9ம் தர மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள் - QUESTIONS AND ANSWERS FOR CLASS 9 STUDENTS

 

9ம் தர மாணவர்களுக்கான

பயிற்சி வினாக்கள்


9ம் தர மாணவர்களுக்கான பயிற்சி வினாக்கள் - QUESTIONS AND ANSWERS FOR CLASS 9 STUDENTS

1. சர்வதேச பிரசித்தம் கிடைத்த விவாதம் எது?
பாணந்துறை

2. யாழ்ப்பாண பகுதியில் கல்வி உயர்நிலையில் காணப்பட்டமைக்குக் காரணம் யாது? 
அமெரிக்க மிசனறியின் வருகை

3. கிறிஸ்தவ மிசனறிமாரால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் 03 தருக
மாசிக்க தேக்க
உரகல
லங்கா நிதானய
உதய தாரகை

4. இலங்கை வந்த மிசனறி அமைப்புக்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்ப கையாண்ட உத்திகள் 03 குறிப்பிடுக
கல்வி
போதனை
சமூக சேவை

5. புலத்கம தம்மாலங்கார ஸ்ரீ கமண திஸ்ஸ தேரர் நிறுவிய இலங்கையின் முதல் அச்சகம் எது?
காலி லங்கோபகார அச்சகம்

6. பஞ்சமகா விவாதங்களை ஆண்டுகளுடன் குறிப்பிடுக. 
பத்தேகம - 
1865
வராகொடை - 1865
உதம்விட -1866
கம்பளை - 1871 
பாணந்துறை - 1873
.
7. பஞ்சமகா விவாதங்களுக்கு முன்னின்று செயற்பட்ட பிக்கு யார்? மீதெட்டுவத்த குணானந்த தேரர்

8. இலங்கையில் நிறுவப்பட்ட பௌத்த மத அச்சகங்கள் எவை?
காலி லங்கோபகார அச்சகம்
லங்கா பிநவ விஷ்ரத அச்சகம்
கவடகதிக அச்சகம்
சுதர்ஷண அச்சகம்
சரசவிசந்தரச அச்சகம்

9. இலங்கை வந்த மிசனறி அமைப்புக்களை ஆண்டுகளுடன், அவை செயற்பட்ட இடத்தையும் குறிப்பிடுக?
லண்டன் மிசனறி சங்கம் - 1804 - கொழும்பு
பெப்டிஸ்ட் மிசனறி சங்கம் - 1812 - கொழும்பு
வெஸ்லியன் மிசனறி சங்கம் - 1814 1815 -வடக்கு, கிழக்கு 
அமெரிக்கன் மிசனறி சங்கம் - 1816 - யாழ்ப்பாணம்
சேர்ச் மிசனறி சங்கம் - 1818 - கொழும்ப, காலி, கற்பிட்டி, மன்னார், கண்டி

10. மிசனறியின் செயற்பாடுகள் வெற்றி பெறுவதில் செல்வாக்கு செலுத்திய காரணிகள் 03 தருக.
அரசாங்க உதவி கிடைத்தல்
அச்சகங்களை நிறுவுதல்
கல்வியை பயன்படுத்தியமை

11. பௌத்த மறுமலர்ச்சியில் வெளிப்படையாகத் தெரியும் பண்புகள் 03 தருக.
பிரிவெனாக்கள் அமைக்கப்பட்டமை 
அச்சகங்கள் அமைக்கப்பட்டமை
விவாதங்கள் மேற்கொண்டமை

12. பௌத்த மத பிரிவெனாக்களில் கற்பிக்கப்பட்ட மொழிகள் எவை? 
சிங்களம்
பாளி
சமஸ்கிருதம்

13. வலானை சித்தார்த்த தேரர் உருவாக்கிய பிரிவெனா எது? 
இரத்மலானை பரம தம்ம பிரிவேனாவை

14. கி.பி. 1873இல் மாளிகாகந்த வித்தியோதய பிரிவெனா யாரால் உருவாக்கப்பட்டது? 
ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்

15. பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனா யாரால் தோற்றுவிக்கப்பட்டது? இரத்மாலனை தம்மாலோகத் தேரர்

16. ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர் எழுதிய நூல்கள் எவை? 
சிதத் சங்கரா சன்னஸ
காவிய சேகர சன்னஸ 

