தமிழ் இலக்கணம் - பெயர்ச்சொல் - TAMIL GRAMMAR - NOUN


பெயர்ச்சொல்


தமிழ் இலக்கணம் - பெயர்ச்சொல் - TAMIL GRAMMAR - NOUN


ஐம்பொறிகளுக்கும் மனதிற்கும் விடயமாகிய பொருளை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.

பெயர்ச்சொல்லின் பண்புகள்
வேற்றுமை உருபை ஏற்கும்.
பேரடைகளை ஏற்கும்.
ஆக, ஆய் ஆகிய விகுதிகளைப் பெற்று வினையடையாக வரும்.

பெயர் சொல்லின் வகைகள்

உணர்த்தும் பொருள் அடிப்படையில் - 07
இட வேறுபாட்டின் அடிப்படையில் - 03
பெயர் இடப்படும் அடிப்படையில் - 03
அமைப்பு அடிப்படையில் - 08
ஏனையவை - 06

உணர்த்தும் பொருள் அடிப்படையில்

உணர்த்தும் பொருள் அடிப்படையில் பெயர்ச்சொல் 07 வகைப்படும்.
பொருட்பெயர்
பண்புப்பெயர்
சினைப் பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்

பொருட்பெயர்

பொருளை உணர்த்தும் பெயர்கள் பொருட்பெயர்கள் எனப்படும்.

உதாரணம்
மக்கள்
கதிரை
மாடு

பண்புப்பெயர்

பண்பை உணர்த்தும் பெயர்கள் அனைத்தும் பண்புப்பெயர் எனப்படும்.

உதாரணம்
வட்டம்
கோபம்
அழகு

சினை பெயர்

உறுப்பை உணர்த்தும் பெயர்கள் சினைப் பெயர் எனப்படும்.

உதாரணம்
தலை
கண்
தண்டு

இடப்பெயர்

இடத்தை உணர்த்தும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

உதாரணம்
உலகம்
நாடு
பாடசாலை

காலப்பெயர்

காலத்தை உணர்த்தும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

உதாரணம்
நேற்று
கோடை
மாசி

தொழிற்பெயர்

வினையடியாகப் பிறந்து வினை நிகழ்வதையும் நிகழாமையையும் உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.

இது மூன்று வகைப்படும்.
காலம் காட்டும் தொழிற்பெயர்
திர்மறை தொழிற்பெயர்.
காலம் காட்டாத தொழிற்பெயர்

காலம் காட்டும் தொழிற்பெயர்

வினையடி + கால இடைநிலை + தொழிற்பெயர் விகுதி என்பவற்றைக் கொண்டு காலத்தை காட்டும் பெயர் காலம் காட்டும் தொழிற்பெயர் எனப்படும்.

இது மூன்று வகைப்படும்.
நிகழ் காலம் காட்டும் தொழில் பெயர்
எதிர்காலம் காட்டும் தொழிற்பெயர்
இறந்தகாலம் காட்டும் தொழிற்பெயர்

நிகழ் காலம் காட்டும் தொழிற்பெயர்

வினையடி + நிகழ்கால இடைநிலை + தொழிற்பெயர் விகுதி என்பவற்றைக் கொண்டு வினை நிகழ்ந்து கொண்டு இருப்பதை காட்டும் பெயர் நிகழ்காலம் காட்டும் தொழில் பெயர் எனப்படும்.

உதாரணம்
போகின்றது
நடக்கிறது
நடவாநின்றது

எதிர்காலம் காட்டும் தொழிற்பெயர்

வினையடி + எதிர்கால இடைநிலை + தொழிற்பெயர் விகுதி என்பவற்றை கொண்டு வினை நிகழ இருப்பதை காட்டும் பெயர் எதிர்காலம் காட்டும் தொழில் பெயர் எனப்படும்.

உதாரணம்
நடப்பது
வருவது

இறந்த காலம் காட்டும் தொழில் பெயர்

வினையடி + இறந்தகால இடைநிலை + தொழிற்பெயர் விகுதி என்பவற்றைக் கொண்டு வினை நிகழ்ந்து முடிப்பதை காட்டும் பெயர்  இறந்தகால காட்டும் தொழில் பெயர் எனப்படும்.

உதாரணம்
சென்றது
தின்றது
உண்டது
போனது
இடிந்தது

காலம் காட்டாத தொழில் பெயர்

வினையடி + தொழிற்பெயர் விகுதி என்பவற்றைக் கொண்டு காலத்தை காட்டாத பெயர் காலம் காட்டாத தொழில் பெயர் எனப்படும்.

உதாரணம்
ஆடுதல்
பாடுதல்
படித்தல்

எதிர்மறை தொழிற்பெயர்

வினையடி + எதிர்மறை இடைநிலை + தொழிற்பெயர் விகுதி என்பவற்றைக் கொண்டு வினை நிகழாமையை உணர்த்துவது எதிர்மறை தொழிற்பெயர் எனப்படும்.

உதாரணம்
வராமை
வராதது
பாடாதது
சிறியாமை
படியாமை

வினையால் அணையும் பெயர்

வினையடியாகப் பிறந்து செயலையும் காலத்தையும் கருத்தாவையும் உணர்த்தும் பெயர் வினையாலணையும் பெயர் எனப்படும்.

