பண்டைய சமூகம் - PANDAIYA SAMUKAM GRADE - 10 UNIT - 04

பண்டைய சமூகம்

 
பண்டைய சமூகம் - PANDAIYA SAMUKAM GRADE - 10 UNIT - 04


அறிமுகம் 

சமூகத்தில் பெருந்தொகையினராக சாதாரண மக்களும் சிறு தொகைனராக ஆள்பவர்களும், உத்தியோகத்தர்களும், சமயத் தலைவர்களும் மற்றும் ஏனைய பிரமுகர்களும் காணப்பட்டனர்.

மன்னர்கள் ஓர் அரசியல் கொள்கையை வைத்துக்கொண்டு நாட்டை ஆட்சி செய்தனர்

நாட்டின் நிர்வாகத்தை கொண்டு நடத்தும் 3 தாபனங்கள் (அரசாங்கம் என்று கருதப்படுவது இம்மூன்று தாபனங்களுமாகும்

சட்டத்துறை - சட்டங்களை வகுப்பதை இன்று பாராளுமன்றம் புரிவது போல அன்று அரசவை செய்தது.

நிர்வாகத்துறை - சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நிர்வாக துறையாகும். இதில் சம்பந்தப்படுபவது அரச அதிகாரிகளாகும்.

நீதித்துறை - சட்டத்தை மீறுவோரை தடுத்து, சமூகத்திற்கு ஏற்படும் தீங்குகளை தவிர்த்து நாட்டு மக்களுக்கு நியாயங்களை பெற்று தருவது.


நிர்வாகம்

சட்ட, நிர்வாகத் துறை
 
புராதன காலத்தில் எமது நாட்டில் நிர்வாக, நீதித்துறைகள் காணப்பட்டன. தனியாக சட்டத்துறை இருக்கவில்லை சட்டத்துறையாக செயல்பட்டதும் நிர்வாக துறையே இதற்கு காரணம் அக்காலத்தில் முடியாட்சி நிலவியதே ஆகும்.
 
சான்றாக கி.பி. 9 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டுங்களில் சட்ட, நிர்வாக துறையை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட எத்தென் சமிய என்னும் சொல்லை குறிப்பிடலாம்.
 
அக்காலத்தில் அரசசபையின் அனுமதியுடன் அரசனின் ஆணைக்கு ஏற்ப சட்டங்கள் இயற்றப்பட்டன.
 
சான்றாக காணியொன்று அன்பளிப்பு செய்யப்பட்டது தொடர்பாக கூறப்படும் புத்தன்னே கெல (அநுராதபுரம்) எனும் இடத்தில் உள்ள கல்வெட்டில் உள்ள வாசகத்தை குறிப்பிடலாம். (வத்கிமி வகன்சே வதால எத்தென் சமிய)
 
வத்கிமி வதால = அரசனின் ஆணை (வத்கிமி = அரசன்)
எத்தென் சமிய = அரச சபையின் அனுமதி (சமிய = அனுமதி)
 
நீதித்துறை 
 
புராதன காலத்தில் நீதிமன்றம் சபாப என அழைக்கப்பட்டது.
 
குருமகத்தமன (அனுராதபுரம்) என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மகிந்தராம எனும் பிக்குணிக்கு காணி ஒன்றை அன்பளிப்பு செய்ய வந்த (மெலின்கமுவே உதயநிகவெல்லே சேன) என்னும் இரு அதிகாரிகளும் சபாவை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகும். (காணியின் எல்லை அதனை அனுபவிப்பது தொடர்பான நிபந்தனைகளை பதிவது இவர்களின் வேலையாகும்)
 
இவர்களைக் குறிக்க மகலே (பதிவாளர் நாயகம்) எனும் சொல் பயன்படுத்தப்பட்டது
 
சான்றாக மெதிரகிரியாவில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றில் 2ம் சேர மன்னனின் ஆணைப்படி தியானமனைக்கு காணி ஒன்றை வழங்குவது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை பதிவதற்கு காசியப்ப (மகலே கஸ்பா) எனும் பதிவாளர் நாயகம் அங்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது
 
பிராந்திய நிர்வாகம்
 
நிர்வாக மத்திய நிலையமாக நாட்டின் தலைநகரம் விளங்கியது. ஆரம்பத்தில் சகல வசதிகளையும் உடைய நகரமாக பண்டுகாபய மன்னனால் அநுராதபுரம் தலைநகரமாக்கப்பட்டது.
 
தலைநகரத்திலிருந்து நிர்வாகம் மேற்கொள்வது சிரமமாகையால் உள்ளுராட்சி நிர்வாக அமைப்பு முறை காணப்பட்டது.
 
வசபன் நாகதீப (யாழ்ப்பாண)த்திற்கு பொறுப்பாக நியமித்த ரிஷிகிரி எனும் அமைச்சர் பிரியங்க திஸ்ஸ எனும் விகாரையை அமைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. (வல்லிபுர பொற்சாசனம்)
 
உள்ளுராட்சிக்கு கீழ்மட்ட  நிர்வாகத்திற்காக 10 கிராமங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 தலைவர்களைக் கொண்ட "தசகம் எத்தன்" எனும் சபைகள் இருந்தன.
 
