அமெரிக்க சுதந்திரப் போர்
பிரித்தானியக் குடியேற்றங்கள் நிறுவப்படல்
கொலம்பஸின் வருகையின் பின் ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் பல்வேறு ஐரோப்பிய இனத்தவர் அமெரிக்காவின் பல பிரதேசங்களில் தமது குடியேற்றங்களை நிறுவினர். இவர்களில் ஸ்பானியரும் போர்த்துக்கேயரும் தென் அமெரிக்காவில் குடியேற்றங்களை நிறுவினர். பின்னர் அமெரிக்க ஐக்கிய அரசுகள் என்ற நாடு பிரித்தானியரால் வட அமெரிக்காவில் நிறுவப்பட்ட குடியேற்றங்களை மையமாகக் கொண்டு தோற்றம் பெற்றது.
வேர்ஜினியாமசாசுசெற்ஸ்
நியுயோர்க்
வட கரோலினா
நியூ ஜெர்சி
நியுஹம்ஷயர் 5. மேரிலாந்து
கனக்டிக்கட்
ரோட் தீவு
டெலவர்
தென் கரோலினா
பென்சில்வேனியா
ஜோர்ஜியா
1607 ஆம் ஆண்டு பிரித்தானியர் வேர்ஜினியாவில் குடியேற்றங்களை அமைப்பதில் ஆரம்பமான வட அமெரிக்கக் குடியேற்றம் ஒரு நூற்றாண்டு காலம் நிலைத்திருந்தது. இக்காலத்தில் பிரித்தானிய அரசின் நேரடியான தலையீட்டினைவிட அந்நாட்டின் நிறுவனங்கள், தனிநபர்கள், தனிப்பட்ட குழுவினரால் அமெரிக்காவில் குடியேற் றங்கள் நிறுவப்பட்டமை சிறப்பம்சமாகும். பிரித்தானிய அரசிடமிருந்து இந்தக் குடியேற்றங்களின் செயற்பாட்டிற்குத் தேவையான அனுமதியும் அனுசரணையும் கிடைத்தது. இவ்வாறு இடையிடையே பிரித்தானியாவிலிருந்து வட அமெரிக்கா சென்ற குழுவினர் 1733 ஆம் ஆண்டளவில் பதின்மூன்று குடியேற்றங்களை நிறுவினர். அந்தப் பதின்மூன்று குடியேற்றங்களின் பெயர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த பதின்மூன்று குடியேற்றங்களில் பன்னிரண்டு குடியேற்றங்கள் 1607 1682 இற்கும் இடைப்பட்ட காலத்திலேயே ஆரம்பமாகின. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் இறுதியாகத் தோற்றம்பெற்ற குடியேற்றம் ஜோர்ஜியாவாகும். அது 1733 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆரம்பக் குடியேற்றங்களின் தன்மையை நோக்குகையில் அவை ஒரேயடியாகத் தோற்றம் பெற்றதாகத் தெரியவில்லை. அவ்வாறே அக்குடியேற்றங்களை நிறுவுவதில் தாக்கம் செலுத்திய காரணங்களும் பலவிதமானதாகும். சமய சுதந்திரம் பெறும் நோக்கிலும் வர்த்தக ரீதியாக இலாபம் பெறும் நோக்கிலும் அவை நிறுவப்பட்டன. சனத்தொகை, வாழ்க்கை முறை. பொருளாதாரச் செயற்பாடு ஆகியவற்றிலும் இக்குடியேற்றங்களுக்கிடையே வேறு பாடுகள் காணப்பட்டன. இவ்வாறு பல வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆங்கில மொழி பேசிய, அப்பண்பாட்டிற்கு அமைய இசைவாக்கம் பெற்ற தனிமக்கள் பிரிவாக இக்குடியேற்றவாசிகள் எழுச்சி யுறத் தொடங்கினர்.
