கருட புராணம் பகுதி - 02
நரகம் ஓர் அறிமுகம்
கருடா... பூவுலகில் மனிதன் வாழும்போது மகிழ்ச்சியுடன் வாழ்கின்றான். எப்பொழுது அவன் உடலிலிருந்து அவனுடைய உயிரானது ஆன்மா வடிவில் வெளியே வர துவங்கியதோ... அப்போது அதன் அடுத்த பயணத்தை துவங்க ஆரம்பிக்கின்றது. உடலில் இருந்து பிரிந்த ஆன்மாவின் அளவானது மனிதர்களின் உடலில் உள்ள கட்டைவிரல் அளவே இருக்கும். அந்த வடிவம் கொண்ட ஜீவாத்மா எமலோகம் சென்று கொண்டிருக்கும் வழியில் ஒரு வன்னி மரத்தின் கீழே சில காலங்கள் தங்கியிருக்கும். அதன்பிறகு அந்த ஆன்மாவினால் செய்யப்பட்ட வினைகளின் பயனாக கிடைத்த சரீரத்துடன் அதாவது, கர்ம சரீரத்துடன் எமலோகம் செல்லத் துவங்கும். எமகிங்கரர்கள் அந்த ஜீவனை எமலோகத்தின் அரசராக இருக்கக்கூடிய எமதர்மனின் முன்பாக கொண்டு போய் நிறுத்துவார்கள்.
சித்ரகுப்தன் :
மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் மனித உடலுடன் அவன் செய்த பாவ, புண்ணியங்களை எல்லாம் எடுத்துரைக்கக்கூடிய கணிகன் ஒருவர் எமதர்மராஜாவிடம் இருப்பார். மனிதர்கள் செய்யும் நல்வினையும், தீவினையும் பன்னிரு சிரவணர்களின் உதவியோடு அறிந்து கொண்டு, அதை பட்டியலுடன் எமதர்மராஜாவிடம் தெரிவித்து, அவரின் ஆணைப்படி அவரவர்கள் செய்த பாவங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகளையும் தெரிவிக்கக்கூடியவர். அவருடைய பட்டியலிலிருந்து எவரும் தப்பிக்க இயலாது. அவரே சித்ரகுப்தன் என்று அழைக்கப்படக்கூடியவர்.
தண்டனை பெறுதல் :
சித்ரகுப்தனின் பட்டியலானது ஜீவாத்மா மற்றும் எமனின் முன்னிலையில் அறிவித்து அவர்களின் பாவங்களின் தன்மைக்கு ஏற்ப தண்டனைகளையும் சொல்ல... எமதர்மன் எமகிங்கரர்களை கொண்டு அத்தகைய தண்டனையை அப்பொழுதே நிறைவேற்ற ஆணையிடுவார். இதில் எந்தவொரு காலதாமதமும் நேரிடாது. இவ்விடத்தில் நமக்கு எவரின் பரிந்துரையும் வேலை செய்யாது. நாம் செய்த நல்வினைகள் மட்டுமே நமக்கு துணையாக அமையும்.
நரகம் என்பது என்ன? , நரகத்தில் எவ்விதமான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன? என்பதை பற்றி கூற இயலுமா? என்று கருடாழ்வார் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை வினவினார்.
கருடனே...!! இதுவரை மண்ணுலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவன்களும் செய்ய வேண்டிய தானங்களும், தர்மங்களும்... அதற்கு உண்டான பலன்கள் என்ன? என்பதையும் இதுவரை யாம் உனக்கு இங்கு உரைத்தோம். இனி
நரகம் என்பது என்ன? , அது எவ்விதமான தோற்றத்தை உடையது? என்பதை பற்றியும் யாம் உனக்கு உரைப்போமாக....
தீவினைகள் செய்யும் ஒவ்வொரு மானிட உயிர்கள் அனைவரும் தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இத்தனை நரகம் உள்ளதா?
தன்னுடன் வாழ்ந்தவர்களுக்கும், தன்னை நம்பியவர்களுக்கும், மற்றவர்களது வாழ்க்கையை அழித்து தான் மட்டும் சுகமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களும், தீய எண்ணங்கள் கொண்டவர்கள் என பகுத்தறிந்து உணரும் அனைத்து மானுட பிறவிகளும், காலதேவனால் உருவாக்கப்பட்ட இறப்பு, பிறப்பு விதிகளின் அடிப்படையில் என்றாவது ஒருநாள் காலதேவனுக்கு அடிபணிய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். காலதேவனுக்கு அடிபணியும் அந்த சூழ்நிலையில் மண்ணுலகில் மானுடன் ஈட்டிய பொருட்கள், பொன், மங்கை சுகம் என எதுவும் அவனுடன் இருக்காது. அந்த காலதேவனால் உருவாக்கப்பட்ட நரகங்கள் என்பது ஆயிரம், 2 ஆயிரம், பத்தாயிரம் அல்ல. மொத்தம் 84 லட்ச நரகங்கள் இருக்கின்றன.
முக்கியமான நரகங்கள் என்னென்ன?
84 லட்சம் நரகங்களில் முக்கியமான நரகங்கள் என்பது 28 ஆகும். இந்த 28 நரகங்களில் சொல்ல முடியாத வகையில் ஏராளமான... மிகக் கொடுமையான முறையில் தீய எண்ணங்களால் வாழ்ந்து மடிந்த ஜீவராசிகள்... உடல்களே இல்லாமல்... வேதனை, துன்பங்கள் மற்றும் வலிகளின் மத்தியில் வாழ வேண்டிய சூழ்நிலையில் கொடுமையான நிலையில் அமைந்திருக்கும்.
28 நரகங்கள் என்பது,
1. தாமிஸ்ரம்
2. அந்த தாமிஸ்ரம்
3. ரௌரவம்
4. மகா ரௌரவம்
5. கும்பீபாகம்
6. கால சூத்திரம்
7. அசிபத்திரம்
8. பன்றி முகம்
9. அந்தகூபம்
10. கிருமி போஜனம்
11. அக்னிகுண்டம்
12. வஜ்ர கண்டகம்
13. சான்மலி
14. வைதரணி
15. பூயோதம்
16. பிராணரோதம்
17. விசஸனம்
18. லாலா பக்ஷம்
19. சாரமேயாதனம்
20. அவீசி
21. பரிபாலனம்
22. க்ஷாரகர்த்தமம்
23. ரக்ஷோக்னம்
24. சூலப்புரோதம்
25. தந்தசூகம்
26. வடாரோதம்
27. பர்வாவர்த்தகைம்
28. சூசிமுகம்
ஆகும்.
நாராயணன் நரகங்களைப் பற்றி எடுத்துரைத்துக் கொண்டிருக்க ஒவ்வொரு நரகங்களுக்கும் என்னென்ன வித்தியாசம்? என்றும்,
என்னென்ன தவறுகள் செய்தால், என்னென்ன நரகங்களுக்கு இழந்த ஜீவராசிகளின் ஆன்மாக்கள் செல்வார்கள்? என்பது குறித்தும் கருடாழ்வார் நாராயணனிடம் வினாக்களை எழுப்பினார்.
தாமிஸ்ரம் நரகம்
கருடா... நரகங்களையும், நரகங்களில் ஏற்பட இருக்கக்கூடிய தண்டனைகளையும் நிர்ணயிப்பது என்பது வாழ்ந்து மடிந்த ஜீவராசிகளின் கரங்களில் மட்டுமே இருக்கின்றது. வாழும்போது அவர்கள் செய்த வினையின் பயனாக அந்த ஆன்மா அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் யாவும் நரகங்களில் எண்ணற்றவையாக இருக்கின்றன.
பிறப்பும், இறப்பும் எதன் அடிப்படையில் அமைகின்றது?
பூமியில் வாழ்கின்ற பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட ஜீவராசிகளில் உடலுக்கு மட்டும்தான் அழிவு அதாவது, மரணம் என்பது உண்டு. உடலின் உள்ளே இருக்கும் ஆன்மாவிற்கு எப்பொழுதும் அழிவு என்பதே கிடையாது. ஒரு ஆன்மாவின் பிறப்பு மற்றும் இறப்பு என்பது அந்த ஆன்மாவினால் செய்யப்படுகின்ற நல்வினை மற்றும் தீவினைகளின் அடிப்படையில் அமைகின்றது.
மனிதன் வாழும் இந்த பூவுலகில் மற்றவர்களுக்கு சொந்தமான பொருளை தான் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவது தவறாகும். செய்கின்ற செயல் தவறு என்று அறிந்தும் அதை செய்யத் துணிகிறார்கள். பொருட்கள் மட்டுமின்றி தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை கொண்டு மற்றவருடைய இல்லாள்களையும் விரும்பி அவர்களை அடைய நினைப்பது மாபெரும் பாவச்செயலாகும்.
மற்றவர்களின் குழந்தைகளை அபகரித்து அவர்களை துன்பத்தில் ஆழ்த்துவதும், தான் சுகமாக வாழ நினைத்து பலரின் உழைப்பையும், பொருட்களையும் ஏமாற்றி அபகரித்து கொண்டு பூவுலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் அடையும் நரகம் என்பது தாமிஸ்ரம் நரகம் ஆகும். தாமிஸ்ர நரகத்தில் மற்றவர் பொருட்களை அபகரித்து பூவுலகில் சந்தோஷமாக வாழ்ந்த அந்த ஜீவாத்மாவிற்கு தண்டனையாக எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளால் தொடர்ந்து துன்பப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.
அந்ததாமிஸ்ரம்
மனிதர்கள் தங்களுடைய இனத்தை பெருக்கிக் கொள்வது மட்டுமின்றி தங்களின் வாழ்க்கைக்கு துணையாக அமைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட அழகான உறவு என்பது 'திருமணம்" ஆகும். அந்தத் திருமண வாழ்க்கையில் கணவன், மனைவியை ஏமாற்றி விடுவதும்... மனைவி, கணவனை ஏமாற்றி விடுவதும்... அல்லது ஒருவரை ஒருவர் ஏமாற்றி வஞ்சித்து கொண்டாலும் அது மாபெரும் பாவச்செயலாகும்.
அற்ப காரணங்களுக்காக தன்னை நம்பிய வாழ்க்கை துணையை விட்டு பிரிவதும் (விவகாரத்து பெறுவதும்) குற்றமாகும். இத்தகைய பாவச்செயலை செய்தவர்களுக்கு உரிய நரகம் என்பது அந்ததாமிஸ்ரம் ஆகும். இந்த நரகத்தில் இக்கயவர்களின் பார்வைகள் தெரியாத நிலையில் இருள் சூழ்ந்த பகுதியில் தனிமையில் மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டிய நிலையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
ரௌரவம்
ரௌரவ நரகம் 2000 யோசனை சதுரமாக அமைந்திருக்கும். இந்த நரகம் முழங்கால் அளவிற்கு உருக்கிய செம்புகளால் உருவாகி இருக்கக்கூடிய நீர் கடலாக இருக்கும். சுயநல எண்ணம் கொண்டு மற்றவர்களின் குடும்பங்களை அழித்து அவர்களுடைய பொருட்களை பலவந்தமாக அடைந்தவர்களும், தன்னுடைய பேராசை எண்ணங்களுக்காக ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய குடும்பங்களை பிரிப்பதும்... அந்த குடும்ப உறுப்பினர்களை அழித்து வாழும் பகுத்தறிந்து உணரும் உயிரினங்கள் அடையும் நரகம் இதுவாகும்.