வினையாலணையும் பெயர் கருத்தாவை சுட்டி நிற்கும்.

உதாரணம்
வந்தவன்
பாடியவன்
வந்தது
கண்டவர்
பாடியவர்கள்

ஓன், ஓர் ஆகிய விகுதிகளை பெற்றும் வினையாலணையும் பெயர் வரும்.

உதாரணம்
வந்தோம்
வந்தோர்

வினையாலணையும் பெயர் வினைமுற்று + வேற்றுமை உருபு என்பவற்றைக் கொண்டு உருவாக்கப்படும்.

உதாரணம்
வந்தானை
வந்தோரால்
ருந்தானை

இட வேறுபாட்டின் அடிப்படையில்


இட வேறுபாட்டின் அடிப்படையில் பெயர்ச்சொல் 03 வகைப்படும்.

தன்மை  பெயர்

முன்னிலை  பெயர்
படர்க்கை பெயர்

தன்மை  பெயர்

பேசுவோம்  தன்னை குறிப்பிடும் பெயர் தன்மை பெயர் எனப்படும்.

தன்மை பெயர் 2  வகைப்படும்.
தன்மை ஒருமை பெயர்
தன்மை  பன்மை  பெயர்

தன்மை ஒருமை பெயர் 

தன்மை இடத்தில்  ஒருவரை குறிப்பது  தன்மை ஒருமை பெயர் எனப்படும்.

உதாரணம்
நான்

தன்மை  பன்மை பெயர்

தன்மை இடத்தில்  பலரை குறிப்பது  தன்மை பன்னை பெயர் எனப்படும்.

உதாரணம் 
நாங்கள்
நாம்

தன்மை  பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.

உதாரணம்
நான் + ஐ = என்னை
நாங்கள் +  இன் = எங்களின்
நாம் + ஆல் =  எம்மால்

தன்மை  பெயர்கள் 2  வகைப்படும்.
உளப்பாட்டுத் தன்மை பன்மை
உளப்படுத்தா தன்மை பன்மை

உளப்பாட்டுத் தன்மை பன்மை

பேசுவோன் கேட்போனையும் உள்ளடக்கி ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்.

உதாரணம்
நாம்
நம்

உளப்படுத்தா தன்மை பன்மை

பேசுவோன் கேட்போனை உள்ளடக்காமல் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்படுத்தா தன்மைப் பன்மை எனப்படும்.

உதாரணம்
நாங்கள்
எங்கள்

முன்னிலை  பெயர்

கேட்போனை சுட்டும் பெயர் முன்னிலை பெயர் எனப்படும்.

முன்னிலை பெயர் 2  வகைப்படும்.
முன்னிலை ஒருமை பெயர்
முன்னிலை  பன்மை  பெயர்

முன்னிலை  ஒருமை பெயர்

முன்னிலை  இடத்தில்  ஒருவரை குறிப்பது  முன்னிலை ஒருமை பெயர் எனப்படும்.

உதாரணம்
நீ 

முன்னிலை  பன்மை பெயர்

முன்னிலை இடத்தில்  பலரை குறிப்பது  முன்னிலை பன்னை பெயர் எனப்படும்.

உதாரணம் 
நீங்கள்

முன்னிலை பெயர்கள்  வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.

உதாரணம்
நீ + ஐ = உன்னை
நீங்கள் + ஆல் =  உங்களால்

டர்க்கை பெயர்

பேசப்படும் பொருட்கள் படர்க்கை பெயர் எனப்படும்.

தன்மை , முன்னிலை தவிர்ந்த பெயர்கள் அனைத்தும் படர்க்கை பெயர்களுக்குள் அடங்கும்.

படர்க்கை பெயர் 2  வகைப்படும்.
படர்க்கை ஒருமை பெயர்
படர்க்கை  பன்மை  பெயர்

படர்க்கை  ஒருமை பெயர் 

படர்க்கை  இடத்தில்  ஒருவரை குறிப்பது  படர்க்கை ஒருமை பெயர்எனப்படும்.

உதாரணம்
அது
அவன்
அவள்

படர்க்கை   பன்மை பெயர்

படர்க்கை இடத்தில்  பலரை குறிப்பது  படர்க்கை பன்னை பெயர் எனப்படும்.

உதாரணம் 
அவர்
அவை

படர்க்கையில் தன்மையை  குறிக்கும்  பெயர் படர்க்கை தற்சுட்டு பெயர் எனப்படும்.

உதாரணம்
தம் - அவர் தம் வரலாற்றை கூறினார்.
தாம் -  அவர் தாமாகவே வந்தார்.
தன் -  அவர் தன்னை அழகுபடுத்தினார்.
தான் - அவர்  தானாகவே  எழுந்தார்.


பெயர் இடப்படும் அடிப்படையில்


பெயர் இடப்படும் அடிப்படையில் பெயர்ச்சொல் 03 வகைப்படும்.

இடுகுறிப்பெயர்

காரண இடுகுறிப்பெயர்

காரணப்பெயர்


இடுகுறிப் பெயர்


ஒரு காரணமும் கருதாது தொண்டு தொட்டு ஒரு பொருளைக் குறிக்க பயன்படும் பெயர் இடுகுறிப் பெயர் எனப்படும்.