அமெரிக்கக் குடியேற்றங்களில் பிரித்தானிய நிருவாகம்
வட அமெரிக்கப் பகுதியில் பிரித்தானியக் குடியேற்றங்கள் பிரித்தானிய நிறுவ னங்களதும் பல்வேறு நபர்களதும் உதவியினால் நிறுவப்பட்டனவாக முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு குடியேற்றங்களை நிறுவ முன்வந்தோர் அதற்கான அனுமதியைப் பிரித்தானிய அரசிடம் பெற்றிருந்தனர். இதன்படி சில நிபந்தனைகளுக்கு அவர்கள் இணங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரித்தானிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் தாய்நாட்டுச் சட்டங்களைப் புதிய குடியேற்றங்களில் செயற்படுத்த வேண்டுமென்பதும் அந்த நிபந்தனையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. குடியேற்றங்களின் நிருவாகம் அந்தந்தக் குடியேற்றங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அவர்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்தக் குடியேற்றங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சட்டசபை இருந்தது. அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே நீண்ட தூரம் இருந்தமையாலும் வளர்ச்சியடைந்த தொடர்பாடல் வசதிகள் அக்காலத்தில் காணப்படாமையாலும் அமெரிக்கக் குடியேற்றவாசிகள் சுதந்திரமாக நிருவாகத்தை முன்னெடுத்துச் சென்றனர்.
இதற்கமைய 1763 ஆம் ஆண்டு வரை அமெரிக்கக் குடியேற்றங்கள் தொடர்பாகப் பிரித்தானிய அரசியல் கொள்கை மிகவும் இலகுத்தன்மையுடையதாக இருந்தமையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலைமை குடியேற்றவாசிகளில் சுதந்திரம் தொடர்பான எண்ணத்தை வளர்ப்பதில் தாக்கம் செலுத்தியது. எனினும் குடியேற்றவாசிகள் எதிர்நோக்கிய பிரச்சினை காரணமாகப் பிரித்தானியரின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது.
1763 ஆம் ஆண்டிற்கு முன்னர் அமெரிக்கக் குடியேற்றவாசிகள் எதிர்நோக்கிய பாதுகாப்புந் தொடர்பான இரண்டு பிரச்சினைகள் இருந்தன. இவற்றில் பிரான்சியரின் அச்சுறுத்தல் முதலாவதாகும். பிரித்தானிய குடியேற்றங்களுக்கு வடக்கில் பிரான்சியரின் ஆதிக்கம் இருந்ததாலும், அவர்கள் தம் ஆதிக்கத்தைப் பரவலடையச் செய்ய முயன்றதாலும் குடியேற்றவாசிகளுக்கு பிரித்தானியரின் பாதுகாப்புத் தேவைப்பட்டது.
1756 - 1763 வரை பிரித்தானியருக்கும் பிரான்சியருக்கும் இடையே நடைபெற்ற போர் ஏழாண்டுப் போர் எனப்படும். இந்தப் போரில் பிரான்சியர் தோற்கடிக்கப்பட்டனர். மேலும் பிரித்தானியருக்கும் பிரான்சியருக்குமிடையே சமாதான உடன்படிக்கை கைச் சாத்திடப்பட்டதால் குடியேற்றவாசிகளுக்கு பிரான்சியர் தொடர்பான அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது. அமெரிக்கக் குடியேற்றங்கள் மேற்கே பரவிட செவ்விந்தியரின் அச்சுறுத்தல் பிரதான தடையாக இருந்தது. பிரான்சியரின் ஆதிக்கம் மேலோங்கிய காலத்தில் பிரித்தானியருக்கு எதிராகப் பிரான்சியருடன் செவ்விந்தியர் தொடர்பு வைத்திருந்தனர். எனினும் பிரான்சியரின் தோல்வியுடன் இந்நிலை மாற்றமடைந்தது. மேலும் பிரித்தானியர் மேற்கொண்ட கொள்கையினால் செவ்விந்தியரின் அச்சுறுத்தல் குறைவடைந்தது.
இவ்வாறு ஏழாண்டுப் போரில் பிரான்ஸ் தோல்வியுற்று வட அமெரிக்காவில் பிரான்சியரின் ஆதிக்கம் வீழ்ச்சியுற்றதுடன் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பாதுகாப்பு உபாயங்களினால் செவ்விந்தியர்களின் அச்சுறுத்தலும் குறைவடைந்ததாவ் குடியேற்றங்களின் பாதுகாப்புத் தொடர்பாகப் பிரித்தானியரின் உதவி கட்டாயம் தேவைப்படவில்லை.
