பிரான்சியப் புரட்சி - 1789
1789 ஆம் ஆண்டு பிரான்சின் முடியாட்சிக்கு எதிராக எழுந்த அந்நாட்டு மக்கள். முடியாட்சியைக் கவிழ்த்துப் புதிய ஆட்சியை ஏற்படுத்தியமை பிரான்சியப் புரட்சி எனப்படும். பிரான்சியப் புரட்சியின் விளைவாக மனித உரிமைகள் தொடர்பாகப் பிரான்சில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன் பின்னர் உலகின் ஏனைய நாடுகளி லும் அது தாக்கம் செலுத்தியது.
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் ஐரோப்பாவில் மிகுந்த செல்வந்த நாடாக விளங்கியது. வெளிநாட்டு வர்த்தகம், கைத்தொழில் என்பவற்றில் அது முன்னணியில் இருந்தது. ஏனைய நாடுகளைவிடப் பிரான்சில் விவசாயிகள் நல்ல நிலையில் இருந்தனர். அறிவிலும், சமூகப் பழக்க வழக்கங்களிலும் பிரான்ஸ் ஐரோப்பாவில் முன்னணியில் இருந்தது. எனினும் பிரான்சிய ஆட்சியாளர்களின் பலவீனம் காரணமாக இந்நாடு அரசியல், சமூக, பொருளாதாரத் துறையில் வீழ்ச்சியடைந்திருந்தது. பிரான்சிய மன்னனான 16 ஆம் லூயி இதில் முக்கிய பங்கினை வகித்ததுடன் இவனது மோசமான ஆட்சிக்கு எதிராகத் துன்புற்ற சாதாரண மக்கள், "சுதந்திரம், சமத்துவம். சகோதரத்துவம்" என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு தமது ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தமது உரிமையைப் பெறுவதற்குப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் முடியாட்சியால் அதிக இன்னல்களுக்கு உள்ளானதால் 1789 ஆம் ஆண்டு அவர்கள் முடியாட்சிக்கு எதிராகப் போராடினர். பிரான்சில் இவ்வாறான நிலை தோன்றுவதற்குப் பல காரணிகள் இருந்தன.
பிரான்சியப் புரட்சிக்கான காரணங்கள்
அரசியல் காரணங்கள்
புரட்சிக்கு முன் பிரான்சில் முடியாட்சி நிலவியது. புரட்சியின்போது பிரான்சை ஆட்சி செய்த அரச மரபினர் பூர்போன் வம்சத்தவராவர். 14 ஆம் லூயி, 16 ஆம் லூயி ஆகியோர் அந்த மரபில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர். பிரான்சின் மன்னர்கள், இப்பதவி தமக்குக் கடவுளால் கொடுக்கப்பட்டதெனக் கருதிச் செயற்பட்டனர். சட்டம், நிருவாகம், நீதி ஆகிய அனைத்துத் துறைகளினதும் அதிகாரங்கள் அரசனிடம் குவிந்து காணப்பட்டன.
எண்ணிலடங்கா அதிகாரங்களைக் கொண்டிருந்த 14 ஆம் லூயி மன்னன் 'நானே அரசு' எனக் கூறினான். நான் விரும்பும் எதுவும் நடைபெறும் எனவும் அவன் கூறியுள்ளான். எதுவித விசாரணையுமின்றி எவரையும் கைதுசெய்து வாழ்நாள் முழுவதும் சிறையில் வைக்க அரசனுக்கு அதிகாரம் இருந்தது. இவ்வாறு மன்னனுக்கு இருந்த அதிகாரங்களைப் பிரான்சிய மக்கள் வெறுத்தனர். அரசன் இவ்வதிகாரங்களைத் தனிப்பட்ட, அரசியல் எதிரிகளைப் பழிவாங்கப் பயன்படுத்தியதுடன், அவர்கள் பஸ்டீல் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட் டனர். இதனால் பிரான்சின் ஊழல் நிறைந்த ஆட்சியின் அடையாளமாக விளங்கிய பஸ்டீல் சிறைச்சாலை பிரான்சியப் புரட்சியின்போது முதன் முதலில் தாக்கப்பட்டது.