களுதிய பொக்குண கல்வெட்டில் 10 கிராமத்தலைவர்கள் ஒன்று கூடி (விகாரைக்குத் தானம் வழங்குகையில் பிரச்சினை ஏற்பட்டால்) பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதாரம்
 
புராதன காலத்தில் வெஜ்ஜசாலா என்ற சொல் வைத்தியசாலையை குறிக்க பயன்படுத்தப்பட்டது. (கி.மு. 2ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் வெஜ என்னும் வைத்தியர்களை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது)
 
பொதுவாக பண்டைய மன்னர்கள் சுகாதாரத் துறை பற்றி ஆர்வம் காட்டியிருந்தனர்.
 
புத்ததாஸ மன்னன் வைத்திய சாலைகளை நிர்மாணித்தமை. இம்மன்னன் "சாரணார்த்த சங்கிரஹய" என்ற வைத்திய நூலையும் எழுதியிருந்தான்.
 
பண்டுகாபய மன்னன் அநுராதபுரத்திலும், முதலாம் பராக்கிரமபாகு பொலனறுவையிலும் வைத்திய சாலைகளை நிர்மாணித்தனர்.
 
பண்டுகாபயன் காலத்தில் அனுராதபுரத்தில் சொத்திசாலா எனப்பட்ட கட்டடம் அமைக்கப்பட்டது. இச்சொல் பிராமணர்களின் வழிபாட்டு இடத்தை குறிக்கவும், பிரசவ விடுதிகளை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
 
பொலனறுவை ஆலாஹனா பிரிவெனா கட்டிடங்களுக்கு இடையில் வைத்தியசாலையின் இடிபாடுகளும், அதனுள் வைத்திய உபகரணங்கள், மருந்து ஓடம் என்பனவும் காணப்பட்டன.கண்டெடுக்கப்பட்ட உபகரணங்களுள் சத்திர சிகிச்சை உபகரணங்களும் அடங்குகின்றன.
 
5ம் மகிந்தன் நாடு முழுவதும் காணப்பட்ட வைத் தியசாலைகளுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்திருந்தான்.
 
4ம் காசியப்பன் உபசக்க எனும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களுக்கான "உபசக்கரோக நாச" எனும்  வைத்தியசாலையை நிறுவியிருந்தான்.
 
முதலாம் உபதேச மன்னனால் கர்ப்பிணி தாய்மார்களுக்கென பிரசவ விடுதிகள் (பசவந்தி நாம சால / திம்பிரிகே) அமைக்கப்பட்டது.
 
வெளிநாட்டு தொடர்பு
 
இலங்கையானது ஆசிய நாடுகளுடன் ஆதிகாலத்திலிருந்தும் ஐரோப்பிய நாடுகளுடன் அண்மைக்காலத்திலிருந்தும் தொடர்புகளை பேணி வருகிறது
 
இலங்கையானது இந்திய, சீன, அரேபியா, கலிங்கம் போன்ற நாடுகளுடன் வர்த்தகம, சமயம், திருமணம், அரசியல் முதலிய காரணங்களுக்காகவே இலங்கை சர்வதேச ரீதியான தொடர்புகளை மேற்கொண்டனர்.
 
1ம் கஜவாகு பத்தினி தெய்வ கோயில் ஒன்றின் திறப்பு விழாவிற்கு தென்னிந்தியாவில் சேர இராச்சியத்திற்கு சென்றதாக அந்நாட்டு கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
 
பாதி காபயன் ருவன்வெலிசாய தாது கோபத்திற்கு பூஜை செய்வதற்கு தேவையான கண்ணாடி மணிகளை பெற்று வருவதற்காக உரோம நாட்டிற்கு தூதுவர்களை அனுப்பியமை.
 
கி.பி. 8, 9 ம் நூற்றாண்டுகளில் இந்நாட்டு ஆட்சியாளர்கள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர். இத்தொடர்பு 6ம் அக்கிர போதி மன்னன் காலத்தில் மேலும் பலப்பட்டது. இக்காலத்தில் இலங்கை தூதுவர்கள் சீனாவுக்கு 20 முறை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
 
1ம் விஜயபாகு கலிங்க இளவரசி (திரிலோக சுந்தரி) யை மணந்ததுடன் தங்கை மி்த்தாவை பாண்டிய இளவரசனுக்கு மணம் முடித்துக் கொடுத்தமை.
 
1ம் விஜயபாகு மன்னன் பொலன்னறுவையில் கட்டிய தலதா மாளிகையின் பாதுகாப்புக்காக சம்பளத்திற்கு தென்னிந்தியாவிலிருந்து வேளைக்கார படையை நியமித்தார்.
 
கி.பி. 10 ம் நூற்றாண்டுகளில் இந்நாட்டு ஆட்சியாளர்கள் அரபு நாடுகளுடன்  உறவுகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
 
கி.பி. 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்பல சூரியின் குறிப்புக்களின் படி அக்கால சிவப்புதீவின் (இலங்கை) மன்னன் இஸ்லாமிய அரசர்களுடன் பரிசுகளை பரிமாறிக் கொண்டதாக தெரிகிறது

 
பொருளாதாரம்
 
நாட்டில் பெரும்பான்மையானோர் கிராமங்களிலேயே வாழ்ந்தனர். இவர்களின் ஜீவனோபாயமாக விவசாயம் காணப்பட்டது
 
விவசாயம் இரு வகைகளில் இடம்பெற்றது.
பயிற்செய்கை 
சேனைப் பயிற்செய்கை
நெற் செய்கை 
மந்தை வளர்ப்பு
 
சேனைப் பயிற்செய்கை (மேட்டுநில பயிரச்செய்கை)
 
