தமிழ் இலக்கணம் - திரிசொல் - TAMIL GRAMMAR - THIRICHOL


திரிசொல்


தமிழ் இலக்கணம் - திரிசொல் - TAMIL GRAMMAR - THIRICHOL

செய்யுளிலே மட்டும் வழங்குவனவாயும் , இடம் நோக்கி பொருள் அறிந்து கொள்ள வேண்டியவனாகவும் உள்ள சொற்கள் திரி சொற்கள் எனப்படும். 

இது  கற்றவர்களுக்கு மாத்திரம்  விளங்கும்.

இது இரண்டு வகைப்படும்.
ஒரு பொருள் குறித்த பல சொல்
பல பொருள் குறித்த ஒரு சொல்

ஒரு பொருள் குறித்த பல சொல்

பெயர் திரிசொல் 
அரசன் -  கொற்றவன் , வேந்தன் , மன்னன் , ராஜா , கோ ,  கோன்
அமைச்சன் - மந்திரர் , சூழ்வோர் , நூலோர் , மந்திரிமார்

வினை திரிசொல் 
அணிதல் - சூடுதல் , தரித்தல் , புனைதல் , மிலைதல் , பூணல்
சொன்னான் -  செப்பினான் , கழறினான் , மொழிந்தான் , கிளர்ந்தான்

இடை திரிசொல்
கொல் - ஐயம் ,  அசைநிலை 
ஓ -  அசைநிலை ,  பிரிநிலை ,  ஐயம் , தெரிநிலை 

உரி திரிசொல்
அழகு -  அணி ,  வடிவு ,  வனப்பு ,  பொலிவு ,  எழில்
மிகுதி - சால , உறு , தவ , நனி , கூர் , கழி 

பல பொருள் குறித்த ஒரு சொல்.

பெயர் திரிசொல்
உயிர் , பேய் ,  மெல்லிய புகை - ஆவி 
கடல் ,  சக்கரம் ,  வட்டம் ,  சில்லு -  ஆழி

வினை திரிசொல் 
எறி , சிதறு ,  பரவச்செய் , ஆட்டு - வீசு
நீங்கினான் ,  கொண்டான் ,  நிர்நயித்தான் - வரைந்தான்

இடை திரிசொல்
இசை நிலை ,  வினா ,  எண் , இருமாப்பு -  ஏ
என்னுடைய ,   என்ன ,  என்று ,  உவமை உருபு -  என

உரி திரிசொல்
கூர்மை ,   காப்பு ,  அச்சம் ,  விளக்கம் - கடி 

நன்றி 

Post a Comment

0 Comments