பொது அறிவு பயிற்சி
வினாக்கள்
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2022
1. பத்மவிபூசன் விருது அறிவிக்கப்பட்ட இந்திய முப்படைத்தளபதி யார்?
பிபின் ராவத்
2. A5 வீதி எந்நாட்டின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டது?
சவுதி அரேபியா
3. 2021ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட களனிப் பால நிர்மாணிப்புக்கு நிதி உதவி வழங்கிய நாடு எது?
யப்பான்
4. 2022ஆம் ஆண்டிற்கான நேட்டோ மாநாடு எங்கு இடம்பெற்றது?
பெல்ஜியத்தின் பிரசெல்ஸ் நகரில்
5. 2022 ஆம் ஆண்டு ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்கத் திரைப்படம் எது?
CODA (பிரெஞ் படத்தின் ரீமேக்
6. 2022ஆம் ஆண்டிற்கான மகளீர் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்த அணி எது?
அவுஸ்ரேலியா
7. 2022ஆம் ஆண்டு ஆசிய நாடொன்றில் இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோல்வியடைந்து பதவி விலகிய பிரதமர் யார்?
இம்ரான் கான் பாக்கிஸ்தான்
8. 2022ஆம் ஆண்டு தெரிவான பிலிப்பைன்சின் புதிய ஜனாதிபதி யார்?
வொங் வொங் மாகோன்
9. 2022ஆம் ஆண்டு தென்கொரியாவின் புதிய ஜனாதிபதி யார்?
யூன் அக் யூல்
10. G7 அமைப்பின் 6வது மாநாடு நடைபெற்ற இடம் எது?
பிரசெல்ஸ்
பாக்கிஸ்தான்,ஆப்கானிஸ்தான் இந்தியா, பங்காளதேஷ்.
12. நேட்டோ அமைப்பில் இணையத் தயாராக இருந்த எந்நாட்டின் மீது ரஸ்யா ஒரு வருடத்திற்கு மேல் தாக்குதல் நடத்தி வருகின்றது?
உக்ரேன்
13. நேட்டோ அமைப்பில் இணையத் தயாரான இரு நாடுகளை ரஸ்யா எச்சரித்தமையால் அவ்விரு நாடுகளும் பிரித்தானியாவுடன் உடன்படிக்கை செய்துள்ளன. அந்நாடுகள் எவை?
சுவிடன், பின்லாந்து
14. 2022ஆம் ஆண்டு மே மாதம் விபத்தில் மரணமடைந்த அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கட் வீரர் யார்?
அன்றூ சைமன்ஸ் (46வயது)
15. இலங்கை நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு ராஜதந்திர ரீதியாக சர்ச்சைக்குள்ளான ரஸ்ய நாட்டின் விமானம் எது?
SU 289
16. 2022 ஆம் ஆண்டு ஆசியப் பாதுகாப்பு மாநாடு எங்கு இடம்பெற்றது?
சிங்கப்பூர்
17. 2022ஆம் ஆண்டு உலகச் சுற்றுலா அமைப்பில் இருந்து விலகிய நாடு எது?
ரஸ்யா
18. 2022 ஆம் ஆண்டு வளர்முக நாடொன்றில் சர்ச்சைக்குரிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாடு எது?
ஐக்கிய அமெரிக்கா
19. சுவிஸ்லாந்து நாட்டில் இடம்பெற்ற ரெஸிஸ் பிரிண்ட் சர்வதேசப் போட்டியில் 100M ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு தெற்காசியச் சாதனை படைத்த இலங்கை வீரர் யார்?
யுபுன் அபேயகொன்.
20. 2022ஆம் ஆண்டு இந்தியாவின் மாநிலங்கள் அவையின் உறுப்பினர்களாகத் தெரிவான உ பிரபலங்கள் யார்?
இசைஞானி இளையராஜா, P.T உஷா (ஓட்ட வீராங்கனை)
21. 2022 ஆம் ஆண்டில் பிரித்தானியாவில் இருவர் பிரதமர் பதவிகளில் இருந்து ராஜினாமாச் செய்து அதிர்ச்சியளித்தனர். அவர்கள் யார்?
பொரிஸ் ஜோன்சன், எலிசபெத் ட்ரஸ்
22. தங்கத்தை நாணயமாக மாற்றத் திட்டமிட்டுள்ள ஆபிரிக்க நாடு எது?
சிம்பாவே
23. G7 அமைப்பின் தீர்மானத்தின் படி உக்ரேனைப் பாதுகாக்க நேட்டோ அமைப்பு படைகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ள ஐரோப்பிய நாடு எது?
போலந்து
24. ஜப்பானில் ஜனநாயகக் கொள்கையை முன்னெடுத்து சிறந்த தலைவராகத் திகழ்ந்த முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டில் 2022ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அவர் யார்?
ஷின்சு அபே
25. G7 அமைப்பின் 2022ஆம் ஆண்டிற்கான மாநாடு எங்கு நடைபெற்றது?
இந்தோனேசியாவின் பாலித்தீவில்
26. குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நாடு எது?
கொங்கோ சனநாயகக் குடியரசு
27. 2022ஆம் ஆண்டு குரங்கு அம்மை நோயால் முதல் மனித இறப்பு நிகழ்ந்த நாடு எது?
ஸ்பெயின், இரண்டாவது இந்தியா
28. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 22வது பொதுநலவாயப் பழுதூக்கும் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் யார்?
திலங்க இசுருகுமார
29. சீன அமெரிக்க பனிப்போரின் மத்தியில் சீனாவுடன் முரண்பட்டிருக்கும் தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டு சர்ச்சயை ஏற்படுத்திய அமெரிக்க சபாநாயகர் யார்?
நான்சி பெலோசி
30. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 22 வது பொதுநலவாயப்போட்டிகள் எங்கு நடைபெற்றன?
இங்கிலாந்தின் பேர்மிங்காம் நகரில் இதில் 72 நாடுகள் பங்கேற்பு
31. இலங்கையில் 2022ஆம் ஆண்டு பயிர்ச்செய்கையை சேதப்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விலங்கு எது?
யானை
32. 2022ஆம் ஆண்டு அதிக வெப்பம் காரணமாக மக்கள் சுரங்கங்களில் முடங்கிய நாடு எது?
சீனா
33. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 65வது பொதுநலவாயக் கூட்டத்தொடர் எந்நாட்டில் நடைபெற்றது?
கனடா
34. இலங்கையின் கடற்பரப்பில் பிரவேசித்த சீனக்கப்பலால் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என இலங்கையுடன் ராஜதந்திர ரீதியில் கடிந்து கொண்ட நாடு எது?
இந்தியா, சீனக்கப்பல் யுவான் வேங்க் 5
35. வருடாந்தம் வெளியிடப்படும் உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் 2022ஆம் ஆண்டு முதலிடத்தைப் பிடித்த தலைவர் யார்?
நரேந்திர மோதி
36. ஊழல் குற்றச்சாட்டின் பேரில் ஆசிய நாடொன்றின் பிரதமரின் கடமைகளை 2022 ஆம் ஆண்டு நீதிமன்றம் தடைசெய்துள்ளது. அந்நாட்டுத் தலைவர் யார்?
தாய்லாந்துப் பிரதமர் பியுத் சான் ஒக்சா
37. உலகின் பொருளாதார பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தர வரிசையில் இலங்கையின் இடம் யாது?
ஐந்தாவது இடம்,
1 - லெபனான்,
2 - சிம்பாவே,
3 - வெனிசுவெலா
4 - துருக்கி
38. பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்த வரலாற்றுப் பெருமைக்குரிய ரஸ்யாவின் முன்னாள் தலைவர் 2022 இயற்கை எய்தினார். அவர் யார்?
மிஹயில் கொர்ப்பச்சேவ்
39. 2022ஆம் ஆண்டு 7.7 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்று உலகில் ஐந்தாவது பொருளாதார பலமுள்ள நாடாக உருவெடுத்துள்ள நாடு எது?
இந்தியா
1 - ஐக்கிய அமெரிக்கா
2 - சீனா
3 - யப்பான்
4 - ஜேர்மனி
6 - இங்கிலாந்து
40. உலகில் நீண்ட காலம் பிரித்தானிய அரசகுடும்பத்தின் மகாராணியாக இருந்து தனது 96 வயதில் மரணமடைந்த மகாராணி யார்?
2ம் எலிசபெத் இவர் பேர்மிங்காம் அரண்மனையில் இறந்தார். இவர் 15 பிரதமர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்துள்ளார். இறந்த திகதி 2022 செப்ரெம்பர் 08
41. 6வது ஆசியாக்கிண்ண கிரிக்கட் மகுடத்தை பெற்றுக்கொண்ட அணி யாது?
இலங்கை 8 வருடங்களின் பின் இவ்வாய்ப்பு கிடைத்துள்ளது.
42. பிரித்தானியாவின் புதிய பிரதமர் யார்?
ரிஷி சுனக்
43. இலங்கையின் ஏழு புதிய மாநகர சபைகள் அண்மையில் உருவாக்கப்படுவதை அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அவற்றைப் பெயரிடுக?
