்து. அடுத்த கணத்திலேயே மீண்டும் கடல்நீரை முகப்பதற்காகக் கடலுக்குத் திரும்புகின்ற அகன்ற மேகத்தை ஒத்திருத்தன. 

05. முனிவர்கள் கங்கையை கடத்தல்

"மையறு விசும்பில், மண்ணில்..." என்னும் பாடலில் முனிவர்கள் கங்கையைக் கடக்கும் விந்தைக்காட்சி கற்பனை ததும்ப கம்பரால் வர்ணிக்கப்படுகின்றது. நாவாய்களில் பலரும் ஏறிச்செல்ல முனிவர்கள். கீழான மனித சாதியாற். செய்யப்பட்ட மரக்கலத்தைத் தீண்டி, ஏறாதவர்களாய், தாம் நினைத்தவுடன் செல்லும் ஆகாயத்தையே ஓடமாகக் கருதி தேவர்களைப் போல வான்வழியே சென்றார்கள். குற்றமற்ற விண்ணுலகிலும், மண்ணுலகிலும், வேறு உலகிலும் தவத்தைப் போல செய்து முடிக்கக் கூடிய உண்மையான தொழில் வேறொன்றுள்ளதா? இல்லை என்பதாகும். என கம்பர் கூறுகிறார்.

06. பரதன் நாவாயில் செல்லுதல்

"சுழித்து நீர்வரு ஆற்றை..." எனும் செய்யுள் மூலம் பரதன் நாவாயில் செல்லும் காட்சி தத்ரூபமாக விபரிக்கப்பட்டுள்ளது. தன்னைச் சுற்றியுள்ள சேனையானது நீர்கழித்துப் பெருகி வரும் கரையமைந்த கங்கையாற்றினைக் கடந்துவிட, வஞ்சகமான மண்ணாசையைப் போக்கிய குணத்தினால் இம் மண்ணினை முன்னர் ஆட்சிபுரிந்த அரசர்கள் யாவரையும் தனக்குக் கீழ்பட்டவர்களாக ஆக்கி மேம்பட்டு நின்ற பரதனும் நாவாயில் ஏறினான். என கம்பர் விளக்குகிறார்.

07. அணிகள் கையாளப்பட்ட விதம் என்பவற்றை விளக்குக

கம்பரின் கற்பனை எல்லையை யாராலும் மதிப்பிட முடியாது. காரணம் யாதெனில் அவரது செய்யுட்கள் அணிகளால் நிரம்பி வழுவதாகும். எண்ணற்ற கற்பனைகளால் கவிவண்ணத்தைக் காட்டிய கம்பனின் அணிக்கையாட்சியில் பொருளணிகள் புதுப்பொலிவுடன் திகழ்வது தனிச்சிறப்பாகும். பரதனின் சேனை கங்கையைக் கடக்கும் தருணத்தில் உவமையணி, உருவக அணி. உயர்வு நவிற்சியணி, தற்குறிப்பேற்ற அணி எனப் பலவகை அணிகள் கம்பரால் எடுத்தாளப்பட்டுள்ளன.

உவமையணியின் உபயோகத்தை நோக்கும் போது,

நாவாய்கள் செல்லும் காட்சி சிவபெருமானின் வெள்ளிமலைக்கும். திரிபுரமெரித்த சிவன் வளைத்த பொன்மலைக்கும், குபேரனின் புட்பக விமானத்திற்கும் உவமிக்கப்பட்டுள்ளது

நாவாய்கள் செல்லும் தன்மை நங்கையர் நடைக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

கங்கையின் வடகரையில் உள்ள ஆரவாரமிக்க சேனைக்கடலை விரும்பி ஏற்றிக் கொண்டு தென்கரை அடைந்து, அவற்றை முற்றாக இறக்கிவிட்டு, ஒன்றுமிலாததாய் மீண்டும் வடகரை வந்து சேரும் மரக்கலங்கள் உயிர்களை இருவினைப் பயன்களின்படி பூவுலகிலிருந்து அமரலுலகிற்கும், அமரருலகில் இருந்து பூவுலகிற்கும் ஏற்றி இறக்குதலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

நீண்ட துதிக்கையை உயரத் தூக்கிக் கங்கையாற்றில் நீந்திச் செல்லும் யானைகள் மேகங்கள் மோதி. முழங்கி. யுகப் பிரளைய காலத்தில் கடல்நீரை உண்ண நெருங்குதலுக்கும். கொடியோடு கூடிய கப்பல் கடலில் பாய்மரத்தோடு செல்வதற்கும் உவமிக்கப்பட்டுள்ளது.

