10ம் தர மாணவர்களுக்கான
பயிற்சி வினாக்கள்
ஒரு ஏழைக்குடியானவன் தான் அடுத்த போகத்தில் தருவதாகக் கூறி நெல் மூடையொன்றை கமிகவிடம் கடனாகப் பெற்றதாகக் கூறுகின்றது.
2. புத்தகோச தேரர் கமிக பற்றிக் கூறும் செய்தி யாது?
இல்லத்தலைவர்களில் இருந்து கமிக தெரிவு செய்யப்பட்டதாகக்
கூறப்படுகின்றது.
கூறப்படுகின்றது.
3. கமிகவின் பணிகள் 05 தருக.
கிராம நிகழ்வுகளுக்கு தலைமை வகித்தல்
ஊர்ப்பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்
கிராம குளங்களை நிர்வகித்தல்
கிராம குளங்களிலிருந்து நீர் விநியோகித்தல்
கிராம குளங்களை நிர்வகித்தல்
கிராம குளங்களிலிருந்து நீர் விநியோகித்தல்
கிராமத்தை பிரதிநிதித்துவம் செய்தல்
4.கிராமத்தலைவர்கள் சமாதான சகவாழ்வுக்கு உதவியுள்ளனர் என்பதற்கு ஆதாரம் யாது?
அம்பாந்தோட்டை மாவட்ட சித்துல்பவ்வ எனுமிடத்தில் அமைந்துள்ள விகாரைக்குச் சொந்தமான கொரவக்கல எனுமிடத்தில் உள்ள கல்வெட்டு ஒன்றில் கிராமத்தலைவர்கள் ஒன்று சேர்ந்து கற்குகைகளை சுத்தம் செய்து தானமளித்ததாகக் கூறுகின்றது.
5. பல குளங்களை இணைத்து குளத்தொகுதி உருவாக்கப்பட்டதன்
நோக்கங்கள் 02 தருக.
மேட்டுப்பாங்கான குளமொன்று நீரால் நிரம்பும் போது மேலதிக நீரை
தாழ்நிலப்பகுதியில் உள்ள குளங்களுக்கு விநியோகம் செய்தல்.
தாழ்நிலப்பகுதியில் உள்ள குளங்களுக்கு விநியோகம் செய்தல்.
இரு குளங்களுக்கு இடையில் கால்வாய் மூலம் நீர் விநியோகிக்கப் படும்போது கால்வாயின் இரு பக்கங்களில் உள்ள நிலங்களின்
ஈரலிப்பை இருக்கச் செய்தல்.
ஈரலிப்பை இருக்கச் செய்தல்.
6. பிரதேச நிர்வாகிகளாக பருமகமார் விளங்கியமைக்கு ஆதாரம் யாது?
மாத்தளை மாவட்டத்தில் உள்ள எம்புல்அம்பே எனுமிடத்தில் உள்ள
கல்வெட்டில் போசணி அரசன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை.
கல்வெட்டில் போசணி அரசன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை.
கேகாலை மாவட்டத்தின் யடஹலென புராதான விகாரையில் உள்ள கல்வெட்டில் துகத ரஜ என பருமக குறிப்பிடப்பட்டுள்ளமை.
7. பருமக பதவியின் தோற்றத்திற்கு காரணம் யாது?
குளத்தொகுதியை பரிபாலனம் செய்தல்
8. குடும்பத் தலைவன் கல்வெட்டுக்களில் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்? குர்ஹபதி, கஹபதி, கிருகபதி
9.உலர்வலய மக்கள் எதிர்நோக்கிய பாரிய பிரச்சினை எது?
நீர் பற்றாக்குறை
10. குளத்தொகுதிக்கு வழங்கப்பட்ட வேறுபெயர்கள் எவை?
எல்லங்காவ, வெவ்பிரபாதயை
11. குடும்பம் என்பது புராதன காலத்தில் எச்சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது? குலம்
12. தொட்டபோஜக என்பதன் பொருள் யாது?
படகுத் துறையை நிருவகிப்பவர்
13. தொட்டபோஜக பற்றிக்கூறும் கல்வெட்டு யாது?
தம்புள்ளைக்கு அருகில் உள்ள கண்டலம் பிரதேசத்தின்
கொத்கல்கந்தையிலுள்ள கல்வெட்டு.
14. பருமகளின் பணிகள் 02 தருக.
குளத்தொகுதியை நிர்வகித்தல்
வரி வசூலித்தல்
வரி வசூலித்தல்
15. பெண் பருமக எவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்?
பருமகலு
16. இல்லத்தலைவர்கள் பற்றிக் கூறும் கல்வெட்டுச் செய்தி எது?
அனுராதபுரம் பெரிய புளியங்குளம் கல்வெட்டு ஒன்றில் சுமணவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பிக்குமாரின் சேமநலன் கருதி குகை ஒன்றை சுத்தம் செய்து தானமளித்தாகக் கூறப்படுகின்றது.
17. இல்லத்தலைவர்கள் கல்வெட்டுக்களில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? குர்ஹபதி, கஹபதி, கிருகபதி
18. கிராமத்தலைவர் பதவியை தீர்மானித்த காரணி யாது?
சொத்துரிமை
சொத்துரிமை
19. பருமக எனும் சொல் எச்சொல்லில் இருந்து தோன்றியது?
