இலங்கையின்
புராதன கால அரசியல்
இலங்கையின் வரலாற்றில் அரசு எனும் அமைப்பு வளர்ச்சி பெற்றது ஓரளவு பிற்காலத்திலாகும். இது தொடர்பாக பாடத்தின் அடுத்த பகுதிகளில் கவனம் செலுத்தப்படும். அரசொன்று தோன்றுவதற்கு முன்பு இலங்கையில் நாட்டை நிர்வகிக்க நிலவிய அமைப்பு எது என்பதில் இங்கு கவனம் செலுத்தப்படுகின்றது. இதுவே அரசுக்கு முற்பட்ட காலம் எனக் குறிப்பிடப்படுகின்றது.
அரசுக்கு முற்பட்ட காலத்தில் இந்நாட்டை ஆள்வ தற்கு குறிப்பிட்ட ஆட்சியாளர் ஒருவர் இருக்க வில்லை. அதற்குப் பதிலாக சிறிய பிரதேசங்க ளில் சொத்துள்ள செல்வந்த பிரபுக்களே ஆட்சி அதிகாரத்தை மேற்கொண்டிருந்தனர். இந்நாட்டின் ஆரம்ப காலக் கல்வெட்டுகளில் இப்பிரபுக்கள் பருமக எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளனர். பருமக எனும் சொல் பிரமுக எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். இச்சொல் தலைமை என்பதைக் குறிக்கும். சிறிய பிரதேசம் ஒன்றிலாயினும் அவர்களுக்கு இவ்வாறு ஆட்சிபுரியும் அதிகாரம் கிடைத்தது அவர்களது செல்வத்தினாலும், அதனால் கிட்டிய பலத்தினாலுமாகும்.
பருமக என்பவர் ஏதாவது ஒரு வகையில் பிரதே சத்தின் நிர்வாக அமைப்பைக் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று தம்புள்ளைக்கு அருகில் உள்ள கண்டலம் எனும் பிரதேசத்தில் கொத்கவ்கந்தையில் காணப்படுகின்றது. அக்கல்வெட்டு கி.மு. 250 ஆம் ஆண்டுக்குரியதாகும். அம்மலையில் காணப்படும் குகை ஒன்றை பிக்குகளுக்குத் தானமளித்த பருமக "தொட்ட போஜக" எனும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளார். அதன் பொருள், படகுத் துறையை நிர்வகிப்பவர் என்பதாகும். இவர் வரி வசூலிப்பவராகவும் சொத்துக்களை உடையவராகவும் இருந்தமையால் நிர்வாக அதிகாரத்தைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். கண்டலாம கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பருமக பழங்காலத்தில் அப்பிரதேச நிர்வாகத்தையும் நடத்தியவர் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. அதனாலேயே பிக்கு களுக்கு குகை ஒன்றை அமைத்துத் தானமளிக்கும் ஆற்றல் அவரிடம் இருந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.
புராதன இலங்கையர் சமூகத்தில் பருமக எவ்வாறு தோன்றினார் என்பதை ஆராய்ந்து பார்க்கையில் இந்நாட்டில் அரசியல் அதிகாரம் வளர்ச்சிப் பெற்ற முறை இலகுவாக எவ்வாறு ஏற்பட்டது என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அவ்வாறு தெரிந்து கொள்வதற்கு புராதன காலத்தில் நிலவிய கிராமிய சமூகத்தையும் அதன் செயற்பாட்டையும் நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இல்லத் தலைவர்கள்
குறைந்தபட்சம் கி.மு. 900 ஆண்டளவில் இந்நாட்டு கிராமியக் குடியிருப்புகள் உவர் வலயத்தின் பல பிரதேசங்களில் பரந்து காணப் பட்டன. இக்கிராமங்கள் பல குடும்பங்களைக் கொண்டிருந்தன. சிலவேளைகளில் ஒன்று தொடக் கம் முப்பது குடும்பங்கள் அதில் வாழ்ந்து வந்தன.
குடும்பம் என்ற கருத்து புராதன காலத்தில் குலம் எனும் சொல்லாலேயே குறிப்பிடப் பட்டது. இக்குடும்பங்கள் அனைத்திலும் தலைவர்கள், இல்லத் தலைவர்கள் கிருசுபதி என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள். கி.மு. 250 ஆம் ஆண்டை அண்மிய காலக் கல்வெட்டுக்களில் அவர்கள் கஹபதி ஏன்ற சொல்லால் குறிப்பிடப்பட்டிருந்தனர். இது தொடர்பான முக்கிய கல்வெட்டு ஒன்று அநுராதபுரத்தில் பெரிய புளியங்குளம் எனும் இடத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சுமணவின் குடும்பத்தைச் சேர்ந்த உலோகக் கைத்தொழில் மேற்கொண்டிருந்த இல்லத் தலைவனொருவன் பிக்குமாரின் சேமநலன் கருதி கற்குகை ஒன்றைச் சுத்தம்செய்து தானமளித்ததாக அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. கிராமத்தின் பொதுப் பணிகளில் ஒவ்வொரு குடும்பத்தையும் பிரதிநிதித் துவப்படுத்துவதற்காக முன்வந்தவர்கள், குடும்பத் தலைவர்களேயாவர். எளிமையாகக் குறிப்பிடுவதென்றால் கிருகபதி என்பவன் குடும்பத் தலைவன் ஆவான்.
கமிக
புராதன கல்வெட்டுகளிலும் அட்டுவாக் கதைகளிலும் கிராமிசு அல்லது கமிக எனும் பெயரால் குறிப்பிடப்படும் பிரிவினர் பற்றிக் கூறப்பட்டுள்ளன. அவர்கள் புராதன கிராமத் தலைவர்களாவர். அக்கிராமங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வெவ்வேறாக அமைந்திருந்தன கிராமங் களை வேறுபடுத்திக்கொண்டிருந்தது ஒடுங்கிய வனப்பகுதியாகும். இவ்வாறு வேறுபட்டிருந் தமையால் ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்த மக்கள் இவ்வேறுபாட்டை எங்களது ஊர் (தாம் வாழும் கிராமம்), அயல் ஊர்கள் (அருகில் இருந்த கிராமங்கள்), வெளி ஊர்கள் (தூரத்தில் இருந்த கிராமங்கள்) என்று குறிப்பிட்டனர். இவர்களிடையே திருமணத் தொடர்புகள், பண்டப் பரிமாற்றங்கள், பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளல் போன்றவற்றின்போது ஒவ்வொரு கிராமத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய நபர் "கிராமிக" எனும் பெயரால் குறிப்பிடப்பட்ட கிராமத் தலைவர் ஆவர்.
கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தலைவன் ஒருவன் இல்லத் தலைவர்களில் இருந்தே தெரிவுசெய்யப்பட்டான். அப்படித் தெரிவுசெய்யும்போது அவர்களுடைய சொத்துகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கலாம். புராதன கிராமம் ஒன்றில் வாழும் ஏழைக் குடியானவன் அடுத்த போகத்தில் தருவதாகக் கூறிய வாக்குறுதியின் பேரில் சுமிகவிடம் நெல் மூடை ஒன்றைக் கடனாகப் பெற்றுக் கொண்ட செய்தி, ஜாதக அட்டகதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கமிக என்பவர், ஏனையவர்களை விட அடுத்தவர் களுக்கும் உதவக்கூடிய அளவுக்கு செல்வந்தராக விளங்கினார் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ள முடிகின்றது.
ஒரு குழுவினரைச் சரியாக வழி நடத்துவதற்கு அக்குழுவினரின் நம்பிக்கையைப் பெற்ற நபர் ஒருவரே அதற்குத் தலைமைதாங்க வேண்டும். அக்கிராமத்தின் இல்லத் தவை வர்கள் எல்லோரும் ஒன்றுகூடி கிராமம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்வதற்குப் பதிலாக குடும்பத் தலைவர்களின் விருப்புடன் கிராமத்தில் வாழ்ந்த செல்வமும் பலமும் படைத்த ஒருவரைத் தங்கள் கிராமத் தலைவராக நியமித்துக் கொண்டுள்ளார்கள்.
கிராமத்து இல்லத் தலைவர்களில் இருந்து தெரிவு செய்யப்படுபவரே "கமிக" என்று, புத்த கோச தேரர், "சமந்த பாசதிகா" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கமிகவினால் நிறை வேற்றப்பட்ட விடயங்களுள் கிராமப் பொது நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கல், கிராமக் குளத்தை நிர்வகித்தல், அதிலிருந்து நீரை விநியோகித்தல் என்பன முக்கியத்துவமானவை. கிராமத்தவர்கள் இடையே ஏற்படும் பிரச்சி னைகளைத் தீர்த்தவ் உட்பட ஏனைய பணிகள் அனைத்திற்கும் தலைமை தாங்குவதற்கு அவரிடம் காணப்பட்ட செல்வ நிலையால் உரு வான அதிகாரப் பலம் கட்டியெழுப்பப்பட் டிருந்தமையே காரணமாகும் என்பது தெளிவா கின்றது.
அக்கிராமங்களில் வாழ்ந்த கிராமத் தலைவர்கள், ஒருவரோடொருவர் நல்லுறவுடன் செயற் பட்டமை, சமாதான சகவாழ்வு நிலவுவதற்குப் பெருந்துணையாக அமைந்தது. இதுபற்றி அம்பாந் தோட்டை மாவட்டத்தில் சித்துல்பவ்வ என்னும் இடத்தில் அமைந்துள்ள புராதன விகாரைக்குச் சொந்தமான கொரவக்கல எனுமிடத்தில் காணப் பட்ட கற்குகை ஒன்றில் இதனை உறுதிப் படுத்திக்கொள்ளக்கூடிய ஆதாரம் ஒன்று காணப்படுகின்றது. அக்குகையை சுத்தமாக்கி பிக்குகளுக்கு தானமளிப்பதற்கு நபர்கள் மூவர் முன்வந்துள்ளனர். கமிக சிவ, கமிக சுமண, கமிக சதன எனும் மூவரும் சித்துல்பவ்வையை அண்மிய பிரதேசத் தலைவர்களாக இருந்திருக்கலாம். இவ்வாறான கிராமத் தலைவர்கள் தோன்றியமை இந்நாட்டில் அரசியல் ஆதிக்கம் வளர்ச்சியடை வதற்கான முக்கிய சந்தர்ப்பங்களில் ஒன்றாகும்.
பருமக
புராதன காலத்தில் இந்நாட்டில் அரசியல் அதிகாரம் வளர்ச்சி பெறுவதில் பருமக எனும் பதவியால் குறிப்பிடப்படும் பிரபுகள் முக்கியத்துவம் பெற்றமை பற்றி மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறானதொரு பிரபு வகுப்பினரின் உரு வாக்கம் மற்றும் அவர்களுக்கு நிர்வாக அதிகாரம் எவ்வாறு கிட்டியது என்பதையும் தேடியறிதல் இவ்விடத்தில் முக்கியமான ஒன்றாகும்.
இது தொடர்பான விடயங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்கள் அனைவரினதும் கருத்தாக இருப்பது பருமக எனப்பட்ட பிரதானிகளின் தோற்றம், பிரதான குளங்களின் பராமரிப்புடன் சம்பந்தப்பட்டதாக இருந் திருக்கலாம் என்பதாகும். அப்படியானால் உண் மையிலேயே அது எவ்வாறு உருவானது?
கி.மு. 900 ஆண்டளவில் இந்நாட்டின் உலர் வலயத்தில் சிறு குளங்களை மையமாகக் கொண்டே குடியிருப்புக்கள் பரவிச் சென்றன. இக்குளங்கள் மழை நீரினால் போசிக்கப்பட்டன. சாதாரணமாக கிராம மொன்றில் வாழ்ந்த 10 15 குடும்பங்களுக்கு 1 அவர்களது அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய இக்குளத்து நீர் குறுகிய காலத்திற்கே போதுமானதாக இருந்தது. வருடாந்தம் ஏற்படும் உலர் பருவங்களில் இக்குளங்கள் வற்றிப்போயின. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதனை அண்டி வாழ்ந்த மக்கள் பெரும் இடர்களுக்கு முகங்கொடுத்தனர். புராதன குளங்களை அண்டி வாழும் உலர் வலய மக்கள் இன்றும் இதே பிரச்சி னைக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
சிறு குளங்களில் மழைக் காலத்தில் சேகரிக்கப் படும் நீர் பற்றாக்குறையாகும் சந்தர்ப்பங்களில் உருவாகும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்வது உவர் காலநிலையால் மட்டுமல்ல, காலப் போக்கில் ஏற்படும் சனத்தொகைப் பெருக்கத்தாலும் பயன்பாட்டிற்கு மேலதிக நீர் தேவைப்படும் என்பதனாலுமாகும்.பெருகிச் செல்லும் சனத்தொகைக்கு உணவை உற்பத்தி செய்து கொள்வதற்கும் போதுமான நீரைத் தேக்கி வைக்கும் தேவை ஏற்பட்டது. இவ்வாறான தேவையினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒரு முறை இரு முறையல்ல பலமுறை முகங் கொடுத்த எமது புராதன கிராமிய மக்கள், அச் சவாலை எதிர்கொள்வதற்காக பொருத்தப்பாடான முறை ஒன்றைக் கையாளத் தொடங்கினர். தனித் தனியாகக் காணப்படும் குளங்களுக்குப் பதிலாக, அருகருகே காணப்படும் பல குளங்களை கால்வாய்கள் மூலம் ஒன்றிணைத்து குளத் தொகுதி ஒன்றை உருவாக்குவதே அதுவாகும். அதற்கு இரு நோக்கங்கள் காணப்பட்டன :
1. மேட்டுப் பாங்கான நிலத்தில் அமைந்துள்ள குளம் மழை நீரால் நிரம்பும்போது வெளி யேறும் மேலதிக நீரைத் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ள குளம் ஒன்றிற்குத் திருப்பி நீரைப் பாதுகாத்தல்.