17. பௌத்த அச்சகங்களால் வெளியிடப்பட்ட வெளியீடுகள் எவை?
லக்மினி பஹன்
பௌத்தயா லங்கா லோகய
சரசவி சந்தரச 
சிங்கள ஜாதிய
சிங்கள

18. கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தை உருவாக்கியவர் யார்? 
டி.பி ஜயதிலக

19. அனுராதபுரத்தில் உள்ள புனித இடங்களை பாதுகாக்கும் இயக்கத்தை முன்னெடுத்தவர் யார்? 
வலிசிங்க ஹரிச்சந்திர

20. புத்தகயா போன்ற உயர் பௌத்த மத இடங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டவர் யார்? 
அநகாரிக தர்மபால

21. பாணந்துறை விவாதத்தால் கவரப்பெற்று இலங்கை வந்த அமெரிக்க நாட்டவர் யார்?
ஹென்றி ஸ்டில் ஒல்கொட் 

22. பாணந்துறை விவாதத்தால் கவரப்பெற்று இலங்கை வந்த ரஸ்ய நாட்டவர் யார்? 
ஹெலனா பெலவெஸ்கி அம்மையார்

23. இலங்கையில் வெசாக் போயா தினத்தை விடுமுறை ஆக்கியவர் யார்?
ஹென்றி ஸ்டில் ஒல்கொட் 

24. பௌத்தக் கொடி உருவாக்கத்தில் பங்களிப்புச் செய்த வெளிநாட்டவர் யார்?
ஹென்றி ஸ்டில் ஒல்கொட்

25. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் 05 தருக. 
கொழும்பு ஆனந்தாக் கல்லூரி
தர்மராஜ கல்லூரி
மகிந்த கல்லூரி
மாத்தளை
விஜய கல்லூரி
கம்பளை ஜினராஜ வித்தியாலயம்

26. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் பௌத்த மறுமலர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் 04 தருக.
இலங்கையில் பல பாடசாலைகள் உருவாக்கப்பட வழிகாட்டியமை  
பௌத்த பிரம்ம ஞான சங்கத்தை உருவாக்கியமை
வெசாக் போயாதினத்தை விடுமுறையாக்கியமை 
பௌத்தக்கொடியை உருவாக்கியமை
அச்சகங்கள் ஊடாக பத்திரிகைகளை வெளியிட்டமை

27. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு எது? 
பௌத்த பிரம்ம ஞான சங்கம்

28. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகை எது?

சரசவிசந்தரச 

29. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அவர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட நிதியம் எது?
பௌத்த பாடசாலைகளின் நிதியம்

30. ஹென்றி ஸ்டில் ஒல்கொட் அமெரிக்காவில் வகித்த பதவி யாது? இராணுவத்தில் கேணல் பதவி

31. தேசிய கலாசாரத்தின் மேன்மையை பாதுகாத்த இலங்கைத் தலைவர்கள் யார்? 
வலிசிங்க ஹரிச்சந்திர
பியதாஸ சிறிசேன
ஜோன் த சில்வா

32. மது ஒழிப்பு இயக்கத்தின் நோக்கம் யாது? 
மதுவினால் ஏற்படும் தீமைகளை மக்களிடம் எடுத்து விளக்கி, பிரித்தானியருக்கு எதிராக போராட்டங்களை நடாத்துதல்.

33. அநகாரிக தர்மபாலவின் சேவைகள் 04 தருக.
பகிரங்க சொற்பொழிவுகளை நடத்தல் 
சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழுதியமை
பௌத்த பாடசாலைகளை அமைத்தமை 
தேசிய கலாசாரத்தைப் பாதுகாக்கப் பாடுபட்டமை

34. அநகாரிக தர்மபால பிறந்த இடம் எது? 
கொழும்பு

35. நாவல்கள் மூலம் தேசப்பற்றை வளர்க்கும் இயக்கத்தை முன்னெடுத்தவர் யார்?
பியதாஸ சிறிசேன 

36.பியதாஸ சிறிசேன எப்பத்திரிகை மூலம் கருத்துக்களை வெளியிட்டார்?
சிங்கள ஜாதிய

37. அநகாரிக தர்மபால எப்பெயரில் துறவு பூண்டார்? 
ஸ்ரீ தேவமித்த

38. அநகாரிக தர்மபாலவின் பத்திரிகை, சஞ்சிகை என்பவற்றைத் தருக.
சிங்கள பௌத்தயா
மஹாபோதி

39.புத்தகயா போன்ற உயர் பௌத்த மத இடங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டவர் யார்? 
அநகாரிக தர்மபால