திருகோணமலை, வவுனியா,கேகாலை, களுத்துறை, புத்தளம், அம்பாறை, மன்னார்
44. 2022ஆம் ஆண்டு ஆபிரிக்காவில் எரிவாயு குழாய்த்திட்டம் எந்நாடுகளுக்கு இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
மொறாக்கோ முதல் நைஜிரியா வரை
45. 2ம் எலிசபெத் மகாராணியின் இறுதி நிகழ்வு எங்கு எப்போது இடம்பெற்றது?
19.09.2022 அன்று வெஸ்ற் மினிஸ்ரர் அரங்கில் இடம்பெற்றது.
46. 2ம் எலிசபெத் மகாராணி பொதுநலவாயத் தலைமைப் பொறுப்பை வகித்த ஆண்டுகள் யாது?
1952 ஆம் ஆண்டு முதல் 70 வருடங்கள் பதவி வகித்தார்.
47. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிர்வாக சபைத் தலைவராக 65 வது பிலிப்பைன்சில் இடம்பெற்ற மணிலா மாநாட்டில் தெரிவான தலைவர் யார?
ரணில் விக்கிரமசிங்க
48. ஆசிய நாடொன்றில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின் போது இரு அணி ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலகத்தை கலைக்க கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஏற்பட்ட சன நெரிசலில் 174 பேர் கொல்லப்பட்டனர். அந்நாடு எது?
இந்தோனேஷியா
49. 2022ஆம் அண்டு T20 கிரிக்கட் போட்டிகள் எந்நாட்டில் இடம்பெற்றது?
அவுஸ்ரேலியா
50. இலங்கையில் வாய்ப்புற்று நோயால் 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினர் யார்?
ஆண்கள்
51. உலகில் பொருளாதார நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்கும் வாய்ப்புள்ள எத்தனை நாடுகளுக்கு ஐ.நா சபை உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது?
54 நாடுகள்
52. இலங்கை குறைந்த வருமானம் பெறும் நாடாக எத்தீர்மானத்தால் உறுதி செய்யப்படுகின்றது?
இலங்கையின் பாராளுமன்றத்தால் அங்கிகரிக்கப்பட்டமை
53. ஆசிய நாடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28பேர் மரணமடைந்த நாடு எது?
தாய்லாந்து
54. பெலாரஸ் நாட்டின் மனித உரிமை செயற்பட்டாளருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் பெயர் யாது?
ALES BIALIATSKI - இதற்கு ரஸ்யா எதிர்ப்பு
55. 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசியக்கிண்ணப் போட்டிகள் எந்நாட்டில் இடம்பெற்றது? அதில் வெற்றி பெற்ற அணி யாது?
பங்களாதேஷ். இதில் இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி வெற்றி பெற்றது.
56. ஆசிய நாடொன்றில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற சனநெரிசலில் 151பேர் இறந்த நாடு எது?
தென்கொரியாவின் சியோல் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றது.
57. சர்வதேச காலநிலை மாநாடு 2022ஆம் ஆண்டு எங்கு நடைபெற்றது?
எகிப்தில் இடம்பெற்றது
58. இலங்கை அணியின் வீரர் ஒருவர் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட நாடு எது?
அவுஸ்ரேலியா (தனுஸ்க குணதிலக)
59. 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச T20 போட்டிகளில் சம்பியனான அணி எது?
இங்கிலாந்து அணி பாக்கிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றது.
60. உலகின் வயது கூடிய யானை ஆபிரிக்காவில் இறந்தது. அதன் பெயர் எது?
DIDA இவ் யானை கென்யாவில் Tsaro East Nationa I Park எனும் பூங்காவில் வாழ்ந்தது.
61. இலங்கை அணியின் வீரர் அவுஸ்ரேலியாவில் குழப்பத்தை ஏற்படுத்தியதன் விளைவாக ஒரு வருடம் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் யார்?
சாமிக்க கருணாரத்ன
62. மத்திய கிழக்கு நாடொன்றில் இலங்கைப் பணிப்பெண்கள் முறைகேடாக நடாத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அந்நாடு எது?
ஓமான்
63. இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பல நகரங்கள் மாசடைதலுக்கு உள்ளாகின. அந்நகரங்கள் எவை?
கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி, பொலன்னறுவை, குருநாகல், கேகாலை
64. 2022இல் பெரு நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவான பெண் யார்?
மமா பெலாரின்
65. ஆர்ஜெந்தினாவின் உப ஜனாதிபதி ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டு 6 சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் யார்?
கிறிஸ்டினா பெர்ணாண்டஸ்
66. 2022ஆம் ஆண்டு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட சூறாவளியின் பெயர் எது?
மாண்டோசு புயல்
67. இலங்கை அகதிகள் 300 பேர் செல்லும் நோக்குடன் சென்ற கப்பல் கனடா காப்பற்றப்பட்டு ஆசிய நாடொன்றில் பாதுகாத்து குறிப்பிட்ட மாதங்களின் இலங்கைக்கு அனுப்பப் பட்டனர். அகதிகள் தங்க வைக்கப்பட்ட நாடு எது?
வியட்னாம்
68. இலங்கையில் பருவகால மாற்றங்களால் ஏற்பட்ட அதிக குளிரால் கால்நடைகள் அதிகளவு மரணித்த மாகாணங்கள் எவை?
வடக்கு, கிழக்கு
69. 2022ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் திகதி ஆரம்பமான FIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளில் கலந்து கொண்ட அணிகள் எத்தனை?
32 நாடுகள்
70. 22வது கால்பந்தாட்டப் போட்டிகளில் மூன்றாவது முறை சம்பியன் பட்டத்தை வென்ற அணி எது?
ஆர்ஜெந்தினா
71. 22வது கால்பந்தாட்டப் போட்டிகளில் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு தோல்வி கண்ட அணி எது?
பிரான்ஸ்
72. இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் குழுவினர் ஒரு நாட்டிற்குச் சென்று 200 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலை சர்வதேச மட்டத்தில் முக்கியம் பெறுகின்றது. மக்கள் சென்று வாழும் நாடு எது?
இலங்கை
73. இலங்கையில் தற்போது காணப்படும் காட்டின் அளவு யாது?
16%
74. ரஸ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து உக்ரேனுக்கு அதிக உதவி வழங்கிய நாடாக திகழும் நாடு எது?
ஐக்கிய அமெரிக்கா
75. பிரித்தானியா ஆரம்பித்துள்ள சர்வதேச நாடுகளை இணைத்துக் கொண்டு ஆரம்பித்துள்ள ஜனநாயக வேலைத்திட்டம் எது?
புதிய பிளாட்டினம் கூட்டுத்திட்டம்
76. ஆபிரிக்காவின் சிங்கப்பூராக மாற்றம் கண்டுள்ள நாடு எது?
ருவாண்டா
77. சீனா தனது சோசலிச அணியைப் பலப்படுத்த உருவாக்கிய திட்டம்?
பட்டுப்பாதைத் திட்டம்
78. அதிக பிரதமர்கள் ஒரே ஆண்டில் நியமிக்கப்பட்ட நாடு எது?
பிரித்தானியா
2019 முதல் 2022 யூலை வரை - பொரிஸ் ஜோன்சன்
2022 யூலை ஓக்டோபர் - வரை எலிசபெத் ட்ரஸ்
2022 ஒக்டோபர் முதல் - ரிஷி சுனக் (கன்சவேட்டிக் கட்சி) 57வது பிரதார்
79. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அடித்தளமிட்ட காரணிகள் எவை?
1. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
2. அந்நிய செலாவாணி நெருக்கடி
3. கொவிட் - 19 பெருந்தொற்று
4. பணவீக்கம் உயர்வு
5. இலங்கை மத்திய வங்கி அளவுக்கதிகமாக நாணயத்தாள்களை அச்சிட்டமை
6. இரசாயன உரங்களுக்கு பாராளுமன்றம் தடை விதித்தமை
7. அரசியல் வாதிகளின் ஊழல்
8. சர்வதேச நாணயத்திடம் உதவி பெறத் தாமதித்தமை
9. உக்ரேன் ரஸ்யப் போர்
80 . 2022 ஆம் ஆண்டிற்கான உலகக் கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகள் விபரம்
22 வது கட்டார் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் ஆர்ஜெந்தினா அணி 3 வது முறையாக (1986.2010) 2022இல் சம்பியனாகத் தெரிவானது.
இதில் பிரான்ஸ் அணி போராடி தோற்றது.