சுதந்திரப் போருக்கான காரணங்கள்
அமெரிக்கக் குடியேற்றங்கள் தொடர்பாகப் பிரித்தானியப் பொருளாதாரக் கொள்கை யும் வர்த்தக நடவடிக்கைகளும் தாய்நாட்டிற்கு சாதகமான முறையில் செயற்படுத்தப் பட்டன. இதன்படி பிரித்தானியாவில் உற்பத்திசெய்யப்பட்ட பொருள்கள் குடியேற்றங்களில் உற்பத்தி செய்வது தடை செய்யப்பட்டது. புகையிலை, சீனி, பருத்தி, தேன் மெழுகு, கோதுமை, வெண்கலம் போன்ற பொருள்கள் பிரித்தானியாவுக்கு மாத்திரமே கொடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ள பொருள்கள் தவிர்ந்த ஏனைய பொருள்களையும் பிரித்தானியாவுக்கு அனுப்பி, அங்கிருந்தே ஏனைய நாடுகளுக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறே உற்பத்திச் செயற்பாடுகள் அல்லது வர்த்தகம் தொடர்பாக இந்தக் குடியேற்றங்கள் தாய் நாட்டுடன் போட்டியிட முடியாது என்ற நிபந்தனை இருந்தது.
இந்தக் கொள்கையினால் குடியேற்றவாசிகளுக்குப் பொருளாதாரரீதியாகப் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், பிரித்தானியரால் அவர்களுக்கு நிலையான சந்தை கிடைத்திருந்தது. அவ்வாறே ஆரம்ப காலத்தில் பிரித்தானியரது சட்ட திட்டங்கள் குடியேற்றங்களில் கடுமையாக செயற்படுத்தப்படாமையால் ஏற்படும் பாதிப்பினைக் குறைக்கும் பொருட்டு ஏனைய இனத்தவருடன் இரகசியமாக வர்த்தகத் தொடர்பினை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதனால் 1763 ஆம் ஆண்டு வரை பிரித்தானியப் பொருளாதார முறையும் சட்டதிட்டங்களும் அமெரிக்கக் குடியேற்றங்களில் அதிக எதிர்ப்பை எதிர்நோக்கவில்லை. எனினும் 1763 ஆம் ஆண்டின் பின்னர் பிரித்தானியா அறிமுகம் செய்த சட்டதிட்டங்களால் குடியேற்றங்களுக்கும் தாய் நாட்டிற்குமிடையே கருத்து வேறுபாடு தோன்றியது. அது சுதந்திரம் தொடர்பான கருத்து வலுவடைவதற்குக் காரணமாகியது.
ஏழாண்டுப் போரின் பொருட்டு பிரித்தானியா அதிக செலவு செய்ய வேண்டி இருந்ததால் அந்நாட்டின் கடன் சுமை அதிகரித்தது. அக்கடனையும் வட்டியின் ஒரு பகுதியையும் அமெரிக்கக் குடியேற்றங்கள் ஏற்க வேண்டும் என்பது பிரித்தானியரின் நோக்கமாக இருந்தது. இதனால் பிரித்தானியப் பிரதமர் ஜோன் கிரன்வில் அமெரிக்க குடியேற்றங்களிலிருந்து அறவிடப்பட்ட சுங்க வரி முறையாக அறவிடப்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். குடியேற்றங்களில் இரகசிய வர்த்தக நடவடிக்கைகளைத் தடைசெய்யும் பொருட்டுப் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகம் செய்யவும் அவர் நடவடிக்கையை மேற்கொண்டார். 1784. 1765 ஆகிய ஆண்டுகளில் அவ்வாறான மூன்று சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
நாணயச் சட்டம்
முத்திரைச் சட்டம்
சீனிச் சட்டத்திற்கு அமைய இரகசிய வர்த்தகத்தை நிறுத்துவதற்குப் பிரித்தானியக் கடற் படை முன்னரைவிட அதிகமாகக் கடற்கரை பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டதால் குடியேற்றவாசிகளுடன் மோதல்கள் ஏற்பட்டன. நாணய சட்டத்திற்கு அமையக் கடனைச் செலுத்தும் பொருட்டு குடியேற்றங்களில் நாணயங்கள் வழங்குவது தடை செய்யப்பட்டது. வெள்ளி அல்லது தங்கத்தினால் அத்தொகையை செலுத்துவதற்கு குடியேற்றவாசிகளுக்கு நேர்ந்தது. குடியேற்றவாசிகள் இச்சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் 1765 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கத்தால் முத்திரைச் சட்டம் அமுல் செய்யப்பட்டது. இதற்கமைய சட்டரீதியான அனைத்து ஆவணங்களுக்கும் முத்திரை வரி அறவிட வேண்டுமென விதிக்கப்பட்டது. முத்திரை வரி வர்த்தகர்கள், சட்டத்தரணிகள், அச்சிடுவோர். போன்ற உயர்நிலையில் இருந்தோரையும் பாதித்தமையால் அவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த சட்டத்திற்குப் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டதுடன் அமெரிக்க குடியேற்றவாசிகள் முத்திரையை நிராகரிக்கவும் முன்வந்தனர். எதிர்ப்பினைத் தெரிவிக்கும் நடவடிக்கையை ஒழுங்கமைப்பதில் குடியேற்றங்களில் ஒற்றுமை காணப்பட்டமை சிறப்பம்சமாகும்.