இந்த நரகத்தில் சுயநலக்காரர்கள் சொல்ல முடியாத அளவிற்கு அதிக துன்புறுத்தப்படுவார்கள். அதாவது, மனிதர்களாக வாழும் பொழுது பொருட்களுக்காகவும், பொன்னிற்காகவும் மற்றவர்களை ஏமாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் பகுத்தறிந்து வாழும் மனிதர்கள் இறந்த பின்பு ஜீவாத்மாவாக இந்த நரகத்தில் இருக்கும் பொழுது எமகிங்கரர்கள் சூலாயுத்தத்தால் குத்தி குத்தி துன்புறுத்துவார்கள்.
மகா ரௌரவம்
ரௌரவம் நரகத்தில் இருப்பவர்களை காட்டிலும், மிகவும் கொடூரமாக மற்றவர்களின் குடும்பத்தை அழித்து (தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரங்களை கொண்டும்) அவர்களின் பொருட்களுக்காக சொல்ல முடியாத வகையில் துன்பங்களை விளைவித்து நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் என்பது மகா ரௌரவமாகும்.
இந்த நரகத்தில் பார்ப்பதற்கு மிகவும் அருவருக்கத்தக்க கொடூரமான கோர வடிவில் உருவம் கொண்ட குரு என்ற சிறிய தோற்றமுடைய மிருகம் காணப்படும். அந்த மிருகம் பூமியில் வாழ்கின்ற பொழுது தனது விருப்பத்திற்காக பல குடும்பங்களை அழித்து... அதிலும் கொடூரமாகவும்... பலரை ஏமாற்றி அவர்களின் பொருளில் சுகமாக வாழ்ந்தவர்களுக்கு இந்த உயிரின் மூலம் உடலே இல்லாத ஜீவாத்மாவிற்கு வலிகளின் எல்லை வரை துன்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் பலவகையான ரணக்காயங்களை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
கும்பிபாகம்
தன்னுடைய சுவையான உணவிற்காக பூமியில் வாழ்கின்ற பறவைகள், பசு, மான், முயல் போன்ற வாயில்லா உயிரினங்களை வதைத்து கொன்றும், பல விதங்களில் துன்பப்படுத்தும் பாவிகள் சென்றடையும் நரகம் என்பது கும்பிபாகம் ஆகும். இந்த கும்பிபாகம் நரகத்தில் எப்பொழுதும் எண்ணெய் கொப்பரை கொதித்துக் கொண்டே இருக்கும். அதில் தனது சுவைக்காக வாயில்லா ஜீவன்களை வதைத்த ஜீவாத்மாக்கள் எண்ணெய் கொப்பரையில் தள்ளி எமகிங்கரர்கள் மூலம் துன்புறுத்தப்படுவார்கள்.
கால சூத்திரம்
இந்த நரகத்தில் தன்னை ஈன்ற பெற்றோர்களை கவனிக்காமல் கடைசி காலத்தில் துன்புறுத்தியும், அவர்களை அவமதித்தும், அவர்களுக்கு தேவையான பணிவிடைகள் மற்றும் அத்தியாவசியமான தேவைகளை கொடுக்காமலும் அதாவது, உணவின்றி வதைத்த பாவிகள் செல்லும் நரகம் கால சூத்திரம் ஆகும். மண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பெற்றவர்களை உடல் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் காப்பாற்றாமல் அவர்களை விரட்டி அடித்தவர்களும், மற்றவர்களின் பேச்சுக்களை கேட்டு பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தவர்களும், வயதான காலத்திலும் பெற்றோர்கள் ஈட்டும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் அடையும் நரகம் இதுவாகும்.
வயதில் முதியவர்களை பூலோகத்தில் வாழும்போது அவர்களை அடித்து துன்புறுத்தியவர்களுக்கும் இந்த நரகத்தில் ஜுவாலைகள் நிரம்பிய பகுதியில் அடி, உதைகளுடன் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள். மகான்களையும், வயதில் மூத்தவர்களையும் பேச்சுக்களால் அவமதித்தவர்களும், அவர்களின் பொருட்களை அவர்களிடம் அளிக்காமல் ஏமாற்றியவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
இந்த நரகத்தில் சூரியனின் ஜுவாலைகள் போன்ற அனல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இந்த ஜுவாலைகளால் உருவாகக்கூடிய அனல் ஜீவாத்மாக்களில் சரீரம் எரிச்சல் அடைந்து உலர்ந்துபோகும். உணவுகளின்றி பசி அவர்களை வாட்டி வதைக்கும். இந்த நரகத்தில் ஜீவன்கள் எங்கேயாவது நிழல் கிடைக்குமா? என்று அங்கும், இங்கும் ஓடும், புரலும், குதித்துக் கொண்டே இருக்கும். ஆனால், இந்த நரகத்தில் எவ்விடத்திலும் நிழல் என்பது கிடையாது.
அசிபத்திரம்
தன்னுடைய குல தெய்வத்தை நித்தித்தும், குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாமல் வாழ்ந்தவர்களும், தங்களுடைய சுய லாபத்திற்காக மற்றவர்களை அவர்களுடைய குலதெய்வத்தை வழிபடாமல் தடுத்து, அவர்களை தங்களின் தெய்வத்தை வழிபட வைப்பவர்களும் (மதமாற்றம் செய்பவர்களும்), அதர்ம வழியில் பல மக்கள் வழிபட்டு கொண்டு இருக்கக்கூடிய குல தெய்வங்களை அழித்து வாழும் பாவிகள் இறந்த பின்பு செல்லும் நரகம் இதுவாகும்.
அவரவர்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கக்கூடிய தர்ம காரியங்களை செய்யாமல், விலக்கப்பட்ட காரியங்களை செய்யக்கூடியவர்கள் அசிபத்திரம் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள். மதமாற்றம் என்பது ஒருவரின் வழிபாடுகளையும், அவர்களுடைய தனிப்பட்ட அடையாளங்களையும் அளிப்பதாகும். இத்தகைய பாவங்களை செய்த பாவிகளுக்கு இந்த நரகத்தில் சிறியதும், பெரியதுமான பாறைக்கற்கள் நிறைய நிரம்பிய... மேடு, பள்ளமான இடங்கள் சூழ்ந்து காணப்படும். அவ்விடத்தில் கத்திகளை போன்ற கூர்மையான இலைகளைக் கொண்ட ஒருவகையான சாட்டையால் இந்த பாவிகள் அடிக்கப்படுவார்கள்.
அடிகளின் வலிகளை தாங்க முடியாமல் அங்கும், இங்கும் ஓடும் பொழுது மேடு, பள்ளமாக அமைந்துள்ள கற்களினால் இடறி விழுந்து, காயங்கள் ஏற்பட்டு மயக்கம் அடைவார்கள். பூலோகத்தில் வாழும் பொழுது மற்றவர்களின் அறியாமையை தனக்காக பயன்படுத்தியவர்கள் இந்த நரகத்தில் கொடூரமான மற்றும் அகோரத் தோற்றம் கொண்ட பூதங்களினால் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாவார்கள். ஒருவரின் அறியாமையை பயன்படுத்தி சுகமாக வாழ்ந்தவர்கள் ஜீவாத்மாவாக இனம் புரியாத ஒருவிதமான பயம் கொண்ட சூழ்நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கும். உடல் இல்லாத அந்த ஜீவாத்மாவிற்கு அவ்விடத்தில் உடல் கொண்டு வாழும் மனிதர்களின் உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் துன்பங்களின் அளவுகளை விட அதிகமான அளவில் துன்பங்களும், வேதனைகளும் உருவாகக்கூடும்.
பன்றி முகம்
மனிதன் பூமியில் வாழும் பொழுது பேராசைக்காகவும், பொருளாசைக்காகவும் நியாயமாக கொடுக்க வேண்டிய நீதியை கொடுக்காமல், அநீதியை செய்து பொருளீட்டியவர்கள் அடையும் நரகம் பன்றி முகமாகும். தன்னை சார்ந்து வந்தவர்களுக்கு உதவி செய்யாமல், அவர்களை ஏமாற்றி அவர்களுக்கு அநீதி இழைத்த அக்கிரமக்காரர்களை இங்கே பலவகையில் துன்பங்கள் தரும் வகையில் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
குற்றம் செய்தவர்களை தண்டிக்காமல், அவர்களிடமிருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு (லஞ்சமாக பொருளோ அல்லது பணமோ) குற்றமற்ற நிரபராதிகளை தண்டித்து தர்ம நீதிக்குப் புறம்பாக செயல்படக்கூடியவர்கள் இறந்த பின்பு அடையும் நரகம் இதுவாகும். செய்யும் தொழிலை நேர்மையுடன் செய்யாமல், அந்த தொழிலில் உள்ள வேலையை செய்வதற்காக லஞ்சம் வாங்குபவர்கள், அகந்தையோடு, அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களும், பொருளில்லாமல் வறுமையில் வாடியவர்களை ஏமாற்றி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதிகளை வாங்கித் தராமல் அநீதியாக செயல்படக்கூடிய வழக்கறிஞர்களும் செல்லும் நரகம் இதுவாகும்.
பன்றி முகம் நரகமானது பன்றி முகத்துடன் கூடிய கூரிய பற்கள் கொண்ட அருவருக்கத்தக்க கோரமான உருவத்துடன் காணப்படும் மிருகம் இந்த நரகத்தில் இருக்கும். அந்த மிருகமானது இந்த நரகத்தில் இருக்கும் உடல் இல்லாமல் இருக்கும் ஜீவாத்மாக்களை அதன் வாயிலிட்டு கூர்மையான பற்களால் கடித்தும், அந்த நரகத்தில் இருக்கும் எமகிங்கரர்கள் ஜீவாத்மாவின் கை, கால்களை தனித்தனியாக பிரித்தெடுத்தும் அடுப்பிலிட்டு எரிப்பார்கள். அநியாயமாக ஏமாற்றியவர்களுக்கும், நீதியை பணம் வாங்கிக்கொண்டு அழித்தவர்களுக்கும் இந்த நரகத்தில் கொடுக்கும் தண்டனைகள் இதுவாகும்.
அந்த கூபம்
துரோகம் செய்தவர்களும், கொலை புரிந்தவர்களும், மற்றவர்களை சித்திரவதை செய்து கொடுமையாக கொலை செய்த பாவிகளும் அடைகின்ற நரகம் அந்த கூபம் ஆகும். இந்த அந்த கூபம் நரகமானது கிணறு போன்ற வடிவத்தை கொண்டதாகும். இதில் கூர்மையான கொம்புகளை உடைய மாடுகள் இவ்விடத்தில் இருக்கும். கொடுமை செய்த ஜீவாத்மாக்கள் இந்த நரகத்தில் தள்ளப்படும் பொழுது இந்த மாடுகள் அந்த ஜீவாத்மாக்களை கொடூரமாக முட்டி கீழே போட்டு மிதித்து, துன்புறுத்தி ரணக்காயங்களை ஏற்படுத்த துவங்கும்.
காயங்கள் ஏற்பட்டதன் விளைவாக ஜீவாத்மாவின் உடற்பகுதிகளை அங்கிருக்கும் கழுகும், ராஜாளியும் கொத்தித் தின்று கொண்டே இருக்கும். கொசுக்களும், மூட்டை பூச்சிகளும் ஜீவாத்மாவில் இருக்கக்கூடிய உதிரம் போன்ற சக்திகளை உரிய துவங்கும். தேளும், பாம்பும் ஒருபுறமாக கடித்துக் கொண்டே இருக்கும். இவர்களால் கொலை செய்யப்பட்டவர்களின் மேனியில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ, அத்தனை ஆண்டுகள் கொலை செய்த இந்த கொடூர பாவிகள் அந்த கிணற்றை விட்டு வெளியே வர முடியாது. நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க தண்டனைகளின் வீரியமும் அதிகரிக்கத் துவங்கும்.