முதன்முதலில் மொரோகோ நாட்டு அணி ஆபிரிக்கா சார்பாக அரையிறுதிக்குத் தெரிவானது
தங்கப் பந்து - Lionel Messi
தங்கப்பாதணி - Kylian mbappe
தங்கக்கையுறை - Emiliano Martinez
நடைபெறும் ஆண்டு - 2024
தடவை - 33
நடைபெறும் இடம் - பிரான்ஸ் - பரிஸ்
தடவை - 34
நடைபெறும் இடம் - லோஸ் ஏன்சல்ஸ் - ஐக்கியஅமெரிக்கா
நடைபெறும் ஆண்டு - 2023
தடவை - 13
நடைபெறும் இடம் - இந்தியா
நடைபெறும் ஆண்டு - 2027
தடவை - 14
நடைபெறும் இடம் - தென்னாபிரிக்கா, சிம்பாவே, நமிபியா
நடைபெறும் ஆண்டு - 2022
தடவை - 22
நடைபெறும் இடம் - கட்டார்
தடவை - 23
நடைபெறும் இடம் - ஐக்கியஅமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ
சிறந்த நடிகர் - வில் சுமித்
சிறந்த நடிகை - ஜேசிக்கா சாஸ்டெய்ன்
சிறந்த இயக்குனர்- ஜேன் கேப்பிடேஷன்
06 விருதுகள் பெற்ற படம் - டியூன் அமெரிக்கப்படம்
Nobel Prize Laureates - Alain Aspect, John F Clauser, Anton Zeilinger
Awarded For - For their work on entangled photon experiments, proving the violation of Bell inequalities, and developing the field of quantum information science
Nobel Prize Laureates - Carolyn Bertozzi, Morten Meldal, Barry Sharpless
Awarded For - For the establishment of the foundations of click chemistry & bioorthogonal chemistry and also took chemistry into the functionalism era
Nobel Prize Laureates - Svante Paabo
Awarded For - For his research on the extinct hominid genomes and the evolution of humans
Nobel Prize Laureates - Ben S. Bernanke, Douglas Diamond W, Philip H. Dybvig
Awarded For - For research on financial crises and banks.
Nobel Prize Laureates - Ales Bialatski, Memorial Human Rights Organization (Russia), Center for Civil Liberties Human Rights Organisation (Ukramian)
Awarded For - For encouraging the night to criticise power and protect the citizen's fundamental rights
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2021
1. 2021 ஜனவரி முதலாந் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய நாடு எது?
பிரித்தானியா
2. புதிய காற்றாலை மின் உற்பத்தி நிலையம் எங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது?
மன்னார்
3. 46 வது அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார்?
ஜோ வைடன்
4. அமெரிக்காவின் துணை ஜனாதிபதி யார்?
கமலா ஹரிஸ்
5. உலகில் கோவிட் 19 தொடர்பாக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எவை?
பைசர் - அமெரிக்கா
அஸ்ரா செனக்கா - பிரித்தானியா
சைனபாம் - சீனா
ஸ்புட்னிக் - ரஸ்யா
மொடானா அமெரிக்கா
6. காலநிலை மாற்றம் தொடர்பான பரிஸ் சமாதான உடன்படிக்கையில் இருந்து விலகியிருந்த வல்லரசு நாடு மீண்டும் அவ் உடன்படிக்கையில் 2021 இல் இணைந்து கொண்டது. அந்நாடு எது?
அமெரிக்கா
7. காலநிலை பருவமாற்ற மாநாடு 2021ஆம் ஆண்டு உலகில் எங்கு இடம்பெற்றது? ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரம்
8. உலகின் பிரதான 04 நீர்ப்பாசனத் திட்டங்களில் ஒன்றாகத் தெரிவான இலங்கையின் நீரப்பாசனத்திட்டம் எது?
உமாஓயா நிலத்தடித் திட்டம்
9. தென்கிழக்காசிய நாடொன்றில் 2021இல் மீண்டும் இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகின்றது. அந்நாடு எது?
மியன்மார் (பர்மா)
10. மியன்மாரில் கைது செய்யப்பட்ட ஜனநாயகக் கட்சித் தலைவி யார்?
கொங் ஷாங் சூகி
11. 2021 பெப்ரவரியில் கொண்டாடப்பட்ட இலங்கையின் சுதந்திரதினம் எத்தனையாவது ஆகும்?
73 வது
12. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான குற்றப்பிரேரணை செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது. அவர் யார்?
டொனால்ட் றம்ப்
13. இலங்கையின் வடக்கில் உள்ள 03 தீவுகளை சீனாவிற்கு இலங்கை வழங்குவதாக ஒப்பந்தம் இடம்பெற்றது. அத்தீவுகள் எந்நோக்கத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது?
சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தல்
14. இலங்கையில் திண்மக்கழிவு மூலம் 10 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும் இடம் எது?
கெரவலப்பிட்டிய (உலகின் முதல் திண்மக்கழிவு மின்சக்தி உற்பத்தி நிலையம்
15. மனிதர்களைப் பயன்படுத்தி உலகில் கோவிட் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாடு எது?
பிரித்தானியா
16. 2021 இல் செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய வளைகுடா நாடு எது?
ஐக்கிய அரபு இராச்சியம்
17. Covids எனப்படும் சர்வதேச கோவிட் ஒழிப்பிற்கான தடுப்பு மருந்தை வழங்கும் நடவடிக்கையில் 7.5 மில்லியின் தடுப்பூசிகளை வழங்கி உதவும் அமைப்பு எது?
G 7 நாடுகள் அமைப்பு
(அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி)
18. ஒரு வருடத்தில் உலகில் உற்பத்தியாகும். 17% உணவு வீணாவதுடன். 3 மில்லியன் மக்கள் பட்டினியால் வருந்துவதாகவும் கூறிய நிறுவனம் எது?
ஐக்கிய நாடுகள் சபை
19. அமேசன் நிறுவனத்தால் இலங்கையின் தேசியக்கொடியைக் கொண்ட பாதணிகள், கால்விரிப்புக்கள் எந்நாட்டில் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது?
சீனா
20. சீனா தனது ஆதிக்கத்தைப் பயன்படுத்தி ஆசிய நாடொன்றின் தேர்தல் முறையை மாற்ற முயற்சித்ததாகக் கூறப்பட்டது. அவ்வாசிய நாடு எது?
ஹொங்ஹொங்
21. 103 நதிகளை பாதுகாக்கும் திட்டத்தை இலங்கை ஜனாதிபதி 2021இல் செயற்படுத்தினார், அத்திட்டம் எது?
சுரமுகி கங்கா
22. இலங்கைத் தேயிலையை அதிகம் கொள்வனவு செய்யும் நாடுகள் எவை?
துருக்கி, ரஸ்யா, சீனா, ஈரான்
23. இலங்கை அரசு அமெரிக்காவுடன் செய்து கொள்ள MCC ஒப்பந்தத்தின் விரிவாக்கம் யாது?
Milleniyam Challenge Corparetion
24. இந்தியாவில் அதிகமாக வளிமாசடைவதால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரம் எது?
புதுடில்லி
25. சுயெஸ் கால்வாயில் 2021இல் தரைதட்டிய தாய்வானின் கப்பலால் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி என்பன ஏற்பட்டன. அக்கப்பல் எது?
எவர் கிவன் (சீனா - நெதர்லாந்து பயணம் 06 நாள் தரித்து நின்றது)
26. 2021இல் பாக்கு நீரிணையைக் கடந்து சாதனை படைத்த இலங்கை விமானப்படை வீரர் யார்?
ரொசான் அபயசுந்தர
27. பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் 2021இல் மரணமானார். அவர் யார்?
இளவரசர் பிலிப்
28. 2021இல் மத்திய வங்கியால் தடை விதிக்கப்பட்ட நிதி நிறுவனம் யாது?
சுவர்ணமஹால் பினான்ஸ் PLC
29. ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக செவ்வாய்க்கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய நாடு எது?
சீனா. ஜுலோங் (கடவுளின் நெருப்பு)எனும் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
30. ஐரோப்பிய ஒன்றியம் 2021ஆம் ஆண்டு தடை விதித்த நாடு எது?
வெலாரஸ் (ஊடகவியலாளர் ஒருவரை கிறிஸ் நாட்டின் எல்லையைத் தாண்டி)
31. ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போது அங்கத்துவம் வகித்த நாடுகள் எத்தனை?
27 நாடுகள்
32. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான கப்பல் எது?
M.P எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல்.
33. பிரபல டாஸன் தொலைக்காட்சி நாடக நடிகர் 2021 இல் இறந்தார். அவர் யார்?
ஜோ லாரா
34. கோவிட் வைரஸ்களின் புதுப் பெயர்கள் எவை?
பிரித்தானியா - அல்பா
தென்னாபிரிக்கா - பிட்டா, ஒமிக்றோன்
இந்தியா - டெல்டா
35. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் 76 வது தலைவராக தெரிவானவர் யார்?
அப்துல்லா ஷாஹிட்
36. 2021ஆம் ஆண்டு 2வது தடவையாக ஐக்கிய நாடுகளின் செயலாளராகத் தெரிவானவர் யார்?
அன்ரனியோ குவாற்றரஸ். போர்த்துக்கல் நாட்டவர்.
9 வது செயலாளர் பதவி (2017 - 2026)
37.103 கோல்களை அடித்து உலகில் அதிக கால்பந்தாட்டக் கோல்களை அடித்த சாதனை வீரராகத் திகழ்பவர் யார்?
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
38. இலங்கையின் 16வது பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?
வவுனியா பல்கலைக்கழகம்
39. பீட்கொய்ன் டிஜிட்டல் நாணயத்தை சட்டபூர்வமாக அங்கிகரித்த நாடு எது?
எல்சல்வடோர்
40. 2021 இல் G7 மாநாடு எங்கு இடம்பெற்றது?