புராதன காலத்தில் சேனைகள் பின்வருமாறு அழைக்கப்பட்டன.
செகென் - புத்சரண எனும் இலக்கியத்தில்
சேன - சிங்கள உம்மக்க ஜாதகம் 
பிடபிம் - கல்வெட்டு 
 
காடுகளை சுத்தம் செய்து, சத்தமிட்டு ஒலிய எழுப்பி சகல உயிரினங்களையும் அகற்றி, தீயிட்டுக் கொளுத்தி சேனை ஒன்றை உருவாக்குவர்
 
புதிதாக தீயிடப்பட்ட காணி நவதெளி சேனை எனப்படும். (சத்தர்ம ரத்னாவலிய
நவதெளி சேன என்பதன் பொருள் குரக்கன், கொள்ளு, உளுந்து, பயறு, சோளம், கம்பு, வரகு, திணைஓமம் எனும் ஒன்பது வகையான தானியங்களும் செழிப்பாக வளரும் சேனை என்பதாகும்
 
சில காலம் கைவிடப்பட்டு மீண்டும் பயிரிடப்படும் சேனையை கனத்த என்று அனுராதபுர விவசாயிகள் குறிப்பிடுவர்.
 
சேனைகளில் பயிரிடப்பட்டவைகளுள் மேற்கூறப்பட்ட தானியங்களும், கடுகு, சீரகம், எள்ளு போன்ற தானியங்களும் பூசணிக்காய், கத்தரிக்காய், சாம்பல் பூசணி போன்ற மரக்கறி வகைகளும், நெல், கரும்பு, பருத்தி என்பனவும் பயிரிடப்பட்டன.
 
அக்காலத்தில் நாட்டிற்கு தேவையான துணிகளும், கருப்பட்டியும் உற்பத்தி செய்வதற்கு தேவையான பருத்தியும், கரும்பும் சேனைகளில் விளைந்தது. சம்பளம் பெற்று கரும்புத்தொழில் ஈடுபட்டவர் பற்றி வம்சக் கதைகளில் கூறப்பட்டுள்ளது
 
16ம் நூற்றாண்டு வரை நாட்டில் சீனி இறக்குமதி செய்யப்படவில்லை என்பது அறிஞர்களால் கூறப்படுகிறது.
 
சேனைகளை இரவு நேரங்களில் தங்கி பாதுகாப்பதற்கு மரத்தின் உச்சியில் கட்டப்பட்ட சிறு குடிசை பெல எனப்பட்டது
 
சேனையை விலங்குகளில் இருந்து பாதுகாப்பதற்கு கட்டப்பட்ட வேலி தண்டுவெட்ட எனப்பட்டது.
 
சேனை பயிர்ச்செய்கைக்காக அரசர்களில் சிலர் வரி அறவீடு செய்துள்ளனர்
 
கெதிஅட, கெடுகனக என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது இவ்விரு வரிகளையே ஆகும். இதனை நிஸஸங்க மல்லன் நீக்கியதாக கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.
 
நெற் செய்கை
 
சனத்தொகை பெருக்கத்தால் உணவு தேவையை நிறைவு செய்வதற்காக வயல்களகல் நெல் பயிரிடும் முறை ஆரம்பமானது.
 
கல்வெட்டுக்களில் சிறிய நெல் பயிரிடும் நிலம் வயல் என்றும், பரந்த வயல் நிலங்களை கெத என்றும் குறிப்பிட்டுள்ளன.
 
தோணிகல கல்வெட்டு மூன்று போகங்களில் நெற்செய்கை நடைபெற்றது பற்றி கூறுகின்றது.
 
பெரும்போகம் - பிட்ட கச
சிறுபோகம் - மத கச 
இடைப்போகம் - அகல கச
 
ஆரம்பத்தில் ஆற்றுநீரையும், மழைநீரையும் நம்பியே விவசாயம் மேற்கொண்டனர். பின்னர் நீர்பாசன முறை மூலம் மேற்கொண்டார்
 
நீர்ப்பாசன முறை
 
தாதுசேனன் கலாவாவியையும், யோதக் கால்வாயையும் அமைத்து நீர்ப்பாசனத் துறைக்கு பெரும்பங்காற்றினான்.
 
1ம் பராக்கிரமபாகு மன்னன் விண்ணிலிருந்து ஒரு துளி நீரையேனும் கடலில் கலக்கவிட மாட்டேன் எனும் கொள்கை கொண்டு பராக்கிரம சமுத்திரத்தை அமைத்து சேவையாற்றினான்.
 
வசபன், மகாசேனன் முதலியோர் நீர்ப்பாசன சேவை மூலம் புகழ் பெற்ற மன்னர்களாவர்.
 
மந்தை வளர்ப்பு (மாடு, ஆடு, கோழி)
 
மந்தை வளர்ப்பில் முதலிடம் பெற்றது மாடு வளர்ப்பாகும்.
 
மாட்டை வளர்ப்பவர்கள் கோபாலகர்கள் எனவும். வளர்க்கப்படும் இடம் கோபாலகம் எனவும் அழைக்கப்பட்டது.
4ம் காசியப்பனது கல்வெட்டில் (கொழும்பு நூதனசாலையில் உள்ளது) உள்ள "கிரிகெரி" என்னும் சொல்லானது பாலைப் பெற்றுக் கொள்வதற்காக வளர்க்கும் பசுக்களைக் குறித்தது.
 
பெண்ணொருத்தி பசுவிலிருந்து பால்கரக்கும் சிற்பம் ஒன்று சிகிரியாவில் அமைந்துள்ள மகாமேரு கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.
 