2. இரு குளங்களுக்கு இடையில் உள்ள கால் வாயில் எந்நேரமும் நீரைப் பாயவிடுவதன் மூலம் அதன் இரு பக்க நிலங்களினதும் ஈரத் தன்மையைப் பாதுகாத்துக் கொள்வதாகும்.
இவ்வாறு ஈரழிப்புமிக்க பிரதேசங்களில் இலகுவாக ஏனைய பயிர்களைப் பயிரிடக்கூடியதாக இருந்தது.
புராதன காலத்தில் இவ்வாறு அமைக்கப்பட்ட குளத் தொகுதிகளின் இடிபாடுகளை உலர் வலயத்தில் இன்றும் நாம் காணக்கூடியதாய் உள்ளது. இவ்வாறான ஒரு குளத் தொகுதியைக் குறிப்பிடுவதற்கு "வெவ்பிரபாதனய" என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உலர் வலய மக்கள் அவற்றை "எல்லங்காவ" எனும் பெயரால் குறிப்பிட்டுள்ளனர். குளத்தொகுதி ஒன்று உருவாக்கல் என்பது சிறு குளங்கள் பலவற்றை ஒன்றிணைப்பது மட்டுமல்ல, அதன் பின்னணியில் மிகவும் முக்கியமான விடயம் ஒன்று செயற்பட்டுக் கொண்டிருந்தது.
உலர் வலயத்தில் அருகருகே சுயாதீனமாக இருந்த சிறிய கிராமங்கள்பற்றி இதற்கு முன்னர் கூறியுள்ளோம். இக்கிராமங்கள் ஒவ் வொன்றிற்கும் சொந்தமான சிறிய குளங்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதில் கூறப் பட்டது. குளத் தொகுதி உருவாகும்போது, சுயாதீனமான கிராமங்களுக்குச் சொந்தமான குளங்கள் பலவும் நீர் வழிந்தோடும் பிரதேச சம உயரங்களுக்கு அமைவாக ஒன்றிணைப்பதாகும். அங்கு ஒவ்வொரு கிராமத்துத் தலைவர்களுக்கு இடையேயும் கலந்துரையாடல்கள் இடம் பெறும். அப்போது தொடர்புபடுத்தப்பட வேண்டிய சிறு குளங்கள் கிராமங்கள் பலவற்றிற்கும் பொதுவான தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான தேவை ஏற்படுவது இயற்கையாகும்.
இலங்கையின் புராதன கல்வெட்டுக்களில் காணப்படும் விடயங்களை நுணுக்கமாகப் பரிசீலித்துப் பார்க்கையில் தென்படுவதாவது, இச்சந்தர்ப்பத்தில் அங்கிருந்த கமிகமாருள் பலம் வாய்த்த ஒருவர் ஒரு குளத் தொகுதியைச் சேர்ந்த அனைத்துக் கிராமங்களையும் பிரதிநிதித்துவப் படுத்தும்வண்ணம் செயற்பட்டுள்ளமை ஆகும். இவர் பருமக எனும் குறிப்பிடப்பட்டுள்ளார். பெயரால் குளத்தொகுதி யொன்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட பல கிராமப் பிரஜைகளினதும் நலனுக்காகத் தீர் மானங்களை மேற்கொள்வதற்கான அதிகாரம் அளிக்கப்பட்டவராக பருமக இருந்தமையால் அக்கால சமூகத்தில் அவர்கள் பலம்வாய்ந்த பிரமுகர்களாகக் கருதப்பட்டனர்.
உவர் வலயத்தின் பரந்த நிலப்பிரதேசத்தில் இவ்வாறான குளத் தொகுதிகளின் நூற்றுக் கணக்கான இடிபாடுகளை இன்றும் எம்மால் காணக்கூடியதாய் உள்ளது. அவை பயன் படுத்தப்பட்ட காலத்தில் அக்குளத்தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பருமக இருந்திருப்பார் என்பது இதிலிருந்து தெளி வாகின்றது. இவ்வாறான பருமகமார் நூற்றுக் கணக்கானவர்களைப் பற்றி புராதன கல் வெட்டுக்களில் கூறப்பட்டுள்ளன. ஆண்கள் மட்டுமல்ல சில வேளைகளில் பெண்களும் பிரதேச நிர்வாகத்தில் பங்கு பற்றியுள்ளனர். இவ்வாறான பெண்கள் பருமகலு எனும் சொல் லால் குறிப்பிடப்பட்டுள்ளனர். முழுமையாகப் பார்க்கும்போது அவர்கள் யாவரும் உலர் வலயத்தில் குடியேற்றங்கள் பரவியிருந்த பிரதே சங்களில் குறுநில அலகுகளைப் பரிபாலித் தவர்களாவர். இவ்வாறு இலங்கையில் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட முறையில் உருவாக ஆரம்பித்தது. அவ்வாறான முறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வார்த்தைப் பிரயோகம் அதிகாரப் பன்முகப்படுத்தல் என்பதாகும்.
இவ்வாறாக இந்நாட்டின் பிரதேச நிர்வாகத்தைக் கொண்டு நடத்திய பருமகமாரின் அதிகாரம் விரிவடைந்து சென்றது. சில வேளைகளில் அவர்கள் அரசர் என்ற சொல்லாலும் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளனர். மாத்தளை மாவட்டத்தில் எம்புல் அம்பே எனும் இடத்தில் உள்ள புராதன கல்வெட்டு ஒன்றில் போசனி அரசன் என்று அறியப்பட்ட பிராந்திய நிர்வாகி ஒருவர் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் (பிராசின அரசன்) கிழக்குப் பிரதேச அரசன் என்பதாகும். கேகாலையில் யடஹலென எனும் புராதன விஹாரையில் உள்ள கற்குகை ஒன்றில் துகத ரஐ என்று குறிப்பிடப்பட்டுள்ள அதே போன்ற பிரதேச நிர்வாகி பற்றி அறிய முடிகின்றது.
ரஜ (ராஜா) எனும் சொல் மகிழ்விப்பவர் என்று பொருள் தருகின்றது. மக்களுடைய நல்வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, அவர்களைக் குதூகலமடையச் செய்பவர்களைக் குறிக்க இச்சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பருமக என்போர் அவ்வாறு செயற்பட்டமையால் பிற்காலத்தில் அவர்களைக் குறிப்பதற்கு அது போன்ற சொல் ஒன்றைப்பயன்படுத்தியிருக்கலாம்.
பிற்காலத்தில் இலங்கையை ஆட்சி செய்வதற்கு சிறந்த அரச பரம்பரை ஒன்று தோன்றுவதற்குக் காரணமான பின்னணி இவ்வாறே உருவாகி இருக்க வேண்டும்.