பிரமுக
20. கிராமத் தலைவனை குறித்த இரு சொற்களைக் குறிப்பிடுக.
கமிக, கிராமிக
21. துட்டகைமுனுவின் தளபதிகளாக விளங்கிய கிராமத் தலைவர்கள் மூவரைத் தருக.
கமிக சிவ, கமிக சுமண, கமிக சதன
22. குளத்தொகுதியை உலர்வலய மக்கள் எவ்வாறு குறிப்பிட்டனர்?
எல்லங்காவ
23. பருமகமார் பற்றிய நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் எப்பிரதேசத்தில் கிடைத்துள்ளன?
உலர்வலயத்தில்
24. பிரதேசத் தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டான்?
பருமக
25. கமிகவின் சொத்துடைமை பற்றிக் கூறும் நூல் எது?
ஜாதக அட்டகதா
26. குடும்பத்தலைவர்கள் இல்லத்தலைவர்களாகும் எனக் கூறிய கல்வெட்டு எது?
பெரிய புளியங்குளம்
27. அரச பதவி உருவான படிமுறையையை எழுதிக் காட்டுக.
குர்ஹபதி - கமிக - பருமக - மபுறுமுகா
28.எல்லாங்காவ எனும் குளத்தொகுதி கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் எது? அம்பாந்தோட்டை
29. நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்திக்க மேற்கொண்ட நடவடிக்கை யாது? அருகருகே உள்ள குளங்களை இணைத்து குளத்தொகுதியை உருவாக்குதல்.
30.பருமகமார் பற்றிக் கூறும் இரு கல்வெட்டுக்களைத் தருக.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள எம்புல்அம்பே எனுமிடத்தில்
உள்ள கல்வெட்டு.
உள்ள கல்வெட்டு.
கேகாலை மாவட்டத்தின் யடஹலென புராதான விகாரையில் உள்ள
கல்வெட்டு.
கல்வெட்டு.
31. பிரதேசத் தலைவர்களாக பருமகமார் செயற்பட்டமைக்கு இரு சான்றுகள்
தருக.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள எம்புல்அம்பே எனுமிடத்தில் உள்ள கல்வெட்டில் போசணி அரசன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை.
கேகாலை மாவட்டத்தின் யடஹலென் புராதான விகாரையில் உள்ள கல்வெட்டில் துகத ரஜ என பருமக குறிப்பிடப்பட்டுள்ளமை.
32. ராஜா எனும் சொல்லின் பொருள் யாது?
மகிழ்விப்பவர்
33. பருமகமார் பயன்படுத்திய களிமண் முத்திரைகள் எங்கு
கண்டெடுக்கப்பட்டுள்ளது?
கண்டெடுக்கப்பட்டுள்ளது?
திஸ்ஸமகாராமவில்
34. பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை மத்தியமயப்படுத்தி அரச நிர்வாகத்தை முன்னெடுத்த முதல் மன்னன் யார்?
துட்டகைமுனு
35. வரலாற்று மூலாதாரங்களின் படி அனுராதபுரத்தை ஆண்ட முதல் மன்னன் யார்?
பண்டுகாபயன்
35. வரலாற்று மூலாதாரங்களின் படி அனுராதபுரத்தை ஆண்ட முதல் மன்னன் யார்?
பண்டுகாபயன்
36. பண்டுகாபயன் பற்றி மகாவம்சம் கூறும் இரு செய்திகளைத் தருக.
அனுராபுரத்தை தலைநகராக்கியமை.
அனுராபுரத்தை தலைநகராக்கியமை.
நகர குத்திக பதவியை உருவாக்கியமை.
37. அனுராதபுரத்தை தலைநகராக்கிய மன்னன் யார்?
பண்டுகாபயன்
38. நகரப் பாதுகாப்பிற்கு பண்டுகாபயன் உருவாக்கிய பதவி எது?
நகர குத்திக
39.அப்பதவியை வகித்த பண்டுகாபயனின் மாமன் யார்?
அபயன்
அபயன்
40. துட்டகைமுனுவின் காலத்திற்குரிய பருமகமாரின் பெயர்கள் 03 தருக.
தேர புத்தாபய, வேலு சுமண, நந்திமித்ர
41. கிழக்கு, மேற்கு வர்த்தகப் பாதையில் இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்திருந்த நாடு எது?
இலங்கை
42. தேவநம்பிய தீச மன்னன் காலத்தில் இடம்பெற்ற முக்கிய பௌத்த
நிகழ்வுகள் 02 தருக.
மகிந்த மகாதேரர் புத்தமதத்தை இலங்கையில் பரவச் செய்தமை.
சங்கமித்தை பிக்குணி மகாபோதியை(புனித வெள்ளரசு மரக்கிளை இலங்கைக்கு கொண்டு வந்தமை.
சங்கமித்தை பிக்குணி மகாபோதியை(புனித வெள்ளரசு மரக்கிளை இலங்கைக்கு கொண்டு வந்தமை.
43. புனித வெள்ளரசு மரக்கிளை நடும் வைபவத்திற்கு மன்னனால்
அழைக்கப்பட்ட பருமகமார் யார்?
அழைக்கப்பட்ட பருமகமார் யார்?