மெதிகிரியாவில் (பொலன்னறுவை) உள்ள எத்வெகர மண்டபத்தில் உள்ள வைத்திய சாலையில் நோயாளர்களின் தேவைக்காக மரணித்த ஆடுகளினதும், கோழிகளினதும் மாமிசம் மட்டும் பயன்படுத்தப்பட்ட வேண்டும் என்பது மந்தை வளர்ப்பிற்கான குறிப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
 
கிரிகண்ட சிவன் அறுவடை விழாவில் எருதுகளை நீராட்டி அலங்கரித்ததாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கைத்தொழில்
 
உலோகத் தொழில்
ஆபரணத் தொழில்
தந்தச் செதுக்கல் கைத்தொழில்
மட்பாண்டத் தொழில்
நெசவுத்தொழில்
 
உலோகத் தொழில்
 
இரும்பு  - கொல்லர்கள் / கம்மாளர்கள்
 
தொழில் புரிந்தோரை கபர என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன (விவசாய நடவடிக்கைகளுக்கான மண்வெட்டி, ஏர், அரிவாள் என்பவற்றை இவர்கள் செய்து கொடுத்தனர்)
 
பொலனறுவை மாவட்டத்திலுள்ள முதுகல்ல எனும் இடத்தில் உள்ள கல்வெட்டில் மஜ்ஜிம எனும் கம்மாளரை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பண்டுகாபயன் "கம்மார தேவ" என்ற தெய்வத்திற்கு கோயில் கட்டினான் என்றும் குறிப்படுகின்றது.
 
செம்பு (தம்பகர), வெள்ளீயம் (டின்)
 
அபயகிரி அகழ்வுகளில் கிடைக்கப்பெற்ற உலோக நாணயங்கள் மூலம் செம்பு, வெள்ளீயம் என்பன போன்ற உலோகங்களும் பயன் படுத்தப்பட்டன என அறியமுடிகிறது.
 
உலோகங்கள் உருக்கப்பட்டு சிலைகள் செய்யப்பட்டன.

ஆபரணத் தொழில்
 
தங்கம் - பொற்கொல்லர்கள்
 
புராதன பதிவேடுகளில் இவர்கள் துலாதர என்று அழைக்கப்படுகின்றனர்.
 
மண்டகல (அம்பாந்தோட்டை) எனும் இடத்தில் உள்ள கல்வெட்டில் துலதர சுமண எனும் பொற்கொல்லர் பற்றி கூறப்பட்டுள்ளது
 
இரத்தினக்கல்
 
அனுராதபுரம், மகாகம போன்ற இடங்களில் கிடைக்கப்பெற்ற மாலைகளும், மோதிரங்களும் அக்காலத்தில் இரத்தினக் கைத்தொழில் நடைபெற்றதை உறுதிப்படுத்துகின்றன..
 
இவர்கள் மணிகர என்று அழைக்கப்படுகின்றனர்.
 
ஜேதவன அகழ்வில் நெல்மணி அளவிலான தங்கத்தில் 21 பூவேலைப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தந்தச் செதுக்கல் கைத்தொழில்
 
தடிக = யானைத் தந்தம்
 
கண்டிக்காலத்திற்குரிய வேகிரிய தேவாலயத்திற்கு அருகில் காணப்பட்ட கல்வெட்டு ஒன்றில் தடிக சுமண எனும் யானைத் தந்தச் செதுக்கல் கலைஞர் ஒருவரை பற்றிப் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மட்பாண்டத் தொழில்
 
தொல்பொருள் அகழ்வின் போது பெருந்தொகையான மட்பாண்டச் சிதைவுகள் கண்டறியப்பட்டுள்ளன.
 
வனைதல் தொழிலில் ஈடுபடுபவர்கள் "கும்பகார" எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
 
மகாவம்சம் செங்கல் தயாரித்தவர்களை "ஒலுவடுஎன்று குறிப்பிடுகின்றது.
 
திசாவாவியில் மேற்கொண்ட அகழ்வில் ஆயிரக்கணக்கான மட்பாண்டச் சிதைவுகள் சிலவற்றில் பிராமி எழுத்துக்கள் காணப்பட்டன.
 
நெசவுத்தொழில்
 
விஜயன் இலங்கைக்கு வந்த வேளையில் குவேனி நூல் நூற்றுக்கொண்டிருந்தாள் என்ற வரலாற்றுத் தகவல் மூலம் இலங்கையில் பண்டைய காலத்தில் நெசவுக் கைத்தொழில் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்படுகிறது.
 
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் "வெகெரகம" எனும் இடத்தில் உள்ள கல்வெட்டு நூல் நூற்பவர்களை "ததவயஎன்று குறிப்பிடுகின்றது.
 
வெகெரகம என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டில் துணி நெய்து விற்பனை செய்வோரின் சங்கம் பற்றிய செய்தி காணப்படுகின்றது.
 
வர்த்தகம்
 
உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் வாழ்ந்த முக்கிய நகரங்களாக அநுராதபுரம், மகாகமம் ஆகியன விளங்கியதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
 
அநுராதபுரத்தில் தெற்கு வாயிலில் "காலசுமண" என்ற பெயரில் வர்த்தகச் சந்தை காணப்பட்டது.
 