40. புத்தகயா எந்நாட்டில் உள்ள உயர்ந்த பௌத்த தலமாகும்?
இந்தியா

41. இலங்கையில் இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் யார்? அறிஞர் எம்.சி.எம் சித்திலெவ்வை

42. எம்.சி. சித்திலெவ்வை பிறந்த இடம் எது?
கலகெதர 

43.எம்.சி.சித்திலெவ்வை வெளியிட்ட சஞ்சிகை எது?
முஸ்லிம் நேசன்

44.கி.பி 1883ஆம் ஆண்டு எகிப்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இஸ்லாமிய அறிஞர் யார்?
அறிஞர் ஓராபி பாஷா

45. கொழும்பு மருதானை சாஹிராக் கல்லூரியின் ஸ்தாபகர் யார்?
எம்.சி.சித்திலெவ்வை 

46. எம்.சி. சித்திலெவ்வையின் நினைவாக உருவான பாடசாலை எங்கு அமைந்துள்ளது?
கண்டி சித்திலெவ்வை வித்தியாலயம் 

47.டி.பி ஜாயா பிறந்த இடம் எது? 
கலகெதர

48. டி.பி ஜாயா தொடர்ந்து கட்டுரைகளை எழுதிய சஞ்சிகை எது? 
சிலோன் முஸ்லிம் ரிவியு

49.இலங்கையின் முதல் பாராளுமன்றத்தில் அமைச்சராகப் பணியாற்றிய முஸ்லிம் தலைவர் யார்? 
டி.பி ஜாயா

50. சிங்கள முஸ்லிம் கலவரம் எப்போது இலங்கையில் ஏற்பட்டது? 
கி.பி.1915

51. ஐரோப்பியர் கீழைத்தேசத்திற்கு வருகை தர முன்னர் வர்த்தகத்தில் அதிக்கம் பெற்றிருந்த இனத்தவர் யார்? 
முஸ்லிம்கள்

52.இந்தியாவைச் சென்றடைந்த முதல் போர்த்துக்கேய நாட்டவர் யார்? வாஸ்கொட காமா

53. இந்தியாவைச் சென்றடைந்த ஐரோப்பிய இனத்தவர்கள் நால்வரைத் தருக?போர்த்துக்கேயர்
ஒல்லாந்தர்
பிரித்தானியர்
பிரான்சியர்

54. ஐரோப்பியர்கள் இந்திய வந்தமைக்கான நோக்கங்கள் 02 தருக? 
கிறிஸ்தவ மதத்தைப் பரப்புதல்
வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

55. பின்வரும் இனத்தவர்களின் தாய்நாடுகளைக் குறிப்பிடுக.

போர்த்துக்கேயர் - போர்த்துக்கல் 
ஒல்லாந்தர் -ஒல்லாந்து
பிரான்ஸ் - 
பிரான்சியர்
பிரித்தானியர் - பிரித்தானியா 

56.கி.பி 1509இல் போர்த்துக்கேய அரச பிரதிநிதியாக பதவி வகித்தவர் யார்? அல்போன்ஸ் டி அல்பகூர்க்

57. போர்த்துக்கேயரின் கீழைத்தேச மத்திய நிலையம் எது? 
கோவா

58. போர்த்துக்கேயரின் வர்த்தக ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்த நாட்டவர் யார்? 
ஒல்லாந்தர்

59. ஒல்லாந்தர் வர்த்தக ஆதிக்கத்தைப் பெற கி.பி 1602இல் உருவாக்கிய அமைப்பு எது? 
ஒல்லாந்துக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி

60. ஒல்லாந்தரின் கீழைத்தேய தலைமையகம் எது? 
பத்தேவியா

61. இந்தியாவில் ஒல்லாந்தரின் ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஒல்லாந்து அதிகாரி யார்? 
பீட்டர் சேர் கூன்

62. பீட்டர் சேர் கூன் இந்தியாவில் கைப்பற்றிய இடங்கள் எவை? 
குஜராத்
வங்காளம்
ஒரிஸா
பீகார்

63.ஆங்கிலேயருடைய தாய்நாடு எது? 
பிரித்தானியா

64. ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வரும் போது இந்தியாவில் காணப்பட்ட பலம் வாய்ந்த அரசு எது?
மொகலாயப் பேரரசு 