கதிர்காம, சந்தனகாம பருமகமார்
44. இந்துசமுத்திரத்தில் இலங்கை வர்த்தகத் தொடர்புகளை பேணியமைக்கு
சிறந்த சான்றுகள் 03 தருக.
மகிந்த மகாதேரர் புத்தமதத்தை இலங்கையில் பரவச் செய்தமை.
சிறந்த சான்றுகள் 03 தருக.
மகிந்த மகாதேரர் புத்தமதத்தை இலங்கையில் பரவச் செய்தமை.
தேவநம்பிய தீசன் அசோகச் சக்கரவர்த்தி அனுப்பிய பஞ்சவஸ்துகளைப் பயன்படுத்தி மீண்டும் முடிசூடிக் கொண்டமை.
அசோகச் சக்கரவர்த்தி பயன்படுத்திய தேவனம்பிய எனும் பட்டத்தை திஸ்ஸ மன்னன் பெற்றுக்கொண்டமை.
45. தேவநம்பிய தீசன் முடிசூடிக் கொள்ள பஞ்சவஸ்துகளை அனுப்பிய இந்திய அரசன் யார்?
அசோகச் சக்கரவர்த்தி
46. பஞ்ச வஸ்துக்கள் எவை?
மங்கல வாள், பாதணி, நெற்றிப்பட்டம், ஆலவட்டம், சாமரை
47. துட்டகைமுனுவின் பருமகமார் பற்றிக்கூறும் கல்வெட்டுச் செய்தி எது?
மங்கல வாள், பாதணி, நெற்றிப்பட்டம், ஆலவட்டம், சாமரை
47. துட்டகைமுனுவின் பருமகமார் பற்றிக்கூறும் கல்வெட்டுச் செய்தி எது?
தேர புத்தாபய, வேலு சுமண, நந்திமித்ர, புஸ்ஸதேவ ஆகிய பருமகமார் துட்டகைமுனுவின் நாட்டை ஐக்கியப்படுத்தும் செயற்பாடுகளில்
பங்குபற்றியதாக அம்பாந்தோட்டையின் சித்துல்பவ்வ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்குபற்றியதாக அம்பாந்தோட்டையின் சித்துல்பவ்வ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
48. இலங்கைத் தீவை ஒன்றுபடுத்திய முதல் மன்னன் யார்?
துட்டகைமுனு
49. பருமக பதவிகளை வகித்த அரச உத்தியோகத்தர்கள் யார்?
பொருளாளர், செயலாளர், பண்டகசாலைப் பொறுப்பாளர், அறவீட்டாளர்
பொருளாளர், செயலாளர், பண்டகசாலைப் பொறுப்பாளர், அறவீட்டாளர்
50. இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகம் செய்தவர் யார்?
மஹிந்த மகாதேரர்
51. உரோமபுரிக்குத் தூதுவர்களை அனுப்பி றுவன்வெலிசாய விகாரையின் அலங்கரிப்புக்கு கண்ணாடிப் பளிங்குகளை பெற்றுக் கொண்ட மன்னன் யார்? பாதிகாபய மன்னன்
52. எம் மன்னனின் காலத்திற்குரிய கல்வெட்டுக்கள் இலங்கையில் பல பாகங்களிலும் கிடைத்துள்ளன?
வசபன்
53. இலங்கையை பல மாவட்டங்களாக பிரித்து ஆட்சி புரிந்த மன்னன் யார்? வசபன்
54. வசபனால் வடக்கிற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் யார்?
ரிஷிகிரி
55. ரிஷிகிரி வடக்கில் அமைத்த விகாரை எது?
பிரியங்க திஸ்ஸ விகாரை
பிரியங்க திஸ்ஸ விகாரை
56. வடக்கிற்கு இஸிகிரி நியமிக்கபட்டமை பற்றிக் கூறும் கல்வெட்டு யாது? வல்லிபுர பொற்சாசனம்
57. போதிமரக்கிளை இலங்கைக்கு கொண்டு வந்த தேரி யார்?
சங்கமித்தை
58. போதிமரக்கிளை எத்துறைமுகத்தின் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது?
ஜம்புகோளப்பட்டினம்
59. மகிந்ததேரர் பௌத்த சமயத்தை தேவநம்பிய தீசனுக்கு எவ்விடத்தில் வைத்து போதித்தார்?
மிகிந்தலை
60. இலங்கையில் முடிசூட்டு முறையை அறிமுகம் செய்த இந்திய மன்னன் யார்?
60. இலங்கையில் முடிசூட்டு முறையை அறிமுகம் செய்த இந்திய மன்னன் யார்?
அசோகச் சக்கரவர்த்தி
61. அரசியல் பலம் மையப்படுத்தப்பட்ட போது உருவான சக்தி வாய்ந்த பதவி எது?
மகாராஜா
62. அரசர்களின் பிரதான கடமைகள் 03 தருக.
நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுதல்
நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பை வழங்கல்
பிரஜைகளிடையே ஆன்மீக வளர்ச்சியை ஏற்படுத்துதல்
63. அந்நிய மன்னர்களாக இருந்தாலும் சிறந்த சேவை மூலம் இலங்கை மக்களின் நம்பிக்கை பெற்ற இரு மன்னர்கள் யார்?
எல்லாளன், நிஸ்ஸங்க மல்லன்
64. அரச கோட்பாட்டின் நான்கு எண்ணக்கருக்களும் எவை?
