மறைஞான சம்பந்தர்
மறைஞான சம்பந்தர் 14ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். சந்தான குரவர்மரபில் மூன்றாவதாக விளங்குவதோடு, அருணந்தி சிவாச்சாரியாரின் சீடராகவும் காணப்படுகிறார். மெய்கண்டாரைப் போன்ற பரிபக்குவ நிலையை அடைந்த மறைஞான சம்பந்தர் சைவ சித்தாந்த வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்.
மறைஞான சம்பந்தரது சைவப்பணிகளில் பிரதானமானது சைவ சித்தாந்த தத்துவ உண்மைகளை எளிமையான வடிவில் போதித்ததற்காகும். தனக்கு முன்னர் வாழ்ந்த மெய்கண்டதேவர், அருணந்தி சிவாச்சாரியார் ஆகியோர் அருளிய சித்தாந்த நூல்களான சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபாஇருஃபது ஆகிய நூல்களைக் கற்று அவற்றின் சித்தாந்த உண்மைகளை தம் மாணவர்களுக்கு எளிமையாகக் கற்பித்தார்.
இவர் சிதம்பரத்துக்கு அண்மையில் உள்ள திருக்காளாஞ்சேரியில் இருந்து சைவ சித்தாந்த உண்மைகளை மாணவர்களுக்கு போதித்துக் கொண்டு இருந்தார். அப்போது உமாபதி சிவம் சோழ மன்னன் தமக்களித்த பல்லக்கில் ஏறி பகற்பொழுதில், தீவர்த்தி, ஆலவட்டம், குடை, சாமரை முதலான பரிசனங்களை புடைசூழச் சென்று கொண்டு இருந்தார். மறைஞான சம்பந்தரிடம் பாடம் கற்றுக் கொண்ட மாணவனொருவன் அவ்வூர்வலத்தைத் திரும்பிப் பார்த்தான். பராக்குப் பார்த்த மாணவனை பாடத்தில் ஈடுபடுத்துவதற்காக மறைஞான சம்பந்தர் “பட்டகட்டையில் பகல்குருடு போகிறது” என்று குறிப்பிட்டார்.
பட்டகட்டை என்பது காய்ந்தமரத்திலான பல்லக்கையும், பகற்குருடு என்பது நண்பகலில் தீவர்த்தியுடன் நடுத்தெருவில் உமாபதிசிவம் சென்றதையும் குறிக்கின்றது. அச்சம்பவத்தின் மூலம் மறைஞான சம்பந்தர் மூன்று சிந்தனைகளை மாணவர்களுக்கு முன்வைத்தார்:
1. ஆடம்பரவாழ்வு ஆன்மீக மேம்பாட்டுக்கு ஆகாது.
2. அகக்கண் திறந்தவரே கண்ணுடையார்; அல்லாதோர் "பகற்குருடு" என மதிக்கப்பட வேண்டியவர்கள்.
3. என்றோ ஒரு நாள் இறப்பு எவருக்கும் நேரிடும்.
மறைஞான சம்பந்தர் தனது சீடர்கள் குலம், சாதி என்பனவற்றைக் கடந்த பரிபக்குவ நிலையினராகத் திகழவேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் பல சோதனைகளைத் தந்து ஈற்றில் அவர்களை ஆட்கொண்டார். ஒரு சமயம் நெசவாளரது சேரிக்குச் சென்ற இவர், அவர்கள் ஊற்றிய கஞ்சியைக் குடித்ததோடு, தனது முழங்கைகளில் இருந்து வழிந்தொழுகிய கூளை அந்தணராகிய உமாபதிசிவாச்சாரியார் பருகியமை அவர்கள் அந்நிலையைக் கடந்து நிற்பதற்குச் சான்றாக அமைந்தது.
இவர் தனது தலைமை சீடராக உமாபதி சிவத்தாரை ஏற்றுக்கொண்டு அவருக்கு சிவஞானப்பொருளை உபதேசித்தார். அத்தோடு தனக்குப் பின்னர் திருக்கைலாய ஞானபரம்பரை தொடர அவருக்கு வழிகாட்டினார். உமாபதி சிவாச்சாரியாரும் தனது குருவின் மீது கொண்ட குருபத்தியை, “போற்றிப்பஃறொடை” மற்றும் “நெஞ்சுவிடுதூது” ஆகிய நூல்களில் விபரித்துள்ளார். மறைஞான சம்பந்தரின் சீடர்களில் மற்றொரு முக்கியர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். மறைஞான சம்பந்தரது இத்தகைய குருத்துவ சிறப்புக்களால் அவரை சைவசிகாமணி எனச் சைவ சித்தாந்திகள் சிறப்பித்து அழைப்பர்.