பிரித்தானியா
41. சீனா 2021இல் விண்வெளிக்கு அனுப்பிய விண்கலம் எது?
சென் சூ
42. சமத்துவ அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்கிய நாடு எது?
சிலி
43. இந்தியா பரிசோதித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எது?
அக்னி பிரைம்
44. முழுமையாக சேதனப் பசளைப் பாவனைக்கு மாறிய நாடு எது?
பூட்டான்
45. 2020 இற்குரிய 32வது ஒலிம்பிக் போட்டிகள் 2021ல் எங்கு இடம்பெற்றன?
யப்பான் டோக்கியோவில்
46. 2020 இற்குரிய 32 வது ஒலிம்பிக் போட்டிகளின் பதக்க விபரம் யாது?
ஐக்கிய அமெரிக்கா - 39 தங்கம்
சீனா - 38 தங்கம்
யப்பான் - 27 தங்கம்
47. தீவிரவாத அமைப்பு ஒன்று ஆசிய நாடொன்றைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பெற்றுள்ளது? அந்நாடு எது?
ஆப்கானிஸ்தான் - தலிபான் அமைப்பு (சீனா பகிரங்க ஆதரவு)
48. பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தவர் யார்?
தினேஸ் பிரியந்த ஹேரத் (67M எறிந்து உலக சாதனை)
49. பரா ஒலிம்பிக் போட்டிகளில் அதிக தங்கம் பெற்ற நாடு எது?
சீனா
50. ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பு ஆட்சியைப் பெற முக்கிய காரணம் யாது?
புதிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ வைடன் அமெரிக்கப் படைகளை ஆப்கானில் இருந்து அகற்றியமை
51. இலங்கையின் 16வது மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அஜித் நிவாட் கப்ரால் 15வது W.D லக்ஸ்மன்
52. ஆக்கஸ் உடன்படிக்கை என்பது யாது?
ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா இணைந்த ஒப்பந்தம். இது சீனக்கடல் பாதுகாப்புத் தொடர்பானது. சீனா கண்டனம். பிரான்ஸ் விமர்சனம் (பிரான்ஸ் அவுஸ்ரேலியா பாதுகாப்பு ஒப்பந்தம் ரத்து)
53. உலகப் பணக்காரர்களின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட நிறுவனம் எது? பனாமா நிறுவனம்
54. சீனாவுக்கு எதிராக தனியரசாக போராடி வரும் ஆசிய நாடு எது?
தாய்வான்
55. விண்வெளியில் முதல் படம் தயாரித்த நாடு எது?
ரஸ்யா
56. Twenty 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் 2021இல் எங்கு இடம்பெற்றன?
ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம்
57. 2021இல் IPL கிண்ணத்தை 4வது முறையாக 2021இல் சுவிகரித்த அணி எது?
சென்னை
58. பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதலமைச்சராகத் தெரிவானவர் யார்? சரண்ஜித் சிங்
59. ரஸ்யாவில் மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார்? விலாகுதீர் புட்டின்
60. பார்படோஸ் எனும் கரிபீயன் தீவு நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி யார்?
சான்றா மேன்சன் (பிரித்தானியாவிடமிருந்து 55 வது சுதந்திர தினத்தில் குடியரசாக மாறியது)
61. இந்தியாவில் புதிய விமான நிலையமாக உருவாகிய நகரம் எது?
குஷி நகர்
62. Covid 19 என்பதன் விரிவாக்கம் என்ன?
Co - Corona
vi - virus
D - Disease
19 - year
63. கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் உலகின் பிரபலமான பெண்ணாகத் தெரிவானவர் யார்?
மலாலா யூசுப்
64. பண்டைய சுதேச தொழில்நுட்பத்திற்குரிய தொல்பொருட்களைத் திரட்டி முதலாவது தொழில்நுட்ப நூதனசாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
பொலன்னறுவை
65. 2025ஆம் ஆண்டாகும் போது இலங்கையில் எந்நோயை முற்றாக ஒழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது?
விசர் நாய்க்கடி
66. இலங்கையில் முதல் மின்சார புகையிரதப் பாதை எந்நகரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது?
கண்டி நகரம்
67. எந்நாட்டில் 5G புரோட்பேன்ட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது?
சீனா
68.எந்த உயிரினம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என சீனப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது?
எறும்பு தின்னி
69. அண்மையில் எந்த விகாரை உலக மரபுரிமைப் பட்டியலில் இருந்து நீக்கிக் கொள்ளப்பட்டது?
தம்புள்ளை ரங்கிரி லென் விகாரை
70. call of frame எனும் உயரிய கிரிக்கட் விருதை 2021இல் பெற்ற இலங்கையர யார்?
மஹேல ஜெயவர்த்தன.
ஏனையோர் தென்னாபிரிக்கா - ஷோன் பொலக், இங்கிலாந்து
71.இலங்கையின் பிரியந்த குமார எனும் பொறியியலாளர் நிறுவன முகாமையாளராகக் கடமையாற்றியபோது பாக்கிஸ்தானில் 2021இல் எந்நகரில் கொல்லப்பட்டார்?
சியல்கோட் - பாஞ்சாப் மாநிலம்
72. 5 வது இந்து சமுத்திர எப்போது இடம்பெற்றது? அதனை தலைமையேற்று நடத்திய நாடு எது?
இலங்கை
73. இலங்கையின் எக்கரையோர மாவட்ட கடற்பரப்பில் எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
மன்னாரில்
74. அண்மையில் இந்திய முப்படைகளின் பிரதான தளபதி குடும்பத்துடன் விமான விபத்தில் கொல்லப்பட்டார். அவர் யார்?
பிபின் ராபர்ட் - தமிழக நீலகிரியில் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.
இவருக்கு பத்ம விபூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
75. இலங்கையின் பிரியந்த குமார எனும் பொறியியலாளரை பாதுகாக்க முயன்ற பாக்கிஸ்தான் பிரஜைக்கு உயர்விருது வழங்கப்பட்டது? அவர் யார்?
மலீக் அத்னக்
76. LPL பிரிமீயர் லீக் போட்டியில் 2 வது முறையாக சம்பியனான அணி எது?
Jaffna Kings அணி
77. 21 ஆண்டுகளின் பின் உலகழகியாகத் தெரிவான இந்திய பெண்மணி யார்? ஹர்னால் சந்து (ஹரியானா மாநிலப் பெண்மணி
78. அமெரிக்காவிடம் வழங்கத் தீர்மானிக்கபட்ட இலங்கையின் அனல் மின் நிலையம் எது?
யுகதனவி (கெரவலப்பிட்டிய)79. அண்மையில் ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தீ விபத்து ஏற்பட்டமை உலகின் பிரதான செய்தியாகத் திகழ்ந்தது? அந்நாடு எது?
தென்னாபிரிக்கா
80. அண்மையில் இலங்கை ஜனாதிபதிக்கு தேரர்களால் வழங்கப்பட்ட விருது எது? சிறிலங்காதீஸ்வர பத்ம விபூசண
81. உலகின் மிகப்பெரிய கப்பல் 20212இல் இலங்கை வந்தது. அதன் பெயர் எது?
Evergreen
82. பிரித்தானியாவில் அண்மையில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யார்? டேவிட் அமெஸ்
83. இலங்கை கிரிக்கட்டின் முதல் டெஸ்ட் அணித்தலைவர் 2021 இல் இறந்தார். அவர் யார்?
பந்துல வர்ணபுர
84. 2021 இல் நோபல் பரிசு பெற்றவர்கள்?
பௌதீகவியல்
யப்பான் - Syukuro Manabe
ஜேர்மனி - Klaus Hasselmann
இத்தாலி - Giorgio Parisi
இரசாயனவியல்
ஜேர்மனி - Benjamin List
பிரித்தானியா - David W.C Macmillan
மருத்துவம்
ஐக்கிய அமெரிக்கா - David Jullus
லெபனான் - Ardem Patapoutian
இலக்கியம்
Zanzibar - Abdulrazak Gurnah
சமாதானம்
பிலிப்பைன்ஸ் - Maria Ressa -
Kuybyshev தற்போது ரஸ்யா - Dmitry Andreyevich Muratov
பொருளாதாரம்
கனடா - David Cardகல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2020
1. தெற்காசியாவின் பெரிய தாமரைக் கோபுரம் எந்நாட்டில் காணப்படுகின்றது? இலங்கையில் 2019 செப்ரெம்பர் 19இல் சீன வங்கியின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது. இது உலகின் 19வது உயரமுடைய கோபுரமாகும்.
2. 2019இல் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பி வைத்த எவ்விண்கலம் பழுதடைந்தது?
சந்திராயன் 2 எனும் விண்கலத்தை அனுப்பிய போது விக்ரம் லேண்டர் எனும் கருவி பழுதடைந்தது.
3. சவுதி அரேபியாவின் ஜமால் கசுக்கி எனும் ஊடகவியலாளர் துருக்கியில் வைத்து சவுதி அரேபியத் தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதற்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட சவுதி இளவரசர் யார்?
முகமட் பில் சல்மான்
4. 2019 இல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்குக் கிடைத்தது?
எதியோப்பியப் பிரதமர் அபி அஹ்மத்
5. 2022 இல் ககன்யான் விண்கலம் மூலம் அனுப்பவுள்ள நாடு எது?