மன்னனின் எல்லையற்ற சுகபோக வாழ்வு மக்களின் வெறுப்புக்கு உள்ளானமை மற்றுமொரு காரணமாகும். மன்னன் வாழ்ந்த வேர்சேல்ஸ் மாளிகை பல ஏக்கர் நிலப்பரப்பில் பரவலடைந்து விளங்கியது. அங்கு நீர்வீழ்ச்சி, நீர்ப்பூங்கா, மலர்ப் பூங்கா மற்றும் அலங்கார திருமாணங்கள் என்பன காணப்பட்டன. மன்னனின் மாளிகையைப் பார்க்கையில் அவன் வாழ்ந்த சுகபோக வாழ்க்கை பற்றி அறியலாம். இவ்வாறு சுகபோக அம்சங்களைக் கொண்ட சிறப்பு வாய்ந்த மாளிகையில் வாழ்ந்தமையால் மன்னனுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் காணப்பட்டது. மாளிகைக்குள் நுழைவதற்குச் சாதாரண மக்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. குருமாரும் பிரபுக்களும் மாத்திரமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மன்னன் நாட்டின் நிலைமை பற்றிப் பிரபுக்கள் மூலமே அறிந்து கொண்டான். பிரபுக்கள் நாட்டைப் பற்றியும் மக்கள் பற்றியும் தவறான கருத்துக்களையே முன்வைத்தனர்.
மன்னனுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பின்மையானது புரட்சி வரை செல்ல வழிவகுத்தது.
தலைக்கனம் கொண்ட வெளிநாட்டுப் பெண்ணான இவள் மன்னனின் அதிகா ரத்தையும் அவனது பலவீனத்தையும் பயன்படுத்தி அரசியலில் அதிகம் தலையிட்டாள்.
பிரான்சின் முடியாட்சி, அரசனை முதன்மையாகக் கொண்ட ஆலோசனைச் சபையையும் அந்த ஆலோசனைச் சபையின் ஆலோசனைப்படி செயற்பட்ட அமைச்ச ரவையையும் உள்ளடக்கியதாக விளங்கியது. இந்த முடியாட்சி ஊழல் நிறைந்ததாகவே காணப்பட்டது. பிரபுக்களின் கீழிருந்த பிரதேச நிருவாகம் செயலற்றுக் காணப் பட்டது. இதனால் அரசன் பிரதேச நிருவாகத்தின் பொருட்டு இன்டென்டன்" என்ற அதிகாரிகளை நியமித்தாள். எனினும் பிரபுக்களுக்கும் புதிய அதிகாரிகளுக்கு மிடையிலான மோதல் காரணமாக நிலைமை மோசமடைந்ததுடன் மக்கள் மேலும் துன்பத்திற்கு உள்ளாகினர்.
பலவித துன்பங்களை அனுபவித்தபோதிலும் மன்னனின் சர்வதிகாரத்திற்கும் முடி யாட்சியின் நிருவாகத்திற்கும் எதிராக செயற்படவும் தமது துயர்களைக் கூறவும் சந்தர்ப்பமின்றி மக்கள் துன்புற்றனர்.
மக்களின் குறைகளை முன்வைக்கும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட ஸ்டேட் ஜெனரல் என்ற பிரான்சியப் பாராளுமன்றம் 175 ஆண்டுகள் கூட்டப்படவில்லை. இதனால் முடியாட்சியின் செயற்பாடுகளும் ஊழல்களும் பிரான்சில் புரட்சி ஏற்படுவதற்குக் காரணமாயின.
சமூகக் காரணிகள்
புரட்சியின்போது பிரான்சில் மானிய முறை நிலவியது. மானிய முறை என்பது பரந்த நிலப்பரப்பை உரிமையாக்கிக் கொண்டிருந்த பிரபுக்களின் தலைமையில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட முடியாட்சியாகும்.
புரட்சியின் ஆரம்ப காலத்தில் பிரான்சிய சமூகத்தில் அரச குடும்பம் தவிர்ந்த குருமார், பிரபுக்கள், சாதாரண மக்கள் என முப்பிரிவினர் காணப்பட்டனர். குருமாரும் பிரபுக்களும் சமுதாயத்தில் செல்வாக்குக் கொண்ட பிரிவினராக விளங்கினர். சாதாரண மக்கள் மத்திய வகுப்பினர், விவசாயிகள், தொழிலாளர் ஆகிய முப்பிரிவினரை உள்ளடக்கியோராய் விளங்கினர். பிரபுக்களும் குருமாரும் சனத்தொகையில் சிறு பான்மையாக விளங்கியதுடன் சாதாரண மக்களே பெருந்தொகையினராக விளங்கினர். மத்திய வகுப்பினர் வர்த்தகம் முதலான செயற்பாடுகளில் ஈடுபட்ட செல்வந்தராவர். எனினும் அரசியல்ரீதியாக அவர்கள் முக்கியத்துவம் பெறவில்லை.