அரசின் வளர்ச்சி
பன்முகப்படுத்தப்பட்டு இருந்த அதிகாரம், ஒருமுகப்படுத்தப்படுவதே அரசின் வளர்ச்சி யாகும். அரச அதிகாரம் மத்தியமயப்படுத்தல் என்பது நாட்டை ஒன்றுப்படுத்துவது என்று பொருள்படும். இதன் மூலம் பொருள் கொள்ளப்படுவது அதிகாரம் ஒரு நபரின் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகும். அதிகாரம் மையப்படுத்துவதன் மூலம் அரசு என்ற பொறிமுறை உருவாகின்றது. அதன் ஆட்சியாளர் அரசனாவார். அவருடைய நிர்வாகத்தின் கீழ்க் குறிப்பிட்ட நிலப்பிரதேசம் ஒன்று அமைவுறும்.
வரலாற்று மூலாதாரங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி அநுராதபுர இராசதானியை ஆண்ட முதல் மன்னன் பண்டுகபாயன் ஆவான். மகாவம்சத்தில் குறிப்பிட்டுள்ளபடி,
1. பிராந்திய ஆட்சியாளர்கள் பல (மாமன்மார்) ருடன் சண்டையிட்டு, அப்பிரதேசங்களைக் கைப்பற்றி அரசனானான்.
2. தனது ஆட்சியின் மத்திய நிலையமாக அநுராத புரத்தை தெரிவுசெய்து, அதனை நகரமாகக் கட்டியெழுப்பினான்.
3. தனது பத்தாவது ஆட்சி வருடத்தில் கிராமங் களுக்கு எல்லைகள் வகுத்தான்.
தேவநம்பிய திஸ்ஸ மன்னன் காலத்தில் அரசு மேலும் மத்தியமயப்படுத்துவதற்கான தேவை மேலும் அதிகரித்தது. இன்னொரு விடயமாக, இந்து சமுத்திரத்தில் அக்காலத்தில் வளர்ச்சியுற்று வந்த வர்த்தகத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
கிழக்கு, மேற்கு நாடுகளை இணைக்கும் இந்து சமூத்திரத்தின் ஊடாக அமைத்திருந்த வர்த்தகப் பாதையின் மையத்தில் இலங்கை அமைந்திருந்தது. இப்புவி அமைவிடம் மட்டுமல்லாது. சர்வதேச வர்த்தகத்தில் இடம்பெற்ற இரத்தினக் கற்கள், யானைகள், வாசனைத் திரவியங்கள் என்பன அவர்களுடைய உள்ளங்கவர்ந்த வர்த்தகப் பொருள்களாக இருந்தன.
வளர்ச்சி அடைந்து வரும் இச்சர்வதேச வர்த்த கத்தில் தொடர்புபடும்போது சுதந்திர நாடாக செயற்படுவதற்கான தேவையும் எழுந்தது. இதனால் முழு நாடும் ஒரே நிர்வாகத்தில் வந்தாக வேண்டி இருந்தது. அப்போது பிரபல்யமாக விளங்கிய பிரதேசத் தலைவர்களில் சிலர் இதனை உணர்ந்தும் இருந்தனர். புனித வெள்ளரசு மரம் நடப்படும் வைபவத்திற்கு தேவநம்பிய திஸ்ஸ மன்னனால் கதிர்காமம், சந்தனகாமம் எனும் பிரதேசத் தலைவர்கள் அழைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி புனித வெள்ளரசு மரக்கிளைகளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நடுவதற்கு அம்மன்னனால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதையும் நாம் அறிவோம். சகல பிரதேசத் தலைவர்களிடையேயும் நல்லுறவை வளர்க்கும் தேவையை தேவனம்பிய திஸ்ஸ மன்னன் உணர்ந்திருந்ததாகத் தெரிகின்றது.
அக்காலத்தில் இந்தியாவை ஆட்சி செய்த கீர்த்தி மிகு பேரரசனான அசோகனால் அனுப்பப்பட்ட முடிசூடுவதற்கான ஐந்து வகை பட்டாபிஷேக (பஞ்ச வஸ்துக்களை) பொருள்களைப் பயன்படுத்தி, தேவனம்பிய திஸ்ஸ மன்னன் மீண்டும் முடிசூடிக் கொண்டமை. அசோக சக்கரவர்த்தியால் பயன்படுத்தப்பட்ட தேவனம்பிய எனும் பட்டத்தை சூடிக்கொண் டமை, மஹிந்த மகாதேரர் பௌத்த சமயத்தை இந்நாட்டில் அறிமுகப்படுத்தியமை போன்ற காரணிகள் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாடுகளிடையே வளர்ச்சியுற்று வந்த தொடர் புகளின் தன்மையைக் காட்டுகின்றன. பருமக மாரிடையே பன்முகப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் அரசியல் பலம் குறிப்பிட்ட ஒரு நபரிடம் குவியும் செயற்பாடு ஆரம்பமாவதை துட்டகைமுனு மன்னனுடைய காலத்தில் அவதானிக்க முடிகின்றது. அவர் அக்காலத்தில் இருந்த பருமகமாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார். இதனை விளக்குவதற்குப் போதுமான உதாரணங்கள் அம்மன்னனின் ஆட்சிக் காலத் திற்குரிய கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
நாட்டை ஐக்கியப்படுத்துவது தொடர்பான துட்டகைமுனு மன்னனின் செயற்பாடுகளில் பங்கு பற்றிய தளபதிகள், அப்பதவியைப் பெறுவதற்கு முன்னர் பருமகராக இருந்துள்ளனர்.
வேலு சுமண, புஸ்ஸ தேவ, தேரபுத்தாபய, நந்திமித்ர எனும் தளபதிகள் பருமகமார் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வாறான கல்வெட்டுக்கள் பலவும் சித்துல் பவ்வ என்னும் இடத்தில் உள்ள கற்குகைகளில் காணப்படுகின்றன. துட்டகைமுனு பல்வேறு திறமைகள் உள்ள மன்னன் பருமகமாரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அதுவரை பரவலாக இருந்துவந்த அதிகாரத்தை மையப்படுத்தினார். அதிகாரம் பரவலாக்கப் பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பருமக பதவிகளில் இருந்த பிராந்திய பிரமுகர்களின் தலைவர்கள், அதிகாரம் மத்தியமயப்படுத்தப்பட்ட பின்னர் அரசின் பல்வேறு பதவிகளை வகிப்பவர்களாக மாறினர். பருமக புஸ்ஸதேவ, தளபதி பருமக் வேலு சுமண, பருமக தேரபுத்தாபய என்று குறிப்பிடப்படும் விதம் சமகாலக் கல்வெட்டுக் களில் காணப்படுகின்றன. அதே போன்று பருமக பதவிகளை வகித்த பொருளாளர், அறவீட்டாளர், செயலாளர், பண்டகசாலைப் பொறுப்பாளர் தொடர்பாகவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இலக்கிய மூலாதாரங்களின்படி இலங்கைத் தீவை ஒன்றுபடுத்திய முதல் அரசனாகக் குறிப்பிடப்படுவது துட்டகைமுனு மன்னனை ஆகும்.