இந்தியா விண்வெளி வீரர்களை விண்ணுக்கு
6. இலங்கையில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இரு றோபோக்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. அவற்றை வழங்கிய நாடு எது?
சீனா
7. இலங்கை அமெரிக்காவுடன் கைச்சாத்திடவுள்ளதாக கூறப்பட்ட சர்ச்சைக்குரிய உடன்படிக்கை எது? அதன் தாக்கம் யாது?
மிலேனியம் சலேஜ் - MCC உடன்படிக்கை
8. 2019இல் யப்பானின் ஜோகோஹோமா நகரில் நடைபெற்ற உலகக்கிண்ண றக்பி போட்டியில் சம்பியனான அணி எது?
தென்னாபிரிக்கா.
2ம் இடம் - இங்கிலாந்து
3ம் இடம் - நியுசிலாந்து.
9. இந்தியாவில் முக்கிய நகரம் சூழல் மாசடைதல் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் வெளியே வருவது கூட தடைப்பட்டிருந்தது. அம்முக்கிய நகரம் எது?
புதுடில்லி
10. 2019 இறுதிப் பகுதியில் சார்க் நாடொன்றின் வரைபடம் திருத்தம் செய்யப்பட்டது. அந்நாடு எது?
28 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் கொண்டு இந்திய வரைபடம் 09 உருவாக்கப்பட்டுள்ளது.
11. 2019 நவம்பர் 16 அன்று தேர்தலில் இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவானவர் யார்?
கோத்தாபாய ராஜபக்ஷ 52.25% (69இலட்சம் வாக்குகள்)
12. தட்டம்மை நோய் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்ட ஐரோப்பிய நாடு எது?
ஜேர்மனி
13.13வது சார்க் விளையாட்டுப்போட்டிகள் எங்கு இடம்பெற்றன?
நேபாளம் கத்மண்டு நகரில்
14. உலக காலநிலை மாற்றத்தைப் பற்றிய மாநாடு எங்கு 2019 டிசம்பரில் நடைபெற்றது?
ஸ்பெயினின் மட்ரிட் நகரில் இடம்பெற்றது. முன்பு சிலியில் இடம்பெற இருந்தது.
15. உலகில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் நாடுகளில் இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது?
6 வது இடம்
16. 2020இல் உலக அழகித் திருமதி பட்டம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த பெண் யார்? கரோலின் ஜூரி
17. கொழும்பு துறைமுகத் திட்டத்திற்கான நிதி உதவியை வழங்கிய நாடு எது?
சீனா. 269 ஹெக்டேயர் பரப்புக் கொண்ட நிலம் கொழும்புத் துறைமுகத்துடன் 2020 இல் இணைக்கப்பட்டுள்ளது.
18. இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்குவதற்காக 2020இல் உருவாக்கப்பட்ட சட்டம் எது?
இந்தியக் குடியுரிமைச்சட்டம்
19.13 வது சார்க் போட்டிகளில் இலங்கை எத்தனையாவது இடத்தைப் பெற்றது?
3ம் இடம் (2019 இல் இடம்பெற்றது)
20. தெரேசா மே பிரித்தானியப் பிரதமர் பதவியில் இருந்து ஏன் விலகினார்?
இவர் Brexit கொள்கையை நடைமுறைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியாவை விலக்கிக் கொள்ள முடியாத காரணத்தால் பதவி விலகினார்.
21. பிரித்தானியாவில் 2019 டிசம்பர் 13 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று
பிரதமராகத் தெரிவானவர் யார்?
வொரிஸ் ஜோன்சன், கென்சவேட்டிக் கட்சி சார்பாக இவர் Brexit கொள்கையை ஆதரித்தமையால் இவருக்கு வெற்றி கிடைத்தது.
22. 2019இல் Google தளத்தில் அதிகம் தேடப்பட்ட நாடு எது?
இலங்கை. காரணம் ஏப்ரல் 21 தீவிரவாதிகளின் தாக்குதல்.
23. அதிக விமான விபத்துக்களில் சிக்கியமையால் எவ் விமானங்கள் தயாரிக்கப்படுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது?
வொயிங் 737 max விமானங்கள். இவை ரஸ்யத் தயாரிப்பு விமானங்களாகும்.
24. அமெரிக்காவின் தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இந்தியர் யார்?
சேதுராமன் பஞ்சநாதன். இவர் தமிழ் நாட்டவர்.
25. சவுதி அரேபியாவின் ஜமால் கசுக்கி எனும் ஊடகவியலாளர் துருக்கியில் வைத்து சவுதி அரேபியத் தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். இதற்குக் காரணமான நபர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை யாது?
குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
26. இந்தியாவின் முதல் முப்படைத் தளபதி யார்?
பிபின் றொபர்ட். கடந்த 2019 டிசம்பரில் நியமிக்கப்பட்டார்.
27. சீனாவில் மரபணு மூலம் மனிதனை உருவாக்கிய பேராசிரியர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் யார்?
Jankui
28. ஈராக்கில் வைத்து அமெரிக்கப் படையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஈரானியத்தளபதி யார்?
காசிம் சூலேமானி, இச்சம்பவம் ஈரான், அமெரிக்க மோதலாக உருவெடுத்து ரஸ்யத் தலையீட்டால் தணிந்தது.
29. இச்சம்பவம் ஈரான். அமெரிக்க மோதலாக உருவெடுத்த போது ஈரான் அமெரிக்க விமானம் என நினைத்து எந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது?
MOE-737 உக்ரேன் விமானம், அதில் ஈரானியர் அதிகம் பயணித்திருந்தனர்.
30. 2020இல் சிறந்த கடவுச் சீட்டைக் கொண்ட நாடாகத் தெரிவான நாடு எது?
யப்பான், இதில் சிங்கப்பூர், தென்கொரியா என்பன அடுத்தடுத்த இடங்களைப் பெற்றன. இலங்கைக்கு 97வது இடம் கிடைத்தது.
31. பிரித்தானிய அரச குடும்பப் பொறுப்புக்களில் இருந்து விலகிய தம்பதியினர் யார்?
இளவரசர் ஹரி மேகன் தம்பதியினர்
32. 47 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிய தினம் யாது?
இவ்வறிவிப்பு 2020 ஜனவரி 31இல் லண்டன் நேரப்படி இரவு 11 மணிக்கு விடுக்கப்பட்டது. 2020 டிசம்பர் 31 முதல் தீர்மானம் நடைமுறைக்கு வரும்.
33. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் எத்தனையாவது மாநாடு செப்ரெம்பரில் காணொளித் தொழிநுட்பம் ஊடாக இடம்பெற்றது?
2020 75வது மாநாடு. இதில் 180 நாட்டுத்தலைவர்கள் காணொளித் தொழிநுட்பம் ஊடாக உரையாற்றினர்.
34. இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட பெண் யார்?
பிம்சானி ஜசிங்காராச்சி. இவர் சிறுவர் மற்றும் மகளீர் பணியகத்தைச் சேர்ந்தவர்.
35. அரசியல் யாப்புச் சபைக்குப் பதிலாக தற்போதைய ஜனாதிபதி 2020 இல் உருவாக்கியுள்ள அமைப்பு எது?
பாராளுமன்ற சபை
36. உலகின் சிறந்த அழகான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற நாடு எது?
கொஸ்டாரிக்கா, இலங்கை 32வது இடத்தைப் பிடித்தது.
37. 2020இல் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட கிரிக்கட் போட்டிகளில் சம்பியனான அணி எது?
பங்களாதேஸ், இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்றது.
38. 92 ஆண்டுகால ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆங்கிலம் அல்லாத திரைப்படத்திற்கு 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அத்திரைப்படம் எது?
பெரசைட் எனும் தென்கொரியத் திரைப்படம். இயக்குனர் போங் ஜோன் கோ
39. சிறந்த நடிகராக ஜோக்கர் படத்தில் நடித்த எந் நடிகருக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது?
வாக்கின் பீனிக்ஸ்
40. கருணைக் கொலைக்கான சட்டத்தை 2020இல் அங்கீகரித்த ஐரோப்பிய நாடு எது? போர்த்துக்கல்
41. அமெரிக்காவிற்கும், தலிபான் சமாதான தீவிரவாதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை 2020இல் எந்நாட்டில் ஆரம்பமானது?
கட்டார்
42. இலங்கையின் புதிய மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்?
W.D லக்ஸ்மன்
43. விம்ஸ்டெக் அமைப்பின் 2020 மாநாடு எங்கு இடம்பெற இருந்தது?
இலங்கை
43. ரஸ்யாவில் ஒருவர் இருமுறை மட்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டம் திருத்தப்பட்டுள்ளது. அச்சட்டம் எது?
அது ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதியாக வர முடியும்.
44. pandemic என்பதன் பொருள் யாது?
உலகில் ஒரே நேரத்தில் பரவும் மருந்து கண்டுபிடிக்கப்படாத தொற்று நோயாகும்.
45. வங்க தேசத்தின் தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானை கொலை செய்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர் யார்?
