பிறந்த மாத பலன்கள் - BIRTH MONTH BENEFITS


பிறந்த மாத பலன்கள்


பிறந்த மாத பலன்கள் - BIRTH MONTH BENEFITS

ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குணங்கள் இருக்கும். அது போல அவர்களின் செயல்பாடும், பலன்களும் அமையும். அந்த வகையில் எந்த ஆங்கில மாதத்தில் பிறந்தால் என்ன மாதிரியான குணங்கள் இருக்கும் என்பதை பின்வருமாறு காணலாம்.

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஜனவரி மாதம் பிறந்தவர்கள் 1ம் எண்காரர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் சுதந்திரமானவர்கள், எதையும் ஆராய்ந்து கணக்கிடுபவர்கள், இவர்கள் பிறவியிலேயே தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கும் திறன் கொண்டவர்கள், எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இவர்கள் மற்ற மாதங்களில் பிறந்தவர்களை காட்டிலும் பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடி செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். செய்யும் செயல்களில் புதிய செயல்பாடுகள் மற்றும் புதியனவற்றை ஆராய்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்கள் மனதில் இருப்பதை அவ்வளவு எளிதில் வேறு யாரும் அறிந்து கொள்ள இயலாது.

எந்தவொரு செயலையும் வேகமாக செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள். மற்றவர்களிடம் வேலை வாங்கும் திறமை உடையவர்கள். எதையும் தனது விருப்பத்தின் அடிப்படையிலேயே செய்யும் மனப்பக்குவம் உடையவர்கள். எந்த விஷயத்திலும் பிறருடைய தலையீடு இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதை விரும்புவார்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் ஒன்று. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பார்கள். மருத்துவத் துறையில் பெரியளவில் பலன்கள் கிடைக்காது. மாத எண் 1ல் பிறந்ததால் இவர்களின் செயல்பாடு மிகவும் சுறுசுறுப்புடன் இருக்கும். சிந்தித்து திறம்பட செயல்படுவார்கள்.

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் எண் 2. இவர்கள் உணர்வுப் பூர்வமானவர்களாக இருப்பார்கள். அன்பைத் தேடி அலைபவர்கள். அன்பு காட்டுபவர்களிடம் அடிமையாகவே இருப்பார்கள். 'காதல்' இவர்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும்.

இவர்கள் உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் அதிக முக்கியம் கொடுப்பாவர்கள். தன்னிடம் அன்பாக நடந்து கொள்பவர்களிடம் எதையும் விட்டுக்கொடுத்து செல்லக்கூடியவர்கள். இவர்களின் மனம் நிலையாக இருக்காது.

எப்போதும், எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். இவர்களுடைய வாழ்க்கையில் அன்பும், காதலும் ஒரு முக்கிய பங்கை வகிக்கும்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 2. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் கலைத் துறை, சினிமா மற்றும் விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். கற்பனைத் திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் எண் 3. எதையும் சரியாக கணக்கு போடுவதில் வல்லவர்கள். புகழின் உச்சியில் அமரக்கூடிய அதிர்ஷ்டம் இவர்களுக்கு உண்டு. பணம் சம்பாதிப்பதில் வல்லவர்கள். ஆனால் செலவு செய்வதில் அதைவிட வேகமாக இருப்பார்கள். இவர்கள் பிறரால் ஏமாற்றபடுவார்கள்.

இவர்கள் பொருள் ஈட்டுவதில் வல்லவர்கள். இவர்களிடம் வரவை காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். எந்த துறையில் இருந்தாலும் அதில் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள்.

கல்வியில் சிறந்து விளங்கக்கூடியவர்கள். அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்கள். மற்றவர்களின் ஆசை பேச்சுக்கு மயங்கி அதனால் ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 3 ஆகும். மார்ச் மற்றும் டிசம்பர் மாதத்தில் பிறந்த இவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் மருத்துவம், நிர்வாகம், வணிகம், மார்க்கெட்டிங்க் துறையில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். மற்றவர்களை பணிந்து வேலை பார்ப்பவர்கள் கிடையாது.