பிரித்தானியா போன்ற நாடுகளில் இக்கால கட்டத்தில் மத்திய வகுப்பினர் அரசியல் அதிகாரங்களைப் பெற்றிருந்தனர். எனினும் பிரான்சில் பிரபுக்களின் அதிகாரத்தில் மத்திய வகுப்பினர் மனம் தளர்ந்திருந்தனர்.
பிரபுக்களும் குருமாரும் பொது மக்களிடமிருந்து வரியைப் பெறும் குழுவினராக இருந்தனர். இதனால் அனேகமான குருமார் செல்வந்தர்களாக விளங்கினர். சலுகைகளைப் பெற்ற பிரபுக்களின் கீழ் பிரான்சின் நிலத்தில் பெரும்பகுதி இருந்தது. அவர்கள் அனுபவித்த சலுகைகளாவன,
நாட்டின் எந்த இடத்திலும் வேட்டையாட உரிமை
பிரபுக்களுக்குச் சொந்தமான நானிய ஆலைகள், வைன் வடிசாலைகள், வெதுப்பகங்கள் போன்றவற்றில் விவசாயிகள் தமது தேவையை நிறைவு செய்ய வேண்டியிருந்ததுடன் இதன் பொருட்டு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது.
விவசாயிகளின் நிலங்களிலிருந்து வரி அறவிடும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது.
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளிலிருந்து அவர்களுக்கு விலங்கு அளிக்கப்பட்டிருந்தது.
பிரான்சிய சமுதாயத்தில் கல்வியில் முன்னின்றவர்கள் நடுத்தர வகுப்பினராவர். எனினும் சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய இடம் இருக்கவில்லை. கல்வியில் முன்னணியில் இருந்தாலும் அரசியலில் எவ்வித முக்கிய பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. கல்வியில் பின்தங்கிய பிரபுக்களுக்கு இவை உரிமையாகின, ஒருவரின் நிலையைப் பிறப்பினைக் கொண்டல்லாது, திறமையையும் செல்வத் தையும் கொண்டே மதிப்பிட வேண்டும் என்ற கருத்து இதன் மூலமே தோற்றம் பெற்றது. சமத்துவம் என்ற எண்ணக்கரு இதன் மூலம் தோற்றம் பெற்றதுடன் அது ஜனநாயகத்தின் அடிப்படையாக அமைந்தது.
பிரான்சின் சலுகையற்ற சாதாரண மக்களிடையே பெரும் இன்னல்களுக்கு உள்ளானோர் விவசாயிகள் ஆவர். அவர்கள் பிரான்சின் மக்கள் தொகையில் 92% மானோராவர். கடினமாக உழைக்கும் மக்களான அவர்களுக்கு நிலங்களில் உரிமை இருந்த போதிலும் பிரபுக்களுக்கு அவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தது. வரிச்சுமையால் அவர்களது வாழ்க்கை கடினமானது.
பொருளாதாரக் காரணிகள்
பிரான்சியப் புரட்சியின்போது பிரான்சின் திறைசேரி முற்றிலும் வெறுமையாகி இருந்தது. அதற்கான காரணங்கள்.
அரசினதும் அரச குடும்பத்தினரதும் ஆடம்பர வாழ்க்கையினால் ஏற்பட்ட அதிக செலவு
தேவையற்ற யுத்தச் செலவு
பிரித்தானியருக்கும் பிரான்சியருக்குமிடையே நடைபெற்ற ஏழாண்டுப் போர், அமெரிக்க சுதந்திரப் போருக்குப் பிரான்ஸ் உதவியமை ஆகிய காரணங்களால் பிரான் சின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றது.
வினைத்திறனற்ற வரி முறை
பிரான்சில் நிலவிய அதிக வரி, பிரான்சியப் புரட்சிக்கு மற்றுமொரு முக்கிய காரண மாகும். பிரான்சின் சாதாரண குடிமக்கள் தமது வருமானத்தில் 60 வீதத்தை வரியாக செலுத்த வேண்டி இருந்தது. டெலி, கெபல், கெப்பிடேசன் என்ற மூன்று வரிகள் இதற்கு உதாரணமாகும்.