கரைமேல் சென்று தவழும் அலைகள் பெண்கள் அணிந்துள்ள மேலைடை தவழ்வதற்கு உவமிக்கப்பட்டுள்ளது.

யானைகள் மலைகளுக்கு உவமிக்கப்ப டுள்ளது.

கங்கையாற்றில் காணப்படும் மத்தகங்கள் பெண்களின் தனங்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

தேரின் பாகங்களைப் பிரித்தெடுத்து நாவாய்களில் ஏற்றிச் செல்லல் இறந்த பின் உயிர்க்கு வேறு உடம்பினைக் கூட்டும் செயலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

குதிரைகளின் உடல் திரண்ட பாலிற்கு உவமிக்கப்பட்டுள்ளது.

குதிரைகளின் னம் திரண்ட பயத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது.

குதிரைகளின் கால்கள் ஒருங்குகூடிய காற்றுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

நாவாய்கள் திரண்டு செல்லுதல் சேல்மீன் கூட்டம் திரண்டு செல்லுதலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் கை தளிருக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் ஒருவர்முன் ஒருவர் நெருங்கித் திரண்டதால் கொங்கைகள் நெருங்குதல் யானைகள் வரிசையில் திரண்டதால், தந்தங்களின் முனைகள் குத்துமாறு நெருங்குதலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

மரக்கலங்கள் மோதுவதால் பயந்து. கலங்கி, கண்ணீர் ததும்ப நிற்கும் மகளிரின் தன்மை ஆற்றுநீர் கலங்குவதால் கலங்குதலால் பயந்து துள்ளும் கயல்மீன் கூட்டத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

வடகரையிலுள்ள பரதசேனைகளைத் தென்கரையில் இறக்கிவிட்டு மீண்டும் வடகரைக்குத் திரும்பும் நாவாய் கடல்நீரை முகந்து மழையாகப் பெய்த பின், மீண்டும் கடலுக்குத் திரும்பும் மேகத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது.

மயிற்றோகைகள் அகில் கட்டைகளால் ஏற்பட்ட புகைக்கு உவமிக்கபட்டுள்ளதை காணலாம்.

தேர்த்தண்டுகள் பாய்மரங்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

கொடிகள் நீண்ட பாய்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

நாவாய்கள் பெரிய பாய்மரக் கப்பல்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

கங்கைநதி ஆகாயத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது,

கடல் சிந்தும் முத்துக்கள் விண்மீன்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் முகங்கள் தாமரை மலர்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது.

மகளிர் இடை மின்னலுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் ஏறிச்செல்லும் நாவாய்கள் தேவ மகளிர் நீர் விளையாட்டின் பின் தேவருலகம் செல்லும் விமானங்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

நாவாயைச் செலுத்தும் துடுப்புக்கள் இரண்டு கால்களுக்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

நீரில் நாவாய்கள் செல்லுதல் நீரில் நண்டுகள் செல்வதற்கு உவமிக்கப்பட்டுள்ளது. 

மகளிர் மயிலுக்கும்.மகளிர் கண்கள் கயல்மீன்களுக்கும் உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 

அடித்தாமரைகள் என்பதில் அடிகள் தாமரைகளுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது. 

ஆகாயம் ஓடத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது.

"அன்னப் பேடை சிறை இலது ஆய்க்கரை துன்னிற்று என்னவும் வந்தது தோணியே" என்பதில் கையாளப்பட்டுள்ள உயர்வு நவிற்சியணியை பார்க்கும் போது அன்னப் பறவைகள் நாணும்படியாக நாவாய்கள் நீரில் செல்வதாக கூறப்பட்டுள்ளது, இங்கு நாவாய்கள் நங்கையர்கள் போல நளினத்துடன் செல்வதால் அன்னங்கள் நாணமடைவதாக கவிஞர் காட்டியிருப்பது உயர்வு நவிற்சி அணியாகும்,

05. பரதன் குகனுக்கு கோசலையை அறிமுகம் செய்தல் முதல் பரதனை பரத்துவாச முனிவன் வரவேற்றது வரையிலான பகுதியில்

01. பரதன் குகன், கோசலை ஆகியோரை பரஸ்பரம் அறிமுகம் செய்தல்

வனவாசம் செய்யும் கண்மணி போன்ற இராமனை அழைத்து வர கங்கையைக் கடந்து சென்ற பரதனையும், அவனது சேனையையும் நாவாய்களை வழங்கி கங்கையைக் கடக்க மகத்தான உதவியை குகன் வழங்கிய பின்பு பரதன் தனது தாய்மாரை குகனிடம் அறிமுகம் செய்வதைக் காண் முடிகின்றது. முதலில் இராமனை ஈன்ற கோசலையை குகனுக்கு அறிமுகம் செய்வதுடன், கோசலையிடம் குகனையும் அறிமுகம் செய்வதையும் பின்வருமாறு கம்பர் சித்தரிப்பதைக் காணமுடிகின்றது.

