இலங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சி - HOLLANDER RULE IN SRI LANKA


இலங்கையில் 

ஒல்லாந்தரின் ஆட்சி


இலங்கையில் ஒல்லாந்தர் - HOLLANDER IN SRI LANKA

ஒல்லாந்தரின் தாய் நாடு ஒல்லாந்து ஆகும். போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்து ஒரு நூற்றாண்டாகும்போது தமது கடல் வழியைத் தயார்செய்து கொண்ட ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வரத்தொடங்கினர். ஆரம்ப காலத்தில் ஒவ்வாத்தில் இருந்த பல்வேறு வர்த்தக சங்கங்கள் ஆசியாவுக்கு வந்ததால் ஒல்லாந்த வர்த்தக சங்கங்களுக்கிடையே போட்டி நிலவியது. இதனால் கிழக்கில் பலம் வாய்ந்த அதிகாரத்தைக் கட்டியெழுப்ப ஒல்லாந்தரால் முடியவில்லை. எனவே 1602ம் ஆண்டு ஒல்லாந்த வர்த்தக சங்கங்கள் சிலவற்றை இணைத்து ஒவ்லாந்த கிழக்கிந்திய வர்த்தக சங் கம் (VOC) நிறுவப்பட்டது. அது முதற் கொண்டு ஒல்லாந்தர் சார்பாக அவர்களது ஆசிய அரசியல். வர்த்தக செயற்பாடுகளை VOC முன்னெடுத்துச் சென்றது.வர்த்தக சங்கத்தின் முக்கிய குறிக்கோள் இலாபம் பெறுதலாக இருந்ததால் ஒல்லாந்தர் பிரதானமாகப் பொருளாதார ரீதியில் இலாபம் பெறுவதற்கே ஆசியாவுக்கு வந்தனர் என்பது தெளிவாகின்றது.

ஆசியாவுக்கு வந்த ஒவ்லாந்தர் ஜாவாத் தீவில் பத்தேவியாவைத் தலைமையகமாகக் கொண்டு தொடர்ந்து தமது அதிகாரத்தைப் பரவலடையச் செய்யத் தொடங்கினர். ஓல்லாந்தர் ஆசியாவுக்கு வந்து சிறிது காலத்தில் சிறந்த வகையான கறுவா, மிளகு போன்ற வர்த்தகப் பொருள்களைக் கொண்ட இலங்கை மீது அவர்களது கவனம் சென் றது. போர்த்துக்கேயரால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பினால் இன்னல்களுக்கு உள்ளாகி இருந்த கண்டி இராச்சிய அரசர்கள் ஒல்லாந்தருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள விரும்பியதால். இங்கு வந்து இந்நாடு பற்றி மென்மேலும் அறிந்து கொள்ள ஒல்லாந்தரால் முடிந்தது.

1602ஆம் ஆண்டு ஒல்லாந்தத் தூதுவனான ஜோரிஸ்வான் ஸ்பில்பேர்ஜன் இலங்கைக்கு வந்து முதலாம் விமலதர்மசூரிய மன்னனைச் சந்தித்தான். அதன் பின்னர் சிபல் த வாட் என்ற மற்றுமொரு தூதுவன் வந்தான். எனினும் இந்தத் தூதுப் பயணங்களால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. ஓல்லாந்தருக்கும் கண்டி இராச்சிய ஆட்சியாளருக்குமிடையே பலன் தரும் தொடர்பு ஆரம்பமானது மன்னன் இரண்டாம் இராஜசிங்கனின் ஆட்சிக் காலத்திலாகும். போர்த்துக்கேயர் அடிக்கடிகண்டி இராச்சியத்துடன் போர்செய்ததால் அவர்களை இந்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவதே இரண்டாம் இராஜ சிங்க மன்னனின் குறிக்கோளாக இருந்தது. இதன் பொருட்டு தேவையான கடற்படை மன்னனிடம் இல்லாமையால் அவன் ஒல்லாந்தரின் துணையை நாடினான்.