இது இரண்டு வகைப்படும்.

இடுகுறிப் பொதுப்பெயர்

இடுகுறி சிறப்பு பெயர்


இடுகுறிப் பொதுப்பெயர்


ஒரு காரணமும் கருதாது தொண்டு தொட்டு ஒரு கூட்டத்தை குறிக்க பொதுவாக பயன்படும் பெயர் இடுகுறிப் பொதுப்பெயர் எனப்படும்.


உதாரணம்

நிலம்

நீர்

காற்று

மண்


இடுகுறி சிறப்பு பெயர்


ஒரு காரணமும் கருதாது தொண்டு தொட்டு ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிக்க சிறப்பாக பயன்படும்பெயர் இடுகுறி சிறப்பு பெயர் எனப்படும்.


உதாரணம்

சேற்று நிலம்

மழைநீர்

தென்றல் காற்று


காரணப்பெயர்


ஏதேனும் ஒரு காரணம் கருதி ஒரு பொருளைக் குறிக்க பயன்படும் பெயர் காரணப்பெயர் எனப்படும்.


இது இரண்டு வகைப்படும்.

காரண பொது பெயர்

காரண சிறப்பு பெயர்


காரணப் பொதுப்பெயர்


ஏதேனும் ஒரு காரணம் கருதி ஒரு கூட்டத்தை குறிக்க பயன்படும் பொதுவான பெயர் காரண பொது பெயர் எனப்படும்.


உதாரணம்

பறவை - பறப்பதால்

அணி - அணிவதால்


காரண சிறப்பு பெயர்


ஏதேனும் ஒரு காரணம் கருதி ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிக்க பயன்படும் சிறப்பான பெயர் காரண சிறப்பு பெயர் எனப்படும்.


உதாரணம்

மரங்கொத்தி - மரத்தைக் கொத்துவதனால்

மண்வெட்டி - மண்ணை வெட்டுவதனால்


காரண இடுகுறிப்பெயர்


காரணம் கருதிய பொழுது காரணப் பெயராகவும் அக்காரணம் கருதாத பொழுது இடுகுறிப் பெயராகவும் நின்று பொருளை உணர்த்தும் பெயர் காரண இடுகுறிப் பெயர் எனப்படும்.


உதாரணம்


முள்ளி

காரணப்பெயர் - முள்ளிருக்கும் அனைத்து மரங்களும்

இடுகுறிப்பெயர் - முள்ளிருக்கும் ஒரு செடியை குறிக்கும்


கறங்கு

காரணப்பெயர் - காற்றில் ஆடும் அனைத்துப் பொருட்களும்

இடுகுறிப்பெயர் - சிறுவர் விளையாடும் ஒரு உபகரணத்தை குறிக்கும்


நாற்காலி

காரணப்பெயர் - 04 கால்கள் இருக்கும் அனைத்து உபகரணங்களும்

இடுகுறிப்பெயர் - நாம் இருப்பதற்கு பயன்படும் ஒரு உபகரணத்தை குறிக்கும்


அமைப்பு அடிப்படையில்


அமைப்பு அடிப்படையில் பெயர் சொற்கள் 08 வகைப்படும்.

கூட்டு பெயர்

தனி பெயர்

உயிர் பெயர்

உயிரில் பெயர்

நுண்பொருள் பெயர்

ருப்பொருள் பெயர்

சாதாரண பெயர்

இயற்கை பெயர்


கூட்டு பெயர்


இரண்டு அல்லது பல சொற்களை இணைத்து உருவாக்கப்படும் பெயர் கூட்டு பெயர் எனப்படும்.


இது மூன்று வகைப்படும்.

பெயர் + பெயர் = கூட்டு பெயர்

வினை + பெயர் = கூட்டு பெயர்

பெயர் + பெயர் + பெயர் = கூட்டு பெயர்


பெயர் + பெயர் = கூட்டு பெயர்


உதாரணம்

பாடசாலை = பாடம் + சாலை

வானொலி = வான் + ஒளி

புகைவண்டி = புகை + வண்டி


வினை + பெயர் = கூட்டு பெயர்


உதாரணம்

சூடு சோறு = சுடு + சோறு

சுடுகாடு = சுடு + காடு

எழுதுகோல் = எழுது + கோல்

கட்டுரை = கட்டு + உரை


பெயர் + பெயர் + பெயர் = கூட்டு பெயர்


உதாரணம்

பல்கலைக்கழகம் = பல் + கலை + கலகம்

மின்சார நிலையம் = மின் + சாரம் + நிலையம்


தனி பெயர்


ஒரு சொல்லாய் நின்று பொருளை உணர்த்தும் பெயர் தனி பெயர் எனப்படும்.


உதாரணம்

பணம்

நோய்

மாடு


உயிர் பெயர்


உயிர் உள்ளவற்றை உணர்த்தும் பெயர் உயிர் பெயர் எனப்படும்.


உதாரணம்

ஆடு

மாடு

மரம்


உயிரில் பெயர்


உயிரற்ற சடப் பொருளை குறிக்க பயன்படும் பெயர் உயிரில் பெயர் எனப்படும்.