ஆண்டவன், போதிசத்துவர், மலையின் அரசன், சக்கரவர்த்தி
65. தன்னை கல்வெட்டுக்களில் நரேஸ்வர (மனிதர்களின் கடவுள்) என்று குறிப்பிட்ட மன்னன் யார்?
குட்டகண்ணஅபய
66. நரேஸ்வர (மனிதர்களின் கடவுள்) என்று மன்னனை குறிப்பிட்ட கல்வெட்டு எது?
தம்புள்ளை பாறைக்கல்வெட்டு
67. மின்னேரியத் தெய்வம் என போற்றப்பட்ட மன்னன் யார்?
மகாசேனன்
68. தன்னை குபேரக்கடவுளாகக் கருதி “அலகபய மகாராஜா" என அழைக்கபட்ட மன்னன் யார்?
காசியப்பன்
69. "அலகபய மகாராஜா" என்பதன் பொருள் யாது?
இந்திரலோகத்தின் மகாராஜா
70. சக்கரவர்த்தி என்பதன் பொருள் யாது?
முழு உலகிற்கும் அரசன்
71. சக்விதி என்பதன் பொருள் யாது?
சக்கரவர்த்தி
72. தன்னை கல்வெட்டுக்களில் "காலிங்க சக்கரவர்த்திப் பெருமான்" எனக் குறிப்பிட்ட மன்னன் யார்?
நிஸ்ஸங்க மல்ல மன்னன்
73. இலங்கையின் அரச பதவி கிடைத்த இரு பிரதான வழிகளும் எவை?
தந்தைவழி மூலம்
மூத்த சகோதரனிடமிருந்து இளைய சகோதரனுக்கு
74. தந்தைவழி அரசுரிமை கிடைத்தமைக்கு 03 உதாரணங்கள் தருக.
பண்டுகாபயனிடமிருந்து மூத்த சிவனுக்கு
74. தந்தைவழி அரசுரிமை கிடைத்தமைக்கு 03 உதாரணங்கள் தருக.
பண்டுகாபயனிடமிருந்து மூத்த சிவனுக்கு
மூத்தசிவனிடமிருந்து தேவநம்பிய தீசனுக்கு
காவந்தீசனிடமிருந்து துட்டகைமுனுவுக்கு
காவந்தீசனிடமிருந்து துட்டகைமுனுவுக்கு
75. மூத்த சகோதரனிடம் இருந்து இளைய சகோதரனுக்கு அரசுரிமை
கிடைத்தமைக்கு 02 உதாரணங்கள் தருக.
தேவநம்பிய தீசனிடமிருந்து சூரதிஸ்ஸ, உத்திய, மகாசிவ, அசேல
ஆகிய சகோதரர்கள் அரசுரிமை பெற்றமை.
துட்டகைமுனுவிடமிருந்து சத்தாதிஸ்ஸனுக்கு
ஆகிய சகோதரர்கள் அரசுரிமை பெற்றமை.
துட்டகைமுனுவிடமிருந்து சத்தாதிஸ்ஸனுக்கு
76. 4ம் முகலனின் மகன் யார்?
கீர்த்தி இளவரசன்
77. தாதுசேனனின் புத்திரர்கள் இருவரைத் தருக.
காசியப்பன், முகலன்
78. மகா பருமக அல்லது மபுறுமுகா என்பது யாரைக் குறிக்கும்?
அரசன்
79. குதிரைப் பிரிவின் தலைவர் யார்?
அசஅதெக
80. தலைமை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
மகாஅமெதி / மஹமத
81. கொதுறுகோனா என்பதன் பொருள் யாது?
வழக்கங்கள், மரபு முறைகள் தொடர்பான அதிகாரி
82. வர்த்தக நடவடிக்கைகளுக்கான பொறுப்பான தலைவர் யார்?
பன்அதெக
83. யானைப்பிரிவின் தலைவர் யார்?
ஹதிஅதெக
ஹதிஅதெக
84. படகரிக என்பவரின் தொழில் எது?
பொருளாளர்
85. ரூபஅதெக என்பதன் பொருள் யாது?
காசு அச்சிடும் பிரிவின் தலைவர்
86. உணவுச்சாலை அதிகாரி யார்?
பதகு
87. நகர குத்திக என்பது யாரைக் குறிக்கும்?
நகர பரிபாலகர்
88. அரச செயலகத் தலைவர் யார்?
88. அரச செயலகத் தலைவர் யார்?
பனபெடிக
89. படைகளுக்குப் பொறுப்பான தலைவர் யார்?
சேனபதி/ தளபதி
90. பத்துத் தளபதிகள் துணை கொண்டு ஆட்சி புரிந்த மன்னன் யார்? துட்டகைமுனு
91. துட்டகைமுனுவின் பெற்றோர் யார்?
காவந்தீசன், விகாரமஹாதேவி
92. துட்டகைமுனுவின் இராச்சியம் எது?
உருகுணை(மாகம்)
93. துட்டகைமுனுவால் தோற்கடிக்கப்பட்ட அனுராதபுர மன்னன் யார்? எல்லாளன்
94. துட்டகைமுனு எல்லாளனைத் தோற்கடிக்கக் காரணம் யாது?
சர்வதேச வர்த்தகத்தில் பாரிய இலாபமீட்டித் தரும் மாதோட்டத் துறைமுகம் அனுராதபுர இராச்சியத்தின் கீழ் இருந்தமை.