டெலி - இது பொதுமக்களின் வீடுகள், நிலங்கள், என்பவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டது. லியோன், பாரிஸ் போன்ற நகரங்கள் இந்த வரியிலிருந்து நீக்கப்பட்டிருந்தன.
கெபெல் - இது உப்பிலிருந்து பெறப்பட்ட வரியாகும். வளர்ந்த அனைவரும் ஆண்டொன்றிற்கு எழு இறாத்தல் உப்பை விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. உப்பின் விலை பிரதேசத்திற்குப் பிரதேசம் வேறுபட்டது. இதனால் விலை குறைந்த இடங்களிலிருந்து விலை கூடிய பிரதேசத்திற்கு இரகசியமாக உப்பு கொண்டு செல்லப்பட்டது. உப்பை விற்பனை செய்தல் அரசின் ஏகபோக உரிமையாக இருந்ததனால் இரகசியமாக உப்பை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்ற ஆயிரக்கணக்கானோர் சிறை வைக்கப்பட்டனர்.
கெப்பிடேஷன் - அனைவரிடமிருந்தும் அறவிட வேண்டிய வரியாக 1695 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் செயற்படுத்தும்போது அந்த வரிச் சுமையும் பொது மக்கள் மீது சுமத்தப்பட்டது.
அக்காலத்தில் பிரதேசங்களை அடிப்படையாசுக் கொண்ட ஆட்சி முறை பிரான் சில் நிலவியதால் பிரதேசத்திற்குப் பிரதேசம் நடைமுறையிலிருந்த சட்டங்கள், வரி முறைகள் என்பவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டன. இது பிரான்சின் உள்நாட்டு. வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பெருந் தடையாகியது. வர்த்தகத்தில் ஈடுபட்ட மத்திய வகுப்பினருக்கு இந்தச் சட்டங்கள், வரிமுறைகள் காரணமாக அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தென்பிரான்சிலிருந்து பாரிசுக்கு வைன் கொண்டு வருகையில் நாற்பது இடங்களில் வரி செலுத்த வேண்டி இருந்ததுடன் இதன் பொருட்டு இரண்டு வாரங்கள் எடுத்தன. பிரான்சின் வர்த்நகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாக மத்திய வகுப்பினர் செயற்பட்ட போதிலும் வர்த்தக ஏகபோக உரிமை அரசிற்கு உரியதாக இருந்தது. அரச திறைசேரி வெறுமையானதால் மத்திய வகுப்பினர் வைப்பிலிட்ட பணத்திற்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. இது மத்திய வகுப்பினரின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தது. அரச தலையீடில்லாப் பொருளாதார முறையை மத்திய வகுப்பினர் எதிர்பார்த்தனர். எனினும் அவர்கள் எதிர்பார்த்த செயற்பாடான நிருவாகத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் வழங்கிட பிரான்சிய முடியாட்சி தவறிவிட்டது. இதனால் மத்திய வகுப்பினர் புரட்சிக்கு தலைமை வகித்தனர்.
பிரான்சியப் புரட்சிக்கு தத்துவஞானிகளின் பங்களிப்பு
உருவாகிக் கொண்டிருந்த எதிர்ப்பு உணர்வுகளுக்கு பிரான்சியத் தத்துவஞானிகளின் கருத்து மேலும் வலுவூட்டியது. மொன்டெஸ்கியூ, வோல்டேயர், ரூசோ ஆகிய தத்துவ ஞானிகளின் கருத்துக்கள் புரட்சி பற்றியெரிய எண்ணையாக விளங்கியது.
மொன்டெஸ்கியூ
சட்டத்தின் சாரம் என்ற தனது நூலின் மூலம் தனிப்பட்ட ஒருவரிடம் அதிகாரங்கள். குவிந்திருப்பது பொருத்தமற்றது எனவும், இதன் மூலம் சர்வாதிகார ஆட்சி சுட்டியெழுப்பப்படும் என்றும் விளக்கினார். ஆதலால் சட்டம், நிருவாகம், நீதி ஆகிய மூன்று துறைகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் இதனால் சர்வாதிகார ஆட்சி ஏற் படுவது தவிர்க்கப்படும் எனவும் கூறினார்.