மேற்கூறப்பட்ட வரிகள் தவிர தேயிலை, கண்ணாடி, கடதாசி போன்றவற்றிற்கும் சுங்க வரி செலுத்துவது தொடர்பாக எதிர்ப்பு எழுந்தது. பிரித்தானியரால் அமுல் செய்யப்பட்ட மற்றுமொரு சட்டத்திற்கு அமைய அமெரிக்காவில் இருந்த பிரித்தானிய படையினருக்குத் தங்குமிடம் அளித்தல், நிதி வழங்குதல் என்பன குடியேற்றங்கள் மீது சுமத்தப்பட்டன. இந்தச் சட்டங்களுக்கு எதிராகக் குடியேற்றவாசிகள் கிளர்ச்சி செய்யும்போது அவற்றை அடக்குவதற்கு சில குடியேற்றங்களில் எட்டாபையைக் கலைத்தல் போன்ற செயற்பாட்டையும் மேற்கொண்டனர். இதனால் குடியேற்றவாகி கள் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெறும் நோக்கில் ஒன்றிணைந்து போராட முன்வந்தனர். இந்த நிலையை ஆராய்கையில் அமெரிக்க சுதத்திரப் போருக்கான சில காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
அமெரிக்கக் குடியேற்றவாசிகள் நீண்ட காலமாகப் பிரித்தானிய தலையீட்டிற்கு மாறாக சுய நிருவாகத்திற்குப் பழக்கப்பட்டிருந்தமை.
பிரித்தானியர் பின்பற்றிய தாய்நாட்டிற்குச் சாதகமான பொருளாதாரக் கொள்கை.
குடியேற்றவாசிகளின் எண்ணங்கள், மனநிலைகள், கருத்துக்களைப் பிரித்தானிய அரசாங்கம் சரியாகப் புரிந்து கொள்ளாமை.
1763 ஆம் ஆண்டின் பின்னர் அமுல் செய்யப்பட்ட புதிய வரிகள்.
குடியேற்றவாசிகளின் நீதியான போராட்டங்களைக் கட்டுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுத்தமை.
சுதந்திரம் தொடர்பாகக் குடியேற்றவாசிகளிடையே காணப்பட்ட ஆர்வம்.
அமெரிக்க சுதந்திரப் போர் ஏற்படல்
முத்திரைச் சட்டத்திற்கு எதிராக ஏற்பட்ட முக்கிய எதிர்ப்பின் காரணமாகப் பிரித்தானிய அரசு அதனை நீக்கியது. எனினும் அமெரிக்கக் குடியேற்றங்கள் தொடர்பாக சட் டங்களை விதிக்கப் பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டெனப் பிரித்தானியா கூறியது. முத்திரை வரி போன்ற நேரடியான வரிகளை அமெரிக்க மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை உணர்ந்த பிரித்தானிய அரசு தனது வருமானத்தை உறுதி செய்யும் பொருட்டு 1767 ஆம் ஆண்டு இறக்குமதிச் சட்டங்கள் சிலவற்றை அமுல் செய்தது. இதற்கமைய அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்த கண்ணாடி, ஈயம், கடதாசி, தேயிலை ஆகிய பொருள்களுக்கு இறக்குமதி வரியை விதித்தது. இந்த வரியினை சேகரிக்கப் பிரித்தானிய அரசாங்கம் முயன்றபோது குடியேற்றவாசிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எனவே இரு சாராருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.