சிகிரியாவின் மேற்கில் உள்ள நீர்ப்பூங்காக்களில் காணப்படும் கல்வெட்டில் அபலவபல / ஆம்ல என்ற புளி வியாபாரி பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
 
வர்த்தக சங்கங்கள்புகய / நியமஸ்தான
 
அம்பாறை, அம்பாந்தோட்டையில் காணப்பட்ட பிராமிய கல்வெட்டுக்கள் மூலமாக வர்த்தகர்களை வணிஜ / வாபர எனும் பெயரால் குறிப்பிடப் பட்டுள்ளனர்.
 
வர்த்தகர்கள் = வணிப / வாபர
 
உள்நாட்டு வர்த்தகத்தில் உப்பு, இஞ்சி, ஆடை, ஆபரணம்,நறுமணப்பொருட்களும், வெளிநாட்டு வர்த்தகத்தில் யானை, யானைத்ததந்தம், முத்து, மாணிக்கம், சங்கு, கடலாமை, பருத்தித் துணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
 
வணிகர்களால் கற்குகைகள் தானம் அளிக்கப்பட்டுள்ளன.
 
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மண்டகல, வெகெரகம என்னும் இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் சுமன எனும் வணிகரால் தானம் அளிக்கப்பட்ட கற்குகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
 
 துணி நெய்து விற்பனை செய்வோரின் சங்கத்தின் மூலமும் விக்குகளுக்கு குகை ஒன்று தானம் செய்யப்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகத்தில் உப்பு, இஞ்சி, ஆடை, ஆபரணம், நறுமணப்பொருட்களும், வெளிநாட்டு வர்த்தகத்தில் யானை, யானைத்ததந்தம், முத்து, மாணிக்கம், சங்கு, கடலாமை, பருத்தித் துணிகள் போன்றனவும் ஈடுபடுத்தப்பட்டன.
 
மகாகிராமையில் இருந்து அனுராத புரத்திற்கு வந்த சுரநிமல என்பவர் நறுமணப் பொருட்களை வாங்கியதாக இலக்கிய மூலாதாரங்கள் கூறுகின்றது.
 
4ம் உதயனின் கோபிட்டிகம / சொரபொர வாவி தூண் கல்வெட்டில் புராதன சந்தை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. (இதில் சந்தைகள் தொடர்பாக அரனால் பிறப்பிக்கப்பட்ட சட்டங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வர்த்தகத்திற்காக சந்தைக்கு வருகின்ற வண்டிகளிடம் வரி வசூலிக்கக் கூடாது. சந்தைக்கு வரும் வண்டிகளிலிருந்து அல்லாது, சந்தையைக் கடந்து செல்லும் வண்டிகளிலிருந்து வரி வசூலிக்கப்படக் கூடாது.
 
சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கப்பட்ட மண்டபத்திலேயே வெற்றிலை வியாபாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
 
போயா தினங்களில் வர்த்தகம் மேற்கொள்ள கூடாதமாறாக ஈடுபட்டோர் தண்டமாக மகியங்கனை விகாரைக்கு விளக்கேற்ற எண்ணெய் வழங்க வேண்டும்.

சர்வதேச வர்த்தகம்
 
இந்நாட்டில் செயல்பட்ட தென்னிந்திய வம்சாவளிகளின் வர்த்தக நிறுவனங்களான நானாதேசி, வளஞ்சியார், ஐந்நாற்றுவர் பற்றி கி.பி 11, 13 ம் நூற்றாண்டுக்குறிய தமிழ் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
அம்பாந்தோட்டையில் நானாதேசி வர்த்தக நிறுவனத்திற்குரிய உலோக முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
 
இலங்கை சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்கான காரணம்,
 
இலங்கை இந்து சமூத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளமை
 
கிழக்கு மேற்கு வர்த்தகப் பாதையின் மையமாக விளங்கியமை.
 
பல துறைமுகங்கள் காணப்பட்டமை.
திருகோணமலை (கோகர்ண) - புனித தந்ததாது (கேமமாலா)
காலி
ஜம்புகோளப்பட்டினம் - புனித வெள்ளரசு மரக்கிளை
மாந்தை (மகாதித்த)
வெலிகம
 
போவத்தேகல (தென் மாகாணம்) இடத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில்  கம்போடியர்களின் வர்த்தக அமைப்பு பற்றிய வாசகம் காணப்படுகிறது. (கபோஜ மக புகிய)
 
அனுராதபுரம் ஒரு தலைவராக வளர்ச்சி பெற்றமைக்கு காரணம் சர்வதேச வர்த்தகமாகும். (அனுராதபுரத்திற்கு மேற்கே மாந்தை துறைமுகமும், கிழக்கே திரிகோணமலை துறைமுகமும் அமைந்திருந்தது)
 
ஏனைய தொழில்கள்
 
ஆசிரியர்கள்
வைத்தியர்கள்
வழக்கறிஞர்கள்
கலைஞர்கள்

ஆசிரியர்கள் - ஆசார்ய (பழைய பதிவேடுகள்)
 
கலைகளை கற்பிக்கும் நபர்கள் மட்டுமல்ல. கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த நபர்களும் ஆசாரிய என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
 
யானையை பழக்கும் ஆசிரியர்கள் - ஹஸ்தி ஆசார்ய
குதிரை ஓட்டத்தைக் கற்பித்தோர் - அஸ்வ ஆசார்ய
அம்பு எய்தும் கலைகளைக் கற்பிப்போர் - துனு ஆசார்ய
 
குருகுலக் கல்வி முறை காணப்பட்டது.
 