அப்துல் மஜேத் எனும் இராணுவ வீரர்
46. கொரோனா எனும் கோவிட் 19 நோய்க்கான தகவல்களை சரியாக வெளியிடும் அமெரிக்க பல்கலைக்கழகம் எது?
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ்
47. தென்னாசியாவில் 2020இல் ஏற்பட்ட சூறாவளி யாது?
Amphan - இது தாய்லாந்து பெயர்
48. அமெரிக்காவில் வெள்ளையினப் பொலிஸாரால் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்ட கறுப்பினத்தவர் யார்?
ஜோர்ஜ் ப்லொயிட் இதனால் அமெரிக்க மட்டுமன்றி பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
49. 2020இல் உலக சமாதான சுட்டியின் படி முதலிடம் பெற்ற நாடு எது?
ஐஸ்லாந்து
50. இந்திய, சீன நாடுகளுக்கு இடையே எவ் எல்லைப் பிரச்சினையால் யுத்தம் ஏற்பட்டுள்ளது?
கால்வான் பள்ளத்தாக்கு தொடர்பான சர்ச்சை
51. உலக சுகாதார அமைப்பிற்கு அதிக நிதியுதவி வழங்கும் எந்நாடு அவ் அமைப்பில் இருந்து விலகியுள்ளது?
ஐக்கிய அமெரிக்கா.
காரணம் - சீனாவுக்கு ஆதரவாக இவ்வமைப்பு நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டமையாகும்.
52. இவ்வருடம் இந்தியாவின் பிரபல கிரிக்கட் வீரர்கள் இருவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். அவர்கள் யார்?
மகேந்திரசிங் தோனி, சுரேஸ் ரெய்னா
53. இவ்வருடம் மொரிசியஸ் தீவிற்கு அருகில் விபத்துக்குள்ளான யப்பானியக் கப்பலின் பெயர் யாது?
wakashio
54. உலக சுகாதார ஸ்தாபனத்தில் தொற்று நோய் தொடர்பான பிரிவிற்குப் பொறுப்பான விஞ்ஞானி யார்?
சௌமியா சுவாமிநாதன்
55. அண்மையில் கொரொனாவால் மரணமாகிய முன்னாள் இந்திய ஜனாதிபதி யார்?
பிரணாப் முகர்ஜி
56. இலங்கையின் கிழக்குக் கடலில் தீ விபத்துக்குள்ளாகிய பனாமா நாட்டு எண்ணெய் கப்பல் எது?
M.D நியு டயமன்ட், இது இந்தியாவிற்கு சென்ற கப்பல் ஆகும்.
57. ஆபிரிக்க நாடொன்றின் கிரிக்கட் சபை ஒன்றின் மீது ஊழல் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. அந்நாடு எது?
தென்னாபிரிக்கா
58. அமெரிக்காவின் நவம்பர் 2020 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார்?
joe biden. ஜோ வைடன்
59. இலங்கையில் பிரபல நாடொன்றின் 3 பல்கலைக்கழகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அந்நாடு எது?
ரஸ்யா
61. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எத் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க உதவி வழங்க முன்வந்துள்ளது?
ரஜகல பிரதேச தொல்பொருட்கள்
62. யப்பானின் புதிய பிரதமராக 2020இல் பதவியேற்றவர் யார்?
yoshihide Suga . ஜோசிகிட் சுகா, 2020 செப்ரெம்பரில் தெரிவு
63. 2020இல் IPL போட்டிகள் எங்கு இடம்பெறுகின்றன?
ஐக்கிய அரபு இராச்சியத்தில்
64. 75 வது ஐக்கிய நாடுகள் சபையின் இணையவழி மாநாடு எத்நகரை மையப்படுத்தி இடம்பெற்றது?
நியுயோர்க்
65. சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மூடிய சிறைச்சாலை ஒன்று மீளவும் திறக்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அச்சிறைச்சாலை எது?
கண்டி போகம்பரைச் சிறைச்சாலை
66. சிறைக்கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் யாது?
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அதிகம் கைது இடம்பெறுகின்றமை.
67. இலங்கையில் நடைபெறுகின்ற குற்றங்களை செய்து முடிப்பதற்கு எந்நாட்டை அதிகம் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர்?
இந்தியாவை
69. இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் 02 தருக? மகாராஷ்டிரா(மும்பாய்)
தமிழ்நாடு (சென்னை)
70. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக இருந்து கொரோனா ஒழிப்புக்குப் பாடுபட்ட அனில் ஜெயசிங்க தற்போது எவ்வமைச்சின் செயலாளராக நியமிக்கப் பட்டுள்ளார்?
சுற்றாடல் அமைச்சு
71. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் எந்நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்?
சிங்கப்பூர்
72. சார்க் அமைப்பில் எழுத்தறிவு வீதம் உயர்மட்டத்தில் உள்ள இரு நாடுகள் எவை?
மாலைதீவு, இலங்கை
73. புதிய அரசியல் யாப்பை எழுத உருவாக்கப்பட்ட 09 பேர் கொண்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் யார்?
கலாநிதி அருளானந்தம் சர்வேஸ்வரன், பேராசிரியர் நஜீமா கமர்தீன்
74. இலங்கையின் தற்போதைய பிரதம நீதியரசர் யார்?
47 வது ஜயந்த ஜயசூரிய
75. இலங்கையின் தற்போதைய சட்டமா அதிபர் யார்?
46 வது சட்டமா அதிபர் - தப்புல டி லிவேரா
76. இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் யார்?
15 வது W.D லக்ஸ்மன்
77. இலங்கையின் பாராளுமன்ற சபாநாயகர் யார்?
மகிந்தா யாப்பா அபயவர்த்தன
78. இலங்கை அரசு 20 வது திருத்தத்தில் முன்வைத்து விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள முக்கிய இரு விடயங்கள் எவை?
1. கணக்காய்வாளர் நாயகம் பதவி நீக்கம்
2. இரட்டை பிரஜாவுரிமை அறிமுகம்
79. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோர் 90% குணமடைந்து சுகாதார நிலை சிறப்பாக உள்ள நாடு எது?
இலங்கை
80. 2020 ஜூலை மாத பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தெரிவான மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் எத்தனையாவது பிரதமர் ஆவார்?
28 வது
82. இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள நாடு எது?
ஐக்கிய அமெரிக்கா
83. கொரோனா பரவக் காரணம் சீனாவாகும் என்று குற்றஞ்சாட்டி வரும் உலகத் தலைவர் யார்?
டொனால்ட் ட்றம்ப்
84. கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட 03 நாடுகளைத் தருக.
1 - ஐக்கிய அமெரிக்கா
2 - இந்தியா
3 - பிறேசில்
85. தற்போதைய அரசு 1978 இரண்டாம் குடியரசு யாப்பிலுள்ள முக்கிய இரு சீர்திருத்தங்களை நீக்க முற்படுகின்றது. அவை எவை?
13 வது திருத்தம் 19 வது திருத்தம்
86. புதிய அரசியல் யாப்பு உருவாக்கக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
மகிந்தா யாப்பா அபயவர்த்தன - சபாநாயகர்
87. இலங்கையில் ஒரு நாளைக்கு 64 பேர் புற்றுநோயால் பீடிக்கப்படுவதுடன், 38 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர். 64 பேரில் 26 பேர் எப் புற்றுநோயால் பீடிக்கப்படுகின்றனர் என சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிடுகின்றது?
வாய்ப்புற்று நோய்
88. பலாலி விமான நிலையம் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு எப்பெயரில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது?
யாழ்ப்பாண விமான நிலையம்
89. 2009 இல் பாக்கிஸ்தானின் கராச்சி நகரில் இலங்கை கிரிக்கட் அணி மீது தீவிரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்ட பின்பு அங்கு தடைப்பட்டிருந்த கிரிக்கட் போட்டிகள் ஆம் ஆண்டு எவ்வணி அங்கு சென்று விளையாடியதால் மீண்டும் ஆரம்பமானது?
2019 - இலங்கை
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2019
1. பாக்கிஸ்தானின் புதிய பிரதமராக 2018இல் தெரிவானவர் யார்?
இம்ரான் கான் (22 வது பிரதமர்)
2. 2018இல் மரணமான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் யார்?
கோபி அனான். இவர் ஆபிரிக்காவின் கானா நாட்டவர்
3. இந்தியாவில் 2018இல் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய மாநிலம் எது?
கேரள மாநிலம்
4. 5வது BIMSTEC (விம்ஸ்டக்) அமைப்பின் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
இலங்கையில்
5. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சப்த விளையாட்டில் வெற்றி பெற்ற இந்திய வீராங்கனை யார்?
சொப்னா வர்மன்
6. 2018இல் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை மாநாடு எத்தனையாவது மாநாடாகும்?
73 வது
7. 2018 உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக தெரிவானவர் யார்?
லூகோ மொட்றிச் - குறோசிய நாட்டவர்
8. துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்ட சவுதி அரேபிய ஊடகவியலாளர் யார்?
ஜமால் கசுக்கி
9. 5வது உலக இணையத்தள மாநாடு எங்கு நடைபெற்றது?
சீனாவில்
10. ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தற்போதைய நிரந்தரப்பிரதிநிதி யார்?
