சொற்களின் வகைகள்
பகுதி - 06
வினைச்சொல்
ஒரு பொருளின் வினையை உணர்த்தும் சொல் வினைச்சொல் எனப்படும்.
வினைச்சொல்லின் பண்புகள்
காலம் காட்டும்
வேற்றுமை உருவை ஏற்காது
ஏவல் பொருளில் வரும்
விகுதிகளை பெற்று வரும்
ஒரு செயலை குறிக்கும்
வினையடைகளை ஏற்று வரும்
வினைச்சொல்லின் வகைகள்
செயல்பாடு பொருளின் அடிப்படையில் 03
வினையின் பயனின் அடிப்படையில் 03
கருத்தாவின் அடிப்படையில் 02
ஒரு நபரின் உரையாடலின் அடிப்படையில் 02
ஒரு வினையின் நிகழ்வின் அடிப்படையில் 02
காலம் காட்டும் அடிப்படையில் 02
முற்றுப்பெறும் அடிப்படையில் 02
அடிச் சொல்லின் எண்ணிக்கையின் அடிப்படையில் 02
செயற்படு பொருளின் அடிப்படையில்
செயற்படுபொருள் குன்றிய வினை
செயப்படுபொருள் குன்றாவினை
பொதுவினை
செயற்படுபொருள் குன்றிய வினை
வாக்கியத்தில் செயற்படுபொருளை ஏற்காது வரும் வினை செயற்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.
ஒரு வினையை நோக்கி எதை என்ற கேள்வியை வினவும் போது விடை வராமல் போனால் அது செயல்படுபொருள் குன்றிய வினையாக கருதப்படும்.
உதாரணம்
நடந்தான்
சிரித்தான்
ஓடினான்
செயற்படுபொருள் குன்றாவினை
வாக்கியத்தில் செயற்படுபொருளை ஏற்று வரும் வினை செயற்படுபொருள் குன்றாவினை எனப்படும்
ஒரு வினையை நோக்கி எதை என்ற கேள்வியை வினவும் போது விடை வந்தால் அது செயல்படுபொருள் குன்றிய வினையாக கருதப்படும்.
உதாரணம்
படித்தான்
பார்த்தான்
உடைத்தான்
ரசித்தான்
பொதுவினை
செயற்படுபொருள் குன்றியும் குன்றாமலும் வரும் வினை பொதுவினை எனப்படும்.
உதாரணம்
எரி
செயற்படுபொருள் குன்றாவினை - கண்ணகி மதுரையை எரித்தாள். செயற்படுபொருள் குன்றிய வினை - மதுரை தீயில் எரிந்தது.
முறி
செயல்படு பொருள் குன்றாவினை - ராமன் வில்லை முறித்தான்
செயற்படுபொருள் குன்றிய வினை - வில் முறிந்தது
வினையின் பயனின் அடிப்படையில்
தன்வினை
பிறவினை
காரணவினை
தன்வினை அல்லது இயங்குவினை
வினையின் பயனை எழுவாய் அடையும் வினை தன்வினை எனப்படும்.
உதாரணம்
நான் படித்தேன்
நிதா விளையாடினாள்
பிறவினை அல்லது இயக்குவினை
வினையின் பயன் எழுவாயை அன்றி பிரிதொன்றை அடையும் ஆயின் அது பிறவினை எனப்படும்.
உதாரணம்
தம்பி நிலத்தில் பானையை உருட்டினான்
நாய் வாலை ஆட்டியது
காரண வினை
எழுவாய் தானே வினையை நிகழ்த்தாது பிறிதொருவரை வைத்து வினையை நிகழ்த்தும் வினை காரண வினை எனப்படும்.
காரண வினை வி, ப்பி, விப்பி ஆகிய விகுதிகளை பெற்றும் செய், வை, பண்ணு ஆகிய துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படும்.
உதாரணம்
செய்வி
நடப்பி
செய்விப்பி
படிக்க செய்தான்
படிக்க வைத்தான்
படிக்க பண்ணினான்
கர்த்தாவின் அடிப்படையில்
செய்வினை
செயற்பாட்டு வினை.