பொஸ்டன் துறைமுகத்தில் குடியேற்றவாசிகள் காட்டிய எதிர்ப்பிற்குப் பிரித்தானிய இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் ஐவர் உயிரிழந்தனர். இவ்வாறான செயல்களால் அமெரிக்க மக்களிடையே பிரித்தானியர் மீதான எதிர்ப்பு மேலும் அதிகரித்தது. குடியேற்றவாசிகள் பிரித்தானியப் பொருள்களை மேலும் பகிஷ்கரித்ததால் மேற்கூறப்பட்ட இறக்குமதி வரிகளிலிருந்து பெறப்பட்ட இலாபத்தை விடப் பல மடங்கு நட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் 1770 ஆம் ஆண்டு தேயிலை வரி நீங்கலாக ஏனைய இறக்குமதி வரிகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இலாபம் பெறுவதை விட அமெரிக்கா மீது வரி விதிப்பதற்குத் தமக்கு உரிமை உண்டெனக் காட்டும் பொருட்டே பிரித்தானிய அர சாங்கம் தேயிலை வரியை நீக்கவில்லை.
1773 ஆம் ஆண்டு அமுல் செய்யப்பட்ட மற்றுமொரு சட்டத்தால் அமெரிக்கக் குடியேற்றங்களுக்குத் தேயிலை வழங்கும் உரிமையை ஒரு நிறுவனத்திற்கு மட்டும் பிரித்தானியா வழங்கியது. இதனால் அமெரிக்க வர்த்தகர்களின் சம்பிரதாய தேயிலை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் கோபமுற்ற அமெரிக்கர்கள் பிரித்தானிய வர்த் தக நிறுவனங்களின் தேயிலையை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தனர்.
1773 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பொஸ்டன் துறைமுகத்தில் தரித்திருந்த தேயிலையுடன்கூடிய சுப்பலில் மாறு வேடம் தரித்து நுழைந்த பொஸ்டன் மக்கள் அதிலிருந்த 342 தேயிலைப் பெட்டிகளைக் கடலில் வீசினர். பொஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்படும் இந்த நிகழ்வு அமெரிக்க சுதந்திரப் போரின் ஆரம்பமெனக் கருதப்படுகின்றது. பொஸ்டன் நிகழ்விற்கு நட்ட ஈடு செலுத்தும் வரை பொஸ்டன் துறைமுகத்தை மூடுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இது தவிர பல்வேறு சட்டங்களை அமுல்செய்து குடியேற்றவாசிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து மசாசுசெற்ஸ், ஜோர்ஜியா போன்ற குடியேற்றங்களின் நிருவாகத்தைச் சீர்திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரித்தானியா பின்பற்றிய இந்த அடக்குமுறையால் கோபமடைந்த இந்தக் குடியேற்றவாசிகள் 1774 ஆம் ஆண்டு பிலடெல்பியா நகரில் ஒன்றுகூடி மகாநாடு ஒன்றினை நடத்தினர். அமெரிக்க சுதந்திரப் போர் தொடர்பான வரலாற்றில் அமெரிக்கக் கண்டத்தின் முதலாவது மகாநாடு என அது குறிப்பிடப்படுகின்றது.
பிலடெல்பியா மகாநாடு அமெரிக்க சுதந்திரப் போரில் முக்கிய கட்டமாகும். 12 குடியேற்றங்கள் கலந்து கொண்ட இந்த மகாநாட்டில் அமெரிக்கக் குடியேற்றங்கள் தொடர்பாகச் சட்டங்களை அமுல் செய்யவோ, வரி அறவிடவோ பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என வெளியிடப்பட்டது. அவ்வாறே பிரித்தானியப் பொருள்களை பகிஷ்கரிக்கவும் பாதுகாப்பின் பொருட்டு குடியேற்ற வாசிகள் ஆயுதந்தரிக்க வேண்டுமெனவும் இங்கு கருத்து முன்வைக்கப்பட்டு நிறைவேறியது. இதன் பின்னர் பிரித்தானிய அரசுக்கும் அமெரிக்கக் குடியேற் றங்களுக்கும் இடையிலான போர் படிப்படியே வலுவடைந்தது.