உதாரணம்

கதிரை

மேசை

புத்தகம்


இயற்கை பெயர்


இயற்கையாக உருவான பொருட்களை குறிக்கும் பெயர் இயற்கை பெயர் எனப்படும்.


உதாரணம்

நீர்

நிலம்


நுண்பொருள் பெயர்


அறிவின் துணை கொண்டு உய்த்துணரக்கூடியவற்றை குறிக்கும் பெயர் நுண்பொருள் பெயர் எனப்படும்.


உதாரணம்

சிந்தனை

கோபம்

வெறுப்பு


ருப்பொருள் பெயர்


எமக்கு கண்ணுக்குத் தென்படக்கூடிய பொருட்கள் அனைத்தும் பருப்பொருள் பெயர் எனப்படும்.


உதாரணம்

வீடு

கதிரை

மேசை


சாதாரண பெயர்


நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய பெயர்கள் சாதாரண பெயர் எனப்படும்.


உதாரணம்

இரவு

நாடு

பகல்


ஏனையவை


ஆகுபெயர்

அளவுப் பெயர்

அளவைப் பெயர்

ஆக்கப் பெயர்

வினாப் பெயர்

மாற்றுப் பெயர்


ஆகுபெயர்


ஒரு பொருளின் இயற்பெயர் இப்பொருளோடு தொடர்புடைய பிரிதொரு பொருளுக்கு தொண்டு தொட்டு வழங்கப்பட்டு வருதல் ஆகுபெயர் எனப்படும்.


ஆகுபெயர் குறிப்பால் பொருளை உணர்த்தும்.


இது 19 வகைப்படும்.

பொருளாகு பெயர்

இடவாகு பெயர்

சினையாகு பெயர்

காலவாகு பெயர்

குணவாகு பெயர்

தொழிலாகு பெயர்

எண்ணவை ஆகுபெயர்

எடுத்தலளவை ஆகுபெயர்

முகத்தலளவை ஆகுபெயர்

நீட்டலளவை ஆகுபெயர்

உவமை ஆகுபெயர்

தானியாகுபெயர்

கருதி ஆகுபெயர்

காரியாகுபெயர்

கருத்தாவாகுபெயர்

சொல்லாகு பெயர்

இருபடி ஆகுபெயர்

மும்டி ஆகுபெயர்

அடையடுத்த ஆகுபெயர்


பொருளாகு பெயர்
அல்லது முதலாகு பெயர்


ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய உறுப்புக்கு தொண்டு தொட்டு வழங்கப்பட்டு வருதல் பொருளாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

தாமரை சூடினால்

மல்லிகை சூடினாள்

தாமரை பூத்தது

மல்லிகை பூத்தது


இங்கு மல்லிகை எனும் செடியின் பெயர் அதன் உறுப்பாகிய பூவிற்கு தொண்டு தொட்டு வழங்கப்பட்டு வருகிறது.


இடவாகு பெயர்


ஒரு இடத்தின் பெயர் அதனோடு தொடர்புடைய உறுப்புக்கு தொண்டு தொட்டு ஆகி வருதல் இடவாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

ஊர் உறங்கியது

இலங்கை வென்றது

பின்வாங்கு எலும்பு


இங்கு இலங்கை எனும் இடத்தின் பெயர் அதன் உறுப்பாகிய இலங்கையில் உள்ள மக்களுக்கு ஆகி வருகிறது.


சினையாகுபெயர் அல்லது உறுப்பாகு பெயர்


ஒரு உறுப்பின் பெயர் அதனோடு தொடர்புடைய முதலுக்கு தொண்டு தொட்டு ஆகி வருதல் சினையாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

வெற்றிலை நட்டான்

கத்தரி நட்டான்


இங்கு வெற்றிலை எனும் உறுப்பின் பெயர் அதன் முதலாகிய கொடிக்கு ஆகிய வருகிறது.


காலவாகு பெயர்


ஒரு காலத்தை உணர்த்தும் பெயர் அதனோடு தொடர்புடைய உறுப்புக்கு தொண்டு தொட்டு ஆகி வருதல் காலவாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

கார்த்திகை பூத்தது

கார் விளைந்தது


இங்கு கார்த்திகை எனும் காலப்பெயர் அக்காலத்தில் பூக்கும் ஒரு கொடிக்கு ஆகி வருகிறது.


குணவாகு பெயர் அல்லது பண்பாகு பெயர்


ஒரு பண்புப் பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு தொண்டு தொட்டு ஆகி வருதல் குணவாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

வெள்ளை அடித்தான்

வெள்ளை கட்டினாள்


இங்கு வெள்ளை எனும் குணப்பெயர் அந்நிறத்தை உடைய துணிக்கு ஆகி வருகின்றது


தொழிலாகு பெயர்


ஒரு தொழிற்பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு ஆகி வருதல் தொழிலாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

பொறியியல் உண்டேன்

பொங்கல் உண்டான்


இங்கு பொரியலேனும் தொழிற்பெயர் அதனோடு தொடர்புடைய உணவுக்கு ஆகி வருகிறது.