புராதன இலங்கையில் அரசியல் அதிகாரத்தை மத்தியமயப்படுத்துவதில் துட்டகைமுனு மன்னன் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டான். பாதிகாபய மன்னனின் காலத்தில் இலங்கையின் தூதுவர் ஒருவர் உரோமாபுரிக்குச்சென்று கண்ணாடி மணிகளாக என்பவற்றைக் கொண்டு வந்ததாக மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டிருந்தமை மேலும் முன்னேற்றமடைந்து பரிணமிப்பதற்கு வசப் மன்னன் காரணமாக இருந்தான். அவ னுடைய ஆட்சியின்போது முழு இலங்கையும் ஒரே அலகாகச் செயற்பட்டது. வசப மன்னனால் அமைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இந்நாட்டில் பரந்துபட்ட பிரதேசங்களில் விரவிக் கிடக்கின்றன. அத்தோடு நிர்வாக மாவட்டங்கள் (ஆஸ்தான) பிரிக்கப்பட்டு அந்த ஒவ்வொரு மாவட்டத்தையும் நிர்வகிப்பதற்கு அமைச்சர்களை நியமித்தமையும் இம்மன்னரது காலத்திலேயே இடம்பெற்றது. இவனுடைய காலத்தில் யாழ்ப்பாணப் பிரதே சத்தை அவனால் நியமிக்கப்பட்ட ரிSAK எனும் அமைச்சர் நிர்வகித்ததாக வல்லிபுரம் பொற்சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் யாழ் குடாநாடு நாகதீப (நகதிவ) என்று அழைக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரமான நாடொன்றாக உலகின் முன் தோன்றுவதற்கு. அரசியல் அதிகாரம் மையப் படுத்தப்பட்டிருந்தமையே காரணம் ஆகும்.
அரச கோட்பாடு
அரசியல் பலம் மையப்படுத்தப்பட்டபோது உருவான மகா ராஜா மிகவும் சக்தி வாய்ந்த நபராவார். அவர் தமது குடிமக்களின் முன்னர் தோற்றம்தர விரும்பியது சக்தி வாய்ந்த உருவத்திலாகும். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுதல், நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கல், பிரஜைகளிடையே ஆன்மீக வளர்ச்சி யை ஏற்படுத்தல் என்பன தமது மக்களுக்குத் தாம் ஆற்ற வேண்டிய கடமையென அரசர்கள் கருதினர்.
வெளிநாட்டு எதிரிகளின் இடையூறுகளில் இருந்து காப்பாற்றுதல், குளங்கள், கால்வாய்கள் கட்டிப் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத் துதல், தூபி, விகாரைகள் அமைத்து மக்களின் ஆன்மீகத் தன்மையை வளர்த்தல் என்பன இதற்கு உதாரணங்களாகும். எல்லாளன், நிஸ் ஸங்கமல்லன் ஆகிய அந்நிய மன்னர்களும் கூட மேற்குறிப்பிட்ட விதமாகச் செயற்பட்டு பொது மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டதற்கு வரலாறு சாட்சி பகர்கின்றது.
மன்னர்களின் செயற்பாடுகளும் அவர்கள் தோற்றம்தர விரும்பிய விதத்தையும் வைத்து அரசு பற்றிய பல்வேறு கொள்கைகள் முன்வைக்கப் பட்டுள்ளன. அதற்கமைய ஆண்டவன். போதி சத்துவர். மலையின் அரசன் (பர்வதராஜா), சக்கரவர்த்தி என்ற எண்ணக்கருக்களாக அவை வளர்ச்சியுற்றன.
ஆட்சி செய்யும்போது அவர்கள் ஆண்டவனாக வோ, போதிசத்துவராகவோ தோற்றமளிப்பதை பொதுவாகக் காண முடிந்தது. தம்புள்ளை விகாரை அமைந்துள்ள பாறைக் கல்வெட்டில் குட்டஈண்ண அபய மன்னன் அதில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பது நரேஸ்வர (நரஇ செர) எனும் பெயராலாகும். மனிதர்களின் கடவுள் என்பது அதன் பொருளாகும்.
மகாசேன மன்னன் குளங்கள், கால்வாய்கள் கட்டி பொருளாதாரத்திற்கு ஆற்றிய பணிக்காக "மின்னேரித் தெய்வம்' என்று வழிபடும் அளவிற்கு உயர்ந்துள்ளான். இன்றும் இத்தெய் வத்திற்கு அமைக்கப்பட்ட கோவில்களை உலர் வலயத்தில் காணக்கூடியதாய் உள்ளது.
முதலாம் காசியப்ப மன்னன் குபேரக் கடவுளாகத் தன்னைக் கருதிக் கொண்டான். இவனது கல்வெட்டு ஒன்றில் அவனைக் குறிப்பதற்காக அலகபய மகாராஜா எனும் சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் இந்திர வோகங்களின் மகாராஜா என்பதாகும். செல்வத் தின் அதிபதியாகக் கருதப்படும் குபேரனுடைய வசிப்பிடம் இதுவாகும். இது மலை ஒன்றைக் குறிக்கின்றது என இலக்கிய மூலாதாரங்களில் கூறப்பட்டுள்ளன. மலையின் அரசன் என்ற பெயருடன் அறிமுகமாவது புராதன கால ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த அரசர்கள் கையாண்டுவந்த ஒரு வழக்கமாகும்.
அரசன் போதிசத்துவராகத் தோற்றம் அளிப்பது இன்னொரு விடயமாகும். அரசன் தனது குடிமக்களின் மானசீக ஆறுதலுக்காக நீதி, நேர்மை, ஆன்மீகத் தன்மையுடன்கூடிய ஆட்சி யைக் கொண்டு நடத்துவதற்குப் பொறுப்பான கடமைப்பாட்டுடன் இருப்பதாகக் காண்பிப் பதுடன் வேறுவிதமாக, மக்கள் அரசன் மீது நம்பிக்கையும் மரியாதையும் செலுத்த வேண்டும் என்பதுவும் இதன் மூலம் வெளிப்படுத்தப் படுகின்றது.
இந்நாட்டு மன்னர்களால் பின்பற்றப்பட்ட இன் னொரு எண்ணக்கரு சக்கரவர்த்தி என்பதாகும். முழு உலகிற்கும் அரசன் என்ற பொருள்படும் ஒரு வார்த்தையே இதுவாகும். சமஸ்கிருத மொழியில் வழங்கும் இச்சொல் சிங்களத்தில் "சக்விதி" எனக் குறிப்பிடப்படுகின்றது. கி.பி. 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த அரசர் களில் சிலர் தனது தனித்துவத்தை வெளிக்காட்ட இப்பதத்தைக் கையாண்டுள்ளனர். குறிப்பாக நிஸ்ஸங்க மல்ல மன்னன் சில கல்வெட்டுக்களில் தன்னை இனங்காட்டிக் கொள்வதற்காக காலிங்க சக்கரவர்த்திப் பெருமான் என்ற சொற்றொடரைப் பிரயோகத்தைக் கையாண்டுள்ளார்.