செய்வினை
எழுவாயை கருத்தாவாக கொள்ளும் வினை செய்வினை எனப்படும்.
தெரிநிலை வினையின் அமைப்பை கொண்டது.
வினையடி + கால இடைநிலை + விகுதி
உதாரணம்
கமலா பாட்டு பாடினாள்
திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார்
செயற்பாட்டு வினை
செயற்படுபொருளை எழுவாயாக கொண்ட வினை செயற்பாட்டு வினை எனப்படும்.
இதன் அமைப்பு பின்வருமாறு அமையும்.
வினையெச்சம் + படு + கால இடைநிலை + விகுதி
செயற்பாட்டு வினை அனைத்தும் செயல்படு பொருள் குன்றா வினையாக அமையும்.
உதாரணம்
பாடல் கமலாவால் பாடப்பட்டது.
திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது.
ஒரு நபரின் உரையின் அடிப்படையில்
ஏவல் வினை
வியங்கோள் வினை
ஏவல் வினை
முன்னிலையில் இருப்பவரை ஒரு வினையை நிகழ்த்துமாறு ஏவும் வினை ஏவல் வினை எனப்படும்.
ஏவல் வினை இரண்டு வகைப்படும்.
கடப்பாட்டு ஏவல் வினை
விருப்பு ஏவல் வினை
கடப்பாட்டு ஏவல் வினை
கேட்பவர் சொல்பவருகேற்ப செய்ய வேண்டும் என்ற கட்டளையை பிறப்பிக்கும் வினை கடப்பாட்டு ஏவல் வினை எனப்படும்.
கடப்பாட்டு ஏவல் வினை இரண்டு வகைப்படும்.
கடப்பாட்டு ஏவல் ஒருமை வினை
கடப்பாட்டு ஏவல் பன்மை வினை.
கடப்பாட்டு ஏவல் ஒருமை வினை
உடன்படுவினை
வா
போ
எதிர்மறை வினை
வராதே
போகாதே.
கடப்பாட்டு ஏவல் பன்மை வினை
உடன்படுவினை
வாருங்கள்
போங்கள்
எதிர்மறை வினை
வராதீர்கள்
போகாதீர்கள்
விருப்பு ஏவல் வினை
கேட்பவர் முன்னிலையில் இருப்பவர் சொல்வதை தனது கட்டளையாக ஏற்காது தனது விருப்பத்தை தெரிவிப்பதாக அமையும் வினை விருப்பு ஏவல் வினை எனப்படும்.
விருப்பு ஏவல் வினை இரண்டு வகைப்படும்.
விருப்பு ஏவல் ஒருமை வினை
விருப்பு ஏவல் பன்மை வினை.
விருப்பு ஏவல் ஒருமை வினை
உடன்படுவினை
வாவேன்
போவேன்
எதிர்மறை வினை
வராதவேன்
போகாதவேன்
விருப்பு ஏவல் பன்மை வினை
உடன்படுவினை
வாங்களேன்
போங்களேன்
எதிர்மறை வினை
வராதீர்களேன்
போகாதீர்களேன்
வியங்கோள் வினை
வினை அடிகளுடன் க, இய, இயர், அ, அல், அட்டும் ஆகிய விகுதிகளை கொண்டு முடியும் வினை வியங்கோள் வினை எனப்படும்.
உதாரணம்
வாழ்க !
வாழிய !
வாழியர் !
வர !
ஓம்பல் !
வாழட்டும் !
எதிர்மறை வியங்கோள் வினை
வியங்கோள் வினை எதிர்மறையாக அமையும் போது அல் எனும் இடைநிலை சேர்ந்து வரும்.
உதாரணம்
மறவற்க - மற + அல் + க
உண்ணற்க -உண் + அல் + க
வியங்கால் வினை பின்வரும் பொருள்களை உணர்த்தும்.
வாழ்த்தல் - இன்பம் பெருகுக !
வைத்தல் - இனவெறி ஒழிக !
வேண்டல் - அருள் புரிக !
விதித்தல் - அமைச்சரிடம் முறையிடுக !