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஏப்ரல் மாதத்திற்கு உரிய எண் நான்காகும். இவர்கள் பிடிவாத தன்மை கொண்டவர்கள். இவர்கள் எல்லாருக்கும் கட்டளை போடும் இடத்தில் இருப்பார்கள். புத்திக்கூர்மை மிக்கவர்கள், எதையும் புதிதாக யோசிப்பார்கள். இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

இவர்கள் எதையும் புதிய கோணத்தில் அணுகுவார்கள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளை கொண்டவர்கள். தனக்கு பிடித்தவற்றை மட்டும் செய்யும் இவர்கள் பிடிக்காததை யார் வற்புறுத்தினாலும் செய்ய மாட்டார்கள். மற்றவர்களை அடக்கி ஆளும் குணம் கொண்டவர்கள்.

மற்றவர்கள் இவர்கள் மேல் கொண்ட நம்பிக்கைக்கு உண்மையாக இருப்பார்கள். சூழ்நிலை எதுவாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்ற மாதிரி மாற்றி கொள்ளக் கூடியவர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதிலும், வழிகாட்டுவதிலும் முதன்மையாக இருப்பார்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 4 ஆகும். இவர்களுக்கு கல்வியும், செல்வமும் சிறப்பாக அமையும். இவர்கள் பெரும்பாலும் சொந்த தொழில் தொடங்கிச் செய்யலாம். தொழில் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். இவர்கள் நம்பிக்கையுடன் உழைப்பவர்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுபவர்கள்.

மே மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

மே மாதத்திற்கு உரிய எண் 5 தாகும். இவர்கள் எதில் கை வைத்தாலும் அதில் புகழ் பெற்றவர்களாக விளங்குவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பார்கள். கலகலப்பாக இருக்கும் குணம் உள்ளவர்கள். ஆகவே, எப்போதும் நண்பர்களுடனே இருப்பீர்கள்.

இவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் பெரும் புகழும், செல்வாக்கும் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் கலகலப்பான பேர்விழிகள். இதனால் நண்பர்கள் வட்டாரம் இவர்களுக்கு அதிகம் இருக்கும்.

தனக்கென தனியான கோட்பாடுகளுடன் இருக்கக்கூடியவர்கள். சமுகம் மற்றும் பொதுநலன் சார்ந்த பணிகளில் அதிக ஆர்வம் உடையவர்கள். கணிதம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 5. இவர்களின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும். இவர்கள் நீதிமானாக இருப்பார்கள். நிர்வாகம், பொதுப்பணித்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இவர்கள் மற்றவர்களை விட எப்போதும் தனித்துவத்தோடு விளங்குவார்கள்.

ஜூன் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஜூன் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 6. இவர்கள் ஒரு ரொமண்டிக் பேர்வழியாக இருப்பார்கள். காதல் விவகாரங்களில் இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது. கொஞ்சம் பொறாமை குணம் கொண்டவர்கள். ரொம்ப தைரியமானவர்கள். இவர்களுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவுதான். எளிதில் உணர்ச்சிவசபடுவார்கள்.

இவர்களுக்கு பொறாமை குணம் சிறிது உண்டு. இவர்களிடம் தன்னம்பிக்கை என்பது குறைவு. தன்னம்பிக்கை குறைவாக இருந்தாலும் அதை வெளிப்படுத்தமாட்டார்கள். சிறிது சந்தேக புத்தி கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். எதிர்பாலினம் மீது அதிக ஈடுபாடு உடையவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைபடுவார்கள்.

மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களிடம் எதையும் மறைக்கும் குணம் கிடையாது. எதிலும் ஒளிவு மறைவின்றி நேர்மையாக நடந்து கொள்ளக்கூடியவர்கள். கற்பனை சக்தி அதிகம் கொண்டவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 6 ஆகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி, மருத்துவம், வணிகம், வியாபாரம் செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

ஜூலை மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஜூலை மாதம் பிறந்தவர்களுக்கான எண் 7. இவர்களை யாரும் அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. ரகசியமானவர்கள். அமைதியான குணம் கொண்டவர்கள். கடின உழைப்புக்கு சொந்தகாரர்கள். நேர்மையாக இருக்க விரும்புவார்கள். மற்றவர்களின் உணர்வுகளை ரொம்பவே மதிப்பார்கள். மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து ஏற்று கொள்வார்கள். பழிவாங்கும் குணம் அற்றவர்கள்.