அரசு பற்றி வெவ்வேறு கோட்பாடுகள் காணப் பட்டாலும் அக்கொள்கை ஒவ்வொன்றும் அரச னின் உயர்வைப் பற்றிக் கூறுவதற்காகப் பயன் படுத்தப்பட்டவையாகும். ஆட்சியாளரைச் சுற்றி அவ்வாறான உன்னதமான நிலை உருவாகும்போது ஆள்பவன் முன்மாதிரியானவனாகத் திகழ வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கமைய செயற்படுவதற்கு ஆள்பவன் நிர்ப்பந்திக்கப்படுவது இயற்கையாகும். நேர்மை யான அரச நிர்வாகத்திற்குத் தேவையான எண்ணக்கருக்களுக்கான பின்னணி உருவானது இவ்வாறேயாகும்.
அரச பாரம்பரியம்
புராதன இலங்கையில் அரசுரிமை கிட்டிய விதத்தைப் பார்க்கையில், அது சகோதரனிடமிருந்து சகோதரனுக்கோ, தந்தையிடமிருந்து மகனுக்கோ கிட்டியதாகத் தெரிகின்றது.
தேவனம்பியதிஸ்ஸ மன்னனின் மரணத்தின் பின் அவரது சகோதரர்கள் அரசர்களாகியுள்ளனர். துட்டகைமுனு மன்னனுக்குப் பின்னர் அரசுரிமை பெற்றவர், அவரது சகோதரனான சத்தாதிஸ்ஸ ஆவார். சகோதரனிடமிருந்து சகோதரனுக்கு அரசுரிமை வருகையில் அரசனின் ளைய சகோதரர்களுள் மூத்தவருக்கு அரசுரிமை கிட்டியுள்ளது. அவ்வாறல்லாத சந்தர்ப்பத்தில் மோதல்கள் உருவாகி இருப்பதை வரலாறு எமக்குக் காட்டுகின்றது.
தந்தையிடமிருந்து மகனுக்கு அரசுரிமை வருவது சாதாரண ஒரு விடயமாகும். காவந்திஸ்ஸ மன்னனுக்குப் பிறகு துட்டகைமுனுவுக்கு அரசுரிமை கிட்டியது. வசப மன்னனின் மரணத்தின் பின் அவரது மகன் வங்க நாசிக்க திஸ்ஸவுக்கு அரசுரிமை கிட்டியது. இவ்வாறு தந்தையிடமிருந்து மகனுக்கு அரசுரிமை கிடைப்பது இலங்கை வரலாறு முழுவதும் காணப்படுவதோடு அரச னுக்கு மூத்த புதல்வன் இல்லையேல் அடுத்த மனைவியின் மூத்த புதல்வனுக்கு அரசுரிமை கிடைத்தது. அவ்வாறு அல்லாதபோது மோதல்கள் ஏற்பட்டமைக்கான ஆதாரம் வரலாற்றில் உள்ளது. காசியப்ப மன்னன் தந்தை தாதுசேன மன்னனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது நாமறிந்த ஒரு விடயமாகும். அவ்வாறு செயற்பட நேர்ந்தமைக்குக் காரணம் பட்டத்து இராணியின் மகனான முகலன் பட்டத்து இளவரச னாக இருந்தமையாலாகும். காசியப்ப மன்னனின் தாய் தாதுசேன மன்னனின் இரண்டாவது மனைவியாவாள்.
இவற்றிற்கு மாறாக அரசனின் மனைவியின் சகோதரனுக்கு மற்றும் அரசனின் சகோதரியின் புத்திரனுக்கு அரசுரிமை கிட்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன. மேற்குறிப்பிட்ட விதத்திலான அரசுரிமையாளன் இல்லாத சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு நேர்ந்துள்ளன.
அரச கருவி
அரசியல் ரீதியாக அதிகாரம் பன்முகப்படுத்தப் பட்டிருந்த காலத்தில் பருமகமாராக இருந்த பலரும் ஒன்றுபடுத்தப்பட்டு அரசு உருவாக்கப் பட்டதால் அரசன் அனைத்து பருமகமாரினதும் தலைவனாகச் செயற்பட்டான். ஆகையால் அரச னைக் குறிப்பிட மகா பருமக அல்லது மபுறுமுகா என்ற பதவிப் பெயர் பயன்படுத்தப்பட்டது. அதிகாரம் பன்முகப்படுத்தப்படுவதற்கு முன்னர் அதிகாரமிக்க பருமகமார் சிவர் ராஜா என்ற சொல்லைப் பயன்படுத்தியமையை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எனினும் அரசியல் பலம் மத்தியமயப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டின் நிர்வாகியை மகாராஜா என்றே குறிப்பிட்டனர்.
மகாராஜா (மபுறுமுகா)
தலைமை அமைச்சர் மகா அமதி (மஹமத)
அமைச்சர்கள் (அமெத) + தளபதிகள் (சேனபதி)
பொருளாளர் (படகரிக)
உணவுச்சாவை அதிகாரி (பதகு)
வழக்கங்கள் மரபு முறைகள் தொடர்பான அதிகாரி (கொதுறு கேனா
நகர பரிபாலகர் (நகரகுத்திக)
நகர கட்டட நிர்மாணி (நகர வடிக)
குதிரைப் பிரிவின் தலைவர் (அச அதெக)
யானைப் பிரிவின் தலைவர் (ஹதி அதெக)
நாட்டியப் பிரிவின் தலைவர் (நட அதெக)
காசு அச்சிடும் பிரிவின் தலைவர் (ரூப அதெக)
வர்த்தக நடவடிக்கைக்கான தலைவர்(பனஅதெக)
அரச ஆவணங்களின் தலைவர் (கன பெடிக)
இவ்விதமாக அதிகாரிகளைக் கொண்ட அரச கருவி மூலம் நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவது இலகுவானதாக அமைந்தது. இவற்றால் அதிக பலனை அனுபவித்தவர்கள் நாட்டின் பொது மக்கள் ஆவர்.
இந்நாட்டை ஆண்ட முக்கியமான மன்னர்கள்.