இரண்டாம் இராஜசிங்க ஒல்லாந்தருக்கும் இடையே மன்னனுக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்து, தூதுப் பயணம் என் பவற்றின் விளைவாகப் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி செய்ய ஒல்லாந்தர் விரும்பினர். ஒல்லாந்தக் கடற்படை அதிகாரியான வெஸ்டர் வோல்டிற்கும் இலங்கைத் தூதுவர்களுக்கும் இடைய யிலான உடன் பாட்டின்படி 1638 ஆம் ஆண்டு இரு பிரிவினரும் ஒன்று சேர்ந்து மட்டக்களப்பில் போர்த்துக்கேயக் கோட்டையைத் தாக்கினர். எனினும் கடுஞ் சமர் ஏற்படுவதற்கு முன்னர் கோட்டையில் இருந்த போர்த்துக்கேயர் சரணடைந்தனர். இதனால் மகிழ்வுற்ற மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான்.

1638 ஆம் ஆண்டு கண்டி - ஒல்லாந்த உடன்படிக்கையின் அடிப்படை விடயங்கள்

 போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்குக் கண்டி அரசனுக்கு உதவ ஒவ்லாந்தர்,இணங்குதல்.

ஒல்லாந்தருக்கு ஏற்படும் செலவைப் பணம், பொருள்கள் (கறுவா,மிளகு, தேன், மெழுகு) என்ப னவற்றின் மூலம் செலுத்த அரசன் உடன்படல்.

யானை தளிர்ந்த கண்டி இராச்சியத்தின் ஏனைய வர்த்தகப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பான ஏகபோக உரிமை ஒவ்லாந்தருக்குக் கிடைத்தல்.

போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றிய கோட் டைகளில் அரசன் விரும்பினால் ஒல்லாந்தப் படை தங்கி இருக்கலாம்.

1638 ஆம் ஆண்டு மட்டக்களப்புக் கோட்டையைக் கைப்பற்றியது முதற்கொண்டு போர்த்துக்கேயரை,இந்நாட்டிலிருந்து வெளியேற்ற மேலும் இருபது ஆண்டுகள் சென்றன. இக்காலத்தில் போர்த்துக் கேயரிடம் இருந்த திருகோணமலை, நீர்கொழும்பு, காவி, களுத்துறை, கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கோட்டைகள் கண்டி இராச்சியப் படையினராலும் ஒல்லாந்தராலும் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு 1658 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரை முற்றிலும் இலங்கையிலிருந்து வெளியேற்றக்கூடியதாக இருந்தது. மன்னனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்படி போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கோட்டைகளில் ஒவ்லாந்தப் படையை நிறுத்துவது அரசனின் விருப்பப்படி நடைபெறவேண்டியிருந்தது. எனினும் அந்த வச னத்தை மறந்த ஒல்லாந்தர் பல காரணங்களை முன்வைத்துத் தமக்குச் சாதகமான பிரதேசங் களில் கோட்டைகளை மன்னிடம் ஒப்படைக்கத் தவறினர். இதனால் ஒல்லாந்தருக்கும் இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் இடையில் நல்லெண் ணம் நிலவவில்லை.

II ஆம் இராஜசிங்க மன்னன் இரண்டு நோக்கங் களை நிறைவேற்றும் பொருட்டே ஒல்லாந்தரை இந்நாட்டிற்கு அழைத்தான்.

ஒல்லாந்தரின் உதவியுடன் போர்த்துக்கேயரை இலங்கையிலிருந்து வெளியேற்றுதல்

போர்த்துக்கேயரின் கீழிருந்த பிரதேசங்களைக் கண்டி இராச்சியத்துடன் இணைத்து சுதந்திர இலங்கையைத் தோற்றுவித்தல்.

இவற்றில் முதல் நோக்கத்தை மன்னனால் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தபோதிலும் போர்த்துக்கேயரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பல பிரதேசங்களில்ஒல்லாந்தரின் ஆதிக்கம்பரவியதால் இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை. இதனால் அரசன் ஒல்லாந்தரைத் தாக்கி அவர்கள் பெறக்கூடிய பிரதேசங்களைக் குறைக்க வழிவகைகளை மேற்கொண்டான். அரச னின் இந்தச் செயலால் போர்த்துக்கேயரிடமிருந்த நிலப்பகுதியைவிடக் குறைந்த நிலப்பகுதியே 1658ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தருக்குக் கிடைத்தது.