கிருமி போஜனம்
பலருடைய உழைப்புகளை சுரண்டி அவர்களுக்கு தர வேண்டிய ஊதியத்தை அளிக்காமல் தான் மட்டும் சுகமாக வாழ்ந்த பாவிகள் வர வேண்டிய நரகம் கிருமி போஜனம் ஆகும். உலகில் வாழும் தன்னை போன்ற பிற மனிதர்களை பற்றி கவலை கொள்ளாமல் அவர்களுக்கு ஊறு விளைவித்து தான் மட்டும் சுகமாய் வாழ்ந்து மடிந்தவர்கள் இந்த நகரத்தை அடைந்து எண்ணற்ற துன்பங்களை அடைவார்கள்.
தன்னை சார்ந்து இருப்பவர்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி தனக்காக மாற்றிக் கொள்ளக்கூடிய பாவிகள் அடைய வேண்டிய நரகம் கிருமி போஜனமாகும். இந்நரகமானது லட்சம் யோஜனை பரப்பளவைக் கொண்டதாகும். சுயநலமாக வாழ்ந்து தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னை சார்ந்தவர்களையும், விருந்தினர்களையும் புறக்கணித்தவர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுகிறார்கள்.
மேலும், தன்னை போன்று பிறரையும் காணாமல் அவர்களை ஏதோ கிருமிகளைப் போல கண்டு அவர்களை துளைத்தெடுத்து துன்பத்தில் ஆழ்த்தியவர்களும், தெய்வ நிந்தனை செய்தவர்களும் இந்த நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். இறந்து ஜீவாத்மாவாக மாறிய ஆன்மாக்கள் இந்த நரகத்தில் விழுந்ததும், அவர்கள் இங்கே புழுவாக மாறி விடுவார்கள். இந்த நரகத்தில் இருக்கக்கூடிய பெரிய புழுக்கள் சிறிய புழுக்களை பலவிதத்தில் துன்புறுத்த துவங்கும். இங்கு இருக்கக்கூடிய கிருமிகளும் பலவிதமாக அந்த ஆன்மாக்களை கடித்து, துளையிட்டு துன்புறுத்த துவங்கும்.
அக்னி குண்டம்
மற்றவர்களுக்கு சொந்தமான பொருட்களை தன்னிடம் இருக்கும் வலிமையை கொண்டு பலாத்காரமாகவோ அல்லது அவர்களின் விருப்பம் இல்லாமல் தனது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அகங்காரம் பிடித்த மனிதர்கள் இறந்த பின்பு அடையும் நரகம் அக்னி குண்டம் ஆகும். தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தி தனக்கு வேண்டிய காரியத்தை சாதித்து கொள்ளக்கூடிய பாவிகள் அடையும் நரகம் இதுவே ஆகும். மற்றவர்கள் கஷ்டப்பட்டு தனது வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்பில் சேர்த்த பொருட்களை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களும், திருடர்களும் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கக்கூடிய நரகம் அக்னி குண்டம் ஆகும்.
அக்னி குண்ட நரகமானது தனக்குள் பல லட்ச சூரியன்களை கொண்டிருக்கக்கூடிய உலகமாகும். ஒரு நீண்ட தடியில் மிருகங்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது போல் இறந்த ஆன்மாக்களும் ஒரு நீண்ட தடியில் எமகிங்கரர்களால் கட்டப்பட்டு அக்னி குண்டத்தின் நடுவில் வைக்கப்படுவார்கள். அவர்கள் செய்த தவறினால் பாதிக்கப்பட்டவர்கள் வருந்தி, அழுதது போல்.... இவர்கள் சேர்த்த பாவங்கள் குறையும் வரை அவர்கள் அந்த இடத்திலேயே இருந்து வெந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.
தன்னிடம் இருக்கும் அதிகாரங்களை அளவுக்கு அதிகமாக தவறாக பயன்படுத்திய பகுத்தறிந்து உணரும் ஜீவராசிகள் (மனித உயிரினங்கள்) இறந்த பின்பு அந்த ஆன்மாக்களை எந்தவிதமான தயவுமின்றி எமகிங்கரர்கள் பிடித்து தூக்கி அக்னி குண்டத்தில் எறிந்து தன்னிடமிருக்கும் ஆயுதங்களின் மூலமாக அந்த ஜீவாத்தாமவை கொடுமைப்படுத்த துவங்குவார்கள். அடியில் அனல் இருக்க அனலின் கொடுமையை தாங்க முடியாமல் எழுந்திரிக்க முயலுவார்கள்.
அந்த சமயம் எமகிங்கரர்கள் அடிக்க... சொல்ல வார்த்தைகள் இல்லாத அளவில் பலவிதமான இன்னல்களை அங்கே உடல் இல்லாத அந்த ஜீவாத்மாவானது அனுபவிக்க துவங்குகிறது. பூவுலகில் வாழும் பொழுது சில காலம் சொகுசாக வாழ்ந்த ஆன்மாவானது செய்த பாவத்தின் விளைவாக நீண்ட நெடுங்காலம் அந்த அக்னி குண்டத்தில் வாழ வேண்டிய சூழ்நிலை அமையும். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் ஒவ்வொருவரும் நெருப்பால் எரிந்து துன்பத்தை அனுபவிக்க வேண்டியவர்கள் ஆவார்கள்.
வஜ்ர கண்டம்
மோகத்தால் தகாத உறவுகளை மேற்கொள்ளக்கூடியவர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டம் ஆகும். வஜ்ர கண்ட நரகத்தில் நெருப்பு ஜுவாலைகளால் உருவாக்கப்பட்ட பதுமைகளும், தூண்களும் நிரம்பியிருக்கும். இந்த நரகத்தில் நுழைந்தவுடன் நெருப்பால் உருவாக்கப்பட்ட பதுமைகளையும், தூண்களையும் கூடித்தழுவுமாறு தண்டனைகள் கொடுக்கப்படும். மேலும் அக்னி ஜுவாலைகளால் உருவாக்கப்பட்ட துணை கட்டிப்பிடிக்க சொல்லி எமகிங்கரர்களிடம் இருக்கும் சாட்டையினால் எமகிங்கரர்கள் உடல் சுகத்திற்காக பாவம் இழைத்த அந்த ஆன்மாவை அடித்து துன்புறுத்துவார்கள். தூணின் வெப்பமும், பதுமையின் வெப்பமும் தாளாமல் வெளியேற முடியாமலும், பலவித இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் நடுவில் செய்த பாவமானது தீரும் வரையில் அந்த தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.
சான்மலி நரகம்
நல்லது எது? தீயது எது? என்று பாராமல் அனைவருடனும் பழகி உறவு முறை கூட அறிந்து கொள்ளாமல், எந்த உறவாயினும் அந்த உறவுடன் உறவு வைத்துக் கொள்ளும் பாவிகள் அடைகின்ற நரகம் என்பது சான்மலி நரகமாகும். தங்களுடைய வாழ்க்கையை ஒரு வரைமுறைக்குள் அமைத்துக் கொள்ளாமல், எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்று பூலோகத்தில் சிறிது நேரத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து பாவங்களை பொதி மூட்டையாக சேமித்து வாழ்ந்த பாவிகள் அடையும் நரகம் இதுவாகும்.
தன்னுடைய ஆசைக்காகவும், விருப்பத்திற்காகவும் விருப்பமில்லாதவர்களை கொடுமைப்படுத்தும் கொடூரர்கள் அனைவரும் கூர்மையான ஆயுதங்கள் மூலமாகவே இந்த சான்மலி நரகத்தில் தண்டிக்கப்படுவார்கள். ஒற்றுமையுடன் வாழும் தம்பதியர்களின் மீது பொறாமை கொண்டு... அவர்களை ஏதாவது ஒரு விதத்தில் பிரிக்க வேண்டும் என்று எண்ணி... தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டு... அவர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடிய கல் நெஞ்சம் உடைய பகுத்தறிந்து உணரும் ஆறறிவு ஜீவராசிகள் வாழ்ந்து மடிந்து அடையும் நரகமும் இதுவே ஆகும்.
மற்ற மங்கையர்கள் மீது ஆசை கொண்டு அவர்களை ஏதாவது ஒருவிதத்தில் பழிதீர்க்க வேண்டும் என்று எண்ணி மற்றவர்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் வாழ்க்கையை அழித்து... நாசம் செய்யக்கூடிய அகங்காரம் பிடித்த கொடூர பாவிகளாக வாழ்ந்தவர்களை இந்த நரகத்தில் தாங்க இயலாத அளவில் பல விதமான துன்பங்களையும், இன்னல்களையும் ஏற்படுத்தி எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் மனதில் ஏற்படும் ஆசைகளும், விருப்பப்பட்டவர்களுடைய விருப்பம் இல்லாமல் ஏதாவது ஒரு வகையில் அவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் பாவிகள் இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள். சிறிது நேர சுகத்திற்காக செய்யக்கூடாத தவறுகளை இழைக்கும் இந்தப் பாவிகளுக்கு இந்த நரகத்தில் கூர்மையான முட்களை கொண்ட தடிகளாலும், அடர்ந்த முட்செடிகள் இருக்கக்கூடிய பகுதிகளில் இந்த பாவங்களை செய்த ஜீவாத்மாக்கள் தள்ளப்பட்டு எமகிங்கரர்கள் அடித்து துன்புறுத்தப்படுவார்கள்.
வைதரணி
தன்னிடம் இருக்கும் அதிகார பலத்தினால் திறமை இருப்பவர்களுக்கு உதவி செய்து அவர்களை நல்வழிப்படுத்தாமல், அவர்களின் திறமையை தவறான வழிக்கு பயன்படுத்தும் விதமாக அவர்களை மாற்றுபவர்களும், பொருள் செல்வத்தினால் கிடைத்த அதிகாரத்தையும், பதவியையும் கொண்டு நல்வழிக்கு செல்லாமல் மற்றவர்களை ஏமாற்றி அதர்ம வழியில் வாழ்ந்து மடிந்த பாவிகள் அடையும் நரகம் வைதரணி நரகமாகும். சூழ்நிலைக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டு நயவஞ்சகமாக நடித்து மற்றவர்களை ஏமாற்றி, தர்மத்திற்கு புறம்பான வழிகளில் செயல்பட்டு, பொருள் ஈட்டி சொகுசாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கின்ற நயவஞ்சகர்கள் இறந்த பின்பு அடையும் நரகம் இதுவே ஆகும்.
வைதரணி நரகம் என்பது வாழ்க்கையில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் தன்னுடைய விருப்பம் போல் வாழ்ந்து மற்றவர்களுக்கு இடையூறுகளையும், துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்கள் சென்றடைகின்ற நரகமாகும். வைதரணி என்பது நதியல்ல. அதில் ரத்தமும், சீழும் நிரம்பி காணப்படும். இந்த நதியில் முதலைகள், பாம்புகள், அட்டைகள், சதை துணுக்குகள், மனித கழிவுகள் என அனைத்தும் கலந்து காணப்படும். பூவுலகில் சொகுசாக வாழ்ந்த ஆன்மாக்கள் உடலை இழந்த பின்பு செய்த பாவங்களின் விளைவாக இந்த நரகத்தை அடையும் பொழுது வைதரணி நதியில் தள்ளப்படுவார்கள்.
இந்த நதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அருவருக்கத்தக்க கொடூரமான மிருகங்கள் உடல் இல்லாத அந்த ஜீவாத்மாவை பல விதங்களில் துன்புறுத்தி இன்னல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். அங்கிருக்கும் திமிங்கலங்கள் ஆன்மாவை விழுங்கினாலும் ஆன்மாவானது சாகாமல் வெளிப்படும். ஆனால் ஆன்மாவின் உடலில் காயங்கள் ஏற்பட்டு நதியில் இருக்கும் அட்டைகளாலும், பாம்புகளாலும் அவஸ்தைக்கு ஆளாவார்கள். வலி தாங்க முடியாமல் ஆன்மாவானது அலறினால் அதன் வாயில் நதியில் காணப்படும் மனித கழிவுகள் உள்ளே செல்லும் அல்லது தலைமுடியானது சிக்கிக்கொள்ளும்.
