கொலோசியம் - COLOSSEUM


கொலோசியம்


கொலோசியம் - COLOSSEUM

கொலோசியம் அல்லது கொலிசியம் அல்லது பிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போபிடேட்டர் வகைக் கட்டடம், இது பைஞ்சுதை மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஆகும், கொலோசியம் ரோமானிய மன்றத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கி.பி. 72 இல் பேரரசர் வெஸ்பாசியின் ஆட்சிக் காலத்தில் இதன் கட்டுமானம் கட்டப்படத் தொடங்கியது, கி.பி .80 ஆம் ஆண்டில் அவரது வாரிசான டைட்டஸின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. டோமிடியன் (81-96) ஆட்சி காலத்தில் கட்டடத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மூன்று பேரரசர்கள் பிளவியன் வம்சத்தவர்களாக அறியப்படுகின்றனர்.

அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 முதல் 80,000 மக்கள்வரை இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.எனினும் இதில் சராசரியாக சுமார் 65,000 பார்வையாளர்களைக் கொண்டுருக்கலாம், கொலோசியமானது தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்ட வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் வட்டவடிவ அரங்கம் என்ற பொருள் கொண்டது. மிகப் பிரம்மாண்ட எனும் வேறு அர்த்தமும் கொலோசியத்திற்கு இருந்துவந்துள்ளது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, பிளேவியன் அம்ஃபிதியேட்டர் என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். துவக்கக்கால இடைக்கால சகாப்தத்தில் பொழுதுபோக்கிற்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் வீடுகள், பட்டறைகள், மத ஒழுங்கு, கோட்டை, கிறிஸ்தவ ஆலயம் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டது.

நிலநடுக்கங்கள் மற்றும் கல் திருட்டு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் காரணமாக பகுதியளவு பாழடைந்தாலும், கொலோசியம் இன்னும் உரோமைப் பேரரசின் ஒரு சின்னமாக உள்ளது. மேலும் உரோமின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இது ஒன்றாகும். ஒவ்வொரு புனித வெள்ளி அன்றும் திருத்தந்தையால், கொலாேசியத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிலுவைப்பாதை ஊர்வலம் துவக்கி வழிநடத்தப்படுகிறது.

கொலாேசியம் இத்தாலியப் பதிப்பைக்கொண்ட ஐந்து செண்ட் யூரோ நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

கோலோசியத்தின் அசல் லத்தீன் பெயர் ஆம்பிபிடியம் ப்ளாவியம், பின்னர் பிளவியன் ஆம்பீதியேட்டர் என ஆங்கிலமயமானது. இந்தக் கட்டடம் நீரோவின் ஆட்சியைத் தொடர்ந்துவந்த ஃப்ளாவியன் வம்சத்தின் பேரரசர்களால் கட்டப்பட்டது.இந்த பெயர் இன்னும் நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பொதுவாக இந்த அமைப்பு கொலோசியம் என்று அழைக்கப்படுகிறது.

கோலோசியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்த சிலை பின்னர் ஹெரோயோஸ் அல்லது அப்போலோ போன்ற தோற்றத்திலும், சூரியக் கிரீடத்தைச் சேர்ப்பதன் மூலம் சூரியன் கடவுளாகவும், நீரோவுக்கு பின்வந்தவர்களால் மாற்றியமைக்கப்பட்டது, இதேபோல நீரோவின் தலையும் பல முறை மாற்றப்பட்டது. இந்த சிலை அதிசயத்தக்கதாகவாறு இடைக்கால கட்டத்திலும் நன்றாக நின்று கொண்டிருந்து, ரோமின் நிரந்தரதிர அடையாள சின்னமாக இது காணப்பட்டது. கொலோசஸ் சிலை இறுதியில் விழுந்துவிட்டது.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக சவ ஊர்வலத்தின் முன் மூன்று சோடிகளிடையே சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கம் ரோமானிகளின் வழக்கமாகும். இதனை பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாக கொண்டாடத் தொடங்கினர். இதற்காக கட்டப்பட்டதே கொலோசியம் ஆகும். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். சுபானிய மொழியில் கிளாடி என்பதற்கு கத்தி என்று பொருளாகும். முதலில் இவ்வகை சண்டைகள் கத்தியை வைத்தே போடப்பட்டன. பின் கோடாரி, இரும்பிலால் ஆன வளையம், கேடையம், வீச்சரிவாள், பழுக்கக்காய்ச்சிய இரும்பு ஆகியவற்றைக் கொண்டு சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இங்கு சண்டையிடுபவர்கள் அடிமைகளாகவும், கீழ்சாதிகாரர்களாகவும், கைதிகளாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். மேலும் கிறித்துவ மதம் அக்காலத்தில் வளர்ச்சி அடையாத காரணத்தினால் கிறித்துவர்களும் இது போன்ற சண்டை விளையாட்டுகளில் பங்கு பெறச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் ஒரே ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். மற்றவர்கள் அரசரின் ஆணைக்கேற்ப சிறைபிடிக்கப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர். கைதி ஒருவர் வென்றால் அவருக்கு விடுதலைக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்விளையாட்டுகளில் உணவிடாத சிங்கம், புலி ஆகியவற்றைக் கொண்டும் மனிதர்களைக் கொன்றுள்ளனர்.

கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இதன் உயரம் சுமார் நூற்றைம்பது அடிகளாகும். இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. நீரோ அரசரின் பிரம்மாண்ட சிலைக்கு அருகினில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன. முதல் கேலரி அரசர் மற்றும் அவரது குடும்பத்தினரும் அமர்வதற்கான இடமாகும். இரண்டாம் கேலரி பெரும் நிலப்பிரபுக்களும், முக்கியமானவர்களும் அமரும் இடம் ஆகும். கோலோசியத்தின் கூரையாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாயினை பயன்படுத்தியுள்ளனர். போட்டிகள் நடைபெறும் பொழுது மட்டும் இவற்றை வைத்து அரங்கத்தை மூடியுள்ளனர். எண்ணற்றவர்கள் வந்து செல்வத்ற்கு வசதியாக பல நுழைவு வாயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கொலோசியம் உலக அதிசயமாகவும் கருதப்பட்டது ஆகும். மூன்றாம் கேலரி தொழிலாளர்களும், நான்காம் கேலரி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது ஆகும். நான்கு கேலரிகள் மட்டும் அல்லாது ஒரு அடித்தளமும் கொலோசியதில் கட்டப்பட்டுள்ளது. இது அடிமைகள் காத்திருக்கும் இடமாகவும், ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும் , மிருகங்களின் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் என்பவர் கூறியுள்ளார். மேலும் இவ்விழாவில் ஆயிரம் கிளாடியேட்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விழாவின் ஒரு பகுதியாக அரங்கம் முழுவதும் நீர் நிரப்பி படகில் அடிமைகளை சண்டையிட வைத்துள்ளனர்.

217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது.

847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், புனித பேதுரு பேராலயம் மற்றும் தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தினால் இக்கொலோசியத்தில் இருந்த இரும்பு துண்டுகளை உள்ளூர் மக்களே பெயர்த்து எடுத்து மேலும் சிதிலமாக்கியுள்ளனர்.

நன்றி

Post a Comment

0 Comments