சந்தானக் குரவர்கள் என அழைக்கப்படுபவர்கள் நால்வர்: மெய்கண்டார், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகியோர். மெய்கண்ட சாத்திரங்கள் எனப்படும் சைவ சித்தாந்த சாத்திரங்களில் சிவஞானபோதம் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இதை எழுதியவர் மெய்கண்டார்; இவரைச் சார்ந்தே சந்தான குரவர் எனும் சைவ மரபு ஆரம்பம் ஆனது.
மெய்கண்டாரின் சீடர் அருணந்தி சிவாச்சாரியார்; அவரது சீடர் மறைஞான சம்பந்தர். வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகடத்தில் பராசர கோத்திரத்தில் சாமவேத மரபில் பிறந்த மறைஞான சம்பந்தர், அருணந்தி சிவாச்சாரியாரிடம் உபதேசம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்திற்கு வடகிழக்கிலுள்ள திருக்களாஞ்சேரியில் வாழ்ந்து வந்த இவர், முக்கிய சீடராக உமாபதி சிவத்தை கொண்டார்.
அக்காலத்தில் தில்லை மூவாயிரவரில் முக்கியமாய்த் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தீக்ஷிதரை மேள, தாளத்தோடு பல்லக்கில் தீவட்டி மரியாதையோடு அனுப்பி வைக்கும் பழக்கம் இருந்தது. பகல் நேரமானாலும் இந்தத் தீவட்டி மரியாதை நீண்டகாலம் நிலவியது. ஒருநாள் உமாபதி சிவம் கோயிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து தீவட்டி மரியாதை சகிதம், மேளதாளத்தோடு சென்று கொண்டிருந்தார். அங்கே ஓர் வீட்டில் திண்ணையில் அமர்ந்திருந்த மறைஞான சம்பந்தர் இதைக் கண்டதும், “பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்!” என்று உமாபதி சிவத்தின் காதில் விழும்படி சத்தமாய்ச் சொல்லிச் சிரித்தார்.
அதைக் கேட்ட உமாபதி சிவத்திற்கு அதன் தாத்பரியம் புரிந்து, அவர் மனதில் அந்த வித்து விழுந்து ஞானாக்னி பற்றிக்கொண்டார். பல்லக்கிலிருந்து அப்படியே குதித்து மறைஞான சம்பந்தரின் கால்களில் விழுந்து வணங்கித் தன்னை சீடனாக ஏற்கும்படி கேட்டுக்கொண்டார். மறைஞான சம்பந்தர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் எழுந்து நடக்கத் தொடங்கினார். உமாபதி சிவம் அவரைப் பின்பற்றினார். சற்றுத் தூரம் சென்ற மறைஞான சம்பந்தர் ஒரு வீட்டின் வாசலில் நிற்க, அங்கே அவர் கைகளில் கூழை வார்த்தனர். அந்தக் கூழை அப்படியே கைகளில் ஏந்திக் குடித்தார். அப்போது கூழ் அவர் கைகளின் வழியே வழிந்தது. உமாபதி சிவம் சிந்திய கூழை குருப் பிரசாதம் எனக் கூறிவிட்டுக் கைகளில் வாங்கிக் குடித்தார். அன்று முதல் அவரின் அத்யந்த சீடரானார்.
உமாபதி சிவம் மறைஞான சம்பந்த குருவின் மீது கொண்ட ஈடுபாட்டால் எழுதிய நூல் நெஞ்சுவிடு தூது என்பதாகும். திருக்களாஞ்சேரியில் வசித்த அவர் அங்கேயே இருந்து முக்தியடைந்தார். மறைஞான சம்பந்தர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். திருக்களாஞ்சேரி தற்போது சிங்காரத் தோப்பு என்ற பெயரில் வழங்குகிறது. இங்கே மறைஞான சம்பந்தரின் மடமும் திருக்களாஞ்சேரியுடைய மஹாதேவர் கோயிலும் உள்ளது. மடத்திலேயே மறைஞான சம்பந்தரின் சமாதி உள்ளது. மடமும், சமாதியும் திருவாவடுதுறை ஆதீனம் பரிபாலித்து வருகின்றது.
நன்றி




0 Comments