நதியில் நடக்கும் துன்பங்கள் தாளாமல் கரைகள் கண்ணுக்கு தென்பட்டு அந்தக் கரையை அடைந்து மேலே ஏறினால் அங்கே எமகிங்கரர்கள் கூறிய முட்களை கொண்ட ஆயுதங்களால் அந்த ஆன்மாவை மென்மேலும் துன்புறுத்தி மீண்டும் அதே நதியில் தள்ளிவிடுவார்கள். நயவஞ்சகமாக செயல்புரிந்து பூலோகத்தில் பேரும், புகழும் அடைந்தவர்கள் எமலோகத்தில் வைதரணி நதியைக் கடக்க முடியாத அளவில் எமகிங்கரர்களாலும், நதியில் வாழும் கொடூர பிராணிகளாலும் துன்பத்தை சந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
பூயோதம்
பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனிதர்கள் தன்னைப்போல பல லட்ச மக்களுக்கு எது நன்மை? எது தீமை? என தெரிந்தாலும் அவற்றையெல்லாம் உதறி தள்ளிவிட்டு தனக்கு எது நன்மையோ? அதை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தீமைகளையும், அழிவுகளையும் ஏற்படுத்தி வாழக்கூடிய இழிவான செயல்களை புரிந்த பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அடைகின்ற நரகம் பூயோதம் நரகமாகும். சிறிதும் அச்சமும், நாணமும் இன்றி இழிவான மக்களுடன் கூடி மகிழ்ந்து ஒழுக்க குறைபாட்டுடன் வாழக்கூடிய பகுத்தறிவாளர்கள் அடைகின்ற நரகமும் இதுவே ஆகும்.
உடலும், ஆன்மாவும் இணைந்த நிலையில் பூலோகத்தில் வாழக்கூடிய மக்கள் எந்தவிதமான இலக்குகளும், லட்சியங்களும் இன்றி எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை வாழலாம் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு... மற்றவர்களுக்கு பலவகையில் துன்பங்களை ஏற்படுத்தி மிருகங்களைப் போல சுற்றித்திரியும் கயவர்கள் சென்றடைகின்றன நரகம் பூயோதம் ஆகும். தன்னை போன்ற சக மனிதர்களுக்கு தீமைகளை புரிந்து அவர்கள் இகழ்ந்து பேசும் நிலையில் வாழக்கூடிய பகுத்தறிவாளர்கள் அடையும் நரகமும் இதுவே ஆகும்.
எந்தவொரு லட்சியங்களும், கனவுகளும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களை பற்றி கவலை கொள்ளாமல், ஊர் ஊராக சுற்றி தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடியவர்கள் இந்த நரகத்தில் துன்பங்களை அனுபவிக்க தயாராக இருப்பார்கள். இந்த நரகமும் வைதரணி நரகத்தை போலவே இருக்கும். ஆனால் இது சிறிய அளவில் ஒரு குட்டையை போன்ற அமைப்பை கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த குட்டையில் ராட்சச வடிவம் கொண்ட நண்டுகளும், தவளைகளும், அரணை போன்ற உயிரினங்களும் நிரம்பி காணப்படும்.
இந்த குட்டையில் நீருக்கு பதிலாக சிறுநீரகமும், மலமும் நிறைந்திருக்கும். செய்கின்ற பாவத்தின் விளைவாக இந்த நரகத்தை அடைகின்றவர்களை அங்கிருக்கும் மிருகங்களாலும், எமகிங்கரர்களாலும் துன்புறுத்தப்படுவார்கள். இந்த துன்பத்திலிருந்து வெளியேற குட்டையின் கரைகளில் முயற்சி செய்து வெளியேறும் ஆன்மாக்கள் கரைகளில் நிரம்பியிருக்கும் கோழை சளிகளினால் வழுக்கி மறுபடியும் அந்த குட்டையிலேயே விழுந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருப்பார்கள்.
பிராணரோதம்
தன்னுடைய ஆதாயத்திற்காக கால்நடைகளை வளர்த்து அவற்றை துன்புறுத்தி அவற்றில் இருந்து என்னென்ன விஷயங்களை தமக்காக எடுத்துக்கொள்ள முடியுமோ... அவற்றையெல்லாம் தன்னுடையதாக மாற்றிக் கொண்டு, அந்த கால்நடைகளால் தனக்கு லாபம் இல்லை என்று தெரிந்தவுடன் அதை பாதுகாக்காமல் விரட்டி விடக்கூடிய கொடும்பாவிகள் சென்றடையும் நரகம் பிராணரோதம் ஆகும். விலங்குகளை வேட்டையாடி அந்த விலங்குகளை கொடூரமான முறையில் கொள்ளக்கூடிய பகுத்தறிந்து வாழும் மனித உயிர்கள் இறந்த பின்பு சென்று சேரும் நரகம் இதுவே ஆகும்.
காளை, நாய், கழுதை போன்ற மிருகங்களை சரியான முறையில் பேணிக்காத்து வளர்க்காமல் அதனிடமிருந்து தனக்கு வேண்டியவற்றை சம்பாதித்துக் கொள்ளும் பகுத்தறிவாளர்கள், அந்த உயிரினத்திடமிருந்து இனியும் ஆதாயம் இல்லை என்று உணர்ந்தவுடன் ஈவு, இரக்கம் எதுவுமின்றி அந்த விலங்குகளை விரட்டி விடக்கூடிய அல்லது கொல்லக்கூடிய பகுத்தறிந்து உணரும் ஜீவாத்மாக்கள் சென்றடைகின்றன நரகம் பிராணரோதமாகும்.
வாயில்லா உயிரினங்களுக்கு உதவுவாகவும், பேணிக்காப்பதாகவும் கூறி பொருட்களை வாங்கி முறையாக அந்த உயிரினங்களை பாதுகாக்காமல் அதனால் வந்த பொருட்களை தன்னகத்தே வைத்துக்கொண்டு சொகுசாக வாழ்ந்து மடிகின்ற ஜீவாத்மாக்கள் மரணம் அடைந்த பின்பு எமகிங்கரர்களால் அழைத்து சென்று தள்ளப்படுகின்ற நரகம் பிராணரோதம் ஆகும்.
பலகோடி தெய்வங்கள் குடியிருக்கக்கூடிய நஞ்சையும் அமிர்தமாக மாற்றி தரும் வல்லமை கொண்ட கறவை மாடுகளையும், காளை மாடுகளையும் பொருட்களுக்காகவும், சுவைக்காகவும் கொடூரமான முறையில் கொன்று உண்டு மகிழும் பாவிகள் இறந்த பின்பு செல்கின்ற நரகம் இதுவே ஆகும். சுதந்திரமாக சுற்றித் திரிகின்ற வாயில்லா ஜீவன்களான மான், முயல் போன்றவற்றை வேட்டையாடுகின்ற வேட்டைக்காரர்கள் இந்த நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
மற்றவர்களிடத்தில் பிரபலத்துவம் அடைவதற்காக வாயில்லா உயிரினங்கள், விலங்குகளை துன்புறுத்தக்கூடிய கொடூர பாவிகளும், பகுத்தறிவாளர்களும் சென்று சேரும் நரகம் இதுவே ஆகும். தன்னுடைய ஆராய்ச்சி தொடர்பான விஷயங்களுக்காக பயன்படுத்தக்கூடிய விலங்குகளின் நிலைகளைப் பற்றி கவலை கொள்ளாமல் விலங்குகளின் நிலைகளையும், மருந்துகளின் தன்மைகளையும் அறிந்து அந்த கொடூரமான மருந்துகளை வாயில்லா உயிரினங்களின் மீது பயன்படுத்தக்கூடிய கொடூரமான நெஞ்சங்களை கொண்ட படித்தும் பகுத்தறிந்து உணராத படுபாவிகள் சேரக்கூடிய நரகமும் இதுவேயாகும்.
பிராணரோதம் நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது நரகத்தில் எந்த மூலையில் இருந்தும் அம்புகள் வந்த வண்ணமாகவே இருக்கும். அந்த அம்புகளினால் ஜீவாத்மாக்களில் ஏற்படும் பலவிதமான காயங்களால் துன்பப்படுவார்கள். நரகத்தில் நுழைந்தது முதல் எமகிங்கரர்களால் கூர்மையான ஆயுதங்கள் மூலமாகவும், அம்புகள் மூலமாகவும் ஜீவாத்மாக்கள் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும். பாவங்களின் அளவுகளைப் பொறுத்து தண்டனை காலமும் நிர்ணயம் செய்யப்படும்.
விசஸனம்
தன்னிடம் இருக்கக்கூடிய பொருட்களின் பலத்தினை அனைவரிடத்திலும் காட்டுவதற்காகவும், மற்றவர்கள் தங்களை எப்பொழுதும் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கும், யாகங்களை வளர்க்கக்கூடிய பொருள் படைத்த பகுத்தறிவாளர்கள் உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்பு ஜீவாத்மாவாக சென்று சேரக்கூடிய நரகம் விசஸனம் ஆகும். அருள் தரக்கூடிய வேள்விகளை நடத்துவதாக கூறி மக்களிடமிருந்து பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொள்வார்கள்.
மேலும், அந்த வேள்விகளை முறையான வழியில் நடத்தாமல் அந்த வேள்வியில் கிடைத்த பொருட்கள் மற்றும் மற்றவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட பணத்தை குறைவான கணக்குடன் எடுத்துரைத்து, மீதி இருக்கும் பணத்தை தன்னுடையதாக வைத்துக்கொண்டு தரமற்ற பொருட்களை யாகங்களில் பயன்படுத்தும் நயவஞ்சகர்கள் சென்று சேரக்கூடிய நரகம் இந்த நரகமாகும். பால் கறந்து அனைவரின் பசிகளை போக்கக்கூடிய வல்லமை கொண்ட, இறைவனும் குடியிருந்து மக்களை காத்து ரட்சிக்கும் வடிவமாக காட்சி தருகின்ற பசுமாடுகளை கொடூரமான முறைகளில் துன்புறுத்தக்கூடிய பாவிகள் சென்று சேரும் நரகம் இதுவாகும்.
மற்றவர்களின் மீது பொறாமை கொண்டும், தான் மட்டும் எப்பொழுதும் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டும், மந்திரங்களை தவறாக பயன்படுத்தக்கூடிய நயவஞ்சகர்களும், தீய எண்ணங்களை மனதில் கொண்ட வண்ணமாக தாம் கொண்ட எண்ணம் ஜெயிப்பதற்காக தவறான பல விஷயங்களை செய்யக்கூடிய பகுத்தறிவாளர்களும் சென்று சேரும் நரகம் என்பது விசஸனம் ஆகும்.
ஆடம்பரம் எண்ணம் கொண்டு மற்றவர்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் செய்யக்கூடிய யாகங்களை நடத்துபவர்கள் அடைகின்ற நரகம் என்பது விசஸனம் ஆகும். விசஸனம் நரகத்தில் இவர்களுக்கு கூர்மையான முட்கள் பொருத்தப்பட்ட சவுக்குகளால் உடல் இல்லாத அந்த ஜீவாத்மாவை அடித்து அடித்து செய்த பாவங்களை உணரும் வகையிலும், செய்த பாவங்களை நினைத்து வருந்தும் வகையிலும் பலதரப்பட்ட முறையில் துன்புறுத்தப்படுவார்கள்.