ஒரு வினையின் நிகழ்வின் அடிப்படையில்
உடன்பாட்டு வினை
எதிர்மறை வினை
உடன்பாட்டு வினை
வினை நிகழ்வினை உணர்த்தும் வினை உடன்பாட்டு வினை எனப்படும்.
உதாரணம்
வருவார்
படிப்பாள்
போவான்
எதிர்மறை வினை
வினை நிகழாமையை உணர்த்தும் வினை எதிர்மறை வினை எனப்படும்.
எதிர்மறை வினை பின்வருமாறு உருவாக்கப்படும்.
எதிர்மறை வினை இடைநிலைகளை சேர்த்து உருவாக்கப்படும்.
ஆ
வராது
போகாது
ஆத்
வராதே
போகாதே
மாட்டு
வரமாட்டேன்
போகமாட்டேன்
இல்லை, வேண்டாம் ஆகிய எதிர்மறை வினைமுற்று சேர்த்து உருவாக்கப்படும்.
வேண்டாம்
வர வேண்டாம்
போக வேண்டாம்
இல்லை
போகவில்லை
வரவில்லை
ஏகார பின்னொட்டை சேர்த்து உருவாக்கப்படும்.
வராதே
போகாதே
எச்சங்களும் எதிர்மறையாக கருதப்படும்.
வராத
காலம் காட்டும் அடிப்படையில்
தெரிநிலை வினை
குறிப்பு வினை
தெரிநிலை வினை
காலத்தை வெளிப்படையாக காட்டி நிற்கும் வினை தெரிநிலை வினை எனப்படும்.
இது மூன்று வகைப்படும்.
இறந்த கால தெரிநிலை வினை
நிகழ் கால தெரிநிலை வினை
எதிர்கால தெரிநிலை வினை
நிகழ்கால தெரிநிலை வினை
உதாரணம்
கமலா வருகிறாள்
அவன் பாடுகிறான்
சீதை வருகிறாள்
நிகழ்காலம் தொடர்காலத்தை உணர்த்தும்
உதாரணம்
அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
எங்கள் நாட்டில் வருடம் முழுவதும் மழை பெய்கிறது
எனக்கு அடிக்கடி காய்ச்சல் வருகிறது
நிகழ்காலம் எதிர்காலத்தை உணர்த்தும்
உதாரணம்
அப்பா நாளை வருகிறார்
நான் நாளை கொழும்புக்கு போகிறேன்
நான் நாளை வருகிறேன்
இறந்த கால தெரிநிலை வினை
உதாரணம்
கமலா வந்தாள்
ராமன் வந்தான்
சீதை பாடினாள்
இறந்த காலம் தொடர்காலத்தை உணர்த்தும்
போய்க்கொண்டிருந்தேன்
எழுதிக் கொண்டிருந்தேன்
சீதை இந்நேரம் பாடி கொண்டிருந்தாள்
இறந்தகாலம் எதிர்காலத்தை உணர்த்தும்
சற்று இருங்கள் இதோ வந்து விட்டேன்
கொஞ்சம் பொறுங்கள் இதோ வந்து விட்டேன்
எதிர்கால தெரிநிலை வினை
கமலா வருவாள்
ராமன் வருவான்
சீதை பாடுவாள்
நான் தினமும் அதிகாலையில் எழும்புவேன்
அப்பா இறால் விரும்பி சாப்பிடுவார்
குறிப்பு வினை
காலத்தை வெளிப்படையாக காட்டாமல் குறிப்பால் உணர்த்தும் வினை குறிப்பு வினை எனப்படும்.
நல்லன்
பெரிது
மெல்ல
அழகானவை
உறவினர்
சிறந்தன
முற்றுப்பெறும் அடிப்படையில்
எச்ச வினை
முற்றுவினை
திணை, பால், எண், இட விகுதிகளை பெற்று முற்றுப்பெற்ற வினை முற்றுவினை எனப்படும்.