65. ஆங்கிலேயர் கி.பி 1613இல் வர்த்தக களஞ்சிய சாலையை எங்கு நிறுவினர்? சூரத்

66. ஆங்கிலேயர் ஆரம்பத்தில் அதிகாரத்தை நிலைநாட்டிய 03 இந்திய இடங்களைத் தருக. 
அகமாதபாத்
ஆக்ரா
சென்னை

67. இங்கிலாந்து மன்னன் 2ம் சாள்ஸ் போர்த்துக்கேய இளவரசி கத்தரினை திருமணம் செய்து கொண்டதன் மூலம் கிடைத்த இந்தியப் பிரதேசம் எது?
மும்பாய்

68. மொகலாய அரசுக்கு அத்திவாரமிட்ட மன்னன் யார்? 
பாபர்

69. மொகலாயப் பேரரசை இந்தியாவில் உருவாக்கிய மன்னன் யார்? 
மகா அக்பர்

70. வட இந்தியாவில் பாரிய பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சிபுரிந்த மொகலாய மன்னன் யார்?
மகா அக்பர் 

71. அக்பரின் பின் ஆட்சிக்கு வந் இரு மொகலாய மன்னர்கள் யார்?
ஜஹாங்கீர்
ஷாஜகான்

72. இந்தியாவில் தாஜ்மஹால் யாரால் கட்டப்பட்டது? 
ஷாஜகான்

73. மொகலாயப் பேரரசு யாரின் காலத்தில் வீழ்ச்சியுற்றது?

ஒளரங்கசீப்

74. பிரான்சியரின் தாய்நாடு எது? 
பிரான்ஸ்

75. பிரான்சியரால் வர்த்தகத்திற்காக கி.பி 1664இல் நிறுவப்பட்ட அமைப்பு எது?
பிரான்சிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி

76. பிரான்சியர் கி.பி 1668இல் எங்கு வர்த்தக சாலையை நிறுவினர்? 
சூரத்

77. பிரான்சியர் கோட்டைகளை அமைத்த இடங்கள் 03 தருக. 
பாண்டிச்சேரி
காரைக்கால்
சந்திரநாசூர்

78. ஆங்கிலேயரால் வர்த்தகத்திற்காக கி.பி 1600இல் நிறுவப்பட்ட அமைப்பு எது?
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி

79. ஔரங்கசிப் மன்னன் எப்போது மரணமடைந்தான்? 
கி.பீ 1779 

80. ஔரங்கசிப் மன்னன் இறந்தமையால் ஏற்பட்ட பாரிய மாற்றம் யாது?
மொகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்து அவ் இராச்சியத்தின் கீழிருந்த சிறிய இராச்சியங்கள் சுயாதீன இராச்சியங்களாக மாறியமை.

81. இந்தியாவில் பிரான்சியரை ஆங்கிலேயர் வெற்றிகொண்டமைக்கான காரணங்கள் 02 தருக. 
ஆங்கிலேயரிடம் காணப்பட்ட வலிமையான கடற்படை.
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனிக்கு ஆங்கிலேய அரசு ஆதரவு வழங்கியமை 

82. பிரித்தானியர் இந்தியாவில் எவ்விடத்தை மையமாகக் கொண்டு கரையோர ஆட்சியை
முன்னெடுத்தனர்? 
சென்னை 

83.பிரான்சியர் இந்தியாவில் எவ்விடத்தை மையமாகக் கொண்டு கரையோர ஆட்சியைமுன்னெடுத்தனர்? 
பாண்டிச்சேரி

84. பிரான்சியரிடமிருந்து பாண்டிச்சேரியை பிரித்தானியர் எப்போது கைப்பற்றினர்? 
கி.பி 1761 

85. பிரித்தானியர் இந்திய பிரதேசங்களை எவ்வுத்திகளைக் கையாண்டு பெற்றுக்கொண்டனர்? 
யுத்தங்கள்
ஒப்பந்தங்கள்
விடுதலைப் பத்திரங்கள்

86.பிரித்தானியர் இந்தியாவின் சுதேச ஆட்சியாளர்களை வெற்றி கொண்டமைக்கு பிரதான காரணம் யாது?
உதவி ஒப்பந்தங்களை மேற்கொண்டு வெற்றி பெற்றனர் 

87. இந்திய மக்களின் ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி பிரித்தானியர் கைப்பற்றிய பிரதேசம் எது?
வங்காளம்