எண்ணவை ஆகுபெயர்


ஒரு எண்ணவை பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு ஆகிவருதல் எண்ணவை ஆகுபெயர் எனப்படும்.


உதாரணம்

கன்னத்தில் இரண்டு கொடுத்தான்

கன்னத்தில் ஒன்று கொடுத்தான்


இங்கு இரண்டு எனும் எண்ணலவை பெயர் அதனோடு தொடர்புடைய அடிக்கு ஆகி வருகிறது.


எடுத்தலளவை ஆகுபெயர்


ஒரு எடுத்தலளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு ஆகி வருதல் எடுத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.


உதாரணம்

3 கிலோ வாங்கினேன்

2 கிலோ வாங்கி வா


இங்கு கிலோ எனும் எடுத்தலளவை பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருகிறது.


முகத்தலளவை ஆகுபெயர்


ஒரு முகத்தலளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு ஆகிவருதல் முகத்தலளவை ஆகுபெயர் எனப்படும்.


உதாரணம்

5 லிட்டர் வாங்கி வா

2 லிட்டர் தந்தார்


இங்கு லிட்டர் எனும் முகத்தலளவைப் பெயர் அதனோடு தொடர்புடைய பாலுக்கு ஆகி வருகிறது.


நீட்டலளவை ஆகுபெயர்


ஒரு நீட்டலளவை பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு ஆகி வருதல் நீட்டலவை ஆகுபெயர் எனப்படும்.


உதாரணம்

2 மீட்டர் கொடுங்கள்

5 மீட்டர் தந்தார்


இங்கு மீட்டர் எனும் நீட்டலவை பெயர் அதனோடு தொடர்புடைய துணிக்கு ஆகி வருகிறது.


உவமையாகுபெயர்


ஒரு உவமைப்பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு பொருளுக்கு ஆகிவருதல் உவமையாகுபெயர் எனப்படும்.


உதாரணம்

பாவை வந்தால்

காலை வந்தான்.


இங்கு காலை எனும் உவமைப்பெயர் அதனோடு தொடர்புடைய இளைஞருக்கு ஆகி வருகிறது.


தானியாகுபெயர்


ஒரு பொருளின் பெயர் அதனோடு தொடர்புடைய ஒரு இடத்திற்கு ஆகிவருதல் தானியாகுபெயர் எனப்படும்.


உதாரணம்

விளக்கு முறிந்தது

பாலை இறக்கு


இங்கு பால் எனும் தானிப்பெயர் அதனோடு தொடர்புடைய பாத்திரத்திற்கு ஆகி வருகிறது.


கருவி ஆகுபெயர்


ஒரு கருவியின் பெயர் அக்கருவியால் ஆக்கப்படும் பொருளுக்கு ஆகி வருதல் கருவியாக பெயர் எனப்படும்.


உதாரணம்

குழல் கேட்டு மகிழ்ந்தேன்

குரல் படித்தேன்


இங்கு குழல் எனும் கருவியின் பெயர் அக்கருவியால் ஆக்கப்படும் இசைக்கு ஆகி வருகிறது.


காரியாகுபெயர்


ஒரு கருவியால் ஆக்கப்படும் காரியப்பெயர் அதனோடு தொடர்புடைய அக்கருவிக்கு ஆகி வருதல் காரியாகுபெயர் எனப்படும்.


உதாரணம்

திருவாசகம் கற்றேன்

அலங்காரம் படித்தேன்


இங்கு அலங்காரம் எனும் காரியப் பெயர் அலங்காரத்தை கற்பிக்கும் கருவியான நூலுக்கு ஆகி வருகிறது.


கருத்தாவாகுபெயர்


ஒரு கருத்தாவின் பெயர் கருத்தாவால் ஆக்கப்பட்ட பொருளுக்கு ஆகி வருதல் கருத்தாவாகுபெயர் எனப்படும்.


உதாரணம்

கம்பனை கற்றேன்

திருவள்ளுவரை படித்தேன்


இங்கு கம்பனினும் கவிஞனின் பெயர் கவிஞராய் இயற்றப்பட்ட ராமாயணத்திற்கு ஆகி வருகிறது.


சொல்லாகு பெயர்


ஒரு சொல்லின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருதல் சொல்லாகு பெயர் எனப்படும்.


உதாரணம்

நூலிற்கு உரை செய்தான்

நூலுக்கு உரை எழுதினான்


இங்கு உரை னும் சொல்லின் பெயர் அதனோடு தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருகிறது.


மாற்றுப் பெயர்


ஒரு பெயர் சொல்லுக்கு பதிலாக அல்லது ஒரு எழுவாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் பிரிதரு பெயர்ச்சொல் மாற்றுப் பெயர் எனப்படும்.


இது 2 வகைப்படும்.

மூவிட மாற்றுப் பெயர்

மூவிடமல்லாத மாற்று பெயர்


மூவிட மாற்றுப் பெயர்


மூவிட மாற்றுப் பெயர் 3 வகைப்படும்.

தன்மை  பெயர்

முன்னிலை  பெயர்
படர்க்கை பெயர்

தன்மை  பெயர்

பேசுவோம்  தன்னை குறிப்பிடும் பெயர் தன்மை பெயர் எனப்படும்.