உறவினர்கள், தேவர்களோடு வணங்கத்தக்கவாறு இருந்த கோசலைப் பிராட்டியை வணங்கிப் பார்த்து, வெற்றி மாலை சூடிய பரதனே! இவர் யாராவர் என்று கேட்க, அரசர்கள் தங்கியிருக்கு முன்றிலையுடைய தசரதனின் முதல் பட்டத்தரசி. மூவுலத்தையும் படைத்த பிரமதேவனை தோற்றுவித்த இராமனை மகனாகப் பெற்றதால், தான் பெற வேண்டிய அரசுச் செல்வத்தை, தான் பெற வேண்டிய அரசுச் செல்வத்தை, நான் பிறந்த காரணத்தால் இழந்த பெருமைக்குரியவள் என்று பரதன் கூறியவுடன். கோசலையின் திருவடிகள் மீது நீண்ட நேரம் விழுந்து கிடந்த குகனை, கன்றைப் பிரிந்த காராம்பசுவின் துயருடைய கோசலையை இவன் யார்? என்று கேட்க, வீரக்கழலணிந்த கால்களையுடைய பரதன். இதோ வணங்கி நிற்கும் ஆண்மகன் இராமனுக்கு இனிய சகோதரன், இலக்குவணனுக்கும், சத்துருக்கனுக்கும். எனக்கும் அண்ணன். மலையை ஒத்த திரண்ட அழகிய நீண்ட தோள்களையுடைய குகன் என்னும் பெயருடையவன் என்று கூறினான். இவ்வாறாக குகனை கோசலைக்கு பரதன் அறிமுகம் செய்ததைக் காண முடிகின்றது.

02. கோசலை குகனை சகோதரனாக்கி உரைத்தல்

குகனை கோசலைக்கு பரதன் அறிமுகம் செய்ததைத் தொடர்ந்து இராமனை ஈன்ற நற்றாயான கோசலை பின்வருமாறு கூறுகின்றாள். "என் பிள்ளைகளே! இனிமேல் துன்பத்தால் நீங்கள் வருந்தாது இருப்பீர்களாக: சுத்த வீரர்களாகிய இராம இலக்குமணர்கள் கோசல நாட்டை துறந்து காடு நோக்கிப் புறப்பட்டுச் சென்றதுவும் நன்மைக்கு காரணமாயிற்று அல்லவா?

மலை போன்ற வலிய தோளையும், துதிக்கையால் செய்யும் வீரச்செயலை உடைய ஆண்யானையை ஒத்த ஆண் மகனாகிய இந்தக் குகனோடு ஒன்றுபட்டு, நீங்கள் ஐவருமாக அகன்ற நிலவுலகை நீண்டகாலம் அரசாட்சி செய்து காப்பாற்றுவீர்களாக!" என்று உரைத்ததாக கம்பர் சித்தரித்துள்ளார்.

03. பரதன் குகனுக்கு சுமித்திரையை அறிமுகம் செய்தல்

இராமபிரானின் இனிய தாயான கோசலை உரைத்த பிற்பாடு வேடுவர் தலைவனான குகன் சுமித்திரையை யாரென பரதனை வினவியபோது பரதன் பின்வருமாறு உரைப்பதை காண முடிகின்றது. அறக்கடவுளே என்று கூறத்தக்கவளாய் அருகில் நின்ற சுமித்திரா தேவியைப் குகன் பார்த்து, பரதனே! அன்பால் நிறைந்த இப்பெருமாட்டியை யாரென்று எனக்குச் சொல் என்று கேட்க, சத்திய வழியினின்றும் சிறிதும் மாறுபடாத தன் வாய்மையை என்றும் நிலைநிறுத்தி பொய்யுடலை நீத்து இறந்தவனாகிய தசரதனின் இளைய பட்டதரசி ஆவாள். மேலும் இவள் யாவர்க்கும் வணங்கத்தக்க குலதெய்வமாகிய இராமனுக்குப் பின்னே பிறந்த தம்பியும் ஒருவன் உளன் என்று அனைவரும் சொல்லுமாறு இராமனை விட்டு நீங்காத இலக்குவணனைப் பெற்றெடுத்த பெருமைக்குரியவள் என்று பரதன் சுமித்திரையை அறிமுகம் செய்வதை காண முடிகின்றது.

