தமிழ் இலக்கணம் - வடசொல் - TAMIL GRAMMAR - VADACHOL


வடசொல்

 

தமிழ் இலக்கணம் - வடசொல் - TAMIL GRAMMAR - VADACHOL


தமிழோடு கலந்த வடமொழிச் சொற்கள் வடசொல் எனப்படும்.

வடசொல் இரண்டு வகைப்படும்.
தற்சமம் 
தற்பவம்

தற்சமம் 

ஒலி மாறுபாடின்றி தமிழில் வழங்கும்  வடமொழிச் சொல்  தற்சமம் எனப்படும்.

வடமொழிக்கும் , தமிழ்மொழிக்கும் பொதுவான சொற்களாக இவை கருதப்படுகின்றது.

உதாரணம்
கமலம்
குங்குமம்
காரணம்
அமலம்

தற்பவம்

தமிழிலே  திரிவடைந்து வரும் வடமொழிச் சொல் தற்பவம் எனப்படும்.

சில வடமொழி சொற்கள்,  தமிழ்  மொழி மரபுக்கேற்ப விகாரம் பெற்று  வருமாயின்  அவை தற்பவம் எனப்படும்.

உதாரணம்
வடமொழி -  ஜலம் 
தமிழ் மொழி - சலம்
வடமொழி - ஹனுமான்
தமிழ் மொழி -  அனுமான்
வடமொழி - ஹரி
தமிழ் மொழி -  அரி
வடமொழி - தசரதன் 
தமிழ் மொழி - தயரதன்
வடமொழி -  கிருஷ்ணர்
தமிழ் மொழி -  கிருட்ணர்
வடமொழி -  ராஜன்
தமிழ் மொழி - அரசன்

நன்றி 

Post a Comment

0 Comments