இலங்கையின் அரசியல் அதிகார வளர்ச்சி நீண்ட காலமாக நிகழ்ந்துவந்த சமூக, பொருளாதார செயற்பாடுகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு வந்த விதத்தை இதுவரை கலந்துரையாடப்பட்ட கருத்துக்களில் இருந்து நீங்கள் விளங்கியிருப்பீர்கள். விசேடமாக கி.பி. 1 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் இந்து சமுத்திரத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த சர்வதேச வர்த்தக செயற்பாடுகளிலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதென்றால், பன்முகப்படுத்தப்பட்ட நிர்வாகத்திற்குப் பதிலாக மத்தியமயப்படுத்தப்பட்ட ஒரே ஆட்சி முறைக்குள் வருவதே பயன்மிக்கதாகும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டனர். அதற் குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட தனால் அரசியல் அதிகார வளர்ச்சிப் போக்கிற்கு இணையாக ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்ட கொள்கைகளையும் பங்களிப்புகளையும் இந்நாட்டு ஆட்சியாளர்கள் ஒரு சிலரைக் கொண்டு இப்பகுதியில் கலந்துரையாடப் போகிறோம்.
துட்டகைமுனு மன்னன்
வரலாற்று மூலாதாரங்களில் விரிவான முறையில் பிரஸ்தாபிக்கப்படுகின்ற துட்டகைமுனு மன்னன். இந்நாட்டின் அரசியல் அதிகாரத்தை முறையான விதத்தில் உருவாக்குவதில் மிகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்தவனாவான். அவனது காலத்தில் வேகமாக வளர்ச்சியுற்றுவந்த இந்து சமுத்திர வியாபார நடவடிக்கைகளிலிருந்து பேரளவு இலாபத்தை ஈட்டிவந்த மாந்தை (மாதொட) சர்வதேச துறைமுகத்தை அக்கால அனுராதபுர ஆட்சியாளனான எல்லாளனிடம் இருந்து மீட்டுக்கொள்வதற்கு அவனால் முடியுமாகவிருந்தது. தனது தந்தையான காவந்திஸ்ஸ மன்னனின் வழிகாட்டலின்படியும் செயற்றிட்டத்திற்கு அமைவாகவும் இயங்கிய விதம் இந்நாட்டு அரசியல் வரலாற்றிலே மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இந்நாட்டு வரலாற்றில் முதலாவது ஒழுங்கமைக்கப்பட்ட யுத்த செயற்பாட்டிற்குத் தலைமைத்துவத்தை வழங்கியவன் அவனேயாவான்.
எல்லாள மன்னனுக்கு எதிராகத் தாம் மேற்கொள்ளும் போர், தமது சொந்த சுகநலன்களுக்கு அல்லாமல், பௌத்த சாசனத்தின் நலனுக்காகவே மேற் கொள்ளப்படுவதாகக் கூறியதன் மூலம் ஆட்சியாளன் நாட்டிற்கான பொதுக் கொள்கை களை முன்வைத்து, அரசியல் செயற்பாட்டை மேற்கொள்கின்ற விதத்தைக் காண்பிக்கின்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் தோல்வியுற்ற தனது எதிராளியின் கல்லறைக்கு உரிய முறையில் மரியாதை செலுத்தும்படி மக்களுக்கு ஆணையிட்டான். இதன் மூலம் தனது இராஜதந்திர செயற்பாட்டை வெளிப்படுத்தினான்.
இதுவரை பன்முகப் படுத்தப்பட்டிருந்த பிராந்திய அதிகாரத்தைக் கொண்டிருந்த பருமகமாரை ஒன்று சேர்த்துக் கொண் டமை துட்டகைமுனு மன்னனால், இந்நாட்டு அரசியல் அதிகார வளர்ச்சிக்கு ஆற்றப்பட்ட பெரும் பணியாகும்.
இறுதியாக மகாராஜாவாக மகுடம் சூட்டப்பட்ட அவனுக்குப் பெரும் அதிகாரப் பலம் கிட்டியது. தான் எந்தளவு அதிகாரம் உள்ளவனாக இருந்த போதிலும் ஆட்சியாளனின் பொறுப்பு பொது மக்களின் நலனோம்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் என்பதைப் புரிந்து கொண்டமையை பொதுமக்களுக்கு வெளிப் படுத்திய நல்லெண்ணத்தின் மூலம் தெரிய வருகின்றது. ருவன்வெலிசாய சுட்டப்பட்ட வேளையில் அதன் நாற்றிசை வாயில்களிலும் தானமளிக்க ஏற்பாடு செய்தமையும் அதன் நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைவ ருக்கும் சம்பளம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமையும் இதற்கான ஆதாரங்களாகும். துட்டகைமுனு மன்னன் மதிக்கப்பட வேண்டியது அவன் பௌத்த மதத்திற்கு ஆற்றிய தொண்டுக ளுக்காக மட்டுமன்றி, பன்முகப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் அரசியல் அதிகாரத்தை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக அமைத்தமையுமாகும். இது அவ்வரசனின் செயற்பாடுகளில் துவாம்பரமாகத் தெரியும் ஒன்றாகும்.
வசப மன்னன்
இலம்பகர்ணவம்சத்தின்முதல் மன்னனானவசபன், இந்நாட்டு ஆட்சியாளர்களில் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டவர் ஆவார். உள்நாட்டு நிர்வாகத்தை முறையாகக் கட்டியெழுப்புவதற்காக அவனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னுதாரணங்களாகும். அவனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாபிக்கப்பட்ட கல்வெட் டுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய அவ்வரசன் நாட்டை நிர்வாக அலகுகளாகப் பிரித்து நிர்வகிப்பதற்கு முயற்சி செய்துள்ளான். அத்துடன் அரச வரி அறவீடு முறைப்படுத்தப்பட்டதும் இம்மன்னனின் காலத்திவேயாகும் என்பதும் அவனது கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகின்றது.
முதன் முதலாக இந்நாட்டில் பாரிய குளங்களை அமைப்பதற்கு முன்னோடியாக மன்னன் விளங்கினாள் வசப என்று வரலாற்று மூலாதாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இம்மன்னன் பெரிய குளங்களை நிர் 11 மாணித்ததாக வம்சக் கதைகளில் இருந்து தெரிய வருகின்றது. இவ்வாறான நடவடிக்கைகளுக்கான தூண்டலைப் பெற்றதற்கான காரணம், தென் இந்தியாவில் கிருஸ்ணா நதிப் பிரதேசத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையினால் இந் நாட்டில் உற்பத்தியான தானியங்களுக்கு அதிக கேள்வி ஏற்பட்டமையாலாகும். அவசரமாகப் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்குவதற்காக அரசாங்கத்தின் நிதியைச் செலவிடுவதற்கு மன்னன் எடுத்த தீர்மானம், சர்வதேச பிராந்திய தேவைகளுக்கு முகங்கொடுப்பதற்கு மேற்கொள் ளப்பட்ட சாதனை மிகு தூரநோக்குடனான செயற்பாடாகும்.
இந்நாட்டின் பௌத்த விகாரைகளைப் புனரமைப் பதற்காக வசப மன்னன் செயற்பட்ட விதம் எம்மன்னனது நடவடிக்கைக்கும் இரண்டாம் பட்சமானதல்ல. விகாரைகள் பழுதடைகையில் அவற்றைப் புனரமைப்பதற்கும் பிக்குமாரின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் அவ்வரச னால் விகாரைகளுக்காக வழங்கப்பட்ட கொடுப் பனவுகள் பற்றிய கல்வெட்டுக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
தேசிய வருமானத்தைப் பெருக்கிக் கொள்வ தற்கான அடிப்படையை உருவாக்கி, பெற்ற வருமானத்தைப் பயன்படுத்தி நாட்டின் நீர்ப் பாசன நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கும் அதன் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வசப மன்னனால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முன்னுதா ரணங்களாய் உள்ளன.