95. துட்டகைமுனுவிற்கு அரசியல் வழிகாட்டியாக அமைந்தவர் யார்?
தந்தை காவந்தீசன்
96. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக முறையான யுத்த செயற்பாட்டிற்கு தலைமைத்துவம் வழங்கிய மன்னன் யார்?
துட்டகைமுனு
97. துட்டகைமுனு எல்லாளனுக்கு மரியாதை செலுத்த நடவடிக்கை யாது? மேற்கொண்ட இறந்த எல்லாளனுக்கு கல்லறை அமைத்து மரியாதை செய்தமை.
98. துட்டகைமுனு அமைத்த 03 விகாரைகளைக் குறிப்பிடுக.
ருவன்வெலிசாய, மிரிசவெட்டிய, லோவமகாபாய்
99. ருவன்வெலிசாய அமைக்கப்படும் போது நாற்றிசையில் தானமளித்த
மன்னன் யார்?
துட்டகைமுனு
100. துட்டகைமுனுவின் சகோதரன் யார்?
சத்தா திஸ்ஸன்
101. இலம்பகர்ண வம்சத்தை தோற்றுவித்த அரசன் யார்?
வசபன்
102. நாடு முழுவதும் கல்வெட்டுக்கள் பரவிக் காணப்பட்ட மன்னனின்
காலம் எது?
வசபன்
103. நாட்டை பல நிர்வாகப் பிரிவுகளாகப் பிரித்து ஆட்சி புரிந்த மன்னன்
யார்?
வசபன்
104. நாட்டில் முறையாக வரி அறவிடலை ஆரம்பித்த மன்னன் யார்?
வசபன்
105. இலங்கையில் பாரிய குளங்களை அமைக்கக் காரணமான மன்னன்
யார்?
வசபன்
106. யாழ்ப்பாணத்தில் கிடைத்த வசபன் காலத்திற்குரிய கல்வெட்டு எது?
வல்லிபுரம்
107. அக்கல்வெட்டு கூறும் செய்தி யாது?
வசபனால் வடக்கின் அமைச்சராக நியமிக்கப்பட்ட ரிஷிகிரி,
பிரியங்கதிஸ்ஸ விகாரையை வடக்கில் அமைத்தமை
108. வசபன் பாரிய குளங்களை உருவாக்க தூண்டலைப்
பெற்றமைக்குக் காரணம் யாது?
தென் இந்தியாவின் கிருஸ்ணாநதிப் பிரதேசத்தில் ஏற்பட்ட
உணவுப் பற்றாக்குறையால் இலங்கையின் தானியங்களுக்கு
கேள்வி ஏற்பட்மை.
பெற்றமைக்குக் காரணம் யாது?
தென் இந்தியாவின் கிருஸ்ணாநதிப் பிரதேசத்தில் ஏற்பட்ட
உணவுப் பற்றாக்குறையால் இலங்கையின் தானியங்களுக்கு
கேள்வி ஏற்பட்மை.
109. வசபன் பௌத்த மதத்திற்கு ஆற்றிய சேவைகள் 02 தருக.
பல விகாரைகளை புனரமைத்தமை
பிக்குகளுக்கு கொடுப்பனவு வழங்கியமை
110. வசபன் அமைத்த கால்வாய் எது?
எலஹர
111. இலங்கையை ஆண்ட மேன்மையான அரசன் யார்? மஹா விஜயபாகு / 1ம் விஜயபாகு
112. 1ம் விஜயபாகுவின் இளமைப் பெயர் யாது?
கீர்த்தி இளவரசன்
113. முதலாம் விஜயயாகுவிற்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரி யார்? சித்தாரும்பி புத்த நாயக்க
114. முதலாம் விஜயபாகுவின் காலத்திற்குரிய மூலாதாரம் யாது?
பனாகடுவ செப்பேடு
பனாகடுவ செப்பேடு
115. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் யாது?
1ம் விஜயபாகுவிற்கு சிறுபராயத்தில் சோழர்களிடமிருந்து பாதுகாப்பை பெற்றுக்கொடுத்த சித்தாரும்பி புத்தநாயக்கவிற்கு நன்றிக்கடனாக வழங்கப்பட்ட சலுகைகளும், பரிசில்களும் பற்றிக் கூறுகின்றது.
116. மகா விஜயபாகுவின் சாதனைமிகு செயல் எது?
116. மகா விஜயபாகுவின் சாதனைமிகு செயல் எது?
மகா பராக்கிரம் மிக்க சோழர்களை இலங்கையில் இருந்து வெளியேற்றியமை.
117. முதலாம் விஜயபாகு தலைநகராக்கிய இராசதானி யாது?
பொலன்னறுவை
118. பொலன்னறுவையைத் தலைநகராக முதலாம் விஜயபாகு
ஆரம்பத்தில் இந்துசமுத்திரத்தில் மேற்கைக் மையமாகக் கொண்டிருந்த வர்த்தகம் கிழக்குத்திசை நோக்கிநகர்ந்தமையால் திருகோணமலைத் துறைமுகம் ஊடாக அதனை நிர்வகிக்க முடியும்.
வெளிநாடுகள் மூலம் இடம்பெற்ற படையெடுப்புக்களை இலகுவாக தடுக்க முடியும்.