இவர்களின் நடவடிக்கையும், செயல்பாடுகளையும் புரிந்துக்கொள்வது மிகவும் கடினமானதாகும். எதிலும் நேர்மை இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் மதிப்பு அளிப்பார்கள்.

அறிவும், அழகும் இவர்களிடம் இணைந்து இருக்கும். இவர்களிடம் ரகசியம் பொதிந்து கிடக்கும். சொல்லாலும், செயலாலும் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள். எந்த துறையாக இருந்தாலும் அதில் அறிவும், ஆர்வமும் கொண்டவர்கள். இவர்களிடம் நிதானம் என்பது குறைவு. எதிலும் அவசரமாக செயல்படக்கூடியவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 7 ஆகும். ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிற்ந்து விளங்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு கோபம், நரம்பு தளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதோடு இவர்களிடம் வெறுப்பு குணமும், அவசரமும் அதிகமாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

ஆகஸ்ட் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 8. நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். தன்னை சுற்றியிருப்பவர்களை குறித்து அக்கறை கொண்டவர்கள். எதற்கும் துணிந்தவர்கள். பயம் என்றால் என்ன என்று தெரியாதவர். வாழ்க்கையில் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். தலைமை பண்புகள் அதிகம் இருக்கும். தான் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகம் இருக்கும். சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். எதையும் புதுவிதமாக யோசிக்கும் திறன் கொண்டவர்கள்.

இவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தலைமை பண்பு இவர்களிடம் காணப்படும். யாருக்கும், எதற்கும் பயப்பட மாட்டார்கள். எதற்கும் துணிந்து நிற்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் உடையவர்கள்.

தங்களின் நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் அனைவரையும் கவரக்கூடியவர்கள். போட்டிகளில் வெற்றி அடையக்கூடியவர்கள். தன்னை சார்ந்து இருக்கும் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார்கள் மீது அன்பும், அக்கறையும், கொண்டவர்கள். எந்த செயலை எடுத்தாலும் அவசரபடாமல், நிதானமாக செய்ய கூடியவர்கள். இவர்களுக்கு நண்பர்கள் வட்டம் குறைவாகவே இருக்கும்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 8 ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சுமாராக இருந்தாலும், தனித்தன்மையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகத் தான் இருக்கும். இவர்கள் எந்த ஒரு செயலையும் சற்று கால தாமதத்துடன் செய்து முடிக்கக்கூடியவர்கள்.

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள். இவர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்கள். விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். எதிலும் வெற்றி கொடி நாடவே விரும்புவார்கள்.

இவர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான செயல்களில் அதிக ஈடுபாடு இருக்கும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். புத்திக்கூர்மை பேச்சு, நடத்தை மற்றும் சாதுர்யமான செயல்பாடுகளை கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றாற்போல மற்றவர்களை அனுசரித்து செல்லும் குணமும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும் கொண்டவர்கள்.

வாழ்க்கையை இப்படிதான் வாழ வேண்டும் என்ற கோட்பாடு உடையவர்கள். இவர்களுக்கு தீங்கு இழைத்தவர்களை அவ்வளவு எளிதில் மன்னிக்க மாட்டார்கள். சில நேரங்களில் தான் விரும்பியதை தான் மற்றவர்கள் செய்ய வேண்டும் என்ற குணம் உடையவர்கள். சாகச பிரியர்களான இவர்கள் வீர தீர செயல்களை செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 9 ஆகும். இவர்கள் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் தொழில், வியாபாரம், நிர்வாகம், நீதித்துறையில் ஆர்வமுடன் இருப்பதும், அதில் நல்ல பலனும் கிடைக்கும். எந்த செயலிலும் நல்ல வெற்றி பெறக்கூடிய இவர்கள் அரிதாகவே பல காரியங்களில் ஈடுபடுவார்கள்.

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

அக்டோபர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 10. எதையாவது ஒன்றை அடையவேண்டும் என்று நினைத்துவிட்டால், அடைந்தே தீருவார்கள். வாக்குவாதத்தில் ஈடுபடுவது இவர்களின் குறை. பிறரை பழி தீர்ப்பது, வஞ்சிப்பது இவர்களோடு பிறந்த குணங்கள். இவர்கள் தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் புகழ்பெற்ற தலைவராக இருப்பார்கள்.