1ம் விஜயபாகு மன்னன்
இந்நாட்டை ஆண்ட மன்னர்களுள் மேன்மையான ஒருவன் முதலாம் விஜயபாகு ஆவான். தென்னிந்திய சோழ மன்னர்களின் ஆதிக்கம் பரவலடைந்து, இலங்கையும் நீண்ட காலமாக இவ்வாட்சிக்கு உட்பட்டிருந்தது. இவ்வேளையில் துண்ணறிவுடன் திட்டமிட்ட முறையில் படையெடுப்பை நடத்தி, சோழ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமை இம் மன்னனையே சாரும்.
சிறு வயத்தில் கீர்த்தி என்ற பெயருடன் உரு குணைக்குச் சென்று அங்கு வளர்ந்து வந்தான். அரச வம்சத்தவர்களான கீர்த்தி குமாரனுக்கும் அவனது பெற்றோர்க்கும் அடைக்கலம் வழங்கியது அங்கு வாழ்ந்த அரச அதிகாரி ஒருவராவார். சித்தாருபிம புத்தனாயக்க என்ற பாதுகாப்பு அதிகாரியே அவராவார். புத்தனாயக்கவால் அரச குடும்பத்திற்கு வழங்கப் பட்ட அடைக்கலத்தின் தன்மைபற்றிய சரியான விவரம், விஜயபாகு மன்னனால் எழுதப்பட்ட பனாகடுவ செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பராக்கிரமம்மிக்க சோழர்களுக்கு எதிராக செயற்படுவதற்கு விஜயபாகு மன்னனால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைக ளும் முழு நாட்டினரதும் பாதுகாப்பைக் கருதியே மேற்கொள்ளப்பட்ட சாதனைமிகு விடயங்க ளாகும். நாட்டின் சுதந்திரத்திற்கும் இறைமைக்கும் பாடுபட வேண்டியது நாட்டு மக்களுக்காக ஆட்சியாளரால் ஆற்றப்பட வேண்டிய முக்கிய பொறுப்பாகும்.
யுத்த நடவடிக்கை மூலம் சோழர்களைத் தோல்வியடையச் செய்து, நாட்டை மீண்டும் ஐக்கியப்படுத்திய மன்னன் பின்னர் நாட்டை அபிவிருத்தி அடையச் செய்வதற்கு முயன்றான். சோழர் காலத்தில் கவனியாது விடப்பட்டிருந்த விகாரைகளைப் புனரமைப்பதில் அவன் அவசரமாக ஈடுபட்டான்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு மன்னன் முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டான். அநுராதபுரத்திற்கு பதிலாக பொலன்னறுவையையே தனது தலைநகராகக் கொண்டான். அவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்காக அவன் தூண்டப்பட்ட தற்கான முக்கிய காரணம், அந்நேரத்தில் இந்து சமுத்திரத்தில் மேற்கை மையமாகக் கொண்டு செயற்பட்ட சர்வதேச வியாபாரம், கிழக்கிற்கு நகர்ந்ததாலாகும். அம்மாற்றத்தினூடாக இலங் கைக்கு முக்கியத்துவம் பெறுவது இந்து சமுத்திரத்தின் கிழக்குப் பிராந்தியத்துடன் இலகுவாகத் தொடர்பு கொள்ளக்கூடியதாக நிர்வாகத்தைக் கட்டமைத்துக் கொள்வதாகும். விஜயபாகுவிற்கு முன்னர் வாழ்ந்த அரசர்கள் பலரும் இத்தொடர்பு சம்பந்தமாகக் கவனம் செலுத்தியிருந்தாலும் அதனை நடைமுறைச் சாத் தியமாக்கி செயற்படுத்தியவன் இவனேயாவான். பொலன்னறுவையை தலைநகராகத் தெரிவு செய்வதில் செல்வாக்குச் செலுத்திய தலையாய காரணியாக கோகண்ண என்ற இன்றைய திருகோணமலைத் துறைமுகம் இந்து சமுத்திரத் தின் கிழக்குப் பகுதியில் இருப்பதால், அத் துறைமுகத்தின் வர்த்தக நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கு மிகவும் வசதியான இடத்தில் பொலன்னறுவை அமைந்திருந்தமையை ஆட்சி யாளர் விளங்கிக் கொண்டிருந்தமையாலாகும்.
முதலாம் விஜயபாகு மன்னன் செயற்பட்ட விதம் அதற்குப் பின்னைய காலத்தில் பெருஞ் செல்வாக்கைச் செலுத்தியது. பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் இந்நாட்டின் மீது செல்வாக் கைச் செலுத்தும் வரை பாதுகாப்பாக இருந்த இலங்கையின் இறைமை அம்மன்னரின் மதியூக மான சிறந்த கொள்கைகளின் பிரதிபலனாகும்.
மேலும் சில தகவல்கள்
பஞ்ச வஸ்துக்கள்
இவற்றைப் பிரயோகிப்பதால் சௌபாக்கியம் ஏற்படும் எனக் கருதப்படும் ஐந்து வகைப் பொருள்களை இது குறிக்கும். இதில் ஆல வட்டம், சாமரை, பாதணிகள், மங்கள வாள், நெற்றிப் பட்டம் என்பன உள்ளடங்கும். இப்பஞ்ச வஸ்துக்கள் பயன்படுத்தப்பட்டது மன் னனின் முடிசூடு விழாவின் போதாகும். அசோக மன்னனால் இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட பஞ்ச வஸ்துக்களைப் பயன்படுத்தி தேவனம்பிய திஸ்ஸ மன்னன். இரண்டாவது முறையாக முடிசூடிக் கொண்டதாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவனம்பிய எனும் பட்டம்
தெய்வத்திற்குப் பிரியமான தேவானம்பிரிய) என்ற பட்டத்தைப் பயன்படுத்தியவர் இந்தியப் பேரரசனான அசோக மன்னராவார். அம்மன்னரின் காலத்தவரான இந்நாட்டை ஆண்ட திஸ்ஸ மன்னனும் அப்பட்டத்தைக் கையாண்டு, தேவானம்பிய திஸ்ஸ என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார்.
இந்திரலோகம் (அளகாபுரி)
செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் வாழ்விடமே இது என இதன்படி ஆண்டவன் வாழும் இடமான வடமுனைத் தீவிலுள்ள பூரணத்துவமான நகரங்களில் இதுவும் ஒன்றாகும் எனவும் இலக்கியங்களில் குறிப் பிடப்பட்டுள்ளன.
நன்றி
0 Comments