முதலாம் விமலதர்ம சூரியனுக்குப் பின் கண்டி இராச்சியத்துக்கு முக்கிய இடத்தினைப் பெற்றுக் கொடுத்தவனே இரண்டாம் இராஜ சிங்கன் ஆவான். ஒல்லாந்தருடனான கடிதத் தொடர்பின்போது தான் இலங்கையின் பேரரசன் என வெளிப்படுத்தினான். ஒல்லாந்தரும் தமது கடிதங்களில் மன்னனை " திரீசிங்களாதீஸ்வர" என்ற பெயரில் குறிப்பிட்டிருந்தனர். மன்னன் ஒல்லாந்தருக்குக் கடிதம் எழுதும்போது “எனக்கு பணிபுரியும் நேசமான ஒல்லாந்தர் எனக் குறிப்பிட்டதோடு ஒல்லாந்தர் மன்னனுக்குக் கடிதம் எழுதும்போது "தங்களின் பணிவான சேவகன்" என்றும் குறிப்பிட்டனர். 1665 1668 வரையிலான காலப்பகுதியில் ஒல்லாந்தர் பல தாக்குதல்களை மேற்கொண்டு கண்டி இராச்சியத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றினர். எனினும் 1670 1675 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இரண்டாம் இராஜசிங்க மன்னன் மேற்கொண்ட பல தாக்குதல்களால் ஒல்லாந் தருக்குச் சொந்தமான பல பகுதிகளை அவர்கள் இழந்தனர். இதனால் கண்டி இராச்சியத்துடன் போர்செய்வது தமது அழிவுக்கு வழி வகுக்கும் என்பதைப் புரிந்து கொண்ட ஒல்லாந்தர் 1670ஆம் ஆண்டின் பின்னர் கண்டி இராச்சியத்துடன் மோதுவதைத் தவிர்த்துக் கொண்டனர்.

கண்டி இராச்சியம் தொடர்பாக ஒல்லாந்தரின் குறிக்கோளில் காணப்படும் சிறப்பியல்புகள்.

ஒல்லாந்தக் கிழக்கிந்திய வர்த்தக சங்கத்திற்கு நட்டம் ஏற்படும் மோதல்களிலிருந்து விலகி, கண்டி இராச்சியத்துடன் சமாதானமாகச் செயற்பட ஒல்லாந்தர் முயன்றமை.

கண்டி இராச்சிய மன்னனின் நல்லெண் ணத்தைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மன்னனுக்கு பரிசில்கள் வழங்கியமை

மன்னனுடன் கடிதத்தொடர்பை ஏற்படுத்தி யமை, இவற்றின் மூலம் அரசனின் நல்லெண்ணத்தைப்பெற்று, கண்டி இராச் சியத்தில் விளையும் கறுவாவைப் பெற்றுக் கொள்ளல் ஒல்லாந்தரது நோக்கமாக இருந்தது.

உபசம்பதா சடங்கின் பொருட்டு அரசனுக் குக் கப்பல்களைக் கொடுத்து உதவியமை. இரண்டாம் விமலதர்மசூரியன், விஜய இராஜசிங்கன், கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஆகிய மன்னர்களுக்கு ஒல்லாந்தர் இவ்வாறு கப்பல்களைக் கொடுத்து உதவினர்.

உச்ச நிலையிலான வர்த்தக இலாப மீட்டுவதில் ஒல்லாந்தரின் குறிக்கோள்

கண்டி இராச்சிய மன்னன் வேறு வெளி நாட்டவருடன் வர்த்தகத் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வதை ஒல்லாந்தர் கூடி யளவு தடை செய்தனர்.

மன்னனுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் கண்டி இராச்சியத்திற்கும் கரையோரப் பிரதேசங்களுக்கும் இடையி லான கடவைகளை மூடி விடுதல்

கரையோரப்பிரதேசத்தில் சில இடங்களில் நெற்பயிர்ச் செய்கையை முன்னேற்ற ஒவ் லாந்தர் நடவடிக்கை எடுத்தல். இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து நெல் இறக் குமதி செய்ய செலவாகும். செலவினைக் குறைத்தல்.

கறுவா பயிரிடவும் அதனைப் பாதுகாக் கவும் நடவடிக்கை எடுத்தல். கறுவா பயிர்ச் செய்கையால் ஒல்லாந்தர் அதிக இலாபத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய தாக இருந்ததால் அவர்கள் இதனை செயற் படுத்தினர்.