இப்படிதான் இருக்கவேண்டும், இப்படித்தான் வாழவேண்டும் என்ற லட்சியம் மற்றும் குறிக்கோளுடன் வாழக்கூடியவர்கள். தாங்கள் ஈடுபட்டிருக்கும் துறையில் செல்வாக்கு கொண்டவர்கள். எதிலும் விடாப்பிடியாக இருந்து தனது விருப்பம் நிறைவேறும் வரை போராடக்கூடியவர்கள்.

வாக்குவாதத்தில் அடிக்கடி எதிர்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடியவர்கள். வஞ்சனையான எண்ணங்களையும், சிந்தனைகளையும் கொண்டவர்கள். எதிலும் வேகமாக செயல்படக்கூடியவர்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 1 ஆகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் தன் இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதே போல இவர்கள் ஒன்றை நினைத்துவிட்டால் அதை அடைய வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் இருக்கும் துறையில் சிறப்பாக செயல்பட்டு அதில் புகழ் பெற்ற தலைவராக இருப்பார்கள்.இவர்கள் மற்றவர்களின் குணத்தை, செயலைக் குறை கூறுபவர்களாக இருப்பார்கள்.

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

நவம்பர் மாதத்திற்கான பிறந்தவர்களுக்கான எண் 11. இவர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். எதையும் நேர்மறையாகவே யோசிப்பார்கள். உணர்ச்சி பூர்வமானவராக விளங்குவார்கள். எளிதில் உணர்ச்சி வசபடக்கூடியவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நல்ல ஆசானாக திகழ்வார்கள். விட்டு கொடுக்கும் குணம் கொண்டவர்கள். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்தே செய்வார்கள்.

எதிலும், எப்போதும் உணர்ச்சிகரமாக செயல்படக்கூடியவர்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டவர்கள். எந்தவொரு செயலை செய்வதற்கு முன்னும் ஒருமுறைக்கு இருமுறை நன்கு சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

எதிலும் நேர்மறையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். கற்பனை சக்தி அதிகம் கொண்டவார்கள். மற்றவர்களை விட அனைத்து விஷயங்களிலும் தான் அனைவருக்கும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். எதிலும், எந்த சூழ்நிலையிலும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 2 ஆகும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருக்கும் இவர்கள், எந்த ஒரு செயலையும் எதிர்மறையாக யோசிக்காமல் நேர்மறையாக யோசித்து செயல்படுவார்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் உடனே உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மற்றவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய குணம் கொண்ட இவர்கள், எந்த ஒரு செயலையும் தொடங்கும் முன் பல முறை யோசித்து அதன் பின்னர் செயல்படுவார்கள்.

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்

டிசம்பர் மாதம் பிறந்தவர்களுக்கான எண் 12. இவர்கள் எதையும் யதார்த்தமாக யோசிப்பார்கள். நிலையான வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். சில நேரங்களில் பொறுப்புகளை குறித்து போதிய கவனமில்லாமல் இருப்பார்கள். இவர்கள் அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

இவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்கும். வேலை சார்ந்த பொறுப்புகளின் மீது கவனமில்லாமல் செயல்படக்கூடியவர்கள். மார்க்கெட்டிங் சார்ந்த துறைகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

பெருந்தன்மையான குணநலன்களையும், யதார்த்தமான செயல்பாடுகளையும் உடையவர்கள். பொறுமை என்பது இவர்களிடம் சற்று குறைவு. வெளிப்படையாக பேசும் குணம் உடையவர்கள். சூழ்நிலைக்கேற்ப தனது செயல்பாடுகளை மாற்றியமைத்து வெற்றி பெற கூடியவர்கள்.

இவர்களின் அதிர்ஷ்ட எண் 3 ஆகும். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதிலும் மன உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே சமயம் சில நேரங்களில் தங்களின் பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பார்கள். கவனக்குறைவுடன் செயல்படுவார்கள். எதிலும் எதார்த்தமாக யோசிக்கக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நன்றி

Post a Comment

0 Comments