வந்தான்
போனான்
இருந்தான்
நடந்தான்
எச்ச வினை
திணை, பால், எண், இட விகுதிகளை பெறாது எச்ச வினை விகுதிகளை பெற்று வரும் வினை எச்ச வினை எனப்படும்.
பெயரெச்சவனை
வினையெச்சவினை
பெயரெச்சவினை
திணை, பால், எண், இட விகுதிகளை பெறாது குறை சொல்லாய் நின்று பெயர்ச்சொற்களை கொண்டு முடியும் வினை பெயரெச்ச வினை எனப்படும்.
ஆ - உண்ணா
உம் - செய்யும்
உடன்படு பெயரெச்ச வினை
எதிர்மறை பெயரெச்ச வினை
உடன்படு பெயரெச்ச வினை
உடன்படு பெயரெச்ச வினை மூன்று வகைப்படும்.
நிகழ்கால பெயரெச்ச வினை
எதிர்கால பெயரெச்ச வினை
இறந்தகால பெயரெச்ச வினை
நிகழ்கால பெயரெச்ச வினை
வினையடி + நிகழ்கால இடைநிலை + அ எனும் அமைப்பை கொண்ட வினை நிகழ் கால பெயரெச்ச வினை எனப்படும்.
உதாரணம்
நடக்கின்ற
நடக்கிற
நடவாநின்ற
எதிர்கால பெயரெச்சவினை
வினையடி + உம் எனும் அமைப்பை கொண்டவினை எதிர்கால பெயரெச்சவினை எனப்படும்.
உதாரணம்
செய்யும்
வரும்
போகும்
எதிர்கால பெயரெச்சம் கால இடைநிலைகளால் காலம் காட்டுவதில்லை மாறாக விகுதிகளினாலே காலத்தை காட்டுகிறது.
எதிர்கால பெயரெச்ச வினை முற்றுவினையாகவும் வரும்.
உதாரணம்
ஓடும்
எச்ச வினை - வேகமாக ஓடும் முயல்
முற்றுவினை - முயல் வேகமாக ஓடும்.
போகும்
எச்ச வினை - மெதுவாக போகும் ஆமை
முற்றுவினை - ஆமை மெதுவாக போகும்.
இறந்தகால பெயரெச்ச வினை
வினையடி + இறந்தகால இடைநிலை + அ என்னும் அமைப்பை கொண்டவினை இறந்தகால பெயரச்ச வினை எனப்படும்.
உதாரணம்
செய்த
தின்ற
உண்ட
பாடின
ஓடின
போன
எதிர்மறை பெயரெச்ச வினை
வினையடி + எதிர்மறை இடைநிலை + அ எனும் அமைப்பை கொண்டவினை எதிர்மறை பெயரெச்ச வினை எனப்படும்.
உதாரணம்
செய்யாத
போகாத
உண்ணாத
வினையடி + ஆ எனும் அமைப்பை கொண்ட எதிர்மறை வினைகளும் உண்டு.
உதாரணம்
உண்ணா
போகா
செய்யா
எதிர்மறை பெயரெச்ச வினைகள் மூன்று காலத்திற்கும் பொதுவானது.
வினையெச்ச வினை
திணை, பால், எண், இட விகுதிகளை பெறாது குறை சொல்லாய் நின்று வினைச்சொற்களைக் கொண்டு முடியும் வினை வினையெச்ச வினை எனப்படும்.
வினையெச்ச விகுதிகள்
உதாரணம்
இ - ஓடி
மை - உண்ணாமை
மே - உண்ணாமே
ய் - போய்
ஆ - உண்ணா
உ - நடந்து
மல் - உண்ணாமல்
ஆல் - உண்டால்
அ - உண்ண
றி - அன்றி
து - உண்ணாது
இதில் செய்து, செய்ய என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சம் கூட்டு வினையாக்கத்தின் போதும், வாக்கிய இணைப்பின் போதும் பயன்படுத்தப்படுகிறது.
உதாரணம்
செய்து வாய்ப்பாட்டு வினையெச்சம்
கூட்டு வினையாக்கம் - எடுத்து வை
வாக்கிய இணைப்பு கொழும்புக்கு போய் மாமாவை சந்தித்தேன்.