1775 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லெக்சின்டன் நகரில் இரு பிரிவினரதும் படைகளுக்கிடையே ஆயுதப் போர் நடைபெற்று பல மரணங்கள் ஏற்பட்டன. இதன் பின்னர் பிலடெல்பியா நகரில் மீண்டும் ஒன்றுகூடிய குடியேற்றங்களின் பிரதிநிதிகள், குடியேற்ற வீரர்கள் கண்டமொன்றின் வீரர்களாகத் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்ளத் தீர்மானித்ததுடன் அந்தப் படையின் தலைவர் பதவிக்கு ஜோர்ஜ்வொஷிங்டன் நியமிக்கப்பட்டார். அமெரிக்க சுதந்திரப் போருக்கு வெளிநாட்டு உதவியைப் பெறும்பொருட்டுக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.
பிரித்தானியப் படையினருக்கு முகங்கொடுக்க வேண்டிய பின்னணியை அமைத்ததன் பின்னர் குடியேற்றங்களின் ஒன்றிணைந்த பிரதிநிதிகள் சபையால் 1775 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனம் வெளியிடப்பட்டது. பிறப்பிலேயே மனிதனுக்கு அளவிடமுடியாத உரிமைகள் பல உண்டெனவும் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மனிதன் ஆட்சியை அமைப்பதாகவும் குறிப்பிடும் அப்பிரசுடனம் மூலம் அமெரிக்கா பிரித்தானியப் போரசிலிருந்து விலகி சுதந்திர அரசாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அதற்கு இணங்காத பிரித்தானியா அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தது.
அப்போர் பல ஆண்டுகள் நீடித்தது. போர் ஆரம்பமாகி முதல் இரு ஆண்டுகள் பிரித்தானியப் படை சில வெற்றிகளைப் பெற்ற போதிலும் பின்னர் பிரித்தானியப் படை தோல்வி கண்டது. பல்லாயிரம் மைல்கள் தூரத்தில், பழக்கமில்லாத பிரதேசத்தில் போர்புரிய வேண்டிய நிலை ஏற்பட்டதால் பிரித்தானியப் படையினர் பெரும் இன்னல்களை எதிர்நோக்கினர். இந்த இரு பிரிவினருக்கும் இடையிலான போர்களில் பிரான்ஸ் அமெரிக்காவுக்கு உதவி முன்வந்தது. பின்னர் ஸ்பானியா, ஒல்லாந்து என்பன பிரித்தானியாவுக்கு எதிரான குழுவில் இணைந்தன. இதனால் பிரித்தானியாவுக்குப் பாதகமான நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் நடைபெற்ற போர்களில் தோல்வியடைந்ததால் 1783 ஆம் ஆண்டு பிரித்தானியா சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இறங்கியது. அதன் விளைவாக 1783 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையில் அமெரிக்கா சுதந்திர அரசாகப் பிரித்தானியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அமெரிக்காவின் சுதந்திரம் சர்வதேசரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் 1769 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்கள் தமது அரசியல் யாப்பினை உருவாக்கினர். அதன்படி ஜோர்ஜ் வொஷிங்டன் முதல் ஜனாதிபதியானார்.
சுதந்திரப் போரின் விளைவுகள்
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் உலக வரலாற்றில் முக்கிய ஆவணமாகக் கணிக்கப் படுகின்றது. அதில் அடங்கியுள்ள அனைத்து இனத்தவரும் சமமானவர் என்ற பதம் பிற்காலத்தில் உலகின் புரட்சிகளின் தலைப்பாக அமைவதைக் காணக்கூடியதாக உள்ளது.
ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற சுதந்திர அரசு உதயமாகியது.
1 Comments
மிக அருமையான, தெளிவான, நீண்ட வரலாற்றை அனைவருக்கும் புரியும்படி சிறப்பாக கொடுத்துள்ளீர்கள். அதற்காகவே தங்களுக்கு ஒரு சபாஷ்...
ReplyDeletescientificJudgment Web