119. முதலாம் விஜயபாகு பௌத்த மதத்திற்கு ஆற்றிய சேவைகள்
எவை?
பௌத்த விகாரைகளை புனரமைத்தமை
பிக்குகளுக்கு உதவிகளை வழங்கியமை
எவை?
பௌத்த விகாரைகளை புனரமைத்தமை
பிக்குகளுக்கு உதவிகளை வழங்கியமை
120. முதலாம் விஜயபாகு பிறந்த இராச்சியம் எது?
உருகுணை இராச்சியம்
121. நாட்டின் நிர்வாகத்தைக் கொண்டு நடத்த உதவும் நிறுவனங்கள்மூன்றும் எவை?
நிர்வாகம்
நீதி
சட்டம்
சட்டம்
122. பாராளுமன்றத்திற்கு இணையாக மன்னர் காலத்தில் காணப்பட்ட நிறுவனம் எது?
அரசசபை
123. சட்ட, நிர்வாகத் துறைகளைக் குறிக்க கி.பி 9ம் நூற்றாண்டு
கல்வெட்டுகளில் இடம்பெற்ற சொல் எது?
எக்தென் சமியென்
124. அனுராதபுர மாவட்ட புத்தன்னேஹெல எனும் இடத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படும் வாசகம் எது?
வத்ஹிமிய வஹன்சே வதால
125. அனுராதபுர மாவட்ட புத்தன்னேஹெல எனும் இடத்தில் உள்ள கல்வெட்டில் அடங்கியுள்ள செய்தி எது தொடர்பானது?
அரசசபையால் அனுமதிக்கப்பட்டது
126. "வத்ஹிமியன் வதால" என்பதன் பொருள் யாது?
அரசனின் ஆணை
127. நீதிமன்றத்தைக் குறிக்கப் பயன்பட்ட சொல் எது?
127. நீதிமன்றத்தைக் குறிக்கப் பயன்பட்ட சொல் எது?
சபாவ
128. சபாவ தொடர்பான கல்வெட்டு செய்தியைத் தருக.
அநுராதபுரத்தைச் சேர்ந்த குருமஹத்தமன எனும் கல்வெட்டில் கெலேகம எனும் இடத்தை மஹிந்தராம எனும் பிக்குணிகளின் ஆராமைக்கு அன்பளிப்புச் செய்ய வந்த மெனின்கமுவே உதய, நிகவெல்லே சேன ஆகியோர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
129. மஹலேகம் என்பது எப்பதவியைக் குறிக்கும்?
பதிவாளர் நாயகம்
130. பதிவாளர் நாயகத்தின் கடமை யாது?
சகல அரச கடமைகளைப் பதிவதும், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தலும்
131. பதிவாளர் நாயகம் பற்றி மெதிரிகிரிய கல்வெட்டு தரும் செய்தி
யாது?
யாது?
மெதிரிகிரிய கல்வெட்டில் எத்வெஹர தூபிமனைக்கு 2ம் சேன மன்னனின் ஆணைப்படி காணியை வழங்க காசியப்ப எனும் பதிவாளர் நாயகம் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
132. கொடுப்பனவு தொடர்பாக பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில்
காணப்படும் குறியீடுகளில் விசிறி அடையாளம் எதனைக்
குறிக்கின்றது?
அரசின் குறியீடான செங்கோல்
காணப்படும் குறியீடுகளில் விசிறி அடையாளம் எதனைக்
குறிக்கின்றது?
அரசின் குறியீடான செங்கோல்
133. கொடுப்பனவு தொடர்பாக பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் காணப்படும் குறியீடுகளில் அன்னப்பறவை அடையாளம் எதனைக் குறிக்கின்றது?
கொடி போன்ற அன்னப்பறவை மூலம் கொடுப்பனவின் தூய்மை
காட்டப்பட்டுள்ளது.
காட்டப்பட்டுள்ளது.
134. கொடுப்பனவு தொடர்பாக பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் காணப்படும் குறியீடுகளில் சூரிய, சந்திரர் அடையாளம் எதனைக் குறிக்கின்றது?
கொடுப்பனவின் நிலைத்த தன்மை
135. கொடுப்பனவு தொடர்பாக பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களில் காணப்படும் குறியீடுகளில் நாயும், காகமும் அடையாளம் எதனைக் குறிக்கின்றது?
கொடுப்பனவுக்கு இடைஞ்சல் புரிவோர் அடுத்த பிறவியில் எடுக்கும் பிறவிகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
136. புராதன காலத்தில் நாட்டின் தலைநகராக விளங்கிய நகரம் எது? அநுராதபுரம்
137. உள்ளுராட்சி அமைப்பு தொடர்பாக 02 ஆதாரங்கள் தருக.
வசப மன்னன் நாட்டை நிர்வாக அலகுகளாகப் பிரித்து ஆண்ட
போது வடக்கிற்கு இஸிகிர எனும் அமைச்சரை நியமித்ததாக வல்லிபுர பொற்சாசனம் குறிப்பிடல்.
வசப மன்னன் நாட்டை நிர்வாக அலகுகளாகப் பிரித்து ஆண்ட
போது வடக்கிற்கு இஸிகிர எனும் அமைச்சரை நியமித்ததாக வல்லிபுர பொற்சாசனம் குறிப்பிடல்.