ஹனா சிங்கர்
11. இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் அந்தஸ்துப் பெற்ற 2வது வீரரான இவர் 2018 இறுதியில் கிரிக்கட் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் யார்?
ரங்கன ஹேரத்
12. 2018இல் ஓக்டோபர் மாதத்தில் உயிரிழந்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி யார்?
ஜோர்ஜ் வுஸ்
13. தீராத நோயால் மரணமடைய இருந்த 7வயது சிறுவன் அவுஸ்ரேலிய கிரிக்கட் அணியின் உபதலைவராக நியமிக்கப்பட்டு பின்பு அவன் உயிரிழந்தான். அவரின் பெயர் என்ன?
ஆச்சி சீலர்
14. தாய்லாந்தில் இடம்பெற்ற உலக ஆணழகப் போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையர் யார்?
லூசியன் புஸ்பராஜ்
15. 2019இல் இலங்கையின் பயிர்ச்செய்கை நாசமடையச் செய்த புழுவின் பெயர் யாது?
சேனாப்புழு அல்லது படைப்புழு
16. இலங்கையின் தேசிய மரபுரிமையாக அறிமுகம் செய்யப்பட்ட நூல் உலக மரபுரிமைக்காக யுனெஸ்கோவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. அது எது?
திரிபீடகம்
17. ஒரு நாள் கிரிக்கட் போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர் யார்?
திஸர பெராரா
18. இலங்கையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் இலக்கம் யாது?
1984
19. இந்தியாவில் 2019இல் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யார்?
பிரணாப் முகர்ஜி
20. பாக்கிஸ்தானில் முதல் பெண் நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் யார்?
இந்துப் பெண்ணான சுமன்குமாரி
21. தென்னமெரிக்க நாடொன்றின் ஜனாதிபதியின் நியமனத்தை அமெரிக்க உட்பட ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தன. அவரது பெயர் என்ன?
வெனிசுவெலா நாட்டவரான நிக்கலஸ் மதுரோ
ஏற்றுக்கொண்ட பிரதிநிதி யுவான் குய்டோ(எதிர்கட்சித்தலைவர் 22. உலகின் நிலையான அபிவிருத்தி மாநாடு 2019இல் எங்கு இடம்பெற்றது?
இந்தியாவில்
23. இலங்கையணி வெளிநாட்டு அணியொன்றை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து டெஸ்ட் கிரிக்கட்டில் சாதனை படைத்தது. அந்நாடு எது?
தென்னாபிரிக்கா
24. உலகப் பாதுகாப்பு மாநாடு 2019இல் எங்கு இடம்பெற்றது?
போலந்தின் தலைநகரான வார்சோ நகரில்
25. 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து 1 வது விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன் பெயர் யாது?
இராவணா I
26. இந்தியாவின் புல்வோமா தாக்குதலை அடுத்து பாக்கிஸ்தானில் பதில் தாக்குதலை மேற்கொண்ட இந்திய விமானி பாக்கிஸ்தானில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். அவரது பெயர் என்ன?
தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிநந்தன்
27. மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் காபன் 14 பரிசோதனைக்காக எந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது?
அமெரிக்காவின் புளோரிடா மாநில தீற்றா நிறுவனத்துக்கு
28. உக்ரேனின் புதிய அதிபராகத் தெரிவான நகைச்சுவை நடிகர் யார்?
வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி
29. 2019.04.21 அன்று இலங்கையில் ISIS அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இவ்வமைப்பின் விரிவாக்கப் பெயர் யாது?
Islamic State of Irag and Syria
30. 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகள் எங்கு இடம்பெற்றன?
இங்கிலாந்து, வேல்ஸ்
31. 2019 இல் இந்தியாவைத் தாக்கிய சூறாவழியின் பெயர் யாது?
ஃபோனிப் புயல்
32. 2019.04.21 அன்று இலங்கையில் ISIS அமைப்பு மேற்கொண்ட தாக்குதலில் பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இதில் எந்நாட்டு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்?
சீனாவைச் சேர்ந்த 04 விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.
33. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஸ்யத் தலையீடு தொடர்பாக விசாரிக்கும் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் பெயர் யாது?
ரொபர்ட் முல்லர் அறிக்கை
34. இலங்கையின் 47வது பிரதம நீதியரசர் யார்?
ஜயந்த ஜயசூரிய
35. பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் யார்?
Patricia Scotland இங்கிலாந்து நாட்டுப் பெண்மணி
36. டொனால்ட் றம்ப் அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி ஆவார்?
45 வது
37. இலங்கையின் 14வது மத்திய வங்கி ஆளுநர் யார்?
இந்திரஜித் குமாரசாமி
38. இலங்கையின் 46வது சட்டமா அதிபர் யார்?
தப்புல டி லிவேரா
39. இலங்கையில் இந்திய அரசால் வழங்கப்பட்ட அவசர அம்புலன்ஸ் சேவையின் தொலைபேசி இலக்கம் யாது?
1990
40. கட்டுநாயக்க சூரியசக்தி மின்நிலைய நிர்மாணிப்புக்கு உதவிய நாடு யாது?
யப்பான்
41. தெற்காசியாவில் மிகப்பெரிய சுரங்கப்பாதையைக் கொண்ட நீர்ப்பாசனத்திட்டம் இலங்கையில் உருவாக்கப்பட்டது. அது எது?
மொரஹகந்த திட்டம்
42. சூரியனை நெருங்கி ஆய்வு செய்யும் விண்கலம் 2018இல் நாசாவால் அனுப்பப்பட்டது. எது?
பாக்கர் சோலர் (உயிருடன் உள்ள விஞ்ஞானியின் பெயர்)
43. இந்தியாவில் 2018 இல் இறந்த முன்னாள் இந்தியப்பிரதமர் யார்?
அற்றல் விஹாரி வாஜ்பேய் (மூன்று முறை பிரதமராக பதவி வகித்துள்ளார்)
44. 2018 இல் ஆசிய மெய்வல்லுநர் போட்டிகள் எங்கு இடம்பெற்றன?
இந்தோனேசியா
45. யப்பானின் பாதுகாப்பு அமைச்சர் முதன்முறையாக 2018 இல் விஜயம் மேற்கொண்டார். அவர் யார்?
எஸ்னோவிக் ஜொனேசிரா (Esnobic jonosira)
46. இந்தோனேசியாவில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதலிடம் பெற்றநாடு எது?
சீனா
47. 2018இல் தென்கொரியாவில் இடம்பெற்ற உலக கரம் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்து சம்பியனான அணி எது?
இலங்கை
48. 73வது ஐ.நா பொதுச்சபை மாநாட்டில் தலைமை வகித்த நாடு எது?
ஈர்க்குவடோர்
49. ஆசிய உலகப் பொருளாதார மாநாடு 2018இல் எங்கு இடம்பெற்றது?
வியட்நாம்
50. நெல்சன் மண்டேலா சமாதான ஞாபகர்த்த மாநாடு எங்கு இடம்பெற்றது? நியுயோர்க்
51. இலங்கையின் 37வது சட்டமா அதிபராகவும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாக பதவி வகித்து அண்மையில் மரணித்த இலங்கையர் யார்?
ஷிப்லி அஸிஸ்
52.19 வயதுக்குட்பட்ட ஆசியக்கிண்ண கிரிக்கட் போட்டியில் சம்பியனான அணி எது?
இந்தியா
53. சர்வதேச பொலிஸ்(இன்டர்போல்) தலைவர் ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் கைதுசெய்யப்பட்ட சீன நாட்டவர் யார்?
மெங் கொங் வே(Meng hong wei)
54. மகாத்மா காந்தியின் 150வது நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கையின் மாத்தளை நகரில் காந்தியின் சிலை திறந்து வைக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் எவ்விடத்தில் தொல்பொருட்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது?
குஜராத்
55. பிரான்ஸ் முன்னாள் பிரதமர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 2018 இறுதிக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டார். அவர் யார்?
நிக்கலஸ் சாக்கோஷி
56. ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவிற்கான பிரதிநிதி அண்மையில் பதவி விலகினார். அவர் யார்?
நிக்கி கெலி
57. அயர்லாந்தின் புதிய ஜனாதிபதி யார்?
மைக்கல் ஹிக்கின்ஸ்
58. 2018 இறுதியில் இலங்கை, இந்தியாவை தாக்கிய சூறாவழி எது?
கஜா சூறாவழி
59. மகளீருக்கான சர்வதேச Twenty20 கிரிக்கட் போட்டியில் சம்பியனான அணி யாது?
அவுஸ்ரேலியா.
தோல்வி - இங்கிலாந்து
60. குறைந்தளவு ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் விளையாடி 10000 ஓட்டங்களைப்
பெற்றுக்கொண்ட வீரர் யார்?
வீராத் கோலி
61. அண்மையில் திமிங்கில வேட்டைக்கு அனுமதி வழங்கி சர்வதேச சர்ச்சைக்கு உள்ளான நாடு எது?
யப்பான்
62. சீனாவால் 2019இல் விண்ணுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் எது?
சாங் - இ- 4
63. பங்களாதேஸில் 2019 இல் 3 வது முறையாக பிரதமராக தெரிவாகியிருக்கும் பெண் யார்?