வைத்தியர்கள் - வெஜ
 
மஹவெதனா -:அறுவை சிகிச்சை செய்யும் முதன்மை வைத்தியர்.
 
மருத்துவ ஓடங்கள் அமைத்து வைத்தியம் செய்யும் முறைமை காணப்பட்டுள்ளது.
 
மகாசேனனின் பேரன் புத்ததாசன் மதுகம்ப என்ற முறையைப் பின்பற்றிச் சத்திரசிகிச்சை மேற்கொண்டான்.
 
வழக்கறிஞர் - வொகார
 
பண்டைய வழக்கறிஞர்கள் சட்டங்கள் இயற்றுவதிலும், தீர்ப்பு சொல்வதிலும் மன்னர்களுக்கு உதவினர்.
 
கலைஞர்கள்
 
நடனக் கலைஞர்
 
குருணாகல் மெதகவில் உள்ள கல்வெட்டில் 2200 வருடங்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் திஸ்ஸ என்ற நடனக் கலைஞர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவரது மனைவி பருமக பதவி வகித்ததாகவும் கூறப்படுகிறது.
 
ஓவியர்கள் - சிதகரலபன
 
நெட்டு கந்த என்னுமிடத்தில் உள்ள ஒரு கல்வெட்டு லபன திஸ்ஸ எனும் ஓவியர் பற்றிக் குறிப்பிடுகிறது.
 
 பண்டைய கால ஓவியங்களாக,
 
அநுராதபுரம் வாயில் மண்டபத்தின் ஓவியங்கள்
 
சிதுல்பவ்வ, கரம்பகல முதலிய குகையிலுள்ள சித்திரங்கள்.
 
சிகிரியாவுக்கு அருகில் உள்ள பிதுரங்கல என்னும் இடத்தில் உள்ள விகாரையிலுள்ள ஓவியங்கள்.
 
கவிஞர்கள் - கவி
 
நெட்டுகந்த கல்வெட்டில் லபத திஸ்ஸ என்ற ஓவியருடைய மகன் சஞ்சயன் கவிஞன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிகிரியாவில் கிறுக்கல் கவிதைகளை சாதாரண மக்களே எழுதியுள்ளனர்.
 
.அக்கிரபோதி மன்னன் காலத்தில் 12 கவிஞர்கள் வாழ்ந்துள்ளனர்.

 
கலாசாரம்
 
கலாசாரம் என்பது சமயம், கல்வி, இலக்கியமும் இரசனையும் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் முதலியவற்றைக் குறிக்கின்றது.
 
சமயம்
 
பௌத்தம்
இந்து
கிறிஸ்தவம்
இஸ்லாம் 
 
பௌத்தம்
 
பௌத்தமானது கி.பி. 247 இல் தேவநம்பியதீசனின் ஆட்சி காலத்தில், மகிந்ததேரர் இங்கு வருகை தந்தததன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
தேவநம்பிய தீசன் காலத்திலேயே பிக்கு சாசனம், பிக்குனி சாசனம் என்பன தோற்றம் பெற்றன.
 
பிக்குகள் ஆராமைகளிலும், ஆராமைகளின் பற்றாக்குறையால் குகைகளிலும் வாழ்ந்தனர். அவ்வாறான குகைகள் 1600 க்கும் மேற்பட்டவை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுகின்றன.
 
பொருத்தமான கற்குகை ஒன்றை தெரிவு செய்து, அதனை சுத்தம் செய்து, மழைக்காலங்களில் குகையினுள் நீர் வழிவதை தடுக்கும் வகையில் பீலி அமைத்து பீலியினு கீழே தானம் அளித்தோர் பற்றிய விவரங்களும் செதுக்கப்பட்டிருப்பதனை அக்கால கல்வெட்டுகளில் காணலாம். (அக்கால கல்வெட்டுக்கள் (மிகிந்தலை, ரிடிகல, வெஸ்ஸகிரி, சிகிரிய) பிராமி எழுத்துக்கள் மூலமே எழுதப்பட்டுள்ளன)
 
குகை தவிர பன்சாலா என்ற கட்டடங்களிலும் வாழ்ந்துள்ளனர். (ஓலை, இலுக்குப்புல்லால் கூரை வேயப்பட்டு மண்ணால் சுவர் எழுப்பப்பட கட்டடம் / கருங்கற்கள் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு விகாரைகள் கட்டப்படுவதற்கு முன்னர் பிக்குகள் வாழ்ந்த இடம்)
 
மழை காலங்களில் பிக்குகள் ஆராமைகளில் தங்கியிருப்பதற்காக அழைப்பு விடுப்பதும், அவர்களுக்கு காவி உடை வழங்கும் சடங்கும் நடத்தப்பட்டன.
 
குருநாகல் மாவட்டத்தில் கெலம்பகல எனும் இடத்தில் காணப்படும் கல்வெட்டில் வசவசிக எனும் சொல் காணப்படுகிறது இதன் பொருள் மழைக்காலத்தில் பாதுகாப்பாக தங்கி இருத்தல் என்பதாகும்.
 