வோல்டேயர்
சுதந்திரமாகக் கருத்து வெளியிடும் உரிமை பற்றிக் கருத்து வெளி யிட்டார். முடியாட்சியினதும் திருச்சபையினதும் சர்வாதிகார ஆட்சியை அவர் கடுமை யாக விமர்சித்தார்.
ரூசோ
சமூக ஒப்பந்தம் என்ற நூலின் மூலம் மக்களின் சுதந்திரம் தொடர்பான எண்ணக்கருவை முன்வைத்தார். மள்னன் மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாத ஆட்சியாளரைத் துரத்தி விடுவது மக்களது பொறுப்பு எனவும் கூறினார். அவரது இக்கருத்து சமத்துவம், மக்கள் ஆதிக்கம் என்ற எண்ணக்கருக்களின் அடிப்படையானது.
இவற்றிற்கு மேலாக அமெரிக்க சுதந்திரப் போருக்கு உதவிடச் சென்ற பிரான்சியப் படை வீரர்கள் அந்தப் போராட்டத்தின் மூலம் சுதந்திரம் தொடர்பான எண்ணக்கருவை அறிந்ததுடன், அதனைப் பிரான்சில் செயற்படுத்த ஒன்று சேர்த்தமையும் பிரான்சியப் புரட்சிக்குக் காரணமாகியது.
பிரான்சியப் புரட்சி ஏற்படல்
1799 ஆம் ஆண்டாகும்போது இவ்வாறு எதிர்ப்புக்கள் தோற்றம்பெற்று இருந்த பிரான்சில் புரட்சி ஏற்படுவதற்கு உடனடிக் காரணமாக அமைந்தது அரசின் நிதி நிலைமை சீரற்று இருந்தமையால் ஏற்பட்ட நிலையாகும். அதற்கு மாற்று நடவடிக்கையாக வரிச் சீர்த்திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் பொருட்டு எஸ்டேட் ஜெனரல் எனப்பட்ட பாராளுமன்றத்தை 16 ஆம் லூயி மன்னன் கூட்டினான். இது 175 ஆண்டுகள் கூட்டப்படவில்லை. இதனால் அதன் செயற்பாடுகள் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. பல்வேறு கருத்துக்கள் காரணமாக செயற்பாடுகள் தொடர்பாகரிக்கல்கள் எழுந்தன. பிரபுக்கள் குருமார், பொதுமக்கள் ஆகியோர் இதில் அடங்கினர்.
பிரபுக்களும் குகுமாரும் (மேல் சபையினராகத்) தனியாகக் கூட வேண்டுமெனப் பிரபுக்கள் நெரிவித்தனர். பிரபுக்களும் குருமாரும் இணைந்து மூன்றாவது பிரிவினரின் சிபாரிசுக்களைத் தோற்கடிக்க வேண்டுமென்பதே பிரபுக்களின் நோக்கமாக இருந்தது. மன்னன் பிரபுக்களின் கருத்துக்களுக்குச் சார்பாக இருந்ததுடன் மூன்றாம் வகுப்பினர் அதனை எதிர்த்தனர். இந்த மோதல் காரணமாக பொதுமக்களைப் பிரதிநிதிப்படுத்திய மூன்றாவது பிரிவினரின் பிரதிநிதிகள் வேறாகக் கூடினர்.
பிரபுக்களின் தலையீட்டினால் அவர்கள் கூடிய மண்டபத்தை மூடிவிட நடவடிக்கை எடுத்ததால் தேசிய சபை என அறிமுகமான அக்குழுவினர் டெனிஸ் மைதானத்தில் ஒன்றுகூடி பிரான்சிற்குப் புதிய அரசியல் யாப்பினைத் தயாரிக்காது வெளியேறு வதில்லை என உறுதிமொழி அளித்தனர். இது "டெனிஸ் மைதான உறுதி மொழி" எனப்படுகின்றது. இவர்களுக்குப் பிரான்சியப் பொது மக்களின் ஒத்துழைப்புக் கிடைத்தது. முடியாட்சியில் வெறுப்புக் கொண்ட பாரிஸ் நகர மக்கள் ஆயுதங்களுடன் நகரில் ஒன்றுகூடினர். அவர்கள் 1789 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆந் திகதி பிரான்சிய முடியாட்சியின் அந்தியின் சின்னமாகக் கருதப்பட்ட பஸ்டீல் சிறைச் சாலையைத் தாக்கி அங்கிருந்த சிறைக் கைதிகளை விடுவித்தனர். இது பிரான்சியப் புரட்சியின் ஆரம்பமாகும்.