லாலா பட்ச நரகம்
தன்னை நம்பி வந்தவர்களை தன்னுடைய ஆசைக்காகவும், இச்சைகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தீய எண்ணங்கள் நிறைந்த பகுத்தறிவாளர்கள் சென்று சேரக்கூடிய நரகம் லாலா பட்ச நரகமாகும். திருமண வாழ்க்கையில் தனது வாழ்க்கைத் துணைவியாக இருக்கக்கூடியவர்களை முறையற்ற வகையில் துன்புறுத்தி அதில் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய கொடூரமான மனம் கொண்ட படுபாவிகள் சென்று சேருகின்ற நரகமும் இதுவே ஆகும். வக்கிரமான ஆசைகளைக் கொண்டு மற்றவர்களை அந்த ஆசைக்கு கட்டாயப்படுத்தி இணங்க வைக்கக்கூடிய எண்ணம் கொண்ட பாவிகள் சென்று அடையக்கூடிய நரகம் இதுவாகும்.
பூலோகத்தில் வாழும் பொழுது எதிர்பாலின மக்களின் மீது ஆசை கொண்டு அவர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களினால் சுகம் காணக்கூடிய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் இந்த நரகமாகும். இத்தகைய பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட பகுத்தறிவாளர்களான மனிதர்கள் இந்த நரகத்தில் அவர்கள் கொண்ட ஆசைகளின் விளைவாகவே தண்டனைகளையும் அனுபவிப்பார்கள்.
அவர்களின் உடலில் இருந்து வெளிப்பட்ட உயிரணுக்களை போன்ற வடிவம் கொண்ட கொடூரமான உருவத் தோற்றத்தை கொண்ட உயிரினங்களால், உடலற்ற ஆன்மாவானது பலவிதமான துன்பத்தை அனுபவிக்கும். இந்த நரகத்தில் இவர்கள் கொண்ட எண்ணத்திற்கு ஏற்பவே தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. அதாவது, சிலந்தி வலைகளைப் போல பல பின்னல்கள் கொண்ட அமைப்பினால் ஜீவாத்மாவானது பிடிக்கப்பட்டு இந்திரிய தோற்றம் கொண்ட உயிரினங்களினால் அந்த ஜீவாத்மாவானது சொல்வதற்கு இயலாத அளவில் பலவிதமான வலிகளுக்கும், வேதனைகளுக்கும் ஆட்பட்டு துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும்.
தன்னுடைய இன்பத்திற்காக பூமியில் வாழும் பொழுது செய்யும் செயலின் விளைவாக லாலா பட்ச நரகத்தில் அதே முறையில் துன்பத்தையும் அனுபவிப்பார்கள். பூமியில் வாழும் பொழுது எந்த சுகம் இன்பமாக இருக்கின்றதோ, அதே சுகம் மற்றவர்களுக்கு துன்பத்தை அளிக்கும்விதமாக இருக்கும்பட்சத்தில் அந்த சுகத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் வேதனையால் அதில் இச்சை கொண்டு ஈடுபட்ட பகுத்தறிவாளர்களும், மனிதர்களும் இறந்த பின்பு அவர்கள் கொண்ட இச்சையினாலேயே இந்த நரகத்தை சென்றடைந்து அவர்களுக்கான துன்பத்தை அவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள். மோகம் என்பது அளவுடனும், மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் துன்பத்தை ஏற்படுத்தாமலும் இருப்பது அவசியமாகும்.
சாரமேயாதனம்
மற்றவர்களின் மீது கொண்ட கோபத்தினால் அவர்கள் குடிகொண்டு இருக்கும் வீடுகளுக்கு தீ வைப்பதும், மற்றவர்கள் வைத்திருக்கும் பொருட்களின் மீது ஆசை கொண்டு அவர்களிடமிருந்து அந்த பொருட்களை பறித்துக் கொள்வதும், பூமியில் வாழும் பொழுது பொருளை சூறையாடி சேர்த்த பகுத்தறிவாளர்களான மனிதர்கள் இறந்த பின்பு அடைகின்ற நரகம் என்பது சாரமேயாதனம் ஆகும்.
தன்னுடைய தேவைகளுக்காக வாயில்லா ஜீவன்கள் குடி கொண்டிருக்கும் வனங்களை அழிக்கக்கூடிய பகுத்தறிவாளர்களும், அந்த உயிரினங்களுக்கு கொடூரமான முறையில் விஷத்தை கொடுப்பவர்களும் இந்த நரகத்தை அடையக்கூடியவர்கள் ஆவார்கள். பொருள் செல்வத்திற்காக ஆசைப்பட்டு தன் குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது நெருக்கமானவர்களுக்கு அல்லது தன்னை சார்ந்து இருப்பவர்களுக்கு விஷம் கொடுத்து அவர்களை கொன்றுவிடுவார்கள்.
அதன் மூலம் பொருளீட்டி சொகுசாக இந்த பூமியில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் இறந்த பின்பு சென்று சேரும் நரகம் என்பது இந்த நரகமாகும். எவர் மீதோ இருக்கக்கூடிய கோபத்தினாலும், அவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலும் கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன்று குவிக்கக்கூடிய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அடையும் நரகம் இந்த நரகமாகும்.
தான் மட்டும் விரும்பி, அவர்கள் விரும்பாமல் வேண்டாம் என்று சொன்னவர்களின் மீது கொண்ட ஆசையினால் அந்த ஆசையானது வெறியாக மாறி, அவர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணமாக உருவெடுத்து, அந்த எண்ணத்தின் விளைவாக அவர்களை அவலட்சணமாக மாற்றுவது... அதாவது, அவர்களின் மீது அமிலங்களை ஊற்றுவது போன்ற செயல்களை செய்யக்கூடிய தீய எண்ணம் கொண்டவர்கள் சென்று சேரக்கூடிய நரகம் என்பது சாரமேயாதனம் நரகமாகும்.
தன்னுடைய ஆசைகளுக்கு இணங்காமல் நேர்மையாக இருக்கக்கூடியவர்களை துன்புறுத்தும் எண்ணம் கொண்டு, அவர்களின் மீது நயவஞ்சகமாக செயல்பட்டு, அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கக்கூடிய பாவிகளும் அல்லது அவர்களின் தோற்றத்தை யாரும் காணாத வகையில் சிதைக்கக்கூடிய மற்றும் அருவருக்கத்தக்க எண்ணங்களும், செயல்பாடுகளும் கொண்ட பகுத்தறிவாளர்கள் சென்று சேரக்கூடிய நரகம் என்பது இந்த நரகமாகும்.
பூமியில் வாழும் பொழுது பாவங்கள் பல செய்த பகுத்தறிவாளர்களான மனித ஜென்ம பிறவிகள் இறந்த பின்பு அவர்கள் செய்த வினையினால், இந்த நரகத்தில் தள்ளப்படும் பொழுது இங்கு இருக்கக்கூடிய அகோரமான உருவம் கொண்ட இறைச்சிகளை உண்ணக்கூடிய, நாய் போன்ற தோற்றம் கொண்ட மிருகங்களின் வடிவமுடைய, ஜீவராசிகளின் மூலமாக கடித்து, குதறி இறந்த ஜீவாத்மாவானது துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும். எந்தவிதமான பாரபட்சமும் இன்றி மேற்கூறிய பாவங்களை செய்த பகுத்தறிவாளர்களான மனிதப் பிறவிகள் சொல்ல முடியாத அளவிற்கு அந்த மிருகங்களினால் பல இடங்களிலும் கடித்து, குதறி பிரித்தெடுத்து நரகத்தின் பல பகுதிகளில் தூக்கி எறியப்படுவார்கள்.
உடல்கள் இல்லாத ஜீவாத்மாவானது பிரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒன்றிணையும் பொழுது அதே மிருகங்களினால் மீண்டும் மீண்டும் கடித்தும், குதறியும் பிரித்தெடுத்து வீசப்படுவார்கள். உடல் இல்லாத ஜீவாத்மாவை பிரித்தெடுக்கும் பொழுது வலிகளின் உச்சத்திற்கான வேதனைகள் அந்த ஜீவாத்மாவிற்கு உருவாகும். பூமியில் வாழ்கின்ற பொழுது இவர்கள் செய்த வினையினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையும் வேதனைகள் முடியும் காலம் வரை இந்த நரகத்தில் அந்த ஜீவாத்மாக்கள் இதே தண்டனையை திரும்பத் திரும்ப அனுபவித்துக் கொண்டே இருக்கும்.
அவீசி
செல்வங்கள் நிறைந்து இருக்கக்கூடிய பூமியில் மற்ற உயிர்களை காட்டிலும் அறிவு வளர்ச்சியிலும், பகுத்தறிந்து உணரும் வளர்ச்சியிலும் சிறந்து விளங்கக்கூடிய மனிதர்களாக வாழக்கூடிய ஜீவராசிகள், தன்னைப்போல சக மனிதர்களிடம் இருக்கக்கூடிய செல்வங்களை அடையும் பொருட்டு, அவர்கள் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டுகளை அளித்து, வழக்குகளில் ஈடுபட வைத்து, அந்த வழக்குகளுக்கு சாதகமாக பொய் சாட்சிகளை உருவாக்குபவர்கள் பூமியில் சுகமாக வாழ்ந்தாலும் இறந்த பின்பு அவர்கள் அடைகின்ற நரகம் என்பது அவீசி நரகம் ஆகும்.
பொருள் செல்வத்திற்காக மற்றவர்கள் செய்கின்ற குற்றத்திற்கு துணைப்போகிறவர்களும், பொய் சாட்சிகளை கூறி ஒருவருக்கு கொடுமையான தண்டனையை வாங்கி கொடுப்பவர்களும் சென்று சேரக்கூடிய நரகம் என்பது இந்த நரகமாகும். தன்னைப்போல பல சக மனிதர்கள் உண்டு வாழக்கூடிய உணவுப்பொருட்களை தன்னிடம் இருக்கக்கூடிய பொருள் செல்வத்தினால், உதாசீனப்படுத்துபவர்களும், வீணடிக்கின்றவர்களும், தான் மட்டுமே எப்பொழுதும் உயர்ந்தவன், சிறந்தவன், பெரியவன் என்று செருக்கு உள்ளம் கொண்டவர்களும், சதா பொழுதும் தன்னைப்பற்றிய தற்பெருமை பேசி கொண்டு இருப்பவர்களும் இறந்த பின்பு சென்று சேருகின்ற நரகம் என்பது அவீசி நரகமாகும்.
மற்றவர்களைப் பற்றி எந்தவிதமான கவலைகளும் கொள்ளாமல், தான் எப்பொழுதும் உயர்ந்தவன் என்பதை நிரூபிக்கும் பொருட்டு அகம்பாவமான செயல்களை செய்யக்கூடிய பகுத்தறிந்து உணரக்கூடிய பகுத்தறிவாளர்கள் அடைகின்ற நரகம் இந்த நரகமாகும். இந்த நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது பூமியில் தன்னைப்போல வாழக்கூடிய சக மனிதர்களின் மனதினையும், வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் சுக்கு நூறாக நொறுக்கி எவ்விதம் துன்பத்தை ஏற்படுத்தினார்களோ அதே விதத்தில் இந்த நரகத்தில் அவர்களுக்கு தண்டனைகளும் அளிக்கப்படுகின்றன.