88. ஒப்பந்தம் மூலம் பிரித்தானிய இராணுவத்தை உதவிக்குப் பெற்று பணத்தை வழங்க முடியாமல் இந்தியர்கள் இழந்த பிரதேசங்கள் எவை?
ஹைதரபாத்
மைசூர் 

89.விடுதலைப் பத்திரங்கள் மூலம் வாரிசின்றி இறக்கும் ஆட்சியாளர்களின் எவ்விந்தியப்பிரதேசங்கள் பிரித்தானியர் வசமானது?
ஜெய்ப்பூர்
நாக்பூர் 

90. சிப்பாய்க்கலகம் என்பது யாது?
கி.பி. 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக ஆங்கிலேய அரசின் சார்பாக பணியாற்றிய இந்தியாவின் படைவீரர்கள் நிகழ்த்திய கிளர்ச்சி சிப்பாயக்கலகம் எனப்படும். 

91. சிப்பாய்க்கலகம் எப்போது இடம்பெற்றது?
கி.பி. 1857 

92. பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனிக்கு எதிராக கி.பி 1763- 1856 வரை எத்தனை கிளர்ச்சிகள் இடம்பெற்றுள்ளன?
இருபத்தைந்துக்கும் மேற்பட்டவை. 

93. இந்தியர்கள் மத்தியில் சுதந்திர உணர்வு மேலோங்கக் காரணமான நிகழ்வு எது? 
கி.பி. 1857 ஆம் ஆண்டு இடம்பெற்ற சிப்பாயக்கலகம்

94. சிப்பாய்க் கலகத்திற்கான காரணங்கள் 05 தருக.
ஆங்கிலேயர் இந்தியப் பிரதேசங்களைக் கைப்பற்றும் போது பின்பற்றிய கொள்கைகள்
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி இலாபம் கருதி முன்னெடுத்த ஆட்சி 

பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் பொருளாதாரக் கொள்கைகள்
காரணமாக வேலையின்மை தேசிய கைத்தொழில்கள் வீழ்ச்சி கண்டமை மற்றும்

சிப்பாய்கள் மத்தியில் ஆங்கிலேயர் தொடர்பில் நிலவிய வெறுப்பு 

95. சிப்பாய்க் கலகத்திற்கான உடனடிக் காரணம் யாது? 
சிப்பாய்கள் பயன்படுத்திய என்பீல்ட் துப்பாக்கிகளுக்குரிய தோட்டக்களின் உறைகளில் பசு, பன்றி ஆகியவற்றின் கொழுப்புப் பூசப்பட்டிருந்தமை.

96. சிப்பாய்க் கலகத்தில் ஈடுபட்டு மரணதண்டனை பெற்ற இந்தியர் யார்?
மங்கல் பண்டே

97. சிப்பாய்க் கலகத்தின் போது இந்தியாவின் பேரரசனாக பிரகடனப்படுத்தப்பட்ட டில்லியின் ஆட்சியாளன் யார்? 
பகதுர்ஷா

98. சிப்பாய்க் கலகத்தை ஆங்கிலேயர் எப்போது வெற்றிகொண்டனர்? 
கி.பி. 1858ஆம் ஆண்டு

99. சிப்பாய்க் கலகத்தின் தோல்விக்கான காரணங்கள் 05 தருக
?
ஒழுங்கான திட்டமிடலின்மை.
ஒருங்கிணைந்த தலைமைத்துவம் இன்மை.
ஆங்கிலேயப் படையை எதிர்கொள்ள பாரிய ஆயுதங்கள் இன்மை.
போராளிகள் மத்தியில் தகவல் பரிமாற்றத் தொடர்பாடல் வலுவற்று இருந்தமை.
இந்தியாவில் ஒரு சாரார் ஆங்கிலேயருக்கு ஆதரவு வழங்கியமை.

100. சிப்பாய்க் கலகத்தின் விளைவுகள் 04 தருக. 
பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆட்சி முடிவுற்று இந்தியா
பிரித்தானிய அரசின் நேரடியான ஆட்சியின் கீழ் வந்தமை.
மேலும் இந்தியப் பிரதேசங்களை கைப்பற்றாது இருக்கவும். பேரரசர்களின் உரிமைகளை ஏற்றுக்கொள்ளவும் பிரித்தானியா இணங்கியமை.
இந்தியர்களுக்கு சமய சுதந்திரத்தை வழங்கியமை.
இந்தியர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வந்தமை.


ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)



நன்றி 

Post a Comment

0 Comments