கொத்தலகிம் பியாவ எனும் கல்வெட்டில் (வச வசிக சக தக) என்ற பதம் காணப்படுகிறது. இங்கு உத்திய என்னும் பிக்குவின் உறவினரால் கத்தின சீவருக (நெய்யப்பட்ட காவியுடை) தானம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
ஆராமையில் வாழ்ந்த பிக்குகளாக
தலைமைப் பிக்கு - தேரர்
ஏனைய பிக்குகள் - அந்தேவாசிக பிக்குகள்
மாணவப்பிக்குகள் - சதி விஹகரிய
 
மகாஎலகமுவே (அனுராதபுரம்) எனும் இடத்தில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் பிஷ ரக்கர எனும் தேரரின்
 
பெளத்த போதனைகள் மனனம் செய்வதன் மூலமே பாதுகாக்கப்பட்டன. மனனம் செய்த பிக்குகள் "பாணக" என்று குறிப்பிடப்பட்டனர். மனனம் செய்து பாதுகாக்கப்பட்ட பௌத்த போதனைகளை மாத்தளை அலுவிகாரையில் திரிபிடகம் எனும் நூல் வடிவத்தில் எழுதுவித்தவன் வலகம்பாகு மன்னன் ஆவான்
 
திரிபீடக பகுதிகளை மனனம் செய்த பிக்குகள் அப்பகுதிகளின் பெயராலே அழைக்கப்பட்டனர். உதாரணமாக, தீக நிகாயவை மனனம் செய்த பிக்கு தீக பாணக என்றும், சங்கயுக்த நிகாயாவை மனனம் செய்த பிக்கு சங்கயுக்த பாணக என்றும் அழைக்கப்பட்டதனை குறிப்பிடலாம்.
 
பௌத்த சமய வளர்ச்சிக்காக மகாபராக்கிரமபாகு கிரி விகாரை, பளு விகாரை,கல் விகாரை முதலிய பல விகாரைகளைக் கட்டினான். திம்புலாகல தேரர் தலைமையில் நீதிமன்ற சபை அமைத்து மூன்று நிகாயாக்களையும் 1165 இல் ஒன்றுபடுத்தினான்.

இந்து
 
அநுராதபுரத்தில் அதனை அண்டிய பகுதிகளிலும் இந்துசமயத்தைப் பின்பற்றிய பிராமண மக்கள் வாழ்ந்து வந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இதனால் இந்துமதம் பிராமணிய மதம் என அழைக்கப்பட்டதனை அறிய முடிகின்றது.
 
சொத்திசாலாபிராமணர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொண்ட இடம் (மகாவம்ச டீகாவ)
 
பண்டுகாபயன் ஆட்சியில் சிவலிங்க வழிபாடு இருந்ததாக மகாவம்ச டீகாவவில் கூறப்பட்டுள்ளது.
 
சீவகசாலா - சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம்.
 
தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு தமிழ் வியாபாரிகள் (தமெட = திராவிடர்) வந்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
7ம் நூற்றாண்டளவில் இந்நாட்டின் பிரதான துறைமுகங்களை அண்டியும் தமிழர்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்.
 
மாதோட்டை துறைமுகம்திருக்கேதீஸ்வரம் கோவில்
திருகோணமலை துறைமுகம் - திருக்கோணேஸ்வரம் கோவில்
சிலாபம் - முன்னேஸ்வரம் கோவில் 
ஜம்புகோளப்பட்டினம் - நகுலேஸ்வம்
 
பொலன்னறுவை -  1ம், 2ம் இலக்கச் சிவன் கோவில்கள்.
 
கிறிஸ்தவம்
 
இலங்கை புராதன காலம் முதல் உரோம் கிரேக்கம் போன்ற நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தன் காரணமாக, இங்கு கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்தது.
 
அநுராதபுரத்தில் சிலுவை அடையாளத்துடன் கூடிய புராதன கற்றூண் ஒன்று கண்டறியப் பட்டுள்ளது. இது கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவினரான கத்தோலிக்க நெஸ்டோரியர்க்குரியதாகும்
 
ஐரோப்பியர் இலங்கையை ஆட்சிபுரிந்ததன் விளைவாக அரச ஆதரவுடன் கிறிஸ்தவம் வளர்ச்சியடைந்தது.
 
இஸ்லாம் 
 
கி.பி. 9ம் நூற்றாண்டின் பின் இஸ்லாம் இலங்கையில் வளர்ச்சியடைந்ததற்கான சான்றுகள் பல கிடைக்கப் பெற்றுள்ளன.
 
புராதன அரபு பூகோளவியல் நூலில் அரேபியர் இலங்கையை செரண்டிப் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் அராபியருடனான தொடர்பு பற்றியும், இஸ்லாம் மதம் பரவியது பற்றியும் அறிய முடிகின்றது.
 
இபன் சக்ரியர் எழுதிய  நூலில் இஸ்லாமிய சமயம் பற்றி அறிய இலங்கையிலிருந்து ஒரு தூதுக்குழு அரேபியாவுக்கு  சென்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
சிவனொளி பாதமலை என்னும் உச்சியில் உள்ளது ஆதாம் நபியின் பாதச்சுவடு எனும் நம்பிக்கை இஸ்லாமியரிடம் காணப்படுகின்றது.
 
இபின்பதுதா எனும் தேசசஞ்சாரி இலங்கையில் முஸ்லிம் குடியேற்றங்கள் பற்றியும், கொழும்புத்துறைமுகம் முஸ்லிம் கண்காணிப்பில் இருந்தது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
 
கல்வி
 
நீண்ட காலமாகவே இலங்கையில் அறிவு கேள்வி ஞானத்தின் மூலமே கைமாறப்பட்டது.
 
4400 ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்ட களிமண் ஓடக்கல்லறை, இரும்புச் சூளை போன்றன அக்கால மக்களின் அறிவுத்தன்மையைக் காட்டுகின்றது.
 