தன்மை பெயர் 2  வகைப்படும்.
தன்மை ஒருமை பெயர்
தன்மை  பன்மை  பெயர்

தன்மை ஒருமை பெயர் 

தன்மை இடத்தில்  ஒருவரை குறிப்பது  தன்மை ஒருமை பெயர் எனப்படும்.

உதாரணம்
நான்

தன்மை  பன்மை பெயர்

தன்மை இடத்தில்  பலரை குறிப்பது  தன்மை பன்னை பெயர் எனப்படும்.

உதாரணம் 
நாங்கள்
நாம்

தன்மை  பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.

உதாரணம்
நான் + ஐ = என்னை
நாங்கள் +  இன் = எங்களின்
நாம் + ஆல் =  எம்மால்

தன்மை  பெயர்கள் 2  வகைப்படும்.
உளப்பாட்டுத் தன்மை பன்மை
உளப்படுத்தா தன்மை பன்மை

உளப்பாட்டுத் தன்மை பன்மை

பேசுவோன் கேட்போனையும் உள்ளடக்கி ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்பாட்டுத் தன்மைப் பன்மை எனப்படும்.

உதாரணம்
நாம்
நம்

உளப்படுத்தா தன்மை பன்மை

பேசுவோன் கேட்போனை உள்ளடக்காமல் ஒரு விடயத்தைக் குறிப்பிடுவது உளப்படுத்தா தன்மைப் பன்மை எனப்படும்.

உதாரணம்
நாங்கள்
எங்கள்

முன்னிலை  பெயர்

கேட்போனை சுட்டும் பெயர் முன்னிலை பெயர் எனப்படும்.

முன்னிலை பெயர் 2  வகைப்படும்.
முன்னிலை ஒருமை பெயர்
முன்னிலை  பன்மை  பெயர்

முன்னிலை  ஒருமை பெயர்

முன்னிலை  இடத்தில்  ஒருவரை குறிப்பது  முன்னிலை ஒருமை பெயர் எனப்படும்.

உதாரணம்
நீ 

முன்னிலை  பன்மை பெயர்

முன்னிலை இடத்தில்  பலரை குறிப்பது  முன்னிலை பன்னை பெயர் எனப்படும்.

உதாரணம் 
நீங்கள்

முன்னிலை பெயர்கள்  வேற்றுமை உருபை ஏற்கும்போது பின்வருமாறு மாற்றமடையும்.

உதாரணம்
நீ + ஐ = உன்னை
நீங்கள் + ஆல் =  உங்களால்

டர்க்கை பெயர்

பேசப்படும் பொருட்கள் படர்க்கை பெயர் எனப்படும்.

தன்மை , முன்னிலை தவிர்ந்த பெயர்கள் அனைத்தும் படர்க்கை பெயர்களுக்குள் அடங்கும்.

படர்க்கை பெயர் 2  வகைப்படும்.
படர்க்கை ஒருமை பெயர்
படர்க்கை  பன்மை  பெயர்

படர்க்கை  ஒருமை பெயர் 

படர்க்கை  இடத்தில்  ஒருவரை குறிப்பது  படர்க்கை ஒருமை பெயர்எனப்படும்.

உதாரணம்
அது
அவன்
அவள்

படர்க்கை   பன்மை பெயர்

படர்க்கை இடத்தில்  பலரை குறிப்பது  படர்க்கை பன்னை பெயர் எனப்படும்.

உதாரணம் 
அவர்
அவை

படர்க்கையில் தன்மையை  குறிக்கும்  பெயர் படர்க்கை தற்சுட்டு பெயர் எனப்படும்.

உதாரணம்
தம் - அவர் தம் வரலாற்றை கூறினார்.
தாம் -  அவர் தாமாகவே வந்தார்.
தன் -  அவர் தன்னை அழகுபடுத்தினார்.
தான் - அவர்  தானாகவே  எழுந்தார்.


மூவிடமல்லாத மாற்று பெயர்


பேசுவோன், கேட்போன் பேசப்படும் பொருள் ஆகிய மூன்று தரப்பினரையும் உள்ளடக்காத மாற்றுப் பெயர் மூவிடமல்லாத மாற்றுப்பெயர் எனப்படும்.


இது இரண்டு வகைப்படும்.

படர்க்கை தற்சுட்டு மாற்றுப்பெயர்

வினா மாற்றுப்பெயர்


படர்க்கை தற்சுட்டு மாற்று பெயர்


தன், தான், ம், தாம், தாங்கள், ஆகிய மாற்றுப் பெயர்கள் எழுவாயைச் சுட்டி வரும்போது படர்க்கை தற்சுட்டு மாற்று பெயர்களாக வருகின்றன.


படர்க்கை தற்சுட்டு பெயர்கள் வேற்றுமை உருபு எற்கும் போது பின்வருமாறு மாற்றம் அடைகின்றன.


உதாரணம்

தான் + ஆல் = தன்னால்

தாம் + ஐ = தம்மை

தாங்கள் + உடைய = தங்களுடைய

தாங்கள் + ஐ = தங்களை


தற்காலத்தில் பொருள் மயக்கம் ஏற்படாது இருக்க படத்தை தற்சுட்டு பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது.