தசகம் எத்தன் எனப்படும் பத்துக் கிராமப் பிரதானிகள் பற்றி மாத்தளை மாவட்ட களுதிய பொகுண விகாரைக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமை.
138. வசப மன்னனின் காலத்தில் வெளியிடப்பட்ட ஆதாரம் எது?
வல்லிபுர பொற்சாசனம்
139. வல்லிபுர சாசனத்தில் உள்ளுராட்சி அமைப்பு முறை பற்றி யாது குறிப்பிடப்பட்டுள்ளது?
வசப மன்னன் நாட்டை நிர்வாக அலகுகளாகப் பிரித்து ஆண்ட போது வடக்கிற்கு ரிசிகிரி எனும் அமைச்சரை நியமித்ததாக வல்லிபுர பொற்சாசனம் குறிப்பிடல்
வசப மன்னன் நாட்டை நிர்வாக அலகுகளாகப் பிரித்து ஆண்ட போது வடக்கிற்கு ரிசிகிரி எனும் அமைச்சரை நியமித்ததாக வல்லிபுர பொற்சாசனம் குறிப்பிடல்
140. "தசகம் எத்தன்" என்பதன் பொருள் யாது?
பத்துக் கிராமப் பிரதானிகள்
141. தசகம் எத்தன் பற்றிக் கூறும் கல்வெட்டுச் செய்தி யாது?
மாத்தளை மாவட்ட களுதிய பொகுண விகாரைக்கல்வெட்டில் பிக்குகளுக்குத் தானம் வழங்கும் போது ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பத்துக் கிராமப் பிரதானிகள் அதனைத் தீர்த்து வைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை.
142. அனுராதபுர காலத்தில் அரசுரிமை பரிமாறப்பட்ட இரு முறைகளைத்
தருக.
தந்தையின் பின் மகனுக்கு
மூத்த சகோதரனின் பின் இளைய சகோதரனுக்கு
தருக.
தந்தையின் பின் மகனுக்கு
மூத்த சகோதரனின் பின் இளைய சகோதரனுக்கு
143. தேவநம்பிய தீசனின் சகோதரர்கள் நால்வரைத் தருக.
உத்திய, மஹாசிவ, சூரதிஸ்ஸ, அசேல்
144. வைத்திய சாலையைக் குறிக்க புராதன இலக்கியங்களில் இடம்பெற்ற சொல் எது?
வெஜ்ஜசாலா
145. இலங்கையில் நாடு முழுவதும் வைத்திய சாலைகளை உருவாக்கிய மன்னன் யார்?
புத்ததாச
146. நாடெங்கும் காணப்பட்ட வைத்தியசாலைகளுக்கு தேவைப்பட்ட
வசதிகளை வழங்கிய மன்னன் யார்?
5ம் மகிந்தன்
147. 4ம் காசியப்பன் அமைத்த வைத்திய சாலையின் பெயர் யாது?
வசதிகளை வழங்கிய மன்னன் யார்?
5ம் மகிந்தன்
147. 4ம் காசியப்பன் அமைத்த வைத்திய சாலையின் பெயர் யாது?
உபசக்க ரோகநாச
148. அவ் வைத்தியசாலை எந்நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது?
காய்ச்சலுக்கான வைத்தியசாலை
காய்ச்சலுக்கான வைத்தியசாலை
149. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 1ம் உபதிஸ்ஸ மன்னன் உருவாக்கிய வைத்திய சாலை எது?
பஸவந்தி நாமசால
150. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பண்டுகாபய மன்னன் உருவாக்கிய வைத்திய சாலை எது?
சொத்திசாலா
151. இந்தியாவின் பத்தினித் தெய்வ வழிபாட்டுக்கு சேர நாடு சென்ற
இலங்கை அரசன் யார்?
1ம் கஜபாகு
இலங்கை அரசன் யார்?
1ம் கஜபாகு
152. அம்மன்னனின் பயண நோக்கம் யாது?
அரசியல் உறவுமுறையைப் பேணல்
அரசியல் உறவுமுறையைப் பேணல்
153. உரோமில் கண்ணாடி மணிகளைப் பெற்றுக் கொள்ள வர்த்தகர்களை அனுப்பிய மன்னன் யார்?
கனிட்ட திஸ்ஸ மன்னன்
154. எவ்விகாரையின் தேவைக்காக கண்ணாடி மணிகள் பெறப்பட்டன? ருவன்வெலிசாய விகாரை
155. இச்செய்தியைப் பற்றிக்கூறும் நூல் எது?
மகாவம்சம்
156. சீன இராஜதந்திரிகள் 20முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மன்னனின் காலம் எது?
6ம் அக்போ மன்னன்
157. இலங்கை அரசர்கள் திருமணத் தொடர்பை ஏற்படுத்திய இரு
இந்திய இராச்சியங்கள் எவை?
பாண்டிய, கலிங்க இராச்சியங்கள்
158. 1ம் விஜயபாகு காலத்தில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட இரு
திருமணத் தொடர்புகளும் எவை?
தனது தங்கையான மித்தா இளவரசியை பாண்டிய மன்னனுக்குத் திருமணம் செய்து கொடுத்தமை.
திரிலோக சுந்தரி எனும் கலிங்கநாட்டுப் பெண்ணை 1ம் விஜயபாகு திருமணம் செய்து கொண்டமை.