04. குகன் கைகேயியை யாரென வினாவுதலும், பரதன் அளித்த பதிலும்

கோசல நாட்டின் சக்கரவர்த்தியான தசரதனின் முத்தேவிகளில் இருவரை அறிந்த பின்பு குகன் கைகேயி எனும் தாயை பற்றி அறிய முற்பட்ட விதம் பின்வருமாறு விளக்கப்படுகின்றது. தன் கணவனாகிய தசரதன் சுடுகாட்டிற்குச் செல்ல. மகனாகிய பரதன் துன்பக்கடலில் செல்ல, அருட்கடலாகிய இராமன் கொடுமையான காட்டிடையே செல்ல, கழலணிந்த கால்களையுடைய திருமால் எடுத்த நெடிய திருவுருவத்தால் முன்பு மூவடியில் ஈரடியால் அளந்த எல்லா உலகங்களையும் தன் மனத்தின்கண் தானே எண்ணிச் செய்கின்ற கொடுமையால் எளிதாக. அளவு செய்தவளாகிய கைகேயியை "இவர் யார்?” என்று கேட்க பரதன் அளித்த பதிலுரை பின்வருமாறு அமைகின்றது.

துன்பங்கள் யாவற்றையும், உண்டாக்கியவளை, பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத்தாயை. தனது பாழான தீவினையுடைய வயிற்றிலே, நீண்ட நாட்கள் கிடந்த எனக்கும் உயிராகிய சுமை குறைந்து தேயும்படி, உடல்கள் எல்லாம் உயிரில்லாதன என்று தோன்றும் உலகில், இவ் ஒருத்தி மட்டும் அல்லவா துன்பமுற்ற முகத்தை உடையவள் இவ்வளவு நேரமும் இவளது முகத்தைக் கொண்டே அறிந்திராவிடில், இதோ இருக்கின்றவள் என்னைப் பெற்ற கைகேயி ஆவாள், என்று பரதன் வெறுப்புடன் கூறியதாக கம்பர் விளக்குகின்றார்.

05. அணிகள் கையாளப்பட்ட விதம்

கவிச்சக்கரவர்த்தி எனும் பட்டம் புனைந்து, தமிழின் இனிமை கலந்து கம்பராமாயாணம் எனும் காவியம் அளித்த கம்பர் பொருளணிகளைக் கையாண்டு புதுமை செய்த விதம் வியந்து பாராட்டத்தக்கது. உவமையணி, உருவகணி, உயர்வு நவிற்சியணி என்பன கம்பரால் எடுத்தாளப்பட்ட விதத்தை விளக்க முற்படும் போது

மகனைப் பிரிந்த கோசலை கன்றைப் பிரிந்த காராம்பசுவிற்கு உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

"குன்று அனைய நெடுந்தோள்" உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். என்பதில் குகனின் தோள்கள் குன்றுகளுக்கு உவமிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். 

தோணியானது கரை சேர்ந்த தன்மை பெண் அன்னம் சிறகுகளின்றி கரை சேர்ந்த தன்மைக்கு உவமித்துக் கூறப்பட்டுள்ளது.

"விலங்கல் திண்தோள் கைவீரக் களிறு அனைய காளை" என்பதில் குகனின் வீரச்சிறப்பு துதிக்கையால் செய்யும் வீரச்செயலை உடைய ஆண்யானைக்கு உவமித்துக் கூறப்பட்டுள்ளது. 

உருவக அணி கையாளப்பட்ட விதத்தை பார்க்கும் போது

"அறந்தானே என்கின்ற அயல் நின்றாள்" என்பதில் சுமித்திரை அறக்கடவுளுக்கு உருவகிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

"படல் எலாம் படைத்தாளை பழி வளர்க்கும் செவிலியை" என்பதில் பரதனுக்கு தீராத பழியை ஏற்படுத்திய கைகேயியை துன்பத்திற்கு உறைவிடமாகவும். பழியாகிய குழந்தைக்கு வளர்ப்புத்தாயாகவும் உருவகித்துள்ளதைக் காண முடிகின்றது.

பரதனின் துன்பத்தை புலவர் கூறு முற்படும் போது துன்பக்கடல் என்பதில் துன்பம் கடலுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது.

இராமனின் பெருமையை விளக்க முற்பட்ட புலவர் அருட்கடல் என்பதில் அருள் கடலுக்கு உருவகிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறாக பலவகை பொருளணிகள் கம்பரால் எடுத்தாளப்பட்டுள்ளது.