சேக் ஹசினா ஆளும் அவாம்லீக் கட்சி
64. அமெரிக்கா நேட்டோ அணியில் சேர்த்துக்கொள்வதாகக் கூறிய ஆசிய நாடு எது?
பாக்கிஸ்தான்
65. சர்வதேச நெல்லாராய்ச்சி நிலையத்தால் நெல்லினம் ஒன்றுக்கு இலங்கைத் தலைவரின் பெயர் சூட்டப்பட்டள்ளது. அவர் தலைவர் யார்?
மைத்திரிபால சிறிசேன
66.2019இல் இந்தியக் குடியரசு தினத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர் யார்?
சிரில் சமபோஷ - தென்னாபிரிக்க ஜனாதிபதி
67. 2019 ஆம் ஆண்டு 15 வருட பூர்த்தியைக் கொண்டாடிய சமூக வலைத்தள நிறுவனம் எது?
பேஸ் வுக்
68. 15 வருட காலமாக செவ்வாயை ஆய்வு செய்து செயலிழந்த நாசாவின் விண்கலம் எது?
ஒப்பச்சுனிட்டி ரோவர்
69. அண்மையில் அமெரிக்காவால் வரிச்சலுகை நீக்கப்பட்டு அமெரிக்காவின் உறவுடன் விரிசல் ஏற்பட்ட இரு நாடுகளும் எவை?
சீனா
இந்தியா
70. அண்மையில் விபத்துக்குள்ளாகி சர்வதேச விசனத்திற்கு ஆளான விமானவகை எது?
வோயிங் விமானங்கள் (இந்தோனேசியா, எதியோப்பிய விபத்துக்கள்)
71. ஐக்கிய நாடுகளின் 4வது சர்வதேச சுற்றாடல் மாநாடு அண்மையில் எங்கு இடம்பெற்றது?
கென்யா
72. அமெரிக்க இசை நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் இரு பியானோக்களை இசைத்து சாதனை செய்த சென்னையைச் சேர்ந்த பியானோக் கலைஞனான சிறுவன் யார்?
லிவியன் நாதஸ்வரம்
73. சூரியமண்டலத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் தொகையாது?
4000
74. 27வது ஒலிம்பிக் போட்டிகள் 2020இல் எங்கு இடம்பெறவுள்ளது?
யப்பான் டோக்கியோ நகரில்
75. அமெரிக்காவால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஷர்மன் PS 626 கப்பலுக்கு வைக்கப்பட்ட பெயர் என்ன?
கஜபாகு
76. ஆசிய நாகரிகங்கள் தொடர்பான மாநாடு 2019இல் எங்கு இடம்பெற்றது? சீனாவில், இதில் 47 நாடுகள் பங்கேற்பு
77. இலங்கையின் 30 வருடகால யுத்த பூர்த்தியை முன்னிட்டு அரசு வெளியிட்ட நூல் எது?
உத்தமாசார்ய
78. அவுஸ்ரேலியாவின் புதிய பிரதமராக 2019 இல் தெரிவானவர் யார்?
ஸ்கொட் மொறிசன்
79. இலங்கையில் வாகனப் புகையால் வளி மாசடையும் வீதம் யாது?
60%
80. இலங்கையில் அதிகம் விபத்து இடம்பெறும் நாள் எது?
வெள்ளி
81. 2019 ஆம் ஆண்டு 300 ஓட்டங்களுக்கு மேல் அதிக தடவைகள் பெற்று சாதனை படைத்த அணி எது?
இங்கிலாந்து
82. 22வது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளது?
கட்டாரில்
83. ஆசியப் பாதுகாப்பு மாநாடு அண்மையில் எங்கு நடைபெற்றது?
தஜிஹீஸ்தான்
84. ஓமோன் கடற்பரப்பில் அண்மையில் தாக்கப்பட்ட இரு நாட்டுக் கப்பல்கள் எவை?
யப்பான், நோர்வே (அமெரிக்கா ஈரான் மீது குற்றச்சாட்டு பாதிக்கப்பட்ட நாடுகள் எதிர்ப்பு)
85. ஐந்து வருடங்கள் முயன்று வேகமாக ஓடக்கூடிய காரை இலங்கைப் பல்கலைக்கழக தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கியுள்ளது. அப்பல்கலைக்கழகம் எது?
மொரட்டுவ
86. சர்வதேச ஒலிம்பிக் விழா இலங்கையில் எங்கு கொண்டாடப்பட்டது?
மாத்தறையில்
87. G.20 மாநாடு யப்பானின் எந்நகரில் அண்மையில் இடம்பெற்றது?
ஒசாகா நகரில்
88. 12 வது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் அரையிறுதிக்கு தெரிவான அணிகள் எவை?
இந்தியா - நியுசிலாந்து(வெற்றி)
அவுஸ்ரேலியா - இங்கிலாந்து (வெற்றி)
89. 12 வது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் அதிக சதம் பெற்று சாதனை படைத்தவர் யார்?
ரோகித் சர்மா (இந்தியா)
90. 13 வது உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் 20023 இல் எங்கு இடம்பெறும்? இந்தியா
இறுதிப் போட்டி - நியுசிலாந்து, இங்கிலாந்து
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் இலங்கை மாணவர்களுக்கான பொது அறிவு பயிற்சி வினாக்கள் - 2018
1. 25 வது பொதுநலவாய மகாநாடு எங்கு நடைபெறவுள்ளது?
பிரித்தானியாவின் லண்டன் நகரில்
2. கியுபாவின் கஸ்ரோ யுகத்திற்குப் பின் ஜனாதிபதி பதவி பெற்றவர் யார்? மிகுவல் டயஸ் கெனல்
3. 2018 இல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?
இந்தோனேசியாவில்
4. இந்திய அரசால் தங்க விருது கொடுத்து கௌரவிக்கப்பட்ட இலங்கையின் பிரபல சிங்கள இயக்குனர் அண்மையில் இறந்தார். அவர் யார்?
லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்
5. தனது நீண்ட கால பகையை கைவிடுவதற்கு அறிகுறியாக எதிரிநாட்டின் நேரத்திற்கு சமமாக தனது நேரத்தை மாற்றிக் கொண்ட ஆசிய நாடு எது?
வடகொரியா
6. 2020 இல் ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெறவுள்ளன?
யப்பானில் டோக்கியோ நகரில்
7. 2018இல் உள்ளூராட்சித் தேர்தல் எம்முறையில் நடைபெற்றது?
வட்டாரத் தேர்தல் முறை (தொகுதிவாரி 60%. விகிதாசாரம் 40%)
8. இந்தியாவின் குடியரசுத்தலைவர் யார்?
ராம் நாத் கோவிந்த்
9. மியன்மாரில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு பங்களாதேஸில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் குழுவினர் யார்?
ரோகின்யோ (Rohingya) முஸ்லிம்கள்
10. ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கிகரித்து பலஸ்தீனத்தில் வன்முறைகள் அதிகரிக்க காரணமான நாடு எது?
அமெரிக்கா
11. இலங்கையின் ராஜகிரிய மேம்பாலம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. அதற்கு நிதியுதவி வழங்கிய நாடு எது?
ஸ்பெயின்
12. இரு சக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் நாடு யாது?
சீனா
13. 21வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் எங்கு இடம்பெற்றன?
அவுஸ்ரேலியா
14. 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் 4வது முறையாக 2018இல் சம்பியனான அணி யாது?
இந்தியா
15. இலங்கையில் 2018 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட மிகப் பெரிய நீர்ப்பாசனத்திட்டம் எது?
மொறகஹந்த திட்டம்
16. 2018இல் இலங்கையின் ஒலிம்பிக் குழுவின் தலைவராக நியமனம் பெற்றவர் யார்?
சுரேஸ் சுப்ரமணியம்
17. 90வது ஒஸ்கார் விருது பெற்ற சிறந்த திரைப்படம் எது?
The shape of water
18. 2018 இல் உலகின் முதல் பணக்ககாரர் யார்?
ஜெப் வேசஸ் (Jeff Bezos) - அமெரிக்க நாட்டவர்
19. 2018 இல் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் எங்கு நடைபெறும்?
ரஸ்யாவின் மொஸ்கோ நகரில்
20. இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதி 2018இல் மரணமானார். அவர் யார்?
அநா மக்குவலி (Una Maccully)
21. அண்மையில் மரணமான இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படும் இங்கிலாந்து விஞ்ஞானி யாது?
ஸ்ரீபன் ஹாங்கிங்
22. இலங்கையில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் நீதியமைச்சர் யார்?
தலதா அத்துக்கோறள
23. சர்வதேச சூரியசக்தி மகாநாடு இந்தியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய நாடுகள் எத்தனை?
131
24. தனது ஆயட்காலம் முழுவதும் பதவி வகிப்பதற்கான சட்டத்தை உருவாக்கியுள்ள சீன ஜனாதிபதி யார்?
ஜி சிங் பிங்
25. அமெரிக்காவிற்கும், வட கொரியாவுக்குமான வரலாற்று சந்திப்பு 2018இல் எந்நாட்டில் இடம்பெறவுள்ளது?
சிங்கப்பூரில்
நன்றி.
0 Comments