இந்த நரகம் மாயைக்கு அப்பாற்பட்ட நரகமாகும். அதாவது, இந்த நரகத்தில் மிக உயர்ந்த மலைகள் பல பரவலாக அமைந்திருக்கும். கூரிய முட்கள் நிரம்பிய மரங்களை போன்ற அமைப்புகள் உடைய கொடூரமான வழித்தடங்களையும் கொண்ட வனங்கள் காணப்படும் இந்த மலையின் உச்சியில், பூமியில் மேற்கொண்ட பாவங்களை செய்த பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அவர்களுடைய உடலற்ற ஜீவாத்மாவை எமகிங்கரர்கள் மலையின் உச்சியிலிருந்து தள்ளிவிடுவார்கள். மலையின் உச்சியிலிருந்து விழுந்த ஆன்மாவானது மலைகளில் இருக்கக்கூடிய அடர்ந்த, கூர்மையான அமைப்புகளை கொண்ட மரம் போன்ற அகோரத் தோற்றம் கொண்டவைகளில் மாட்டியும், மலைகளின் அடிவாரத்தில் விழுந்தும், சுக்கு நூறாக சிதறியும் வேதனைகளை அனுபவிப்பார்கள்.
மலையின் உச்சியிலிருந்து வீசப்பட்டு சிதறிய அந்த ஆன்மாவுடைய பகுதிகளின் மீது அடிவாரத்தில் இருக்கக்கூடிய எமகிங்கரர்கள் வலுவான கற்களினால் மேலும் அந்த ஆன்மாக்களை சிதறடிப்பார்கள். ஆன்மாவின் ஒவ்வொரு பகுதிகளும் சிதறடிக்கும் பொழுது பூமியில் நயவஞ்சகமாக ஏமாற்றி, எவ்விதம் ஒருவருக்கு தீவினைகளை புகுத்தி அவர்களை துன்பத்தில் ஆழ்த்துகின்றோமோ, அதே விதத்தில் அவர்களுக்கு வலிகளும், வேதனைகளும் அவ்விடத்தில் உருவாகிக் கொண்டே இருக்கும்.
சிதறிய அந்த ஆன்மாவின் ஒவ்வொரு பகுதியையும் மலையின் அடிவாரத்தில் இருக்கக்கூடிய எமகிங்கரர்கள் மீண்டும் ஒன்றிணைத்து மலையின் உச்சியிலிருந்து வீசி எறிவார்கள். அவர்கள் செய்த பாவத்தின் அளவிற்கு ஏற்ப அவர்களின் தண்டனை காலங்களும் இவ்விடத்தில் நிர்ணயம் செய்யப்படும். செய்த பாவத்தின் விளைவாக வலிகளும், வேதனைகளும் நிரம்பிய உடலற்ற ஜீவாத்மாவானது தண்டனைகளை அனுபவித்து கொண்டே இருக்கும்.
பரிபாலனம்
சிந்தித்து செயல்படக்கூடிய, மற்ற உயிர்களை காட்டிலும் மேம்பட்டு இருக்கக்கூடிய, பகுத்தறிந்து வாழக்கூடிய மனிதர்களின் அறிவையும், சிந்தனை திறனையும் மட்டுப்படுத்தக்கூடிய போதை பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய பகுத்தறிவாளர்களான மனிதப்பிறவிகள், வாழும் பொழுது அதில் கிடைக்கும் பொருளினால் சுகத்துடன் வாழ்ந்தாலும், இறந்த பின்பு சுகத்தை அனுபவித்த உடலை மண்ணிற்கு இறையாக விட்டுவிட்டு ஜீவாத்மாவாக எமலோகத்திற்கு சென்று சேரக்கூடிய பாவ ஆத்மாக்கள் இருக்கின்ற நரகம் என்பது பரிபாலனம் ஆகும்.
மதியை இழக்க செய்யக்கூடிய மதுவினால் கண்ட சுகத்தினை தான் மட்டும் அனுபவித்து, தன்னுடைய வாழ்க்கையை பூமியில் வாழ்கின்ற காலத்தில் அழித்துக் கொண்டது மட்டுமல்லாமல், தன்னுடன் சார்ந்து இருக்கக்கூடியவர்களையும், அவர்களுடைய பொருட்களின் மீது பற்று கொண்டு, அவர்களையும் இந்த மதியை மயக்க வைக்கக்கூடிய மதுவை குடிக்க வைத்து அல்லது கட்டாயப்படுத்தி இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக வைத்திருக்கக்கூடிய பூமியில் வாழும் பொழுதே மனிதப் பிறவிகளாக இருந்து, மிருகங்களாக வாழ்ந்து கொண்டு இருக்கின்ற பகுத்தறிவாளர்களான மனிதர்கள் இறந்த பின்பு அடையப்போகின்ற நரகமும் இதுவாகும்.
வளங்கள் நிறைந்த இந்த பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனிதப் பிறவிகள் அதாவது, பகுத்தறிவாளர்களான இவர்களை நம்பி தன்னுடன் வந்திருக்கும் எதிர்பாலின மக்களின் மீது இச்சை கொண்டு, அவர்கள் அறியாத வண்ணமாக அவர்களையும் இந்த மதுவை அருந்த வைத்து, அவர்கள் சுய நினைவு இல்லாமல் இருக்கும் காலத்தில் தனது இச்சையை தீர்த்துக் கொள்ளக்கூடிய நயவஞ்சகர்களும் பரிபாலனம் நரகத்தில் தள்ளப்படுவார்கள்.
செல்வ செழிப்புடன் நன்முறையில் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்களை கொண்டுள்ள பொருட்களின் மீதும், செல்வங்களின் மீதும் பற்றும், ஆசையும் கொண்டு அவர்களுக்கு இந்த மதுவை கொடுத்து அவர்கள் சிந்தனை செயலற்று இருக்கும் நேரத்தில் அவர்களுடைய பொருட்களை அபகரித்துக் கொள்ளும் சூது நிறைந்த நயவஞ்சகர்கள் இறந்த பின்பு அவர்கள் சூதாடிய அனைத்து பொருள் செல்வங்களையும் மண்ணுலகில் விட்டுவிட்டு ஜீவாத்மாவாக இந்த நரகத்தை அடைவார்கள். இந்த நரகத்தில் கொடூர எண்ணம் கொண்ட சூது நிறைந்த பாவிகளுக்கு அவர்கள் குடிக்கும் மதுபானம் போன்ற திரவத்தின் மூலமாகவே உடல் இல்லா ஜீவாத்மாவும் தண்டனையை அனுபவிக்க ஆளாகிறது.
அதாவது, இந்த நரகத்தில் சூரியனின் அக்னி பிழம்பில் இருக்கக்கூடிய நெருப்பு குழம்பினால் பழுக்க காய்ச்சிய திரவமானது அதாவது, இரும்புகள் நெருப்பில் காய்ச்சிய பின்பு முழுவதும் திரவ நிலையை அடைந்த பொழுது இருக்கக்கூடிய நிறத்துடன் உள்ள திரவத்தை ஒரு குவளையில் கொடுத்து அந்த ஜீவாத்மாவை குடிக்க வைத்து எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள். உடல் இல்லாத அந்த ஜீவாத்மாவானது அந்த பழுக்கக் காய்ச்சிய திரவத்தை எமகிங்கர்களின் துன்புறுத்தலால் குடித்து துன்பத்தை அனுபவிக்க துவங்குகின்றது.
திரவமானது ஜீவாத்மாவின் ஆன்மா எங்கும் பரவி, வெப்பத்தால் உடல் உறுப்புகள் எவ்விதம் எரிந்து வேதனையை உடல் அனுபவிக்கின்றதோ, அதே வேதனையை உடல் இல்லாத அந்த ஜீவாத்மாவானது அனுபவிக்கும். இவர்களால் குடும்பங்களையும், பொருளையும், தன்னுடைய அடையாளங்களையும் பூமியில் இழந்து துன்பத்தை அனுபவித்தவர்களின் வேதனைகள் குறையும் வரையில் பாவம் இழைத்த அந்த ஆன்மாவானது இந்த நரகத்தில் இருந்து துன்பத்தையும், இன்னல்களையும் அனுபவித்துக் கொண்டே இருக்கும். அவர்கள் செய்த பாவத்தின் அளவிற்கேற்ப இந்த ஜீவாத்மாக்கள் குடிக்கக்கூடிய குழம்பின் நெருப்பும், காலமும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
க்ஷார்கர்த்தமம்
நன்முறையில் கல்வி பயின்று அறிவில் சிறந்து விளங்கக்கூடியவர்களை அவர்களின் ஆலோசனைகள் நன்முறையில் இருந்தாலும், அந்த ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை உதாசீனப்படுத்தியவர்கள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது க்ஷார்கர்த்தமம் நரகம் ஆகும். பூமியில் வாழும் பொழுது தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரத்தை கொண்டு நல்ல எண்ணம் உடையவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள் செல்லும் நரகம் இதுவாகும்.
மேலும், அந்த ஆலோசனைகளில் தனக்கு சாதகமாக இருப்பதை மட்டும் எடுத்துக் கொண்டு, தான் மட்டும்தான் அனைத்தையும் செய்ததாகவும், கூறியதாகவும் பலரிடம் கூறி பாராட்டுகளையும், பெருமைகளையும் அடையக்கூடிய பகுத்தறிவாளர்கள் தன்னுடைய வாழ்நாளை இந்த பூமியில் கழித்த பின்பு உடலை விட்டு பிரிந்த ஜீவாத்மாவானது செய்த பாவங்களின் விளைவாக அடையக்கூடிய நரகம் என்பது இந்த நரகமாகும். தலைக்கனம் எண்ணம் கொண்டு வயதில் மூத்தவர்களை அவமதிப்பதும், அனைவரின் முன்னிலையில் அவர்களை நிந்திப்பதும், தான் மட்டும்தான் எப்பொழுதும் நல்ல காரியங்களை செய்வது என்றும், மற்றவர்கள் செய்யக்கூடிய செயல்களையும் உதாசீனம் செய்யக்கூடிய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அடையும் நரகம் இதுவேயாகும்.
மனதில் செருக்கு கொண்டு தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் மற்றும் பொருள் பலத்தினால் மற்றவர்கள் செய்ய விரும்பத்தகாத செயல்களை செய்யக்கூடிய பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அடைகின்ற நரகம் இதுவாகும். இந்த நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது உருவமற்ற அதிகாரம், அகம்பாவம், கர்வம் என்னும் இறுமாப்புக் கொண்டு செய்த செயல்களின் விளைவாக பார்க்கவே அகோரமான மற்றும் கொடூரமான தோற்றம் கொண்ட பிசாசுகள் இந்த நரகம் முழுவதும் நிரம்பி காணப்படும்.
இந்த கொடூரமான பிசாசுகள் பல விதங்களில் அந்த ஜீவாத்மாக்களை கொடுமைக்கும், துன்பத்திற்கும் ஆளாக்கும். மேலும் இந்த நரகத்தில் ஜீவாத்மாக்கள் தலைகீழாக தொங்கவிடப்பட்டு அந்த ஜீவாத்மாவின் மீது பூரான், மரவட்டை, வண்டு, தேனீ, அட்டை போன்ற உயிரினங்கள் ஜீவாத்மாவின் மீது படர்ந்து அந்த ஆன்மாவிற்கு பலவிதங்களில் துன்பத்தை உருவாக்கும். செய்த பாவ வினையின் விளைவாக தண்டனையின் காலங்களும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
ரக்ஷோக்னம்
பூமியில் வாழும் பொழுது நல்வழியில் சென்று சில காரியங்களை சாதிக்க தெரியாதவர்கள், அந்த காரியங்களை சாதிக்க தவறான வழிகளில் அதாவது, மாந்தீரிகத்தை கொண்டு அந்த சக்திகளை செயல்படுத்துவதற்காக நரபலி கொடுத்து தன்னுடைய விருப்பத்தை வேண்டிய வண்ணமாக நிறைவேற்றிக் கொண்டு, பூமியில் சில காலங்கள் சுகமாக வாழ்ந்த பின்பு சுகத்தை அனுபவித்த உடலை அக்னிக்கு கொடுத்துவிட்டு, அந்த உடலிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாவானது செய்த தவறின் விளைவாக சென்று சேரக்கூடிய நரகம் என்பது ரக்ஷோக்னம் நரகமாகும்.