பாரிஸ் நகரில் ஏற்பட்ட புரட்சி நாடு முழுவதும் பரவியது. 16ஆம் லூயி மன்னனால் இதனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் மன்னனின் ஆட்சி வீழ்ச்சியுற்று மத்திய நிருவாகமும் பிரதேச நிருவாகமும் புரட்சியாளர் கைக்கு வந்தது. புரட்சியாளர் லாபெயிற் என்ற தலைவரின் கீழ்த் தேசிய பாதுகாப்புப் படையை நிறுவி நாடு முழுவதும் புரட்சிக் குழுக்களை அமைத்து நாட்டை அமைதிப்படுத்தினர். புரட்சியாளரின் ஆட்சியின் கீழ் 16 ஆம் லூயி மன்னனுக்கும் அவன் மனைவி மாரி அன்டனோயிட்டுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிரான்சியப் புரட்சியின் விளைவுகள்
பிரான்சியப் புரட்சியின் விளைவாகப் பிரான்சில் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் பல ஏற்பட்டன. முடியாட்சிக்கும் அநீதியான பொருளாதார முறைக்கும் எதிராகத் திரண்டெழுந்த பொதுமக்கள் இந்தப் புரட்சியின் மூலம் உலக அரசியலில் பாரிய அனுபவத்தையும் முன்மாதிரியையும் பெற்றனர்.
அடிப்படை உரிமை தொடர்பாக உலகம் முழுவதும் ஆர்வம் ஏற்பட்டது.
பிரான்சியப் புரட்சியாளர்களால் 1791 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரகடனம் வெளியிடப்பட்டது. அடிப்படை உரிமைககள் இயற்கை யிலயே மனிதனுக்கு உள்ள உரிமை என்பது இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. மனித உரிமைகள் தொடர்பாக உள்ள அந்த வெளியீட்டில் எல்லா மனிதரும் சுதந்திரமாகப் பிறப்பதால் அவர்கள் அனைவருக்கும் சம உரிமை உரித்தாக வேண்டும், அனைத்துப் பிரசைகளுக்கும் சட்டம் இயற்றும் செயற்பாட்டில் பங்கு கொள்ள உரிமையுண்டு, அனைத்துக் குடிமக்களுக்கும் சுதந்திரமாகக் கருத்து வெளியிடவும் தாம் விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் உரிமையுண்டு போன்ற கருத்துக்கள் காணப்பட்டது.
பிரான்சியப் புரட்சியின் பிரதான தாரக மந்திரமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற எண்ணக்கருக்களிற்கு மேலே கூறப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தில் வரவேற்புக் கிடைத்தது. உலகம் முழுவதும் சமூக அநீதிகளினால் துன்புற்ற மக்களுக்கு இது பெரும் ஆறுதலாக அமைந்தது. இதனால் பிற்காலத்தில் உலகில் பல நாடுகள் அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான எண்ணக் கருவை அரசியல் யாப்பின் மூலம் சட்டமாக்க முன்வந்தன.
பிரான்சின் முடியாட்சி வீழ்ச்சியுற்றமை.
பிரான்சிய விவசாயத் தொழிலாள மக்களுக்குச் சலுகை கிடைத்தமை.
பிரான்சில் உறுதியற்ற அரசியல் முறை தோன்றியமை.
பிரான்சியப் புரட்சிக்குத் தலைமை தாங்கியோர் பலவித அரசியல் கொள்கைகளை உடையோராக இருந்தமையால் புரட்சியின் பின்னர் இடையிடையே அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. 1789 - 1799 வரை இந்நிலைமை நிலவியது. இவ்வாறு உறுதியற்ற அரசியல் நிலைமை காரணமாக 1799 ஆம் ஆண்டு இராணுவ அதிகாரியான நெப்போலியன் பொனாபட் பிரான்சின் அதிகாரத்தைக் கைப்பற்றினான். அன்று முதல் பிரான்சில் புதிய அரசியல் நிலைமை உதயமானது.
நன்றி
0 Comments