செய்ய வாய்ப்பாட்டு வினையெச்சம்
கூட்டு வினையாக்கம் - செய்யச்சொல்
வாக்கிய இணைப்பு - மாமாவை சந்திக்க கொழும்புக்கு போனேன்.
மேலும், செய்தால் எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம் நிபந்தனை பொருளில் வரும்.
உடன்படு வினை - வந்தால் தருவேன்.
எதிர்மறை வினை - வராவிட்டால் தரமாட்டேன்.
வினையெச்சம் 2 வகைப்படும்.
தெரிநிலை வினையெச்சம்
குறிப்பு வினையெச்சம்
தெரிநிலை வினையெச்சம்
வினையடி + கால இடைநிலை + வினையெச்ச விகுதி எனும் அமைப்பைக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டும் வினை தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.
இது 3 வகைப்படும்.
நிகழ்கால வினையெச்சம்
எதிர்கால வினையெச்சம்
இறந்த கால வினையெச்சம்
நிகழ்கால வினையெச்சம்
உடன்படுவினை
உண்ண
பெய்ய
எதிர்மறை வினை
உண்ணா
பெய்யா
இறந்தகால வினையெச்சம்
உடன்படுவினை
வந்து
செத்து
எதிர்மறை வினை
வராது
சாகாது
எதிர்கால வினையெச்சம்
உடன்படுவினை
வந்தால்
இருந்தால்
எதிர்மறை வினை
வராவிட்டால்
இருக்காவிட்டால்
குறிப்பு வினையெச்சம்
வினையடி + வினையெச்ச விகுதி எனும் அமைப்பைக் கொண்டு காலத்தை வெளிப்படையாக காட்டாமல் குறிப்பால் காட்டும் வினை குறிப்பு வினையெச்சம் எனப்படும்.
உதாரணம்
மெதுவாக
வேகமாக
மெல்ல
அடிச்சொல்லின் எண்ணிக்கையின் அடிப்படையில்
தனிவினை
கூட்டுவினை
தனிவினை
பகாப்பதமாக அமையும் வினையடி தனிவினை எனப்படும்.
உதாரணம்
வா
போ
காண்
கூட்டுவினை
பகுபதமாக அமையும் வினையடி கூட்டுவினை எனப்படும்.
இது 3 வகைப்படும்.
பெயர் + வினை = கூட்டுவினை
வினை + வினை = கூட்டுவினை
இடை + வினை = கூட்டுவினை
பெயர் + வினை = கூட்டுவினை
உதாரணம்
கை + பிடி = கைப்பிடி
தந்தி + அடி = தந்தையடி
சூறை + ஆடு = சூறையாடு
சீர் + அழி = சீரழி
வினை + வினை = கூட்டுவினை
உதாரணம்
ஆடி + பாடி = ஆடிப்பாடி
காத்து + இரு = காத்திரு
கட்டி + பிடி = கட்டிப்பிடி
இடை + வினை = கூட்டுவினை
உதாரணம்
முன் + என = முன்னேறு
பின் + பாங்கு = பின்வாங்கு
சரி + பார் = சரிபார்
அடிப்படை பொருளின் அடிப்படையில்
முதல் வினை
துணை வினை
முதல்வினை
வினையின் முதல் உறுப்பாக வந்து அடிப்படை பொருளை தரும்வினை முதல் வினை எனப்படும்.
உதாரணம்
பார்த்தான்
ஓடினான்
விழுந்தான்
வைத்தேன்
உடைந்தது
பார்த்தேன்
நடித்தேன்
ரசித்தேன்
துணைவினை
கூட்டுவினையில் இரண்டாவது உறுப்பாக வந்து அடிப்படை பொருளை தராது வேறு இலக்கண பொருளைத் தரும் வினை துணை வினை எனப்படும்.
உதாரணம்
ஓடப்பார்த்தேன்
விழப்பார்த்தேன்
படித்திருப்பேன்
படிக்கவைத்தார்
மூடிக்கொண்டது
பெய்யப்போகிறது
தொடரும்.....
0 Comments