ஒல்லாந்தருக்கு இலாபம் கிடைக்கும் கரும்பு, கோப்பி, பருத்தி என்பவற்றைப் பயிர்செய்ய நடவடிக்கை எடுத்தல்.

கண்டி இராச்சியத்திற்கும் ஒல்லாந்தருக்கும் இடையிலான மோதல்கள்

ஒல்லாந்தரது ஆட்சியால் துன்புற்ற கரையோர மக்கள் தமக்கு உதவும்படி கண்டி மன்னனான கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனை வேண்டினர். 1760 ஆம் ஆண்டுகளின் இறுதியில் நீர்கொழும்பு, மாத்தறை ஆகிய பிரதேசங்களில் ஒல்லாந்தருக்கு எதிராகக் கலகங்கள் ஏற்பட்டன. கண்டி மன்னன் கலகொட அதிகாரம் என்பனின் கீழ் கரையோரப்பிரதேசத் திற்குப் படையொன்றை அனுப்பினான். அந்தப் படையினர் திடீர் தாக்குதல் சிலவற்றை நடாத்தி, கட்டுவன கோட்டை, மாத்தறைக்கோட்டை உட் பட சில இடங்களைக் கைப்பற்றினர். பின்னர் ஒல் லாந்தர் இவ்விடங்களை மீண்டும் கைப்பற்றிக் கொண்டனர்.

1764 ஆம் ஆண்டு ஒல்லாந்த ஆளுனரான பொன் வென் எக் என்பவனின் தலைமையில் ஆறு படைப் பிரிவுகளின் மூலம் கண்டி இராச்சியம் ஆக்கிரமிக்கப்பட்டது. எனினும் இவைகளில் ஒன்றும் கண்டியை அடையவில்லை. வழமையான தாக்குதல் மூலம் கண்டி மக்கள் இப்படைகளைத் தோல்வியுறச் செய்தனர்.

1765 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் மீண்டும் கண்டி இராச்சியத்தைத் தாக்கத் தொடங்கினர். கண்டி மக்களின் தாக்குதல்களுக்கு முகங் கொடுத்து ஒல்லாந்தர் இம்முறை கண்டியினுள் சென்றனர். மன்னன் கீர்த்தி ஸ்ரீ இராஜ சிங்கன் சமாதானம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததால் ஒல்லாந்தர் தமக்குச் சாதக மான பல நிபந்தனைகளை முன்வைத்தனர். எனினும் ஒல்லாந்தரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் நியாயமானவை அல்லாததால் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள மன்னன் விரும்பவில்லை. இதனால் ஒல்லாந்தர் தகரைச் சூறையாடி ஒரு மாதத்திற்கு மேல் அங்கு தங்கியிருந்தனர். எனினும் உணவுப் பற்றாக்குறை, நோய், மழை என்பன காரணமாக அவர்கள் கண்டியைக் கைவிட்டு மீண்டும் கொழும்புக்கு வந்தனர்.

ஒல்லாந்தரின் படையெடுப்பு. அச்சுறுத்தல் என்பனவற்றால் பல ஆண்டுகள் துன்புற்றதால் 1766 ஆம் ஆண்டு கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் ஒல்லாந்தருடன் சமாதான உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டான். 1768 ஆம் ஆண்டு உடன்படிக்கையினால் கண்டி இராச்சியம் கரையோரப்பகுதியை இழந்தது. கண்டி இராச்சிய மரபு ரீதியான வர்த்தகத்திற்கு இதனால் தாக்கம் ஏற்பட்டது. இலங்கையில் ஒல்லாந்தரின் கீழிருந்த பகுதிகளின் உரிமை இந்த உடன்படிக்கையின் மூலம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. உடன்படிக்கையில் உள்ளடக் கப்பட்ட பல நிபந்தனைகள் ஒல்லாந்தருக்கு சாதகமாக இருந்தன. இதனால் உடன்படிக்கையின் நிபந்தனைகளைத் தளர்த்துவதற்குக் கண்டி மக்கள் ஒல்லாந்தருடன் பேச்சு வார்த்தைகள் நடாத்திய போதும் ஒல்லாந்தர் அதற்கு இணங்கவில்லை. இறுதியில் அதனை நடைமுறையில் செயலிழக்கச் செய்வதற்கு மக்கள் நடவடிக்கைகளை மேற் கொண்டனர்.

நன்றி 

Post a Comment

0 Comments