உதாரணம்


கண்ணன் அவனுடைய வீட்டிற்கு சென்றான்


இங்கு அவனுடைய என்பது பொருள் மயக்கமாகும். அதாவது கண்ணன் அவனுடைய வீட்டிற்க்கா சென்றான்? இல்லை அவனுடைய நண்பன் வீட்டிற்கா சென்றான்? என்பது மயக்கம். இதனால் அவனுடைய என்பதற்கு பதிலாக தன்னுடைய எனும் மாற்று பெயர் பயன்படுத்தப்படுகிறது


கண்ணன் தன்னுடைய வீட்டிற்குச் சென்றான்.


வினா மாற்று பெயர்


வினா பெயர்களுடன் ஓ, ஆவது ஆகிய விகுதிகளை சேர்த்து உருவாக்கப்படும் மாற்று பெயர் வினா மாற்றும் பெயர் எனப்படும்.


யாரோ

எவனோ

எவளோ

எவர்களோ

எதுவோ

எதையோ

எத்தனையோ

எவ்வளவோ

என்னவோ


ஆவது

யாராவது

எவனாவது

எவளாவது

எவர்களாவது

ஏதாவது

எதையாவது

எத்தனையாவது

எவ்வளவாவது

என்னவாவது


வினாப்பெயர்


வினா பொருளை உணர்த்தும் பெயர் வினாப்பெயர் எனப்படும்.


இது 2 வகைப்படும்.

உயர்திணை வினாப்பெயர்

அஃறிணை வினாப்பெயர்


உயர்திணை வினாப்பெயர்


பகுத்தறிவு உள்ளவற்றை வினாவதற்கு பயன்படும் பெயர் உயர்திணை வினாப்பெயர் எனப்படும்.


உதாரணம்

யார்

எவள்

எவர்கள்


அஃறிணை வினாப்பெயர்


பகுத்தறிவு அற்ற உயிர் உள்ள, உயிரற்ற பொருட்களை வினாவுவதற்கு பயன்படும் பெயர் அஃறிணை வினாப்பெயர் எனப்படும்.


உதாரணம்

யாது

எது

எவை

ஏன்

என்ன

எத்தனை

எப்படி


ஆக்கப்பெயர்


வினை சொற்களுடன் விகுதி சேர்ந்து ஆக்கப்படும் பெயர் ஆக்கப்பெயர் எனப்படும்.


இது 2 வகைப்படும்.

