தருமன்
தருமன் அல்லது யுதிஷ்டிரன் எனும் கதாபாத்திரம் பாரத இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் வரும் பாண்டு மற்றும் குந்தி ஆகிய தம்பதியின் மகன் ஆகும். தருமன் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவராக காணப்படுகின்றார். பாண்டுவின் சாபம் காரணமாக குந்திக்கு பாண்டுவின் மூலம் குழந்தைகள் பிறக்கவில்லை. இதனால் குந்திக்கும் எமதர்மனுக்கும் பிறந்தவரே இந்த தருமன். தருமத்தின் வழியின் நின்று மாறாதவர். குருச்சேத்திரப் போரில் பாண்டவர்கள் சார்ந்த அணியின் தலைவராக இருந்தவர். இவர் அத்தினாபுரம் மற்றும் கிருஷ்ணனின் வேண்டுகோளுக்கிணங்க மயனால் நிருமாணிக்கப்பட்ட இந்திரப்பிரஸ்தம் ஆகிய நகரங்களின் அரசராகவும் கருதப்படுகின்றார்.
இவர் அனைத்து தர்ம சாஸ்த்திர நூல்களையும் கற்றறிந்தவர். தருமரின் தந்தையான பாண்டு ஒரு முனிவரால் சபிக்கப்பட்டதன் விளைவாக அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு காட்டிற்கு சென்று வாழ்ந்து வந்தனர் அப்போது பாண்டு தமக்கு குழந்தைகள் இல்லாததை நினைத்து வருந்தினார் இதனால் குந்தி பாண்டுவை திருமணம் செய்வதற்கு முன்பு துருவாச முனிவரால் தேவர் மூலம் குழந்தைகளை பெற்றெடுக்கும் வரத்தை பற்றி பாண்டுவிடம் தெரிவித்தாள். அதன்படி குந்தியும் தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்ட முதலில் எம தருமராசன் தோன்றி அவர்மூலம் தருமர் பிறந்தார். அவரை அடுத்து வாயு தேவர் மூலம் பீமனும், இந்திரன் மூலம் அர்ச்சுனனும் குந்திக்கு பிறந்தனர். மேலும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாதுரிக்கும் அந்த மந்திரத்தை குந்தி கூறியதன் மூலம் அவளுக்கும் அஸ்வினி குமாரர்களுக்கும் நகுலனும், சகாதேவனும் பிறந்தனர். இவர்களே தருமரின் சகோதரர்களும் பாண்டவர்களும் ஆகும்.
தனது மனைவியான திரெளபதியை தனது சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தினார். இவருக்கும் திரௌபதிக்கும் பிரதிவிந்தியன் எனும் மகனும் இருந்தது. இவர் கௌரவர்களுடன் நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்களையும் மனைவியான திரௌபதியையும் இழந்தார். அதன்பின் 12 ஆண்டுகள் தனது மனைவி மற்றும் சகோதரர்களுடன் வன வாசம் செய்தும் ஒரு வருடம் அஞ்ஞான வாசமும் செய்தார். அஞ்ஞான வாசம் என்பது தமது உண்மையான உருவத்தை மறைத்து தலைமறைவு வாழ்க்கை தடத்துவதாகும். அதன்பிறகு தான் சூதின் மூலம் இழந்தவற்றையெல்லாம் குருசேத்திரப் போரின் மூலம் மீட்டெடுத்து அஸ்தினாபுரத்தின் அரசனாகவும் முடுசூடப்பட்டார்.
நன்றி
0 Comments