அரசியல் ஒரு விஞ்ஞானமா ?
அரச அறிவியலின் விஞ்ஞான தன்மை குறித்து ஒத்த கருத்து காணப்படுவதில்லை. சிலர் அரச அறிவியல் ஒரு உண்மையான விஞ்ஞானம் என்றும் சிலர் விஞ்ஞானம் அல்ல என்றும் கூறுகின்றனர். அரச அறிவியலின் தந்தையான அரிஸ்டோட்டிலின் கருத்துப்படி அரசரின் தலையாய விஞ்ஞானம் ஆகும். எனினும் இக்கருத்துக்கள் நீண்ட காலமாக தீர்வு காணப்படாத வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படும் ஒரு விடயமாக காணப்படுகின்றது.
விஞ்ஞானம் இல்லை என்பதற்கான நியாயம்
ஒரு நிலையான தளத்தினை பெறாமை.
விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் விஞ்ஞான உபகரணங்கள் பயன்படுத்தப்படாமை.
உறுதியான நியதிகள் காணப்படாமை.
ஜனநாயகம்
எதிர்வு கூற முடியாது.
இரசாயனவியல் ஆராய்ச்சியில் முடிவை முன்கூட்டியே முறையாக நிர்ணயிக்க முடிகிறது. ஆனால் அரசியலில் வருங்காலத்தில் நிகழப்போகும் அரசியல் நிகழ்ச்சிகளையோ அல்லது பின்பற்றப்படும் கோட்பாடுகளின் நடைமுறைகளின் வெற்றி தோல்விகளையோ முன்னதாக திட்டமிட்டு கூற முடியாததாக இருத்தல்.
ஒருமுக நோக்கமின்மை.
விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களுக்கிடையே ஒருமுக நோக்கம் இருக்கும். ஆனால் அரசியல் ஆராய்ச்சியாளர்கள் நாட்டிலுள்ள பலவிதமான பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துவதனால் அவர்களுக்கு இடையே நோக்கம் சிதைவுற்று ஒருமுக நோக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லாமல் போகின்றது.
துல்லியம் இன்மை.
அரசியல் கோட்பாடுகளில் துள்ளியம் இம்மையும் தெளிவின்மையும் காணப்படுவதனால் யாவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆராய்ச்சி அணுகுமுறைகளை கையாள முடிவதில்லை. இதனால் துள்ளியமான முடிவுகளைப் பெற வாய்ப்பில்லை. ஆனால் பௌதீகம், கணிதம் போன்ற விஞ்ஞானங்களில் காணப்படும் ஒரு சூத்திரம் எல்லோரும் ஒப்புக்கொண்ட ஒரு சூத்திரமாகவே உள்ளதுடன் எந்த ஒரு சந்தேகமும் ஏற்படுவதும் இல்லை.
எதிர்காலத்தில் பொருந்தக்கூடிய கோட்பாடுகளை கட்டி எழுப்பமுடியாமை.
அரசருவியல் விஞ்ஞானத்தை ஆராய்வோர் அகப்புற காரணிகளின் தாக்கத்திற்கு உள்ளாவதுடன் ஆனால் இயற்கை விஞ்ஞானத்தை ஆராய்வோர் அவ்வாறு தாக்கத்திற்கு உட்படுவதில்லை.
விஞ்ஞானம் என்பதற்கான நியாயம்
அரச அறிவியல் விஞ்ஞானம் ஆகும் என வாதிடுவோர் அரசு அறிவியல் விடைய பரப்பினை விஞ்ஞான முறைகளை பயன்படுத்தி கற்க முடிவதனால் அது விஞ்ஞான இயல்பினை பெறுகிறது என்று கூறுகின்றனர். இவர்கள் தம் கருத்துக்களை நிரூபிப்பதற்கு பின்வருமாறு நியாயங்களை முன்வைக்கின்றனர்.
அரச அறிவியலின் பொதுமைப்படுத்தப்பட்ட முடிவுகள் காணப்படுகின்றன.
முறையாக அவதானிக்கப்பட்டதும் பகுப்பாய்வு செய்யப்பட்டதுமான ஒரு அறிவுக் குவியல் அரச அறிவியலில் காணப்படுகின்றது. அதன் மூலம் அரசியல் கோட்பாடுகளும் எண்ணக்கருக்கலும் தோன்றியுள்ளன.
உதாரணம்
அரிஸ்டோட்டிலின் சமூக அசமத்துவமே சகல பிரச்சனைகளுக்கும் காரணமாகும், அதிக அதிகாரமும் மனிதனை அதிகம் மாசுபடுத்துகின்றது. என்றும் மாக்கியவலி அரசாங்க முறைகளில் ஜனநாயக அரசாங்க முறையே சிறந்தது. என்றும் கூறியது.
அரசியல் ஒரு சமூக விஞ்ஞானமாக காணப்படல்.
அரசியலை ஒரு விஞ்ஞானமாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அதை ஒரு சமூக விஞ்ஞானம் என்றாவது கூறலாம். அரசியல் மனிதனுடைய அரசியல் சார்ந்த நடத்தைகளைப் பற்றி ஆராய்கின்றது. அரசியலிலும் பலவிதமான பொதுவான விதிகள் உள்ளன. இதனால் விஞ்ஞான முறைகளை பயன்படுத்துதல், எதிர்வு கூறல்களை முன்வைக்க முடிதல் போன்றவைகளையும் மேற்கொள்ளலாம். இந்த பொதுவான விதிகளை பொருளியலில் காணப்படும் பொதுவான விதிகளை போலவே காட்சியளிக்கின்றது. எனவே தான் முறையான அறிவைப் பெறுவதற்கு அரசியலிலும் சில பொதுவான வழிமுறைகள் காணப்படுவதனால் அரசியலையும் விஞ்ஞானமாக கருதுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர்.
விஞ்ஞான துறை சார்ந்த விடயங்களை ஆய்வு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஆய்வு முறைகள் அரச அறிவியல் ஆய்விற்கும் பயன்படுத்தப்படல்.
உதாரணம்
புள்ளிவிபரவியல் ஆய்வு
நடத்தை வாத ஆய்வு அணுகுமுறை
முறைமைப் பகுப்பாய்வு அணுகுமுறை
எதிர்வு கூறும் பண்பு காணப்படல்.
சமூக விஞ்ஞானம் மாறுகின்ற மனித நடத்தைகளுடன் தொடர்புபட்டவை ஆகும். மனித மனம் அடிக்கடி மாறுகின்ற இயல்புடையதால் மனித நடத்தையைக் கொண்டு எதிர்ப்பு கூறல்களை முன் வைக்க முடியாது. என்றாலும் இயற்கை விஞ்ஞானத்தில் இலகுவாக கூறிக்கொள்ள முடிவதுடன் ஆனால் சமூக விஞ்ஞானத்தினால் எதிர்வுகூறலுக்கான அடிப்படை கூறல்களை உருவாக்க முடியும். என அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. சமூக அபிவிருத்தியின் சில அடிப்படை விதிகளை ஆதாரமாகக் கொண்டு கால்மார்க்ஸ், ஏஞ்சல்ஸ் ஆகியோர்களால் முதலாளித்துவம் வீழ்ச்சி அடைந்து சோசலிசம் எழுச்சி அடையும் என எதிர்வு கூறியவை குறிப்பிடத்தக்கதாகும்.
அரச அறிவியலில் விஞ்ஞான முறைகளை பயன்படுத்த முடிவதில் சில நிலையான நியதிகளையும் கட்டி எழுப்ப முடிகின்றது.
நன்றி.
0 Comments