வினை + விகுதி = ஆக்கப் பெயர்

பெயர் + விகுதி = ஆக்க பெயர்


பெயர் + விகுதி = ஆக்க பெயர்


பெயர் + ளி = ஆக்க பெயர்

முதல் + ளி = முதலாளி

தொழில் + ளி = தொழிலாளி

நோய் + ளி = நோயாளி,

உழைப்பு + ளி = உழைப்பாளி


பெயர் + யல் = ஆக்க பெயர்

புவி + இயல் = புவியியல்

உயிர் + இயல் = உயிரியல்

மெய் + இயல் = மெய்யியல்

பொருள் + இயல் = பொருளியல்


பெயர் + சாலி = ஆக்க பெயர்

புத்தி + சாலி = புத்திசாலி

திறமை + சாலி = திறமைசாலி

அறிவு + சாலி = அறிவுசாலி,

அதிர்ஷ்டம் + சாலி = அதிர்ஷ்டசாலி


பெயர் + துவம் = ஆக்க பெயர்

முதலாளி + துவம் = முதலாளித்துவம்

சமம் + துவம் = சமத்துவம்

காலனி + துவம் = காலனித்துவம்,

சகோதரம் + துவம் = சகோதரத்துவம்

பிரபு + துவம் = பிரபுத்துவம்


பெயர் + இயம் = ஆக்க பெயர்

பெண் + யம் = பெண்ணியம்

முதலாளி + யம் = முதலாளியம்


பெயர் + ஆளன் = ஆக்க பெயர்

எழுத்து சக ஆளன் = எழுத்தாளன்

பேச்சு சக ஆளன் = பேச்சாளன்

மேற்பார்வை சக ஆளன் = மேற்பார்வையாளன்

திறனாய்வு சக ஆளன் = திறனாய்வாளன்


பெயர் + தனம் = ஆக்க பெயர்

முட்டாள் + தனம் = முட்டாள்தனம்

வெறி + தனம் = வெறித்தனம்


பெயர் + காரன் = ஆக்க பெயர்

கடை + காரன் = கடைக்காரன்

கடன் + காரன் = கடன்காரன்


பெயர் + காரி = ஆக்க பெயர்

கடை + காரி = கடைக்காரி

வேலை + காரி = வேலைக்காரி

கடன் + காரி = கடன் காரி


வினை + விகுதி = ஆக்கப் பெயர்


வினை + ச்சி = ஆக்க பெயர்

மலர் + ச்சி = மலர்ச்சி

நுகர் + ச்சி = நுகர்ச்சி

தொடர் + ச்சி = தொடர்ச்சி

உணர் + ச்சி = உணர்ச்சி

தேர் + ச்சி = தேர்ச்சி


வினை + சி = ஆக்க பெயர்

காண் + சி = காட்சி

முயல் + சி = முயற்சி

பயில் + சி = பயிற்சி

நீள் + சி = நீட்சி

ஆள் + சி = ஆட்சி


வினை + ப்பு = ஆக்க பெயர்

நடி + ப்பு = நடிப்பு

அடை + ப்பு = அடைப்பு

துடி + ப்பு = துடிப்பு

எடு + ப்பு = எடுப்பு


வினை + ஐ = ஆக்க பெயர்

நட + ஐ = நடை

உடு + ஐ = உடை

தடு + ஐ = தடை

நில் + ஐ = நிலை

கொல் + ஐ = கொலை

வில் + ஐ = விலை


வினை + அம் = ஆக்க பெயர்

நீள் + அம் = நீளம்

அகல் + அம் = அகலம்

உயர் + அம் = உயரம்

ஆழ் + அம் = ஆழம்


வினை + வு = ஆக்க பெயர்

உயர் + வு = உயர்வு

பிரி + வு = பிரிவு

தாழ் + வு = தாழ்வு

கழி + வு = கழிவு

எரி + வு = எரிவு


வினை + க்கை = ஆக்க பெயர்

அறி + க்கை = அறிக்கை

உடு + க்கை = உடுக்கை

இரு + க்கை = இருக்கை

வாழ் + க்கை = வாழ்க்கை

எச்சரி + க்கை = ச்சரிக்கை


வினை + கை = ஆக்க பெயர்

வா + கை = வருகை

தா + கை = தருகை

செய் + கை = செய்கை

கொள் + கை = கொள்கை

செல் + கை = செல்கை

நடு + கை = நடுகை


வினை + மை = ஆக்க பெயர்

பொறு + மை = பொறுமை

இனி + மை = இனிமை

சிறு + மை = சிறுமை

கொடு + மை = கொடுமை


வினை + மதி = ஆக்க பெயர்

ஏற்று + மதி = ஏற்றுமதி

இறக்கு + மதி = இறக்குமதி

கொடு + மதி = கொடுமதி

வா + மதி = வருமதி

தா + மதி = தருமதி

செல் + மதி = செல்மதி

செய் + மதி = செய்மதி


வினை + வை = ஆக்க பெயர்

போர் + வை = போர்வை

கோர் + வை = கோர்வை

தீர் + வை = தீர்வை


வினை + வி = ஆக்க பெயர்

கல் + வி = கல்வி

பிற + வி = பிறவி

தோல் + வி = தோல்வி

கேள்வி + வி = கேள்வி


வினை + ச்சல் = ஆக்க பெயர்

விளை + ச்சல் = விளைச்சல்

எரி + ச்சல் = எரிச்சல்

பாய் + ச்சல் = பாய்ச்சல்

புகை + ச்சல் = புகைச்சல்

ஓய் + ச்சல் = ஓய்ச்சல்

குமை + ச்சல் = குமைச்சல்


வினை + அல் = ஆக்க பெயர்

பொறி + அல் = பொறியியல்

வரு + அல் = வருவல்

சுண்டு + அல் = சுண்டல்

நழுவு + அல் = நழுவுதல்

முறுகு + அல் = முறுகல்

இருமு + அல் = இருமல்


வினை + ஈற்று மெய் இரட்டித்தல் = ஆக்க பெயர்

பாடு = பாட்டு

எழுது = எழுத்து

பேசு = பேச்சு

வீசு = வீச்சு


வினை + ஈற்று மெய் இரட்டித்தல் + அம் = ஆக்க பெயர்

நாடு = நாட்டம்

சீறு = சீற்றம்

கூடு = கூட்டம்

ஓடு = ஓட்டம்

ஆடு = ஆட்டம்

வாடு = வாட்டம்


வினை + குறில் நெடிலாதல் = ஆக்க பெயர்

பெறு = பேறு

படு = பாடு

கெடு = கேடு

அடிபடு = அடிபாடு

விடுபடு = விடுபாடு

இடிபடு = இடிபாடு


அளவைப் பெயர்கள்


பொருட்களை அளப்பதற்கு பயன்படுத்தப்படும் பெயர்கள் அளவைப் பெயர்கள் எனப்படும்.


இது பல வகைப்படும்.

எண்ணல் அளவை பெயர்

எடுத்தல் அளவைப் பெயர்

முகத்தல் அளவை பெயர்

நீட்டலவை பெயர்

தெரிதல் அளவைப் பெயர்

சார்தல் அளவைப் பெயர்


எண்ணல் அளவை பெயர்

ஒன்று, இரண்டு, மூன்று


எடுத்தல் அளவைப் பெயர்

கிலோகிராம், கிராம்


முகத்தல் அளவை பெயர்

லிட்டர், மில்லிலிட்டர்


நீட்டலவை பெயர்

மீட்டர், கிலோமீட்டர், முழம், சான், ஏக்கர்


தெரிதல் அளவைப் பெயர்

நாள், கிழமை, மணி, நிமிடம்


சார்தல் அளவைப் பெயர்

ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு அளப்பது


அளவுப் பெயர்கள்


உதாரணம்

சில

பல

சிலர்

பலர்

கொஞ்சம் 


நன்றி

Post a Comment

0 Comments