சுவையான உணவிற்காகவும், சுதந்திரமாக சுற்றித்திரியும் வாயில்லா உயிரினங்களை வதைத்து அந்த உயிரினங்களின் உடலை புசித்தல் முதலான பாவங்களை இழைத்தவர்களும் இந்த நரகத்தை சென்றடைவார்கள். பகுத்தறிந்து உணரக்கூடிய மனிதர்கள் அதாவது, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் மனித மாமிசங்களை உண்ட அனைவரும் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது இந்த ரக்ஷோக்னம் நரகம் ஆகும். வாயில்லா சாதுவான உயிரினங்களை கொடூரமான முறையில் வதைத்து கொன்று, அந்த உயிரினங்களை புசித்து மகிழ்ச்சி கொண்ட பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு இந்த நரகத்தில் எண்ணிலடங்கா வண்ணம் துன்பத்தை அனுபவிப்பார்கள்.
இந்த நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது இவர்கள் எவ்விதம் பூமியில் ஒரு உயிரை கொடூரமாக கொன்று துண்டு துண்டாக வெட்டி சுவைத்தார்களோ, அதே போல இந்த நரகத்திலும் உடல் இல்லாத அவர்களுடைய ஆன்மாக்களை சிறு சிறு பகுதிகளாக அதாவது, சின்னச் சின்ன துண்டுகளாக அவர்கள் இழைத்த செயல்களின் விளைவு எவ்விதம் இருந்ததோ அதே முறையில் அறுக்கப்படுவார்கள். அவர்களை அறுப்பவர்கள் யார் என்று பார்த்தோமானால் அவர்களால் பாதிக்கப்பட்டு இறந்த உயிரினங்களின் ஆன்மாக்களின் மூலமாகவே அவர்களுக்கு இந்த தண்டனைகள் நரகத்தில் கொடுக்கப்படும்.
ஆன்மாவின் ஒவ்வொரு பகுதிகளும் சிறு சிறு துண்டுகளாக வெட்டப்படும் பொழுது அந்த ஆன்மாவிற்கு ஏற்படும் வலி என்பது எண்ணிலடங்கா, எவராலும் சொல்ல முடியாத அளவிற்கு வலியும், வேதனையும் நிறைந்ததாக இருக்கும். இங்கு எந்தவொரு செயலும் நாம் பூமியில் செய்த செயல்களின் விளைவாகவே உடலற்ற அந்த ஆன்மா அனுபவித்துக் கொண்டே இருக்கும். அவர்களால் கொல்லப்பட்ட உயிரினங்கள் அனுபவித்த வேதனையை உடல் இல்லாத ஆன்மா அந்த நரகத்தில் இருக்கும் காலங்கள் வரையிலும் தண்டனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
சூலரோத நரகம்
பூமியில் பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட மனிதர்கள் தனக்கு எந்த விதத்திலும் தீங்கு இழைக்காத சக மனிதர்களை அவர்கள் கொண்ட பொருட்களுக்காகவும், அந்த பொருட்களை தனதாக்கி கொள்ள பலவிதமான சூழ்ச்சிகளை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தையும், நம்பிக்கைகளையும் அழித்து சுகமாக வாழ்ந்து மடிந்த பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது சூலரோத நரகமாகும். பிறரை நயவஞ்சகமாக ஏமாற்றி, நம்பிக்கை துரோகம் செய்து, வாழக்கூடிய பகுத்தறிவாளர்கள், இந்த பூமியில் இருக்கும் காலங்கள் வரையில், ஏமாற்றப்பட்டவர்களுடைய செல்வங்களை கொண்டு சுகமாக வாழ்ந்து மடிந்தாலும், அவர்களின் உடலிலிருந்து பிரிந்த ஜீவாத்மாவானது செய்த பாவங்களின் விளைவாக சென்று சேரக்கூடிய நரகம் என்பது இந்த நரகமாகும்.
தன்னை நம்பி வந்த எதிர்பாலின மக்கள் அதாவது, ஆணாக இருந்தால் பெண்ணின் மீதும், பெண்ணாக இருந்தால் ஆணின் மீதும் தவறான முகங்கள் கொண்டு அவர்களை தன்னுடைய செயலுக்கு பயன்படுத்தி கொண்டு அவர்களை அதைக் கொண்டு மிரட்டி பொருட்களை ஈட்டி, மென்மேலும் பொருட்கள் வேண்டும் என்று மிரட்டி மனதளவிலும், உடலளவிலும் அவர்களை வதைத்து, அவர்கள் தங்களுடைய உயிர்களை மாய்த்துக் கொள்வதற்கு காரணமாக இருக்கக்கூடிய நயவஞ்சகர்களான பகுத்தறிவாளர்கள், இங்கு பூமியில் சுகமாக வாழ்ந்து மடிந்தாலும், இறந்த பின்பு அவர்களின் உடலானது இந்த பூமியில் அக்னிக்கு அல்லது மண்ணிற்கும் இரையாகும்.
அவர்களின் ஜீவாத்மாவானது நரக வாசலை அடைந்து செய்த பாவங்கள், தவறுகளுக்கு ஏற்ப சென்று சேரக்கூடிய நரகம் என்பது சூலரோத நரகமாகும். எந்தவிதமான கெடுதலும் செய்யாமல் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அப்பாவி மக்களை தன்னுடைய சூழ்ச்சிகளை கொண்டு அவர்களை மதிமயக்கி தன்னுடைய செயல்களுக்கு அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சூழ்ச்சிகள் நிறைந்த துரோகிகளாக வாழக்கூடிய எதையும் பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட பகுத்தறிவாளர்களான மனிதப் பிறவிகள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது சூலரோத நரகமாகும்.
இந்த நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது சூலாயுதத்தினால் ஜீவாத்மாவானது குத்தி கொடூரமான முறையில் துன்புறுத்தப்படுவார்கள். சூலாயுதமானது உடல் இல்லாத ஜீவாத்மாவை குத்தி குத்தி காயங்களை உருவாக்கும். கழுகுகளும், கொக்குகளும் ஜீவாத்மாவின் உடலில் காயங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி பாய்ந்து சென்று அதை மென்மேலும் கொத்தி கொத்தி வலிகளையும், துன்பத்தையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இந்த நரகத்தில் இவர்களை துன்புறுத்துவதற்கு என்று ராட்சச வடிவத்தில் கழுகுகளும், கொக்குகளும் பறந்த வண்ணமாக இருந்து கொண்டே இருக்கும்.
தந்த சூகம்
நன்மை எது? தீமை எது? என்று நன்கு உணர்ந்து வாழ்க்கையை அமைத்து கொள்ளக்கூடிய பகுத்தறிவாளர்களான மனிதர்கள், பிறந்ததன் நோக்கம் எது? என்று அறியாமல் எவருக்கும் எந்தவிதமான நன்மைகளையும் செய்யாமல் முடிந்தளவு பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்கள் வரையிலும் மற்றவர்களுக்கு இன்னல்களையும், தீமைகளையும் செய்து அதனால் கிடைக்கக்கூடிய அற்ப சுகத்தினால் மனமகிழ்ச்சி கொள்ளக்கூடிய கொடூரமான மனம் படைத்த பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது தந்த சூகம் நரகமாகும்.
மற்றவர்கள் உண்ணக்கூடிய பொருட்களில் தரமான பொருட்களை கொடுக்காமல் அந்த பொருட்களை கலப்படம் செய்து, தரமற்ற பொருட்களை தரமான பொருட்களுக்கு நிகராக கொடுத்து லாபம் ஈட்டக்கூடிய, பூமியில் வாழும் பொழுது வியாபார உத்திகள் என்று சொல்லிப் புகழ்பாடும் பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு அவர்கள் சேர்த்த சொத்துக்களினால் சொகுசாக வாழ்ந்த உடலை நெருப்பிற்கு இரையாக கொடுத்துவிட்டு அந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற ஆன்மா சென்று சேரக்கூடிய நரகம் என்பது தந்த சூகம் நரகமாகும்.
தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்களின் வேலைக்குரிய ஊதியத்தை கொடுக்காமல் குறைந்தளவு ஊதியத்தை கொடுத்துவிட்டு, மீதி ஊதியத்தை தான் மட்டும் வைத்துக்கொண்டு சுகமாக வாழக்கூடிய பகுத்தறிவாளர்களான மனித பிறவிகள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது இந்த நரகமாகும். இந்த நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை யாது? என்று பார்த்தோமேயானால் ஐந்து தலை கொண்ட நாகங்கள், தேள், பாம்பரணை போன்ற கொடூரமான உயிரினங்கள் உடல் இல்லாத அந்த ஆன்மாவை தன்னுடைய விஷத்தன்மையினால் கொத்தி ஜீவாத்மாவை பலவகையான கொடுமைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கும்.
ஜீவாத்மாவின் உடலெங்கும் பரவக்கூடிய கொடுமையான விஷமானது பூமியில் எவ்விதம் கலப்படமான உணவுகளை உண்டு வேதனைகளை அனுபவித்து உயிர்களை இழந்தார்களோ, அவர்கள் அனுபவித்த வேதனையை விட பன்மடங்கு அதிக அளவில் உடல் இல்லாத அந்த ஆன்மாவானது வேதனையை அனுபவிக்கும். இவர்கள் செய்கின்ற பாவங்களின் அளவிற்கு ஏற்ப அந்த மிருகங்களில் இருந்து வெளிப்படும் விஷத்தின் தன்மையும் மாறுபடும். ஆன்மாவிலிருந்து விஷமானது வெளியேறிய பின்பும் மீண்டும் மீண்டும் விஷமுள்ள அந்த கொடூர பிராணிகளின் மூலம் அந்த ஜீவாத்மா வதைக்கப்பட்டு கொண்டே இருக்கும். உடல் உழைப்பை திருடிய நயவஞ்சகர்களும் இந்த நரகத்தில் எல்லையற்ற துன்பத்தை அனுபவிக்கக்கூடியவர்கள் ஆவார்கள்.
வடாரோத நரகம்
நிலையான இந்த பூமியில் நிலையில்லாத உடலைக் கொண்டு வாழக்கூடிய பகுத்தறிவாளர்களான மனித பிறவிகள் சேர்க்க வேண்டிய செல்வங்களை சேர்க்காமல், எந்தெந்த செல்வங்களை தவிர்க்க வேண்டுமோ அந்த செல்வங்களை தேடித்தேடி சேர்த்து, அதாவது பூமியில் தன்னை போன்றே மற்ற உயிர்களை கருதாமல், அற்ப செல்வ சுகங்களுக்காக மற்ற உயிரினங்களை கொடுமையான முறைகளில் வதைத்து, அந்த உயிரினங்கள் துன்பப்படுவதை கண்டு மகிழ்ச்சி கொள்ளக்கூடிய கொடூரமான மனம் படைத்த பகுத்தறிவாளர்கள் சென்று சேரக்கூடிய நரகம் என்பது வடாரோத நரகமாகும்.
வனங்களிலும், மரப்பொந்துகளிலும் கூடுகட்டி வாழக்கூடிய பிராணிகளை தன்னுடைய சுய லாபத்திற்காக வதைத்து, அந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிகளை தடுத்து, தான் மட்டும் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் பாவங்களை செய்யக்கூடிய பகுத்தறிவாளர்கள் இந்த பூமியில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களில் அந்த உயிரினங்களை கொன்று, கிடைத்த பொருள் செல்வத்தினால் சுகமாக வாழ்வார்கள்.