புராதன சமூகத்தில் குருகுலக் கல்வி முறை நிலவியது. (துனு ஆசார்ய, அச ஆசார்ய, ஹதி ஆசார்ய)
 
பிக்குகளே கல்வியை போதித்து வந்தார்கள். (இவர்கள் சிங்களம், பாளி, சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் மட்டுமின்றி புத்த தர்மம் தொடர்பாகவும் ஆழ்ந்த அறிவை கொண்டிருந்தனர்)
 
மகாவிகாரை, அபயகிரி விகாரை என்பன  இந்நாட்டின் மத்திய கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தது. (திரிபீடகத்துக்கு மேலதிக விளக்க அட்டுவாக்களை எழுதிய புத்தகோச தேரர் மகா விகாரையில் கல்வி கற்றவர் ஆகும்)
 
சோதிடம்,போர்க்கலை, வானிலை, தர்க்க சாஸ்திரங்கள் போன்ற பாடங்களும் கற்பிக்கப்பட்டன.
 
இலக்கியமும், இரசனையும் 
 
இராசரட்டை  இலக்கியங்களை நோக்குகளில் அவை பாளி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருப்பதனை காணலாம்.
 
பாளி - தீபவம்சம், அபிதானா பிரதீபிக்கா, சாரா பிரதீப்பதி
சமஸ்கிருதம் - ஜானகி கரணய, பாலவத போதன, அனுருத்த சத்த கய
சிங்களம் - சியபஸ் லகர, சசாந்தாவத்த, முவதே உதாவத்த
 
தாளத்துடன் பாடக்கூடிய ஒரு கவிதை கிரிந்த பன்சலையில் உள்ள கற்பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது. இது புத்தர் பெருமானின் குணவியல்பைக் குறிப்பிடுகின்றது.
 
சிகிரியாவில் உள்ள பளிங்குச் சுவரில் 600  க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதப்பட்டுள்ளன (கி.பி. 8, 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை)
 
புராதன கவிதைகளில் பௌத்த சமய போதனைகளில் அவர்கள் கொண்டிருந்த அக்கறையும்,இயற்கையின் அழகை இரசிக்கும் அவர்களின் ஈடுபாட்டையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
 
அபயகிரி விகாரையில் 9ம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் உள்ளத்தைக் கவரக் கூடிய உவமைக் கவிதை பொறிக்கப்பட்டுள்ளது. இது எளிமையான உணர்வு பூர்வமான அழகியல் உணர்வைக் கேட்போருக்கு ஏற்படுத்தவல்லது.
 
புராதன கவிஞர்கள் புத்த சமய போதனைகளிலும், இயற்கையோடு இணைந்தும் வாழ்ந்தமையால் நிலையாமை பற்றியும், இயற்கையின் அழகு பற்றியும் கவிதைகளில் பாடி உள்ளனர்.
 
இனங்களுக்கு இடையேயான இணக்கப்பாடு
 
புராதன காலத்திலிருந்தே எமது நகரங்களில் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட மக்கள் வாழ்ந்ததாக ஆதாரங்கள் உள்ளன.
 
தென்னிந்தியா - தமிழர்கள்
கிரேக்கம் - அயோனியர்கள்
ஆப்கானிஸ்தான் - காம்போஜர்கள்
மலாக்கா - ஜாவர்கள்
ஆரியக் குடியிருப்புக்கள் மூலம் - சிங்களவர்கள்
 
பௌத்த சமய குருவாக இருந்த தமிழர் ஒருவரை பற்றி அனுராதபுர அபயக்கிரி விகாரையில் உள்ள கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
தமிழர் ஒருவர் சிங்கள பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்ததாக அம்பாறையில் உள்ள கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அனுராதபுரத்தில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளின் போது தமிழர்கள் வாழ்ந்த வீதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
சிங்களவர்கள் அரசாட்சி நடாத்திய போதிலும் தமிழர்களது நலன்களும் பேணப்பட்டன.
 
நான்காம் காசியப்பனின் கல்வெட்டில் தமிழ் அதிகாரி ஒருவர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இளநாகன், அபயநாகன் ஆகியோர் தென்னிந்திய தமிழ் படையினரின் (அகம்படிச்சேனை) உதவியை பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 முதலாம் விஜயபாகு மன்னன் தலதா மாளிகையின் பாதுகாப்புக்காக வேலைக்கார படையை நியமித்ததாக வம்சக் கதைகள் கூறுகின்றன.
 
நானாதேசி எனும் தென்னிந்திய தமிழ் வியாபார நிலையம் ஒன்றின் முத்திரை அம்பாந்தோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
தமிழர்கள் மட்டுமில்லாமல் இஸ்லாமியர்களுடன் நல்லுறவு பேணப்பட்டது.
 
சிவனொளி பாதமலை பல்வேறுபட்ட மதத்தவர்களும் வழிபடும் புனித இடமாக விளங்கியது.
 
பௌத்தர்கள் - ஸ்ரீ பாத
இந்துக்கள் - சிவனொளி பாதமலை
கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் - ஆதாமின் மலை
 
சுலைமான் எனும் வர்த்தகர் சிவனொளிபாத மலையை தரிசிக்க இலங்கை வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது அவருக்கு இந்நாட்டு மக்களால் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை.


Miss. Sooriyan Niveththa, BA (Hons) (2021/2022)
Eastern University, Sri Lanka.

நன்றி

Post a Comment

0 Comments