159. 1ம் விஜயபாகு வெளிநாட்டு திருமணத் தொடர்புகளை மேற்கொண்டமைக்கான காரணம் யாது?
தமது அரசியல் எதிரிகளான சோழர்கள் இலங்கை மீது படை தொடுப்பதைத் தடுத்தல்.
160. சமயம், மொழி வேறுபாடு காணப்பட்டாலும் அந்நிய நாட்டவர்களின்
மீது நம்பிக்கையுடன் இலங்கை அரசர்கள் நடந்து கொண்டமைக்கு சான்று யாது?
மீது நம்பிக்கையுடன் இலங்கை அரசர்கள் நடந்து கொண்டமைக்கு சான்று யாது?
1ம் விஜயபாகு மன்னன் இந்தியாவின் சோழ நாட்டின் வேளைக்காரப் படையை தலதாமாளிகையின் பாதுகாப்புக்கு அமர்த்தியமை.
161. இலங்கையைச் சிவப்புத்தீவு எனக் குறிப்பிட்டவர் யார்?
அல் பல சூரி
அல் பல சூரி
162. அரபு நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புக்கு ஆதாரம் யாது?
இலங்கையின் மன்னன் இஸ்லாமிய அரசர்களுடன் பரிசுப்பொருட்களை பரிமாறிக் கொண்டதாகக் குறிப்பிடப்படல்.
163. இலங்கையில் காணப்பட்ட புராதன துறைமுகங்கள் 05 தருக. ஜம்புகோளப்பட்டினம்
கோகர்ண
மாதோட்டம்
கொடவாய
ஊராத்தோட்ட
164. இலங்கையில் காணப்பட்ட புராதன வர்த்தக நகரங்கள் 02ம் எவை?
அநுராதபுரம்
மாகம்
165. இலங்கையில் முதன்முதலில் இடம்பெற்ற விவசாய பயிர்ச்செய்கை
முறை எது?
சேனைப்பயிர்ச்செய்கை
166. புராதன இலங்கை மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விளங்கியது எது? விவசாயம்
167. சேனைப்பயிர்ச்செய்கையின் வேறு பெயர்கள் 03 தருக.
பிடபிம்
செஹென்
சேன
168. சேனைப்பயிர்ச்செய்கையின் வேறு பெயர்கள் பற்றிக் கூறும் ஆதாரங்கள் எவை?
கல்வெட்டுக்களில் பிடபிம் எனவும்
கல்வெட்டுக்களில் பிடபிம் எனவும்
சிங்கள உம்மக்க ஜாதக நூலில் சேன எனவும்
புத்சரண நூலில் செஹென் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
169. சேனைப்பயிர்ச்செய்கை என்றால் என்ன?
காடுகளை தீயிட்டு அழித்து அதில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கை
170. சேனைப்பயிர்ச்செய்கையின் போது உயிரினங்கள் எவ்வாறு காட்டிலிருந்து அகற்றப்படுகின்றன?
சத்தமிட்டு
171. நவதெனிசேன என்பதன் இரு கருத்துக்களையும் தருக.
171. நவதெனிசேன என்பதன் இரு கருத்துக்களையும் தருக.
புதிதாககத் தீயிடப்பட்ட காணி
ஒன்பது தானியங்களைப் பயிரிட்ட காணி
172. நவதெனிசேன பற்றிக்கூறும் நூல் எது?
சத்தர்ம ரத்னாவலிய
173. நவதெனிசேனவில் பயிரிடப்பட்ட 09 தானியங்கள் எவை?
குரக்கன்
உழுந்து
பயறு
சோளம்
கம்பு
வரகு
தினை
ஓமம்
174. கனத்த என்பது யாது?
சில காலம் கைவிடப்பட்டு மீளவும் பயிரடப்படும் சேனை
175. கனத்த எனும் சொல்லைப் பயன்படுத்தும் மக்கள் வாழும் பிரதேசம்
எது?
அநுராதபுர விவசாயிகள்
அநுராதபுர விவசாயிகள்
176. தண்டு வெட்ட என்பது யாது?
சேனையை சூழ கட்டப்படும் கம்புகளால் ஆன வேலி
சேனையை சூழ கட்டப்படும் கம்புகளால் ஆன வேலி
177. பெல என்பது யாது?
சேனையை தாக்க வரும் விலங்குகளிடம் இருந்து அதனைப் பாதுகாக்க அமைக்கப்படும் உயர்குடிசை
சேனையை தாக்க வரும் விலங்குகளிடம் இருந்து அதனைப் பாதுகாக்க அமைக்கப்படும் உயர்குடிசை
178. சேனைப்பயிர்ச்செய்கை தொடர்பாக அறவிடப்பட்ட இரு வரிகள் எவை? கெதிஅட
கெடுகனக
179. சேனைப்பயிர்ச்செய்கை தொடர்பாக அறவிடப்பட்ட வரிகளை நீக்கிய
மன்னன் யார்?
மன்னன் யார்?
நிஸ்ஸங்க மல்ல மன்னன்
180. புராதன காலத்தில் ஏன் வயலில் நெல் பயிரிடும் முறை ஆரம்பமானது? சனத்தொகை அதிகரிப்பு
ஆசிரியர் - திரு.கோ.தரணிதரன் BA (Hons)
நன்றி
0 Comments