இவர்கள் எந்த அளவிற்கு அந்த உயிரினங்களை வதைத்து பொருள் சேர்க்கின்றார்களோ, அதே அளவிற்கு அவர்களை அறிந்தோ, அறியாமலோ பாவங்களை புரிந்து கொண்டே இருக்கின்றார்கள். அந்த பாவங்களின் தண்டனை என்பது இந்த உடலை விட்டு ஆன்மா பிரிந்து எமலோகத்தில் எமதர்மனால் பாவங்கள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு உகந்த தண்டனையாக இந்த நரகத்தில் அடைக்கப்படுவார்கள். பிராணிகள் மற்றும் பகுத்தறிவாளர்களான மனிதர்கள், சுவாசிக்கின்ற காற்று மாசுபடுவதற்கு மூலக்காரணமாக இருக்கக்கூடியவர்கள், இறந்த பின்பு இதே நரகத்தை சென்றடைந்து தண்டனையை அனுபவிப்பார்கள்.
சமய நூல்களில் இருக்கக்கூடிய மந்திரங்களை தவறான எண்ணத்திற்கு பயன்படுத்தக்கூடியவர்களும், தான் மட்டும் எப்பொழுதும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என்றும், மற்றவர்கள் தன்னை விட தாழ்வான பகுதியில் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எண்ணம் கொண்டு வளர்ந்து கொண்டே இருக்கக்கூடியவர்களும், சக மனிதர்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக ஏவல், பில்லி, சூனியம் போன்ற செயல்களை செய்து அதனால் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய பகுத்தறிவாளர்களான மனிதர்கள் இதே நரகத்தில் அவர்களுக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.
வடாரோத நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை என்பது யாது? என்று பார்த்தோமானால் இவர்கள் எந்த விதத்தில் பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய மற்ற உயிரினங்களை வதைத்துக் கொன்றார்களோ அதே விதத்தில் உடல் இல்லாத இவர்களுடைய ஆன்மாவும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும். அதாவது ஆன்மாவின் பகுதிகள் அனைத்தும் கட்டப்பட்ட நிலையில் ஒரு குகையின் உள்ளே ஆன்மாக்கள் தள்ளப்படுகின்றன. அந்த குகையின் உள்ளே நச்சு புகைகள் சூழ்ந்திருக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டு இருக்கும்.
மேலும், அந்த குகையினுள் நெருப்புகள் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். உடலற்ற அந்த ஆன்மாவானது புகையினாலும், குகையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினாலும், இன்னல்களை அனுபவித்துக் கொண்டே இருக்கும். இன்னல்களில் இருந்து தப்பித்து வெளியே வர முடியாத அளவில் குகைகளின் அனைத்து பகுதிகளிலும் எமகிங்கரர்கள் எப்போதும் காவலாகவே இருப்பார்கள். வெளியே வந்தால் எமகிங்கரர்களாலும், உள்ளே நெருப்பினாலும், புகையினாலும் அந்த ஆன்மாவானது சொல்ல முடியாத அளவில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டே இருக்கும். இந்த நரகத்தில் செய்த பாவத்தின் அளவு குறையும் பட்சத்தில் உள்ளிருக்கும் புகையின் அளவும் அந்த ஆன்மாவிற்கு மட்டுமே குறையத் துவங்கும்.
பர்வாவர்த்தகைம்
அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய பஞ்சபூதங்களில் முதன்மையாக விளங்கக்கூடிய தண்ணீரை தன்னுடைய தேவைகளுக்காக சக உயிரினங்களைப் பற்றி கவலை கொள்ளாமல், பொருள் செல்வத்திற்காக பயனற்ற மற்றும் அதிக வீரியம் உள்ள ரசாயன பொருட்களினால் இயற்கையாக உருவாகக்கூடிய தண்ணீரை மாசுப்படுத்தக்கூடியவர்களும், அனைவருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய இந்த தண்ணீரின் வளத்தினை தனக்கே உரியதாக வைத்துக் கொள்பவர்களும் அடையும் நரகம் என்பது பர்வாவர்த்தகைம் ஆகும்.
மற்றவர்களுக்கு அளிக்காமல் தான் மட்டும் சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய, மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மேம்பட்டு விளங்கக்கூடிய, எதையும் பகுத்தறிந்து உணரும் தன்மை கொண்ட பகுத்தறிவாளர்களான மனித ஜீவராசிகள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது பர்வாவர்த்தகைம் ஆகும். எதையும் பகுத்தறிந்து, சிந்தித்து செயல்படக்கூடிய மனித ஜீவராசிகள் தங்களுடைய உறவுகளிடத்தில் அவர்களின் மனம் நோகும்படி கருத்துக்களை வெளியிடுவதும், செயல்பாடுகளை மேற்கொள்வதும் அதுமட்டுமல்லாமல் தங்களை காண வந்திருக்கும் விருந்தினர்களையும் சரியாக கவனிக்காமல் வீட்டிற்குள் வந்தவர்கள் மனம் நொந்து வெளியேறும்படி செய்கின்ற மனிதர்களும் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது பர்வாவர்த்தகைம் ஆகும்.
பஞ்சபூதங்களினால் உருவான இந்த உடலை பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பிற்கோ அல்லது மண்ணிற்கோ இரையாக கொடுத்த பின்பு அந்த உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மா எமதர்மராஜாவின் சபைக்கு சென்றடைந்து, தான் செய்த பாவங்களின் விளைவாக சென்று சேரக்கூடிய நரகம் என்பது பர்வாவர்த்தகைம் நரகமாகும். பலருடைய பொருள் செல்வத்தினை கொண்டு நல் யாகங்களை செய்கின்றோம் என்று உரைத்து தரமற்ற யாக பொருட்களை யாகத்திற்கு பயன்படுத்தக்கூடிய சுயநலமான பகுத்தறிவாளர்கள் இறந்த பின்பு சென்று சேரக்கூடிய நரகம் என்பது இந்த நரகமாகும்.
எப்போதும் தன்னை சார்ந்து இருப்பவர்களின் மனநிலையை நோகும்படி நடந்து கொள்ளக்கூடிய ஆறறிவு படைத்த, எதையும் பிரித்து பார்த்து உணரும் தன்மை கொண்ட பகுத்தறிவாளர்களும், லோபிகளும்(கஞ்சன்) எவரிடத்திலும் தங்களுக்கு கிடைத்த பொருட்களையோ அல்லது உணவினையோ பகிர்ந்து உண்ணாமல், தான் மட்டும் உண்டால் போதும் என்ற எண்ணத்துடன் தனக்கு வேண்டிய அளவு உணவுகளை உண்ட பின்பு மீதி இருக்கக்கூடிய உணவுகளை மற்றவர்களிடத்தில் கொடுக்காமல் வீண் செய்யக்கூடிய நயவஞ்சகர்களும் அடையப்போகின்ற நரகம் என்பது இந்த நரகமாகும்.
இந்த நரகத்தில் இவர்களுக்கு கொடுக்கப்போகும் தண்டனை என்பது யாதெனில், உடல் இல்லாத அந்த ஆன்மாவின் கண்களை காகம் மற்றும் பருந்து முதலானவை கொத்தி, குருடாக்கும். பார்வை தெரியாத நயவஞ்சகமான ஆன்மாக்கள் இந்த நரகத்தில் முள்வேலிகள் நிறைந்த அதாவது, ஊசிகள் போன்ற கூர்மையாக இருக்கக்கூடிய தாவரங்களால் சூழப்பட்ட பகுதியில் உணவும், நீருமின்றி மிகுந்த பசியுடனும், தாகத்துடனும் அலைந்து கொண்டிருக்கும். மற்றவர்கள் மனதை வார்த்தைகளால் நோகடிக்கக்கூடியவர்களும் இந்த நரகத்திற்கு சென்று சொல்ல முடியாத அளவிற்கு பல இன்னல்களை அனுபவிப்பார்கள். செய்த பாவங்களின் அளவுகளுக்கு ஏற்ப தண்டனையின் அளவும், காலமும் நிர்ணயம் செய்யப்படுகின்றது.
சூசிமுகம்
பூமியில் வாழும் மனிதர்கள் அற வழியில் சென்று பொருள் சேர்க்காமல் தவறான வழிமுறைகளை பின்பற்றி, அதன்மூலம் பொருட்களை சேர்த்து தன்னை சார்ந்து இருப்பவர்களை துன்புறுத்தி அதன்மூலம் மகிழ்ச்சி கொள்ளக்கூடியவர்கள் இறந்த பின்பு அடைகின்ற நரகம் என்பது சூசிமுகம் நரகமாகும்.
பூமியில் வாழும் பொழுது கிடைக்கும் பொருட்களில் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை எவரிடமும் கொடுக்காமல், தனக்கு முழுவதும் வேண்டும் என்று எண்ணி பொருளையும், பணத்தையும் மண்ணில் புதைத்து வைத்து சுகமாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் இறந்த பின்பு அவர்களின் உடலில் இருந்து பிரிந்த ஆன்மாவானது சென்று சேரக்கூடிய நரகம் என்பது சூசிமுக நரகமாகும்.
அநியாயமாக மற்றவர்களை அடித்து பயமுறுத்தி அவர்களின் சொத்துக்களை பிடுங்கி சேர்த்தவர்கள் இறந்த பின்பு அடைகின்ற நரகம் என்பது இந்த நரகமாகும். இந்த நரகத்தில் ஜீவராசிகளுக்கு எவ்வித உதவியும் செய்ய யாரும் இன்றி பசியாலும், தாகத்தாலும் தவித்துக் கொண்டே இருப்பார்கள். மேலும், இந்த ஆன்மாவின் உடலிலிருந்து நாக்கினை 'சந்தமிசினி" என்ற ஆயுதத்தால் பிடுங்கி எடுத்து, நாற்புறமும் எமகிங்கரர்கள் கூர்மையான கத்திகளை கொண்டு ஆன்மாவினை மென்மேலும் துன்பப்படுத்தி கொண்டே இருப்பார்கள்.
இந்த நரகங்களை தவிர்த்து இன்னும் மென்மேலும் நரகங்கள் எமலோகத்தில் இருக்கின்றன. இந்த 28 நரகங்களிலும் ஒவ்வொரு வகையிலும் ஏராளமான பலதரப்பட்ட கொடுமையான தண்டனை அளிக்கக்கூடிய பிரிவுகளும் உள்ளன. இந்த நரகங்களை நாம் சென்றடையாமல் இருக்க நாம் வாழும் பொழுது பூமியில் நேர்மையாக இருந்து பொருள் ஈட்டி ஒழுக்கமாக வாழ வேண்டும். புண்ணிய செயல்களிலும், முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி புரிதல் அல்லது மற்றவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்தாமல் இருப்பது மற்றும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிதிர் கடமைகளை தவறாமல் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
அவ்விதமாக செய்து வாழ்ந்தாலே மேற்குறிப்பிட்ட நரகங்களை அடையாமல் மானிடர்கள் எடுக்கும் அடுத்தடுத்த பிறவிகள் கௌரவம் உள்ள, அனைவரும் போற்றி வணங்கக்கூடிய மனித பிறப்புகளாக இருக்கும். இவ்விதமாக ஸ்ரீமந்நாராயணன் கருடாழ்வாருக்கு எமலோகத்தில் உள்ள முக்கியமான நரகங்களைப் பற்றியும், அதிலுள்ள தண்டனைகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
The notes are referenced from
the app "கருட புராணம்''.
For more details, visit :
[https://play.google.com
/store/apps/details?id=nithra.
tamil.garudapuranam]
தொடரும் .....




0 Comments