06. கம்பர் காட்டும் பரதனின் குணாம்சங்கள்

வஞ்சகமான மண்ணாசையை நீக்கியவன்

தனது பற்றற்ற தன்மையினால் முன்னர் ஆட்சி செய்த மன்னர்களைக் கீழ்நிலைப்படுத்திக் குணவிசேடத்தால் உயர்ந்த நிலை அடைந்தவன். 

தான் பிறந்ததால் கிடைக்க வேண்டிய அரசுரிமையும், கோசலை பெற வேண்டிய அரசுச்செல்வமும் இழக்கப்பட்டதை எண்ணி மனம் வருந்தியவன்.

குகனைச் சகோதரனாக ஏற்று அன்பு செலுத்திய பண்பினை உடையவன்.

தன்னையும், தன்னுடன் சேர்ந்த  சத்துருக்கனையும் தாழ்த்தி, இராமனுக்குத் தம்பி இலக்குவணனே எனக் கூறியவன்.

கோசலை, சுமித்திரை ஆகிய தாயார்களிடத்துப் பேரன்பும், தனது தாயான கைகேயியிடத்தில் ஆத்திரமும், கோபமும் கொண்டு நின்றவன்

"கொற்றார்க் குரிசில்" எனக் குகனால் விழிக்கப்பட்டவன்.

07. கம்பர் காட்டும் குகனின் குணாம்சங்கள்

பரதனிடம் அன்பும், மதிப்பும் செலுத்தியவன்

இராம பிரானைப் பெற்ற தாய் கோசலை எனப் பரதன் மூலம் அறிந்ததும், அவள் அடியின்மிசை விழுந்து அழுது கிடந்தவன்.

இராமனும், தம்பிமாரும், குகனும் ஒன்று கலந்து நாட்டை ஆட்சி செய்து காப்பாற்றுமாறு கோசலையின் வாயால் கூறத்தக்க பெருமைக்குரியவன்.

கைகேயியின் கொடுமை பற்றிப் பரதன் கூறிய பின்னரும் தன் தாயாகக் கருதி அவளை வணங்கிய நல் மனத்தினன்.

"விலங்கல் திண்தோள் கைவீரக் களிறு அனைய காளை இவன்” எனக் கோசலையால் பாராட்டப் பெற்றவன்.

08. கோசலையின் பண்புகள்

"சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலை"யைக் குகன் வணங்கி 'இவன் யார்? என வினவலினூடாகக் கோசலையின் வணங்கத்தக்க நிலையைக் காண முடிகின்றது.

"கோக்கள் வைகும் முற்றத்தான் முதல் தேவி: மூன்று உலகும் ஈன்றானைப் பெற்றதால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள்' எனப் பரதன் குகனுக்குக் கூறி அறிமுகம் செய்தலின் மூலமாக, அவள் தயரதனின் முதல் மனைவி: இராமனைப் பெற்றவள் என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

09. கைகேயியின் குணாம்சங்கள்

பரதன் குகனுக்குக் கைகேயியை அறிமுகப்படுத்துவதனூடாக குணநிலைகள் கம்பரால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. சுடுகாட்டினுக்குக் கணவனாகிய தசரதன் செல்ல. மகனாகிய பரதன் துன்பக் கடலில் செல்ல, கருணைக் செல்லத்தக்கதான கொடுமைகளைச் செய்தவள், இராமன் காட்டிற்கு

திருமால் வாமன அவதாரமெடுத்து மூவடி மண் கேட்டு ஈரடியால் அளந்த உலகங்களைச் சிரமப்படாது எளிமையாகத் தன் மனத்தின்கண் அளந்து கொடுமைகளைச் செய்தவள்.

துன்பங்களை எல்லாம் உண்டாக்கியவன்

பழிக்கு வளர்ப்புத் தாயானவள்

பாழான தீவினை கொண்ட வயிற்றை உடையவள். அதில் நீண்டகாலம் பரதனைத் தாங்கிப் பெற்றெடுத்தவள்.

பரதனது உயிர்ச் சுமை குறைந்து தேயக் காரணமானவள்.

உடல்களெல்லாம் உயிரற்றன எனும்படி உலகில் விளங்கத் தான் மட்டும் துன்பமில்லாத முகத்தை உடையவள். 

"இரக்கமில்லாள்" என்பதனூடாகவும் கைகேயியின் கொடிய குணநலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

10. சுமித்திரையின் குணாம்சங்கள்

அறக்கடவுளே எனும்படி நின்றவள்

அன்பின் கொள்கலமாக திகழ்ந்தவள்

தசரத மன்னனின் இளைய பட்டத்தரசி

இராமனைப்பிரியாத இலக்குவணனைப் பெற்றவள்


ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)


நன்றி.


Post a Comment

0 Comments